கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பாரதியே! உனக்கு பெண் சுதந்திரத்தில் நம்ம்பிக்கை இல்லை போலும்! 'புதுமைப் பெண் ' படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் ! வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் ! அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்! சேவல் கூவும் வேளையில் எழுந்து எறும்பாய் தினமுழைத்து மாடாய் குடும்பபாரத்தை இழுத்து கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை பாரதியே! உன் கவிச் சாவியால் தானே சிறையினைத் திறந்தாய்! சுதந்திரப் பறவையாய் பறக்க வழி செய்தாய்! கோலங்கள் போட அவள் தான் சுடுநீர் சாப்பா…
-
- 0 replies
- 656 views
-
-
காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் குளித்தென்னை மகிழென்று கூவி அழைக்கின்றன இதமான சூடற்ற காலை வெயில் எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள் பசுமையும் அழகு கூட்ட பார்க்கும் இடமெங்கும் பரவசம் தருகின்றன குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை கூம்பான இதழ் கழற்றிக் கொள்ளைச் சிரிப்புடனே நிலம் பார்க்க நிற்கிறது வாசனைப் பூக்களெல்லாம் வாடியவை காற்றில் கழித்து வசதியாய்ப் பார்த்தபடி வகைக்கொன்றாய் இருக்கின்றன வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில் கண்மலர்ந்து மடல்கள் விரித்தே கதிரவன் கண்பார்க்க காதலுடன் நிற்கின்றாள் கடமை என் காட்சிகள் கலைக்க கவிந்த மனம் கட்டறுத்து வீழ கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி காலத்தின் கணக்கில் கரைந்த…
-
- 6 replies
- 6.8k views
-
-
பதக்கடச் சாக்கு... பட்டுச் சேல பள பளக்க.. பொட்டிக்குள்ள கம கமக்க - புள்ள புரிசனுக்கு - நீயும் சோறு கறியா கொண்டு போறாய்...? வெயில்ல ஒம்புரிசன் புழுங்கிப் புழுங்கி நிப்பாருண்டு குலுங்கிக் குலுங்கி நீயும் ஓடோடிப் போறாய் போல... சும்மாடு பிரியிற அளவுக்கு - நீயென்ன கோழிக் கறியா கொண்டு போவாய்...? ஆசக்கி அறுத்தாப்புக் கெழங்கும் பொட்டியான் பொரியலுந்தானே..! பொச்சாப்பொல - நீயும் பொரிச்சிக் கொண்டு போவாய்... மாட்டின் சேட்டையிம் மருதமுனச் சாறனையிம் மடிச்சி மச்சான் பொரயில போட்டுப்பொட்டு வீடியும் வாயுமா மம்பட்டியும் கையுமா வெம்பி வெம்பி நிப்பாருண்டு தேம்பித் தேம்பிப் போறாய் போல... புது மாப்புள புறு புறுப்பாருண்டு புசு புசுன சமச்செடுத்து ச…
-
- 6 replies
- 2k views
-
-
சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும் (பகடி) - இலவசக் கொத்தனார் - உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிற…
-
- 0 replies
- 664 views
-
-
