கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால் கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும் பழசெல்லாம் வந்து வந்து போகின்றது காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி கட்டியவன் கூட காலாண்டாய் இல்லாமல் தொட்டதுக்கும் துணைவேண்டி துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன் கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு கண்பார்வை போயும் கனநாளாய் ஆச்சு கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்…
-
- 16 replies
- 8.7k views
-
-
முதுமை என்பதோர் புதுமை முதுமை என்பதோர் புதுமை - அதை முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு? முதுமை தருவது அறிவாகும் - அதில் முழுமை பெறுவோர் சிலராவர் முதுமை என்பது எதுவரை - அதன் முடிவைச் சொல்பவர் யாருளர்? முதுமை தருவது நோயென்று - தினம் முடங்கிக் கிடத்தல் தகுமோ? இனிதே, தமிழரசி
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
சின்னவனா இருக்கேக்க சூழ்ந்திடுவார் முதியவர்கள் ஆண்டு சில உருண்டோட பிரிந்து அவரும் சென்றனரே போகுதுபார் வாழ்நாளும் புயல் போன வேகத்திலை ஏறிடிச்சு என் வயதும் நானும் இப்போ கிழவனப்பா மூட்டுப் பிடிப்பிருக்கு மருந்தெடுக்க போகணுமே முட்டுக் கொடுத்தா தான் மூணு அடி நான் மிதிப்பேன் கால் நடக்க முடியாட்டா பாடை கட்ட முந்திடுவார் ஏக்கம் தாளாமை போக்கத்து நிக்கிறனே பங்கைப் பிரிக்காட்டி பால் வார்க்க மாட்டாராம் நான் சேத்த சொத்துக்கு எட்டுக்கால் வாரிசுகள் நாலெழுத்து படிக்காமை நாசமாய் போனதுகள் வீட்டையும் புடுங்கிட்டு நாட்டுக்கு அனுப்புதுகள் இண்டைக்கோ நாளைக்கோ போற உயிர் இது தானே நன்றியுள்ள நாய் இருந்தா-என் கஷ்டத்தை அது கேக்கும் பணத…
-
- 3 replies
- 1.2k views
-
-
முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..…
-
- 5 replies
- 1.4k views
-
-
என்னாங்க நம்ம தமிழ்நாட்டில பாட்டெழுதுறவங்க நம்மூரில உள்ள எதையாவது கோத்து பாட்டாக்கிடுவாங்க.. ஏங்க ஈழத்துல இப்பிடி எழுத மாட்டாங்களா? இது நாட்டுப்புறப்பாட்டுங்க புடிச்சிச்சு கொண்டாந்து போடறேன்... ஆக்கம் :- கொ. பெ. பிச்சையா முத்தமிழாய் தோணுதடி முத்துப்போல பல்லழகி முறுவலாய் சொல்லழகி கொத்துக்குலை கனியழகி கோவைப்பழ இதழழகி செப்புச்சிலை சீரழகி – உன்னை சேர்த்தணைக்கத் தோணுதடி திருவாரூர் தேரழகி தென்மதுரை ஊரழகி திருச்செந்தூர் அலையழகி தஞ்சாவூர் கலையழகி ஶ்ரீரங்கக் கோபுரமே – உன்னை சேவிக்கத் தோணுதடி தேனியூர் செங்கரும்பே திருவண்ணைக் கற்கண்டே வேம்பூறுக் கருப்பட்டியே வெள்ளியணை அ…
-
- 16 replies
- 1.2k views
-
-
[size=4]செங்கொடி சுமந்த செல்வங்கள் _இவர்கள் [/size] சங்கத்தமிழ் காத்த செம்மல்கள் [size=1][size=4]வெங்களம் புகுந்த வேங்கைகள் _இவர்கள் வீரத்தமிழின் மங்கள கீதங்கள்[/size][/size] தேகம் கரைத்த தெய்வங்கள் _எங்கள் [size=1][size=4]தேசம் சுமந்த விழுதுகள் யாகம் நடத்திய அக்கினிபிஞ்சுகள் _எங்கும் யாதுமாகி நிறைந்த தென்றல்கள்[/size][/size] முத்தமிழ் காத்த மூலவர்கள்_எம் [size=1][size=4]மூச்சாகி நிலைத்த காவலர்கள் [/size] [size=4]நித்திலம் எங்கும்ஒளிரும் தாரகைகள்_எம் [/size] [size=4]நினைவுகளில் வாழும் ஓவியங்கள். [/size][/size] மலர்சொரிந்து மணியோலித்து விழிகலங்கி [size=1][size=4]முகம்துடைத்து அகல் ஏற்றுவோம்[/size] [size=4]தளர்வகற்றி தடையுடைக்குமொர…
-
- 0 replies
- 421 views
-
-
உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்.............. உன்னிரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்................... உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன் எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத்தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்.............. -எங்கேயோ படித்தது
-
- 18 replies
- 2.3k views
-
-
பேனையை விட எனக்கு பென்சிலாக இருக்க ஆசை ஏனெனில் நீ சீவி கூர் பார்க்கையில் உன் கன்னங்களில் அடிக்கடி... முத்தமிடலாம்.
