கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நேசிக்கிறேனா? புரியவில்லையே.... உன்னுடன் போட்ட சண்டையும் உன்னைத் திட்டிய பேச்சுக்களும் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்பட்ட கோபங்களும் இப்போது காதலாய் மாறிவிட்டதா???? நம்ப முடியவில்லையே........ அடிக்கடி கண்கள் உன்னைத் தேடுகிறது! நீ என்னையே பார்ப்பதாய் இதயம் நினைத்துக் கொள்கிறது! நீ எதிரினில் வரும் போதெல்லாம் இறக்கை முழைத்த உணர்வு! ஏனடா? ஏனடா இப்படி மாறிப் போனேன்??? புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்! என்ன முயன்றும் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை!!! இந்த உணர்விற்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை!.... இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்! அதன் பின் உன்னை நான் பார்ப்பேனா என்று கூடத் தெரியாது! இப்போது எதற்காக இந்…
-
- 0 replies
- 593 views
-
-
உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ, தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு, நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு, எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு. நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு, எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு. என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு, நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு. உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு. எம் காதல் கதை…
-
- 0 replies
- 593 views
-
-
நாட்கள் பத்தும் நம்மைத் தாண்டியது [size=4]நாடி நரம்புகளும் ஓயத் தொடங்கியது[/size] [size=4]நாதியின்றி இதயம் மட்டும் இயங்கியது[/size] [size=4]துளித்துளியாய் உன் இரத்தம் அடங்கியது[/size] [size=4]நல்லூர் கந்தன் பவனி வந்த வீதியிலே [/size] [size=4]அலையாய் வந்த மக்கள் வெள்ளத்திலே[/size] [size=4]சிலையாகி நின்றேன் _ நான்[/size] [size=4]உனைப் பார்க்கையிலே [/size] [size=4]சிந்தியது கண்ணீர் வெள்ளம் [/size] [size=4]உருகியது உன்னருகில் மக்கள் வெள்ளம்[/size] [size=4]ஒலித்தது ஈழப்பாடல் ஒன்று[/size] [size=4]மரணித்த வீரா உன் ஆயுதத்தை எனக்கு தா[/size] [size=4]உன் ஆடையையும் எனக்கு தாவென்று[/size] [size=4]இன்றும் ஒலிக்கின்றது [/size] [size=4]உடல்[/size]…
-
- 4 replies
- 593 views
-
-
மிடுக்குடன் முழங்குவோம் மீண்டும் துலங்குவோம் நிர்ப்பயமின்றி போயின நீதி நீர்த்துத்தான் போகுமோ வேள்வியின் சோதி பார்த்து உடல் வருத்தி ஊன் உருக்கி வளர் சோதி வேர்த்து உயிர் ஈந்து காத்த தமிழ் சாதி! நினைவில் உயர் கனவில் இசையும் இழை அசைவில்; நிலை பிறழா உயிர் உறவில் இழைந்தேயான இசைவில் கலையில் இணை கருவில் ஊடேயான உசாவில் நிலைத்தே இழைத்த வீர வைரம் திசையிழந்த தீரமாய் சிதைந்தே போகுமா? சீரிழந்து ஊரிழந்து உறவிழந்து வீழுமா? இல்லையென்போர் இணைந்தே எழக இறுதிப் போரில் வெல்வோம் இழைக அறுதி இதுதான் ஆர்ப்பாரித்து நுளைக ஆக்குவோம் தமிழீழம் ஆக்கிரமிப்பை களைக நூற்போம்.நூற்போம் புலிப்படை வெல்க ஓப்பாரி வைப்பதை இனியும் நிறுவோம் ஓங்கி பகை வீழ ஓங்காரமாய்…
