Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பேனையை விட எனக்கு பென்சிலாக இருக்க ஆசை ஏனெனில் நீ சீவி கூர் பார்க்கையில் உன் கன்னங்களில் அடிக்கடி... முத்தமிடலாம்.

  2. ஹைக்கூக்கள் 10 பார்த்து சிரித்ததால் முறிந்தது அடுத்த வேலியின் பூவரசந்தடி மங்கலம் பாடிக்கொண்டிருந்தாள் மனைவி மங்களம் தலையாட்டிக்கொண்டிருந்தது வேலியில் இருந்த ஓணான் இராணுவத்தால் வெட்டப்பட்டிருந்தது வேலி அழகாய் தெரிந்தது பக்கத்து வீட்டு கிணற்றடி இற்றுப் போனது கூரை சிரித்தன விண்மீன்கள் நீ தூங்கியதால் நான் தூங்கவில்லை குறட்டை. விரல்களின் நளினத்தால் விளைந்தது நல்ல இசை நடனமாடியது குழந்தை. நிலவில் கூட மேடுபள்ளமுண்டு இல்லை உன்முகத்தில் மேக்கப். வல்வையூரான்.

  3. யாழ் நகர் இந்துக்கல்லூரி பல கலை பயில் கழகமும் அதுவே தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே கீதம் இசைத்த கல்லூரி...! நல்லூரின் வீதியிலே இராசையா திலீபனை பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..! பொன்னம்மான் தொடங்கி... பல நூறு வேங்கைகள் தமிழீழக் களத்தில் அணிவகுக்க அழகு பார்த்த கல்லூரி..! ஒப்பரேசன் லிபரேசனிலே ராதா என்ற சாதனையாளனை சரித்திரமாக்கிய கல்லூரி..!! இன்று.. கிரிக்கெட் தொடர் என்று ஆனந்தாவோடு போடுவதென்ன.. சதிராட்டமா..???! ஆனந்தாவின் சிங்கள மைந்தர்கள் கோத்தபாய முதல் பொன்சேகா கண்டு பசில் ராஜபக்ச வரை.. பேரினச் சிங்களச் சேனையின் மூத்த இனவெறியர்கள்..! அன்னையே தெரியுமா அந்தச் சேதி உந்தனுக்கு..! தமிழினக் கொலையின் போர்க்குற்றவாளிகள் வேறு யா…

  4. அடிமை வாழ்வு வாழ்வதற்கு அகதியாதல் மேலதாம் அறிவு மெல்ல உந்தி நிற்க அணியணியாய்ப் பறந்தவர் அனைத்தையுமே துறந்து இங்கு அன்னியராய் நிற்கையில் அணைத்துச் செல்ல இணையவழி தந்தவரை நினைக்கிறேன். திசை தெரியாப் பயணம் தந்த திகில் நிறைந்த வேளையில் தவித்த எங்கள் தாகம் தீர்க்க தரணியிலே ஓர் களம் தமிழால் மட்டும் சேர்ந்து நிற்க தனித்துவாய் யாழ் களம் தந்த எங்கள் மோகன் அண்ணா விருட்சமாகத் தெரிகிறார் யாவரையும் அரவணைத்து கருத்துகளைப் பகிர்ந்திட யாழ்களத்தை அமைத்து எம்மை உணர்வினாலே இணைத்தவர் யாருமில்லை என்ற எங்கள் மனக்கிலேசம் தகர்த்தவர் யாதுமாகி நின்று களத்தை வழிநடத்தி வந்தவர் ஆண்டு பல சென்று விட்ட அகாலமான போதிலே அறிவுடனே ஆட்சிசெய்த அதிசயத்தை வியக்கிறேன் அடுத்தவரை நொந்திடாமல் …

