கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எதிரியுடன் உனக்குத் தேனிலவு தமிழர்க்கு எல்லாம் தலைக்குனிவு நீயானாய் நாடாளும் அமைச்சனாய் தமிழர் காடெல்லாம் அகதிகளாய் ஆடுகிறாய் அழகியுடன் பெந்தோட்டையில் வாடுகிறோம் அழுகையுடன் இனவேட்டையில் உன்குடும்பம் பணத்துடன் வெளிநாட்டில் தமிழரெல்லாம் பிணத்துடன் சுடுகாட்டில் நீயின்று பகைவனுடன் படுக்கையில் தமிழினம் மரணத்தின் படுக்கையில் http://gkanthan.wordpress.com/index/eelam/bed/
-
- 1 reply
- 1.9k views
-
-
சுதந்திரக்காற்று... வீசத்தொடங்கிற்று 58 வருடங்களுக்கு முன்னால்.... ஆனாலும் நாம் சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!! நன்றி.. கார்ட்டூன் உரிமையாளருக்கும், தேடி உதவியவருக்கும்
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! காலம் 2013 ஆடி..., இரவு கரையும் ஈரத்தில் நந்திக்கடல் ஆழத்தில் நிலவு கரையும் நாளொன்றில் அர்த்த இரவொன்று....! அமைதியாய் ஓடியலைந்த அலையில் முகம் நனைத்த அன்றைப் பொழுதின் இனிமை இதய அறைகளில்...! காலம் 2009 மேமாதம்...., காலழைந்த அந்தக் கன இருளின் திரையூடே களமாடியகதை சொன்ன தோழியின் காலடிகள் மீளத் தேடியது நினைவு....! ஆழத்தொலைந்த அலைகளோடு என் ஆத்மா நிறைந்த ஆயிரமாயிரம் பேரின் முகங்களின் ஞாபகம் கண்ணீராய்....! மீளத்தொலைந்து போனது கடைசிக் கதைகளும் காலம் மறைத்த துயர்களும் பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....! பிரியம் நிறைந்த தோழி இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர் படமாய் ஒருநாள் பலந…
-
- 15 replies
- 1.9k views
-
-
அன்று எங்களை 1983 கலவரமும் தமிழர் போராட்டங்களும் உலுப்பியதுபோல கோபம் கொள்ள வைத்ததுபோல இன்று கலைஞர்களை, குறிப்பாகச் சமகாலக் கவிஞர்களை முளிவாய்க்கால் உறங்கவிடாமல் கோபத்தில் கொதிக்கவும் சபிக்கவும் வைக்கிறது. எமது வன்னி மண்ணின் இரட்டையர்களான கருணாகரனும் தீபச்செல்வனும் எழுதிய இரண்டு கவிதைகளை அதன் பொருத்தப்பாடு கருதிப் பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் 2017 - கருணாகரன் ( Sivarasa Karunagaran ) -------------------------------------------- இரத்தமும் உயிரும் உறைந்து அனலடிக்கும் இந்த மணல் வெளியில் நேற்றும் பட்டி பூத்திருந்தது இன்றும் பூத்திருக்கிறது நாளையும் பூக்கும் நேற்றைய பட்டிப் பூக்கள் தனித்திருந்தன. இன்று வெள்ளை உடைகளில் விருந்தாளிக…
-
- 2 replies
- 1.9k views
-
-
யார்க்கெடுத்துரைப்போம்? யார்க்கெடுத்துரைப்போம் பாதுகாப்பு படையின் பாதகச்செயலை பிஞ்சுடன் பூவுமாய் செடியைப் பிடுக்கின்றார் நான்கே மாதச் சிசு மார்பில் மூட்டிய அனல் ஆறவில்லை அடுத்து அடுத்து அனலை நெஞ்சில்க் கொட்டுகின்றார் யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை தம்பி உன்னை அடிக்கும் போது அண்ணா என்று கதறினாயா? :cry: அண்ணா உன்னை அடிக்கும் போது தம்பி என்று கதறினாயா? :cry: கண் முன்னே பாலகரை வதைக்கும் போது மகனே என்று கதறினாயா? :cry: உன் மனைவியைச் சூறை ஆடும் போது கண்ணே என்று கதறினாயா? :cry: யார்க்கெடுத்துரைப்போம் பாதகர் பாவச்செயலை எப்படி எப்படி குமுறலுடன் உம் உயிர் போயிருக்கும் நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் …
-
- 5 replies
- 1.9k views
-
-
என் கண்ணே சிரி!! எதற்காக அழுகிறாய் கண்மணி? என் ஒவ்வொரு தோல்விகளிலும் சோராமல் தோள் தந்தவள் நீ! "துவள்வதும், துவண்டு புரள்வதும் ஆண்மைக்கு அழகல்ல" என்று என்னையே எனக்கு அடையாளம் காட்டியவள் நீ!!.. இன்று உன் விழிகளில் ஏனடி நீர்த்துளி?!! முள் கிழித்த என் விரல்கள் பார்த்தா?! முட்டாள் மனிதர்கள் முதுகில் குத்திய தடயம் பார்த்தா?!!கண்ணி வெடி என் ஒரு கால் தின்றதைப் பார்த்தா?!! அடி பேதைப்பெண்ணே! உன் கையும் நம்(பிக்)கையும் இருக்கிறதே! துவளாதே கண்மணி வீரனுக்கு நம்பிக்கையே போதும்! சோராதே பெண்மணீ!. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!! எங்கே சிரி! துயரம் எரி!!...உன் புன்னகையில் தானடி என் வெற்றிக்கனி! நன்றி!
