Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by gowrybalan,

    :P :wink: பிற்குறிப்பு:- சத்தியமா அவளுக்கு சர்க்கரை வியாதி இல்லை

  2. மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ வண்ணமும் வாசமும் தான் நாளுக்குநாள் மாறிக்கொண்டன. நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் மலர்தலை தடுக்கவா முடியும். உன் விழிகள் ஏணியாகவும் இருந்தது _எனை தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது. சிரித்தேன். கடந்தும் திரும்பி பார்த்தாய். விரும்பித்தானே பார்த்தாய்? முடக்கில் போட்ட பனங்குத்தி மக்கி மடங்கும்வரை அரியாசனம். அப்புறமென்ன தரையே ஆசனம். கடந்து போனது நீ மட்டுமா, காலமும் தான். பகிர்ந்த சில வார்த்தைகளில் பொதிந்திருக்குமோ என்றெண்ணி, பகுத்தறிந்து அதுவா இதுவா என்றங்கலாய்த்தல்லவா_என் அனேக அந்திகள் கலைந்தது. மாரடிக்கும் பெண்(டு)கள் கூட ஓய்ந்ததுண்டு_உனை தேடிதிரிந்த நான்? எரிகல் விழுகையிலும் கல் எறிகையிலும் உன்னைத்தான் நினைக்கிறேன்…

  3. முன்னை அண்ணன் கொடுத்த இடி கட்டுநாயகாவில் பின்னை கொடுத்த இடி பலாலியிலே இன்று கொடுத்த இடி அடிவயிற்றிலே இன்னும் இறங்கும் இடி எங்கெங்கோ? வானோடிகளின் வல்லமை பாராமல் வாயார வாழ்த்தாமல் வாய்மூடி இன்னும் உறங்குவது ஏன் தமிழா? அன்று நின்று கடலாண்ட இராஜராஜனும் அவன் மகன் இராஜேந்திரனும் மீண்டும் பிறந்திருந்தால் இப்படித்தான் இருப்பாறோ? இணைந்து படைநடத்த இயன்றதெல்லாம் செய்யாறோ? என்னடா கொடுமை இது எங்கள் சகோதரனுக்கு எம் மன்னில் இடமில்லையாம் சொல்வது யார்? கன்னடத்து விஷநாகம் கடும் விஷத்தை கக்குவதும்! கலைஞ்சரின் கட்டுக்கதை கண்ணீர் நாடகமும்? என்னடா கொடுமை இது? - சிவராஜா

  4. இனியேனும் நாமிங்கு ஒன்றாகுவோமே ! -------------------------------------------------------------------- காலத் துயர் வலி தாக்கிடும் வேளையில் கைகளைக் கோர்த்தொரு உறுதியெடுப்போம் வீணிற் பொழுதுகள் போனது வேயென்று காணற் பேச் சொலி காதிற் கேட்குது போனது போனது விடுதலை போனதாம் ! எங்கே போனது விடுதலை என்று நாம் சற்றே சிந்தனை கொள்வதே நல்லது எப்போ விடுதலை வந்தது என்றே சற்றே சிந்தனை கொள்வதும் நல்லது ! நித்திரை போலவே நடித்தவர் சிலர் நித்திரை விட்டெழுந்தவர் போல் சிலர் நின்று பேசியே நிமிர்ந்து பார்க்கிறார் போனது போனது விடுதலை போனதாம் ! நேற்று வரைக்கும் தூங்கி யிருந்ததும் காற்று வாங்கக் கடற்கரை போனதும் கதவை மூடிக் கதைகள் சொன்னதும் காலத்துயரின்…

    • 0 replies
    • 700 views
  5. புயல் சுழன்றடித்த பெருந்தீவின் மாயான அமைதியில் சலனமில்லா ஊர்களின் நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில் வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் முன்பொரு காலத்தில் எந்நேரமும் விளையாட்டு சாமான்கள் விழுந்துடையும் சத்தங்களும் விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும் கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும் நினைவின் தொகுப்பாய் எஞ்சிய ஒற்றை நிழற்படம் முன் சிறுபிள்ளை பிரார்த்தனை முனுமுனுப்புகளுமிருந்தன இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன துயரிரவின் பேரமைதியில் ஊமைநிலத்தில் ஊடுருவிய புத்தரின் நிலைகுத்திய காந்த விழிகளுக்கப்பால் 'புயலின் சூன்யத்தை, கோர பசியை, தீரா உயிர்வேட்கையை, மாளா குரூரத்தை, அழிவின் ஆரோகணத்தை, ஏதொவொரு பிணத்தை புண…

  6. Started by theeya,

    உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .

