கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? தமிழர் கூட்டத்தின் தறுதலைகள் விரோதமா? தவறிழைத்து விட்டது நோர்வேயின் ஆட்டமா? ஆலமரம் ஒன்று அடிசாய்ந்து போனது பாழும் சேதி காதில் பாதரசம் வார்த்தது. பல்லாயிரம் உயிர் தின்று பெருங்கூட்டு வென்றது. பணிந்த புலி உயிரறுப்பில் பாரதமும் நின்றது நந்திக் கடலோரம் மனித நேயம் நொந்தது. நடேசன் என்ற எங்கள் சாந்த நிலா வெந்தது. வல்லரசுச் சதிகள் எங்கள் வாழ்வள்ளித் தின்றது. வெள்ளரசுப் புதல்வரிடம் வெள்ளைக் கொடி தோற்றது. ஐ.நாவின் அரியணையில் நீதி செத்துப் போனத…
-
- 7 replies
- 1.8k views
-
-
யார் மீட்பாரோ! --------------------- எம்மை அழித்த இன்னொரு ஆமியாய் வந்த சுனாமியே எந்தனை உயிர்களை காவு கொண்டாய்! சாவுகள் சூழ்ந்து சாய்ந்த மனங்களை சாவுகளாலே மீண்டும் சாய்த்தாய்! ஆண்டுகள் கடந்து போகின்ற போதிலும் எம்முடன் வாழ்ந்தவர் நினைவுகள் வாழுமெம்முடன் என்பதை அறிவே அறியுமல்லவா! துயரங்களாலே நிறைந்த வாழ்விலே தோள்கொடுத்த எம் மீட்பரும் இன்றி தொலைகின்ற வாழ்வினை யார் மீட்பாரோ! மீடபராய் யாரும் இல்லாவிடினும் துட்டராயேனும் இல்லாதிருக்கும் நிலையொன்று வேண்டும் நிம்மதிகான வழியொன்றும் வேண்டும் வலிகளைக் கடந்து நிமிர்ந்திட வேண்டும் உலகிலே தமிழினம் நிலைபெற வேண்டும்! சுனாமியில் சாய்ந்த உறவுகள் நினைவோடு கடலிலே மீண்டும் இறங்கியது போல் கரைகளைத் தேடப் புதிய திசைகளைத் தேடுவோம் நாமே!
-
- 0 replies
- 567 views
-
-
- கருணாநிதி, தி.மு.க. தலைவர் கடற்கரையோரம் நின்று கவிதைப் பயிர் விளைக்க கற்பனைக் கலப்பை பிடித்து கடல் அலையில் கவின் நிலவொளியில் ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே! சீராட்டும் தமிழில் என்னை கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்... அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர் அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும் கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின் கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும் தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்! கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம் ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல் …
-
- 13 replies
- 2.1k views
-
-
மேவும் துயர்கழுவியொரு மழை பொழியட்டும் தீச்சொரிந்து வானம் திசையழித்து எழட்டும் அந்த ஒளி விழுந்தெங்கும் பரவட்டும் அந்தோ... இருள் மூடி எந்தைநிலம். நிலப் பிளவுகளிலிருந்து எழுகின்ற ஓலம் கேட்கிறதா, சிதைந்த கற்கோளங்களில் எழுகின்ற பாடல் புரிகிறதா காற்றோடு கலந்துபோன பிள்ளைகளின் நேசம் தெரிகிறதா பெருங்கனவுடன் துடித்துக் கிடக்கிறதே மண் மேடுகள் அதாவது புரிகிறதா நிலமே எனைசுமந்த நிலமே ஊரோடுகூடி காந்தள் சூடி ஒளியேற்றி உணர்வெழுந்து மணியொலித்து முகம் பார்க்கும் உறவுகள் எங்கே... விழிநீர் மறைத்து மேனி தழுவிக் கரம் பிடித்து களமாடிய கதைபேசும் தோழர்கள் எங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