-
- 8 replies
- 1.9k views
-
-
குறுக்கால போனவங்கள் வேலை அவசரத்தில் வீட்டை போற வழியிலை நிக்கிறாங்கள் அறுவான்கள் கறுத்த துணியோடை மரங்களுக்கை உருவை மறைச்சு நிக்கிறாங்கள் அறுவான்கள் வண்டிகளை இளைகுழையாக்கி இரக்கமில்லாமல் நீட்டிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாங்கள் அறுவான்கள் சரி அந்தப் பக்கம் தானே ஆர் பெத்த பிள்ளையோ மாட்டக் கூடாதெண்டு கைகாட்டி அவனை மட்டாப்போடாப்பா மரத்துக்குள்ளை நிக்கிறாங்கள் அறுவான்கள் ஐரோப்பா முழுதும் அள்ளித் தெளிப்பான்கள் மக்கள் கட்டும் வரிப்பணத்தை கனவான்கள் கிரீசுக்கு இன்னும் காணாதாம் என்னத்தைச் செய்ய கிறுக்கர் நாங்கள் தான் இருக்கோமாம் போத்துக்கல்லும் போதாதாம் பொதுமகன் கையில் வைக்கிறாங்கள் சுமையை நிக்கிறாங்கள்அறுவான்கள் ஆழ்ந்த சிந்தனையில்…
-
- 31 replies
- 1.9k views
-
-
செருக்களத்துப் புலியொடுக்க தரணியெங்கும் முறுக்கெடுத்து தருக்குடனே தடைபோட்ட தனவான் தேசங்களே! கல்லுறங்கும் மாவீரர் எங்கள் உள்ளிருக்கும்வரை வில்கொண்ட கணைகளுக்கு வீதித்தடை என் செய்யும்?
-
- 6 replies
- 1.9k views
-
-
மூட்டை முடிச்சும் முட்டுவலியும் மூச்சிப்பிடிப்புடன் வீடு வந்து சேர்ந்தேன் வளைகுடாவிலிருந்து விடுதலையாகி வந்தேன்! மணக்கும் மனைவியின் முகமோ சுருக்கம் கண்டு; சுறுக்கமாய் முதுமைக் கொண்டு! முன்னாடி நிற்கும் எனைத்தெரிய கண்ணாடு போடும் திரை மறைத்த விழி! நரைக்கொண்டு கரைப்படிந்து; உழைத்தக் காசை செலவுச் செய்ய வியாதியுடன் வந்திருக்கிறேன் வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்! இளமைக்கு வேட்டு வைத்து கடமைக்கு ஓட்டுப் போட்டு கடனுக்கு ஒட்டுப்போட்டு; பாலையிலேப் பலக்காலம்! செழிப்பான வாலிபத்தை மாதச் சம்பளத்திற்கு விற்றுவிட்டு; நமக்கென்று துணைவேண்டி ஓடிவரமுடியாமல் ஊன்றி வருகிறேன் குச்சினை! எட்டி உதைக்கும் பிள்ளை வேண்டி ஏங…
-
- 11 replies
- 1.9k views
-
-
பீரங்கிகளின் பாதத்தில் மண் பானைகளாய் மண்டையோடுகள் உடைய பட்டினி கிடக்கிறது பொங்கல். பாலசிங்கத்தின் கல்லறையில் கசியும் ஊதுபத்தி புகை அனைத்து தமிழர்களின் ஆக்ஸிஜன் காற்று. தாய்களின் மார்புகளில் பொங்கிய பால் பொங்கலை குடிப்பதற்கு எப்படி எழுப்புவது செத்துப்போன குழந்தைகளை? கடல் தாண்டி போய் வந்த பறவையே எப்படி இருக்கிறார்கள் எம் தமிழர்கள்? ஆண்டுக்கொரு முறை தமிழர் திருநாள் எப்போது பிறப்பார் தமிழர்? இந்திய விடுதலைக்குப் பின் பிறந்தவன் தமிழர் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன். 47 இந்தியாவுக்கு 2007 ஈழத்துக்காய் விடியட்டும்! நன்றி ஆனந்தவிகடன்
-
- 9 replies
- 1.9k views
-
-
