Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்துப் பாப்பா பாடல் – தமிழரின் அவலம் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படை வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தோடு விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தோடு சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகை கொள்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ…

  2. முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள் முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள் முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது காலங்காலமாய் தமிழனை எதிர்த்த கண்ணாடிக்கர னொருவன் கலந்தே இருந்த இன்னொருவன் கடிதென விலகி கரைமாறி நின்றவன். காட்டி கொடுத்தே கலைத்தமிழை கயவர் அழிக்க கருத்தோடு உதவினர் கருக் குழந்தை முதல் கட்டிளம் காளையர் கன்னியர் கனவான்கள் வயோதிபர் பெண்கள் வயது வேறுபாடின்றி வகை தொகையுமின்றி வளைத்து வைத்து கொண் றோழித்தனர் வழக்க மில்லா குண்டுகள் கொண்டே வஞ்சக மான உதவிகள் கொண்டே போர் விதிமுறை எல்லாம் போக்கியே வீணர் வென்றனர் கொண்டாடினர் போதி மரத்தவன் நாமம் புகன்றே போதித்த தருமத்தை புத்தியில் கொள்ளாதோர் இன மானம் உள்ளோ…

  3. ஈழத்து அன்னை மடியில் அழகழாய் பூத்த பூக்கள் தேசத்து மண்ணைக் காக்க செங்குருதி குளித்த பூக்கள் கார்த்திகைப் பூக்களே -எங்கள் மா வீரர்களே! கல்லறையில் உறங்கும் எங்கள் கார்த்திகைத் தீபங்களே! கையில் பூக்கள் கொண்டு வந்து கல்லறையில் பணிகின்றோம் கண்ணீரில் கவிவடித்து காவியங்கள் பாடுகின்றோம் கல்லறையில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுகின்றோம் கரிகாலன் பிள்ளைகளே கண்திறந்து பாருங்களேன்! உங்களுக்கு மட்டும் தானா இப்படியோர் மனத்துணிவு மரணத்தைக் கூட இங்கு மண்டியிட்டு அழைப்பதற்கு! உம்மைப் பெற்ற அன்னை முகமோ இறுதிவரை பார்க்கவும் இல்லை உம்மைப் பெற்ற அன்னை மடியில் இறுதி மூச்சும் போனதில்லை அண்ணன் வழி சென்றவரே அடிமை விலங்கை அறுத்தவரே…

    • 3 replies
    • 1.3k views
  4. ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் * வெடிகுண்டு சப்தம் தாலாட்டுகிறது ஈழக் குழந்தைகளை...! * குடித்த பின் குடும்பச் செலவானது குவளைகள்...! * மைல்கள் சாமியானது சந்தோஷம் பூசாரி! * காந்தி ஜெயந்தி கனவு கலைந்தது `குடி' மகனுக்கு! * மரண அறிவித்தல் தவளையின் சப்தம் * சாலையோர மரம் சாமியானதும் சரியாமல் நின்றது!

    • 5 replies
    • 1.3k views
  5. பீரங்கிகளின் பாதத்தில் மண் பானைகளாய் மண்டையோடுகள் உடைய பட்டினி கிடக்கிறது பொங்கல். பாலசிங்கத்தின் கல்லறையில் கசியும் ஊதுபத்தி புகை அனைத்து தமிழர்களின் ஆக்ஸிஜன் காற்று. தாய்களின் மார்புகளில் பொங்கிய பால் பொங்கலை குடிப்பதற்கு எப்படி எழுப்புவது செத்துப்போன குழந்தைகளை? கடல் தாண்டி போய் வந்த பறவையே எப்படி இருக்கிறார்கள் எம் தமிழர்கள்? ஆண்டுக்கொரு முறை தமிழர் திருநாள் எப்போது பிறப்பார் தமிழர்? இந்திய விடுதலைக்குப் பின் பிறந்தவன் தமிழர் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன். 47 இந்தியாவுக்கு 2007 ஈழத்துக்காய் விடியட்டும்! நன்றி ஆனந்தவிகடன்

