கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எங்கே என் உயிரே..... உயிரே ஏன் என்னை வெறுக்கின்றாய் நான் கேட்டது என்ன... நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பு.பாசம்.காதல் பொய்யா என்று கேட்டேன் ஆணால் நீ என் மேல் காட்டும் வெறுப்பு நீ ஆம் எண்று சொல்லுவதைப் போல் உள்ளது. தயவு செய்து எனக்கு ஒரு மெயில் அனுப்பு நீ என்னை வெறுக்கவில்லை எண்றும் மறக்க வில்லை எண்றும் ஏன் எண்றால் என் பதிலுக்காக காத்திருக்கிறாள் இன்னொருத்தி உன் பதிலைக்கேட்டுத்தான் நான் அவளுக்கு பதில் சொல்ல வேண்டும். என்ன பார்க்கின்றாய் யார் அவள் என்றா? அவள் பெயர் மரணம் அவள் என் பதிலை எதிர் பார்த்து என் தலைமேல் தவமிருக்கின்றாள். என் உயிரே நீ எங்கே எனக்கொரு மெயில் அனுப்பு..... (இவை நேற்று நடந்த உண்மை சம்பவத்தை தழுவியது)
-
- 6 replies
- 2k views
-
-
யாழில் 'கவிதை சீசன்' என்பதால், 'பணம்' திரைப்படத்தில் என்.எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடலை வருத்தம் கலந்த கற்பனையோடு என்னால் முடிந்த வரையில் 'உல்டா' செய்துள்ளேன்! எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? காற்று வீச சுத்திக் கிற…
-
- 8 replies
- 1.1k views
-
-
எங்கே போகிறாய்? வெளிநாட்டில் தமிழனுடனும் தமிழில்பேச வெட்க்கப்படுகிறாய் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... வேற்று மொழிபேசி நீயும் உன் தாய்மொழி மறந்து நீ எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்......... காதில தோடுபோட்டு எடுப்பாக நடந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தலைமுடிக்கு சாயம்பூசி குதிரைகால் செருப்புபோட்டு எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... வெளிநாட்டில் வந்து உன் பண்பாடு மறந்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்.......... தமிழின் சமயம் விட்டு தாவிக்குதித்து நீயும் எங்கே போகிறாய் தமிழா எங்கேபோகிறாய்..…
-
- 2 replies
- 1.3k views
-
-
சுற்றி சுற்றி வட்டமிட்டாய் உள்ளம் எங்கும் முத்தமிட்டாய் தேன் குழைய பேசி என்னை தேனி போல மொய்கவைத்தாய் காத்திருந்து கதைகள் பேசி காதல் வலை வீசிச் சென்றாய் கள்ளமில்லா எந்தன் நெஞ்சில் காதல் விதை தூவிச் சென்றாய் எட்டி நின்றேன் ஏணிப்படியில் கிட்டவந்து இறக்கி விட்டாய் என் உள்ளம் எல்லாம் உன் சிந்தை என்றாய் சிக்கித் தவித்து தேடிவந்தேன் தேடாமல் நீயும் போனது ஏனோ
-
- 17 replies
- 2.6k views
-
-
எங்கே போனீர்கள் எம்மோடு நின்று எதிரியை துரோகியை எதிர்த்து எழுத்தாணியால் பகை விரட்டுவீர் என்று நாம் கணித்திருக்க எங்கே போனீர்கள்......... புலி அடிக்கையிலே புலி வெல்கையிலே புகழ்ந்து புனிதரின் புகழ் பாடியோர் தோல்வி என்றதும் எங்கே போனீர்கள்......... பகைவரும் பதுங்கியிருந்தோரும் புரளியில் புகழ் தேடுவோரும் புது வரலாற்றை எழுத புனிதரின் சாட்சிகள் எங்கே போனீர்கள்......... புலிகள் வெடிக்கையிலே புலிகள் எரிகையிலே நானும் வருவேன் உம்மை மறவோம் என சத்தியம் செய்தீர்களே எங்கே போனீர்கள்......... சிலரைக்கண்டோம் வேறு பெயரில் வேறு அணியில் நடுநிலை என்ற பித்தலாட்டத்தில் இவர்கள் இப்படித்தான் மாற்றத்தை அடைப்போர் என்ற அறிவுக்கொழுந்தாய் எங்கே போன…
-
- 13 replies
- 1.3k views
-
-
