Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வசந்தன் மில்லராகி....! ----------------------------------- வசந்தன் மில்லராகி வரைந்தான் ஈழம்தேசம் தொலைத்தான் தாயின் வாசம் சுமந்தான் தாய்நாட்டின் வாசம் ஏற்றான் வெடிகுண்டின் பாரம்! விடியல் படைக்கும் முடிவாய் வெடித்தான் தமிழர் மனதுள் தடுத்தான் பெரும் அழிவின் வரவை பதித்தான் வீரச் சுவட்டை பார்த்தோம் வாழ் நாளிலன்று! வியந்தோம் விழிகள் உயர தொடர்ந்தார் களங்கள் சரிய நிலைத்தார் மனங்கள்தோறும் நிமிர்வோம் அவரீகத்தாலே!

    • 2 replies
    • 623 views
  2. கடலைக் கொத்திய பறவை- உடலிலிருந்து பிரிந்த மென்னிறகை காற்று கடலிடம் சேர்த்தது ராஜாவின் உத்தரவின் பேரில் சேவகர்கள் இறகை இழுத்து வந்து கரையில் எறிந்துவிட்டார்கள் கடுஞ் சினம்கொண்ட பறவை வேதனை மிகுதியால் கடலைக் கொத்தி விழுங்கியது தானியம் என்றுதான் அது கடலை நினைத்திருக்க வேண்டும் எச்சமாகி வெளியேறிவிடும் என்றுதான் மரக்கிளையில் ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டும் முதன் முதலில் பறவைக்குள் ஆழ் கடல்தான் உற்பத்தியானது அமைதியாக அமர்ந்திருந்த பறவைக்கு கண்ணி குத்தியவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள் திடீரென பறவைக்குள் அலை அடிக்கத் தொடங்கியது கரையை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு இதயத்தில் இடவசதி இருக்கவில்லை கடல் ஸ்தம்பித்துவிட்டது தனக்குள் மிதக்கும் இறகை …

    • 21 replies
    • 2.1k views
  3. நான் அழுதபடியும் நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன் சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும் தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன். வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு. நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை. என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது, அதுதான் எனது நிரந்தரச் சொத்து. பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை. நான் வாழ்வதற்கான தந்திரங்களை தாய் தந்தையிடம் இருந்தும் சுற்றத்திடம் இருந்தும் கற்றுக்கொண்டிருக்கவேண்டியது விதி. இரைதேடத் தந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள் இரைக்குப் பலியாகாமல் தப்ப…

  4. ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட காற்று நிரம்பிய பலூனைப் போலொரு இருதயத்தோடிருக்கும் சிறுமி தன் குரல்களை தானே நசிக்கிறாள் பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன நாவற் தடிகளால் அடித்து வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில் இனி என்னதான் இருக்கும்? எனது தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே! முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள் விற்கப்பட்ட நகரில் இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில் எப்படி உனக்கு ரிப்பன்கள் வாங்கித் தருவேன்? அண்ணாவுக்காக அழுதது குற்றமெனவும் அவனைத் தேடியது தண்டனைக்குரியதெனவும் உன்னையும் கடத்துகையில் நீயும் காணாமல் போகிறாய் காணாமல் போய்விட்டன பள்ளிக்கூடக் கதிரைகளும் அண்ணாவோடு ஓடிப் பிடித்த…

    • 0 replies
    • 679 views
  5. கரும் புலிகளின் சாம்பலில் இருந்து உயிர்தெழுவோம்!!!!!!!!!!!! கரும்புலிகள் எங்கள் கவசங்கள்! கந்தகத்தைச் சுமந்து சென்று களமதிர வெடிப்பவர்கள்! வந்த பகை முடித்து வாழ்க்கை தனைக் கொடுத்தவர்கள்! சந்தன மரமாக தம் தேகம் எரிப்பவர்கள்! எந்த இடம் என்றாலும் எதிரிகளை எரித்தவர்கள்! சந்ததம் தங்கள் தலைவனையே நினைத்தவர்கள்! சொந்த பந்தமெல்லாம் தூர வைத்துவிட்டு-தாயகத்தில் குந்த வந்த எதிரிக்கு குலைப்பனைக் கொடுத்தவர்கள்! தமிழீழத்தின் தடை நீக்கிகள்! தலைவன் கண்டு பிடித்த அணுக்குண்டுகள். ஈழத்தமிழனின் இறுதி ஆயுதங்கள்! ஆம் நிலம் வீழலாம்!-எங்கள் நெஞ்சம் வீழாது! களம் மாறலாம்-எங்கள் உளம் மாறாது! எல்லாம் முடிந்தது என்று இறுமாந்திருக்காதே பகைய…