  6. ஈழமும் சுகாதாரமும் உடல் நலம் சுகாதாரமாக இருந்தால் மன பலம் வலுவாக இருக்கும் நோயானது ஒரு சில நொடியில் பல வடிவத்தில் எம்மை ஆண்டு எம் வாழ்க்கைப் பயணத்தை குறிகிய கட்டத்தில் நிறுத்திவிடும் சிங்களவன் சில தசாப்த காலங்களாக பாரம்பரிய தமிழினத்தை பரிதவிக்க வைக்கின்றான் இரசாயனக் குண்டுகளால் முத்தான ஈழத்தின் இயற்கைக் காட்சிகளை நாசமாக்கி அசுத்தமான வாயுக்களை எம்மினம் சுவாசித்து பலவகை சுவாச நோய்களால் பரிதவிக்கின்றனர் இயற்கையான காற்றோட்டத்தில் சுதந்திரமாக சுய தொழிலில் வாழ்ந்த தமிழினம் செயற்கையான காற்றோட்டத்தில் மூச்சுத்திணறி செய்வதறியாது தவிக்கின்றது நோய்களால் திலீபன் நடமாடும் மருத்துவமனை- தன் சேவையைச் சிறப்பாகச் செய்தாலும் போதிய தமிழ் மருத்து…

    • 11 replies
    • 1.8k views
  7. ஈழம் எங்கள் தாயகம் என்றும் வாழும் ஆலயம் வாழும் காலம் யாவும் எங்கள் உயிரைத் தந்தும் காத்திடுவோம் வீரர்கள் என்றும் சாவதில்லை சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை தோல்வியைக் கண்டு துவள்வதுமில்லை தமிழ் இனம் வெற்றியின் படியில் ஏறுகின்றோம் எங்களின் தியாக வித்துக்கள் நிட்சயம் ஒரு நாள் பயிராகும் எங்களின் கனவுகள் நனவாகும் ஈழத்தில் எங்கள் கொடி பறக்கும் தடைகள் கோடி என்றாலும் சிங்கள படைகள் தேடி வந்தாலும் விடைகள் எங்கள் தோள்களிலுண்டு விடியும் ஒரு நாள் வாருங்கள் நாளை மலரும் ஈழத்திலே சுதந்திர மலர்கள் மொட்டவிழும் இன்றைய எங்கள் போராட்டம் முடிவாய் இதற்கொரு பதில் சொல்லும். ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்..அதை நாம் தினம் பாப்போம்

  8. ஈழம் எங்கள் தேசம் தமிழ் ஈழம் எங்கள் தேசம் அதை அந்நியன் செய்கிறான் நாசம் பச்சைப் பசேலேன்ற வயற்காடு இன்று பச்சிளம் குழந்தைக்கும் சுடுகாடு வந்தாரை விருந்தோம்பும் புகலிடம் இன்று அந்நியப் படைகளின் உறைவிடம் எல்லாள மன்னனின் கோட்டை இன்று குள்ள நரிகளின் சேட்டை பாட்டன் பூட்டனின் களியாட்டம் இன்று சிங்களப் பேய்களின் வெறியாட்டம் இனியும் பொறுக்குமா எம்மினம் இது கங்கை கொண்ட தமிழினம் ஆற்றில் இரும்பு போல் தாழ மாட்டோம் காற்றில் சருகு போல் வீழ மாட்டோம் ஆற்றில் சருகு போல் மிதந்து நிற்போம் காற்றில் இரும்பு போல் நிலைத்து நிற்போம் நட்போடு வந்தவனை வாழ வைப்போம் நஞ்சோடு வந்தவனை வாளால் முடிப்போம் கையில் எடுப்போம் நெருப்…