எங்கேனும் இருந்தால் எழுது ஒரு பதில் நீ வருவதாய் கனவுகள் நீ எம்மோடு வாழ்வதாய் நினைவுகள்.... நினைவுகள் தின்று நெஞ்சில் துயர் மீதமாய்க் கனக்கிறது..... இரத்தம் செறிந்த புழுதியில் நீயும் புழுதியாய் கலக்கையில் ய…
-
- 5 replies
- 1.7k views
-
-
குறிப்பு: இக்கவிதை நான் வாசிக்கும் போது ஈழ மக்களின் அழிவும் அண்டைய தேசத்து அரசியல் "பருந்து/கழுகுகளுமே" என் கண்ணுக்கு புலப்பட்டார்கள் பருந்து உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா, பருந்து ஒன்று கோழிக் குஞ்சொன்றை அடித்துச் சென்ற காட்சியை? அதன் கூர்மையான நகங்களால் உங்கள் முகம் குருதி காணப் பிராண்டப் பட்டதுபோல் உணர்ந்திருக்கிறீர்களா? பறவை இனத்திற் பிறந்தாலும் விண்ணிற் பறக்க இயலாது குப்பை கிண்டித் திரியும் அதனை துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி! அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து அப் பருந்தோடு பருந்தாய் பறந்து திரிந்திருக்கிறீர்களா பாதையில்லா வானத்தில்? குப்பைகளை ஆங்கே நெளியும் புழுக்களை கோழிக…
-
- 0 replies
- 574 views
-
-
அங்கே மழை பெய்கிறது! எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன்
-
- 1 reply
- 717 views
-
-
இலங்கையில் புதையல் .. தமிழ் குழந்தைகளின் இளம் கைகள் கிடைத்தன ... ................................................................. காட்டுக்குள் கடுமையான போர் ... பறவைகள் பத்திரமாய் உள்ளன நல்லவேளை அவைகள் தமிழ் பேசவில்லை ...
-
- 1 reply
- 799 views
-
-
யார் தீனி போடுகின்றார்களோ அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள் தீனியில் பங்கு கேட்ட நாய்களை கடித்துக்குதறியது. சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது சில நேரம் தன்பாட்டில் கடித்து எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள் மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள் வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!! "எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்" சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி அழைத்துச் சென்றார்கள் எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள் வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு கப்பாத்து பண்ணிவிட்டார்கள் இது நாய்களின் அந்திம காலம் வேட்டையாடவும் தென்பில்லை செல்லப்பிர…
-
- 27 replies
- 3.4k views
-
-
எச்சரிக்கை துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம் துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம் அன்னையை அழிப்பினும் வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம் பள்ளிக்கு குண்டு போட்டினும் பதுங்கு குழியில்ப் படித்திடுவோம் பட்டினி நீர் போட்டினும் பசியுடனே படித்திடுவோம் குண்டு நீர் போட்டினும் குப்பி விளக்கில் படித்திடுவோம் புத்தகம் நீர் அனுப்பாவிடினும் நம் தமிழ்ப் பண்டிதரிடம் படித்திடுவோம் வெட்டுப் புள்ளி அதிகரிப்பினும் வீறுடனே படித்திடுவோம் வேலை வாய்ப்பு அளிக்கா விட்டால் வேளாண்மையுடன் பிழைத்திடுவோம் மலையே நீர் போட்டாலும் மாய்ந்து நாம் மடிய மாட்டோம் துளசி
-
- 3 replies
- 1.4k views
-
-
