கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காதலே நீ எனக்கு... காதலே எனக்கு நீ முதலாவது இறைவன்.. இரண்டாவது சுூரியன்... மூன்றாவது பால்... நான்காவது மூர்த்தி.. ஐந்தாவது முத்தி... ஆறாவது புலன்.. ஏழாவது தரிசனம்.. எட்டாவது கிழமை... ஒன்பதாவது நமஸ்காரம்.. பத்தாவது கிரகம்.. பதினோரவது அவதாரம்.. பதின்மூன்றாவது மாதம்.. பதினேழாவது பேறு.. இருபத்திஐந்தாhவது மணி.. அறுபத்தியோராம் நிமிடம்.. அறுபத்தியேழாம் கலை.. ஆயிரத்தோராங்காலத்துப்பயிர்..
-
- 13 replies
- 2.2k views
-
-
கடலேறி பொருள்கொண்டு கரையேற சென்றாய்-புரியாத கரியாரால் கைதாகி நின்றாய்.... உடலினுள் நோய்வந்து வாட்டையில் கூட துவளாது அவையேறி நோன்பது இருந்தாய்... பகை வந்து தமிழ் உயிரை பலியது கொள்ள பார்த்தே தான் நின்றதே பாரத தேசம்.. சதியோடு விளையாடி சதியாணை புரிந்தார் அரியணை காத்திட அவரைதான் தடுத்தார்... எதிரென்ன வரிகினும் எழுந்தேதான் நடந்தார் ஆவிதான் துறக்கினும் அவைகாக்க துணிந்தார்... இவரது ஆற்றலை இதயமா மறக்கும்...?? தமிழீழ தேசமே தலையிலே தூக்கும்... அண்ணனே உனக்காக அணியாக திரள்வோம் தூங்காது உன்னரு தூணாகி நிற்போம்... கலங்காதே அண்ணனே கண்ணீர் துடை உண்ணாமல் நீ வேண்டாம் உடல்தேறி நீ வேண்டும்....
-
- 13 replies
- 4.2k views
-
-
என் தங்கை இசைப்பிரியா கண்ணுக்கு எதிரிலேயே கற்பழித்துக் கொல்லப்பட்ட அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு ஒரு கையாலாகாத அண்ணனின் கண்ணீர் அஞ்சலி. என்ன அழகடி உன் தமிழும் தைரியமும்! சின்னஞ்சிறு இதழ் விரித்து சிங்கார உச்சரிப்பில் செய்திகள் வாசிப்பாயே! இப்போது நீயுமொரு செய்தியாகிப் போவாய் என்று கனவிலேனும் யோசித்தாயா? இப்போதுதான் பூத்த பனித்துளிகூட விலகாத ஒரு காலைரோஜாவின் அழகைக் கொண்டவளே! எப்படியடி சிக்கிக் கொண்டாய் திமிர் பிடித்த சிங்களனின் திணவெடுத்த கரங்களுக்குள்? ஆடையின்றி பிணமாக ஒரு சிங்கள காட்டுக்குள் நீ படுத்திருந்த காட்சி...! நீ துடிதுடிக்க கொல்லப்பட்ட போதும், உன் துணிமணிகள் அவிழ்க்கப்…
-
- 13 replies
- 2.2k views
-
-
பெண்ணே உனக்கே உனக்காய் அடங்கி அடங்கி ஆண்டாண்டு காலமாய் அடுப்பங்கரையே உன் உலகமென்று முடங்கிக் கிடந்தது போதும். புதுமைகள் அறிந்து பழமைகள் களைந்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் சாதனை படைக்க - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா நதியென்றும் மலரென்றும் நிலவென்றும் அமுதென்றும் போகம் தரும் காதற் பொருளாய் கவிஞர் உன்னைக் கண்டது போதும் சரித்திரம் படைக்கும் புயலாய் அறியாமை களையும் தீயாய் அகிலம் உனைக்காண அடங்காத வேகத்துடன் - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா பின் தூங்கி முன்னெழுந்து தலை கோதி அடி வருடி அருகிருந்து தூங்க வைத்து தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் துணைவியாய் மட்டும் நீ வாழ்ந்தது போதும் அடக்கு முறைகளை உடைத்து எறிந்து…