  5. வேதப் பொருளே வெற்றுச் சிலையா நீ? சக்தியின் பெருவடிவே சங்காரத் திருவுருவே சிம்ம வாகனியே சிங்காரப் பெருந்தேவி சும்மா கிடக்கிறாயே.... உன் சுயம் எங்கு போனது? வேட்டை ஆடுகிறாய், வீதியுலா வருகிறாய் பாட்டம் கிடந்துழலும் பிள்ளைகளைப் பாராமல் மாற்றாரை உன் மண்ணில் மகிழ்ந்துலவ வைக்கிறாய் உனக்கென்ன கொலுவிருக்கும் இடமெல்லாம் கொண்டாடப் பெருங்கூட்டம் பட்டுப்பளபளப்பும், தங்கத் தகதகப்பும், பளிச்சென்று ஒளிவீசும் வைரச்சிலுசிலுப்பும், வெள்ளிக் கொலுசும், – வீரத் திருவாளும் , அள்ளி முடித்த கார்கொண்டை அலங்கரித்த வெள்ளி, பிறையும், துள்ளிக் குதித்தொளிரும் மின்னி மிடுக்கும் காணக்கண் போதாது அம்மையே….- ஆயினும்........ கள்ளச் சிரிப்பொளிரும் – உன் வதனக்கோலம் முள்ளாய் …

  6. Started by விசுகு,

    ஆளும் கட்சிக்கு வரி மீது ஆசை எதிர்க்கட்சிக்கு கரி மீது ஆசை மக்களுக்கு மானியம் மீது ஆசை தாத்தாவுக்கு முதல் போக ஆசை பாட்டிக்கு மகனோடு வாழ ஆசை மகனுக்கு - அம்மாவின் பென்சன் மீது ஆசை மருமகளுக்கு ஒரு சமையல் ஆசை கணவனுக்கு உழைக்க ஆசை மனைவிக்கு புருசன் வீட்டிலிருக்க ஆசை பிள்ளைக்கு அப்பா அம்மா வெளியில் போக ஆசை வாடிக்கையாளருக்கு வங்கிக்காட் மீது ஆசை வங்கிக்கு வட்டிமீது ஆசை விற்பவனுக்கு விலைமீது ஆசை வாடிக்கையாளனுக்கு கழிவு மீது ஆசை வாகன ஓட்டிக்கு வேகம் மீது ஆசை புகை பிடிப்பவனுக்கு- நூறு ஆயுள் மீது ஆசை இந்துவுக்கு இந்தியாவை ஆள ஆசை இசுலாமியருக்கு உலகை ஆள ஆசை கத்தோலிக்கருக்கு காசால் ஆள ஆசை வாலிபருக்கு திருமண ஆசை …

  7. a ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே ! நீ எங்கே இருக்கிறாய் ? ````````````````````````````````` ஓ ! பிரபாகரனே ! கதிர்க் கையனே! தமிழீழத்தின் அடிமையிருள் ... போக்க வந்த வீரத்திருச்சுடரே! தமிழினத்தின் தன்மான ஒளிவிளக்கே! இந்திய நாய்களின் வேட்டை மானே! நீஎங்கே இருக்கிறாய்? உன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாய் உன் ஆர்த்த அரியணை மேனிக்குக் குறி வைத்திருப்பதாய்ச் சொல்லிச் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களே, இராசீவின் வஞ்சக வேடர்கள்! தஞ்சம் கோராத தமிழனே! அஞ்சாமையின் தொகுப்பே! நீ,எங்கே இருக்கிறாய்? கனிவுக்குக் கைகொடுத்து, கல்போன்ற நின்தோளை நீவீ,-உன் கழுத்துக்குக் கத்திவைக்கும் எத்தர்கள், உன்னைச் சுட்டுப் பொசுக்கக் குறிவைத்துத் திரிகிரார்களாமே! மறம் மாண்ட தோற்றமே! அறம் மா…

  8. சண்டை களத்தில் சமருக்குப் பயந்து சாவுகளைச் சாட்டி சமுத்திரங்கள் தாண்டி சந்துபொந்தெங்கும் சரணடைந்திட்ட சாமிகளே... "சமரு"க்கு மட்டும் சாலை வரும் சங்கதி கண்டு சந்தி சிரிக்குது..! சனங்களின் பயபக்தியில் சன்னதமாடும் சாமியார்கள் சட்டுப்புட்டென்று சதுரம் வளர்க்க சந்தர்ப்பம் வழங்கியது போதும்..! சரித்திரம் படைக்க சண்டைக்குப் போன தேசம் சரிந்து கிடக்குது சார்ந்திருக்குது சந்ததி ஒன்று..தப்பிப் பிழைக்க..! சாவில் தான் சந்தர்ப்பம் கண்டும் கரங்கொடுக்க மறந்தீர்..! சரிந்தது போதும் அவ்வினம்.. சரணடைந்தொரு அடிமை வாழ்வில் சண்டித்தனம் இயற்றியதும் போதும்..! சட்டுபுட்டென்று காரியம் ஆகட்டும் சில்லறைகள் நிறையும் உண்டியல்கள் ஊருக்குப் போகட்டும் சாலை வரும் சாமிகளே…

