கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கவிதையால் காதல் செய்கிறேன் இந்த கவிதை பகுதி ஒரு தொடர் கவிதை போல் எழுதுகிறேன் ஆனால் தொடர் கவிதை அல்ல .ஒவ்வொரு கவிதையும் தனி தனி அர்த்தமும் கருத்தும் கொண்டது . ஒரே திரியில் பலமுறை எழுதபோகிறேன் நன்றி கே இனியவன் ஏய் வான தேவதைகளே .... மறைந்து விடுங்கள் .... என் தேவதை வருகிறாள் .....!!! ஏய் விண் மீன்களே ..... நீங்கள் கண்சிமிட்டுவதை .... நிறுத்தி விடுங்கள் .... என் கண் அழகி வருகிறாள் ....!!! ஏய் வண்ணாத்தி பூச்சிகளே .... வர்ண ஜாலம் காட்டுவதை .... நிறுத்திவிடுங்கள் ..... என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!! + கவிதையால் காதல் செய்கிறேன்
-
- 16 replies
- 2.2k views
-
-
எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியது ஆளும் வர்க்கம். வன்னியில் இறுதிப் போரின்போது பச்சிளம் பாலகரிலிருந்து பல்விழுந்த முதியவர்கள் வரை எரிகுண்டுகள் வீசப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம், நெஞ்சுவிம்ம நாடிநரம்புகள் புடைக்க என்ன செய்வது ஏதுசெய்வது என்று அறியாது தவித்தோம். எல்லாவற்றையும் விட க் கொடிதினும் கொடிதாய், எம் அக்கா தங்கைகளின் மானத்தைச் சூறையாடியதுமல்லாமல் அவர்கள் கழுத்துகளைத் திருகிக் கொன்றான் எதிரி. எப்படிப் பொறுப்போம். இரதகஜதுரகபதாதிகளையிழந்து வெறுஙகையராய் நாம் நின்றோம். கையிலிருந்த வில்லம்புகளுக்குப் பதிலாகச் சொல்லம்புகளே எமக்கு மிஞ்சின. அனியாயங்களைச் செய்தவன் ய…
-
- 2 replies
- 2.2k views
-
-
புத்தன் காந்தி யேசு பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக தமிழா நீ புத்தன் ஆக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உனக்கு மொட்டையடித்து காவியுடை மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ காந்தியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சுட்டு விட்டு கோவணம் மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ யேசுவாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சிலுவையில் அறைந்துவிட்டு ஒரு துண்டு துணி மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ புலியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை பார்த்து தலை வணங்கி விட்டு போவான்.
-
- 9 replies
- 2.2k views
-
-
நீ திருந்தவே மாட்டாயா.....??? ஏய் சமுதாயமே பெண்ணுக்கு மட்டும் இங்கு பெரும் தடைகள் ஏன்....??? காலச்சாரம் என்றிங்கு கால் கட்டு ஏன்...??? இரக்கம் இன்றி அவள் மீது அடக்குமுறை ஏன்.....??? மண் பார்த்து மங்கையவள் நடக்கவேனும் என்கிறியே.... பண்பாடு என்றுயதை வந்து வேறு முழங்கிறியே.... காளையோடு பெண்ணவளை கதைக்கலாகா என்கிறியே.... அது மீறி பேசி வந்தால் அபச்சாரம் என்கிறியே... கட்டியவன் தனை இழந்தால் விதவை என்று உரை(த)க்கிறியே... இவள் முன்னாடி வந்தாளே முழிவியழம் என்கிறியே.... சந்தி சபைகளிலே பின்னாடி வைக்கிறியே... இன்நாளு வரைக்கும் இதை இழிவாக செய்யிறியே...…