வாழையை மட்டுமில்ல....... கன்றையும் சேர்த்து ....... கழுத்து அறுவிட்டு ........... தமிழன் என்பதால்.. குருதி....... தன் தலையில் தெளித்து ....... கொண்டாடி மகிழுது சிங்களம்! அந்தி வானம் சூரியனை காவு கொள்ள...... இருட்டு பூமியை - எல்லாம் எனதென்று கொள்ளையடிக்க- அம்மா பயமாய் இருக்கு என்றிருப்பாய் ..... ஐயோ ஏன்டா........ நானிருக்கன் எல்லோ ....... அவளும் சொல்லியிருப்பாள்! பிஞ்சு விரல்கள் குளிருமென்று ....... ஊர் விசேசத்து உடுத்த .......... புடவை கொண்டு - உன் பஞ்சு கால்கள்... நடுங்காது - பாதம் வரை மூடி இருப்பாள்! அண்ணா உதைக்கிறான் ...... என்றே சிணுங்கி இருப்பாய்...... தள்ளி படுடா என்று சொல்லிட்டு...... உன் தகப்பனும் உறங்கியிருப…
-
- 9 replies
- 1.9k views
-
-
என் காதலுக்கு, காலை வணக்கம் சொல்லித் தொடங்கும் என் வேலை இன்று போட்டாலும் பதில் இல்லை எனும் போது தளர்கிறதே என்நிலை! வண்ண வண்ண எழுத்தால் என் எண்ணம் நிறைப்பாயே அள்ளிக் கொஞ்சும் அன்பால் வளைத்து அணைப்பாயே கரும்பினிக்கும் கருத்தால் கவிதை வடிப்பாயே ஓடிவந்துனை கட்டிக்கொள்ளத் தோன்றும் என் உயிரின் பெரும்பேறே! நீ இன்றி ஓடவில்லை வேலை இங்கு இப்படியோர் நிலைகொடுத்தாய் சரியோ சொல்லு!? பாதி வழி வந்த போது தாயைத் தொலைத்த குழந்தை போல் தவிக்கிறதே என் மனது! நிழலாகித் தொடர்கிறது உன் நினைவு உயிருக்குள் வழிகிறது உன் உறவு அன்பு தந்து என்னை சொந்தம் கொண்டாய் அன்பே! நீ இன்றி நகரவில்லை என் பொழுது! உன் குறும்புத்தமிழ் கேட்கும் போது மனம் குளிரும் செந்தமிழின் செழிப்பினிலே த…
-
- 8 replies
- 1.9k views
-
-
என்னுடைய வலைப்பதிவில் நான் போட்ட இந்த குரல்பதிவு எப்பிடி இருக்கென்று சொல்லுங்கள்...யாழில் audio எப்பிடி இணைப்பதென்று தெரியவில்லை அதனால் இங்கே சென்று கேளுங்கள். தத்தக்க பித்தக்க
-
- 12 replies
- 1.9k views
-
-
இனியது கேட்கின். ------------------------------------------------------------ நிதானமாக நடந்து வந்த குளிர்காலம் மரங்களைத் துகிலுரித்து அவற்றின் கிளைகளெங்கும் தன் நிர்வாண சர்வாதிகாரத்தை நிலைநாட்டியிருந்தது. நகரின் சந்தடிகளையும் வாகன இரைச்சல்களையும் விட்டொதுங்கி நீ நகர்ந்து கொண்டிருந்து கொண்டிருந்தபோது மனித முகங்கள் உன்னிலிந்து தொலைவில் உலர்ந்து ஆவியாகின. புனித மார்ட்டீன் ஓடையின் கரைகளை ஒளித்துவைத்திருந்தது மண்டிக்கிடந்த பனிமூட்டம் புறப்படுவதற்காகவோ அல்லது தரித்து நிற்பதற்காகவோ ஒரு உல்லாசக் கப்பல் அங்கு தனியனாக மிதந்துகொண்டிருந்தது. ஒரு பூனையும் வெளியே புறப்படாத குளிரிரவில் …
-
- 8 replies
- 1.9k views
-
-
கனவுகள் தோன்றாவிட்டால் ....இரவுகள் அழகுபெறுவதில்லை ....!காதல் தோன்றாவிட்டால் ....மனித பிறவிக்கு அழகில்லை ....!காதலே நீ நீடூடி வாழ்க ...!!!+கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!கவிதை எண் 01
