கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஈழத்திரு நாட்டில்.. பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில்.. அடிமைப்பட்ட மந்தைக் கூட்டம் ஒன்றின் விடுதலைக்காய் புலி ஒன்று சொந்த வாழ்வை சொத்தாக்கி உழைத்தது. கூட இருந்த குள்ள நரிகளும் எட்ட நின்ற ஓநாய்களும் மந்தைகளின் வளர்ச்சி கண்டு வாயூறி நின்றன. சில கறுப்பாடுகளும் பட்டியில் காட்டிக்கொடுக்க தயாராகி நின்றன. அப்பப்ப திருடித் தின்றதை விட... ஒட்டுமொத்தமாய் தின்று தீர்க்க தீனியாக்கிட கூட்டுச் சேர்ந்து கும்மாளம் அடிக்க ஓநாய்கள்.. சிங்கத்தின் குகையதில் கழுகுகளின் காலடியில் தவம் கிடந்தன. கால நேரம் வாய்ப்பாகிப் போக சிங்கம் ஒன்றின் பேரினக் கோரப் பசிக்கு மந்தைகள் இரையாகின. சுற்றித் திரிந்த காகம்..கழுகுகள் மிச்சம் தூக்க.. ஓநாய்கள் எலும்பி பொறுக்கி …
-
- 9 replies
- 1.8k views
-
-
எமக்கொரு நாடு கேடா.... வெறுப்பு உமிழும் காலம் மீது வாழ்வு சூழ் கொள்கின்றது ஒரு கண்ணை மறு கண் பிடுங்குது தான் பார்க்கா காட்சிதனை நீ பார்த்தல் ஆகாது என ஆவேசம் கொள்ளுது எதிரியின் தணல் எடுத்து மறுகண்ணை சுடுது இது எம் சாபம் யுகங்கள் தோறும் நாம் இப்படி தான் இருந்தோம் ஒரே காட்சியை ஒவ்வொருவரும் வர்ணம் பூசி பார்த்தோம் என் வர்ணம் பார்க்காத கண்னை வீதியின் முடிவில் குச்சொழுங்கையில் குடி வைத்தோம் எம் கண்ணை நாமே குருடாக்குவோம் எம் கைகளில் நாமே விலங்கிடுவோம் வரலாற்றின் நீண்ட பக்கம் எங்கும் எம் தோல்வியை நாமே எழுதிக் கொள்வோம் எம் முதுகெலும்பில் எதிரியின் மாட்டுச் சாணத்தை அப்பியது நாம் எம் குடிசைகளி…
-
- 9 replies
- 1.6k views
-
-
பீரங்கிகளின் பாதத்தில் மண் பானைகளாய் மண்டையோடுகள் உடைய பட்டினி கிடக்கிறது பொங்கல். பாலசிங்கத்தின் கல்லறையில் கசியும் ஊதுபத்தி புகை அனைத்து தமிழர்களின் ஆக்ஸிஜன் காற்று. தாய்களின் மார்புகளில் பொங்கிய பால் பொங்கலை குடிப்பதற்கு எப்படி எழுப்புவது செத்துப்போன குழந்தைகளை? கடல் தாண்டி போய் வந்த பறவையே எப்படி இருக்கிறார்கள் எம் தமிழர்கள்? ஆண்டுக்கொரு முறை தமிழர் திருநாள் எப்போது பிறப்பார் தமிழர்? இந்திய விடுதலைக்குப் பின் பிறந்தவன் தமிழர் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன். 47 இந்தியாவுக்கு 2007 ஈழத்துக்காய் விடியட்டும்! நன்றி ஆனந்தவிகடன்
-
- 9 replies
- 1.9k views
-
-
பத்து மாதம் சுமந்தவளே எனை பாலூட்டி வளர்த்தவளே கண்ணின் இமையாய் காத்தவளே கற்றவனாக்க பெரிதும் முயன்றவளே நோயின்றி வளர்ப்பதற்காய் நோயாளி ஆனவளே அம்மா ஆனாலும் உனை வெறுக்கின்றேன். பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவளே தவறுசெய்துவிட்டாய் என்னம்மா வீரம்மில்லாத கோழையாய் நான் நண்பர்கள் மாவீரர்களாய் போராளிகளாய். நான் மட்டும் முகமிழந்து அந்நிய நாட்டில் ஆனாலும் சற்று ஆறுதல் அதற்காக போற்றுகின்றேன். தாய்பாலுடன் துரோகத்தையும் ஊட்டவில்லை. என் கருத்துக்களாவது விடுதலைக்காய் தாயே அதற்காக போற்றுகின்றேன் நன்றியம்மா
-
- 9 replies
- 1.8k views
-
-
இன்றைய காலையின் விடியலின் வரவினை அறியவிக்க சேவல் கூவவில்லை..! களவாடிப் போனது யார்,,,,? விழித்துப் பார்த்தேன் வெளிச்சத்தையும் காணவில்லை..! போர்-மே(மோ)கம் சூழ்ந்ததால் எமது காலைச் சூரியனும் காணாமல் போய்விட்டான்...! இன்றைய பொழுதுகள் நற் பொழுதுகளின் விடியலுக்கான... தேடல்களாய்-நாளும் தொடர்கிறது..... நமது விடியல் விடிகிறது விடியாப் பொழுதுகளாய்...!