-
- 16 replies
- 2.2k views
-
-
உன்னை சுவாசித்த நாட்கள் கண்களை ழூடிப்பாத்தேன் கண்ணீர் வரவில்லை-- கண்களை திறந்து பாத்தேன் கண்ணீர் வந்தது --காற்றின் ஒளியினால் உன்னை நினைத்து கண்களை ழூடினேன் கனவுகள் வருவதில்லை நீயும் தெரிவதில்லை-- என்னையே நினைத்து கண்களை ழூடினேன் அந்த கனவில் நீ அல்லவா ...தெரிந்தாய் உன்னிடம் பேசினேன் உன் மௌனத்தை புரிந்து கொண்டேன் ------- மெய்யானாலும் பொய்யானாலும் உன் மனசுக்குள் இருப்பவன் நான் அல்லவா காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி கனவில் வந்து என்னை கலாட்டா பண்ணுவாய் ஆனால் நேரில் வந்து நின்றாலும் நிமிந்தே பாக்கமாட்டாய் ஏய் திருட்டு பொம்மை உன்னையே நினைத்து ...பாரு உன் கண்களில் நீர் கசியுமா உன் கல்லான மனதாலே என்…
-
- 11 replies
- 2.2k views
-
-
தாயிருந்த மண்ணைவிட்டு சமச்சிருந்த சோத்த விட்டு ஊரழிய வந்தோமே ஒன்றுமின்றிப் போனோமே தோல் நிறமும் மாறலியே சொந்த குணம் போகலையே தேரிழுத்து வீதியெல்லாம் செய்த தவம் காக்கலையே புலம்பெயர்ந்து வந்து புலம்புவதால் என்னபயன் மட்டக்களப்போடு மன்னார்தான் போனாலும் வன்னி இருக்குதென்று மகிழ்வோடிருந்தோமே! வெட்டி அரிந்தெம்மை வேரோடு சாய்க்க வென்று வாசலிலே நிற்பவனெம் வாழ்வை அழிப்பானோ! சுற்றிவர நின்று சுடும் பகையைக் காலெடுத்து எற்றி இறைவா எமக்குதவி செய்யாயோ! (யாராவது இந்த ஒப்பாரியைத் தொடருங்கள்.)
-
- 9 replies
- 2.2k views
-
-
கார்த்திகை ஒளிர்கிறது மலரும் மலர்கிறது கண்ணீர் அரும்பிட கண்களில் படர்ந்தவர் நினைவுகள் மனதில் பெருகிட… மரணம் மண்டியிட மண்ணில் வீழ்ந்தோம் அன்னை மடிமீது அந்நிய ஆதிக்கம்… உயிர் மூச்சு நெருப்பாக்கி உற்ற கடமை செய்தோம்..! உறவுகள் எமக்கு உலகெங்கும்.. உணர்வுகள் எமக்குள்ளும் உயிர் வாழ… உங்கள் உரிமைக்காய் உயிர் கொடுத்தோம்…! உறங்கும் நாள் குறித்தோம் எங்கள் வாழ்வுக்காய் அல்ல… உங்கள் பிஞ்சுகள் உரிமை கொண்டாட தமிழன் நான் "தனித்துவமானவன்" எண்ணங்கள் காத்திடுங்கள்…! இன்னும்… உற்ற அன்னை உள்ளுக்குள் அழுகிறாள்... உருவில்லை என்றாலும் எங்கள் மூச்சுகள் உணருது..! உங்கள் மூச்சொடு இறுதி இலட்சியம் வென்றிடுங்கள் வீணடிக்காது விரைந்து வீர வரலாறு இறுதி அத்தியாயம் எழுத…
-
- 20 replies
- 2.2k views
-
-
"சங்கமாடிய தமிழ் என பேசிய தம்பிமாரெல்லாம் கடல் கடந்தனர் துப்பு கெட்டவர் நாயிலும் கீழவர் அகதி லேபலில் தூசி தட்டட்டும் கப்பலேறி கனடாவில் நக்கட்டும்" - -புதுவை இரத்தினதுரை நன்றி. உண்மையிலும் உண்மை.