    • 2 replies
    • 860 views
  7. எழுதியதெல்லாம் மொழிபெயர்ப்புத்தான். இளைஞர் விழிகளில் எரியும் சுடர்களையும், போராடுவோரின் நெற்றிச் சுழிப்புகளையும் இதுவரை கவிதையென்று மொழிபெயர்த்திருக்கிறேன்! ******* உயிர்ப்பின் முதல் நொடியை உணர முயல்கிறேன் மீண்டும் பொருளில் உணர்வு தோன்றிய கணம் ஓடுவரா முட்டையின் முதல் அசைவு வித்தின் மண்தேடும் ஆதி விழைவு நரைத்து ஒரு முடி உதிர்ந்த சமயம் உணர்ந்தேன் அது என் மறதியின் முதல் நொடி ****** மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில கிடக…

  8. இன்னுமா உறக்கம்?...... இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! புூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால்எங்கே? ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தின்னிகளே! போர்த்திக்கொண்டு உறங்குங்கள்! ம…

  9. இன்னுமா போர் அபாயம்? இலங்கைத் தமிழன்! இதோ, இந்தியக் கடற்கரைக்கு வருகிறான்... நண்பனாக அல்ல, நாடோடியாக! ஒவ்வொரு நாளும் உயிரைப் பிடித்துக்கொண்டு கரையொதுங்குகிறான்... தனியாக அல்ல, குடும்பம் குடும்பமாக! கச்சத் தீவருகே, கல்லெறி தூரத்திலே, தமிழனின் கல்லறை ஓலம் கேட்கிறது... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! தனுஷ்கோடி கடற்பகுதியிலே, தப்பியோடி வந்த தமிழனின் பிணங்கள் மிதக்கின்றன... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! இத்தனைக்குப் பிறகும், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, "இலங்கையில் போர்மூளும் அபாயம்!" என்று சர்வ சாதாரணமாக, சர்வ சதாகாலமாக, ஊடகங்களெல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றன... வேதனையாக இருக்கிறது... போர் மூண்டு எத்தனையோ காலங்கள் …

    • 3 replies
    • 1.1k views
  10. மீண்டும் மீண்டும்........ இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! பூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால் எங்கே?....... ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தி…

    • 3 replies
    • 1.2k views
  11. இன்னும் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்க்கையின் மயானமாய் விரியும் சென்னை நடுகற் காட்டில் அணில்களின் ஒப்பாரியும் பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும் நிறைகிற மாலைப் பொழுது. இன்னும் பூந் தென்றல் பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி.. இன்னும் வங்கக் கடலிருந்து ஒரு தாய் ஆமை சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... . . இன்னும் எஞ்சியிருந்த அணில்கள் காகத்திடம் தங்கள் கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன். காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி.. மொட்டைக் கூரைகளில் சுவர் நசித்த மரங்களில் குப்பை மேடுகள் வளரும் தெருக்களில் கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய் நூல் இறங்கி ஊர ஆ…

    • 6 replies
    • 2.1k views
  12. நினைவுவலிகளை நீக்குமொரு நிகழ்வுப்பயணத்தை நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறேன்..... காலக்கரைவுகளில் புது வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது நிகழ் கணங்களில் முகம் . வல்வைக்கடலுவர்க்காற்று வந்துமோதி முற்றத்து முல்லை பூவுருத்திப்போகும்_ .அதுவே மயங்குமாலையில் மன்மத வாசம் பூசும் காற்றில் ............. எருக்கலையும் நாயுருவியும் தெருக்கரைகளில் கதைபேசும் உருக்குலைதிருந்தாலும் எந்தநூர் திருக்கலையாதிருக்கும் பிணிஎதுமில்லாமல் போய்வர முனியப்பரை துணை கேட்டு வல்லை வெளியூடே எல்லைத்தாண்டும் பயணம் தொடரும் . உடுவை சந்தியில் உணர்வரியா உவர்ப்புடன் தேடல் பாடுபொரு…

