Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாட்சிமை பொருந்திய பெருநரகம் யாரிவார். நாட்களின் சிதைவுகளில் நாற்றம். கனவின் மீதியெங்கே எதைத் துணைகொள்வது நாய் கட்டையை சுற்றி கறிக்கு அலையும் நாய். எறும்புகள் புற்றை நீங்குகின்றன. வாயில் இரை. இனி எப்பாம்பு அங்கு நிலை கொள்ளுமோ? வெளிச்சத்தில் கடவுள் தலைகுனிந்திருந்தார். கேள்விகளில்லை. சந்தனம் குங்குமம் பன்னீர் கலந்த வாசனையும் இல்லை ஓவியன் வரைந்திருந்த சிறு புன்னைகை கூட இல்லை. சிவந்த உதடுகளை முத்தமிட நெருங்கினேன். ஓ கடவுளே மரணித்துவிட்டாயா ? யாரிடமிருந்து பகலை திருடமுடியும் தானாய் விடிந்த ஒரு பகல். கால்களில் இடறுகிறது கிழிந்துபோன நேற்றைய பகல். இருளின் முடிவில் நல்நிமித்தங்கள்…

  2. மீண்டும் பேரிடி மீண்டும் பேரிடி!மூண்டது போரடி! எங்களின் மண்ணிலா பகைவனின் காலடி? பேரினவாதமே இது வேண்டாத தலையிடி! எரிகுழல் கொண்டு எத்தனை குண்டு கொண்டுவந்தாலும் பொடிப்பொடியாகும் மறத் தமிழரின் கால்மண் பட்டு! 'வெட்டியாய்" எம்மை நினைத்தோ வந்தாய்! "கொட்டியா" பலம் கண்டாய் இனி வேண்டாம் அப்பு சுருட்டு உன் வாலை! மகிந்தவுக்கு உது வேண்டாத வேலை கடனைப் பெருக்கி கைகட்டி நின்று வாங்கினாய் ஆயுதம் புலிக்கே என்று! உந்தச் சொல்லு பலித்தது சரிதான் புலிக்கே ஆயுதம் கொண்டு வந்தாய் எம்மண்ணில் எமக்கே வந்து தந்தாய்! இதுதான் இந்த ஆண்டுத் தொடக்கம் இனியும் வெடிக்கும்! தெற்கில் தெறிக்கும்! கிழக்கின் விடியலில் புலிக்கொடி பறக்கும்!

  3. சிங்காரி சரக்கு…….. சின்னத் திரை என்னும் வண்ணத்திரை வனிதையவள் கன்னிப் பெண்ணாக கருத்திற்கு விருந்தாக எண்ணத்தில் இனிக்கின்ற கன்னற் சுவையாக கொட்டும் கண்ணீரில் சொட்டும் அமிலத்தால் பந்தமென்றும் சொந்தமென்றும் பாசமென்றும் நேசமென்றும் ஆனந்தம் சொரிகின்ற அழகு வசந்தமென்றும் கெட்டிமேளம் கொட்டிவிடும் மெட்டிஒலி மகளென்றும் செல்லமடி நீ என்றம் செல்வத்தின் மனைவி என்றும் அத்திப் பூ அரசி என்றும் கஸ்தூரி மானென்றும் எத்தனைதான் ஏமாற்று வித்தைகளைச் செய்கின்றாள் செற்றிக்குள் இருந்தபடி இச் செப்படி வித்தைகளை கண்டு மனம்கசிந்து கைக் குட்டை நனைக்கின்ற கண்ணான எம்மவரின் புண்ணான நிலை கண்டு எண்ணத்தின் கோலத்தை எழுத்தில் வடித்திட்டேன் மென்மைக்கும் பெண்மைக்கும் மெய்ப் பொருளை…

  4. அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? http://deebam.blogspot.in/2011/10/blog-post_05.html

