Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நட்சத்திரங்கள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள் காற்றினை நடுக்கமுற வைத்த இரவொன்றில் தனிமையின் பயத்தால் உனைப் பற்றிப் பேசத்தொடங்குகிறேன். பிரிய தோழி, நீ யன்னல் சீலைகளில் இருந்து இறங்கி அறியப்படாத வர்ணமொன்றாகி அறையெங்கும் நிறைகிறாய். வெட்கமகற்றிக் கூந்தல் கலைத்து இயல்பாயென் போர்வைக்குள் நுழைகிறாய். பரவும் வெப்பம் பெருமூச்சினை நினைவூட்ட என் தனிமை நிர்வாணத்துள் ஒளிந்து கொள்கிறது. குறிப்புணரா பொழுதொன்றில் நிறைகாமம் அழிந்துபோக ஆழியின் பெருமௌனத்துடன் அடங்கி விழித்துக்கிடக்கிறேன். அன்றொருநாள் உன், இதழ்களிலிருந்து இறங்கிய சாத்தான் மூன்றாம் இரவிலும் உயிர்த்தெழ, எதிர்கொள்ளத் துணிகிறேன் தற்கொலை ஒன்றுக்கு முன்னான அமைதியுடன்.

  2. பச்சோந்தி கைஃபி ஆஜ்மி ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள் ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய் அதனின்று வெளிச்சம் வராது அதனின்று வெளிச்சம் போகாது எந்தக் கருப்பை பெற்றெடுத்ததோ இதனை எந்த வீட்டில் வளர்ந்ததோ இது எந்த வீட்டில் திரிந்தோ இது எல்லா மொழியையும் பேசுகிறது ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை இதயத்திடம் சொல்கிறது கதையை உனது மதம்; உனது உன்னத கடவுள் உனது பண்பாட்டின் அடையாளத்தை இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது இவற்றை பின்தொடர்கிறது பேரிருள் உறைந்து போகிறதென் குருதி முடிக்கொள்கிறதென் திறந்த விழி உலகின் அனைவருமென் எதிரிகள் இப்படியே உணர்கிறேன் தோழர்களாக எவருமில்லை என்னை உயிருடன் வி…

  3. பல்லவி பெண்: காதல் சொல்ல காதல் சொல்ல தயக்கமும் தேவையா மோதல் செய்து மோதல் செய்து கைதுசெய்த தோழனே நெஞ்சத்திலே சினேகமாய் காதலைச் சுமக்கிறாய்-ஏன் மௌனத்தினால் என்னையே பார்வையால் வதைக்கிறாய் அழகான நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! சரணம் 1 ஆண்: உன் விழிகள் வீசும் வலைகள் கொண்டு அள்ளிக் கொள்ள நினைக்கிறாய் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பேசி என்னை வெல்லத் துடிக்கிறாய் பார்வையால் படர்கிறாய்-உன் வார்த்தையால் வளைக்கிறாய் நட்பின் ஈரம் காயும் முன்பே காதல் தோன்ற வேண்டுமா ? சரணம் 2 பெண்: காதல் நுழைந்த இதயம் தன்னை சிறை வைத்து ரசிக்கிறாய்- உன் கண்களின் ஓரம் கசியும் காதலை என்ன ச…

    • 17 replies
    • 2.3k views
  4. "யாரோ? நான் யாரோ ?" "தெருவோர மதகில் இருந்து ஒருவெட்டி வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும் செய்யா கருங்காலி தறுதலை நான்" "கருமம் புடிச்ச பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும் குனிந்து விலக எருமை மாடு நான்" "வருடம் உருண்டு போக வருமாணம் உயர்ந்து ஓங்க கருணை கடலில் மூழ்க மிருக-மனித அவதாரம் நான்" "தருணம் சரியாய் வர இருவர் இரண்டாயிரம் ஆக ஒருவர் முன் மொழிய தரும-தெய்வ அவதாரம் நான்" "ஊருக்கு கடவுள் நான் பாருக்கு வழிகாட்டி நான் பேருக்கு புகழ் நான் பெருமதிப்பு கொலையாளி நான்" "குருவிற்கு குரு நான் …

  5. கிறிஸ்மஸ் விடுமுறை வ.ஐ.ச.ஜெயபாலன் விடுமுறைத் தூக்கம் மதியப் பசியில் கலைய எழுந்தேன். வீடு அமைதியில். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. வெளியே கொட்டுதே வெண்பனி. உள்ளே மின்னுதே என் பிள்ளைகள் கோலமிட்டு நிறுத்திய கிறிஸ்மஸ் மரம். முண்றிலில் கணகணப்பு ஆடைச் சிறுவர்கள் வெண்பனியில் வனைந்தனரே ஒரு மனிதனை. சிறுமி ஒருத்தி கறட் மூக்குவைத்துக் கைகொட்டிச் சிரிக்கிறாள். தேர்ந்த பொற்கொல்லனாய் கண் வாய் என்று கற்கள் பதிக்கிறான் என் பையன். ஒருநாள் உருகிவிடும் எனினும் ஆக்கி மழ்கிறாரே பனிமனிதனை. நாளை குப்பையில் எனினும் இன்றை ஒளிர வைக்குதே என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம். நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும் ம…