-
- 0 replies
- 593 views
-
-
காலங்கள் கடந்தன தான் எனினும் கடந்து வந்த பாதைகளின் கால்த்தடங்களின் வடுக்கள் இன்னும் மனதில் அடையாளமாய் எத்தனையோ எண்ணங்கள் சுமந்து எதிர்க்க முடியாத எதிர்பார்ப்புக்களுடன் இறுமாப்புக்களும் கடந்து கடத்த முடியாத நாட்களுடன் கனவுகளின் கட்டவிழ்ப்புக்களும் கரை காணா மொட்டவிழ்தல்களுமாய் முகைவெடித்து மணம் பரப்பி முற்றிலும் முடிவற்றதாய் வாழ்வு வானம் அளாவி வால்நட்சத்திரங்களாய் எதிர்காலத்தின் எண்ணிக்கையோடு ஏகாந்தத்தின் எல்லைகளற்று எப்போதும் எதிர்வு கூறல்களோடாய் எப்படியோ கடந்து வந்த காலத்தின் கருப்பும் வெள்ளையுமான பக்கங்கள் கண்ணில் அப்பப்போ தெரிகின்றது காட்சிப் பிழைகளின்றி கனவுகளில் எதிர்க்க முடியா ஏக்கங்கள் இன்னும் இருக்கின்றன என்னுடனே எப்போதாகில…
-
- 2 replies
- 593 views
-
-
அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை மனுஷ்ய புத்திரன் - படம்: ஜெ.வேங்கடராஜ் நீதிகேட்கும் பயணத்தில் மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ அதுதான் அனிதாவுக்கும் நடந்தது நீண்ட காயம்பட்ட இரவுகளுக்குப் பின் கழுத்து அறுபட்ட பறவையாக பாதி திறந்த கண்களுடன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள் அனிதா ஒரு மூட்டை தூக்குபவரின் மகளாக இருந்தாள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட வரலாற்றுச் சுமையை இறக்கிவைக்க விரும்பினாள் நூற்றாண்டுகளாக மூட்டை தூக்குபவர்கள் தங்கள் விதியின் சுமையினால் முதுகு வளைந்தவர்களாக இருந்தார்கள் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் முதுகு வளைந்தே பிறந்தார்கள் அவர்கள் எப்போதும் ஒரு கடைமட்ட வேலையின் நுகத்தடியில் பிணைக்கப்பட்ட…
-
- 0 replies
- 593 views
-
-
பாவிகளை மன்னிப்பாய். புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ? இனங்காத்த தந்தை இல்லாது போனதனால் பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா? வஞ்சக உலகில் வாழ வேண்டாமென நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா? நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை யாடியவை ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ? " அப்பா" வென அலறியதால் அச்சமுற்று சிங்களவன் அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ? வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென மலர்ந்ததும்…
-
- 3 replies
- 592 views
-
-
தனக்கெனவே வாழ்ந்தும் தகுதியாய் வாழத்தெரியாத மனிதர் முன் நீங்கள் பிறருக்காக வீழ்ந்ததின் வீரத்தின் பதிவுகள் எத்தனை எமக்கு எதையெல்லாமோ எண்ணிக் கொண்டிருந்த-நாங்கள். எதையுமே பெற்றுக் கொள்ளாத நிலையில் நீங்கள் உங்களையே விட்டுக்கொடுத்ததில் நாங்கள் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது! உங்களது குருதி எமது நிலத்தில் உறைந்து கிடக்கின்றது , உங்களது சுவாசம் நாங்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கின்றது உங்கள் வியர்வை எமது இனத்தின் விடுதலைப் பாதையில் சிந்திக்கிடக்கின்றது உங்கள் வீரத்தின் பதிவுகளை எங்கள் மனதில் நிறுத்தி நிமிர்த்து நிற்கின்றோம் !
