கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
இப்படியான செய்திகள் இனி எங்கே எம் காதுகளை எட்டப் போகின்றன என்றிருந்தோம்! எட்டிவிட்டது...! என்ன சொல்வது? ஆனந்தம் தாழ முடியவில்லை! பொங்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...! நீண்ட நாட்களின் பின்னர் பாரம் குறைவதாய் உணர்கிறோம்! நெஞ்சின் கனம் எல்லாம் கரைந்து போனதாய் ஒரு உணர்வு...! நெடுநாள் தகித்த எரிமலை ஒன்று எகிறிப் பிளந்து வெடித்தது போல, எல்லாமும் கைகளில் வந்தது போல ஒரு எல்லை இல்லாத ஆனந்த உணர்வு...! என்றாலும் இந்த மகிழ்ச்சியிலும் கண்ணீரே வெள்ளம் போல வருகிறது..! ஏதோ ஒன்று எங்கோ தொலைந்ததாய் ஒரு வலி..! ஒருமுறை எல்லா உறவுகளும் ஒன்று கூடி ஓ என்று ஒப்பாரி வைத்து களைப்பாகும் வரை கதறி அழ வேண்டும் போல் உள்ளது. ஏன் அழுகிறோம்? எதற்காக அழுகிறோம்? யாரை நினைத்து அழு…
-
- 0 replies
- 646 views
-
-
இனியவனே உனக்காக நீ இருக்கும் போதும் என்னைப் போல் யாரும் உன்னை நேசிக்கவில்லை நீ இறக்கும் போதும் யாரும் உன்னுடன் இறக்கப் போவதில்லை ஆனாலும் அவர்களுக்கெல்லாம் பயந்து கொண்டு உன்னை நேசிக்கும் என்னை எப்போதும் ஏமாற்றிவிடுகிறாய் நீ உன்னை நான் துரோகி என்று சொல்லவில்லை.... பாவி என்றும் சொல்லவில்லை..... அந்தளவுக்கு என்னிடம் தைரியம் இல்லடா..... மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை சொல் தாங்கமாட்டேன் கல் இல்லை என் இதயம் கசக்காதே உன் வார்தைகளால் வலிக்குதடா...... பலர் வாழும் உலகம் இது... நீயும் வாழனும் தானேடா எங்கேனும் நீ சந்தோசமாய் வாழ்ந்திடு...
-
- 2 replies
- 925 views
-
-
மனதில் ஓர் காதல் பரிசு..... கவிதை - இளங்கவி சேர்ந்த உதடுகளுக்கிடையில் சீனப் பெருஞ் சுவராய் அவளின் தலைமுடிகள அவன் உதட்டை உறுத்தின........ அவள் மூச்சின் வெப்பம் மூச்சால் வெளிவர மறுத்து அவள் கண்களூடே வெளிவர அவன் கண்களோ- அவளின அனல் மூச்சின் வெப்பம் தாளாமல் அதைத் தணிப்பதற்கு வேறு இடம் தாவியது....... அங்கே குளிரும் அறையில் கொதி மலைகளின் தழுவல்..... இரத்த நாடிகளின் வேகம் அதன் உச்சத்தில் இருக்க... இரத்த நாளங்களோ அதற்குப் பக்கத் துணையிருக்க.... போதாது என்று- அவன் ஏக்கம் கூடவும்..... போதும் வரை போராடு என்று அவளின் உணர்வும் சேரவும்.... அந்த அறையில் சில நிமிடப் புயல்கள்.... சில கணங்கள் அமைதி.... பல நிமிட அணுயுத்தம் …
-
- 2 replies
- 1.1k views
-
-
கொத்துக் கொத்தாய் பூத்த மலர்கள் தலைகள் சாய்ந்து... பசுமை இலைகள் பழுத்து விழுந்து... சுட்ட சூரியன் வெப்பம் தனிந்து... பகல்ப் பொழுதும் இருள் கவிழ்ந்து... வெண்திரைப்பனி வானத்தை மூடி... குளிரின் வலிமை உடலைத்துளைக்க... பிறந்தது குளிர்காலம் போனது இனிய மோகம்... மீண்டும் பிறக்கும் அந்தக்காலம் -இனி... மீண்டும் மீள்வோமா-நாம் அந்த இளமைக்காலம்?