-
- 9 replies
- 1.9k views
-
-
காகம் இருந்தும் கற்றுக்கொள்ள கிளிகளுக்கு கர்வம் அதிகம் நிறம் சரியில்லை என்றது ஆந்தைக்கு முழி சரியில்லை என்றது பிலக்கொட்டை குருவிக்கு துள்ளல் துடிப்பு அதிகம் என்றது உன் சத்தம் மெத்தக் கூடிப்போச்சு என்று செண்பகம் சொன்ன போது உனக்கு சோர்வு அதிகம் என்றது அடக்கி வாசி என்று அடைக்கலக் குருவி சொன்ன போது உடைத்து விடுவேன் மூக்கை என்று பேச்சுரிமை பேசியது பொந்துக்குள் கிளிகள் பத்திரமாக தனித்தனியே குந்தியிருக்கின்றது பொழுது சாயும் நேரத்தில் மட்டும் கூட்டம் கூட்டமாக தென்னோலைகளை கிழித்து விடுவதுடன் அடங்கி விடுகின்றது அது மார்கழியின் கெற்போட்டம் இல்லை கார்த்திகையின் கனமழை காற்றும் வேகமாக வீசி முன் வேலி முருங்கை முறிந்து விழ…
-
- 9 replies
- 2.8k views
-
-
எங்கு சென்றாலும் எந்த சபையானாலும் என்ன பொருளானாலும் எம்மவரைப் பாட மறந்ததில்லை எவர் மறந்தாலும் எவர் ஒழித்தாலும் எம் அழிவுக்காக வரும் ஒரு இரங்கல் ஆரத்தழுவி மீண்டும் நடக்க தூக்கிவிடும் தமிழரின் தலைவன் பிரபாகரன் தமிழ் இருக்கும் வரை அவனே நாக்கில் பேச்சில் தெளிவாய்ச்சொன்னவன் தமிழரின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் போயின இறுதியில் எம் வாலி.... ஒன்று மட்டும் உண்மை நாம் புதிதாக பிறக்கப்போகின்றோம் தேவை அப்படி........ மீண்டும் வருக எம்முள் பிறந்து எம்முள் எழுந்து வழி காட்டுக.... காத்திருக்கின்றோம் ஐயா...