-
- 2 replies
- 963 views
-
-
-
- 6 replies
- 954 views
-
-
முத்துக்குமரனுக்கு ஒரு அஞ்சலி ................ தாய் தமிழகம் தந்த முத்து தரணியில் வந்துதித்து தொப்புள் கொடி உறவுகளுக்காய் ஈந்த மாபெரும் பரிசு தன் இனிய உயிர் , பத்திரிகையாளனாய் சாதித்தது போதாதென்று தமிழ் ஈழ சரித்திரத்திலே முத்தாக பதிந்து விடான் தமிழக முத்துக்குமரன் ஐயா முத்துக்குமரா .... நட்புக்கு இலக்கணம் உயிர் கொடுத்தல் இதை மிஞ்சியும் ஒரு கொடை உண்டோ ? உன் ஆன்மா சாந்தியடையட்டும் , உன் எண்ணம் நிறைவேறும் , ஆழ் துயிலில் ,நீ சாந்தி அடைவாய் சாந்தி... சாந்தி ...சாந்தி ........... ,
-
- 1 reply
- 954 views
-
-
முத்துக்குமரன் எனும் மாவீரன்..... கவிதை அஞ்சலி.... தமிழ் நாட்டின் செல்வமே நம் முத்துக்குமரனே முத்தான உன் உயிர்தந்து நம் மூச்சையே நிறுத்திவிட்டாய்.... காலையில் செய்திகேட்டோம் கண்ணீரால் நம் உடல் நனைந்தோம் உன் உடலைக் கருக்கிய உன் உறுதி கண்டு மனதளவில் உருக்குலைந்தோம் ..... உயிர்பிரியும் நேரத்திலும் பிரபாகரன் என்றாய் பின்னர் உயிரையே போக்கிவிட்டு தமிழன் பிரபஞ்சதையே நீ வென்றாய்... முத்துக் குழிக்கும் ஊரிலே பிறந்தவனே...... தமிழன் மனங்களிலே முத்தாக உன் உயிர் தந்தவனே..... தமிழ் நாட்டிலே விதையாகி தமிழர் மனங்களிலே முளைத்து விட்டாய்...... உன் மூச்சு அடங்கமுதல் உன் கொள்கைகளை எரியவைத்தாய்.... …
-
- 4 replies
- 1.6k views
-
-
முத்துக்குமரன்களும் முத்துவேலர்களும் தானாடாவிட்டாலும் தசை ஆடும்..அது ஆகாவிட்டால் தசை எரியும் ..முத்துக்குமரன்கள்... தானாடாவிட்டாலும் தசை நெரியும் முதுகுவலியில் (சாட்டாக) ஒதுங்கும்..முத்து வேலர்கள்... தமிழ் உணர்வு துரத்த ..தன்னுயிர் தானமாக்கும் முத்துக்குமரன்கள்.. தமிழ் உணர்வு வளர்த்து ... தன் வயிறு வளர்க்கும் முத்துவேலர்கள்.. தன் உறவுகள் துயர் பட ...உயிர் துறக்கும் ..முத்துக் குமரன்கள்.. தன் உறவுகள் கொழுத்துச் சிறந்திட ...உயிர் வளர்க்கும் ..முத்து வேலர்கள்.. ஒப்பிடவே முடியாத ..துயரம் ..கனக்கும் முத்துக்குமரன்கள்... ஒப்பிடலே இல்லாது ...காறி உமுழும் ...நிலையில் முத்து வேலர்கள்.. முன்னையது ..முத்து... பின்னையது..சொத்தை.. http://il…
-
- 0 replies
- 728 views
-
-
முத்துக்குமரா பார் நீ பாரில் தமிழீழ விடுதலை முத்துக்குமரா எங்களுக்காக உன்னுடல் வெந்தாய் விடுதலைக்காய் வித்தானய் வெந்தணல் மீது உன்னுடல் முத்தே உன் நினைவு எம்மை வாட்டுதய்யா! விடுதலை வித்தே ஈழ மக்களின் சொத்தே! உன் உறவுகள் நாம் எம் இனமடா நீ தீ வைத்தது உனக்கல்ல பேரினவாத பேரசுகளுக்கு வைத்தாய் ஈகை போராளியே உன் ஈகம் தமிழருக்கு விடுதலை தீயை விதைத்தடா பரவியது தீ பார் பாரெங்கும் விடுதலை பெறும் வரை உன் தீ அடங்குமாய்யா! எம் மனங்களில் அது விலகுமாய்யா! பார் நீ பாரில் தமிழீழ விடுதலை வா நீ வந்து பார் அதுவரை நாம் ஓயோம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2015/01/muththu.html