-
- 2 replies
- 1.4k views
-
-
சில்லுடைந்து விழுந்த வண்டி சிலுக்காகி ஆடையிலே பல்லெடுத்து சிரிக்காம பார்த்து நானும் நிற்பேனோ...??? வந்த வழி தடுமாறி வழியோரம் கேட்கையிலே என்ன வென்று சொல்லாமால் எடுத்தெறிஞ்சு போவேனோ....?? கட்டழகு மேனி காட்டி கண்னேதிரே நீ வந்தா கண்ணெடுத்து பார்க்காமா கரையொதுங்கி போவேனோ...?? சுத்தி விட்ட துணி நளுவி தொப்பிளது தெரிஞ்சுப் புட்டா கை nவைத்து நுள்ளாம காளை நானும் நிற்பேனோ...??? முற்றத்து வாசலிலே துளசி மரம் முன்னிருந்தா கை யெடுத்து வணங்காமா காலெடுத்து போவேனோ....??? பதில் சொல்லு....! :P :P :P - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.1k views
-
-
எது எதுக்கு யார் யார் யார் யாருக்கு நடத்தலாம் சாதனையாளர்க்கோ சமூகத் தொண்டர்க்கோ வீரர்க்கோ என்றில்லை யார் யார்க்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் அதிகம் கொலை செய்தவர்க்கு கொலைக்குத் துணை நின்றவர்க்கு கொலை செய்யப்பட்டவருக்கு பயன் பெற்றதற்கு பயன் பெறுவதற்கு பிரபலமாவதற்கு விழா நடத்துவதற்கு மனத்தில் இடம் பிடிப்பதற்கு சும்மா பாராட்டுவதற்கு பாராட்டு விழா நடத்தியதற்கு சிலரைப் புறக்கணிப்பதற்கு பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை பிறர் பெயரில் நாமேகூட நடத்திக்கொள்ளலாம் அல்லது பிறரைத் தூண்டி நடத்திக்கொள்ளலாம் பாராட்டு விழாக்கள் பாராட்டுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை ! நன்றி : ஆனந்த விகடன…
-
- 8 replies
- 932 views
-
-
நீங்கள் அத்தனை பேரும் ............. அத்தனை பேரும் வாழ்கையை ...வாழ்கிறீர்களா? மனைவியை மாதமுருமுறை என்றாலும் "வெளியில் " அழைத்துச்செல்கிறீர்களா?.. மனைவி பிள்ளைகளுடன் ....மரடிக்கிராலா? ....ஒரு மாற்றதிக்கு பிள்ளைகளை கவனிப்பீர்களா? இரவு வேலை பார்க்கிறீர்களா? நீங்கள் காலையில் வர பிள்ளைகள் பாடசாலை போய்விடுவார்கள்..பிள்ளைகள் பாடசாலையால் வர நீங்கள் போய்விடுவீர்கள்?....பிள்ளைகளுக்கு இரவில் தன் முத்தமா? மனைவி வேலைக்கு போவதானால் நீங்கள் இரவும் அவள் பகலும் .. ஒருவரை ஒருவரை கான்பீர்களா?......இரண்டு வேலை மூன்று வேலை என்று மாரடித்து விட்டு ...எங்கே இன்பம்?........... எங்கே நிம்மதி ?........ போதும் என்ற... மனமே ..வேண்டும் ....அவன் போல கார் வேண்டு…
-
- 1 reply
- 1k views
-
-
1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்ம…
-
- 2 replies
- 665 views
-
-
தலை குனிதல் தமிழரின் இயல்பல்ல தலை குனியும் போதெல்லாம் கவி வரையும் பேனா இன்று எம் மண்ணின் நிலை கண்டு கண்ணீர் மட்டுமே வடிக்கின்றது அன்பெனும் கூட்டில் சங்கமித்து ஆசையாய் குழந்தையை பெற்றெடுத்து அடுக்கடுக்காய் கனவுகண்டு வளர்த்து வந்த வேளையிலே ... பூண்டோடு குடும்பத்தை அழித்துவிட்ட கயவனே. உண்மையில் நீயெல்லாம் மனிதன்தானா? இல்லையில்லை ரத்தத்தைப் பிழிந்து குடிக்கும் கொடூர விலங்குகள் நீங்கள். பால்குடித்த ஈரம் காயும் முன்பே மழலைகள் உயிரைப் பறிக்கிறீரே விதையைக் கிழித்து துளிரை அழிப்பது போல் தாயின் வயிற்றைக் கிழித்துக் கருவைக் கொல்லும் காட்டுமிராண்டிகள் நீங்கள். கயவரே உன் காலடிகள் எம் மண்ணில் …
