Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத் தமிழர் - பேராசிரியர் இரா. அரங்கசாமி பீதி யுற்றுப் பிறந்த மண்ணில் பரித விக்கும் ஈழவர் நாதி யற்ற நாய்க ளாக நாளும் சாக லாகுமோ? நீதிக் காக அவர்கள் செய்யும் நியாயப் போரைப் பழித்துமே ஓதிக் கற்ற தமிழர் கூட்டம் ஒதுங்கி நிற்ப தென்னவோ? பயிரை மேயும் வேலி யான பாது காப்புப் படையினால் உயிரை விட்டும் இன்னல் பட்டும் உழைக்கும் மறவர் தளரவே கயிறு திரித்துக் கதைகள் பேசிக் காட்டிக் கொடுத்து நம்மிலே வயிறு முட்டச் சோறு தின்னும் வீணர் கூட்டம் வாழ்வதோ? கூறு கெட்டுத் தமிழர் சாகக் கைகள் கட்டிப் பார்ப்பதோ? சேறு கொண்டு வீசி அவரைச் சாடு கின்ற கும்பலும் மாறு பட்டு நிற்கும் மற்ற மானத் தமிழர் கூடியே வேறு பாடு போக்கி விட்டு வகுக்க வேண்டும் நல்வழி! -தென்…

  2. அவலத்தில் இருந்து ஒரு குரல் ஈழத்தமிழராக பிறந்த நாங்கள்அழிவை மட்டும் கண்டு நிற்கும் ஏதிலிகள். நின்மதியாய் வாழ ஏங்கும் அகதி அற்ற வாழ்வுக்கு ஏங்கும் மானிடத்தின் பகுதி நாங்கள்.பிறந்தவர்க்கு இறப்பு நிஜம் எங்களின் முற்றத்தில் நித்தமும் நிஜம். இரத்தவாடை எங்கள் வீட்டில் இன்றும் கந்தகப்புகைஎங்கள் மண்ணில். துன்பம் மட்டும் மீதிவாழ்வில் சற்றும் இன்பம் இல்லை சமாதானம் வந்ததுண்டு ஆனால் எந்த பயணும் தந்ததில்லை. பேச்சுக்கள் பல நடந்ததுண்டு உடன்பாடு கண்டதில்லை. பேச வந்த நாடு எல்லாம் புலிகளாகி போன பின்பு தனியனாக நாங்கள் இங்கு. சுற்றி நின்ற சொந்தமில்லை இறந்து கொஞ்சம் அழிந்து போச்சு பறந்து கொஞ்சம் தூரப்போச்சு. வேர்வை விட்டு கட்டி வைத்து அழகுபார்த்த வீட்ட…

  3. கோத்தபாயா..! காலக்கெ(கே)டு உனக்கு நாங்கள் வைப்போம்... கவிதை - -இளங்கவி உன் காலத்தின் கெடு கட்டுப்படுத்தா வீரர்கள் காலவதியான உன் வீரத்துக்கு கட்டுப்படா வேங்கைகள்.... எத்தனை காலக்கெடு உனக்கு எத்தனை தோல்விகள் இருந்துமா புரியவில்லை; புலிகள் உன் சொல்லெல்லாம் சுட்டெரிக்கும் தமிழீழச் சூரியன்கள் கோழையின் சொல்லுக்கு ஓர் துளியளவும் மதிப்பில்லை எம் வீரர் சொல்லமாட்டார் சொன்னால் உன்னுயிர் உனக்கிலை... அப்பாவி உயிர்களை கொன்றொளிக்கும் ஆசாமி அதன் பின்னர் சொல்லிடுவாய் புத்தம்..! சராணம்..! கச்சாமி..! தமிழீழ போர்களத்தில் எங்கள் பூக்கூட நெருப்பாகும் புரிய மறுத்துவிட்டால்; உங்கள் பிணங்களைக்கேள் பதில்சொல்லும் புலிகளை நினைத்தாயோ; உ…

  4. தோற்றவன் நான் (ஒருபேப்பருக்காக கோமகன் ) சோகங்கள் ஆயிரம் மனதில் இருந்தாலும் சோம்பியே இருக்க விடவில்லை புலத்து வாழ்க்கை......... எல்லோரையும் போல விசைப்பலகையில் தேசியம் பேச எனக்கு தெரியவில்லை. தோற்றுப் போனோம் என்ற வரியில் நானும் பங்காளிதானே........ உண்மை இதை மறந்து விசைப்பலகையை உடைப்பதில் யாருக்கு என்னபயன் ???????? ஆனாலும், புலத்தில் உண்மையை மறைத்தால் தான் கதாநாயக வேடம்.... நன்றாகத்தான் கட்டுகின்றார்கள் புலத்தில் ஒருசிலர் கதாநாயக வேடங்களை......... வந்தாச்சு வந்தாச்சு கோடைகாலமும் வந்தாச்சு இடத்துக்கு இடம் உல்லாசப் பயணமும் வந்தாச்சு பண்ணை வீடுகளில் பார்பர்கியூ பார்ட்டியும் வந்தாச்சு வாட்டிய இறைச்சில் என் தேசியமும் அரைபடும் ......... தோற்ற …