    • 9 replies
    • 2.5k views
  6. பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம். அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன் பாலி ஆறு நகர்கிறது - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். …

    • 4 replies
    • 2.3k views
  7. தமிழ் ஈழம் அமைவதை இந்தியா அனுமதிக்காது. இலங்கை பிரதமர் இஸ்ரேலில் பேட்டி. அடப்போங்கப்பா... இஸ்ரேல் தடுத்தாலும் சரி... இலங்கை குதித்தாலும் சரி... இந்தியா குமுறினாலும் சரி.... தமிழ் ஈழம் நிச்சயம் அமையும்டா என் டுபுக்கு தமிழச்சி கவிதைகள் குமுதம்/பாமரன் பக்கம்

  8. [size=4]பலருடன் பழகலாம் - ஆனால் சிலரைத்தான் நெஞ்சில் வைத்து அன்பு கொள்ள முடியும் அந்த வகையில் நீயும் ஒருத்திடி உன் நினைவுகளோடு வாழ்கிறேன்... [/size]

    • 0 replies
    • 548 views
  9. [size=1]எத்தனை தடவைகள் [/size][size=1] மயிரிழையில் உயிர்தப்பினேன் [/size][size=1] எண்ணிக்கை எனக்கே தெரியவில்லை [/size][size=1] கிளைமர் பாதைகளில் எமது பயணம் [/size][size=1] வாழும் ஒவ்வொரு நாட்களும் [/size][size=1] போனஸ் நாட்கள் - இருந்தும் [/size][size=1] மகிழ்ச்சிட்கு குறைவில்லை [/size][size=1] கடமைச்சுமையால் [/size][size=1] உடல் களைத்தாலும்[/size][size=1] உள்ளம் இளமையாய் இருந்தது [/size][size=1] இழந்தவரின் கனவையும் [/size][size=1] சுமந்து வாழ்கையில் [/size][size=1] எதையும் தாங்கிற்று மனம் [/size] [size=1] இன்று [/size][size=1] நடைப்பிணமாயிற்று வாழ்வு [/size][size=1] கவிதை வாழ்வு கந்தலாய்க்கிடக்கிறது [/size] [size=1] -நிரோன…

  10. “அழகான கொலைகாரியே😷” அழகான கொலைகாரியே அடிவயிற்றை கலக்கிறியே வளமான எம் வாழ்வை வந்தேனோ அழிக்கிறியே பாழான பழக்கத்தால் உருவான அழகே-இன்று உலகெல்லாம் பரவிநீ-எம் வாழ்வில் செய்வதெல்லாம் இழவே உறவோடு நாமிங்கு உறவாட முடியாமல் எம் மிடைவந்த சதிரே இவ்வுலகையே உலுப்ப உருவான புதிரே சத்தமின்றி பெரும் யுத்தமின்றி கொத்துக்கொத்தாய் உயிர் அள்ளிபோறவளே சத்தியமாய் சொல்லு உனை ஏவியவன் எவனோடி உன்னை நாம் தொட்டதில்லை முத்தமிட்டதில்லை ஏன் பார்த்தது கூட இல்லை எப்படி எம் சுவாச அறைவரை வந்தாய் கண்கானா அழகே உனை கவிதையாய் வடிக்குமுன் எத்தனை முறை தும்மிவிடுகிறேன். ஒருவேளை என்னையும் நினைப்பதை உணர்த்தும் அறிகுறியாடி உனை தாங்கும் தைரிய…

    • 5 replies
    • 2.1k views
  11. ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிட்டந்தது தமிழ் வீரம்! இராசராசனும் ராசேந்திரனும் கங்கை கொண்டதும் கடாரம் வென்றதும் கீழ் ஆசியம் முற்றும் நல் தமிழ் பேரரசு கோலோச்சியதும் இன்நாளில்தான் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்தோம் இனமானம்! எள்ளி நகையாடினர் வடவர் என்று தமிழ்ச்சேரன் செங்குடுவன் படை எடுத்து இமயம் வென்றதும் இன்நாளில் மூவாயிரம் ஆண்டுகள் மூச்சிழந்தது எம் பகுத்தறிவு நம் மண்ணை ஆரியர் அபகரித்ததும் பணி செய்ய வந்த பார்பனீயம் எம் அறிவுக்கே விலங்கு இட்டதும் எல்லைகளை நாம் சுருக்கிக்கொண்டதும் இன்நாளில்தான் ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த தமிழ் வீரமும் ஈராயிரம் ஆண்டுகள் இழந்து கிடந்த இனமானமும் மூவாயிரம் ஆண்டுக…

