கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அன்பு செய் அல்லல் தீரும் உண்மை சொல் உயர்வு உண்டு தொண்டு செய் தொண்டனவாய் நன்மை செய் நாடு போற்றும் கருணை செய் காதலோடு பொறுமை கொள் பூமியாழ்வாய் உரிமை சொல் உனது நாடு வற்மை தீர் வாழ்வு ஓங்கும்..
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வதேசமே! 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் தந்தாய் பத்து ஆண்டுகள் கூட தமிழனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை பேரினவாத சிங்களவனின் சுரண்டலுக்கு ஆளானோம் தமிழ்மண்ணில் சிங்களக் குடியேற்றம் செய்தான் பொறுத்தோம் எம் வளங்களைச் சுரண்டினான் பொறுத்தோம் எம் உயிரிலும் மேலான கல்வியைப் பறிக்க தரப்படுத்தல் சட்டம் அமுலாக்கினான் இனியும் பொறுக்க முடியாமல் அஹிம்சை வழியில் கேட்டோம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திக்கேட்டோம் பயங்கரவாதிகள் என்றா(றீர்)ன் இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து விட்டு இன்றும் கேட்கிறோம் நீ தானே சொன்னாய் எந்த ஒரு சமூகமும் தனித்துவமான மொழி கலை,பண்பாடு கொண்ட இனம் தனது சுயநிர்ணய …
-
- 1 reply
- 909 views
-
-
வாழ்வுண்டோ? மண்ணை இழந்து மனையைத் துறந்து வருந்தியும் வாழ்வுண்டு! பொன்னை இழந்து பொருளைத் துறந்து புழுங்கியும் வாழ்வுண்டு! கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து கலங்கியும் வாழ்வுண்டு! உன்னை இழந்தால் தமிழே உலகில் ஒருநொடி வாழ்வுண்டோ? இன்பத் தமிழே! இயக்கும் இறையே! இனிமை படைத்தவளே! துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக் துயரைத் துடைத்தவளே! அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை அளிக்கும் அருந்தமிழே! உன்றன் புகழை உலகில் பரப்ப ஒருநாள் மறவேனோ! ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்! உயர்மிகு நன…
-
- 0 replies
- 460 views
-
-
Let us discuss The problem Faced by Tamil of the nation. Nation ... தமிழ் மக்களே தமிழ் மக்களே தேர்தல் வருதே திட்டும் சோங்கா வருதே உங்கள் பின்னே வோட்டும் வருதே வாக்குறுதிகள் பொய் பொய்யா வருதே ஐ.நா.விசாரணை வருதே உள்நாட்டு விசாரணை வருதே தீர்வும் ஸ்ரோங்கா வருதே Yeah, wow What a music ..!! Aaaaahhhhhh வி ஆர் so cool.. மறததமிழர்களே ,ஆண்ட தமிழர்களே நீங்க அழுவதை நாங்கள் இனி பார்க்கமாட்டோம் மறதமிழர்களே ,ஆண்ட தமிழர்களே வோட்டு போட்டுத்தான் மாட்டி விட்டிட்டீங்கள் சொக்கி தவிக்கிறோம் நாங்கள் வோட்டு கேட்டுத்தான் நைசா பேசுறோம் காக்க பிடிக்கிறோம் நாங்கள் வி ஆர் சோ கூல்
-
- 2 replies
- 686 views
-
-
விக்கிரமாதித்தனும் 13ம் கதையும்-பா.உதயன் எந்தத் தீர்வையும் ஈழத் தமிழனிடம் கேட்க்காமல் இந்தியா போட்ட பிச்சை இது இன்னும் கிடந்து இழுக்குது சேடம் ஆயிரம் தடவை இந்தியா சொல்லியும் இலங்கை இதுக்கு மசிவதாய் இல்லை ஏதோ புலி தான் மறுத்தினம் என்றால் இப்பவும் ஏன் தான் மறுக்கினம் கொடுக்க 13 ம் பெட்டியோடு வந்த பெரியண்ணை தலையில் பிறத்தாலே நின்று துவக்கால அடிச்சும் சிங்களம் சொன்னது இந்தத் தீவில் எந்தத் தீர்வும் எப்பவும் இல்லை என்று அப்பவே சொன்னது விக்கிரமாதித்தன் கதையைப் போல சற்றும் மனம் தளராத இந்தியா சந்திக்கும் பொழுதெல்லாம் 13 ம் கதையை பல தடவை சொல்லும் இதுக்கு மேலாய் கொடு…
-
- 4 replies
- 909 views
-
-