  9. நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக் கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள் ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ…

    • 7 replies
    • 1.2k views
  10. சித்திரை நினைவுகள் சித்திரை நிலவில் நித்திரை நீக்கி - உன் முத்திரை விழி பார்த்திருந்தேன்... நிலவின் குளிர்ச்சி உந்தன் முகத்திலா..... உன் முகத்தில் குளிர்மை நிலவின் முகத்திலா - என்று குழம்பிய கணங்களைக் கடப்பதுதான் காதலின் சுகமா என்றிருந்தேன்.... என்னில் ஒட்டிய நினைவு நீயடி... உன் விழியால் எனை நனைத்தாயடி... உன்னால் காதலின் சுகமுணர்ந்தேனடி.... அதன் வலியிலும் மகிழ்ந்ததேனடி.... வலிக்கும் நிலத்தில் தான் என் வாழ்வு.... மறுபடி நீ வந்து - என்னை மணக்கும் பொழுதில் தான் பலிக்கும் என் நினைவென்று... சிந்திய முத்துக்கள் கொண்டு என்னை வழியனுப்பியவள்.... குரல் கேட்டு நாலு சித்திரை கடந்துவிட்டது.... அவள் நினைவுகளோ - என்னை அகல மறுக்கிறது...... எங்களைக…

  11. உய்தல் தேவஅபிரா மரணத்தைக் காலமும் கடலும் மட்டுமே எழுது மென்றிருந்தோம். எம் வாழ்க்கையின் மரணத்தை அரசர்களே எழுதினார்கள். மரணம் பெருநிலமானது… வாழ்வோ சிறுதுளியானது…. கரைத்துவிட அஸ்தி இல்லை.. கண்ணிர் விடச் சமாதியில்லை… காணாமல் போகவும் காத்திருக்கவும் கையறவும் நேராத போரொன்று சொல்.. இருப்பவரை ஏறிமிதிப்பவர்க்கு இறந்தவர்களை ஏறிமிதிப்பது கடினமா என்ன? உனதும் எனதும் பெறுமதி இருத்தலில் இருந்ததா? இறப்பில் இருந்ததா? இறக்கப் பழக்கிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் இருக்க விரும்பிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் கலந்து விசும்பில் அலைகின்றன. போரின் சதிரில் ஆடிவிட்டு பேயலையும் பெருநிலத்தில் …

  12. யார் தீனி போடுகின்றார்களோ அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள் தீனியில் பங்கு கேட்ட நாய்களை கடித்துக்குதறியது. சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது சில நேரம் தன்பாட்டில் கடித்து எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள் மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள் வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!! "எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்" சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி அழைத்துச் சென்றார்கள் எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள் வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு கப்பாத்து பண்ணிவிட்டார்கள் இது நாய்களின் அந்திம காலம் வேட்டையாடவும் தென்பில்லை செல்லப்பிர…

  13. {சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது} அரபிய மணற்படுக்கையின் அற்புதங்களே ஈச்சை மரத்து வேர்களே.. கூலிகளாய் நாம் அங்கு சிந்திய வியர்வை சிதறிய நீரில் வளர்ந்து பெருத்த திமிர்களே..! எட்ட வளர்ந்து கனி தரும் போது ஒட்டகமாய் தாங்கி நின்று பறித்துப் பெட்டியில் அடைத்து ஏற்றி விட்டு நாம் கூனி விட்டோம்..! எஜமானர்களின் எண்ணெய் காசில் நீரோ நிமிர்ந்து நின்று மினுமினுக்கிறீர்..! விமானம் ஏறி ஆசை கொண்டு அரபுலோகம் வர தங்கை மீது பழிமுடித்து அவள் தலை கொய்தீர்..! நீரோ.. வேரூன்ற கப்பலேறி தமிழீழம் வருகிற…