    • 38 replies
    • 3.2k views
  5. எனக்குத் தெரியாத தமிழ்மீதான என் கோபம் இன்னும் குறையவில்லை ஏனெனில் எப்பொழுதெல்லாம் அதை தெரிந்த கொள்ள் நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் தனி அறைகளில் சில கவியரசுகளிடம் மட்டும் மனம்விட்டு பேசிக் கொண்டிருக்கும் தமிழே நீயும் வசதியானவர்களின் வர்க்கம்தான் அதனால்தான் என்னைப் போண்ற ஏழைக் கிறுக்கன்களை உன் கண்களுக்கு தெரிவதே இல்லை -யாழ்_அகத்தியன்

  6. நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ? இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ! உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே? என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே! உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே? நம்மை இணைத்த நல்மனம் எங்கே? நன்றி சொல்வோம் தினம் இங்கே! அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா

  7. இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே... ஏன் இந்த வலி உதிரியானது? சுமையை தாங்க முடியாமலா? அல்ல இதயம் உடைந்ததாலா? பூக் காதல் தீயில் குளிக்குதே வீசிய பூ மேகத்தில் பாவ வாழ்க்கை தொலைக்கவா? சொல் ஏன்? நிஜம் எங்கே.....? மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே ஓசையின் துளி தெறிக்கவா ? அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா? சாப அலை வந்து வீசுதே அது அடித்து செல்கிறதே இன்று உடைத்து பார்த்து விட்டதால் பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ... நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது ......போராடுமா? இலையும் கிளையும் ! இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேரும…

    • 6 replies
    • 4.2k views
  8. யாரைத் தேடுகிறாய்? நான் யேசுவைத் தேடுகிறேன். எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய அந்த மனிதரைத் தேடுகிறேன். ஏதற்கு? நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனது கையில் துவக்கைத் தந்து தனது மந்தைகளை மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன். மந்தைகள் என்னவாயிற்று? அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு உணவாயிற்று. இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்? இந்தச் சிலுவைகளில் இரண்டை அவர் தோளில் சுமத்த. -தமயந்தி http://www.piraththiyaal.com/

    • 3 replies
    • 1.1k views
  9. நீண்ட நெடு மரங்களிநூடு நிதானமாய் நடக்கிறேன் நான் மழைத்தூறல் முகம் நனைக்க மகிழ்வாக மழையில் நனைந்த நாள் மனதில் வருகிறது. மனதின் ஓரங்களில் என்றும் ஒட்டிக்கொண்டே இருக்கும் காய்ந்துபோன சிலதும் பழுப்பாகிக் கொண்டிருக்கும் சில நினைவுகளுடனும் கவலையும் மகிழ்வுமாய் மனம் பயணிக்கிறது காததூரம் வந்துவிட்டோம் மீண்டும் வர முடியாத அந்த நாட்களின் நினைவுகளுடன் மட்டுமாய் என்பது மனம் கனக்க மாற்ற முடியாததான நாட்களின் வலுவிழந்த இறந்த காலத்தின் வரிகள் மட்டுமே நினைவில் எல்லாமும் எப்போதும் என் நினைவில் இல்லை சிறுபராயத்து சிதிலமடைந்த நினைவுகளில் சில மட்டும் செருக்கடையா மனதின் சிலும்பல்களாய் வந்துபோக மீட்டல் செய்ய முடியாத மறந்து போனவைகளுக்காக வருந்த மட்டுமே முடிகிறது

  10. முதுமை என்பதோர் புதுமை முதுமை என்பதோர் புதுமை - அதை முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு? முதுமை தருவது அறிவாகும் - அதில் முழுமை பெறுவோர் சிலராவர் முதுமை என்பது எதுவரை - அதன் முடிவைச் சொல்பவர் யாருளர்? முதுமை தருவது நோயென்று - தினம் முடங்கிக் கிடத்தல் தகுமோ? இனிதே, தமிழரசி

  11. Started by kavi_ruban,

    நிலா முஸ்லீம் பெண்ணா? முகில் பர்தாவுக்குள் அடிக்கடி முகம் மறைக்கிறதே!