முதல் விசா முடியும் பொழுது முதல் தங்கையின் திருமணம் முடிந்திருந்தது இரண்டாம் விசா முடியும் பொழுது இளைய தங்கைக்கு இருபது பவுன் சேர்க்க முடிந்திருந்தது மூன்றாம் விசா முடியும் பொழுது மூனு சென்ட் நிலத்தில் வீடு வாங்க முடிந்திருந்தது நான்காம் விசா எடுக்க தயாரான போது நரைத்திருந்தது திருமணமாகமலே எனக்கு “தலைமுடி” படித்ததில் பிடித்தது (முக நூல் )
-
- 2 replies
- 868 views
-
-
கும்பாபிசேக மேளச்சத்தத்திலும் அமைதியாய் இருக்கும் சாமி போல அடக்கம் உனக்கு எப்படி நாதஸ்வர இசைபோல வாசித்தாய் உன் காதலை * அழும் குழந்தையைக்கூட அழகாய் சிரிக்கவைத்து புகைப்படம் எடுக்க தெரிந்த கலைஞன் நான் எப்படி உன் அழகான புன்னகை மட்டும் புரியாமல் போனது எனக்கு * பொறுக்கவே முடியவில்லை என் மறதிகளை நீ கொட்டித்தீர்த்த ஞாபகங்கள் அவ்வளவும் அளவில்ல பொக்கிசங்கள் * பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை கவிஞனாக்கவே வந்து தொலைத்திருக்கிறது காதல் * வெக்கப்படுவதற்காகவே சேலை கட்டும் பெண்கள் மத்தியில் வெக்கத்தையே ஆடையாய் கட்டியிப்பவள் நீ -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 1.7k views
-
-
ஆர்கலிவானம் புணர்ச்சி வேட்கையில் தன்னிறம் உழல கார்மேக இதழ்கள் கனைகடலைத் தழுவ கலவிமேவலில் வான் தனைமறந்து மின்னலிசைக்க நறுந்தென்றல் பரவி கலவி வெம்மையகற்ற விண்வெளி இருள்பரப்பி குடைவிரிக்க மோகமிகுதலில் தன்முனைப்பு அறுந்து ஏகாந்த அமைதி நிலவ கனைகடல் அடங்கி விசும்பின் துளிகள் ஏற்க பிரபஞ்சம் எங்கும் புது உயிர்களின் தோற்றம்....... ஆர்கலிவானம் - சத்தத்துடன் முழக்கமிடும் வானம் கனைகடல் - கத்தும் கடல் கலவிமேவலில் - கலவி விருப்பம் விசும்பின் துளிகள் - மழைத்துளிகள்
-
- 1 reply
- 556 views
-
-
இன்று என் பெயரைத் தமிழில் Google பண்ணிப் பார்த்த போது கிடைத்த என் பழைய கவிதை இது. 23 ஆம் வயதில் 1998 January இல் எழுதி பிரசுரமான கவிதை. விசுவாசமற்ற காதலன்:
-
- 11 replies
- 1.5k views
-
-
விஜயனின் வழித்தோன்றல்களே ! ------------------------------------------- சிங்கத்தைப் புணர்ந்து உங்களைப் போட்ட அன்னைக்குக் கூட உங்களது செயலை நினைத்தால் அருவருக்கும் ! அருவருப்பின் வழிவந்த அரியண்டப் புத்திரரே(?) நீவிர் அழிவது உறுதியடா ! நரமுண்ணும் பிசாசுகளே நாலுகால் பிறவிகளே சாக்கடையில் மிதந்துவந்த சண்டாளப் பிறவிகளே உயிரற்ற உடலம் மீது உங்கள் இயலாமையை காட்டுகின்ற கோளைகளே கண்ணியம் புரியாத காட்டுமிராண்டிக் கயவர்களே நாய் கூடப் புரியாத ஈனச் செயல் புரிகின்ற ஊன மனம் கொண்ட ஈனப் பிறவிகளே புரிய வைக்கும் காலம் வரும் ! மனிதம் இல்லாத மானிட உருக்கொண்ட சிங்கத்துக்குப் பிறந்த சீரியமும் இல்லாத வீரியமும் இல்லாத பிணம் தின்னும் கூட்ட…
-
- 3 replies
- 2.2k views
-
-
வேதியியலும் காதலும் --------------------------ஐதரசனின் இரண்டு பங்கும் .... ஒட்சிசனின் ஒருபங்கும் .... சேர்ந்த கலவையே நீர் -H2O .....!!! என்னுடைய நினைவுகளையும் ..... உன்னுடைய நினைவுகளையும் .... வேதனையுடன் சுமந்து கொண்டு .... இருக்கும் நம் காதல் ... வேதியல் சூத்திரம் தான் ....!!! வேதியல் வகுப்பறையில் .... வேதியல் படித்தானோ .... தெரியவில்லை .... வேளை தவறாமல் ... உன் வேடிக்கைகளை ரசித்திருக்கிறேன் .....!!! வேதியலில் ... ரேடியத்தை கண்டு பிடித்த .... மேரி கியூரி குடும்பம் .... வேதனையான மரணத்தை .... அடைந்தார்கள் .... புற்றுநோய் ......!!! காதலும் .... ஒரு புற்றுநோய் .... உன் நினைவுகளால் நானும் ... என் நினைவுகளால் நீயும் .... கொஞ்சம் கொஞ்சமாக .... இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!