-
- 5 replies
- 1.5k views
-
-
அன்பின் சிறிய நிமிடங்கள் - கவிதை மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில் கடற்கரையில் தோளோடு தோளாகச் சாய்ந்துகொள்வதில் அப்படி என்ன கிடைத்துவிடும்? இருசக்கர வாகனப் பயணத்தில் தோளைப் பிடித்துக்கொள்வதில் என்ன நிறைந்துவிடும்? அவ்வளவு அவசரமாக பத்து விநாடிகள் கைகளை இறுகப் பற்றிக்கொள்வதில் எதை நாம் கடந்துவிடுவோம்? எல்லா கதவுகளும் திறந்துகிடக்கும் முற்றத்தில் மின்னலென அணைத்து விலகும் பொழுதில் அப்படியென்ன சாகசம் இருக்கிறது? லிஃப்ட்டின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு முத்தமிட்டுக்கொள்வதில் என்னதான் நிகழ்ந்துவிடும்? அன்பின் சிறிய நிமிடங்கள் நம்மை ஆட்கொள்கின்றன அவை நிகழ்கிறபோது அப்படியொன்றும் அவை அவ்வளவு சி…
-
- 0 replies
- 1.2k views
-
-
வர்ணப் பட்டதாரி சிலந்திகள் கூடு கட்டி கரப்பொத்தான்கள் குடியிருக்கின்றன பட்டத் தொப்பியில் தூசி பிடித்துக் கிடக்கிறது பட்டச்சான்றிதழ் பிரதியெடுத்து களைத்துப்போய்க்கிடக்கிறது பெறுபேற்றுப் பத்திரங்கள் வாசிக்கப்படாதிருக்கும் சுயவிபரத்துடன் இனி சேர்த்துக்கொள்ளலாம் சுவருக்கு வர்ணம் பூசும் அனுபவத்தையும் நாட்கூலி செய்து பல்கலைக்கழகம் அனுப்பிய பிள்ளை நாட்கூலியுடன் வீடு திரும்புவதை பார்திருக்கும் வயதான தந்தைக்கு அதிகரித்தது நெஞ்சுவலி தோய்த்து அயன் செய்து மடிப்புக்குலையாமலருக்கும் மேற்சட்டையை …
-
- 0 replies
- 763 views
-
-
பருத்தித்துறை யூராம் பவளக்கொடி பேராம் பாவைதனை யொப்பாள் பாலெடுத்து விற்பாள் அங்கவட்கோர் நாளில் அடுத்ததுயர் கேளிர்! பாற்குடஞ் சுமந்து பையப்பைய நடந்து சந்தைக்குப் போம்போது தான்நினைந்தாள் மாது: "பாலையின்று விற்பேன் காசைப்பையில் வைப்பேன்" முருகரப்பா வீட்டில் முட்டைவிற்பாள் பாட்டி கோழிமுட்டை வாங்கிக் குஞ்சுக்குவைப் பேனே புள்ளிக்கோழிக் குஞ்சு பொரிக்குமிரண் டைஞ்சு குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து விரந்துவளர்ந் திடுமே வெள்ளைமுட்டை யிடுமே முட்டைவிற்ற காசை முழுதுமெடுத் தாசை வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூத் தொப்பி வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு வெள்ளைப்பட் டுடுத்து மினுங்குதொப்பி தொடுத்துக் கையிரண்டும் வீசிக் கதைகள்பல பேசிச் சுந்தரிபோல் நானே கடைக்குப்போ வேனே …
-
- 6 replies
- 3.3k views
-
-