திருவிழாக்கு வந்த ஒரு தேவதைதான் அவளா...? தாவணிக்குள் புகுந்துகொண்ட செந் தாமரை மலரா...? கால்முளைத்து நடந்துவரும் மின்னும் தங்கத் தேரா...? என் இளமை வெல்லத் திட்டமிடும் மன்மதனின் போரா...? படையெடுக்கும் அவளழகால்... என்னை வெல்லுவாள் ! உடையுடுத்த முழுநிலவே... மண் வந்த சேதி சொல்லுவாள் !! சிறுகுழந்தைப் புன்னகையால்... என் மனதை அள்ளுவாள் ! தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !! அவள் வதனம் பார்த்து நாணி... பூக்களும் தலையைக் கவிழ்க்கும் ! தென்றல் கூட கயிறு திரித்து... அவளைக் கட்டி இழுக்கும் !! முன்றல் நிறைந்த கண்களெல்லாம்... அவள் பக்கம் குத்தி நிலைக்கும் ! மன்றம் வந்து ஆடும் அழகாய்... அவள் கூந்தல் காற்றில் மிதக்கும் !! நீலவா…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆடிவேல் ரதம்வந்த கொழும்புநகர் தமிழரில்லம் கூடிநின்று கொள்ளிவைத்தார் காவலரும் சேர்ந்துநின்றார் தேடித்தேடி வாக்காளர் இடாப்பினிலே தமிழர்பெயர் கோடிட்டுக் கொளுத்திவிட்டார் தமிழழிப்பின் ஒத்திகையாய். சரக்குக் கப்பலுடன் சிதம்பரமும் சேர்ந்துவர - தமிழுணர்வுச் சரக்கேற்றிக் காங்கேசன் துறை சேர்ந்தார். தலைநகர் தந்த தரக்குறைவுப் படிப்பினையில் உலையொன்று கொதித்தது விடுதலைத்தீ கொழுந்தது ஆடிப்புயலில் அடிபட்டுப் போனதனால் - சுயநல நாடித்துடிப்பின் அடி பட்டுப் போனதுவே. நாடிவந்தார் தமிழிளைஞர்: கூடிவிட்டார் விடுதலைக்காய் தேடிவென்ற ஆயுதங்கள் அகலக்கால் பதித்ததுவே. மிதித்தாலும் வாழ்தலுக்காய்த் துடித்தெழும்பும் மண்புழுவும் வெட்டவெட்டத் தழைத்தோங்கும் பூவரசும் கிளுவைகளும்…
-
- 3 replies
- 827 views
-
-
ஈனப் பிறவிகளின் இழிசெயலைத் தாங்காமல் ஈழம் துறந்தெங்கோ இருக்கை அமைத்தவரே வேசப் பிறவிகளின் வெங்கொடுமை தாங்காமல் வேரை விட்டேங்கோ விழுதாய்ப் படர்ந்தவரே எங்கே சென்றாலும் எவ்விடத்தில் தரித்தாலும் எமக்காக நீரிருப்பீர் எப்போதும் நினைத்திருப்பீர் என்று நினைத்தோமே எண்ணிக் களித்தோமே எல்லாமே பொய்யாச்சே எம்நினைப்பும் மண்ணாச்சே உக்ரேய்ன் எல்லையிலே உருக்குலைந்து போனவர்க்காய் உருக்கத்தை பிழிகின்றீர் உரிமையுடன் கொதிக்கின்றீர் காசா மண்ணினிலே கண்மூடிப் போனவர்க்காய் கவலை கொள்கின்றீர் கண்ணீரை விடுகின்றீர் புலத்து மண்ணினிலே எம்தமிழர் சேர்ந்தாலும் புற்றீசல் போல்கிடக்கும் பத்திரிகை மேய்ந்தாலும் முகநூலில் நீர்பதியும் பதிவுகளைப் பார்த்தாலும் முகமனுக்காய்க் என்றாலும் எங்களுக…
-
- 3 replies
- 731 views
-
-
எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே -ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள் - தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும் - பல துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத…
-
- 0 replies
- 446 views
-
-