-
- 9 replies
- 925 views
-
-
வாழையை மட்டுமில்ல....... கன்றையும் சேர்த்து ....... கழுத்து அறுவிட்டு ........... தமிழன் என்பதால்.. குருதி....... தன் தலையில் தெளித்து ....... கொண்டாடி மகிழுது சிங்களம்! அந்தி வானம் சூரியனை காவு கொள்ள...... இருட்டு பூமியை - எல்லாம் எனதென்று கொள்ளையடிக்க- அம்மா பயமாய் இருக்கு என்றிருப்பாய் ..... ஐயோ ஏன்டா........ நானிருக்கன் எல்லோ ....... அவளும் சொல்லியிருப்பாள்! பிஞ்சு விரல்கள் குளிருமென்று ....... ஊர் விசேசத்து உடுத்த .......... புடவை கொண்டு - உன் பஞ்சு கால்கள்... நடுங்காது - பாதம் வரை மூடி இருப்பாள்! அண்ணா உதைக்கிறான் ...... என்றே சிணுங்கி இருப்பாய்...... தள்ளி படுடா என்று சொல்லிட்டு...... உன் தகப்பனும் உறங்கியிருப…
-
- 9 replies
- 1.9k views
-
-
மெல்லிசையின் இனிமை மறந்தேன் இயற்கை எழில்மேல் ரசனை இழந்தேன் செயற்கைகள் நிறை வாழ்கை முறை அதனால் நானும் இங்கோர் எந்திரனானேன் உள்ளத்தின் ஓசையின் ஏவல் கேளாமல் உலகின் ஓட்டத்தில் ஓட விளைந்தேன் மனிதனின் மனிதத்தை மதிக்க மறந்து - கொண்ட பொருளினால் அவன் மதிப்பைக் கணித்தேன் பொருளோடு, கல்வியும் தேட வந்து வாழ்வு தந்த தேசத்தில் வாசம் கொண்டு தவழ்ந்து வளர்ந்த தேசத்தின் வாசம் மறந்து விழுமியங்கள் மறந்தேன், என் சுயத்தை இழந்தேன் (27 August 2010)
-
- 9 replies
- 1k views
-
-
ஆண்டவன் என்றனர் சிலர் அரோகர போட்டனர் பலர் அவதாரம் என்றனர் சிலர் அடிமையானார் பலர் மகான் என்றனர் சிலர் மயங்கினோர் பலர் மகாத்மா என்றனர் சிலர் மன்டியிட்டனர் பலர் பாபா என்றனர் சிலர் பஜனை வைத்தனர் பலர் மனிதன் என்றனர் கேள்விகள் எழுந்தன என்ன மதம் என்ன மொழி என்ன சாதி அசியனா ஆப்ரிக்கனா ஜரோப்பியனா.............. ஆயிரம் கேள்விகள்
-
- 9 replies
- 1.6k views
-
-
மாவீரர் துயிலிடத்தில் மாமாவைச் சந்திக்கும் துயரோடு ஆளரவமற்ற வனாந்தரத்துப் பெருமுகத்தில் அலைகிறது ஆன்மா. மீள் பொழுதின் வரவில் - உன் நினைவுகளைத் தெளித்துவிட்டுக் கனவாகிப் போனாய்.... நீயெழுதிய கடிதங்கள் மஞ்சள் கடதாசிப்பூக்கள் மறக்காமல் அனுப்பும் பிறந்தநாள் புத்தாண்டு வாழ்த்து மடல்கள் - உன் நினைவாய்க் கிடைத்தவைகள் எல்லாம் கண் முன்னால் உன்னை நினைவுபடுத்திபடி.... 'போய் வருகிறோம்' போர் நிறுத்த காலத்துச் சந்திப்பு முடிந்து பிரியும் நேரம் 'சந்திப்போம்' என்றாய் இன்று வந்த செய்தியுன்னை இழந்தோமென்கிறது. மாமாவின் மரணம் கேட்ட உன் மருமக்கள் சொல்கிறார்கள். 'கடிதம் மாமா' இனியெங்களுக்கு இல்லை... இதயம் நொருங்கிச் சி…
-
- 9 replies
- 2.7k views
- 1 follower
-
-
உன் ஒவ்வொரு சந்திப்பின்போதும் காதல் என்னை மொழிபெயர்த்து கவிதையாய் அழகுபடுத்தியது. உன்னை நினைத்துக் கொண்டு என்னைப் பார்தால் கண்ணாடியிலும் நீதான் தெரிகிறாய் உன்னை பார்க்க கவிதையோடுதான் தினம் வருவேன் கண்டதும் மெளனமாய் தலை குனிகிறாய் கண்டபடி வெளியில் சுத்தாதே உன்னில் விழிக்க எல்லாரும் தவம் கிடக்கிறார்கள். -யாழ்_அகத்தியன்
-
- 9 replies
- 1.8k views
-
-
வட்ட நிலவே முகமெனச் சொல்மின் மதி மாதம் தேய்ந்திங்கு வளரும் பிறை காண் அதுபோலவள் வதனம் ஆவது நிதம் கண் கொள்வதற்கு நானிலனே ஒடியுமிடை தனைக்கொடி யென்று கூறிடினும் மழைகாணாப் பயிரினம் கருகி நிலம் வீழும் அதனால் அதுவுமவளிடைக்கு உவமையிங்கிலையே செவ்விதழ்ழிரண்டிற்கும் ரோஜா மலரதனைச் சொல்லொப்பி நிற்கேன் அது சூறாவளிக் காற்றில் சிக்கும் உயிரிழந்துதிர்ந்தும் போகும் அவள் வெண் பல்லுக்குவமை சொல்ல முத்துக்குமிங்கே திருடர் பயம் அவளருகில் நானிக்கும் ஆயுள் நிறைந்து வர தினந் துதிப்பேன் கருங்கூந்தல் கண்ட மனம் கார்முகிலை நினைப்பதுண்டால் கதிரொளியில் வெந்ததுவிண்ணேறும் கலைந்ததுபார் காற்றுடனே கோதையவள் கருவிழிக்கிங்கே கயல்மீன் கண்டுவமை சொல்ல கறி…