  5. ஒய்யாரத் தமிழில் செட்டாகப் பாடறியேன் தமிழன் நாளாம் தைத்திருநாளில் பொங்கலோ பொங்கலென்று கவிபாட வந்தேன்........ எட்டுத் திக்கும் ஓங்கியே பாடடி ,பெண் என்றால் யாரென்று ? சிறுமை கண்டு பொங்கி எழுவோம் சிற்றெறும்பாய் நசுங்கியே போகோம் அகப்பை பிடித்த கை அடங்கியே போகுமென்ற , அடம்பிடித்த எண்ணத்தை அடக்கியே வைப்போம் ......... அண்ணை என்று அன்பாக அழைத்தால் , எம்மை ஆள நினைக்கும் கூட்டத்தை கூட்டில் ஏற்றுவோம் . பெட்டிப் பாம்பாய் இருக்மாட்டோம் பொட்டிலே, கொட்டியே தீருவோம் என்று, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் மனதில் இருத்துவோம் மைத்திரேயி

  6. பால்ய நண்பனை பேஸ்புக்கில் பார்த்தேன் - நேற்று தெருவில் பார்த்த பள்ளிச் சிறுவனின் புத்தகப் பையைப் போலவே கனக்கிறது மனசு! பாடப் புத்தகங்களின் பக்கங்களைவிட எமக்கான நினைவுப் பக்கங்கள் அதிகம்! அவனது முகத்தைப் போலவே எல்லாமே மாறிவிட்டது! மாற்றங்கள் அவனுக்குள் மட்டுமல்ல, எனக்குள்ளுந்தான்! இப்போதைய "ஹாய்" "ஹலோ" பண்வழக்க வார்த்தைகளைவிட, கண்டபடி வாயில் வரும் அப்போதைய கெட்ட வார்த்தைகளில்... நட்பின் உரிமையும் அன்பும் நிறைந்திருந்தது! நெருங்கிய நட்புக்களை பிரிவுகள் மட்டும் பிரிப்பதில்லை! காலங்களும் சேர்ந்தே பிரித்துவிடுகின்றன!! மீண்டும் இணைக்கும் முகப்புத்தகம்... பழைய நண்பர்களை "புதிதாய்" இணைத்துக்கொண்டே இருக்கிறது! இது புதிதா...? அல்லது புதிரா...? விடைதெர…

  7. Started by கவிதை,

    இரவுகளை ஆட்கொள்ளும் இருளை, நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்! வெண்மதியை மறைக்கும் மேகங்கள் அங்கேயே நிலைப்பதில்லை! விலகிச்செல்லும் மேகங்கள் போல, கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது... விடியலை நோக்கி! வாழத் துடிக்கும் மனசு.... தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல, சிறக்கடிக்கத் தொடங்கும்! காணத்துடித்த விடியலின் ஒளியில் பூத்த மலர்களில் உட்கார்ந்து... மரகத மணிகளை உருட்டி விளையாடும்! குயில்களின் கானங்கேட்டு துயின்ற கதிரவன் துயிலெழுவான்! மனவறையில் ஒட்டிய பனித்துளித் துயரங்கள் அனைத்தும் கதிரவன் கதிரிலே காணாமற் போகும்! மெல்லப் பரவும் ஒளியில் பிரசவமாகும் விடியலில் பரவசமாகும் பூலோகம்! வலியவன் மனதிலே இருளோடு கரைய..…

  8. Started by கவிதை,

    தன் அழகான வரிகளால்... தமிழை ஓவியமாய் தீட்டியவன்! தாய்த் தமிழுக்கு பெருமை ஈட்டியவன்! வண்ண வண்ணத் தமிழின்... இனிமை காட்டியவன்! வாலியென்றால் இப்படித்தான் என தனித்துவம் நிலை நாட்டியவன்! இந்த வண்ணத்தமிழ் வாலிபக் கவிஞனின் இழப்பால், தமிழும் கறுப்பு வெள்ளை ஆனதைப்போல் ஒரு பரிதவிக்கும் உணர்வு....