"ஊரிக் கிராமத்துக் குழந்தையே! - என்ற கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தில் எழுதிய கவிதை இது" -மகாரதி:- பசிதின்னும் பெண்ணின் தேகத்தை கோட்டையில் இருக்கும் வேட்டை நாய்கள் தின்றுத்தீர்க்கின்றன உறங்கடி மகளே தாமரைப் பூவே எருமைகள் மிதித்த சாமந்திப்பூவே எங்கோ சென்று ஓரிடம் நின்று ஓவென்று அழ வேண்டும் எந்த இடம் நமக்கு உண்டு சொல்லடி என் கருகிப்போன தங்கமே "யுத்தகளத்தில் யுத்தகாலத்தில் எல்லாம் சகஜம் சித்தனைப் போல சும்மா இரு அதோ வெண்புறா'' என்பதுதான் இன்றைய ஆத்திச்சூடி கோயில்களில் எல்லாம் யாகம் நெருப்பு பற்ற வில்லை இதோ எங்கள் வயிற்றில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் வேட்டை நாய்களின் நாவுகள் தீண்டிப் பார்க்கும் தேகத்திலே நித்தம் நித்தம் சாவு வந்து முத்தம…
-
- 0 replies
- 646 views
-
-
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்…
-
- 16 replies
- 1.9k views
-
-
முன்னிரவு பெய்த மழையில் ஈரம் ஊறிய என் படுக்கை அறை சுவர்களில் இருந்து நான் இராக் காலங்களில் கண்ட கனவுகள் உருக் கொண்டும் உயிர் கொண்டும் வெளித் தெரிகின்றன என் கனவுகளில் நெளியும் புழு ஒன்று சுவரின் ஒரு ஓரத்தில் இருந்து இன்னொரு ஓரத்துக்கு நகர்ந்து செல்கின்றது ஒரு அந்தி சாயும் வேளையில் நான் நல்லூர் தேரடியில் அவள் உதட்டில் இட்ட முத்தம் கனவுகளின் ஊடாக பயணித்து சுவர்களில் பதிந்து வர்ணங்களால் நிரம்புகின்றது என் படுக்கை அறை சுவர்களுக்கு வெட்கம் இல்லை என் கனவுகளை பிரதி எடுத்து பின் ஈர இரவு ஒன்றில் கசிய விட்டு ரசித்துக் கொள்கின்றன கனவுகளில் வெறி பிடித்த மிருகம் சுவர்களில் அமைதியாக தெரிகின்றது கொலைகாரர்களின் துப்பாக்கிக்கு பயந்து ஓடிய என் பூனை …
-
- 6 replies
- 2.1k views
-
-
ஒற்றை சொற்களாய் உதிர்த்து வானத்தை நிரப்பிய பின், உன் துயரம் தோய்ந்த நாக்கு என் தனிமையை தின்னத்தொடங்குகிறது. இரவின் நீட்சியும் வியர்வை நாற்றமும் பிசுபிசுப்பின் அந்தரிப்பும் மோகனத் தவம் கலைக்காமல் சாய்ந்தெழும் பெருமூச்சும் அவசத்துடன் பகிரப்படுகையில் யாருக்கும் கேளாமல் நீ சிந்திய ஓலமொன்று நட்சத்திரங்களை விழுத்தியது. நிராகரிக்கமுடியாத முத்தத்தை அவமானத்துடனும், கண்ணீருடனும் அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று நினைவுகளில் விரிகையில், சொற்கள் வறண்டு ஆவியாகிப் போகிறது, கதவுகள் மூடிய கண்ணீர்வளையத்தின் மறைவில் என்னைத் துகிலுரியத் தொடங்குகிறேன் உனக்குப் பரிசளிக்க. வானத்தை நிரப்பிய உன் சொற்கள் என் தனிமையை தின்று நட்சத்திரங்களாய் பூக்கின்றன
-
- 5 replies
- 987 views
-
-
சொர்க்கம் மனதிலே...... எத்தனை தடவை பிறப்பேன் எத்தனை தடவை இறப்பேன் எத்தனை முறை நான் புதைவேன் அத்தனையிலும் நான் உயிர்ப்பேன் கருவினில் தோன்றி கல்லறை வரையும் உறவுகள் தான் எம் வேலி கனவுகள் போல கலைந்திடும் வாழ்வில் கவலைகள் யாவும் போலி புலர்ந்திடும் பொழுதில் மலர்ந்திடும் பூவும் பொழுதினிலே தலை சாயும் அலர்ந்திடும் பொழுதில் விடிந்திடும் வேளை அழகிய மலர்கள் பூக்கும் இலையுதிர் காலம் உதிர்ந்திடும் இலைகள் இறப்பினும் மரங்கள் இருகு;கும் இயற்கையின் கையில் இயல்புகள் மாற இலைதுளிர் காலம் பிறக்கும் வசந்தங்கள் வந்தால் பாரினில் எங்கும் பசுமையின் புரட்சிகள் தோன்றும் சுகந்தமாய் சேவை தொடர்ந்திடும் வேளை சொர்க்கத்தின் வாசல் திறக்கும் பிறர் நலம் காக்கும் மனமது ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