எச்சரிக்கை மடல் மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும், தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவு செய்து மேற்கொண்டு, இக்கவியின் இரத்த ஓடையை இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்! ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது. நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது. உந்தும் வலு உறுதியாக வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம் வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது. பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால் எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும். வலியின்றி வளர்ச்சி இல்லை. வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும். வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு…
-
- 20 replies
- 5.4k views
-
-
எச்சாதி சொல்வீரோ பத்தே வயதான பாலகனாய் இருக்கையிலே பதிலறியாக் கேள்வியொன்றைப் படித்தவரைக் கேட்டிருந்தேன் என்வயதை ஒத்துநிற்கும் எதிர்வீட்டுப் பையனுடன் ஏற்புடனே விளையாட எதற்காகத் தடுக்கின்றீர் முத்தமிழில் புலமைபெற்ற முன்வீட்டுத் தாயிடத்தில் தமிழ்ப்பாடம் படிப்பதற்குத் தடுப்பதுவும் எதற்காக? இத்தனையும் ஏன்என்று இதமாகக் கேட்டதற்கு இழிசாதி அவரென்று இரகசியமாய்ச் சொல்லிவைத்தார் சாதிகளில் பலசொன்னார் சமனுமில்லை எமக்குஎன்றார் சகபாடி எனச்சொன்னால் சண்டைவரும் இங்குஎன்றார் இச்சாதி கணிப்பதற்கு இருக்கிறதோ ஒருமார்க்கம் இடக்காகக் கேட்டதற்கு இலேசாகப் பதில்சொன்னார் பரம்பரையாய் வருகின்ற பழக்கமிது எனச்சொன்னார் செய்தொழிலை வை…
-
- 8 replies
- 1.5k views
-
-
நிலவின் நிர்வானத்தால் கடல் தினவு கொள்ளும் இரவுகளில் உன்னிரு இதழ்களிலும் வழிகிறது சுயத்தை தின்றுவிடும் சூட்சுமம்.. நம் அன்பு தொலைந்துபோன எட்டாவது வர்ணம் மழைப்பொழுதில் விழுந்து தொலைக்கும் மின்னலின் கனம் புல்நுனிகளில் திரளும் நீர் யாருமறியாமல் எங்கிருந்தோ எழுகிறது மறைகிறது உனக்குள் தொலைந்து போதலும்.. அபத்தப் பொழுதொன்றில் இளக்காரம் சுமந்து நெளியும் உதடுகளில் நேசத்தைக் கொட்டிவிட முனைந்து தோற்றுவிடுதலுடன் நீள்கிறது நமக்கிடையிலான களவொழுக்கம்.. வியர்வை நாற்றம் அறிய பயணித்து இடைவெளிகளில் பலியாகிக் போகின்றன ஓசையிழந்த முத்தங்களும் தீண்டல் தவிப்புகளும் துப்பிவிட்ட நேசங்களும்.. எட்டாவது வர்ணம் கொள்ளுதல் முரண் முரண்களால்தான் வாழ்வு வீடுபெறடைகிறது நம் அன்ப…
-
- 6 replies
- 812 views
-
-
எட்டி உதை தருவீரா ?? தேனினும் இனிய தெள்ளு தமிழில் தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன் பாவிசைக்க வந்தாலும் பக்குவமாய் பாடுவேனா ?? தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!! ஏறுமுகமாய் இருந்தவேளை பருத்தி விற்றது என்நகரம் அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய் நிரைகட்டியது ஒருகாலம் சுவையான வடையும் என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர் அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு என்பெயர் மைத்திரேயி !! ஆவலாய் வந்தவளை அள்ளிக் கொள்வீரா ?? இல்லை..... எட்டியே நின்று எட்டி உதை தருவீரா ? மைத்திரேயி 02 / 01 / 2013 பி .கு :இது நான் முதல் எழுதி அரிச்சுவடியிலை போட்டனான் . வாசிக்காத ஆக்களுக்கு திருப்பி போட்டிருக்கிறன் .நிர்வாகம் இது பிழையெண்டால் எடுத்துவிடுங்கோ.
