Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by எல்லாளன்,

    கவலை --------- ஆட்டின் மரணம் பற்றி அப்பாவின் துக்கம் கவிதையாய் வழிந்தது முன்னொரு நாள் தோட்டத்துச் செடிகளை மேய்ந்தது பற்றி அம்மாவுக்கு கோபம் தாயைப் பிரிந்த குட்டிகள் கதறிச் சோர்ந்து போயின கூரிய நகத்தை தீட்டிய சிங்கம் குட்டிகளைப்பார்த்து சிரித்துக் கொண்டது என்ன உலகம் இதுவென்று மரத்துக் காகம் முணுமுணுத்துக் கொண்டது

    • 3 replies
    • 1.7k views
  2. உனக்கென்ன சீதனமா...? /தங்க தாலியெடுத்து தமிழா நீ கட்டிக்கடா-உன் சம்பிர..தாயம் இது வென்றால் தமிழா நீ முடிச்சுக்கடா.... ஆயிரம் பவுணில தாலி அட மனைவிக்கு ஏனடா வேலி...? ஆடம்பரம் எல்லாம் போலி அதை உணரலென்னா ..நீயோ..காலி..காலி.. ஏழ்மை வாழ்விலை நிலையில்லடா- இதை புரிஞ்சிட்டா நீயோ..புனிதனடா.... திருமண வாழ்விற்கு சீதனமா நீயென்ன விலை போகும் கேவலமா...? முதுகெலும்பு இல்லாத ஆணினமா- நீ ஊா்வன பட்டியல் சோ்வனவா..? பிச்சை எடுக்கின்ற வாழ்வுனக்கா வாழ்க்கையில் உனக்கென்ன மதிப்பிருக்கா...? வியா்வையால் உழைத்து முன்னேறடா விலை போகும் நிலையை மாற்றிட..டா.. அடிமையாய் வாழ்வது முறையில்லடா..- மொத்த ஆணிற்கும் இதனால் வெட்கமடா...…

  3. காதல் என்றால் என்ன ...? காதலித்துப்பார் புரியும் ...! ^ காதலிப்பது எப்படி ...? காதலோடு பார் வரும் ...! ^ காதலோடு பார்ப்பது ...? அன்போடு பார் புரியும் ....! ^ அன்போடு பார்ப்பது....? பிரபஞ்சமாக பார் வரும் ....! ^ பிரபஞ்சம் என்றால் ....? பஞ்ச பூதங்களின் கூட்டு .....! ^ பிரபஞ்சதுக்கும் காதலுக்கும் ....? பஞ்சபூத கூட்டே மனிதன் ....! ^ மனிதன் என்றால் ....? மனிதம் நிறைத்த உள்ளம் ....! ^ மனிதம் என்றால் ....? பகுத்தறிவோடு வாழ்வது ....! ^ பகுத்தறிவு என்றால் ...? இத்தனை கேள்வியும் கேட்காமல் தானே கண்டறியும் அறிவு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை

  4. [size=5]பனியில் மொழி எழுதி - கவிஞர் சோலைக்கிளி[/size] சோலைக்கிளி இலங்கையின் கிழக்கும் மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது இயற்பெயர் உதுமாலெவ்வை முகம்மது அதீக் ஆகும். இவர் 1980களிலே எழுதத் தொடங்கியவர். ஈழத்து கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம் போன்றவை இவரின் கவிதை தொகுப்புகளில் சிலவாகும். அந்த வகையில் இம்மாத சுவடுகள் பதியுமொரு பாதையில் கவிஞர் சோலைக்கிளியோடு பயணிப்போம். இதைத்தான் இவன் இவ்வளவு நாட்களாகப் படித்துக் கொண்டிருந்தான் மேசைப் புத்தகத்…

  5. இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.