காந்தக் கலர் அழகி கர்வமின்றி கருவண்டுக் காளை இவனை கவர்ந்திழுத்து கவ்விக் கொண்டாய்.. உன்னை அணுகி உளறி அணைத்தேன் உன்னதம் காண.. உன்னமுதம் சுரக்க உண்டேன்.! உடலெங்கும் பொடிகள் காவி உதிர்த்து உண்டாக்கினேன் உன்னை. காய்ந்து விழும் கன்னிக் காவியமே.. கருக்கொண்ட காதலுக்கு அடையாளமாய் - நாளை காய்த்துக் கனி தரும் நீ புதிதாய் பூமியில் உதிப்பாய்..! விவாகமும் இல்லை விவாகரத்தும் இல்லை விவகாரம் முடிக்கிறோம் வில்லங்கமே இல்லாமல்..! விதியது இயற்கை வழி விதவையாய் நீயும் இல்லை விதுசனாய் நானும் இல்லை விரைந்தே போகிறோம் கால வெளியைக் கடந்து..! அடுத்த வசந்தத்துக்குள் இன்னொரு சந்ததிக்காய் ஆயுளும் முடிக்கிறோம். பூமியை புதிய உயிர்களால் அழகும் செய்கி…
-
- 7 replies
- 14.2k views
-
-
விளையாட்டா விளையாட சின்னவர்கள் ... பொம்மை கேட்டனர் .. கொடுக்கப்பட்டதோ பொம்மை துப்பாக்கி .. ஆண்டுகளா பல சிறார் விளையாடி போன .. அதே குருதி தேய்த்த பழைய துவக்கு .. இதை வைத்திருந்தவன் இறந்து போய் .. ஒருவருடமும் இல்லை அப்ப நாலு வயது .. அப்பொழுது இவன் பிறந்து இருந்தான் .. இவன் அருகில் நான் இருக்கும்போதே .. அவன் வெளியில் விளையாடியபடி நின்றான் .. டும் என சத்தம் வந்தால் ஓடி வரும் அவன் .. அன்று மட்டும் வரவில்லை ஏனோ .. சீறி வந்த ஏவுகணைக்கு தெரியுமா .. அவன் ஆசைப்பட்டது பொம்மை.. துவக்குக்கு என்று .. ஏவுகணை ஏவுறவன் பார்வையில்.. அவன் தீவிரவாதி... ஆனால் அவனுக்கு பொம்மை மேல் .. தீராத காதல் வியாதி ... பிஞ்சா கருகி விழும்போது மனம் .. துண்டா வெடித்து போவதை யார் அறிவர் .. …
-
- 0 replies
- 865 views
-
-
காஸா நகர் குழந்தைகள் குழந்தைகள் அஞ்சிப் பதுங்கியிருக்கும் நகரில் பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய் எப்படிக் காத்திருப்பது? ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும் துரத்திக் கொண்டிருக்கிறான் ஒரு பாலஸ்தீனக் குழந்தையை அவர்கள் ஏன் குழந்தைகள்மீது குண்டுகளை வீசுகிறார்கள்? தமது துப்பாக்கிகளை ஏன் குழந்தைகளுக்கு எதிராய் திருப்புகிறார்கள்? ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் ஒரு குழந்தையின் பிணம் குழந்தைகளற்ற குழந்தைகள் பதுங்கியிருக்கும் ஓர் நகரை எப்படி அழைப்பது? ஓர் ஈழக் குழந்தையை கருவில் கரைத்துக் கொல்லும்போது பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம் என்னவாய் இருக்கும்? http://globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 5 replies
- 830 views
-
-
ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட காற்று நிரம்பிய பலூனைப் போலொரு இருதயத்தோடிருக்கும் சிறுமி தன் குரல்களை தானே நசிக்கிறாள் பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன நாவற் தடிகளால் அடித்து வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில் இனி என்னதான் இருக்கும்? எனது தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே! முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள் விற்கப்பட்ட நகரில் இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில் எப்படி உனக்கு ரிப்பன்கள் வாங்கித் தருவேன்? அண்ணாவுக்காக அழுதது குற்றமெனவும் அவனைத் தேடியது தண்டனைக்குரியதெனவும் உன்னையும் கடத்துகையில் நீயும் காணாமல் போகிறாய் காணாமல் போய்விட்டன பள்ளிக்கூடக் கதிரைகளும் அண்ணாவோடு ஓடிப் பிடித்த…
-
- 0 replies
- 679 views
-
-
நான் அழுதபடியும் நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன் சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும் தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன். வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு. நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை. என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது, அதுதான் எனது நிரந்தரச் சொத்து. பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை. நான் வாழ்வதற்கான தந்திரங்களை தாய் தந்தையிடம் இருந்தும் சுற்றத்திடம் இருந்தும் கற்றுக்கொண்டிருக்கவேண்டியது விதி. இரைதேடத் தந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள் இரைக்குப் பலியாகாமல் தப்ப…
-
- 3 replies
- 1k views
-
-
நா பிளந்து உமிழ்நீர் வறண்டு செல்லரித்து மூச்சடங்கிபோன எங்கள் குரல்வளைகளில் ஆழ்துளைக் குழாய் பதிந்து எதை தேடுகிறீர்? விடுதலை ஒன்றையே நேசித்து கந்தக காற்றை சுவாசித்து நெடியேறி வெடிக்கத் துடிக்கும் நுரையிரலை கவனமாக கையாளுங்கள்... போரியல் நெறியும் வாழ்வியல் பண்பும் வகுத்த தலைவன் வழிவந்த இதயத்தை மாற்றியும் அறுவைசிகிச்சை செய்து விடாதீர் ஞானம் பிறந்துவிடும் புத்தருக்கு... இன்னும் கிடைக்கவில்லையா தேடும் பொருள்? காத்திருத்தலையும் உடனடி கீழ்படிதலையும் கற்பிக்கும் பசியை துறந்து காடுகளில் அலைந்து திரிந்து சிறுகுடலாய் போன பெருங்குடல் உங்கள் கறிக்கு உதவாது.... இன்னும் சில பாகங்கள் காத்திருக்கின்றன நகங்களில் கிழிபட... ஈழ…
-
- 5 replies
- 903 views
-
-
வசந்தன் மில்லராகி....! ----------------------------------- வசந்தன் மில்லராகி வரைந்தான் ஈழம்தேசம் தொலைத்தான் தாயின் வாசம் சுமந்தான் தாய்நாட்டின் வாசம் ஏற்றான் வெடிகுண்டின் பாரம்! விடியல் படைக்கும் முடிவாய் வெடித்தான் தமிழர் மனதுள் தடுத்தான் பெரும் அழிவின் வரவை பதித்தான் வீரச் சுவட்டை பார்த்தோம் வாழ் நாளிலன்று! வியந்தோம் விழிகள் உயர தொடர்ந்தார் களங்கள் சரிய நிலைத்தார் மனங்கள்தோறும் நிமிர்வோம் அவரீகத்தாலே!