  13. இன்னும் ஈரமாய் இதயத்தில்....! பூவரசம் இலையில் பீப்பி ஊதி.. லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி.. வாழைநாரில் தாலி கட்டி.. மண்சோறில் விருந்துவைத்து... ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...! தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து... பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி... ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து... உரத்து உரத்து பாடினது நினைச்சாலே.. இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...! மாங்காய் சம்பல் போட்டதும்.. நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்.. பொன்வண்டு பிடித்து தீ பெட்டியில் அடைத்து... குஞ்சு பொரித்திட்டுதா என்றே... நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து... இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..! தீ பெட்டியில் தொலைபேசி பேசி ம…

    • 37 replies
    • 5.4k views
  14. இன்னும் எலும்புக‌ள் - சுகுமார‌ன் என‌து க‌த‌வைத் த‌ட்டிக் கேட்காதே எதுவும். ம‌ர‌ண‌த்தால் விறைத்திருக்கிற‌து என் வீடு நான் உன‌க்குத் த‌ரும் சொற்க‌ளில் மிருக‌ங்க‌ளின் கோரைப் ப‌ற்க‌ள் முளைத்திருக்க‌லாம் உன்னுட‌ன் ப‌கிர்ந்து கொள்ளும் சிக‌ரெட்டில் விஷ‌த்தின் துக‌ள்க‌ள் இருக்க‌லாம் உன்னுடைய‌ த‌ட்டில் ப‌ரிமாறும் உண‌வில் ச‌கோத‌ர‌ர்க‌ளின் மாமிச‌ம் க‌ல‌ந்திருக்க‌லாம் உன‌க்குத் த‌யாரிக்கும் தேநீரில் க‌ண்ணீரின் உப்பு க‌ரைந்திருக்க‌லாம் இந்த‌ நாட்க‌ள் காக்கிநிற‌ப் பேய்க‌ளால் நிர்வ‌கிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ இன்று பூக‌க‌ளும் ப‌ற‌வைக‌ளும் குழ‌ந்தைக‌ளின் புன்ன‌கைக‌ளும் பெண்க‌ளும் எரிந்து போயினர் உறுப்புக்க‌ள் வெட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குர‌ல்க‌ள் …

    • 0 replies
    • 504 views
  15. இன்னும் ஏன் மௌனம்.....??? வாருமய்யா வாருமய்யா மனித உரிமை வாதி ஜய்யா.... மலிந்து போயு கிடக்கிதுங்கு மனிதயுரிமை பாருமய்யா... வீதியிலே பிணங்களாகி வீழ்ந்திருக்கு பாருமய்யா... விதைவையாகி உறவு இங்கு கதறுவதை காணுமய்யா.... ஆண் உறுப்பை அறுத்தெறிந்து அழித்து கொண்டான் பாருமய்யா... உடல் சிதறி உருக்குலைந்த உறவுகளை பாருமய்யா.... என்ன செய்தார் என்றிவரை கொன்றழித்தான் கேளுமய்யா....??? குண்டு மழை பொழிந்து உயிர் பறித்தான் இங்கு பாருமய்யா... குஞ்சுகளும் பிஞ்சுகளும் பிய்ந்து கிடக்கு பாருமய்யா... எத்தனையோ கொடுமைகளை பகையாடுதிங்கே காணுமய்யா... அத்தனையும் கண்டு …