  9. ஈழம் என்னும் இன்பபுரி சாம்பலுக்குள் பூத்து வந்த சந்தனத்து மேனி - இவள் சங்கம் பல நாட்டி வைக்கும் சரித்திரத்து இராணி! வேங்கையரின் ஆகுதியில் விளங்கும் இளவேணி - தமிழ் வேதனைகள் தீர்த்து வைக்க விளைந்த இவள் ஞானி! தேங்கு வளம் சேர்த்து வைத்த தெள்ளமுதத் தேனீ - இவள் கஞ்சமலர் கொஞ்ச வரும் கதிரவனின் காணி! இன்னலுறும் இனங்களுக்கு இன்பந்தரும் கேணி - இவள் திண்மையுறும் விடுதலைக்கு வன்மை தரும் ஏணி! ஓங்கு புகழ் தாங்கி நிற்கும் தமிழினத்து ஆணி - இவள் ஒய்யாரப் பாட்டெழுதும் பாவலர்க்கு வாணி! முத்தெடுக்கும் கடல் நடுவே மிளிர்வது இவள் பாணி முத்தமிழும் செப்பிடவே முழக்கம் தரும் தீனி! மாங்கிளியும், மரகதமும் மண்டியிட்ட பூமி - …

  10. ஈழம் என்பது தமிழ் மக்களின் கனவாம் சிங்களம் சொல்கிறது ஆமாம் ஈழம் என்பது எங்கள் கனவுதான் உங்களால் எங்கள் உறக்கத்தைத்தான் கலைக்க முடியும் எங்களை உறங்க வைக்காத ஈழக்கனவை யாராலும் கலைக்க முடியாது -யாழ்_அகத்தியன்

  11. ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி மே13' நிகழ இருப்பது ஆண்டவன் கட்டளை.. ஈழத்து வேதனையின் ஏக்க விளைச்சல். கோபப்படாமல் ஐயா குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வெளியில் நீங்கள் வேசமிட்டு நாடகம் ஆடினாலும் உங்கள் கள்ளமான உள்ளுணர்வில் இப்படித்தான் நடக்கும் என்று கருக்கட்டி ஊற்றெடுத்த உண்மை உத்தியோக பூர்வமாக பிரசவமாகப்போகும் பொழுது. காலதேவன் உங்களுக்கு கட்டை இறுக்கப்போகும் கனிவான கடைசி நாள். சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள் இப்போதே நீங்கள் தத்தளிப்பது தெரிகிறது இருந்தும் இது சிறிய ஆரம்பம் மட்டுமே. தொடர இருப்பது பெருங்கதை . நவீன நரசிம்மர் உங்களுக்கு இனி நிரந்தர ஆட்சி விடுமுறை ஆனாலும் நீங்கள் தொடர்ந்து அரச விர…

  12. கும்மியடி பெண்னே கும்மியடி தமிழ் ஈழம் மலர்ந்தது எனக்கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வீரத்தலைவன் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி மாவீரர் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி புலிக்கொடியைப் போற்றிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழனின் அடிமை விலங்கு உடைந்தது எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழுக்கு என ஒருநாடு உண்டு எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி இந்தக்கவிஞன் கனவு நினைவாகும் எனக் கும்மியடி

  13. அ. எலும்பும் தோலுமாக தூரத்தில் முட்கம்பி ஒனறில் அம்மா கொழுவப்பட்டிருந்தாள். இருவரது முகங்களையும் முட்கமபி கிழித்துத்கொண்டிருக்கிறது. மெலிந்த கைகள் முட்கம்பிகளுக்குள புகுந்து கலந்துகொண்டிருக்க நடுவில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கிறது. அம்மா புன்னகையை இழந்துபோயிருக்கிறாள். தாழ்ந்து மறைந்துவிட்ட கண்களுக்குள் படிந்த புழுதியை கண்ணீர் கரைக்கிறது. காலத்தின் பெருந்துயர் நிரம்பி பிள்ளைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள் பலர் என் அம்மாவின் பின்னால் வரிசையில் நிற்கின்றனர். எல்லா அழுகைகளும் எல்லா விசாரிப்புக்களும் பரிமாறல்களின் துயரங்களும் ஓலைக்கொட்டிலினுள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அம்மாவி…