  9. மக்கள் எழுபத்து ஏழில் தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர் தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுளே காப்பாற்றவேண்டும் என்றார் வேறுவழியில்லை கைகளில் ஆயுதம் நாங்கள் அடித்தால் அடிவாங்க பயந்தாங்கோழிகளோ மகாத்மாக்களோ இல்லை அடித்தார் திருப்பி அடித்தோம் அடித்தவரில் குற்றம் சொல்லா உலகு திருப்பி அடித்தவரில் எங்ஙனம் குற்றம் காண்பது? எங்கள் கைகளை மட்டும் கட்டி எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது முதுகை குறிவைத்தது இயங்கிய உடல் ஓயலாம் போராட்ட ஆத்மா சாகாது அடிமைத்தனத்தை ஏற்காது நீறு பூத்த நெருப்பாய் விடுதலை தாகம் இருக்கும் ஒரு நாள் தீரும்

  10. பச்சை மண்ணாய் பால் குடியாய் யாழ் வந்த போது தமிழோ வா வா என்ற தமிழர்கள் சிலர்.. இது தமிழா இவன் எல்லாம் உருப்படுவானா என்று மொழிய.. தத்தெடுப்பின் அடையாளமாகி அவை அமைய.. இணையத் தமிழ் கொண்டு அரவணைத்த யாழ் இணைய சொந்தங்களே.. பச்சை பச்சையாய் திட்டினும் யதார்த்தமாய் ஏசினும் வாயாரப் புகழினும் வாஞ்சையோடு வருடினும் வஞ்சகமில்லா எம் மொழியை கண்டறிந்திட்டு சொந்தம் கொண்ட... உறவுகளே. காலத்தால் தனித்துவிட்ட போதும் கலங்கரை விளக்கமாக கூட நின்ற சொந்தங்களே.. அன்னை இன்றி தந்தை இன்றி உற்ற சகோதரங்கள் கூட இன்றி அரவணைக்க உறவுகள் இன்றி அந்நிய தேசத்தில் கண்கண்ட நேரத்துக்கு மட்டும்.. கூடி மகிழும் நண்பரைக் காட்டிலும் கூட வந்த உறவுகளாய் அன்னையாய் தந்தையாய் சகோதரனாய்…

  11. பங்குனி விடியலின் அதிகாலைத் தக்பீர் முழக்கம் அவள்! சித்திரை வசந்தத்தின் முக்காடு போட்ட முதலாம்பிறை அவள்! கார்த்திகை நிலவின் காயம்படாத உமர்கயாமின் கவிதை அவள்! மார்கழித் திங்களின் சல்வார் போட்ட ரம்சான் அவள்!

  12. அன்புத் தோழியின் மரணம் தரும் துயரோடு....! 05.03.2014.., அழகிய வாழ்வை - மரணம் அள்ளிக் கொண்டு போகக் காத்திருக்கிறது. அழகான உனது புன்னகையும் இனிமையான உனது குரலின் கீதமும் எங்கள் காதுகளிலிருந்து இறங்கி மெல்ல மெல்லத் - தனது இறுதிப்பயணத்தின் கதையை எழுதத் தொடங்கியிருக்கிறது.....! 1990...., மாற்றத்தின் பெறுமதிகள் மண்விடுதலை யாகத்தில் வரியுடுத்திய தலைநிமிர்வின் அடையாளம் நீயுமாய் உனது நிமிர்வின் வீரம் இன்னும் நிழலாய் தொடர்கிறது....! 1991...., ஆனையிறவும் அகிலன் வெட்டையும் அந்த உப்பளக்காற்றின் ஈரமும் உன் தோழ் சுமந்த கனரகத்தின் கனவுகளையும் காலம் தன் கைகளில் பொத்தி வைத்துக் காக்கும் பொக்கிசம் நீ. எல்லோர் போலவும் உனக்கான வாழ்வும் வசந்தங்களும் ஆற்றல் மிக்க குழந்தைகளும…

  13. ஈனப் பிறவிகளின் இழிசெயலைத் தாங்காமல் ஈழம் துறந்தெங்கோ இருக்கை அமைத்தவரே வேசப் பிறவிகளின் வெங்கொடுமை தாங்காமல் வேரை விட்டேங்கோ விழுதாய்ப் படர்ந்தவரே எங்கே சென்றாலும் எவ்விடத்தில் தரித்தாலும் எமக்காக நீரிருப்பீர் எப்போதும் நினைத்திருப்பீர் என்று நினைத்தோமே எண்ணிக் களித்தோமே எல்லாமே பொய்யாச்சே எம்நினைப்பும் மண்ணாச்சே உக்ரேய்ன் எல்லையிலே உருக்குலைந்து போனவர்க்காய் உருக்கத்தை பிழிகின்றீர் உரிமையுடன் கொதிக்கின்றீர் காசா மண்ணினிலே கண்மூடிப் போனவர்க்காய் கவலை கொள்கின்றீர் கண்ணீரை விடுகின்றீர் புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும் புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும் முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும் முகமனுக்காய்க் என்றாலும் எங்களுக…