-
- 2 replies
- 622 views
-
-
கடலைக் கொத்திய பறவை- உடலிலிருந்து பிரிந்த மென்னிறகை காற்று கடலிடம் சேர்த்தது ராஜாவின் உத்தரவின் பேரில் சேவகர்கள் இறகை இழுத்து வந்து கரையில் எறிந்துவிட்டார்கள் கடுஞ் சினம்கொண்ட பறவை வேதனை மிகுதியால் கடலைக் கொத்தி விழுங்கியது தானியம் என்றுதான் அது கடலை நினைத்திருக்க வேண்டும் எச்சமாகி வெளியேறிவிடும் என்றுதான் மரக்கிளையில் ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டும் முதன் முதலில் பறவைக்குள் ஆழ் கடல்தான் உற்பத்தியானது அமைதியாக அமர்ந்திருந்த பறவைக்கு கண்ணி குத்தியவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள் திடீரென பறவைக்குள் அலை அடிக்கத் தொடங்கியது கரையை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு இதயத்தில் இடவசதி இருக்கவில்லை கடல் ஸ்தம்பித்துவிட்டது தனக்குள் மிதக்கும் இறகை …
-
- 21 replies
- 2.1k views
-
-
ஜூலை 5.. கரும்புலிகள் நாள் நினைவாக.. மீள்பிரசுரம்..!! எமது ஆக்கத்தையும்.. ஆவணப்படுத்தி நிற்கும்.. தேசக்காற்றுக்கும் நன்றி. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! http://thesakkaatu.co…
-
- 4 replies
- 1k views
-
-
பொய்யும் புரட்டும் ... சிரட்டையும் கையுமாம் .. என் அப்பத்தா அடிகடி .. முணுமுணுக்கும் சொல் .. வழி கேட்டா சொல்லார் பின் .. வக்கனையா விடுப்பு கேட்பார் .. எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று .. கேள்வி மேல் கேள்வி வைப்பார் .. உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் .. சுற்றி வளைத்து சுழல விட்டு .. கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி .. அத்தனை முட்டாள் தனம் செய்யும் ... இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி .. மனிதனுள் மனிதனை விற்கும் .. வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் .. கேட்டால் வாழ வழி என்பார் ... வேறு நல்வழி தேடார் பொய்யர் .. நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு .. கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் .. இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி .. …
-
- 4 replies
- 1.1k views
-
-
அந்தப் புத்தகத்தின் பெயர்... ஒரு மிகப்பெரிய எழுத்தாளன் எழுதிய புத்தகத்தை இறுதியாய் எழுத படிக்க தெரிந்த ஒருவன்தான் வாங்க ஒப்புக்கொண்டான் எப்போதும் போல பெரிய நூலகத்தில் பலரும் படித்துப் பயன்பெற விரும்பிய புத்தகம் புத்தக அலமாரிக் கனவுகளுடன் புது மேசையின் மேல் குடியேறுகிறது. புத்தக வாசத்தை உணரும் நுட்பத்தை மறந்து போயிருந்தான்-அநேகமாய் புத்தகத்துடன் உரையாடும் கலையை அறியாதவனாயும்... இருந்தும் கோப்படும்போது தூக்கி எறியவும், மேசையின் மீது வைக்கப்படும் உணவு பண்டங்களின் மீது மூடி வைக்கவும், புழுக்கமான நேரத்தில் விசிறியாகவும், குழந்தை விளையாடிக் கிழித்தெறியும் காகித பொம்மையாகவும், ஏதாவது ஒரு வழியில் அந்த இல்ல உறுப்பினருக்கு புத்தகம் பயன்பட்டுக்கொ…
-
- 0 replies
- 949 views
-
-
ரோஜாவே.. உன் இதழோரம்.. வழிவது.. தேனா..?! இல்லை... எனைக் கடைக்கண் கொண்டு கண்டதால்.. அரும்பி நிற்கும் வியர்வையா..?! தேனோ.. வியர்வையோ வழித்தெடுக்க.. குருவி இவனுக்கு அனுமதி வேண்டும்.!! முள்ளிட்ட ரோஜாவே பதில் சொல்லு..!!! ஒருதலையாய் வீணே ஆசை வைத்து இதயம் கிழிந்து நிற்க இது முட்டாள் குருவியல்ல...!! (நன்றி முகநூல்) (படப்பிடிப்பு: நாங்கள்.)
-
- 3 replies
- 1.3k views
-