  14. உங்களின் நினைவுகள்…..! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்.....! நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்.....! நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்....! காற்றில் நுளைந்து கடலில் கரைந்து – என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்.....! போற்றிட உம் பெருமைகள் பேசிடப் பேராயிரம் கவிதைகள் தோற்றன ஈற்…

    • 2 replies
    • 623 views
  15. உங்களின் நினைவுகள்.....! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்..... நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்..... நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்.... காற்றில் நுளைந்து கடலில் கரைந்து - என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்...…

    • 2 replies
    • 899 views
  16. இயல்பினை கடந்த திடத்துடன் இயற்கையை வென்றவர்கள் எப்பொழுதும் இறப்பதில்லை! அறத்தினை மீறிய உலகிற்கு மறமென்றால் இதுவெனக் காட்டியோர் தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள் புலத்தினில் புதிதாய் கதைகள் உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும் எம் பரம்பரை உம்மைத் தொடரும் உம் இலட்சியம் அடையும் வரை! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்!

    • 3 replies
    • 1.2k views
  17. இயல்பினைக் கடந்த திடத்துடன், இயற்கையை வென்றவர்கள்...! எப்பொழுதும் இறப்பதில்லை!!! அறத்தினை மீறிய உலகிற்கு, வீரமறவர் எனத் தமைக் காட்டியோர்...! தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்!!! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள், புலத்தினில் புதிதாய் கதைகள்...! உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்??? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும், எம் பரம்பரை உம்மைத் தொடரும்...! உம் இலட்சியம்............. அடையும் வரை!!! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்! on Saturday, 27 November 2010 at 02:57 [ 2010 இல் எழுதியது ]

  18. உங்களை நீங்கள் மன்னிப்பீர்களா?...... உலக நாடுகளே............... உறுதியாகச் சொல்கின்றோம் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஒதுங்கி எதிரி போல் நிற்கும் தமிழர்களே........ ஒட்டுக்குழுக்களே............... ஒருபோதும் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஐநாவே.................. ஐயம் இன்றிச் சொல்கின்றோம் உன்னை நாங்கள் என்றும் மன்னிக்க மாட்டோம் பாரதமே..............மகாத்மாவா.?!!!!!!!!!!! யாரவர்...? என்பது போல் நடக்கின்றாயே பார்த்திரு உன்னை இந்த பாருள்ள வரை (பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு?????) மன்னிக்க மாட்டோம் கடவுளரே...........கருணையின்றி கல்லாய் நீரிருந்தால் உங்களையும் தான் நாங்கள் மன்னிக்க மாட்டோம் முதல் உங்களை நீங்கள…

  19. எங்கள் கனவு சுதந்திர வாழ்வு உங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கான கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர் ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர் இருந்தும் கனவின் தினவை கண்களில் ஏந்தியோர் சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர், புராணகாலப் பொழுதில் இருந்தே உமக்கு நாம் தான் போரும் புகைச்சலும் கடல் தாண்டி நீவிர் கதியால் போட வந்தவேளை மீண்டுமொருமுறை எங்கள் பூஞ்சோலை உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள் ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம் சிதைதலின் வலி எத்தகையதென்பதின் நினைவூட்டல் அது, அதன் பின் காலம் சுழன்று நிழலின் பின்னே நிசமாய் அரசு நிகழ்ந்தது எத்தனை உயிர்களின் …

    • 1 reply
    • 860 views
  20. பெருமைதான்... மழை வரும்போதும் உன்னை நினைக்கிறேன் வெயில் அடிக்கும் போதும் உன்னை நினைக்கிறேன் தயவுசெய்து திருடிட்டு போன என் குடையைக் கொடுத்திடு காதல் காதல் ஒரு மயக்க மருந்து மயங்கி விழுந்தால் கல்லறையில்தான் உனக்கு விருந்து பாவம் தூக்கத்தில் உன் சத்தங் கேட்டு எழுந்து விட்டேன் ஆனால் நீ இல்லை பின்புதான் தெரிந்தது அது என் பின் வீட்டுத் தெருநாய் என்று.. என்னத்த சொல்ல அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்குது வேற ஆளப் பாத்திட்டாய் போல என்று உங்களை மாத்தவே முடியாது மலரே உன் மீது விழும் துளிகள் பனித்துளி என்று நினைக்காதே நீ வாடாமல் இருக்க நான் விடும் கண்ணீர்த் துளிகள். …