    • 82 replies
    • 6.3k views
  14. Started by கறுப்பி,

    • 3 replies
    • 833 views
  15. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எழுதி வாருங்கள் என்று இரண்டாம் வகுப்பு ஆசிரியை சொல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்த எனக்குக் காதில் விழுந்தது.. நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லையாயினும் எழுதி பல மாதங்கள் ஆனதால் ஏதேனும் எழுத எண்ணினேன்.. மரங்களைப் பாட வருகிறேன் நண்பர்களே.. மரமா? என்கிறீர்கள்.. மரம் மட்டமில்லை நண்பனே.. மரம் இல்லையேல் மனித இனமில்லை.. காற்றைச் சலவை செய்யும் இலவச இயந்திரம் மரம்.. மாசகற்றும் மாண்புள்ளது மரம்.. தாய்க்கு அடுத்து நம்மைத் தாலாட்டுவது மரம்.. உயிருண்டு மரத்திற்கு.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. இன்னொரு உண்மை சொல்லட்டுமா? ஆயுள் அதிகமுள்ள உயிரும் மரம்தான்.. அகழ்வாரைத் தாங்கும் ந…

  16. வீர வேலன் எங்கள் தோழன் ஊருக்கு நீ பாலகன் வீரர்களுக்கு நீ மாவீரன் கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான் நீ நொண்டி விளையாடினாய்... கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி நீ பந்து விளையாடினாய்.... பதுங்கு குழிகளுக்குள் மறைந்து கண்ணாமூச்சி விளையாடினாய்... நீ விளையாடிய விளையாட்டையும் கொரில்லா பயிற்சியாக ரசித்தார் உம் தந்தை உலகத் தமிழ்த் தந்தை... கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும் நெஞ்சை துளைத்த குண்டுகளையும் ஒன்றாகவே பார்த்த வீரன்... வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும் மார்பு பசிக்கு குண்டுகளையும் உண்ட வீரன்... நீ! பூக்களின் தேசத்தில் போர்க்களம் புத்தன் கை பிடித்தே யுத்தம் செய்த ஆரிய அரக்கன்... புத்தமும் காந்தியமும் கை கோர்த்தே பாலச்சந்த…

  17. இலங்கை ராணுவத்தை கவிதை மூலம் சாடுகிறார் (கவிஞர் வாலி ) அவர்கள். http://www.youtube.com/watch?v=_L3lpj80ItU

  18. சீனியம்மா என்னைப்பெற்றது என் அம்மாவானாலும் சிறுவயதில் உன்மடிதானே என் இடம் என் சீனியம்மா... நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி சித்திரமாய் என்னை வளர்த்தாய் ... உன்கை பிடித்தே நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது உலகமே என்கால் அடியில் ........ காலம் என்ற நதியில் கரைபுரண்ட வெள்ளத்தில் நீயும் நானும் மல்லுக்கட்டினோம்......... ஒவ்வரு வருடமும் இங்கு தோல் உரிந்து முடி உதிர்ந்து குளிர் வேளையில் உறையும் ஃபைன் மரங்கூட வெய்யில்பட புதுப்பெண் போல் பொலிவு பெறும்........ குருவிகளும் தேன் வண்டுகளும் ஃபைன் மரத்தை சுத்திவர , உனக்கும் எனக்கும் மட்டும் ஏன் சீனியம்மா கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல் பொலிவு இழக்கின்றோம் ?????????? காலம் கிழித…