-
- 4 replies
- 1.9k views
-
-
என் நண்பா என் நண்பா என்ன பயம் உனக்கு அவளுடன் பழகிய நாற்களை நினைத்துப்பாரு அவளோ தன் காதலை தயங்காமல் உன்னிடம் சொல்லி விட்டாளா------- நீயோஅவளுக்கு உன் காதலை சொல்ல மறுக்கிறாய் உன் நினைவுகள் வீனான கற்பனை தான் அந்த கற்பனை நிரந்தரம்இல்லை நண்பா? நீயோ உன் கண்களை முடியபின் பலவிதமான கற்பனைகள் உன் மனதில் மகிழ்ச்சியை தருகின்றது ஆனால்நீயோ உன் கண்களை விழித்த பின் பலவிதமான ஏக்கத்தையும் பயத்தையும் சிந்தனைகளையும் தருகின்றது? உன்சொல்லாத காதல் நீயோ தொலை தூரம் அவளோ நெடுந்துரம் உன் காதலை அவளுக்கு சொல்லிய பின் அவள் உன்னை ஏமாத்தி விடுவாளோ என்று ஏக்கம் உனக்கு ? ஒவ்வொரு நாளும் அவளுக்கு என்னசொல்வது என்று உன்மனது துடித்துக் கொண்டே இருக்…
-
- 10 replies
- 1.9k views
-
-
உலகை வளைத்து உள்ளே நாட்டை துளைத்து நுரைத்து பொங்கும் நாலு பெருங்கடல்!! பவளப்பாறைகள் அதை உண்ணும் மீன்கள் மீன் பிடிக்கும் மீனவன் என ஒரு சங்கிலி தொடருக்கு ஆதாராம்!! கட்டுமரம் முதல் கப்பல் வரை கட்டிக் காத்திடும் கடல்ராஜா இந்த பெருங்கடல்கள்!! நீலத்திமிங்கலம் நீந்தி பழகிடும் பென்குவின்களும் நடந்து சென்றிடும் டிஸ்கவரி காட்டாத இன்னும் பல உயிரினங்களை உள்ளே வைத்து ஆச்சர்யம் காட்டும் ஆழி பெருங்கடல்!! தண்ணீர் கொண்டு நாட்டை பிரிக்கும் எல்லை என்றனர் சிலர்!! ஆனால் தண்ணீர் கொண்டு நாட்டை இணைக்கும் பாலம் என்றனர் பலர்!! கடலின் அழகை ரசிக்க நினைத்தால் மகிழ்ச்சி பொங்கிடும்!! மாசுபடுத்தி அழிக்க நினைத்தால் …
-
- 0 replies
- 1.9k views
-
-
-
இன அழிப்பின் இறுதிப் போர் மே மாதம் கவிதைகள் தீபச்செல்வன் 17 May 10 12:15 am (BST) ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது. இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது. வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள். இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை. சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கிறது. குடி எரிந்து முடிகிறது. டெலிகப்ரர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா. எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தது. நான் தேடிக்கொண்டிருக்கிறேன். …
-
- 1 reply
- 1.9k views
-
-
-
வாழும் பூமி, வைகறை கவ்வும் சாகும் போதினில் தன்னிலை எண்ணும் வாசம் செய்ததும், வனத்தில் சாகசம் புரிந்ததும் ஏன் இன்னம் அடக்கம்? காசு இல்லையே! கைகளில் காசு இல்லையே!! காத்திட வாடா தமிழா!!! மறத்தமிழன் நீயோ மரத்தமிழனாகின்றாய் குறைத்தமிழ் ஏனோ கதைத்து தமிழ்க் குடும்பத்தை அழிக்கின்றாய் வெட்டுவேனாம், பின்பு காட்டுவேனாம் அதிலும் ஆயிரம் முறைகள் நொட்டுவேனாம் கத்துவேனாம், கூடவிருந்துவிட்டு குத்துவேனாம் என்று சொன்னவனெல்லாம் கூடு கூட இன்றி குறுகிக் காய்கின்றனர். வாழவிடம் இன்றி வசைபட்டு சாகின்றனர். ஆயிரம் பாயிரம் எழுதினாலும் ஆசைகள் குறைவதில்லை ஆசைகள் எட்டித்தான் வானத்திற் பறந்தாலும் மழைகளும் பொழிவதில்லை காலத்தின்…