  6. Started by கோமகன்,

    என்வலி ஒரு பேப்பருக்காக கோமகன் சொல்லிச் சொல்லி சொல்லால் அடித்தாயே அடியே சொல்லால் அடித்தாயே பொட்டுப் பொட்டாய் உடைந்ததுவே என் இதயம் சொட்டுச் சொட்டாய் வடிந்ததே வலியாய் ரத்தம் நீயும் நானும் கூடிய வாழ்க்கை ஒருவரை ஒருவர் உயர்த்திய வாழ்க்கை தெளிந்த ஓடைபோல் நகர்ந்த எம் வாழ்வில் கல்லை எறிந்தது யார் சொல் விழுந்த கல் தந்தது அலையை மட்டுமா எம் வாழ்வின் வேரையே ஆட்டியதை நீ அறியாயோ அடி கிளியே நீ அறியாயோ என் மூச்சிருக்கும் வரை உன் பேச்சு இருக்கும் என் இதயத்தின் ஓரத்தில் உன் பேச்சு இருக்கும் என்னதான் நீ என்னை சொல்லால் சுட்டாலும் என் இதயத்து சிம்மாசனத்தில் நீதானே நித்திய கல்யாணியடி நித்தம் நான் காணும் உன் முகம் வாடவும் விடு…

    • 19 replies
    • 1.8k views
  7. சிங்களமே உனக்கு சொல்கிறேன் நீ எங்கள் சொந்தமில்லை வன்னி முற்றமும் உன் சொந்தமில்லை விட்டு போய்விடு உன் வீட்டுக்கு வைப்போம் உன் தலைகனத்திற்கு வேட்டு குடும்ப அரசியலுக்கு குத்து விளக்கு ஏற்றாதே சிங்களமே பின்பு உன் குடும்பம் அகதியாகிவிடும் ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடும் பொன்சேக பொடியாகிவிடுவான் கோத்தபாய உன் வீரம் நிலத்தடி சுரங்கத்திலா பொன்சேகா வீட்டு கோடிபுரத்திலா மகிந்தவின் வாடகை வீட்டிலா உன் வீரம் காட்ட வாங்கய்யா பிரபு வன்னிக்கு தமிழச்சி உனக்கு சீதனமா .. நாயே எண்ணாதே பேய்த்தனமய்..வெறீ நாயே தருகிறோம் உனக்கு காலக்கெடு எண்ணி எண்ணி சாவையெடு

    • 0 replies
    • 940 views
  8. அடம்பனெல்லாம் திரண்டு நின்றால் பலமும் கிடைக்குமே அடிமையெல்லாம் அணி திரண்டால் விலங்கும் ஒடியுமே ஏழையெல்லாம் எழுச்சி கொண்டால் ஏற்றம் விழையுமே நல்லாரெல்லாம் நன்றாய்ச் சேர்ந்தால் நன்மை நடக்குமே வேங்கையெல்லாம் வீறு கொண்டால் விடிவு பிறக்குமே தமிழரெல்லாம் ஒன்று பட்டால் ஈழம் மலருமே http://gkanthan.wordpress.com/index/onrupattaal/

  9. இலைகளை உதிர்த்து நிர்வாணாமாய் நின்று கொண்டிருக்கும் மரங்கள் துளிர்க்க ஆரம்பித்து விட்டன ஒன்றும் செய்யாமல் அமைதியாக காத்திருந்த புல் தானாக முளைக்க தொடங்கிவிட்டது நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த மெக்சிகோ ஆண் ஹம்மிங் பறவையொன்று இணைதேடி ரீங்கார ஒலியெழுப்பிக் கொண்டிருக்கிறது பனிக்காலம் முழுதும் தூங்கிக் கழித்த பாண்டா குட்டியொன்று தன் முதல் மூங்கில் குருத்தை ருசிக்க தாயாராகி விட்டது இரையை பிடிக்க முடியாதவாறு ஊர்ந்து செல்லும் ஒசையை வெளிப்படுத்தும் பைன்மர சருகுகளை பாம்புகள் வெறுத்துக் கொண்டிருக்கின்றன 'களவு' எனும் உயிர்ப்பித்தலுக்கான முதல் பாடத்தை ஒநாய் தன் குட்டிகளுக்கு கற்பித்துவிட்டிருந்தது கலவி முடிந்தும் மூர்க்கம் குறையாத காடா மான் க…

  10. Started by ரதி,

    நாடிருந்தும் நாடோடியாய் நாளேல்லாம் நாடெல்லாம் ஓடுகின்றேன் ஓடுவதற்கு உடல்வலு தேவையில்லை மனவலு இருந்தால் மட்டும் போதும் ஓடுவதற்கு கால் எனக்கு தேவையில்லை போதிய உள வரம் வேண்டும் ஓடுவதால் மீண்டும் மீண்டும் உர‌ம் பெறுகின்றேன் நாம் ஓடாமல் இருப்பதற்கு ஓர் சுதந்திர‌ நிலம் அமைக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...எழுதியவர் ஒரு முன்னால் காலம் சென்ற புலிகளின் தளபதி...யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  11. Started by Manivasahan,