-
- 11 replies
- 2.2k views
-
-
தடமரித்த லாகா அலைஇ மகளிர் படமெடுத்துப் போட்ட அது தேடின் திரும்பா அலைநின் விழியிரண்டும் ஆடவள் கண்ணில் உளவே நுரைபால் இனிமை இலமே உளது நுரைக்கும் அவளின் நுரை இரைச்சல் அடங்கி அலைபுரளும் பெண்டிர் உரைச்சல் தவழ்ந்து வரின் முத்துக்கள் என்ப விலையில்லா நல்மணிகள் அத்துணையும் கேசத்தின் ஈறு அசையும் அதரத்தே தோற்குமே ஈர்ப்பில் இசையும் கடலின் அலை தொல்கவின் பேராழி நீலம்போல் எஞ்ஞான்றும் நல்கவின் பெண்டிர் சிறப்பு வற்றா கடலன்ன அன்புடையாள் வற்றினள்நீர் வற்றிய வற்றிலும் பற்று கடல்குடித்தால் தீராது தாகம் மகளிர் மடல்குடித்தால் தீர்ந்து விடும் அஞ்சுதல் துஞ்சுதல் விஞ்சுதல் எல்லாமே வஞ்சியர் பின்னும் உள
-
- 5 replies
- 2.2k views
-
-
படத்தினைபெரிதாகப்பார்க்க இது புத்தர் ஞானம் பெற்ற சித்திரைநாளின் சிறப்புப்பரிசு. பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு பெளத்த தேசம் வழங்கிய விருது. அன்று விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன. பாருங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள். ஈரம் நொதிக்கும் இதயங்களே! தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே! எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள். ஏதும் அறியாமல், ஏன் சாகிறோமென்றும் தெரியாமல் குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்ப விருட்சம். பிஞ்ச அணைத்தபடி பூவும், பூவைப்பிணைத்தபடி காயும் தமிழருக்குக் காவலென்பதால் நாயும் ஏரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா? உலகமே! இதற்கும் உன் மெளனம் தான் பதிலா? …
-
- 1 reply
- 2.2k views
-
-
நீராவியென அனுபவத்திரட்சி ஒடுங்கும் தருணத்தில் முதுமை பெற்றேன் கட்டுடைத்த பெரும் குளமெனச் சிதரும் வார்த்தைப் பிரளயம் புழுதி மழையில் நனையும் பூவரசம் சருகெனச் சரசரக்க நீர்க்குடம் உடைத்த நெடி மாறாக் கன்றுகள் பறக்கும் மேகத்தை புகை என்ற பருவம் தொலைத்த அனுபவங்களின் சீவன் கட்டும் சொற்களை கன்றுகள் கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
-
- 7 replies
- 2.2k views
-
-
முதல் கோணல் முற்றும் கோணல் பழமொழியாம்... முதல் கோணல் முன்னேறும் அறிகுறி என்பேன் நான்.. முதல் முறை உயர்தரம்.. தோற்றபோது கவலையுற்றேன் இரண்டாவது முறையில் உயர்வான பேறு கொண்ட போது உவகையுற்றேன் முதல் காதல் கண்டதும் காதல் வழமைபோல் தோற்றது வேதனை கொண்டேன் என் சகியைக் கண்டதன்பின் அத்தோல்விதான் விதிக்கெதிராக நான் செய்த சாதனை என்பேன் உலகத்தில் ஒரு விஞ்ஞானியும் முதல் முயற்சியில் வெற்றிகொண்டதாக சரித்திரம் இல்லை.. பின்பு ஏன் நீ நினைக்கிறாய் தரித்திரம் என்று.. நண்பா என்னனுபவத்தில் சொல்கிறேன் முதல் தோல்விதான் முன்னேறும் முதல் படி மறந்துவிடாதே.. ஆகவே நண்பா தோல்வியைக்கண்டு துவளாதே,முயற்சிசெய் முடியாதது எதுவும் இல்லை
-
- 9 replies
- 2.2k views
-
-
1.1. செய்யுளும் கவிதையும் யாப்பு என்பது கட்டும் நியதி. யாத்தல் என்பது பிணித்தல், புனைதல். யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பு. எழுத்தும் அசையும் சீரும் தளையும் தொடுத்து அடிகளில் ஒருசேரக் கட்டிப் பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். செய்யுள் என்பது செய்யப் படுவது. பத்தியும் பாட்டும் காவியம் உரையும் செய்யுள் என்பதன் பிரதி பதங்களே. கவிதை என்பது கவினுற விதைத்தல். பாட்டு என்பது பாடப் படுவது. செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த மாலை போலச் சொற்கள் விரவி சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். மாலையின் நுகர்ச்சி மணமே போலச் செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம். மாலையின் ஊடகம் அதன்நார் என்றால் செய்ய…
-
- 2 replies
- 2.2k views
-
-