-
- 13 replies
- 9k views
-
-
இரசியப் புரட்சியை காளியின் கடைக்கண் பார்வை எனவும் யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால் புரட்சிக் கவிஞன் ஆனவன் ஒவ்வொரு கவிக்கும் இசையோடு தாளமும் கொடுத்து ஓசையோடு நயம் கொடுத்து எழுதி வைத்ததால் இசைக் கவிஞன் ஆனவன் பெண்ணடிமையை எதிர்த்ததால் பாஞ்சாலி சபதத்தில் மனுதர்ம சாஸ்த்திரத்தை திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால் புதுமைக் கவிஞன் ஆனவன் கோகுலத்துக் கண்ணனைத் தன் காம வேட்கை தீர்க்கும் காதலனாக்கிப் பாடியதால் தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன் இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால் paedophile கவிஞன் ஆனவன் தமிழர் ஆண்ட மண்ணை மறவர் வீரம் படைத்த நிலத்தை சிங்களத் தீவென்றழைது அறியாமையை வெளிப்படுத்தியதால் அறிவிலியான கவிஞன் ஆனவன். …
-
- 13 replies
- 1.8k views
-
-
-
நான் புல்லாங்குழலில் இருந்து கசியும் ஒரு மெல்லிய இசையாக உன்னை ரசிக்கிறேன் நீ புல்லாங்குழலுள் அடைபட்டு துளைகளூடு வேளியேறும் காற்றாக்கி என்னை வதைக்கிறாய் நான் பூவிலிருந்து ஒழுகும் பரவச வாசனையாக உன்னை நுகர்கிறேன் நீ பூக்களை தாங்கி நிற்கும் ஊமைக் காம்புகளாக்கி என்னை மறந்துபோகிறாய் நான் புத்தகங்களுக்கு நடுவே பொத்திவைத்த மயிலிறகாக உன்னை சேகரிக்கிறேன்.... நீ புத்தகங்களுக்கு உள்ளே கிழிந்துபோன பக்கங்களாக்கி என்னை புரட்டிப்போகிறாய்... நான் எல்லாவற்றிலும் உன்னை அழகாக ரசித்துக்கொள்கிறேன் நீ அனைத்திலும் என்னை அடிமையாக நினைத்துக்கொள்கிறாய்.. நான் ஓயாத உன் கவனிப்பின்மைகளுக்கு நடுவே கொடுக்க நிறைய அன்புடன் காத்திருக்கிறேன் நீ பேசாது உன் வனமங்களுடன் எடுக்க ஒரு புன்னகையைகூடதர நேர…
-
- 13 replies
- 1.2k views
-
-
தூங்கி கிடந்தீர்கள்.. புன்னகைத்தார்கள் அரசியல்வாதிகள்.. பின்னால் நின்று உங்கள் கன்னங்களை வருடிவிட்டார்கள்.. இன்னும் என்ன வேண்டும் என்று இனமானத்துக்கு விலை பேசினார்கள்.. முன்னால் உங்கள் கன்னங்களை தடவிவிட்டு பின்னால் உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்.. செம்மரிகளாய் இருப்பார்கள் என்றெண்ணி தமிழரை செருப்பாய் தேய்த்தார்கள்.. இருப்பை உணர்த்த ஒரு தீ பிறாக்காதோ என்று தமிழ்க்கரு சுமந்த மனங்கள் தவித்தன.. உள்ளே குமைந்து கொண்ட உணர்ச்சித்தீயை மோதி அணைத்துக்கொண்டே இருந்தது சாப அரசியல்... பழுத்த கிழம்கள் எல்லாம் பாழும் அரசியலில் இருந்து உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி உருவேற்றி வெளுத்ததெல்லாம் பாலென்று தொழுது நிற்கும் தொண்டர்களின் வேர்வைகளில் கொழுத்துப்போய் தம் குடும்பம் வளர்க்க..…