    நல்ல கற்பனை. பலர் வெளிச்சத்தில் நிற்பதற்காய் சிலர் இருட்டில் நிற்கவேண்டியது அவசியமாய் இருக்கிறதே. மணிவாசகன்

    • 2 replies
    • 1.1k views
  12. வந்துவிடு வரைவில் ! தூக்கம் என் கண்களுக்கு தூரமாகிறது..... இரவுகளும் நீளமாகின்றன.. நிமிடங்கள் யுகங்கள் ஆகின்றன... தனிமை தரும் தாளாத துயரத்தை அணு அணுவாக அனுபவிக்குது உள்ளம் அழுதபடியே... வயிற்றில் பசியில்லை உணவில் பிடிப்பில்லை மனதுக்கு நிம்மதியில்லை எப்போது மீண்டும் உன்னுடன் கதைப்பேன்?... அதுவும் தெரியவில்லை... வெளியே சிரித்து உள்ளுக்குள் ஓயாது அழுகிறேன் செழிப்பிழந்த வதனத்துடன். நெஞ்சமே நீதானடி.....அதற்காகவேனும் வந்து விடு விரைவில்..

    • 17 replies
    • 2.2k views
  13. விழியோரங்கள் அரும்பிய நீர் துடைத்து கயிற்று நிரைகளுக்குள் அடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் நடுவிருந்து கண்கள் அவனையே நோக்குகின்றன..! பின்புலத்தில் சீறிப் பாயும் புலியா யாழ் இந்துவின் உண்மைப் புதல்வனா தாய் தமிழீழத்தின் செல்லப் பிள்ளையா மக்கள் விடுதலையின் ஒற்றைக் குரலா... கேள்விகள் அவன் கோலம் கண்டெழுகின்றன..! சின்னஞ்சிறுசுகளின் மாமா.. எங்கள் அண்ணா உங்கள் தம்பி பலரின் பிள்ளை சிலரின் எதிரி சிந்தனை ஒன்றை வைத்து உண்ணா நோன்பிருந்து மக்களை துயில் எழுப்பிக் கொண்டிருந்தான்..!! கனவுகள் அவன் தனக்காக கண்டதில்லை..! சனத்துக்காக தன் சாவிலும் கூட மேலிருந்து விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்... தேகத்தையே தேசத்தில் பிள்ளைகள் படிக்க கொடுத்தவன…

  14. நீ திருந்தவே மாட்டாயா.....??? ஏய் சமுதாயமே பெண்ணுக்கு மட்டும் இங்கு பெரும் தடைகள் ஏன்....??? காலச்சாரம் என்றிங்கு கால் கட்டு ஏன்...??? இரக்கம் இன்றி அவள் மீது அடக்குமுறை ஏன்.....??? மண் பார்த்து மங்கையவள் நடக்கவேனும் என்கிறியே.... பண்பாடு என்றுயதை வந்து வேறு முழங்கிறியே.... காளையோடு பெண்ணவளை கதைக்கலாகா என்கிறியே.... அது மீறி பேசி வந்தால் அபச்சாரம் என்கிறியே... கட்டியவன் தனை இழந்தால் விதவை என்று உரை(த)க்கிறியே... இவள் முன்னாடி வந்தாளே முழிவியழம் என்கிறியே.... சந்தி சபைகளிலே பின்னாடி வைக்கிறியே... இன்நாளு வரைக்கும் இதை இழிவாக செய்யிறியே...…

  15. குடு முஸ்தபாவின் குடு அடி...(சிறையிருந்து [i] சிறகடித்து பறந்த என்னை சிறகொடித்து சிறயடைத்தீர்..... இந்தோ சீறியே வருகின்றேன் சிறு காலம் பொறுத்திடுவீர்... உறுமியே உலவிடுவேன் ஊடகத்தில் ஏறிடுவேன்.... வன்னி புலி புலியென்று வசையதை பொழிந்திடுவேன்.... எண்ணில்ல இடர்களை எண்ணி உமக்கு தந்திடுவேன்.... அறிவாழி என்னையா நீர் அடைத்து வைத்தீர்....??? என்ன யான் செய்தேன் என்று என்னை நீர் இழித்தீர்.... வங்கியில் ஒரு கொள்ளை சின்னதாய் ஒரு சின்ன கொலை.... கள்ள மட்டையில் காசு கறந்தேன் தாலி கொடிகள் தனை அறுத்தேன்.... கன்னியவளை கற்பழித்தேன் இதை விட வேறென் செய்தேன் இது தப்பா..…