-
- 11 replies
- 926 views
-
-
எட்டுத் திக்கும் முட்டிப் பொங்கு! உறவுக் கொடியே உணர்வைப் பொங்கு! எழுந்தது ஈழக்கொடியது என்று எழுகைத் தமிழே உரத்துப் பொங்கு! இன்னல் தன்னை இடித்துப் பொங்கு! இமயம் கொண்ட தாகம் பொங்கு! இனிவரும் காலம் தமிழரின் கோலம் உயரும் உயரும் பொங்கு! அண்ணன் காட்டிய பாதையிலே - எங்கள் அன்னையைக் காக்கும் விதி செய்வோம். (எட்டுத் திக்கும்) கொற்றத் தமிழே கூவிப் பொங்கு! சுற்றம் கூடி ஆளப் பொங்கு! செங்களம் வந்த சிங்களத் திட்டம் வேங்கையின் முன்னால் வீழ்ந்திடப் பொங்கு! தாயகத் துயரெல்லாம் தீ விழும் தமிழரின் பூமியில் அழகேறும். (எட்டுத் திக்கும்) திக்குத் திக்காய் தமிழே பொங்கு! தேசப்பாடல் பாட…
-
- 1 reply
- 1k views
-
-
எண்ணங்கள் எப்போதும் எதிரொலிகளாய் நிரப்பப்பட்டிருக்கின்றன எல்லையற்ற வெற்றிடங்களின் ஏகாந்தத்தில் கற்பனைகள் கண்டபடி பாய்கின்றன மனதின் விருப்பத்துக்கும் ஆசைகளில் அலைதலுக்கும் அங்கீகரிக்காதவை கூட அகலக்கால் வைத்தபடி எத்தனை தூரமும் எத்தனை வேகமும் கொண்டதாய் எந்திரங்கள் போலன்றி எதிர்ப்பற்று எங்கெங்கோ அலைகின்றன ஏன்தான் இத்தனை ஆசைகளோ எவரோடும் ஒப்பிட்டு ஒப்பற்று எதிரிகளாகின்றன எண்ணங்கள் எப்போதும் எம் மனதுக்கு ஏற்ராற்போல் எம்மை மட்டும் நினைவில் கொண்டபடி
-
- 2 replies
- 494 views
-
-
நள்ளிரவின் பொழுதினிலே உளத்தில் எழும் எண்ணங்கள், பள்ளி கொள்ள மனமின்றி எழுத்தில் எழுதத் தூண்டுகோல் பிறந்த ஊரும் சிறந்த வாழ்வும் மறந்த மனம் மீண்டும், பிரிந்த உறவுகளை பறந்து சென்று கண்ட பின் மாறும் மாந்தோப்பாய் வாழ்ந்த வாழ்வு தனி மரமாப்போச்சு ... பிரிந்து சிதறி வாழும் எங்கள் மனமும் மரத்துப்போச்சு... ஓலைப்பாய் தூக்கம் தந்த சுகம் பஞ்சு மெத்தையில் இல்லை... கலகலப்பாய் இருந்த மனம் தொடும் வேதனையின் எல்லை... அல்லும் பொழுதும் சொந்தம் பிரிந்து அல்லலுறும் நிலை - அதனில் கல்லும் முள்ளும் காலில் உறுத்தி தந்த வலி வலியில்லை இசை விளங்கும் தேசமது இசைக்கு இசைந்து வாழ்ந்தோம்... இச்சையின்றி புலம் பெயர்ந்து தேனிசையின் சுகம் இழந்தோம் தாய் மண்ணின் எண்ணங…
-
- 7 replies
- 1.1k views
-
-
உன் எண்ணம் உன் வாழ்க்கை! எண்ணங்கள் வானை நோக்கி! எழுத்துக்கள் உயர்வை நோக்கி! கண்ணிமைக்கும் காலம் கூட எடுத்துவை இலக்கை நோக்கி! நாளை என்று நாளைத் தள்ளி வைக்காதே உயர்வைத் தள்ளி! இன்று" ஒன்றே உண்மை தம்பி உயர்வாய் நீ உன்னை நம்பி! தடுமாற்றம் வந்து உன்னை தடம் மாறச்செய்யக் கூடும்! கொள்கையில் உறுதிகொண்டால் தடையது திரும்பி ஓடும்! கண்களில் தெளிவு கொண்டு எண்ணத்தில் வலிமை கொண்டு! உழைப்பினில் மகிழ்வு கொண்டு! வென்றிடு வாழ்க்கை நன்று! நன்றி.