    • 1 reply
    • 921 views
  12. உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…

    • 0 replies
    • 626 views
  13. எங்கள் எல்லைக்குள் வரும் எதிரிகளுக்கு ஏணையில் உறங்கும் பச்சிளம் குழந்தையைக்கூட ஏவுகணை வீசி கொல்லும் எதிரிகளே உங்கள் உலக சாதனையை அம்மணமாய் நின்று கொண்டு உலகம் வாழ்த்தட்டும் எங்கள் வலிகள் உங்களுக்கும் புரியவில்லை இன்னும் இந்த உலகத்திற்கும் புரியவில்லை மனிதம் தொலைத்து வெறிபிடித்த மிருகங்களாய் கொடிய முகம் கிழித்து வாருங்கள் எங்கள் எல்லைகள் எங்கும் உங்களுக்காய் மரணக்குழிகள் காத்திருக்கிறது எங்கள் குருதி உறைந்த செம்மண் பூமி எழுந்து உங்களைத் திண்டு விழங்கும் வெறும் எலும்புக் கூடுகளாய் உக்கிப்போன எச்சங்களை பொறுக்கி உங்கள் வீட்டின் முற்றத்திலே கொண்டுபோய் கொட்டுவோம் கனரக வண்டிகள் சுவர்களை உடைக்க பறந்திடும் விமா…

  14. 2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா …

    • 3 replies
    • 2.7k views
  15. யுகமாறு காலம் நிலாந்தன் முந்தித் தப்பினவன் நீதிபதியானபோது பிந்தித் தப்பினவன் துரோகியாக்கப்பட்டான் குற்றவுணர்ச்சியின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு முந்தித் தப்பினவன் தனது வம்சத்தையும் வம்சவிருத்தியையும் பாதுகாத்துக் கொண்டான் பாதுகாப்பான ஒரு இறந்தகாலத்தைப் பெற்றவனெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளன் ஆனான் சீவியத்தில் நேசித்தவரை மரண நேரத்தில் கைவிட்டுச் சென்றவனெல்லாம் இறந்த காலத்தைத் தத்தெடுத்து விட்டான் சீவியத்தில் நேசித்தவரை மரணம் வரை பின்தொடர்ந்தவனோ மரணத்தால் உமிந்து விடப்பட்டு கைதியும் அகதியுமானான். வீரயுகமொன்றின் முடிவில் கொல்லப்படாதவனெல்லாம் கோழையெனில் தற்கொலை செய்யாதவனெல்லாம் ஒற்றனெனில் எங்களில் எ…

    • 3 replies
    • 683 views
  16. எந்திரமான எண்ணங்களுக்கு தந்திரமாய் வண்ணங் கொடுக்கிறாய்! பத்திரமான மனசுக்குள்ளே சித்திரமாய் சிரிக்கிறாய்! சொல்ல வரும் சேதி... மெல்ல வந்து மோதி... வெள்ளமாய் மேவி... கள்ளமாய்த் தாவி... செல்லமாய் நுழைகிறாய்! வட்ட நிலா வானத்தில் உன் முகமாய்த் தெரியுதடி! கிட்டவந்து முற்றத்தில் வானவில்லும் மிளிருதடி! கதவடியில் நாய்க்குட்டி... காலடியில் பூனைக்குட்டி... அத்தனை தடையும் தாண்டிவந்து கனவுக் கண்ணிகளை என் கண்களுக்குள் புதைத்துவிட்டு... அப்பாவியாய்த் தப்பிக்கிறாய்! கொஞ்சம் நில்லடி கள்ளி..! உன்னிடம் ஒரு கேள்வி...!! என்னிடமிருந்து தூரமாய்... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...???

  17. (முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு அமெரிக்காவில் அஞ்சலி – 2010) கறுப்புத் தான் உன் உடம்பு மனசு என்னே வெள்ளை.. தமிழகம் ஆள வந்த முதல்வன் நீ எங்கப்பன் நீயென்று.. கறுப்பா.. கிழவா உன்னை நம்பிய ஈழத்து அப்பாவிகள் எண்ணங்கள் மரித்த நாள் மே 18...! "அன்னை" சோனியாவின் புன் சிரிப்பில் பொற்குவியல் கண்டவனே.. மேடைகள் தோறும் நடிகைகளை குலுங்கவிட்டு ரசிக்கும்.. கறுப்புக் கண்ணாடிக் கள்வனே.. கவிதையும் கடிதமும் உன் ஆயுதங்கள்.. அவையே "என் அக்னி ஏவுகணைகள்" என்றாய் ஈழத்தமிழரை காக்கும் "நாகாஸ்திரம்" என்றாய் ஆனால்.. அவை சாதித்ததுவோ தமிழரின் சாவிலும் உன் குடும்பத்து வாரிசுகளுக்கு நாற்காலி...! வீணனே.. குஷ்புவோடு வீணி வடித்தது போத…