  16. இன்று ஒரு சகோதரி எழுதியதை வாசித்தேன். நான் வாசித்ததை இங்கு பதிவு செய்கிறேன். இந்த காலங்களில் நானும் பிறந்த மண்ணில் இருந்தேன். மொறிஸ் குறிப்பாக வடமராச்சியில் அந்நிய படைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இவருடன் ஜேம்ஸ், ஜூட், ரமேஷ் மாஸ்டர், ஜீவா, ஜெயம், ஐயன் இன்னும் பலர் களமாடினார்கள். அனைத்து மாவீரர் தெய்வங்களுக்கும் எனது வீர வணக்கம் - அகஸ்தியன். சுமை தாளாத சோகங்கள்! வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண…

    • 1 reply
    • 1.2k views
  17. Started by இனியவள்,

    உனது காதலை மட்டுமல்ல உன்னையும் எனது விழிகளில் சுமர்ந்து வந்தேன் ஆனல் நீயோ உனது குடும்ப சுமைகளை என் மீது சுமத்திவிட்டு என்னிடமிருந்து விலகி சென்றாய் அன்புடன் இனியவள்

    • 33 replies
    • 4.6k views
  18. Started by putthan,

    என் மதத்தை கேலி செய்தேன் மாற்று மதத்தான் அரவனைத்தான் என் இனத்தை குறைகூறினேன் மாற்று இனத்தவன் புகழ்ந்தான் எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன் மாற்றான் முற்போக்குவாதி என்றான் எம் போராளிகளை காட்டி கொடுத்தேன் என்னை புலனாய்வாளன் என்றான் எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன் என்னை அமைச்சராக்கினான் எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன் அகிம்சாவாதி என்றான் என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன் என்னை சனநாயகவாதி என்றான் என் இனத்தின் அவலங்களை கண்மூடி பாராமல் காதை பொத்தி கேட்காமல் வாயை மூடி பேசாமல் இருந்தேன் காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்

  19. திரைகடல் ஓடி திரவியம் தேட மூழ்கிய இடத்தில் நங்கூரம் இட்டு நிற்க்கும் கப்பல்-நாம் தலைமேல் பிரச்சனையும்-பொறுப்பும் சகோதரர்களில் கனவும் சுமந்து வந்தோம்- நாம் மூழ்கியதில் மூச்சுத்தினர வத்தது புலம்பெயர் நாடுமூச்செடுக்க முட்யாது தினறியதை அன்பு உடன்பிறப்புக்கு சொல்லவில்லை-நாம் உயிர் கொடுத்து உடன் பிறப்பை காப்பாற வந்தோம் உயிரின் பிரிவும் உறவின் பிறரிவு சமம் என்று அறியா- நாம் திரைகடல் ஓடி தமிழ்முகம் தேடி ஆறுதல் அடைந்தோம் கடைசியில் -நாம் http://www.tamil.2.ag/

  20. Started by வானவில்,

    ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். 1. ஹைக்கூவின் தோற்றம் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை) இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அச…

    • 10 replies
    • 8.5k views
  21. உலா - வ.ஐ.ச.ஜெயபாலன் நீலப் பாவாடையில் குங்குமமாய் எழுஞாயிறு கசிய பூத்தது விடலை வானம். வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள். எனினும் அன்பே உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான் இந்த வசந்த நாளை அழகாக்கியது, வண்ணத்துப் பூச்சிகளாய் காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக. காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான் உலாவை ஆரம்பித்தோம். காடு வருக என கதவுகளாய்த் திறந்தது. சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட கூறைச்சேலையாய் வண்டாடும் மரங்களின்கீழ் உதிரிப்பூ கம்பளங்கள். என் அன்பே முகமறைப்பில் இருளில் இணையத்தில் கண்காணா தொலைவில்தான் இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க ம…