  14. ”எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில் குந்தி தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த அந்தக் குருவியைப் போல் காணாமல் போனதடி காலங்கள்.” . எனது பூவால் குருவி கவிதை 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது நான்ஓட்டமவடி ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மந்தைகள் பிரச்சினை தொடர்பாக பேச படுவான் கரைக்குச் சென்றிருந்தேன். உயிரை பணயம் வைத்து யாருமற்ற பகுதியை கடந்து போனேன். இந்த ஆபத்தான நெடும் பயணம் ஏறாவூரில் இருந்து ஆரம்பமானது. ஏறாவூரில் இருந்து வந்தார மூலை வரை என்னை தோழன் பசீர் சேகுதாவுத் தனது வானில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். நான் பாதுகாப்பாக போய் வரவேண்டுமென்ற கவலையுடன் விடை தந்தான். . வன்னியில் இருந்து யாழ்வேந்தன் வந்திருந்தார். சில நாட்க்களின் முன்னர்…

    • 2 replies
    • 2.3k views
  15. சிங்களவன் உயிரணுவில் உதித்து.. சிங்களத்தி கருவறையில் வளர்ந்து அவள் முலை பிடித்து உணவருந்தி சிங்கள தேசத்தில் உருவானவன்..! ராஜபக்ச வம்ச வழியில்.. கோத்த பாய எனும் ராஜ கொலைஞனின் கொலைக் களத்தில் கோரம் செய்ய கற்றுக் கொண்டவன். தமிழ் பெண்கள் கற்பு எடுப்பு - பின் அவள் முலை அறுப்பு கோத்தாவின் கட்டளை...! பிசகாமல் அதை செய்து முடிப்பதே என் பிறவிக் கடன். முள்ளிவாய்க்கால் என் பயிற்சிக்களம்.. நந்திக்கடலில் எனக்கு பட்டமளிப்பு.. தமிழர் தலை கொய்து - அதில் பட்டம் பெற்றவன். பயங்கரவாதப் போர் முழக்கம்... கழுகுகள்.. மயில்கள்.. றகன்கள்.. பீனிக்ஸ்கள்.. எல்லாம் கைகோர்க்க.. சிங்கத்தின் கையால் புலி அழிப்பு அ…

  16. மன அழுத்தங்களும் வருத்தங்களும் மனம்விட்டு அகல, சிலநேரம் கற்பனைக் கடலில் நீந்துவது வழமை! அப்படியான இன்றைய பொழுதிலும், மனதில்தோன்றிய கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஒரு கவிதையாய் கிறுக்கினேன்! என் மனத்தின் மீது தேனாய் இனித்த உணர்வுகள் "சென்சார்" செய்யப்பட்டு கவிதையாய் உங்களுக்கு.......... (வயது வந்தவர்களுக்கு மட்டும்) உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ , உடல் முழுதும் பரவிச்செல்ல... கடல் மீது மிதக்கும் கப்பலானது, தேகங்கள் இரண்டும்...! மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக... அமைதியான கடலும், ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்... அடங்காக் குணங்கொண்டது...! நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்... வள்ளமும் கள்ளமாய் செல்லமாய், கொஞ்ச ... மோக வேகமெடுத…

  17. எப்போது ஒரு இனம் அழிகிறது ...? ------ விடுதலை போராட்டங்கள் .... எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல.... மடிந்தவர்கள் மண் பொம்மைகளல்ல..... போராடிய காலம் எந்தளவோ.... விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!! எப்போது ஒரு இனம் அழிகிறது ...? பொருளாதார வளங்கள் அழியும்போது .... பொருளாதார தடை விதிக்கும் போது .... பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது.... பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது .... யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் .... இனத்தின் அடையாளங்களை அடமானம் .... வைக்கும்போதும் இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!! தந்து விட்டுப்போன சுதந்திரத்தை .... தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் .... பக்திகொண்டு போராடுவோம் ..... உணவோடு உணர்…