-
- 10 replies
- 6.8k views
-
-
மனதினில் தோன்றும் மாயைகள் எல்லாம் முறியாத முட்களாகி சிந்தை முழுதும் சிதைத்து முந்தை வினை முழுதும் முடிவற்றதாக்கித் தினம் மதி கொன்று விதி வெல்ல வேளை பார்த்திருக்கிறது அன்பென்னும் அச்சாணி ஆட்டம் கண்டபடி என்றும் அச்சுறுத்தலைத் தந்து அகத்தின் அறம் தொலைய அல்லல் மட்டும் என்றும் அறிதியிடா நிலமாய் ஆணவத்தின் ஏணியில் எப்போதும் அமர்ந்தபடி எல்லைகள் அற்றதான எண்ணங்கள் விதையாகி ஏகமாய் எங்கும் பரவி எதிர்மறை விருட்சங்களை எங்கெங்கோ நாட்டி ஏக்கமுறச் செய்கிறதாய் எக்காளமிட்டபடி தினம் எதிர்வலம் வருகின்றன நீக்கமற நிறைந்திருக்கும் நிகழ்வுகளில் நிழல்கள் நாற்ற மனம் துறந்து நேர்வழி சென்றிடினும் நூற்பதற்கான நிலையற்று நகர்வதற்காய்த் தினம் நிறம் மங்கியதான ந…
-
- 7 replies
- 733 views
-
-
பதின்மங்களின் படிமக்கனவுகள்; புதினங்களாய் பேசிக்கொள்ளும் இரகசிய வார்த்தைகள்; இளசுகளின் சுத்தல்களில் பெருசுகளுக்குப் புரியாத தலைமுறை வளர்ச்சியின் வழக்கமான அதே காதல்! எப்போதும் புத்தம் புதிதாய் மின்னும் எண்ணங்களுடன் தோன்றும் மின்னல்கள்! மின்சாரம் இல்லாத ஊரில் மனசுக்குள் விளக்கெரியும்! இரு ஜோடி இதழின் அழுத்தத்தில் பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்! முதல் முத்தம் எப்பொழுதும் தலைக்கேற்றும் பித்தம்! முதன்முதற் காதல்.... காலத்தால் அழியாத இதயத்தின் மோதல்! சூரிய உதயங்கள் வரை வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த வாலிப பருவத்தின் வலிந்த போர்க்காலங்கள் ! கருவேப்பிலை மரத்தைக்கூட பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து பார்வையாலே …
-
- 5 replies
- 1.1k views
-
-
எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும் எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும் ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா? குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள். எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எத்துணை இடர்களுக்குள் எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள் வாழ இடம், வசிக்க வீடு உழைப்புக்கு வழி உண்பதற்கு உணவு உடுக்க உடை இப்படி எதற்குமே வழியின்றி தனித்து விடப்பட்டு மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம் பசித்து அழும் குழந்தையை ஆ…
-
- 4 replies
- 732 views
-
-
நந்திக் கடலில் பேரம் நடந்தது எம் மக்கள் நீந்தவும் முடியாது நிர்க்கதியாய் கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர் இப்ப மீளவும் ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம் எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி தமிழா அடித்துச்சொல்றாங்கள் இதுதாண்டா உலகமயமாதல் அமெரிக்கா பிரிட்டன் பிரான்சு மீட்பன்கள் அணு ஆயுதம் இருக்கெண்டு பாய்வினம் மக்களெல்லாம் சாகுதெண்டு அழுவினம் மக்கள் கரிசனை பொங்கிக் குண்டாய் பொழிவினம் எண்ணையிருந்தால் ஈழமெடுக்கலாம் தேர்தல் நெருங்கினால் அன்னை சோனியாவும் எமை ஆரத்தழுவும் தம் கையைமீறினால் தான் ராஜபக்சவும் கம்பி எண்ணலாமாம்–ம் எல்லாம் வல்ல தேசங்கள் வகுத்த நியதியாம் மக்கள் போரெழும் பூ…
-
- 7 replies
- 2.5k views
- 1 follower
-
-
<iframe src="https://www.facebook.coவெலிm/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthamilarivu%2Fposts%2F4136726713041863&show_text=true&width=500" width="500" height="414" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe> https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950
-
- 11 replies
- 1.9k views
-
-
எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே -ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி ஈர்பத்து மூன்றிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே - ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர் - கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள் - தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும் - பல துயரக் கதைகளும் மறந்திடுமோ - அந்த (எண்பத…
-
- 0 replies
- 448 views
-