-
- 13 replies
- 913 views
-
-
சண்டை களத்தில் சமருக்குப் பயந்து சாவுகளைச் சாட்டி சமுத்திரங்கள் தாண்டி சந்துபொந்தெங்கும் சரணடைந்திட்ட சாமிகளே... "சமரு"க்கு மட்டும் சாலை வரும் சங்கதி கண்டு சந்தி சிரிக்குது..! சனங்களின் பயபக்தியில் சன்னதமாடும் சாமியார்கள் சட்டுப்புட்டென்று சதுரம் வளர்க்க சந்தர்ப்பம் வழங்கியது போதும்..! சரித்திரம் படைக்க சண்டைக்குப் போன தேசம் சரிந்து கிடக்குது சார்ந்திருக்குது சந்ததி ஒன்று..தப்பிப் பிழைக்க..! சாவில் தான் சந்தர்ப்பம் கண்டும் கரங்கொடுக்க மறந்தீர்..! சரிந்தது போதும் அவ்வினம்.. சரணடைந்தொரு அடிமை வாழ்வில் சண்டித்தனம் இயற்றியதும் போதும்..! சட்டுபுட்டென்று காரியம் ஆகட்டும் சில்லறைகள் நிறையும் உண்டியல்கள் ஊருக்குப் போகட்டும் சாலை வரும் சாமிகளே…
-
- 13 replies
- 1.1k views
-
-
கருத்துக்களம் -- கற்றுக்குட்டிகளின் நந்தவனம் ! ஓடியாடித் திரியலாம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடலாம் கும்மியடிச்சு பாடலாம் குலவையிட்டு மகிழலாம் கற்றுக்குட்டிகளின் நந்தவனம் -- இது கற்றோர்க்கு அய்யனின் குறளோவியம் ! வண்ணங்கள் வீசும் முகப்பு வந்தாரை வரவேற்கும் சிறப்பு நறுந்தேன் மலர்களாய் கலைஞர்கள் நாடிடும் வண்டுகளாய் வாசகர்கள் ! தூரமாய் வாழ்ந்திடும் மனிதர்கள் - முகம் தெரியா உறவுகளின் மரண்ங்கள் துடித்தே வந்திடும் பண்பாளர்கள் -- அவர் துயர்தனைப் பங்கிடும் பங்காளிகள் ! சக உறவுகளையும் நேசிக்கிறோம் செமையாய் சன்டையும் போடுகிறோம் சுவையாய் பிரியாணிகள் செய்திடுவோம் சுடுதண்ணி வைப்பதில் சொதப்பிடுவோம் ! இரவே காணாத யாழ் இணையம் -- இதில் எங்கே தோன்றும…
-
- 13 replies
- 1.3k views
-
-
உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி உன் உயிர் தந்து எமை கொன்றாய்....... கவிதை - இளங்கவி நீர் உமது உயிரைப் போக்க எங்கள் இதயத்தின் மூலையில் நம் குருதிகள் உறையும்...... நீர் உமது லட்சியம் அடைய நம் காதுகளில் உங்கள் இறுதி மூச்சொலி கேட்கும்..... கடலில் தொலைந்த உமது உடலையும்...... நிலத்திலே கருகிய உமது உடலையும்.... தேடித் தேடி நம் கண்கள் தூக்கத்தை தொலைக்கும்..... கணவனுக்கு தன் மனைவியின் அணைப்பு பிடிக்காது அவள் நெருப்பாய் சுடுவாள்...... மனைவிக்கு கணவனின் அணைப்பு விறைத்த உடலுக்கு விருந்துபோல் உணர்வாள்...... காதலனுக்கு இனிக்கும் காதலி அன்று மருந்தாய் கசப்பாள்.... காதலிக்கோ காதலனின் தொடுகை …
-
- 13 replies
- 1.7k views
-
-
வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்....... கவிதை - இளங்கவி....... முள்ளிவாய்க்கால்.... தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து.... மலைகள் பல சாய்ந்து..... இரத்தத்தில் நிலமெல்லாம் குளமாகி...... தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி..... இறுதிவரை வீரம் சொல்லிய மண்..... வேங்கைகை பல சாய்ந்த மண்.... வல்லரசின் வீரர்களைச் சேர்த்து.... வாங்கி வந்த குண்டுகளைப் போட்டு.... பறந்து வந்து எரிமலையை போட்டு.... பாய்ந்து வரும் பீரங்கியால் தாக்கி... எத்தனை படுகொலையை இலகுவாய் செய்துவிட்டு...... வெற்றியாம் வெற்றி....! அவர்கள் வீரராம் விரர்....! கோழையின் வெற்றி உன் கொல்லைப்புறம் மட்டும் தான்.... வந்தவர்கள் போய்விட்டால் உன் வ…
-
- 13 replies
- 2.5k views
-
-
யாழ் அது எனது வாழ்வு அதன் உறவுகள் எனது உடன் பிறப்புக்கள் யாழ் எனக்கு எல்லாம் தந்திருக்கிறது ஐயா அண்ணன் அக்கா தங்கை தம்பி மாமன் மச்சான்......... யாழ் எனக்கு தாய் அமைதி வழி நடந்து அடிவாங்கி ஆயுதம் தூக்கி நரித்தனமாய் அழிக்கப்பட்டு உருக்குலைந்து இனி என்ன செய்ய என்ற நிலையில் நான் சாய்ந்த மடி யாழ்........... யாழ் என் தங்கை போல அழகு செய்ய ஆசை நடந்த நல்லவை அனைத்திலும் நானும் பங்காளி ஆபத்து வந்தபோது காவலன் யாழ் என் பெண்டாட்டி போல அதன் அருமை எனக்கு தெரிவதில்லை எனது பலவீனங்களை நான் ஒரு போதும் வெளியில் சொல்வதில்லை யாழில்லையென்றால் நான்? சொல்லமாட்டேன்.............. அவள் வாழிய பல்லாண்டு....... தமிழிருக்கும் வரை அவள் இருப்பாள்.
-
- 13 replies
- 943 views
-
-
[size=5]தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்தென்ன தரணி முழுவதும் பரந்திருந்தென்ன தனக்கென நாடு தரணியில் தமிழனுக்கு இல்லையே பரணி பாடிப் பகை முடித்தென்ன போர்க்களம் கண்டு பகை முடித்தென்ன பொட்டல் வெளிகூட எமக்கென இல்லையே அடிமை விலங்கை அறுத்திட எண்ணி அத்தனை வீரரும் ஆகுதியாயினர் சுற்றம் துறந்து சுகங்கள் துறந்து சூளுரைதே சூழ்பகை வெல்ல தேசம் காக்க தம்மை ஈந்தனர் எத்தனை எத்தனை ஆயிரம் வேங்கைகள் நித்தமும் தம்மை நெக்குருக்கியே நேசத்துடன் தம் தேசம் காத்திட நெருப்பாற்றில் நீச்சல் போட்டனர் தற்க்கொடையாளராய் தம்மை ஈந்து தரணியில் தமக்கெனத் தடம் பதித்திட கடற் புலிகளாய் கரும்புலிகளாய் காரிருளிலும் காவியம் படைத்தனர்[/size] [size=5]எத்தனை ஆண்…
-
- 13 replies
- 1.3k views
-
-
நோர்வீஜிய கலாச்சார அமைப்பும் ஒஸ்லோ குல்த்தூர் ஸ்கூலும் என்னிடம் உலகம் வெப்பமயமாதல் பற்றி நாடகம் ஒன்று எழுதும்படி கோரினர். உலகம் வெப்பமயமாகி உருகி பிரளயம் ஏற்பட்டபின்னர் நிலத்தை தேடி படகுகளில் அலையும் மக்களை அடிப்படையாக வைத்து மறை முகமாக எங்கள் கதையையும் சொல்லும்வகையில் நாடகம் ஒன்று எழுதியிருக்கிறேன். நாடத்தில் தமிழ் மாணவர்களும் ஒஸ்லோ பலே பள்ளி நோர்வீஜிய மானவர்களும் ஒஸ்லோ நாட அமைப்புகளைச் சேர்ந்த நோர்வீஜியர்கள் ஆபிரிக்கர்களும் நடிக்கின்றனர். ஆங்கில நோர்வீஜிய கதைச் சுருக்கமும் வசனங்களும் உண்டு. இறுதி முடிவில் இயற்க்கை அன்னை இரக்கப் பட்டு வெள்ளத்தை உறைய வைக்கிறாள் எல்லோரும் சேர்ந்து பனியை பந்துகளாக்கி விழையாட்டு விழையாட்டாய் மலை முகடுகளுக்கும் துருவங்களுக்கும் எறிகிறார்…