  18. தமிழுக்காய், தமிழ்மண்ணுக்காய் தற்கொடை தந்த தமிழ் சகோதரியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய குட்டிரேவதியின் கவிதைக்கான பதில் அம்மணமாய் நிற்பவர்களே! சினிமாக் குப்பைகளிலும் சின்னத்திரை குழறல்களிலும் சிந்தனையைத் தொலைத்துவிட்டு குழாயடிகளிலேயே வீரங்காட்டும் விவஸ்தையில்லா வீணர்களுக்கு தாய்மண் காத்தலையே விரதமாக்கி வித்தைகள் புரிவது வீணானதாய்ப் படலாம் கட்டிளம் காளைகளின் கடைக்கண் பார்வைக்காய் காலமெல்லாம் காத்திருப்பதும் களியாட்டங்களில் கரைவதுமே கன்னியர்க்கு விமோசனம் என்றெண்ணும் சிங்காரிகளுக்கு களத்துத் தியாகங்களும் தீரங்களும் ஏளனங்களாகலாம். அந்நிய மொழியும் அடுத்தவன் கலாச்சாரமுமே கண்ணில் தெரிய அடுத்தவனின் அழுக்குகளையே அரவணைத்து ஆராதித்து அடுக்களைய…

  19. காற்றில் விதை தூவி வெந்நீர் தனை ஊற்றி பஞ்சு வேலியிட்டு நெஞ்சில் உரமிட்டு பார்த்து வளர்க்காது உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல் இதில் மன்னவரும் மகுடமிழக்க விண்ணவரும் வீண் பகை சுமக்க பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ? மனக்காதல் மணக்காததால் மணக்காது போகும் பெண்ணை கண்கள் இமைக்காமல் கண்ட நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ? நெஞ்சு பொறுக்குதில்லையே நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது.... புற்றரவு தீண்டிடினும் கொடும் நஞ்சு சுவைத்திடினும் மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ? இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ? இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ? என்னை இறத்து உன்னை மறக்க உன் நினைவை மண் புதைக்க கோழை போல் இறக்கமாட்டேன்... …

  20. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எழுதி வாருங்கள் என்று இரண்டாம் வகுப்பு ஆசிரியை சொல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்த எனக்குக் காதில் விழுந்தது.. நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லையாயினும் எழுதி பல மாதங்கள் ஆனதால் ஏதேனும் எழுத எண்ணினேன்.. மரங்களைப் பாட வருகிறேன் நண்பர்களே.. மரமா? என்கிறீர்கள்.. மரம் மட்டமில்லை நண்பனே.. மரம் இல்லையேல் மனித இனமில்லை.. காற்றைச் சலவை செய்யும் இலவச இயந்திரம் மரம்.. மாசகற்றும் மாண்புள்ளது மரம்.. தாய்க்கு அடுத்து நம்மைத் தாலாட்டுவது மரம்.. உயிருண்டு மரத்திற்கு.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. இன்னொரு உண்மை சொல்லட்டுமா? ஆயுள் அதிகமுள்ள உயிரும் மரம்தான்.. அகழ்வாரைத் தாங்கும் ந…

  21. அழகு மலர்களின் மெளன மொழியில் காதல் கொண்டு.. விரியும் இதழ்களின் காந்தக் கவர்ச்சியில் கவர்ந்து..கள்ளுண்டு கலவி கண்டு கருத்தரிக்க உதவுகிறான் காதல் தூதுவன் இவன்..! அந்த விசயத்தில் இவன் ஒரு "பிளே பாய்"..! மானுட உலகம் மாற்றி அமைத்திட்ட இயற்கையின் நியதியில் கருத்தடை மாத்திரைகள் கருப்பைகளுக்கு விடுமுறை தர யோனிகளுக்கோ ஓய்வில்லாத உரசல்கள்..! உராய்வு நீக்கிகளுக்குக் கூட அங்கு பஞ்சம்.. கிழியும் அந்த உறைகளின் வியாபாரமோ இன்று உச்சியில்..! நிமிட நேர உள்ளக் களிப்பில் போதை கண்டு.. உடலில் சேரும் அந்த மாத்திரை நஞ்சுகளின் தாக்க அறிதல் இன்றி கூடிக் களித்திருக்குது மானுட சமூகம்..! பாவம் இவன் அதே.. மானுட உலகின் அரக்கச் சிந்தனையில் பூச்சி கொல்லி…