-
- 1 reply
- 641 views
-
-
ஈழமண்ணே! என்தாயே!! வேற்றுவர் வந்துன்னில் வெந்தணலைக் கொட்டி வேதனை செய்வதெல்லாம்........ விளங்காத பொருளாக வேடிக்கை பார்ப்பதிலும்.... விடமுண்டு மாள்வதே என் விதிக்கு நன்று.
-
- 4 replies
- 1.5k views
-
-
என் பேரு விடலை நிற்கிறதோ படலை - பெண்களை கண்டா போடுவேன் கடலை அண்டு பார்த்தன் ஒரு பிகரை கொடுத்தேன் என் உயிரை எழுதினேன் ஒரு மடலை அவளோ அதத் தொடலை பார்த்திட்டான் அவளண்ணன் முனி அண்டு பிடிச்சுது எனக்கு சனி படிச்ாான் என் மடலை உருவினான் என் குடலை அனுப்பினான் சுடலை என் பேரு விடலை இருப்பது சுடலை போடுவேன் மோகினிகள கண்டா கடலை ( குசா மட்டும் தான் கவிதை எழுதுவாரா நாமளும் பிச்சு உதறுவமில்்ல )
-
- 13 replies
- 1.7k views
-
-
யாழ் இணையத்துக்கு எஸ் ஹமீத் இனால் எழுதி பிரசுரிக்குமாறு கேட்டு அனுப்பப்பட்ட கவிதை இது. -நிழலி ---------------------------------------------------------------------------- விடாது கொத்தும் பாம்பிலிருந்து விடுதலை பெற ஒரு வேண்டுகோள்...! -எஸ். ஹமீத். ஓர் ஊழின் உக்கிரத்தில்... நரகத்தின் மையத்திலிருந்து பீறி எழுந்து அக்கினி மழையாய்க் குமுறித் தலை வீழும் செங்கங்குகளில்... சூரியனுருகி வழிந்த ஈயத் தரையினில் பாதம் எரிந்து கருகும் கொடிய கொடூரத்தின் கோரங்களில்... ஏதுமறியா இளம் பிஞ்சுக் குழந்தை; எடுத்தொரு நிழலில் கிடத்திட.... யாருமில்லை...! ***** சுற்றி நின்று பேய்கள் அலறும் க…
-
- 4 replies
- 788 views
-
-
கார்த்திகை பெற்றெடுத்த கல்லறைகளே.. கலங்கரை விளக்குகளாய் நீவிர்... மனக்கரைகளில் நிமிர்ந்து நிற்கையில் கார்த்திகைப் பூக்களுக்கு கண்ணீர் விட ஏது தேவை.?! கார்கால இருளின் மின்னல்களே ஒளிரும் தாரகைகளாய் நீவிர் விண்ணெங்கும் நிறைந்திருக்க.. காட்டுச் சிறுத்தைக்கு சிணுங்க ஏது தேவை...?! தேசக் காற்றின் வாசமான இளம் தென்றல்களே... உயிர் மூச்சுக்களாய் நீவிர் சுவாசப்பைகள் எங்கும் நிறைந்திருக்க... எங்கள் வாகைக்கு வாடி நிற்க ஏது தேவை..?! கடல் கொண்டாடும் அலையாகி நிற்போரே ஓயாத அலைகளாய் நீவிர் உயிரோடிருக்க தத்தித் திரியும் அந்தச் செம்பகத்துக்கு சோர்ந்திருக்க ஏது தேவை..??! கால வெளியில் கோலங்கள் மாறலாம் தேசங்கள் அலங்கோலமாகலாம் கண்மணிகளாய் நீவிர் …
-
- 5 replies
- 620 views
-
-
முகடு இதழ் (பிரான்ஸ்) இதுவே எனது கன்னி கவிதை(அச்சில்). இதுநாள் வரை என்னை மெருகேற்றிய யாழ் உறவுகளுக்கும் அச்சில் கொண்டு வந்த முகடு இதழுக்கும் எனது நன்றிகள்.