பகுத்தறிவு ------------------- கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் ! அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.! மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் ! பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் ! பசி பசியென்றழுதிருக்கமாட்டோம் ! பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் ! விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்! வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்! கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் ! காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் ! பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே.......... நிமிடத்துக்க…
-
- 8 replies
- 4.2k views
-
-
வேதனையை வாழ்க்கை ஆக்கிவிட்டவள் அன்புக்கு அர்த்தம் கேட்டால் காயங்களை மட்டும் காரணமின்றி தந்தவள் காதலுக்கு கருத்து கேட்டால்... நேற்று வந்த யாரையே நேசித்தவளுக்கு... நெடுநாளாய் நேசத்தை மட்டும் காட்டிய என் உணர்வு உறைக்காமல் போனது -என் துரதிஸ்டமே... கற்பனையில் என் காதல் கடந்து சென்று விட்டது களிப்புடன் -அதற்குள் கனவை கலைத்ததால் கழிப்பும் காணாமல் போனது ஆயிரம் சோதனை தாங்கிய ஆணிவேர்கள் கூட அழிந்திடும் நிச்சயம் காதலில் தோற்றிருந்தால் ஆனாலும்... இறைவனிடம் கேட்க எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி நிறைவேறா ஆசையினை முடிவுறா பயணமதை வாழ்வழிக்கும் காதலை- ஏன் வரவைத்தாய் என் மனதில்? சத்தியம் செய்து விட்டதால் சமர்களம் எனை வெறுத்த…
-
- 25 replies
- 4.6k views
-
-
ஆடுகளுக்காக... அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம் விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக சலனமின்றி மூப்படைகிறது சந்ததிகளின் ஆயுள். விடியலைப் பறைசாற்றும் நோக்கில் ஆர்ப்பரித்த சேவல்களால் வாழ்தலின் வேட்கை அதிகரித்து உயிர்த்தெழுந்த போதெல்லாம் சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன. சிறை மீட்பாளர்கள் சிந்திக்கும் அவகாசத்தில் கூண்டுக்குள் வேட்டையாடல்கள் விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும். கசாப்புக் கடைக்காரனின் நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள பிடியளவு தழைகளையும் ருசித்துத் தின்னும் ஆட்டின் இறுதி நிமிட வாழ்தலின் நிதானத்திற்கு நிகரானது ஆதிக்குடிகளின் நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்…
-
- 0 replies
- 895 views
-
-
துரோகம் என்மீது பிரியம் உள்ளவன் போல நடித்த... பிரியமில்லாதவனுக்கு... இதயம் நொருங்கியவளின்... இரங்கற்பா ! எனக்கு எதையெல்லாமோ கற்றுக்கொடுத்தாய்! ஏழையாய் வாழ... கவிதை எழுத... அவமானப்பட... அதற்கு குருதட்சணையாகத்தான் என் காதலை பறித்துக்கொண்டாயோ மௌனம் சம்மதத்தின் அறிகுறி! ஆனால் உன் மௌனமோ என்... காதலின் சவக்குழி! நீ என்றேனும் இந்த கவிதையை பார்க்க நேர்ந்தால்... பதில் அனுப்பு எனக்கு துரோகம் செய்த காரணத்தை...