    • 18 replies
    • 2.1k views
  22. Started by கிருபன்,

    படித்துச் சுவைத்த கவிதைத் தொடர்.. பாகம்-1 கதிரவன் கண்மூடி நித்திரையில் மூழ்கி கணநேரம் கழித்திருக்க... வையகம் தன்மேல் கருப்பு போர்வை போர்த்திக்கொண்டது... வானம் சாபம் பெற்ற இந்திரனாய் சாமந்திப் பூ தோட்டமதாய் தேகமெங்கும் நட்சத்திரக் கண்திறந்து மின்மினிப் பூச்சியாய் மினிங்கியது... தவழ்ந்து வந்த தென்றலின் தாலாட்டில் நறுமணம் கலந்தது மெல்ல மொட்டவிழந்த முல்லை... பகலெல்லாம் சூரிய ஆண்தனை காண நாணம் பூண்டு மறைந்திருந்த நிலவுப் பெண்ணாள் மெல்ல முகமலர்ந்தாள் விண் தாமரையாய்... தோகையவள் எழில் கூட்ட தோழியராய் தேகம் தொட்டே தொடர்ந்திட்டாள் மேகப்பெண்ணாள். விண்ணகத்து பெண்ணிவளின் அழகெல்லாம் நாணிநிற்க மண்ணகத்தில் பெண்ணொருத்தி…

  23. யாழ்கள உறவுகளுக்காக மீண்டும் காதல் மொழி இசைத்தொகுப்பில் இருந்து ஓர் புதிய பாடல் உங்களுக்காக... http://vaseeharan.blogspot.com/ இங்கே அழுத்துங்கள் பாடலைக் கேட்கலாம் பல்லவி பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு காலையிலும் தினம் மாலையிலும் நீ காதல் மொழியைப் பேசு (2) மலர்களின் மேலே மனம் மோதும் மௌனம் கூட கவிபாடும் பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு இதயக் காதல் மொழியில் கொஞ்சம் கொஞ்சும் இசை கலந்தால் நெஞ்சம் குளிருமடி உலகம் இனிக்குமடி சரணம் 1 காதல் மொழியைப் பேசும் இதயம் கோடி முறை பிறக்கும் உள்ளத்தின் கூட்டில் உலகத்தை சேர்த்து புத்தம் புது உயிர் வளர்க்கும்(2) எழுத்தின் வடிவம் உணரும் முன்பே எழுந்தது காதல் மொழி …

    • 22 replies
    • 2.8k views
  24. காலங்கள் மாறுகின்றன காட்சிகள் மாறுகின்றன ஆட்சிகள் மாறுகின்றன ஆனாலும் மாறாத காயம் ஒன்று தான் அது முள்ளிவாய்க்கால் சோகம் மட்டும் தான் கோரத்தின் காட்சியும் அதுவே கொடுங்கோலின் ஆட்சியும் அதுவே அதர்மத்தின் சாட்சியும் அதுவே, அய்யோ, பரிதாபத்தின் காட்சியும் அதுவே பட்ட துயருக்கு நீதி வேண்டும் பலி கொடுத்த உயிருக்கு நியாயம் வேண்டும் இழந்த இழப்புகளுக்கு நீதி வேண்டும் நாம் தலை நிமிர்ந்து வாழ வழி வேண்டும் நம் செல்வங்கள் வாழ வேண்டும் நம்பிக்கையுடனே ஒன்று சேர வேண்டும் நம் வாழ்வில் விடிவொன்று உருவாக வேண்டும் நம் தமிழீழ கனவும் மலர வேண்டும் மீரா குகன்

    • 0 replies
    • 832 views
  25. வானுயரப் போக வாய் பிளந்து குதிக்க... வெடிக்கும் அந்தக் கந்தகத் துகள்கள் காற்றில் கலக்க.. மாசும் அங்கு தொன் கணக்கில் ஏற.. சுவாசக் காற்றும் உள்ளிளுக்கும் நச்சுப் புகையை.. மகிழ்வுற வாங்கி.. நாங்களோ.. பட்டாசு வெடித்து பண்டிகை செய்வோம். சொந்த இனத்தவன் சாவில் மாற்றான் காட்டிய வேதக் கணக்கில் சுய புத்தியற்று குதூகலித்தபடியே..! இந்த இடைவெளியில் பொருளீட்டும் முதலைகள் வாயில்.. "வண்டி" வலிக்க உண்டிக்கு ஏங்கி இருக்கும் மழலைகள் கூட மனித இரைகளாக..! வெடிக்கும் அந்தப் பட்டாசு ஓசைக்குள்.. விடுதலைக்காய் வாழ்வுக்காய் கதறும் இந்த குரல்கள் கேட்காது.. நாளை நமக்கும் இதுபோல் ஓர் நிலை வந்தால்.. நாலு பேரில் ஒருவராய் ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.