-
- 1 reply
- 592 views
-
-
முள்ளிவாய்க்கால் காற்றிடை வாழும் உயிர் பேசியது.. உலோகத் துகள்களிடை உடல் துகள்களாகி சிதறி நிற்க காற்றுக் கூட அவதிப் பட்டது அகதியாகி சன்னங்களிடை தன் இடம் பிடிக்க. இட நெருக்கடியில் உயிர்கள் உரசிக் கொண்டன செல்லுமிடம் சொர்க்கமோ நரகமோ திசைகள் தெரியாமல் சன்னங்களில் அவை படுத்துறங்கின. ஊழியக் காலமோ கலி காலமோ அல்ல அல்ல.. தமிழர் அழிப்புக் காலமாய் அது நிகழ்ந்து கொண்டிருந்தது..! சாத்திரங்கள் பொய்த்து வீழ்ந்தன சதா மரண ஓலங்கள் உலகை ஆளும் அலைகளின் ஊளைகளை தாண்ட வழியின்றி களைத்தே மெளனித்தன. உலக மானுட மனச்சாட்சி கண்ணை மூடி மூச்சிழுத்துக் கிடந்தது...! மீண்டும்.. காற்றிடை வாழும் உயிர் பேசிக் கொண்டது.. அந்தக் கொடுமையின் தாண்டவம் கண்டு ஆண்டுகள் …
-
- 0 replies
- 592 views
-
-
மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்: தீபிகா மிச்சமிருக்கும் உயிரின் கதைகள் ————————————————- உங்களுக்குத் தெரியுமா? நாங்களொரு பருக்கை சோற்றுக்காக … உமிக் கும்பிகளை இரகசியமாய் இரவுகளில் கிளறியவர்கள். யானை மிதித்த கால்தடத்திற்குள் வற்றாது மிச்சமிருந்த தண்ணீரில் தாகம் தீர்த்துக் கொண்டு தப்பி வந்தவர்கள். கடவுள்கள் உறுப்பிழந்து அனாதையாகி செத்துக் கிடந்ததை நம்பமுடியாத கண்களுக்குள் ஏந்தியவர்கள். வீடுகளை பார்த்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் படுத்துறங்கியவர்கள். மின்விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுதிரி வெளிச்சங்களில் படித்தவர்கள். விமானங்களை கண்டால் விழுந்தடித்துக் கொண்டு பதுங்கியவர்கள் பட்டாசுகள் வெடித்தாலும் காதுகளைப் பொத்திக்கொண்டு படுத்த…
-
- 2 replies
- 591 views
-
-
மாவீரரே! உங்கள் நினைவாக கனத்த மனத்துடன் - என் கரங்களில் தீபம் ஏற்றி வந்தேன். இதனை எங்கே ஏற்றிடுவேன்! ஏற்றுமிடம் தெரிய வில்லை ஏங்கித் தவிக்கிறேன். மாவீரரே! உங்களுக்கு தீபம் எங்கே ஏற்றுவேன்? ஏற்றுமிடம் தெரிய வில்லலை ஏங்கித் தவிக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள் யாரோ… கூவி அழைக்கும் சத்தம் கேட்கிறது. இங்கே வாருங்கோ நாங்கள் இருபது வருட அனுபவம் மிக்கவர்கள் நாங்கள்தான் மாவீரை நேசிப்பவர்கள் இங்கே வாங்கோ… மாவீரரே! இன்னும் கொஞ்சம் பொறுங்கள் மேலும் ஒரு திசையிலிருந்து சத்தம்… நாங்கள் புண்பட்ட காரணத்தால் புலம்பெயர்ந்து வந்தவர்கள். உண்மையின் வழி நின்;று உரிமைக்கு குரல் கொடுப்போம். தனிபட்டோர் நலம் பேணாத் தமிழீழ நலன் …
-
- 0 replies
- 591 views
-
-