-
- 2 replies
- 1.4k views
-
-
உன்னைக் கவிபாட எனக்கு வெக்கமடா உன்னைப்போல அழகன் யாரும் இல்லையடா கருமை நிற சுருள் முடியழகா உனக்கு நான் தான் பேரழகா அகன்ற தோழ்கள் வீர மார்பழகா அதில் என் முகத்தைப் புதைத்தேன் அது நாணமடா சிங்கம் போன்ற வீர நடையழகா உன் கருணையின் கண்கள் தானழகா என் கண்களின் ஒளி விம்பம் நீதானடா அன்புக்கு நீயும் என் தந்தையடா அரவணைப்பில் நீயும் என் தாய்தானடா உன்னைப்போல என்னைக் கவர்ந்தவர் இல்லையடா மொத்ததில் நீயும் என் இதயமடா
-
- 15 replies
- 2k views
-
-
ஆதவன் தேரிலே அரியணை ஏறியே அகிலம் ஒளிரவே அக்கினி சுரந்தனன் பகலவன் செங்கதிர் பங்கயம் தீண்டவே பனிபட்ட இதழது பகலாய் முகிழ்ந்தது களிறின் பிளிறல் சங்காக முழங்கிட செவிகள் இரண்டும் சாமரரை வீசவே துதிக்கையால் துதித்தது தூயவன் ஞாயிறை இளம் குளிர் காற்று இதயத்தை நனைக்க இன்பம் பொங்கிட இனிமையாய் புலர்ந்தது காக்கையின் கரைதலும் குயிலின் பாடலும் மஞ்ஞையின் அகவலும் காதில் ஒலித்திட கரைந்தது இருள் மலர்ந்தது பகல்
-
- 6 replies
- 2.9k views
-
-
''துப்பாக்கி தூக்கிடு....'' ' ஜயொரு ஆண்டுகள் ஜம்பம் அடித்தவர் அந்தோ பாரது அச்சத்தில் ஓடுறார்.... கட்டிய கோவணம் களட்டியே ஓடுறார் பாதையை திறந்திட பறந்தடித்தோடுறார்... வருமது புலியென வாடியே இருக்கிறார் அலரி மாளிகை அரக்கர்கள் கலங்கிறார்... இத்தனை காலமும் இகழ்ந்தே உரைத்தவர் இன்றேன் வந்திங்கு இரங்கலுரை நடத்துறார்....? ''கடலிலும் தரையிலும் இடியென அதிருமே இதுவரை காத்த பொறுமையை உணர்த்துமே...'' இழந்தது புலி பலமென்று இகழ்ந்தே உரைத்தவர் அழுதிடும் பகை அடைக்கிட அகிலமே திரளுமே... குருதியில் தேசம் எங்கினும் நனையுமே இந்த இறுதி யுத்தத்தில் ஈழம் மலருமே.... அழுதது போதும் அழுகையை நிறுத்திடு உன் கையினில் இப்…
-
- 29 replies
- 2.6k views
-
-
முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்.... கவிதை - இளங்கவி பாத்தி கட்டி நீர் பாச்சிய வயல்களில் இரத்த ஆறு உடைப்பெடுத்து ஓடிய இறுதி நாட்கள்.... வருடங்கள் இரண்டின் முன்தான் எங்கள் வலிகள் உச்சங்கண்ட நாட்கள்..... அழுத குழந்தையின் ஏக்கம் தீரமுன் அதன் மூச்சே நின்றுபோன கொடூர நாட்கள்..... எங்கள் மரண ஓலங்கள் மண்ணுக்குள்ளேயே புதைந்துபோன நாட்கள்... எங்கள் வயிற்றுப் பசிக்கு மரணத்தைப பரிசளித்த நாட்கள்..... எங்கும் கொலைகளின் உச்சம்.... கூக்குரல்களின் உச்சம்.... காம வேட்டையின் உச்சம்.... கொண்டொளித்த பிணங்களும் உச்சம்..... ஆம்...மிஞ்சிப்போன எம் உயிரின் மரணத்தின் விளிம்பில் அவனின் இரும்புக் கையின் கொட…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய உருக்கமான கவிதை ஒன்று ! நடுத்தமிழ் நிற்கிறது நடுத்தெருவில் .... தன் விலாசத்தை தவறவிட்டு ; அதன் - திருவிழி உகுக்கிறது தீர்த்தச் சொட்டு ! எம்.எஸ் ஏறிவிட்டார் வாகனம் ; எல்லோர்க்கும் இருந்தென்ன ? எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்! இழந்து நிற்கிறது இசைக்கலை - தான் தங்கியிருந்த - எம்.எஸ் என்னும் இன்ஷியலை! ஓதம்சூல் உலகின்காண்- ஓர் ஒப்புலட்சுமி-இல்லாதவர் சுப்புலட்சுமி ; தூய வாய்மலரால்- இசைத் தேனைத் துப்புலட்சுமி என்னணம் எண்டிசை-இனி பயணிக்கக் கூடும் -நம் பண்டிசை? எம்.எஸ் என்பது சங்கீத சாஸ்திரத்தின் ப…
-
- 1 reply
- 2.4k views
-
-
அதிகாலை வேளை அடிக்கப்பட்டது சிங்களவனுக்கு சாவு ஓலை சென்றன இரண்டு குண்டுகள் செத்தொழிந்தன சிங்கள மண்டுகள் பறக்குமா எம் வானில் உன் ஊர்தி பறந்தால் குறிக்கப்படும் உன் சாவு தேதி அழிப்பது எம் சிவம் அறியாது போனால் ஆவாய் நீ சவம் பறந்து திரும்பிய எம் புலிகளின் பாதம் பணிகிறேன்.