  18. ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள் இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர் குடி எரிந்து முடிகிறது. ஹெலிஹொப்டர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தன நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நந்திக்கடலில் பறவை விழுந்து மிதக்கிறது பறவைதான் சனங்களை தின்றது என்றனர் படைகள் நந்திக்கடல் உனத…

    • 0 replies
    • 542 views
  19. Started by ஜீவா,

    அந்த ஒற்றை மரம் பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது கூடுகட்டிக் குருவிகள் வசித்தது மரம் முழுக்க மந்திகள் இருந்தது மரங்கொத்தி பறவையும் மறைப்பில் குருவிச்சை கூட குசியாய் இருந்தது எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது உண்ணக் கனி கொடுத்தது உறங்கப் பாய் கொடுத்தது ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து கொலை செய்யவும் துணிந்தது கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும் சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம் இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌ காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு…

  20. Started by karu,

    எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே - ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி இருபத்து நான்கிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே-ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர்-கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள்-தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும்-பல துயரக் கதைகளும் மறந்திடுமோ-அந்த (எண்பத்தி...) …

    • 13 replies
    • 2.4k views
  21. எங்கு போனீர்கள் இங்கு நாம் சாகையிலே.... மூச்செடுத்து விட்டதுபோல்-வருசங்கள் முடிந்தோடி விட்டாலும் நேற்றுப்போல் இருக்கிறது-நெஞ்சில் நெருப்பெரிக்கும் நினைவுகள் ஊற்றுப்போல் மனதில்தோன்றி-ஓயாது உள்ளத்தைக் குடைந்தெடுக்கும் தோற்றுப்போன நாட்களின் -மாறாத் தொடரும் உயிர்வலிகள் மண்ணிண் காவலர்கள்-விடுதலைக்காய் மரணித்த தேசத்தில் இன்னும் புல்பூண்டு-முளைத்து இயற்கை சிரிக்கவில்லை கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக் கண்ணகி எரித்தகதை இன்னும் சரித்திரத்தில்-படிக்க இலக்கியப் புத்தகத்தில் எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள் எங்கள் தேசத்தில் மண்ணுக்கு இரையானார்-மதுரைகள் இன்னும் எரியவில்லை வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு வளர்த்த கடாவெட்டி புருச…

  22. Started by வர்ணன்,

    தலையணையினடி- சர்ப்பம்! எலிகள்......... கீரிகளை பற்றி ....... கிண்டலாம்..! தமாசு! இனத்தோடு இனம் சேருமாம்(? ) எழுதி சென்றவனை ... இழுத்து வந்து குரல்வளை... நெரித்து கொன்றால்தானென்ன? காக்கைகூட தன்னினம் அழிந்தால் அழுமே....! ஈசல் கூட தன் இனத்தோடுதான் சேர்ந்து பறக்குமே! நடந்ததா....? இனமாம்- சேருமாம்............ வாய் கிழிய சொன்ன ஞானியே... வந்துபார்..ஈழ தமிழரிடை... நீ செத்தே போனாய்!! நடக்கிறது..... உன் வரிகளுக்கு வாய்க்கரிசி! சந்தோசமாய் மெல்லு!! உளறி தள்ளினாய்....... தருகிறார் பரிசு...... தாங்கி கொள்!!

  23. முற்குறிப்பு - வழக்கம் போல் ஓரளவு நீண்ட கவிதை, பொறுமை உள்ளவர்களுக்கு மட்டும்.. - இது போன்ற தொனிப்பொருளில் நான் எழுதுவது குறைவு போட்டி காரணமாக எழுத விழைந்தேன் .(ஏனென்றால் உணர்வு பற்றிய கவிதைகள் பாதிப்பது அதிகம் என உணர்ந்ததால், பற்றும பழைய கசப்புகள் ) விழிபற்றி விதையாகி... (வழங்கப்பட்ட கருப்பொருள் விழியதன் வழியினிலே) எழுதியவர்: மதுரகன் செல்வராஜா துடிக்கின்ற விரல்களிலிருந்து கண்களைப்பற்றி ஆயிரம் கவிதைகள் எழுதவேண்டும் - காதல் மயக்கத்தில் அல்ல... கண்ணீர் பற்றியெரியும் கதைகளையும் வற்றிப்போன விழிகளையும் கொண்டு இன்னும் சிலிர்க்கின்ற மயிர்களும் புடைக்கின்ற நரம்புகளும் கொஞ்சம் மீதமிருப்பதை எதிரிக்குப்புலப்படுத்த வலிக்கின்ற இதயங்களுடன…

    • 10 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.