காத்துக் கிடக்கின்றனர் அவர்கள் அவளின் ஒவ்வொரு வரிகளுள்ளும் பிரவகித்து ஓடும் காதலிக்கப்படுவதான பிம்பங்களின் நிழலில் குளிர் காய்தலில் தம் இழந்து போனவைகளையும் கனவுகளுள் புதைந்து போனதையும் எச்சங்களின் படிமங்களில் எப்படியோ காண்பதான பிரமைகளையும் துழாவமுடியாத இருட்டில் தினம் குருடாகிப் போன கண்களின் வெளிச்சத்தில் தேடியபடியே இருக்கின்றனர் கண்முன்னே காத்திருக்கும் காரணமற்ற வெளிச்சங்களை பார்த்திட முடியாத மனக்குருடாய் மடை திறந்தோடும் மனவாற்றின் வழியே ஆசையின் அகல்விளக்கேற்றி அடைந்திடமுடியாததான அகத்தின் அருகே சஞ்சரிப்பதான பிரமை கூட்டியபடி வீழ்ந்திடாத பழமரங்களுக்காய் கற்களைத் எந்நாளும் எறிந்தபடி
-
- 1 reply
- 590 views
-
-
முஸ்லீம் மக்கள் சிங்கள தமிழ் போரில் தேவையான போதெல்லாம் சிங்களத்திற்கு முண்டு தந்தனர் சிங்களனின் புலனாய்வில் முதுகெழும்பாய் இருந்தனர் கிழக்கு தேர்தலிலும் சிங்களத்துடன் கூட்டாகி தமிழரை தோற்கடித்தனர் ஜெனிவாவிலும் சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர் தமிழ் இலக்கியத்திலும் சிங்களத்திட்காய் பேசினர் கூட இருந்து குழிபறித்தனர் தமிழர்கள் விழும்போதெல்லாம் ஏறி உலக்க தவறவேயில்லை பண்டமாற்றாய் பணம் சிங்கள குடியேற்றம் போல் முஸ்லீம் குடியேற்றத்திற்கும் குறைவில்லை சிங்களம் முகத்தில் குத்த முஸ்லீம் முதுகில் குத்தினர் இன்று சிங்களம் பள்ளிவாசல்களை உடைக்கிறது வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது தமிழன் மட்டுமல்ல நீயும் அடிமை என்கிறது நாம் குரல் கொடுப…
-
- 3 replies
- 590 views
-
-
முள்ளிவாய்க்கால் பாலைமரக் கிளிகளே! பாசமுடன் பாடும் பறவைகளே ! சோலையதை விட்டெங்கே சென்றீர்கள்? பாவியரின் 'பொமபரினால்' . பாலைமரம்..வீரைமரம் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்தன..! தாவியதில் ஏறும் மந்தியினம் கூவிவந்த குண்டுகளால் அழிந்தன..! பாட மறந்தன குயில்கள். ஆட மறந்தன மயில்கள் ஓட மறந்தன மான்கள் காடுதரும் சுகத்தில் களித்திருந்த காடைகளும்..சேவல்களும் பாடையிலே ஏறி பறந்தன! தேன்தேடும் வண்டினம் வான்கூவி வந்த 'பொஸ் பரசால்' தாம் கூடும் கானகத்து மரக்கிளையில் எரிந்தன ! கூழைக் கடாக்கள் .... கட்டிய கூடுகளில்... சிறகு முளைக்காத சிறுகுஞ்சுகள் பாவியர்.. கொட்டிய …
-
- 1 reply
- 590 views
-
-
திலீபனின் நினைவுகளில்...... கவிதை.... இருபத்தொரு வருடங்கள் முன் பாரதத்திடம் நீதி வேண்டி எங்களின் இதமொன்று நல்லூர் கந்தனின் வீதியிலே அமர்கிறது... கத்தியின்றி ரத்தமின்றி ஈழக் கனவொன்றே மனதில் கொண்டு கையிலெடுத்த ஆயுதந்தான் அகிம்சை எனும் அழியா ஆயுதம்.... கனவுகளைச் சுமந்தபடி எங்கள் கண்கள் முன்னே வருகிறான் சாவை அவன் விளையாட்டாய் நினைக்கவில்லை அது வீரனுக்கும் அழகல்ல...... யுத்தம் தொடங்கிறது அவனின் உடற் பசிக்கும் அவன் கொண்ட விடுதலை உணர்வுக்கும்.... பாரதமும் பார்க்கிறது அவனை பாதியாய் கொன்றுவிட்டு... சில நாட்கள் சென்றிடவே அவனின் யுத்தத்தின் முடிவும் முன் நோக்கி வந்திடவே உணர்வ…