-
- 4 replies
- 1.4k views
-
-
இதுவா உங்கள் நியாயம்? ------------------------- உண்மையற்ற பொய்மையுலகே உன்னிடம் நேர்மையிருந்தால் எங்கள் உறவுகள் அழிந்திருப்பார்களா? அழிக்கப்படுமிந்த நிலையிது சரியா? எண்ணெயிருப்பதால் போராளிகள் எதுவுமற்றதால் பயங்கரவாதிகள் என்னதானோ உங்கள் நியாயம்! திரிப்பொலி வீழ்ந்தது போராட்டமாம் ஈழம் மீட்பது பயங்கரவாதமாம் நியாயமற்ற உலகிடமல்லவா துடியாய் துடித்து நீதியைக் கோரி எங்கள் தமிழினம் உலகிலலைந்தது எங்கள் அலைவுகள் என்றோ ஒருநாள் உங்களைக்கூடச் சுட்டெரிக்கலாம் அப்போதுகூடச் சுரண்டலைப் பற்றியே உங்கள் சிந்தனை அளக்க முனையலாம் ஆதிக்க சக்திகள் நிலைப்பதுமில்லை அன்னியராதிக்கம் நிற்பதுமில்லை அதுவரை நாங்கள் ஓய்வதுமில்லை. ஓய்வொன்றுவரலாம் உலகமழிந்திடில் …
-
- 7 replies
- 1.2k views
-
-
சொந்த மக்களுக்காய் அசோகச்சக்கரத்தின் அடியில் பசி கிடந்த தாயே.. தமிழன் உணர்வதை கோரிக்கையாய் நிமிர்த்தி மட்டு மாமாங்கத் திடலில் உண்ணா நோன்பிருந்தாய் அம்மா..! அன்று காட்சியில் இருந்தோரும் முதலை அமைச்சராய் அமர்ந்தோரும் இன்றும் கைலாகுகள் தருகின்றார் தமிழர் பிணக்குவியல் மேல் அரசியல் வியாபாரம் செய்கின்றார் தாயே.. அவர்களிடம் மாறாமை ஒன்றே மாறாததாய் உள்ளதம்மா..! ராஜீவின் படைகளிடம் நீ மண்டியிட மறுத்தாய்.. விடுதலை கேட்டு நின்ற சொந்த இனத்தை ஹிந்தியா முன் மண்டியிட சொன்ன கூட்டம் இன்று தமிழர் தம் அரசியல் வாரிசுகளாம் விலாசம் காட்ட களமிறங்குகின்றன தாயே...! விண்ணிருந்து நீயும் காண்பாய் அந்தக் கொடுமைகள் இங்கு அம்மா..! ஹிந்திய அதிகாரம் உன்னைக் கொன்றிருக்கலாம்…
-
- 8 replies
- 758 views
-
-
அவர்கள் மன்னம்பேரியை பாலியல் பலாத்காரம் செய்து அவளை உயிருடன் புதைத்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது. பின்னர் அவர்கள் ககவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல. நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் நான் நுரிவத்தவில் வாழவில்லை. பின்னர் அவர்கள் வடக்கின் மகளீரிடம் வந்தார்கள் நான் பேசவில்லை கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா இவர்கள் என் சகோதரிகளல்ல. பின்னர் அவர்கள் வேறு தோல் நிறம்கொண்ட பெண்ணிடம் வந்தார்கள் கூட்டாய் எட்டுப்பேர் விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் நான் பேசவில்லை ஏனெனில் அவள் வெளிநாட்டவள் என்பதால். அந்தக கோரக் கும…
-
- 0 replies
- 1.1k views
-