  6. Started by அஞ்சரன்,

    பொய்யும் புரட்டும் ... சிரட்டையும் கையுமாம் .. என் அப்பத்தா அடிகடி .. முணுமுணுக்கும் சொல் .. வழி கேட்டா சொல்லார் பின் .. வக்கனையா விடுப்பு கேட்பார் .. எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று .. கேள்வி மேல் கேள்வி வைப்பார் .. உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் .. சுற்றி வளைத்து சுழல விட்டு .. கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி .. அத்தனை முட்டாள் தனம் செய்யும் ... இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி .. மனிதனுள் மனிதனை விற்கும் .. வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் .. கேட்டால் வாழ வழி என்பார் ... வேறு நல்வழி தேடார் பொய்யர் .. நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு .. கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் .. இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி .. …

  7. ஜூலை 5.. கரும்புலிகள் நாள் நினைவாக.. மீள்பிரசுரம்..!! எமது ஆக்கத்தையும்.. ஆவணப்படுத்தி நிற்கும்.. தேசக்காற்றுக்கும் நன்றி. நெல்லியடியில் நெத்தியடியாய் நெடுநாள் சிங்களப் பகை நொருக்கி வீழ்ந்த அந்த நெடும் வீரன் மில்லர் வழியில்… தமிழராம் எம் தாகமாம் தமிழீழம் விடியும் வரை பிச்சை கேட்டு அடிமைகளாய் வாழப் போவதில்லை…! விடியலின் கனவோடு கந்தக மூச்செடுத்து சாவினில் வாழும் மறப் புலிகளாய் கரும்புலிகளாய் எம் தேச விடியலை சிதைக்க நினைக்கும் தடைகள் முடிப்போம். விடியற் சூரியனை கூவி அழைத்து ஈழ வானில் சேர்த்து.. மின்னிடும் வான் தாரகைகளாய் நாமும் மிளிர்வோம். தலைவன் வழியில்.. விடியலின் வேளை வரை தமிழர் நாம் என்றும் கரும்புலிகளே…! http://thesakkaatu.co…

  8. ரோஜாவே.. உன் இதழோரம்.. வழிவது.. தேனா..?! இல்லை... எனைக் கடைக்கண் கொண்டு கண்டதால்.. அரும்பி நிற்கும் வியர்வையா..?! தேனோ.. வியர்வையோ வழித்தெடுக்க.. குருவி இவனுக்கு அனுமதி வேண்டும்.!! முள்ளிட்ட ரோஜாவே பதில் சொல்லு..!!! ஒருதலையாய் வீணே ஆசை வைத்து இதயம் கிழிந்து நிற்க இது முட்டாள் குருவியல்ல...!! (நன்றி முகநூல்) (படப்பிடிப்பு: நாங்கள்.)

  9. அந்தப் புத்தகத்தின் பெயர்... ஒரு மிகப்பெரிய எழுத்தாளன் எழுதிய புத்தகத்தை இறுதியாய் எழுத படிக்க தெரிந்த ஒருவன்தான் வாங்க ஒப்புக்கொண்டான் எப்போதும் போல பெரிய நூலகத்தில் பலரும் படித்துப் பயன்பெற விரும்பிய புத்தகம் புத்தக அலமாரிக் கனவுகளுடன் புது மேசையின் மேல் குடியேறுகிறது. புத்தக வாசத்தை உணரும் நுட்பத்தை மறந்து போயிருந்தான்-அநேகமாய் புத்தகத்துடன் உரையாடும் கலையை அறியாதவனாயும்... இருந்தும் கோப்படும்போது தூக்கி எறியவும், மேசையின் மீது வைக்கப்படும் உணவு பண்டங்களின் மீது மூடி வைக்கவும், புழுக்கமான நேரத்தில் விசிறியாகவும், குழந்தை விளையாடிக் கிழித்தெறியும் காகித பொம்மையாகவும், ஏதாவது ஒரு வழியில் அந்த இல்ல உறுப்பினருக்கு புத்தகம் பயன்பட்டுக்கொ…