தூரம் அதிகமில்லை துயரம் இனியுமில்லை கைகட்டி நிற்பதனால்.. தமிழன்கை சோரவில்லை பொறுமையைக் காப்பதனால் பொறுப்புணர்வு மறையவில்லை.. நூறாண்டு இழப்புகள் தேடித்தரப்போவதை.. ஓராண்டு இழப்பால் உருக்குலைத்தல் விவேகமில்லை தலைவர் வீரத்தை தரம் பேசும் தகுதி தரணியில் எவர்க்குமில்லை உறவைப்பிரிந்த உயிர் உரம் கண்டதேயொழிய சோரவில்லை வீரம் மாறவில்லை மக்கள்வரிப்பணத்தால் மகிந்த கந்தக அரிவாள் செய்து தமிழனை அரிவதற்கு.. துணைபோகும் இனத்துரோகியர் வாழ்நாட்கள் நீளமில்லை கீபீர் போட்ட குண்டுகள் கிண்டிய குழிகளில் எங்கள் வயலுக்கு நீர் வார்க்கும்- சிங்களவன் பறித்த உயிரெல்லாம் போராளி ஆன்மாவில் புகுந்து உரம் சேர்க்கும்.. எரிந்த கொட்டில்கள்.. அடுக்குமாடி…
-
- 11 replies
- 2.2k views
-
-
உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு அக்கிரமம் இறுதியில் பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம் அதற்கு நீயும் விலக்கில்லாமல் ஆழ்கடல் நுனிமட்டும் அலைகிறதுன் ஆத்ம ஓலம்…… கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும் கதைசொல்லும் பொன்முகமும் பூவினும் இனியதாய் பொலிந்த உன் பெண்மையும் நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்…… நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை அலங்கோலமாய் அணுவணுவாய் படம்பிடித்து மகிழும் காட்சியாய் நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம் நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது…… தீயெரித்த கண்ணகியின் கோபத்தை கதைகளில் தான் படித்தோம். ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை சமகாலத்தில்…
-
- 0 replies
- 2.2k views
-
-
நினைவில் உருவாகி கனவில் கவிபாடி காதல் வழர்த்தேனடி... கனவை நினைவாக்க நினைவை நிஜமாக்க நீயே- வருவா யாடி....? உயிரில் உனதாகி உறவில் உனை வேண்டி மனதைக் கொடுத்தேனடி... உயிரில் உயிராகி உணர்வில் உனதாகி உலகை இழந்தேனடி... உலகில் நாம் வாழ உரிமை நீ யாக உனை நீ தருவாயா...டி........??
-
- 12 replies
- 2.2k views
-
-
ஆணிடமிருந்து பெண்ணிற்கு விடுதலை பெண்ணிடமிருந்து ஆணிற்கும் விடுதலை காதலில் இருந்து கற்பிற்கு விடுதலை கற்பிற்குளிருந்த காதலுக்கும் விடுதலை பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு விடுதலை பிள்ளையிடமிருந்து பெற்றோருக்கும் விடுதலை உறவில் இருக்கும் பாசத்திற்கு விடுதலை பாசத்திற்குளிருக்கும் உறவிற்கும் விடுதலை பணத்திலிருக்கும் சொந்ததிற்கு விடுதலை சொந்ததிற்குளிருக்கும் பணத்திற்கும் விடுதலை நட்பிலிருந்து தூய்மைக்கு விடுதலை தூய்மைக்குளிருக்கும் நட்பிற்கும் விடுதலை இறுதியில் பூமியிடமிருந்து மனிதனுக்கு விடுதலை மனிதனிடமிருந்து உயிருக்கும் விடுதலை!!
-
- 14 replies
- 2.2k views
-
-
வருக புத்தாண்டே... வரும் புத்தாண்டே வசந்தங்களோடு வாழ்த்துக்களையும் சுமந்துவரும்-உன் வரக்கரங்கள் தாய்மொழியை மறந்து தன்மானம் இழந்து வரலாற்றைத்தொலைத்து வளைந்து போன எம் மக்களின் கூன் விழுந்த முதுகுகளை நிமிர்த்திப்போடட்டும் சந்திகளில் நின்று சதிராட்டம் போடும் எங்கள் இளைஞர்களின் மூளைகளில் தன்மானச்சுடரெழுப்பும் தாய்நிலப்பற்றமைக்கும் அக்கினி விதைகளை அள்ளித்தூவி-அந்த உக்கிர வெம்மையிலே உன்கரங்கள் உலகைப்புடம்போடட்டும் கஞ்சிக்காய் கையேந்தும் ஏழைகளின் கரம்பற்றி அஞ்சக என்றழைத்து அவர்களுக்கோர் வழியமைத்து உன்கரங்கள் வஞ்சனையற்ற அவர் வயிறுகளில் சிறிதமிழ்தத்தை வார்த்துச்செல்லட்டும் உறவுக…
-
- 0 replies
- 2.2k views
-
-
வந்துவிடு வரைவில் ! தூக்கம் என் கண்களுக்கு தூரமாகிறது..... இரவுகளும் நீளமாகின்றன.. நிமிடங்கள் யுகங்கள் ஆகின்றன... தனிமை தரும் தாளாத துயரத்தை அணு அணுவாக அனுபவிக்குது உள்ளம் அழுதபடியே... வயிற்றில் பசியில்லை உணவில் பிடிப்பில்லை மனதுக்கு நிம்மதியில்லை எப்போது மீண்டும் உன்னுடன் கதைப்பேன்?... அதுவும் தெரியவில்லை... வெளியே சிரித்து உள்ளுக்குள் ஓயாது அழுகிறேன் செழிப்பிழந்த வதனத்துடன். நெஞ்சமே நீதானடி.....அதற்காகவேனும் வந்து விடு விரைவில்..