யார்க்கெடுத்துரைப்போம்? யார்க்கெடுத்துரைப்போம் பாதுகாப்பு படையின் பாதகச்செயலை பிஞ்சுடன் பூவுமாய் செடியைப் பிடுக்கின்றார் நான்கே மாதச் சிசு மார்பில் மூட்டிய அனல் ஆறவில்லை அடுத்து அடுத்து அனலை நெஞ்சில்க் கொட்டுகின்றார் யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை தம்பி உன்னை அடிக்கும் போது அண்ணா என்று கதறினாயா? :cry: அண்ணா உன்னை அடிக்கும் போது தம்பி என்று கதறினாயா? :cry: கண் முன்னே பாலகரை வதைக்கும் போது மகனே என்று கதறினாயா? :cry: உன் மனைவியைச் சூறை ஆடும் போது கண்ணே என்று கதறினாயா? :cry: யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை எப்படி எப்படி குமுறலுடன் உம் உயிர் போயிருக்கும் நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் …
-
- 5 replies
- 1.9k views
-
-
ஒரு அகவையை தாண்டுவதே ..... இயந்திர வாழ்கையில் .... சாதனையாக காணப்படும் .... காலத்தில் பதினெட்டாவது .... அகவையை அடையும் - யாழ் .... இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! மண்ணுக்காக மடிந்த .... மைந்தர்களை மாவீரர் நினைவுகள் ... பகுதியிலும் .....!!! உள்ளூர் புதினங்களை ஊர் புதினம் பகுதியிலும் ..... வெளியூர் புதினத்தை ... உலகச்செய்தி பகுதியிலும் ..... சமூக பிரச்சனைகளை .... சமூக சாரளம் பகுதியிலும் .....!!! கவிஞருக்கு கவிதை பூங்காடு .... கதாசிரியருக்கு கதை கதையாம் ... தனியாக வகுத்து செய்திதரும் .... யாழ் இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! யாழ் மண்ணுக்கு மகிமையுண்டு .... யாழ் இணையத்துக்கு வ…
-
- 1 reply
- 692 views
-
-
-
யாழிலும் இனிது உன் தேன்மதுர குரல். மனக்கண்களிலும் இனிது முகம். சிறு குழந்தையின் மழழை புன்னகை உன் கண்வழிய, பார்க்கும் கண்கள் மயங்கும்நிலை தாண்டியும் உரக்கம் மாண்டு >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> சிறு வெற்றிகளும் இமைய மலை உச்சி கொண்டு சென்றது, நீ அருகில் இருந்ததால். சிறு தோழ்விகளும் ஆழ்கடலின் இருளை காட்டியது. நீ இல்லாபோது சேரும்போது கண்ட மகிழ்ச்சியும் பிரியும்போது கண்ட உணர்ச்சியும் …
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழில் கலவரம் நீ யாரென நினைத்தால் யானென்ன செய்வேன் நீ உரைத்தே குரைத்தால்- நானென்ன உறங்கியா போவேன்?? நீ நினைத்ததை திணிக்கின்ற நினைப்பதை மறந்திடு கருத்து சுதந்திர கன்னியம் காத்திடு. தலைமேலே ஆணவம் தலைமேலே அமர்ந்தால் தடக்கியே விழுவாய் தடமது அழிவாய்... யாழது நிலவரம் யாழினில் என்றால் அன்னியன் நீயுமே- உனை அடித்தே உதைப்போம்.... தட்டியே கேட்காமல் தவறதை விட்டால் வருந்தியே அழுகின்ற வம்சமாய் ஆவோம்.. காத்த பொறுமைகள் காற்றோடு பறக்கட்டும் இனியும் பொறுத்தால் இமயங்கள் தகரும்... சுதந்திர ஊடக சுதந்திரம் மிதித்தால் - உனை சுடுகாடு அனுப்பாது விடுவது முறையோ...??? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1k views