  10. ஒரு கிறுக்கல் ஒன்று: எது நடக்கின்றதோ அதுவும் அநீதியாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அது அறம் மீறியே நடக்க இருக்கின்றது உன்னுடையதை எல்லாவற்றையும் எல்லாவுமாய் இழந்தாய், ஆயினும் ஏன் ஆனந்தப்படுகின்றாய் எதை நீ பிறப்பிலிருந்து கொண்டு வந்தாயோ அவை அனைத்தும் பறிக்கப்படுகின்றன எதை உனக்காக படைத்தாயோ அதை அவர்கள் அவர்களுக்காக எடுத்துக் கொண்டனர் எதை அவர்கள் எடுத்தார்களோ அவை அனைத்தும் உன்னிடம் இருந்து பறித்துக் கொண்டவை எதை நீ அவர்களிடம் இழந்தாயோ அவை அனைத்தும் மீண்டும் உன்னாள் பெறப்பட வேண்டியவை பறித்த எதை அவர்கள் தமதென்று கொண்டாடுகின்றனரோ அவை அனைத்தும் உனக்கும் உன் சந்ததிக்குமானவை பிறிதொரு நாளில் உன் தெருவில் தோரோட்டி போகும் போது உனக்கான கீதையாக உன் சுதந்திரத்…

  11. உனது ஆட்சிக்கான சாவுமணியை நீயே அடிக்கிறாய்.. நாமென்ன செய்ய..? உன் அழிவுக்கான குழியினை நீயே வெட்டுகிறாய்… யார் என்ன செய்ய..? உனது அகங்காரங்கள் உனக்கான பாடையை அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ அறிய மாட்டாய்… உனது கொடுங்கோலின் நுனி உனக்கான கல்லறையைச் செதுக்கும் உளியென்பதை நீ உணர மாட்டாய்… மனிதத்தையும் மனிதர்களையும் எரித்துக் குளிர் காய்பவனே… பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே… உன் அரசாசனத்தை அக்கினி சூழ அதிக நாட்களில்லை…! ஆமாம்… உனது ஆணவ நடை ஓயும்.. உன் அகம்பாவக் குடை சாயும்…! உனது மாட மாளிகைகள் மண்ணோடு புதையும்; கூட கோபுரங்கள் குப்பை மேடாகும்! எங்களின் தயவாலும் நீ சூடிக் கொண்ட மகுடம் இன்னும் சில மாதங்களில் எரி…

    • 1 reply
    • 778 views
  12. எரியுது எங்கள் தேசம் நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம் அரசியல் வாதிகள் கோசம் அரைநொடியிலே கலைந்திடும் வேசம் மீனுக்கு தலையினை காட்டி-தினம் பாம்புக்கு வாலினை ஆட்டி கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி ‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம் அழிந்தபின் அலுத்கம விரைந்தார் பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின் பகைவனின் சேலைக்குள் ஒளித்தார். ‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட சிவாஜியும் தோற்கிற நடிப்பு ‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை நினைக்கையில் வருகுது சிரிப்பு…! மாமி செருப்பால அடிச்சும் மாமா ‘ரவுசர’ உரிஞ்சும் மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ மகள்ட மடியிலே படுக்கார். கழுதைகள் எம்மை நெருக்க எம் கடைகளை அடித்து நொறுக்க உலகமே அதனை வெறுக்…

  13. காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால்... ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும், வீரமுனையிலும் தமிழ்க் குருதி வடிந்த பொழுது... தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை. எரியும் வீட்டில் பற்றியெரிந…

  14. "நீயும்" பிழை செய்தாய் "நானும்" பிழை செய்தேன் இனி..!!! "நாங்கள்" பிழை செய்யவேண்டாம்!!!! காத்தான்குடிக்கும் காங்கேசன்துறைக்கும் "உறவும்பாலம்" கட்ட நான் "ரெடி" உன் கைகளில் இருக்கும் "வெண்பொங்கலையும்" "பொல்" சம்பலையும் களுவி விட்டு வா!!! ஒற்றுமையாய் கரம் பிடிப்போம்!!!!