-
- 0 replies
- 590 views
-
-
புனித நிலம் அவனது தொழுகைக்கான உரிமை மறுக்கப்படுகிறது அவனது வாழ்வுக்கான உரிமை பறிக்கப்படுகிறது அவனது நிலங்கள் இன்னொருவனால் ஆக்கிரமிக்கப்படுகிறது அவனும் அவனது குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள் கொல்லப்படும் குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளோ அல்லது ஐரோப்பிய குழந்தைகளோ இல்லை அவர்கள் எல்லாம் பாலஸ்தீன குழந்தைகள் அதனால் யாரும் கண்டுகொள்வதுமில்லை எந்தப் பிராத்தனைகளும் செய்வதும் இல்லை அன்று ஒரு நாள் மியன்மார் ரோகிங்காவிலும் ஈழத்திலும் கொல்லப்பட்ட குழந்தைகள் போலவே ஒலிவ் மரக் கிளையில் இருந்து ஒவ்வொரு இலைகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது சிலுவையில் அறையப்படும் ஜெருசலேத்தின் குருதி …
-
- 1 reply
- 590 views
-
-
-
http://youtu.be/9eHfgta1ClQ உக்கிப்போன நினைவுகளில் துளிர்விடும் காளான் கனவுகள் ஆராதிக்க முடியாத பொழுதுகள் கரைந்து காணாமல் போகின்றது விறகில் எரித்த கரிப்பானையை கழுவுவதுபோல் துக்கம் படிந்த முகத்தை கழுவி கழுவி மீண்டும் அடுப்பில் வைத்தபடி வாழ்க்கை.. கச்சைக்குள் எதுவும் இல்லாத வெறுமை சனக் கூட்டத்தின் நடுவே அர்த்தமற்று நடக்கின்ற உணர்வு வெட்ட வெளியில் ஆணிவேர் அறுந்த மரமாய் எட்டுத் திசையில் இருந்து வரும் காற்றுக்கு அஞ்சியபடி.. எங்கும் எதையோ தேடியபடி.. நிச்சயமாக கடவுளை இல்லை. யாரோ ஒருவன் வந்து திடீர் என்று கன்னத்தில் அறைகின்றான் மறுகன்னத்தையும் காட்ட தென்பில்லாமல் நடந்தபடி.. ஏன் என்ற கேள்விக்கு இடமே இல்லை அடிமையாக விரும்பியவனுக்கு…
-
- 1 reply
- 589 views
-
-
எனக்குள் ஒருவன் இருக்கின்றான் எனக்குள் ஒருவன் இருக்கின்றான் அதிகமாய் அவன்தான் என்னை ஆள்கின்றான் அதிக தடவை அவனை ஆள நான் நினைத்ததுண்டு அது நினைப்போடே போன சம்பவங்கள் நிறையவுண்டு அவன் சொற்கேட்டு ஆடிய போதெல்லாம் - இந்த அவனியே என் காலடியில் அடைக்கலம் போல் தோன்றும் அகங்காரம் நெஞ்சமெல்லாம் குடி கொள்ளும் அவனை நான் எதிர்த்து ஆள முனைந்தபோது அவனியில் புகழாலே ஓங்கியதுண்டு - என் ஆழ் மனமும் ஆண்டவன் குடியிருக்கும் ஆலயம் போல் அமைதியானதுண்டு. 01.06.2004 http://inuvaijurmayuran.blogspot.ch/2013/12/blog-post.html
-
- 0 replies
- 589 views
-
-
நாங்கள் நீங்கள் அவர்கள் இவர்கள் உறவினர்கள் மற்றவர்கள் போனவர்கள் வந்தவர்கள் அவர் இவர் நீ நான் ஏதாவது இருக்குமோ இந்த வார்த்தைகளில்..? சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 589 views