-
- 7 replies
- 1.9k views
-
-
-
அதிகாலைப் பொழுதின், இருள் பிரியாத நேரத்தில், ஆயிரம் பயணங்களில், அதுவும் ஒரு பயணமாகியது! அப்பாவின் பனித்த கண்களும், அம்மாவின் அன்புத் தழுவலும், அந்தத் தேங்காய் உடைத்தலில், அமிழ்ந்து போனது! கலட்டிப் பிள்ளையாரின், கடவாயின் தந்தங்கள், கொஞ்சமாய் அசைந்த பிரமையில், சஞ்சலப் பட்டது மனம்! விரியும் கனவுகளில், வருங்காலக் கேள்விக்குறி, விரிந்து வளைந்து, பெருங் கோடாகியது! தூரத்தில் தெரிந்த நீரலைகள், கானல் நீரின் கோடுகளாய், ஈரம் காய்ந்து போயின! கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும், காற்றாடியாகியது பயணம்! புலம்பெயரும் புள்ளினங்களே!, போன பயணம் முடித்ததும், போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு! போகுமிடமெல்லாம் கூடு கட்டும், பயணமாகியது, எனத…
-
- 17 replies
- 1.9k views
-
-
நெய் வடியும் அழகு வதனங்களா.. பொட்டு நிறை பிறை நுதல்களா.. ஓடை நீரோட்டம் கோலம் போடும் பின்னல்களா.. அள்ளி போர்க்கும் மாராப்பு குரும்பைகளா... சங்குக் கழுத்தில் மின்னும் பசும் தங்கங்களா.. வளையல் போட்ட வளைக் கரங்களா.. தொடப் பூரிக்கும் மென் விரல் பூக்களா... மெல்லப் புன்னகையில் மெத்த பேசும் பதுமைகளா.. ஐந்தடி என்றாலும் ஐஸ்வரியம் ஆளைக் கவரும் வர்ணங்களா.. நேர் நோக்கையில் விழி தரைநோக்கும் நாணல்களா.. உங்கள் வாய்மொழி தமிழ் மொழி தேன் சுரக்கும் கொவ்வைகளா.. அந்த தகுதி ஒன்றே போதும்... நீங்கள் தானடி எங்கள் இதயம் கிள்ளும் தமிழச்சிகள்..! (படம்: முகநூல்)
-
- 8 replies
- 1.9k views
-
-
ஆரியச் சக்கரவர்த்தி ஆசோகனின் காடைக் கடையன் விஜயன் பரம்பரையில் உதித்த சிங்கள தேசத்தில் 50 களில் தமிழ் பெண்கள் மார்பறுத்து கொதி தார் ஊற்றி... அனல் தணல் மீது விட்டெறிந்து கொடுமை செய்து.. கூடி நின்று கேலி செய்து வெற்றிக் கோசம் போட்டு மகிழ்ந்த கூட்டம்... 83 இல் அதையே அகலப்படுத்தி தமிழச்சிகள் சேலை களைந்து மானபங்கப்படுத்தி தமிழர் குடியையே ஆடை இன்றி விரட்டி அடித்து மகிழ்ந்து நின்று.. மகாவம்சம் வழி வீரம் பேசிக் கொண்டது. அந்தக் காடைக் கழுதைகளை காட்டேரிகளை.. இராணுவம் என்ற பெயரில் உலக நாடுகள் அள்ளி வழங்கிய கொலைக்கருவி கொடுத்து தமிழர் பகுதிக்கு அனுப்பி வைத்தான் ஜே ஆர்..! ஒப்பரேசன் லிபரேசன் முன்னாடி தொடங்கி ஒப்பரேசன் லிபரேசனில் தமிழ் பெண்கள் …
-
- 9 replies
- 1.9k views
-