    • 4 replies
    • 877 views
  15. நேற்றெமது ஊரை அழிக்கவும் இன்று உமது ஊருக்கு தீ வைக்கவும் எங்கிருந்து புறப்பட்டனர்? விமானங்கள் அன்றெம் நிலத்தில் கொட்டிய அதே பதற்றம் இன்று உம் ஊர்களில் நண்பனே உனக்காய் நான் குரல் கொடுப்பேன் ஏனெனில் நான் அறிவேன் இழப்புகளின் வலியை ரிஷான், நேற்றெம் வீடுகளை சிதைத்து இன்று உம் வீடுகளை எரிப்பது ஏன்? நண்பனே உனக்காய் நான் அவதியுறுவேன் ஏனெனில் நான் அறிவேன் வீடற்ற பொழுதுகளை நேற்றெம்மீது குண்டுகளை எறிந்து இன்று உம்மீது வாள்களை வீசுகின்றவர் யார்? நேற்றெமை கொன்ற குண்டுகளில் படிந்திருந்த அதே வெறியே இன்று உமை வெட்டும் வாள்களில் நண்பனே உனக்காய் நான் துடிப்பேன் ஏனெனில் நான் அறிவேன் காயங்களின் நிணத்தை ரிஷான், எம் கோவில்களை உடைத்து உம் பள்ளிவாசல்களையும் இடிப்பது ஏன்? நண்பனே உன…

    • 5 replies
    • 873 views
  16. மறுக்கப்படுதல் நான் அழுவேன் உங்களுக்காக உங்களது துயரங்களை காயங்களை வலிகளை எனது மொழியால் சுமப்பேன் உங்கள் குருதி கண்டு எனக்கு உயிரலையும் எல்லாமே சிவந்த குருதி துயரப்பட்டவர்களின் குருதி கையாலாகதவர்களின் குருதி என்பார்கள் அவர்கள் நீங்கள் என்னை ஒதுக்குவீர்கள் உங்களுக்காய் ஒரு கண்ணீர் விழுவதை விரும்பமாட்டீர்கள் எங்களது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்கள் ஏன் எப்படி எதற்கென்ற கேள்வியெழும் உங்களிடம் எப்படியும் இருந்து விட்டுப்போகலாம் உயிரில்லா பிணங்கள் முன் கூச்சலிடுவதை விரும்புகிறவள் நானில்லை உங்களை போல தான் எங்களுக்கும் அழுவதற்கு கூட சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது அந்நாட்களில் இருந்தும் நான் ஒரு உணர்வுள்ள மனுஷி என்பதாலே நான் அழுவேன் உங்களு…

    • 0 replies
    • 655 views
  17. அப்பா ஒரு அழகிய சிற்பி.. என்னை செதுக்கிய போது வலித்தது .. செதுக்கிய பின் என்னை பார்த்தா .. எனக்கே ஆச்சரியம் அவ்வளவு அழகு .. பல முரணுக்கு செந்தக்காரர் அப்பா .. என் பார்வையில் அப்படியே ஆனால் .. உள்ளாத்தம் என்னை சீர்படுத்தல் என்று .. எனக்கு அப்பொழுது தெரிய வாய்ப்பில்லை .. இளமையும் வேகமும் கேட்கும் நிலையில் .. எனக்கு இருக்கவில்லை அறிவுரை வதையே .. பொய்சொல்லி பணம் கேட்கும் போதும் .. சொல்வது பொய் என தெரிந்தும் கண்டுக்காமல் .. மேலதிகமா தந்துவிட்டு வேளைக்கு வா என .. சொல்லிவிடும் அற்புத ஜீவன் அப்பா .. என்ன செய்கிறாய் என்று இன்றுவரை என்னை .. கேட்டது இல்லை என்னுள் தான் இருப்பதா .. பலமுறை அம்மாவிடம் சொல்லி இருந்தார் .. அவன் என்னைபோல எங்கு போனாலும் .. தன்னை காத்து கொள…