-
- 16 replies
- 1.1k views
-
-
முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக, எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது, ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும். எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி உனக்கு…
-
- 9 replies
- 2.4k views
-
-
முத்துக்குமாரா! முத்துக்குமாரா! தொப்புள் கொடி தந்த உறவே! நீ செத்துவிட்டதாகத்தான் சொல்கின்றார்கள் எல்லோரும்! இல்லைத்தம்பி நீ சாகவில்லை! உயிர்கொண்டும் பிணமாகத் திரிகின்ற பலரில் உணர்வோடு தமிழானாய் உயிரும் மானமும் எனத் தமிழ் விடுதலைக்கோர் கருவானாய்! தியாகத்தின் தீபமே உன்னைத் தீ எரிக்குமா? நீ மூட்டிய தீயிலே குருடர் கண் திறக்குமா? இருட்டிய கிழக்கது இனியாயினும் வெளிக்குமா?! உயிருன்னைச் சுடும் என உணர்ந்திட்ட பொழுதிலும் உண்மையை உரத்துச்சொன்னாய் உயிராயுதம் ஆகியே உன்னதம் ஆகிவிட்டாய்! தமிழ் அது உடையல்ல உணர்வென்று நீ உலகுக்கு காட்டிவிட்டாய்! தன்மான நெருப்பிற்கு எங்கள் தம்பியே நீ நெய் ஊறிவிட்டாய்! ஆட்சியே பெரிதென்று எண்ணுவோர் மத்தியில் தமிழன் மானத்தை நாட்டிவிட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை. இரவும் பகலும் இரத்த ஆற்றிலே எங்கள் வாழ்க்கை நீச்சல் அடிக்கிறது உலகம் முழுதும் தமிழர்களின் வீரவணக்கம் செய்திகள் படிக்க உயிரைப் பிழிகிறது! எமக்காக எழுந்த தெய்வங்களே ஏழு பேரையும் வணங்குகிறோம் ஒரு சோதிப்பெரு வெளிச்சம் எமக்குச் சக்தியானது போதுமையா! முகம் தெரியாத எம் முத்துகளே உயிராயுதம் ஏந்துவதை நிறுத்துங்கள் எழுத்தாணியைக் கையில் எடுத்து எட்டுத் திசையிலும் எழுதுங்கள்! உலகத்தின் விழிகளைத் திறப்பதற்கு உங்கள் உயிர்களை இழக்காதீர்கள் அவலத்தின் காணொளிகளை தொகுத்து உலகத்தின் விழிகளுக்கு காட்டுங்கள்! தெய்வங்களை நேரிலே பார்த்ததில்லை இன்று நெருப்பிலே பார்க்கின்றோம்! நேற்றிருந்த முகங்கள் இன்றில்லையே…
-
- 0 replies
- 839 views
-
-
முந்தை வினை முழுதும் மூர்க்கத்துடன் அறுக்க முனைகிறேன் ஆனாலும் முடிச்சவிழ்க்க முடியா முடிவுகள் அற்றதாய் வாழ்வு நீண்டுகொண்டே செல்கின்றது பிறவிப் பயன் அறிந்திடா பித்தம் தலைக்கேறிய மானிடராய் பேசுபொருளாய் ஆனதில் வாழ்வு படிந்தும் படியாமல் எப்பொழுதும் பயத்துடனே நகர்கின்றது பூனையில் காலின் எலியாய் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அர்த்தமற்ற வாழ்வின் நகர்வில் அகலமாகிக் கொண்டே செல்கின்றது ஆழ்மனதில் அசைக்கமுடியாது வேர்விட்ட நம்பிக்கைகள் இறுகப் பற்றியிருக்கும் இளையின் இறுமாப்பும் இன்னும் சிறிது நாளில் இல்லாமல் போய்விடுவதற்கான எல்லாக் காரணங்களும் எதிரிகளாகி என் மனத்துடன் ஏளனமாய்ச் சிரித்தபடி எதிர் யுத்தம் செய்கின்றன எனக்காகவே ஆர்ப்பரிக்கும் மனதின் அவலம் ஆழ்கடலில் மோ…