-
- 13 replies
- 1.7k views
-
-
சாய்த்துச் செல்லப்பட்ட ஆடுகளில் பலியிடப்பட்டது போக மீதியானைவைகள் பட்டிக்கு திரும்புகின்றது இந்தச் சந்தையில் ஆடுகள் எப்போதும் பலியிடப்படுவதற்கே வளர்க்கப்படுகின்றது நரிகள் பரிகளானது போல் ;ஆடுகள் நாய்களாகி பலியில் இருந்து தப்பித்தும் கொள்கின்றது வெள்ளை நிற மேனி விரும்பி பன்றியான ஆடுகள் தெருவெங்கும் அசிங்கங்களை துப்பரவு செய்து மகிழ்கின்றது மான்களான ஆடுகள் வனவிலங்குச் சாலைகளில் துள்ளிக் குதிக்கின்றது பசுவான ஆடுகள் கோயில்களை சுற்றி பவ்வியமாக சாணிபோடுகின்றது நரிகளான ஆடுகள் ஊர்க்கோடிகளில் என்னும் ஊழையிடுகின்றது புலியான ஆடுகள் எல்லாம் மாண்டுபோனது எந்த வடிவமெடுத்தென்ன சிங்கத்துக்கு பசிவரும்போது இரையாவது வித…
-
- 13 replies
- 1.6k views
-
-
யார் சொன்னது வழிந்தோடும் என் இளமைக்கால நினைவுகளை மேய்ந்தபடிபோகும் வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப் புரிய முடியாதென்று...? யார் சொன்னது நான் தொலைத்துவிட்ட சிறுவன் நடந்துதிரிந்த வீதிகளில் எஞ்சியிருக்கும் புறாக்களினதும் புலுனிகளினதும் கவலைப் பாட்டினை விளங்கமுடியாதென்று....? யார் சொன்னது வெட்டைக் காணிகளின் சம்புப் புற்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குந்தியிருக்கும் தும்பிகளின் இறக்கைகளில் இருந்துதொடங்கும் என் பால்யகாலக் கவிதைகளைப் படிக்க முடியாதென்று...? அவைகளின் மொழிகள் உனக்கெப்படித் தெரியுமென்ற வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்... அவைகளின் மொழிகளில்தான் மீட்டிக்கொள்கிறேன் கிழித்து வீசப்பட்டதால் பொருளை இழந்துப…
-
- 13 replies
- 2.5k views
-
-
பனி படர்ந்த வயல்களும் பசுமாட்டுத் தொழுவமும் பனம்பழம் பொறுக்கிய பனங்கூடலும் பசிமறந்து பட்டாம் பூச்சியாய் திரிந்த பள்ளிக்கூடக் காலமும்_இன்று பகலின்றி இரவின்றி பாதகனின் கொடுஞ்சிறையில் பசி போக்க வழியின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவிக்கிறோம் அநாதைகளாய்... குண்டுமழை நடுவினிலும் குருதிமழை நடுவினிலும்_நின்று வெஞ்சமராடிய வேங்கைகளை வஞ்சகத்தால் கொன்றுவிட்டு நெஞ்சுரத்தோடு பேசுகிறான் வடக்கின் வசந்தமென்று..... பி.கு_ எனக்கு கவிதை என்ன என்பதே தெரியாது. இளங்கவி அண்ணாவின் கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அவருடன் கேட்கும் போது அவர்தான் கவிதை பற்றி சொல்லி எழுத ஊக்கம் தந்தார். எனது முதல் கவிதை இளங்கவி அண்ணாக்கே.