  18. ஏங்கிய காலங்கள் போதும் கன்னம் சிவந்ததோர் காலம் - எழில் கவிகள் படித்ததோர் காலம். சின்ன வரையரைக்குள்ளே - உன் சிந்தை இழந்ததோர் காலம். வண்ணமயில் என்றும் கூறி.. வஞ்சிக் கொடியென்றும் கூறி... எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன் வன்மை அடக்குவர் தோழி! அங்கங்கள் அழகுதானடி -அதை அங்கங்கே போற்றுவர் தேடி.. உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி உன்னதப்பெண்ணே! நீ கூறடி!! நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப் பண்ணிடை கற்பனை பாடும். மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன் பெண்ணுடல் நீத்தாலும் வாழும். கங்கை உனக்கென்ன தங்கையா? மங்கை உdக்கின்னும் மருட்சியா? உன்கையை வான் வரை உயர்த்தி -அதில் உலகை ஈர்க்கலாம் முயற்சி! மையல் காட்டும் கண்ணில் மயங்காத் தையலர் மேன்மையை உணர் நீ! உய்யல் வ…

    • 13 replies
    • 2k views
  19. யாரைத் தேடுகிறாய்? நான் யேசுவைத் தேடுகிறேன். எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய அந்த மனிதரைத் தேடுகிறேன். ஏதற்கு? நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனது கையில் துவக்கைத் தந்து தனது மந்தைகளை மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன். மந்தைகள் என்னவாயிற்று? அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு உணவாயிற்று. இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்? இந்தச் சிலுவைகளில் இரண்டை அவர் தோளில் சுமத்த. -தமயந்தி http://www.piraththiyaal.com/

    • 3 replies
    • 1.1k views
  20. நான் ஸ்ரீலங்கன் இல்லை ஒரு பறவையையும் விட்டுவைக்காத படுகொலையாளிகள் எமை பயங்கரவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைப்பார்களா? வேற்றினம் என்பதனால்தானே நமது சந்ததிகள் அழிக்கப்படுகின்றனர் ஒரு கல்லறையையும் விட்டு வைக்காத அபகரிப்பாளர்கள் எமை பிரிவினைவாதிகளென அழைக்கின்றனர் ஆஷா,அபகரிக்கப்பட்ட நாட்டிற்காய் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்றுதான்அழைப்பார்களா? வேற்று நாட்டவர்கள் என்பதினால்தானே நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது நாமொரு இனம் எமக்கொரு மொழி எமக்கென நிலம் அதிலொரு வாழ்வு வீர நிலத்தில் புதையுண்டிருக்கும் என் தோழியே! உறிஞ்சப்பட்ட குருதியும் மனிதப்படுகொலைகளும் அழித்துவிடுமா ஓரினத்தின் சரித்திரத்தை…

  21. எழில் பொங்கும் என்னூரின் ஏகோபித்த நினைவுகளோடு என் பயணம் தொடர்கிறது திருவிழாவின் தெருக்களில் தென்றலாய் வந்துபோனவைகளும் வீதியில் தேரோட நீரோட்டமாய் வந்து போனவைகளும் மனதில் மங்கலாக வந்து போகின்றன மார்கழி மாதத்து மரகதத் துகள்களாய் இன்னும் நெஞ்சத்து அடிப்பரப்பில் அடர்த்தியாய் ஒட்டிக்கொண்டபடி அணைத்து ஆறுதல் தருகின்றன வீட்டோரத்து வெடிப்புக்களின் இடைவெளிகளில் தவழும் எறும்புகளின் வரிசையின் கூட்டுப்போல் எல்லையற்று நீள்கின்றது நினைவு கால்கள் புதையும் கனவுகளோடு கண்விழித்த காட்சிகள் இன்னும் பசுமை குலையாத பச்சை வயலாய் பள்ளிகொள்ளும் போதில் வந்து போகின்றன எத்தனை கடந்தும் அத்தனையும் அசைக்க முடியா ஆணிவேராய் அடிமனத்தின் படிக்கட்டுகளில் ஆழப்பதிந்து அல்லல் செய்தபடியே