  16. இன்னும் வடுவாக நெஞ்சில்.... முகம் நிமிர்த்திச் சிரித்திட முடியாமல் முட்டி நிறைந்த துயரச் சுமையோடு அன்றாடம் ஆகிவிட்ட அந்தரப் பொழுதுகள் இவை.... ஆமியும் அதிரும் வெடியுமென அடிக்கொரு நொடி வரும் செய்தியில் எவர் எவரோ எண்ணங்களில் வந்தமர்ந்து போக வழிகிறது கண்ணீர்த் துளிகள். ஊருக்குள் உறவாடிய தோழரும் தோழியரும் யாருக்கும் தெரியாமல் பற்றைக்காட்டுக்குள் பார்க்கவும் முடியாச் சிறைக்கதவுக்குள்ளென செவி சேர்ந்த கதைகள் பல சொல்லாத சோகங்கள். ஊர்காக்கும் போரில் ஒன்றாய் படித்தவ(னு)ளும் கடுங்குளிரும் கொடு வெயிலும் சுடுவதில்லையெமக்கு என்றெழுதிய வரிகளில் விழுந்து கிடந்த விழிகளை மீட்டு வெளிநாடு வந்த சுயநலம் வலிக்கி…

    • 4 replies
    • 1.2k views
  17. இன்னொரு பக்கம் ஜெயபாஸ்கரன் தெளிவாகவே தெரிகிறது நிகழ்வுகளின் இன்னொரு பக்கம் கண்களை கவரும் வண்ண வண்ண கடவுள் படங்களின் மீது, அச்சு இயந்திரங்களின் ஓசையும் 'முருகனுக்கு மெஜந்தா போதாது' என்றொரு குரலும் கேட்கிறது எனக்கு. திரையரங்குகளில் கிடந்து வெளியேறும் போது சொல்கிறார்கள் 'அப்பாசாமி நடிப்பு அற்புதம்' உள்ளுக்குள் உறுமுகிறேன் நான். 'அடபாவிகளே' எடுத்தத்தில் தேறியதை காட்டுகிறார்கள் நமக்கு. எடுத்து எடுத்து வெட்டி வீசப்பட்டதைக் குறித்து ஏதாவது தெரியுமா உனக்கு? இங்கிலாந்து ராணி இந்தியா வந்தபோது எல்லோரும் பார்த்தார்கள் அவரை. நான் பார்த்தது அவருக்காகவே அங்கிருந்தே கொண்டு வரப்பட்ட காரை. என்னவோ போங…

  18. இன்னொரு பிரிவு வேண்டாமடா.... கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை...... நீ உன்னையே எரிக்கும் உரிமையை உனக்கு யார் தந்தது......... நம் தமிழ் தலைவனா.... இருக்கவே இருக்காது..... அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்...... ஆறுகோடி தமிழினம் தமிழ் நாட்டில் நீ தமிழுக்காக எரிந்து போ என்று அரசியல் வாதியா சொன்னான்..... ஆம் சொன்னாலும் சொல்லுவான்.... தான் வாழ எவனையும் எரிக்கத் தயங்காதவன்.... உன் தமிழ் பற்றா உன்னை நீயே எரிக்கத் தூண்டியது..... பற்றுள்ளவன் எரிந்து போனால் பற்றியெரியும் தமிழை யார் காப்பாற்றுவது? பற்றைக் காடெல்லாம் போட்டு உன் தொப்புள் கொடியுறவை பாழாய்ப் போனவன் எரிக்க நீயோ பற்றவைககும்…

  19. கடல் கடந்தபோதும் - எம் இனம் கனம் குறையவில்லை சாதி மதபேதத்தில் நாம் இன்னும் சபலத்துடன் அலைகின்றோம் விரிசல்பட்டு இனம் வீதியிலானபோதும் வீரியம் குறையவில்லை இன்னொருவன் எமை ஏன் அழிப்பான் எம்iமையே நாம் இன்றே அழித்திடுவோம்