    • 0 replies
    • 837 views
  21. நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் ... நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் நிறைந்திருக்கிறேன் . ஒளிர்விடும் சுடர்நான் காலடி எங்கும் தனிமை இருளை சுமந்திருக்கிறேன் . நடுவூரில் பழுத்த நல்ல மரம் நான் வேர்கள் இன்னும் எனை தேடிக்கொண்டு .... மாவிலை தோரணங்கள் சூடி சந்தன வாசம் பூசி பூரனப்பட்டவனாய் நிற்க முயலவில்லை நான் உங்களைப்போல் . கண்ணாடிகள் அலங்கரிக்கப்படுவதால் _முக கறைகள்என்றும் மறைவதில்லை . நிழல்களை எடைபோட்டு நிரப்பிக்கொள்ளவும் கனவுகளை கருவாய் சுமந்து திரியவும் ஏக்கதொப்பைகளை ஏற்றிக்கொண்டு நிற்கவும் சம்மதித்ததில்லை _என் மனசாம்ராட்சியம் உங்களை போல் . அரிதாரம் பூசி முகத்தை மறைத்தாலும் முகவரி…

  22. இக்கவிதை கண்ணதாசன் தான் உயிரோடிருக்கும்போதே தன்னுடைய இறுதி ஊர்வலத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கணீரென்ற குரலினால் பாடப்பட வேண்டும் என்று இயற்றிக்கொண்டாராம் தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன் மெய் தீயில் வேக போனாற் போகட்டுமெனப் பொழிந்த திரு வாய் தீயிற் புகைந்து போக மானார் தம் முத்தமொடும் மதுக் கோப்பை மாந்தியவன் மறைந்து போக தானே எந் தமிழினிமேல் தடம் பார்த்துப் போகுமிடம் தனிமைதானே! கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப்போட்டு நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு! -'கவியரசு'கண்ணதாசன் உங்கள் இரங்கற்பாவை யாழில் இயற்றிவையுங்கள், பிறகு பாடுகிறோம்.............

  23. பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்? வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே.. ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே பாரதியில் பாக்களாய் படிந்தேனே தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்.. தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்.. எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால் எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்? சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா? சொல்வளமும் சிறப்புற வேண்டாமா? பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே பாழாகி போவேன் நான் தரணியிலே.. எனது வழி தமிழனாய் பிறந்தவனே எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே எனை வளர்க்க மறந்த மானிடனே எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே நான்படும் வேதனைக்கு …

  24. நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான், 'துரோகம்' எனும் பரிசையும்... புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது! மனச்சாட்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..! அது... துரோகம் செய்தவரையும் ஒருநாள் தட்டியெழுப்பும்..!! காலம் கடந்த ஞானத்தால்... கோலம் மாற்ற முடியாது! காலைச் சுற்றிய பாம்பாக... மனச்சாட்சியின் தொண்டைக்குழியை, இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!! துரோகத்தின் தடங்களில்... அனுபவப்பாதை விரிந்து செல்லும்...! தாங்களே பின்னிய வலையில், துரோகிகள் சிக்கித் தவிக்க... மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்! மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத, தனித்த நீண்ட பயணங்களில்...... மாற்றங்கள் இருக்கும்...! ஏமாற்றங்கள் இருக்காது...!! இனிமையான பொழுதொன்றி…

  25. உடன் பிறப்புக்களே என் முயலாமை நான்கெழுத்து தள்ளாமை நான்கெழுத்து இயலாமை நான்கெழுத்து ஈழத்தமிழா மரணம் நான்கெழுத்து அதுதான் உனது தலையெழுத்து

    • 11 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.