  22. காலங்கள் கடந்தன தான் எனினும் கடந்து வந்த பாதைகளின் கால்த்தடங்களின் வடுக்கள் இன்னும் மனதில் அடையாளமாய் எத்தனையோ எண்ணங்கள் சுமந்து எதிர்க்க முடியாத எதிர்பார்ப்புக்களுடன் இறுமாப்புக்களும் கடந்து கடத்த முடியாத நாட்களுடன் கனவுகளின் கட்டவிழ்ப்புக்களும் கரை காணா மொட்டவிழ்தல்களுமாய் முகைவெடித்து மணம் பரப்பி முற்றிலும் முடிவற்றதாய் வாழ்வு வானம் அளாவி வால்நட்சத்திரங்களாய் எதிர்காலத்தின் எண்ணிக்கையோடு ஏகாந்தத்தின் எல்லைகளற்று எப்போதும் எதிர்வு கூறல்களோடாய் எப்படியோ கடந்து வந்த காலத்தின் கருப்பும் வெள்ளையுமான பக்கங்கள் கண்ணில் அப்பப்போ தெரிகின்றது காட்சிப் பிழைகளின்றி கனவுகளில் எதிர்க்க முடியா ஏக்கங்கள் இன்னும் இருக்கின்றன என்னுடனே எப்போதாகில…

  23. இது கம்பன் பாடாத கவிதை.. தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே தீயோடும்.. புதை குழியோடும் தீர்ந்துவிட்ட சீதைகளின் துயர் மறந்தோர் கவிதை இது. வேதனையின்.. கூக்குரல்..! இதுவும் ஒரு வதை தனக்குத் தானே செதுக்கிய.. சிம்மாசனத்தில் இவர்..! சிங்கள அமைச்சரவையில் அவர்...!! குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது குடும்பிக்கார மறைவில் இருந்து. வாலி அங்கும் வீழ்கிறான்.. இராமன் இங்கும் வெல்கிறான்..!! அதர்மம் அழித்து தர்மம் வென்றதாய் காட்ட ஒரு காசோலை மட்டும் பரிமாறப்படுகிறது.. மீண்டும் வரலாறு திரித்து எழுதப்படுகிறது...! கம்பனுக்கு அன்று.. வாலி புகழ் திரித்து இராம புகழ் பாட கவி... பாட கள்ளிருந்தது தான் பெருங் கவி எனும் புகழ் விருப்பிருந்தது கூட அகத்தே …

    • 1 reply
    • 900 views
  24. ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள் இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர் குடி எரிந்து முடிகிறது. ஹெலிஹொப்டர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தன நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நந்திக்கடலில் பறவை விழுந்து மிதக்கிறது பறவைதான் சனங்களை தின்றது என்றனர் படைகள் நந்திக்கடல் உனத…

    • 0 replies
    • 532 views
  25. உனக்கும் எனக்குமான இறுமாப்பு ஏகாந்த வெளிதனில் எல்லைகளற்று விரிந்திருந்தது அதுவே இன்று நிட்சயம் அற்றதாய் நம்பிக்கையற்றதாய் நாளும் நடுவானில் நூலறுந்த பட்டமாய் நரகமாகிக் கொண்டிருக்கிறது எந்நேரமும் உச்சரிக்கும் இரகசிய மந்திரமாய் மனம் ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது ஏதிலியாய் எதுவுமற்று வாழ்தலற்ற வகையின்றி வரம்புகள் கடந்தோம் தான் வகை தெரியா மூடர்களாய் வெற்று வெளியில் நாமின்று வேலிகள் எதுவும் இன்றி விழுதுகள் கூட இன்றி வேடர்களின் வில்லாய் நாம் வசமானோம் வரப்புகள் இன்றி விதியின் சதிதானா வீழ்ந்தது மதியின் தவறிய கணக்காய் மனிதம் தொலைத்த மனம் மிச்சத்தின் எச்சங்களாக எங்கும் எண்ணக் கணக்குகள் தவற எதிரிகள் எண்ணற்றுப் போக எதுமற்றவர்களாய் நாங்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.