-
-
யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா! நெடிதுயர்தல், நீள் வளர்தல் அனைத்துமாய் நின் மாற்றம் குரலொலியில் தெரிகிறது ஆண்மையின் ஏற்றம் செறிந்த பலம் குவிந்து நிமிர்கிறது நின் மார்பு அகண்ட பெரு வெளியில் விரிகின்றன உன் தோள்கள் யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா தமிழேந்தி வலையுலவும் மெட்டழகா பதினாறின் விடலையே பயமேது உனக்கு பால் வடியும் முகத்தில் அரும்புதடா மீசை பக்கவாட்டு கன்னங்களில் படருதடா புற்கள் இலக்கியத்தில் உனைச் சொன்னால் இரும்பூக்கும் என் சொல் இன்றுனக்கு பதினாறாம் இளையவனே! தவழ்பருவம் முடித்துவிட்டாய்.. தமிழேந்தித் திரிந்து தரணியை வரி அமிழ்ததொன்றே அவ…
-
- 18 replies
- 2.1k views
-
-
யாழ் மொழி பேசும் களவாணிகள் பல்கி பெருத்து விட்டனர் ஏதாவது ஒரு நொண்டிக் சாக்கு ஒரு சொல் போதும் கிளர்ந்து எழும் அடிமைகள் பதிவுகள் மற்றும் எழுத்துக்கள் இவை மற்றுமே முடிவுகள் என்று கருத முடியுமா என்ன.? பத்தாயிரம் பதிவுகள் போட்டால் நீ பெரியவன் சில பத்து பதிவுகள் போட்டால் நீ பிச்சைக்காரன் என்னங்கடா உங்கள் சைட்டு..? இணைய தளத்தின் அராஜகம்.. பிறகு எங்கு வினவுவது..? மனித மாண்புகளை.. சங்கிலிக்கருப்பு
-
- 12 replies
- 914 views
-
-
-
யாழ் அது எனது வாழ்வு அதன் உறவுகள் எனது உடன் பிறப்புக்கள் யாழ் எனக்கு எல்லாம் தந்திருக்கிறது ஐயா அண்ணன் அக்கா தங்கை தம்பி மாமன் மச்சான்......... யாழ் எனக்கு தாய் அமைதி வழி நடந்து அடிவாங்கி ஆயுதம் தூக்கி நரித்தனமாய் அழிக்கப்பட்டு உருக்குலைந்து இனி என்ன செய்ய என்ற நிலையில் நான் சாய்ந்த மடி யாழ்........... யாழ் என் தங்கை போல அழகு செய்ய ஆசை நடந்த நல்லவை அனைத்திலும் நானும் பங்காளி ஆபத்து வந்தபோது காவலன் யாழ் என் பெண்டாட்டி போல அதன் அருமை எனக்கு தெரிவதில்லை எனது பலவீனங்களை நான் ஒரு போதும் வெளியில் சொல்வதில்லை யாழில்லையென்றால் நான்? சொல்லமாட்டேன்.............. அவள் வாழிய பல்லாண்டு....... தமிழிருக்கும் வரை அவள் இருப்பாள்.
-
- 13 replies
- 944 views
-
-
யாழ் இணைய நண்பர்களுக்கு... கவலைகள் சுமக்கும் கவிகளே கண்ணீர் நிறைந்த கண்களை திறந்து கண்ணென்று தெரியும் உங்கள் உள்ளத்தை பாருங்கள் நீங்கள் சில நொடி வாழும் வீட்டில் பூச்சியும் வீறு கொண்டு வாழும் போது நல் வழி உண்டு நீங்களும் வாழ மனபலம் எனும் வாளை எடுங்கள் தடுக்கும் பாறைகளை வெட்டியெறியுங்கள் நடுக்கடலில் விழுந்தாலும் மூச்சுள்ள வரை நீந்தப் பழகுங்கள் இருட்டில் ஓவியம் வரைவதை நிறுத்துங்கள் வெளிச்சத்தில் கோடு போட பழகிக்கொள்ளுங்கள் கோடுகள் ஏணிகள் ஆகட்டும்... ஏணிகளில் உங்கள் பயணம் தொடங்கட்டும் மனதை விரிவாக்குங்கள் விண் மீனை தொட முயற்சி செய்யுங்கள் தோல்வி என்பதும் ஒருவகை பலம் தான் இறுதி வரை போராடுபவர்களுக்கு...