-
- 17 replies
- 2.2k views
-
-
-------------------------------------- மீன்பாடும் தேன்நாடு வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும். வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும் இளவட்டக்கண்கள் தென்றல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
அனாதைக் குழந்தையம்மா .. :..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:.. அன்புள்ள அம்மாவுக்கு…! அழுது…அழுது… அடம்பிடித்து வேப்ப மரத்தில் ஏறியொழித்து… இன்னும்….இன்னும்…. எத்தனை….எத்தனை… விட்டாயா…? ஏஐன்சிக்குக் காசுகட்டி எல்லாம் முடிந்தபின் – எனை கொற கொறவென இழுத்தபோது படலையைப் பற்றியபடியே நானிட்ட கூச்சல் ஊரையே கூட்டியதே…! மறந்துவிட்டாயா…? ஏனம்மா என்னை ஐரோப்பியத்தெருக்களில் அனாதையாய் அலையவிட்டாய்…? “உயிரெண்டாலும் மிஞ்சுமெண்டுதான் மோனை ஐயோ… வேண்டாம் நிறுத்து…! உணர்விழந்த உடலுக்கு உயிரெதற்கம்மா…? நான் சின்னப்பொடியனெண்டாப்போலை காம்பில வாறவன் போறவன் வெள்ளை.. கறுவல்.. காப்பிலி.. சப்பட்டை.. எ…
-
- 8 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
- 14 replies
- 2.2k views
-
-
விஜயனின் வழித்தோன்றல்களே ! ------------------------------------------- சிங்கத்தைப் புணர்ந்து உங்களைப் போட்ட அன்னைக்குக் கூட உங்களது செயலை நினைத்தால் அருவருக்கும் ! அருவருப்பின் வழிவந்த அரியண்டப் புத்திரரே(?) நீவிர் அழிவது உறுதியடா ! நரமுண்ணும் பிசாசுகளே நாலுகால் பிறவிகளே சாக்கடையில் மிதந்துவந்த சண்டாளப் பிறவிகளே உயிரற்ற உடலம் மீது உங்கள் இயலாமையை காட்டுகின்ற கோளைகளே கண்ணியம் புரியாத காட்டுமிராண்டிக் கயவர்களே நாய் கூடப் புரியாத ஈனச் செயல் புரிகின்ற ஊன மனம் கொண்ட ஈனப் பிறவிகளே புரிய வைக்கும் காலம் வரும் ! மனிதம் இல்லாத மானிட உருக்கொண்ட சிங்கத்துக்குப் பிறந்த சீரியமும் இல்லாத வீரியமும் இல்லாத பிணம் தின்னும் கூட்ட…
-
- 3 replies
- 2.2k views
-
-
தமிழ் படை ஆள் பற்றாகுறையால் பின் வாங்க இலட்சக்கணக்கில் போர்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் போலி பக்திமான்களும் உண்டு, அரை கோடி தமிழர் எதிர்த்து போராட இருபது மைல் தூரத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் ஏழு கோடி திராவிட தமிழ் வாய் வீர்களும் உண்டு, இரண்டு இலட்சம் தமிழரை இருபது வருடமாக முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழக்கத்தாரும் உண்டு, தமிழ் கோவில்களில் பாரசீக பாசையில் எதோ சொல்ல, விளங்காமல் நேர்த்தி நிறைவேற என்று கடவுளுக்கு இலஞ்சம் கொடுப்போரும் உண்டு, தமிழ் பிட்டையும், தோசையயும், கறி குழம்பையும், ஸ்ரீ லங்கா உணவகம் என்று சிங்கள எதிரிக்கு கோல் போடும் தமிழ் விற்பன்னர்களும் உண்டு, இன வெறியரிடம் இரண்டாயிரம் வாங்கி, தம் ம…
-
- 7 replies
- 2.2k views
-
-
நான் லிங்கமாலா ஆனேன் ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை. வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகிறது அதன் மூக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது அயல்…
-
- 12 replies
- 2.2k views
-