-
- 19 replies
- 1.5k views
-
-
விழி மூட முடியவில்லை விடியும் வரை கண்ணே!! விடிவெள்ளி பார்பதிற்கில்லை பெண்ணே விடியலுக்காய் உன்னை தேடி........... வில்லங்கங்கள் பல உண்டு வில்லன்ளும் பல உண்டு விடயம் அறிந்த பெற்றோர் உண்டு விட்டு வைப்பார்களா எம்மை........... விதி விட்ட வழி என்று கண் கலங்காதே வியாக்கியானங்கள் பேசாதே விகடமாக என்னிடம் பேசிய நீயா-இன்று!! விரக்தியாக பேசி என்னை கொல்கிறாய்!! விரியத் துடிக்கு பூவே நீ விருப்பத்தோடு காத்திரு வீரத்தோடு நான் வருவேன் விரைவில் உனைக் கைப்பிடிக்க............. எல்லா கவிஞர்களுக்கு வணக்கமுங்கோ..........நாமளும் ஒன்றை எழுதி பார்தோம் இதில போடுறேன் பேபி பென்சில் பிடித்து எழுதின முதல் கவி ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ........கவியா தெரியாட…
-
- 44 replies
- 4.6k views
-
-
விடியலுக்காய்ப் பயணிப்போம்.... கவிதை - இளங்கவி முச்சந்திவரை கொண்டுவந்து மூலை திரும்ப முன் முடிவைத் தவறவிட்ட துரதிஸ்ரசாலிகள் நாம்..... ஆம் நான் கூறுவது நம் சுதந்திரத்தைத் தான்...... ....... முடியாததொன்றை முடித்துக்காட்டி.... பணியாத சிங்களத்தை பணிவித்துக்காட்டி.... உலகுக்கே தமிழரை யாரென்று காட்டி..... தமிழனென்றால் மூக்கில் விரலை வைக்கக் காட்டியவர்கள்.... இன்று வீடுகளில் முடங்களாய்.... வீதிகளில் பிணங்களாய்.... . சிறைகளிலே ஜடங்களாய்..... மொத்தத்தில் செத்துக் கொண்டிருக்கும் பிணங்களாய்..... ....... வீழ்ந்து கிடக்கும் வீரம் மீண்டு எழ ஆண்டுகள் பல...ஏன்! பல நூற்றாண்டுகள் ஆகலாம்..…
-
- 11 replies
- 1.4k views
-
-
இரவுகளை ஆட்கொள்ளும் இருளை, நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்! வெண்மதியை மறைக்கும் மேகங்கள் அங்கேயே நிலைப்பதில்லை! விலகிச்செல்லும் மேகங்கள் போல, கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது... விடியலை நோக்கி! வாழத் துடிக்கும் மனசு.... தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல, சிறக்கடிக்கத் தொடங்கும்! காணத்துடித்த விடியலின் ஒளியில் பூத்த மலர்களில் உட்கார்ந்து... மரகத மணிகளை உருட்டி விளையாடும்! குயில்களின் கானங்கேட்டு துயின்ற கதிரவன் துயிலெழுவான்! மனவறையில் ஒட்டிய பனித்துளித் துயரங்கள் அனைத்தும் கதிரவன் கதிரிலே காணாமற் போகும்! மெல்லப் பரவும் ஒளியில் பிரசவமாகும் விடியலில் பரவசமாகும் பூலோகம்! வலியவன் மனதிலே இருளோடு கரைய..…
-
- 4 replies
- 6.6k views
-
-
விடியல் வன்னியில் போர்மேகம் புலத்தில் மக்களின் எழுச்சி .... வீதியில் தாய் தமிழககத்தில்...அரசியல் சித்து சிலபேரின் தற்கொடை தவிர வெறீயின் விளின்பில் தமிழீழம் புலம் மக்களோ வீதியில் எழுச்சியில்... சர்வதேசம் பாராமுகம் விடியல் தூரம் இல்லை விழித்திரு விடியலுக்காக இளையோன்
-
- 0 replies
- 774 views
-
-