-
- 16 replies
- 2.2k views
-
-
கவிபாடும் புலவர்களே இங்கே வாருங்கள் யாழ் இணையம் மன்னனுக்கு வாழ்த்துப் பாடுங்கள் தமிழாலே அவனை நீங்கள் குளிப்பாட்டுங்கள் உங்கள் கவிதையலே அவனை நீங்கள் அலங்கரியுங்கள் கப்பம், வரி இல்லாத இந்த மன்னனை வாழ்த்துக்கூறுங்கள் கவிஞர்களை ஊக்குவிக்கும் இவன் பண்பை பாருங்கள் சங்ககாலப் புலவர்போல கவிகள் புனையுங்கள் வீரம் செறிந்த கவிகளையும் இந்தமன்னனுக்குப் பாடுங்கள் வீதி உலா வரும் மன்னன் அழகைப் பாருங்கள் குடிக்கள் குறைகளை எடுத்துக் கூறுங்கள் இந்த தமிழ் மன்னன் நீடூழி வாழ வழிகள் செய்யுங்கள்
-
- 2 replies
- 960 views
-
-
யாழ் இணையத்தின் சமூக, இலக்கியப் பணி, தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணி போற்றுதலுக்குரியது. யாழ் இணையம் மேன்மேலும் வளர்க!
-
- 2 replies
- 700 views
-
-
நான் துரோகி! நீயும் துரோகி! என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி! பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி! அவன் துரோகி! இவன் துரோகி! அவனைத் தெரிந்த அவள் துரோகி! அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி! கடல் துரோகி! காற்று துரோகி! கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி! கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி! கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி! பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி! பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி! நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி! நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி!…
-
- 22 replies
- 5k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை யாழ் இணையத்தின் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் இணையம் பற்றிய உங்கள் கவிதைகளை, வாழ்த்துக்கவிதைகளை இப்பகுதியில் இணையுங்கள்.
-
- 24 replies
- 4.2k views
-
-
யாழ் உறவுகளே யாரும் இல்லாத் தனியனென்று யாரோ சொன்ன வார்த்தையினால் சோகம் கொண்ட எந்தனுக்குச் சுகமாய் வந்த யாழ்தளமே வாழப் பிடிப்பும் இல்லாமல் வெழும் வழியும் தெரியாமல் சோம்பிப் பொன எந்தனையும் சுறுசுறுப் பாக்கிய உறவுகளே அனைவருக்கும் வணக்கம் உங்கள் எல்லாரோடையும் கொஞ்சம் மனம்விட்டுக் கதைக்கோணும் போலக் கிடக்குது. என்ன சொல்ல வந்தனான் எண்டா நான் இந்த யாழ் குடும்பத்துக்குள்ளை சேந்து ஒரு கிழமைதான். ஆனா அதுக்கள்ளை எனக்குள்ளை நிறைய மாற்றங்கள். சத்தியமாச் சொல்லுறன் ஏதோ தனிமைப் பட்ட மாதிரி யாருமில்லாத மாதிரி ஒரு உசாரில்லாமை இருக்கேக்கைதான் தற்செயலா இந்தத் தளத்துக்குள்ளை புூந்தனான். ஆனா இப்ப தான் தெரியுது எனக்கு எத்தினை பேர் இருக்கிறியள் எண்டு.. என்ரை கதை கவி…
-
- 17 replies
- 2.8k views
-
-
யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைப்பதையொட்டிய சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 01*** தலைப்பு: "தூ!" வெனத் துரோகிகளின் தலையில் காறித் துப்பிவிடு! கவியரங்கின் நடுவர்கள் விகடகவி நோர்வேஜியன் வன்னிமைந்தன் குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண…
-
- 29 replies
- 4.3k views
-
-
ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 02*** தலைப்பு: யாழ் கீதம்! - யாழ் இணையத்திற்கான ஒரு கீதம்! கவியரங்கின் நடுவர்கள் பண்டிதர் தமிழ்தங்கை குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழி…
-
- 36 replies
- 6.7k views
-
-
ஒட்டி விட்ட ஊரை விட்டு ஓடி வர மனசின்றி.. ஒட்டிய விசா ஸ்ராம் உந்தித் தள்ள பள்ளிப் படிப்பு இழுத்து வர ஓடி வந்த இடத்தில் ஒதுங்க ஓர் இடம்..! மோகன் - யாழ் என்ற உறவுகளின் சிந்தனையில் உதித்த ஓர் தளம். ஆங்கில மேடையில் விதம் விதமாய் அலங்கரிக்க அங்கீகாரம் இருந்தும் அங்கும் எழுந்தது தாய்த் தமிழ் தாகம்..! நட்புக்கள் தம் உறவாடலில் யாழெனும் இணையத் தொடர்பும் பிணைந்து கொள்ள "வைரஸாய் " முதல் நாமம் இட்டு தொற்றிக் கொண்டது இன்னும் பசுமையான நினைவுகளாய். கேடு இன்றி விளையாட்டா "ஹாக் "செய்து யாழின் "கோட்" எடுத்து தமிழ் போறம் செய்து நண்பர்கள் விளையாட.. கூடியிருந்து களித்தமை இன்றும் நினைவதில் ஊஞ்சலாடுது..! யாழின் நெருக்கம் எம் எஸ் என் வழி கை நீட…
-
- 60 replies
- 4.7k views
-
-
வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! உன்னோட உயர்வுக்கு உன்னோட எழுத்து என்னோட உயர்வுக்கு என்னோட எழுத்து யார் எழுத்தையும் யாராலும் தடுக்க முடியாதடா யாரும் கெடுக்க முடியாதடா..! அடுத்தவன் வாயைப் பார்க்காம வாடா வாடா வந்து சுய ஆக்கமா எழுதிப் போடடா இது உன்னோட களமடா..! வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! அடுத்தவன் காக்காவை காவடியை தூக்கிப் போடடா …
-
- 8 replies
- 1.7k views
-
-
1993.... சிங்களரும் தமிழுரும் மரமும் கொடியும் சிந்தனை செய்து டிங்கிரி பண்டா தமிழின அழிப்புக்காய் ஏவி விட்ட ரஷ்சிய டாங்கிகளின் அணிவகுப்பாய் யாழ் தேவி....! ஆனையிறவு தாண்டி கிளாலி வெளியில் புலிப் பாய்ச்சலில்.. தடம்புரண்டு போச்சுது அது..! தோல்விக்கு விலையாக சங்கத்தானையில் போட்ட விமானக் குண்டில் பலியான தமிழினம் இன்னும் அலறுது வேதனையில்...!! 2013... முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நாயகன்... "வடக்கின் வசந்தம்" மகிந்த சிந்தனையின் பிறப்பிடம்.. மகிந்த பண்டா ஏவும் இந்த வெற்றி மமதை யாழ் தேவி ஹிந்தியத் தடமதில் சீன உருவமாய் தடமுருண்டு வந்தாலும் தமிழர் நிலத்தில் - அது ஓர் பாழ் தேவி..! இதன் வரவில் பாழாகப் போகுது எம் தமிழ் தேசம்..! விபத…
-
- 30 replies
- 3.9k views
-
-
யாழ் நிலம் 0 தீபச்செல்வன் ---------------------------------------- 01 குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது நிலம் அள்ள வரும் கைகள் யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன இந்த யாழ் உடைந்து போகட்டும்! அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!! என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன் யார் யாரோ வந்திறங்கி யாழெடுத்து எறிகிறார்கள் வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும் விளம்பரப்பலகைகளின் நிழலில் அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு யாழோடு நிலத்தை யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத் தின்று கொண்டிருக்கின்றனர் நகரெங்கும் நிலமெங்கும் …
-
- 0 replies
- 806 views
-