-
- 2 replies
- 727 views
-
-
முன் பின் தெரியா நகரில்... காலம் ஒரு பாம்பு போல் தன் ‘சட்டையைக்’ கழற்றும் இந்த மாலைப் பொழுதில் ஒரு கடற்கரை நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். இருள்வதும் பின் நீலம் பூசி மீள்வதுமாய் வானத்தின் வித்தைகள். சாலையெங்கும் இலைகளை வீழ்த்திக் கடக்கின்றது ஊசி விரல்களுடன் குளிர் காற்று. எதுவும் நிலையற்றதெனச் சொல்லக் காத்திருக்கின்றன மரங்கள். சூதாட்ட விடுதிகளும் கடைத் தெருவும் குளிர் மெழுகாய் உறைந்து போய்க் கிடக்கின்றன. நெடியவன் ஒருவன் தன் இடுப்பளவேயான சிறுமியைக் குனிந்து முத்தமிட்டவாறே தள்ளிக் கொண்டு செல்கின்றான். மதுப் புட்டிகளுடன் விரைகின்றனர் நகரவாசிகள். பொய்யின் ஏழுவர்ணங்களுடன் அகஸ்மாத்தாய் தோன்றுகிறது வடபுறத்தே ஒரு வானவில். முன் பின் அறியா அந்த …
-
- 1 reply
- 701 views
-
-
முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=2676%3A2011-06-22-23-46-22&catid=59%3A2011-04-09-15-25-47&Itemid=107 இடம் பெயர்ந்த பின்னர் இடிந்து போன துயிலுமில்லமொன்றின் அருகிருந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை(க்) கண்டெடுத்தேன் துயிலுமில்லமருகே இருந்த மகிமையோ என்னவோ இன்று வரை துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள் வேகமும், அதற்கே ஊரிய வீரியமும் சிறிதளவு குன்றாது உந்தி மிதிக்க உருண்டோடி, இவ் உலகின் மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு நிகரான சுகத்தை அது எனக்குத் தந்தது! முதன்மைச் சாலையென முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட கிளி நொச்சி…
-
- 0 replies
- 940 views
-
-
வணக்கம், இது கவிதைப் பகுதியில் நான் பதிந்தாலும் இது நிச்சயம் கவிதை அல்ல. பொங்கல் எனக்கு பல வழிகளில் முக்கிய தினம் ஆகின்றது. பொங்கலுடனான என் நினைவுகளை ஒரு கட்டுரையில் சொல்வதை விட கவிதை போன்ற ஒரு மொழியில் உடைத்து சொன்னால் சரியாக இருக்கும் என்று இதை எழுதுகின்றேன்.... எனக்கு இன்னும் என் நினைவுகளில் ஊரில் பொங்கிய பொங்கலின் வாசம் மிச்சம் இருக்கின்றது நாக்கின் ஓரத்தில் இனிப்பின் இறுதி சொட்டுகளை கவனமாக காக்கின்றேன் இன்னும் முன்னொரு காலத்தில் பொங்கல் பொங்கிய என் பாட்டியின் தொலைந்து போன வடையின் ருசியும், அதைக் காவு கொண்ட காக்காவின் பசியும், அதையும் (கூட) சூறையாடிய நரியின் தந்திரமும் இன்னும் என்னுடனே வருகின்றன *************** …