விடியல் விரியும் உன் தோழமைப் பேச்சு இவ்வளவு விரைவில் சுருங்குமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை..! உன் அரிமா மூச்சு இத்தனை முந்தி அடங்குமென்று எள்முனை அளவும் நம்பவில்லை..! செங்கொடியில் ஆடிய உன் உயிர்க்கொடி நின்று போனது கடைசி நொடி..! தத்துவ நூல்களைப் படி..படி..எனத் தரமான நூல்களை தந்தாய் தொடர்ந்தபடி..! உன் தடம் பார்த்து நாங்கள் இனி நடப்பதுதான்...எப்படி..? இரும்பை உருக்கிய எக்கு நெஞ்சம் தோழமை உறவுகளைத் தூக்கிச் சுமந்த மார்பு..! சிவா...சிவா...! எல்லோருக்குமே சிவா போல...ஆக அவா...! எப்படி மறப்போம் தோழனே..! முறுக்கேறிய முரட்டுக் காளை நீ...! இருட்டைப் போர்த்திய …
-
- 4 replies
- 600 views
-
-
இன்றைய காலையின் விடியலின் வரவினை அறியவிக்க சேவல் கூவவில்லை..! களவாடிப் போனது யார்,,,,? விழித்துப் பார்த்தேன் வெளிச்சத்தையும் காணவில்லை..! போர்-மே(மோ)கம் சூழ்ந்ததால் எமது காலைச் சூரியனும் காணாமல் போய்விட்டான்...! இன்றைய பொழுதுகள் நற் பொழுதுகளின் விடியலுக்கான... தேடல்களாய்-நாளும் தொடர்கிறது..... நமது விடியல் விடிகிறது விடியாப் பொழுதுகளாய்...!
-
- 9 replies
- 1.9k views
-
-
காலங்கள் மாறுகின்றன காட்சிகள் மாறுகின்றன ஆட்சிகள் மாறுகின்றன ஆனாலும் மாறாத காயம் ஒன்று தான் அது முள்ளிவாய்க்கால் சோகம் மட்டும் தான் கோரத்தின் காட்சியும் அதுவே கொடுங்கோலின் ஆட்சியும் அதுவே அதர்மத்தின் சாட்சியும் அதுவே, அய்யோ, பரிதாபத்தின் காட்சியும் அதுவே பட்ட துயருக்கு நீதி வேண்டும் பலி கொடுத்த உயிருக்கு நியாயம் வேண்டும் இழந்த இழப்புகளுக்கு நீதி வேண்டும் நாம் தலை நிமிர்ந்து வாழ வழி வேண்டும் நம் செல்வங்கள் வாழ வேண்டும் நம்பிக்கையுடனே ஒன்று சேர வேண்டும் நம் வாழ்வில் விடிவொன்று உருவாக வேண்டும் நம் தமிழீழ கனவும் மலர வேண்டும் மீரா குகன்
-
- 0 replies
- 818 views
-
-
விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் - வெடிக் குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா? சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா - உடல் தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா? மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? - மொழிச் சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா? அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? - இனி நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா? அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? - புவி விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?
-
- 2 replies
- 1.2k views
-
-
விடிவு நோக்கி .......... .இயற்கை தன் சுழற்சியை தொடங்கி விட்டது , பசுமை மாறி ,பழுத்து மஞ்சளாகி சில இளம் சிவப்பாகி தன் ஆழ்மனதை காட்டும் பெண்போல, அணைய போகும் விளக்கின் பிரகாசமாய் காலமகள் தன் கோலம் காட்ட புறப்பட்டு விட்டாள் . குருவிகளும் அணில்களும் ஓடி யோடி பறந்தும் நடந்தும் இரை தேடுகின்றன . ஒரு சில மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன தென்றலும் சற்று வேகமாகி சுழன்றடிக்கிறது மங்கையர் ஆடை மாற்றுவது போல மரங்களும் இலைகளை நிறம் மாற்றுகின்றன . கிளைகள் மட்டும் துன்பத்தில் துணை நிற்கும் நண்பன் போல பூமித்தாய் இத்தகைய மாற்றங்களை சந்தித்தே ஆக வேண்டுமென்பது நியதி போல மனங்களும்.. .. மனித மனங்களும் ...... சுழல்கின்றன விடிவு நோக்கி …
-
- 0 replies
- 833 views
-