-
- 9 replies
- 1.4k views
-
-
ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் நீ எனக்காக ஒவ்வொரு முறையும் இறக்குறாய் , கட்டத்தில் அடைக்க முடிய வில்லை உன் கரை கடந்த அன்பை வார்த்தைகளை தேடி வலு விழந்து போகிறது மனசு உன் ஏக்கங்களே எனது காபரன்களாய் எக்காளிக்கும் கூட்டங்களை தாண்டி வளர்கின்றேன் உன்னாலே . தூக்கம் தொலைத்த இரவுகளில் விம்மி வெடிக்கிறது மனசு விபரம் தெரிந்த நாளில் இருந்து வடிவாக பார்த்ததில்லை எந்நாளும் கடமையில் நீ ஒரு கர்ம வீரி , வீட்டையே உனது உலகமாக்கி யுகம்களை கணமாக்கும் சாமர்த்தியசாலி . இருபத்தியிரண்டு வருடங்கள் இருக்கவில்லை உன்னருகில் , காலங்களே பாரங்களாகி கனக்கிறது இதயம் , இருக்கும் பொது யாருக்கும் தெரிவதில்லை அருமை காலமும் என் வாழ்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
கதிரவன் கரங்கள் தீண்டக் கண்டால் சூரியகாந்தி நாணும்.. கார்முகில் வரவு கண்டால் மயில் தோகை கொண்டாடும் பனித்துளி ஒட்டக் கண்டால் புல்லும் கூசிக் கூனும் மழைத்துளி ஒளித்தொடுகை கண்டால் வானம் கோலங்கொள்ளும் தூறல்தன் முத்தம் கண்டால் நிலம் நிறம் மாறிப் பூரிக்கும் பூவிதழ் விரிதல் கண்டால் வண்டு போதை கொள்ளும் நீரோட்டம் தேடக் கண்டால் ஆறு சலசலத்து குதூகலிக்கும்.. தென்றல் தடவக் கண்டால் தென்னங்கீற்று தெம்மாங்கு பாடும் சோடியது கூடக் கண்டால் கானக்குயில் கவி பாடும்... சூரியனின் சூடு கண்டால் பனி உணர்ந்து உருகும்... வான் மழை புணரக் கண்டால் சிப்பி கர்ப்பம் தரிக்கும்.. பெண்ணே உனைப் புவி கண்டால் நயகரா உறையும்... நான் உன் அழகு கண்டால் சிலையாகிச் சரணடைவேன் உன்னிடம்..! இய…
-
- 9 replies
- 765 views
-
-
குண்டு மழை பொழிந்து குருதி ஆறு காணும் ஈழம் ஈன்றெடுத்த என் இனிய சிநேகிதியே உறவு தேடி வந்தாயா இல்லை உதவி தேடி வந்தாயா நம் மொழி பேசிய மக்கள் நம்மொடு இல்லையடி அமெரிக்க ஆங்கிலம் அழகாகப் பேசுவேன் தாய் மொழி கேட்டால் பேய் விழி விழிப்பேன் மென்பொருள் உறவில் மெய்ப்பொருள் மறந்து வீறுநடை போடும் சீறுடைப் பிணமடி நான் அடுக்குமாடி குடியிருப்பின் அங்கமாய் ஆறு மாத குழந்தை அப்பா என் முகம் பார்ப்பது தப்பாது இரவு பத்து மணி அவள் அம்மாவை பார்ப்பது அரை மணி நேரம் முன்னதாக அச்சடித்த காகிதத்தின் அவசர தேவைக்கு அகுறிணை யாகிப்போன உயர் திணையடி நான் திரைப்படம் இல்லையென்றால் திகட்டாது என் வாழ்க்கை நாளொரு "தினம்" கொண்டாட வேண்டும் …
-
- 9 replies
- 1.6k views
-
-
என்றும் அவளை நினைத்திருந்தேன் அவள் வரா நாட்களில் படித்ததையே மறந்தேன் நான் அவளுடன் தான் படித்தேன்-ஆனால் நான் அவளைத்தான் படித்தேன். நான் அவளுடன் தான் சுற்றினன் -ஆனால் நான் அவளைத்தான் சுற்றினேன். அவளைக் கண்டதும் காதல் கொண்டேன் பதிலுக்கு அவள் காதலை அறிய காத்திருந்தேன் எல்லோருக்கும் காதலர் தினம் மகிழச்சியாக இருந்தது எனக்கோ சொல்ல முடியாத ஒரு நிலமை அது நடந்து இவ்வருட காதலர் தினத்துடன் நான்கு ஆண்டுகள் ஆகிண்றன ஆனாலும் நேற்று நடந்தவை போன்று ஒரு இனம் புரியாத உணர்வு வாழ்க காதல் வாழ்த்துக்கள் காதலர்களுக்கு......