-
- 13 replies
- 1.9k views
-
-
மனம் என்னும் மாயப் பிசாசு மறைந்திருந்து கொல்லும் எண்ணங்கள் எதிரிகளாக கடிவாளமற்ற குதிரைகளில் காததூரம் கடக்கும் சொற்களற்ற நிழல்களிநூடே சொல்லாது விடும் வார்த்தைகள் கோர்த்து சுவற்ற சிற்பங்களாய் கனவுகள் ஆயிரம் வடிக்கும் பகுத்தறிய முடியா உண்மைக்கும் பொய்க்கும் இடையே சஞ்சலம் மட்டும் கொண்டு சக்திகள் எல்லாம் அற சகலதும் துறக்கத் தோன்றும் ஏன் தான் மனிதற்கு மட்டும் இறைவன் ஒருமனம் தந்தான் விருப்பமற்றதை விலக்கி வேண்டாதவற்றை கழற்றி வில்லங்கம் கொண்டதை விடுத்து நின்மதியாய் நான் வாழ நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு
-
- 13 replies
- 1k views
-
-
[size=5] கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்[/size] [size=5] [/size] [size=5]தாயின் வயிறு விட்டு தரணிக்கு வந்த தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள் தலைவன் அணி சேர்ந்து தன்னையே தந்து தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள் விண்ணிலும் வென்று மீண்டு விளையாட்டாய் சமராடி வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள் கடலிலும் காவியம் படைத்து கலங்களையும் வென்று கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்[/size] [size=5]தரைவழி வந்த பகைக்கு தலையிடி கொடுத்து தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள் கார்த்திகை மாதங்களில் வந்து கண்விழித்துக் காட்டி கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள். பாடல்களி…
-
- 13 replies
- 796 views
-
-
தலைப்பைப்பாத்திட்டு சண்டைக்கு றெடியா யாரும் வரவேண்டாம். கீழேயுள்ள கவிதையை மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அததனை இங்கு பதிவிடுகிறேன். இழு தேரை ! இறுகப்பிடி வடக்கயிற்றை…! சமீபத்தில் இங்கிலாந்து நடந்த ஒரு தேர் உற்சவத்தில் 20.000 பேர் கலந்துகொண்டதாக வந்த செய்திக்கு, அங்கு வாழும் கவிஞர் இளம்பறவை எழுதி அனுப்பியுள்ள கவிதை. இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை…பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தா…
-
- 13 replies
- 2.3k views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. லட்டு மாதிரி இருப்பது காலையில் வேலைக்குக் கிளம்புகையில் இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி ‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள். ‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று சொல்லிவிட்டு வரும் வழியில், பருத்த உடலா, மஞ்சள் சட்டையா என் கொஞ்சல் பேச்சா லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி, லட்டுகள் உருளும் சாலையில் ஓடி லட்டைக் குடித்து லட்டை உண்டு, லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்…
-
- 13 replies
- 1.6k views
-
-
ஒரு நொடி அவள் சிரித்துப் பேசினால் நூறு நொடி என் ஆயுள் நீள்கிறது. ஒரு துளி கண்ணீர் சிந்தினால் நூறுநாள் என் ஆயுள் குறைகிறது...
-
- 13 replies
- 1.6k views
-
-
-
- 13 replies
- 2.1k views
-
-
தலையின் மேல் தொங்கும் தூக்குக் கயிற்றின் கீழிருக்கும் துயரம் அவன்….. பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய தமிழின உணர்வின் ஊற்று அவன்…. சாவின் நிணம் அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க சாவுமின்றி வாழ்வுமின்றி சந்தேகத்தின் பெயரால் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்….. வசந்தம் துளிர்த்த வயதில் வாழும் ஆசைகளுடன் போனவன் மரணம் கொல் இருளில் மன உழைச்சலும் மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன் பாழும் உயிரும் பாரமாய் பழியுடன் நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில் இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை…… 19வருடச் சிலுவையின் பாரம் குருதியழுத்த நோயாளியாய் வாழ்வின் காலங்கள் நோயின் கோரங்களோடு கழிய காற்றணைத்த ஒளியில் கருகிக் கொண்டிருக்கிற திரிய…
-
- 13 replies
- 1.9k views
-