    • 2 replies
    • 1.1k views
  12. காதலித்துப்பார்........... தேன் கசக்கும் வேப் எண்ணை இனிக்கும் அம்மா சொல்வது காற்றில் பறக்கும் காதலி சொல்வது வேதவாக்காகும், கெட்டவனாய் ஊர் உலகத்துக்கு தெரிவாய் நல்லவன் வல்லவன் ஆவாய் உன் காதலிக்கு, பகல் இரவாகும் சூரியன் சுகமாகும் இரவு பகலாகும் நிலவு சுடும் நீ உன் காலில் எழும்பி நிற்க முடியாதவரை சொல்வாய் உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது என்று பலம் பெற மீண்டும் ஒரு முறை சிரியேன் என்பாய் உன் வங்கியில் இருப்புக் குறைய கதலியின் கண்ணில் வெறுப்புத் தெரியும் உன் மடியின் கனம் குறையும் அவளை தேடி இன்னுமொரு மடி வரும் வங்கியில் இருப்புடன் தெளிவான வானமாய் உன் மனம் இருந்திருந்தால் நீ இந்த சாக்கடைக்குள் வீழ்ந் திருக்கமாட்டாய…

  13. ஓரு பயணம் தொடங்கினேன் பல வருடங்களுக்கு முன் பாதி தூரம் கடந்தாயிற்று ஏன் முக்கால்வாசித் தூரமாயுமிருக்கலாம் சிலவேளைகளில் முடியும் தருவாயிலுமிருக்கலாம். முன்பெல்லாம் திருவி‌ழாக்கூட்டமாய் பலர் உடன் வந்தார்கள் பயணங்கள் இனிமையாய் அமைந்தன பாதையின் விதிகள் கற்பிக்கப்பட்டன அவற்றை மீறியபடியும் விதிகளை கற்றுக கொண்டேன் பாதையின் கிடங்குகளைக் கடக்கையில் கைபிடித்து அழைத்தப்போயினர் சிலர் பாதையின் தன்மைகள் மாறிக்கொண்டே இருந்தன விழுந்தால் வலிக்காத மணற்பாதையில் தொடங்கி பாதுகாப்பான ஒழுங்கை, சாலை என்றாகி காலப்போக்கில் பாதைகள் அகன்று நெடுஞ் சாலையாயிற்று அதிலும் நடக்கக் கற்றுக் கொண்ட போது பயணத்தின் கால்வாசி கடந்திருந்தே…

  14. Started by nedukkalapoovan,

    "பெட்டையள்" கூட கதைக்கப்படாது.. நேற்றைய ஒரு பெட்டையின் அன்றைய வேண்டுகோள்..!!! அது வேறு யாருமல்ல.. அம்மா தான்..! "கதைச்சால் என்ன".. பதில் கேள்வி ஆழ் மனதோடு தற்கொலை செய்துவிட பெற்ற தாயை எதிர்த்து ஒரு கேள்வியா.. மனம் தனக்குத் தானே பரிசளித்துக் களித்துக் கொள்கிறது.! "இவன.. போய்ஸ் ஸ்கூலில போடுங்கோ.." ஏன்... அப்பதான் ஒழுங்கா வளர்வான்..! இப்ப என்றால்.. gay என்று சொல்லுவாங்க என்ற பயம்.. அப்ப என்ற படியால்.. நானும் மகிழ்ச்சியாக அதை ஏற்க.. ஆண்டுகள் 6 அங்கேயே கழிகிறது..! பள்ளிக்காலம்.. பருவ மங்கைகளின் நினைவின்றி.. பக்குவமாய் கழிகிறது..! பாடங்களிலும் தொய்வின்றிய சித்திகள்.. பல்கலைக்கழகம் வரை காலடி விரைகிறது.. அங்கும்…

  15. குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும், ஈர்ப்பு இருக்கிறது,.... எனினும் இப்போது முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, உப்புக் க…

  16. மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் இவை. யாழ் வாசகர்களுக்காகத் தருகிறேன். நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க அரக்கன் பிடியில் அகப்படாத நாளில் அரைகுறை வயிறுதான் - ஆயினும் அழியவில்லை எங்கள் அழியாச் சின்னங்கள் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... வளம் கொழிக்கும் வன்னி மண்ணின் வாசல் வரை வந்தான் அன்று வாசமின்றி வாடுகின்றோம் நாமின்று நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... கடைசிவரை கலங்காத மக்கள் - தம் கச்சையும் இழந்து இன்று கயவன் பிடியில் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... பூசிக்க வேண்டியவர்களைப் பூவின்றிப் புதைத்தோம் பார் போற்றியவரை பாதையில் கைவிட்டோம் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... அழிந்து போன ஆத்மாக்களை அடக்…