-
- 9 replies
- 2.6k views
-
-
-
தலைவரை வாழ்த்தி பதியப்படும் கவிகளை இங்கு இணைக்கிறேன் அறுபத்தியொரு கவிதைகளை இணைக்க வேண்டும் என்னும் ஒரு ஆசையில் முடிந்தால் நீங்களும் உங்கள் கண்களுக்கு தென்படும் வாழ்த்துப்பாக்களை இணையுங்கள் உறவுகளே . 1. எங்களுக்குள் இருக்கும் சின்னப்பிள்ளைத் தனங்களை நினைக்கும்போதுநீ இன்னும் எங்களுக்குள் ஆச்சரியங்கள் நிகழ்த்துகின்றாய்வெறும் பேச்சுக்களில் பிரபாகரன் ஆகிவிடவேண்டுமென நினைக்கும் வியாபாரிகள் மத்தியில் நீ தெளிந்த உருவமாய் தெரிகின்றாய் உனது மயிராகவும் கூட ஒருவனும் ஆக முடியாது என கடந்த ஆறு வருடத்தில் வரலாறு நிரூபித்துவிட்டது கால புருசர்கள் வெறும் கைதட்டல்கள் மத்தியில் உருவாக முடியாது. நெடும்புயல்களுக்கு பூகம்பங்களுக்கு நெரு…
-
- 9 replies
- 47.1k views
-
-
தமிழனையே தாக்குகின்றாய் நீயும் தமிழன் இல்லையடா? தேசியத்துக்கு துரோகம் செயவது நீங்கள் இங்கு ஏனடா ஏன் தான் நாய்கள் போல குரைக்கிறீங்கள் இங்கு ஏனடா கிணத்து தவளை போல நீங்கள் கத்துவது ஏனடா மாரித் தவக்கை போல கத்துவது நீங்கள ஏனடா கடசியில வயிறு வெடித்து சாவதும் நீங்கள் தானேடா தமிழனையே தூற்றுவது நீங்கள் ஏனடா இங்கு தமிழ்தாயின் துகிலை உரிவது ஏனடா?
-
- 9 replies
- 3.1k views
-
-
தமிழினி.. எனி... முகநூலில் தெரிந்தவள்.. படைப்பில் என்னை கவர்ந்தவள்.. வந்த இடத்தில் அறிமுகமானவள்.. போர்க்களத்தில் துணிந்து நின்றவள்.. சேனைகள் அழிந்த போதும் சோரமே போகாதவள்.. பொய்யில் புலம்பெயர விரும்பாதவள்.. நோயில் கூட உதவி தேடாதவள்.. போர் முடிந்தும் மங்கை மறைமுகமாகப் போராடினள்.. வாழ்ந்து பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொண்டவள்.. இன்னும் என்னென்னவோ பிறர் தரும்.. அடைமொழிகளை தாங்கி நிற்பவள்.... இத்தனை இதயங்களிலும் யார் உளர் அவள் கனவை இனங்காண.. நனவாக்க....??! தமிழினி எனி......................................................!!