-
- 6 replies
- 1.3k views
-
-
அம்மா மூக்குவழி நீருகுக்க வைக்கும் இந்த முன்பனிக் காலம் இதயமாயில்லை. காதுமடல் களவாடிச் செல்லும் பைன்மரக்காடுகளின் ஊதற்காற்று துன்பம் தருகிறதம்மா! என்னிலும் சற்று வெளிறியவன் ஏவலிட்டான். மாதக் கடைசியை மனம்கொண்டு தேய்த்ததில் பாத்திரங்கள் போலத்தான் கைகளும் வெளுத்துப் போயின. என்ன குறையென்று நேற்றென் நண்பன் கேட்டான். ஏதுமில்லைத்தான் சொல்லுதற்கு. ஆனாலும் ஆனாலும் உறுத்துகிறது ஏதோவொன்று கவளம் சோற்றில் கடிபட்ட கல்லாய். அம்மா! நானும் அப்பா போல் பெரியவனாகி விட்டேன் அப்பாக்கு அறுபத்தாறில் அடங்காதென்ற "நாரிப்பிடிப்பு" உன்மகனுக்கு இருபத்தாறில். இங்கு பருவங்களில் ஒன்றாம் வசந்த க…
-
- 8 replies
- 1.4k views
-
-
முன்பு பின்பு இப்போ இனிமேல் முன்பு அடித்தபோது வாங்கினோம் பாதுகாப்புத்தேடி ஓடினோம் பின்பு அடித்தபோதும் வாங்கினோம் திருப்பி அடித்தபோது நீ ஓடக்கண்டோம். இப்போ அடிக்கிறாய் அடிக்கடி அடிக்கிறய் தாங்கிக்கொண்டோம் அதனால் பலவீனரா? இனிமேல் அடிக்க நினைத்தாயோ! முடியாமற்போகும். அப்போதிருப்பாய் நீ பலவீனனாய்.
-
- 1 reply
- 880 views
-
-
முன்றில்வேம்பு வ.ஐ.ச.ஜெயபாலன் நினைவுள்புதைந்த வேப்பம் வித்து திறக்கும்இணைய ஓவியத் தளமாய் நெஞ்சுள்பசும் குடை விரிக்க காலத்தைமீட்டு வாழ்ந்தேன். முலை அமுது உண்டேன். நிழலில்தவள்ந்து மண் விழையாடினேன். என் அயல் சிறுமி `குஞ்சாமணியை` எங்கேதொலைத்தாள் என்று வியந்தேன். பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன். கோவிற்பொங்கலில் நீறு பூத்த தணற் பாவைகளாய் வெளியேநின்ற சிறுவரை எனது பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு அதிர்ந்தமனசை 'அது அது அவர் அவர் ஊழ்வினைப்பயன் ' என தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன். எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன் அம்மணமாக மாமா இருந்ததை கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன். ஆண்குறிவிறைக்க நோய…
-
- 7 replies
- 2.3k views
-
-
மும்மனி தந்தான் புத்தன் முப்பால் தந்தான் வள்ளுவன் மும்பழம் தந்தாள் ஒளவை முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்
-
- 29 replies
- 4.2k views
-
-
முப்பால் வேந்தனுக்கு முற்சந்தியில் சிலை முடிந்தது எம்கடமை, முதலிரண்டு பாலும் முயற்சிக்கவில்லை எனவே முடியவில்லை மூன்றாம் பால் முயற்சிக்காமல் முடிந்தது,இப்பால்- மூவிரண்டில் புரியாமல் தவிப்பு மூவைந்தில் புரிந்து தவிர்ப்பு முவெட்டில் புரிந்தது தணிந்து,தொடர்ந்து மூவிருபதில் உடல் தளர முதலிரண்டுபாலும் முக்கியமென்று முடிவுகட்டும்போது மூச்சு நின்று நம் கதையும் முடிந்திடுமே
-
- 12 replies
- 1.6k views
-