    • 36 replies
    • 7.3k views
  17. ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன் ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும், அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும், போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும், எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும், இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது? புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும், புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும், இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும் இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது? ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத என் இதயம் இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது? அன்னை மண்ணிலே குருதியாறுகள் காயவில்லையே, உறையவில்லையே... இலக்கெடுத்த நம் தாயின் வேதனை ஆறவில்லையே,.. …

  18. [size=4] [size=4]ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. வாசித்து விட்டு சொல்லுங்கள்![/size][/size] [size=4] தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! [/size][size=4] கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். [/size] …

    • 7 replies
    • 1.1k views
  19. புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய் அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய் அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க எத்துனையும் அலுக்காது எப்படி நீயும் எழில் பொங்க வருகின்றாய் சாதிமத பேதமின்றி சண்டைகள் ஏதுமின்றி சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக சகலருக்குமாக எப்படி வருகின்றாய் புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க நாடுகள் தோறும் நீ நளினத்துடன் வருகின்றாய் எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க ஏற்றமுடன் நீயும் எப்படியோ வருகின்றாய் ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை ஆண்டாண்டாய்ப் பார்த்திருந்தோம் ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம் ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம் ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்த…

  20. POETRY AND THE FATE கவிதையும் விதியும் என் அன்புக் கவிஞன் சே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”புலவனும் வறுமையும் பிரிக்க முடியாதவை” என்று சொன்னதாக கனடா சென்றிருந்தபோது விஜயன் சொன்னான். இது ஆயிரம் ஆயிரம் வருடங்களாக ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர்கள் கலைஞர்களால் சொல்லப் பட்டு வருகிற வார்த்தைதான். சில நாட்க்களின் முன்னம் பாவைக்கூத்து கவிதையை எழுதி முடித்தபோது எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கவிதையை எழுதியபின்னர் என்னை துக்கம் சூழ்ந்தது. என் அப்பா அம்மா இருவருக்குமே கவிதைப் பைத்தியம் பிடித்திருந்தது. இரு துருவங்களான அவர்களைக் கவிதை மட்டும்தான் சேர்த்து வைத்திருந்தது. நான் பிறந்தபோது …

    • 0 replies
    • 834 views
  21. காற்றின் காத்திருப்பு பிணவறையின் மருந்து நெடி நடுவே அந்த உடல் ஆண் என்பது தவிர வேறெதுவும் தெரியவில்லை முகத்தைத் தேடினேன் கைகளைத் தேடினேன் நெஞ்சுக் கூட்டுக்குள் நினைவெதுவும் மீந்திருந்தால் கொண்டுசெல்லக் குனிந்து தேடினேன் காட்சியின் கொடூரம் மூச்சை அடைத்தது கால்கள் நடுங்கிற்று முத்துக்குமார் அவன் பெயர் என்றார்கள். அவனைத் தின்ற நெருப்பு எங்கிருந்து வந்தது? கூராய்வுச் சோதனையில் கண்டறிய முடியாது. இப்போது அது எங்கே போனது? ஒற்றர்கள் முயன்றாலும் அதன் தடயம் தெரியாது. கண்ணீர் வரவில்லை கதறல் எழவில்லை சொல்லிப் புலம்ப ஒரு சொல்லும் கிடைக்கவில்லை வெளியே வந்தேன் கூடியிருந்தனர் இளைஞர் பலபேர் கண்களில் கோபம் கைகளில் நடு…

  22. சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத்தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிம் சிறூவர்க்குக் கை கொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு கண…

  23. யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? தமிழர் கூட்டத்தின் தறுதலைகள் விரோதமா? தவறிழைத்து விட்டது நோர்வேயின் ஆட்டமா? ஆலமரம் ஒன்று அடிசாய்ந்து போனது பாழும் சேதி காதில் பாதரசம் வார்த்தது. பல்லாயிரம் உயிர் தின்று பெருங்கூட்டு வென்றது. பணிந்த புலி உயிரறுப்பில் பாரதமும் நின்றது நந்திக் கடலோரம் மனித நேயம் நொந்தது. நடேசன் என்ற எங்கள் சாந்த நிலா வெந்தது. வல்லரசுச் சதிகள் எங்கள் வாழ்வள்ளித் தின்றது. வெள்ளரசுப் புதல்வரிடம் வெள்ளைக் கொடி தோற்றது. ஐ.நாவின் அரியணையில் நீதி செத்துப் போனத…

    • 7 replies
    • 1.8k views
  24. ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி சிங்களம் மகிழ்ந்து இருந்த போது... கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி எம்மை காக்க எவர் வருவார் என தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம் என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் .... நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு நானோ இறையாண்மை அடிமை நீயோ இன்னொரு அடிமை உனக்கு... என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம் சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை.. தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய் வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி எம்மை ஒரு பாதையில…

  25. 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…

    • 6 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.