-
- 9 replies
- 1.5k views
-
-
நிம்மதி தேடி வந்த அந்நிய தேசத்தில் என் பிழைப்பு; என் மதி நிறைந்ததோ சொந்த மண்ணின் நினைப்பு. மன அமைதி இழந்து நாளும் வாழ்கிறேன் வாழ்க்கை; தாய்மண்ணின் வாசத்தை நுகரத்துடிக்கும் நெஞ்சு. சோர்வுற்ற வேளை தந்தையின் ஆதரவும் நோயுற்றவேளை சாய்ந்திட அன்னை மடி பிரிந்து வாழ்வோம் என மறந்து சண்டையிட்ட சகோதரங்களின் இனிய பாசம் இவை இழந்தேன். ஓலைப்பாய் நித்திரை தந்த சுகம் நினைந்து - இங்கே பஞ்சு மெத்தையில் கூட நிம்மதியில்லா உறக்கம். ஓய்வுக்காய் மேலைநாட்டு மக்கள் செல்லும் தேசம் அது எம் தாயகம் போல் மன அமைதி தரும் இடமே. அந்நிய மண்ணில், அந்நியனாய் வாழும் நானும் -ஏங்குகிறேன் அவ் அந்நியன் போல்; என் தாய்மண்ணில் வாழ்ந்திடவே!
-
- 9 replies
- 1.8k views
-
-
வண்ண முகம் கொண்டவளே வடிவழகு யாழ்களமே கண்ணழகு கொண்டவளே கருத்தூன்றிப் பார்ப்பவளே பன்முகம் கொண்டவளே பவளவாய்ச் சொல்லமுதே பாடல் புனைகின்றேன் பாராட்ட உன்னையடி பதினாறு வயதில் பாவைநீ பார்த்து மயங்கிடும் அழகோடு பருவ எழில் பொங்க பார்ப்பவரை உன்பின்னே அலைய வைக்கின்றாய் கோல மயில் உன்னழகைக் கண் குளிரக் காணவென்றே கோடி மக்கள் நாடித் தினம் காலநேரமின்றி கண் விழித்து வருகின்றார் கருத்தூண்றி உன்னைக் கவனித்தும் வருகின்றார் தம் திறமை காட்டி உன்னைக் கவர்ந்திட தம்மால் முடிந்த வரை உன் தாள்களில் வரைகின்றார் ஆசை மனம் காட்டி ஆவலொடு நிதமும் ஆர்பரிக்க நிற்கின்றார் ஆனாலும் நீயோ பகட்டில்லாப் பாவை அனைவரையும் அரவணைத்து ஆசைமுகம் காட்டாது அன்பு மனம் காட்டி ஆண் பெண் பேதமின்றி அணைத்த…
-
- 9 replies
- 665 views
-
-
கவிதை பிறந்த கதை : மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்) மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த மங்கை மலந்திருக்கின்றாள் மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என் மனங்கவர் இளமை உற்றவள் பால் தூது ஏகாயோ? மல்லிகை சூடி மனதில் என்னை நிறுத்தக் கூறாயோ? சந்தனத்தின் சாயல் எடுத்து வெண்மதியில் முகமெடுத்து ஆனந்தத்தின் சுளையெடுத்து அழகூற இலங்கும் மங்கையவள் என் அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும் காதல் கொண்ட ஏழை நெஞ்சம் பாவையவள் படுத்துறங்கும் மஞ்சமாக வேண்டும் காதல் கொண்டு அர்ச்சிக்க கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும் காளை எந்தன் நெஞ்சம்…
-
- 9 replies
- 1.8k views
-
-
எனது பிரத்தியேக கோவையை நேற்று இரவு சரிபார்த்தபோது அதனுள் இருந்த சில "நிழற் பிரதி"களுல் ஒன்றாய் பின்வரும் கவிதையும் இருந்தது... ஆழமான அர்த்தமும் உணர்வுகளும் நிரம்பிய இக் கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் பிரியப்படுகிறேன்.. "நிலா"என்ற பெயரிலான பெண்போராளி எழுதியிருக்கிறார்..... நீங்களும் இரவும் நாங்களும் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து உங்களின் கரங்கள் நீளும் நிற்போம் "அண்ணை நானும் வரட்டா?" என்பீர்கள் வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம். ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள் ஒரு கணம் நிதானம் இழ்ந்து போனால் "டிம்" இல்லையோடா? என்று திட்டுவீர்கள். சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும். …
-
- 9 replies
- 2.1k views
-