  22. திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம் திறக்காத கதவுகளை தினம் தினம் தட்டுகின்றோம் கருணையில்லா உள்ளங்களை கருணை காட்டச் சொல்கின்றோம் முட்டுகின்றோம் மோதுகின்றோம் முழிக்கின்றோம் செய்வதறியாது ஏனிந்த வாழ்வென்று ஏங்குகின்றோம் நாள்தோறும் தமிழினத்தின் தலையெழுத்தை தயவின்றி எழுதிவிட்டான் இறைவனவன் காலங்கள் சென்ற போதும் கோலங்கள் மாறவில்லை, எங்கள் அவலங்கள் முடியவில்லை திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம்....

    • 0 replies
    • 803 views
  23. நேற்றுவரை ஒன்றாய் வாழ்ந்தவரை, வீரச்சாவு என கேட்கும் கணங்கள் மனம் பிழிந்து சாறாகும் நிமிடங்கள் அவர் உறவுகளை காணும் நிமிடத்துளிகள் உலகில் யாருக்குமே வரக்கூடாது எங்கள் பணிகளுக்குள் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லி இறுதி நிகழ்வை நடாத்தி எல்லோரும் போன பின் துயிலும் இல்லத்தில் இருந்து நாங்கள் அழுவோம் சிலர் ஊமையாய் அழுவர் சிலர் ஒப்பாரி வைப்பர் சிலர் சாமம் தாண்டியும் மண்ணில் வீழ்ந்துகிடப்பர் கூடி அழுதவரை இன்னொருநாள் விதைத்துவிட்டு எஞ்சியவர் துடித்து அழுவோம் யாரும் குறிப்பெடுக்கா சோகம்

    • 5 replies
    • 708 views
  24. வல்லமைச் சூரியனாய் வழிகாட்டும் பேரொளி வீரத்திருவே எங்கள் வேரின் தணலே விடியாத வாழ்வுக்கு வெளிச்சம் தந்த ஈகப்பெரு நதியே.... அகவை ஐம்பத்து ஒன்பது காணும் அணையாச் சுடரே அன்பின் உருவே அலையாய் கரையாய் நிலவாய் நீராய் நெருப்பாய் நீயே எங்களின் நிச்சயம்.... ஏன்றென்றும் எங்களின் வழிகாட்டி ஒளிகாட்டி வுரலாற்றின் திசைகாட்டி எல்லாம் நீயே எங்களின் தலைவனே.... பெருமைமிகு தோழனே பெறுதற்கரிய பெருமையே தலைநிமிரும் வீரத்தையும் ஈகத்தையும் தந்த பேரூற்றே.... தளபதியே எங்களின் தந்தையே எல்லாமுமான வல்லமையே நீ பிறந்த பின்னாலே நாங்கள் வீரம் பெற்றோம் விடுதலையின் சுவையறிந்தோம்... நீயில்லாமலெங்களுக்கு நிமிர்வில்லை நண்பனே நீயே எங்களின் வல்…

  25. பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... -எஸ். ஹமீத் *இன்னும் எரிகிறது நெருப்பு... போதாதைக்குப் பெருங் காற்று வேறு; தீக் கங்குகள் எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன *பற்ற வைத்தவன் தூரத்தில் பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்; பாழும் நெருப்புக்கது தெரிந்துதான் பற்றி எரிகிறது...! *தொடங்கியவன் அவன் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் உதவியது காற்று! *எல்லாவற்றையும் எரித்துவிடும் பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு; காற்று நன்றாகவே போட்டுக் கொடுத்தது..! *பைத்தியக்கார நெருப்புக்குப் பச்சை மரங்கள் கூடப் பலியாகிக் கொண்டிருக்கின்றன நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய அதே காற்றின் உபயத்தில்..! *காட்டிக் கொடுத்தலே தொழிலாயான பின்னர் காற்றுக்கு வளர்ந்த மரமென்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.