  20. இன்ப‌ மிது வன்றோ ஐந் திரு மாத‌ங்க‌ளா யென்ம‌ணி வ‌யிற்றில் நிந்த‌னை யோடே சும‌ந்தே னென் க‌ருவை -இந் நாள் ம‌ட்டும‌தை என்குழ‌ந்தை யென்றுண‌ர‌வில்லை நான் பெற்றுக் கொள்ள‌வும‌தை விரும்பிட‌வில்லை... என் னைபுதைத்து முளைத்தெழுந்த‌ குழ‌ந்தாய் நின் சோக‌க் க‌ருவாய் ஏனிங்கு ம‌ல‌ர்ந்தாய் -விண் ம‌ழை போலொரு க‌ண்ணீர்க்க‌தை என‌க்குண்டு ம‌ன‌ம் விட்டுசொல்லிட‌வே ம‌ன‌மொன் றிங்கில்லை... ஊர்வாய் க‌ளையிழுத்து மூடிட‌வே என‌துற‌வுக‌ள் பேர் காப்பாற்றிக் கொள்ள‌ ம‌ண்ணிலே -வேர் விட்டு போன‌த‌ம் கெளர‌வ‌ம் காத்திட‌வேயென் விட‌லை ப‌ருவ‌ம‌தை வீணாக்கிய‌ விரோத‌க்க‌ருவிது... ம‌ண‌வாள‌ன‌து பேரும‌றியா முக‌ம‌றியா பேதையாய் க‌ன‌வினில் ஜொலித்த‌ யென் க‌ற்ப‌னைக‌ள் -என‌ தாசையின் தா…

  21. Started by kavi_ruban,

    எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்…

  22. இன்பமில்லாத பொங்கலில்.... -------------------------------- காலையெழுந்தவள் கடமை தனதென்று பொங்கினாளவள் பிள்ளைகளுக்காகவென்று...... நித்திரை தொலைந்த இரவுகள் ஆனதால் அதிகாலையிலே படுக்கையைத் துறந்து நீராடிவிட்டு சமையலறையை எட்டிப் பார்த்தேன் பொங்கியிருந்தாள் ! பொங்கியழுதது என் மனம் அப்போ...... நம்பிக்கை பொங்கிய நாட்களை எண்ணி நம்பிக்கை தந்தோர் நடைபிணமானது எண்ணி விழுப்புண்ணடைந்தோர் விதியினை எண்ணி விலங்குகள் போல சிறைகளில் வாடும் தமிழரை எண்ணி தை பிறந்தால் வழி பிறக்குமாம்(!) தமிழன் வாழ்வில் எப்போது பிறக்கும் பிணங்களின் மேலே கண்டிய நடனம் தமிழன் எலும்புகளாலே மாலைகள் சூடும் தமிழ்த் தலைமைகள் இருக்கும் வரையிலே இ…

    • 3 replies
    • 771 views
  23. Started by karu,

    இன்பமெங்கே? 1. இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் இங்குள தங்குள தென்றலைந்தே அதை எங்கெங்கு தேடியும் காணக் கிடைக்காமல் இன்பத்தைத் தேடுகிறாய் தம்பி இன்பத்தைத் தேடுகிறாய் 2. ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா வாழ்வினில் வீணே வழிகெட்டுப் போகாமல் வாய்த்த தவஞானம் தோய்ந்து சுகம் பெறில் ஏழ்மையதின்பமடா தம்பி ஏழ்மையதின்பமடா 3. அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா நெறியோடு ஞானப் பிழம்பென வாழ்ந்(து) உள நிம்மதியோடுயர் நன்மதி கூட்டிடில் அறியாமை இன்பமடா தம்பி அறியாமை இன்பமடா 4. புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா இகழ்பவர் யாவரும் ஈசனென்றே மனம் இன்ப நிலை கண்டு துன்பத்தை மாயத்திடில் புகழின்மை இன்பமடா தம்பி புகழின்மை இன்பமடா 5. நோயதும் இன…

    • 6 replies
    • 1k views
  24. இன்பம் எங்கே...........இன்பம் எங்கே என்று தேடு மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம் சிறுமிக்கு விழாது பொம்மை மீது இன்பம் மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம் பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம் மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும் பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம் கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின் (************** ) விரும்பியதை போட்டு வாசிக்க தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம் தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம் பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம் வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம் ு யாழ் களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம் மனிதருக்கு இன்…

    • 13 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.