-
-
கம்முனிகேசன் வெற்றி..! தந்தி ட்ரங்கால் தந்தி ஆபிஸ் டெலிபோன் போஸ்ட் கார்டு கடிதம் ஏர் மெயில் போஸ்ட் ஆபீஸ் செல்போன் சிம் கார்ட் நெட் வொர்க் டாப் அப் மெமரி கார்ட் சரியில்லை என்றாலும் சிம் கார்ட் சரியாக இருக்கிறது சார்ஜ் மட்டும் தான் குறைவாக உள்ளது ஒருவேளை பேட்டரி சரியில்லையோ செல்போன் ரிப்பேர் கடைகளில் குவியும் செல்போன் விரும்பிகள்..! இவ்வாறு எவ்வளவோ இருக்கிறது தமிழக மக்களுக்கு..? ஆனால் இரண்டு சிம் கார்டு போட்டு எப்படி பேசுவது என்ற கேள்விகளை புறந்தள்ளி நிரம்ப பின் தங்கி இருக்கிறோமோ என்ற அச்சம் வந்தவுடன் எப்பொழுது நாம் வீட்டுக்கு போய் ஒரு ஓவியமான நமது செல்போனை நோண்டுவது என்ற ஆர்வம்…
-
- 1 reply
- 589 views
-
-
அடிக்கடி நீ இமைசிமிட்டுவதால் என் விழிகள் வலிக்கிறது விம்பம் தெரியாத கண்ணாடியில் உன் உருவம் ஓடி மறைகிறது ஒரு நொடி உன்னைப் பாராவிட்டால் மறுநொடியே என்னுள் ஆயிரம் கனவுகள் படர்கிறது...
-
- 0 replies
- 589 views
-
-
இருண்டகாலத்தின் பதுங்குழி சொங்களற்றவர்களின் அசையா முகங்களில் சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள் இரவுக்கும் பகலுக்கும் இடையில் மாபெரும் யுத்தப்படை ஒன்று என் கிராமத்தை கடந்து போயிருக்கையில் காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை சாட்சிகளற்றவர்களின் நிலத்தில் கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை மீண்டுமொரு இருண்ட காலத்தில் பதுங்குகின்றனர் குழந்தைகள் வானத்தில் விமானங்கள் இல்லை எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை வானத்தையும் திசைகளையும் கண்டு அஞ்சுகின்றன குழந்தைகள் இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் எதுவும் இல்லை விமானங்களும் இல்லை போர்க்களங்களைத் துறந்துவிட்டோம் பாசறைகள் யாவற்றையும் மூடிவ…
-
- 1 reply
- 589 views
-
-
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்…
-
- 0 replies
- 588 views
-
-
மேதினியில் உயிர்களது மேன்மை பற்றிப் பேசுகின்ற மேற்பூச்சுப் பூசிய மேலான நாடெல்லாம், காதிருந்தும் செவிடனாக கண்முன்னே இனஅழிவை வாய்மூடிப் பார்த்திருந்த வரலாற்றுத் துயரநாள். பூர்வீக நிலம்தனிலே பூச்சரம் போல்வாழ்ந்த மக்கள் தார்மீக நெறிகளற்று தரக்குறைவாய் அழித்தநாள். கோணிகளை அவிழ்த்துக் குப்பைகளைக்கொட்டுதல்போல் வானிருந்தும் நிலமிருந்தும் வளம் கொழிக்கும்கடலிருந்தும் குண்டுகளைக் கொட்டிக் கொலை புரிந்த கரிநாள் குஞ்சென்றும் கிழவியென்றும் கொஞ்சுமிள நங்கையென்றும் இஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சம் கொண்டு அழித்தநாள் மே பதினெட்டு மேதினியில்…
-
- 0 replies
- 588 views
-