  19. பாவிகளை மன்னிப்பாய். புலிக்குப் பிறந்தவனே, போர்க்களத்தில் சிறைபட்டு எலிக்கு கருவாடாய் இட்டதைத் தின்றாயோ? இனங்காத்த தந்தை இல்லாது போனதனால் பிணந்தின்னிப் பேய்தந்த பிஸ்கட்டை தின்றாயா? வஞ்சக உலகில் வாழ வேண்டாமென நெஞ்சிலே தோட்டாக்கள் நீ-வாங்கி னாயா? நீயுறங்க தாலாட்டு நின்அன்னை இசைப்பதற்கு பீரங்கி முழக்கங்கள் பின்னணியாய் கேட்டதடா வீட்டோரம் வெடிகுண்டு வேலியெல்லாம் துப்பாக்கி தோட்டாக்கள் எல்லாம்நீ தொட்டுவிளை யாடியவை ஒரு தோட்டா போதாதா உன்னைக் கொல்வதற்கு மறுபடியும் சுடடா வென மார்பைக் காட்டினாயா ? " அப்பா" வென அலறியதால் அச்சமுற்று சிங்களவன் அப்பாவி உன்னை ஐந்துமுறை சுட்டானோ ? வளர்ந்தால் தந்தைபோல் வரலாறு படைப்பாயென மலர்ந்ததும்…

  20. பல ஆண்டுகளுக்கு முன்பு வாசிக்கவும் எழுதவும் நேரமும் மன வெளியும் இருந்த காலங்களில், சில கிறுக்கல்களை நான் தாள்களில் பதிய, அவை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எழுதிய எதற்கும் மூலப்பிரதி என்னிடம் இல்லை. பிரசுரமான இதழ்களின் பிரதிகளும் பல்வேறு இடம்பெயர்வுகளின் போது ஒவ்வொன்றாகத் தொலைந்து போய் விட்டன. இவையெல்லாம் சிறு வயது மணல் வீடு ஞாபகங்கள் மாதிரி மனதில் மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கையில் அண்மையில் எனது பழைய கவிதை ஒன்றை யாரோ ஒரு நண்பர் முகநூல் வழியாக நினைவு படுத்தியிருந்தார். அக்கவிதையின் தடங்களைப் பின்பற்றித் தேடல் செய்த போது தான் நூலகம் என்ற அரிய தமிழ் நூல்/இதழ் ஆவணக்காப்பக இணையத் தளமொன்று இருப்பது தெரிய வந்தது (www.noolaham.org). இந்த இணைய…

    • 7 replies
    • 1.1k views
  21. அவசரப்படும் மனிதர்கள் அடைக்கப்படும் முன்கதவுகள் அடங்கி கூடடையும் பறவைகள் அமைதியாகிப்போகும் தெருக்கள் - என அந்திகள் அழைத்துவருவன அந்நியமானவொன்றாகவே போய்விடுகின்றன, நழுவிச்செல்லும் கதிர்களும் மினுங்கத்தொடங்கும் நட்சத்திரங்களும் ஒடுங்கிப்போகும் ஓரிரு பூமரங்களும் அந்தரத்தில் எழுந்தலையும் ஒளிப்புள்ளிகளும் புதர்களின் அரவங்களும்- இந்த அந்திகளை கோரமாக்கிவிடுகின்றன. இந்த, அந்திகள் இருளை மட்டும் சுமந்து வருவதில்லை பகல் பற்றிய பெருமூச்ச்சுக்களையும் பயம் நீங்காத சில இரவுகளையும் கூட அழைத்து வந்து விடுகின்றன, அநாயாசமாய் அந்திகளை அனுபவித்து வரவேற்கின்றன அரவங்களும் ஆந்தைகளும் புதிரான சில மனிதர்களும். என்னவோ தெரியவில்லை........... இன்னும், அந்திகள் வருவது …

  22. http://youtu.be/nSSv9Kk3tkI முன்னால் நின்றது மாரீசனின் மானல்ல மயங்கி நீர் அண்ணலை விட்டு ஆரணங்காகி அணிவகுக்க.. தாயக விடுதலைக் கனவே உம்மை அங்கு அணிவகுத்தது..! தந்தை செல்வா சொல்லி தந்தை பெரியார் வாழ்த்தி கலைஞர் தலையாட்டி எம் ஜி ஆர் கரம் நீட்டி அமிர்தலிங்கம் வெற்றித் திலகமிட யோகேஸ்வரன் கேட்ட இடத்தில் அணிவகுத்த இளைஞர் கூட்டத்தின் வழி நீவிர் நின்றீர் அண்ணன் பாதையில் கொள்கை காத்து..! களங்கள் பல கண்டீர் இந்திய வானரப்படைகளென்ன கொடும் சிங்கள பேரினப்படைகளும் கண்டீர். போதாதேன்று இலக்கிய காலமே கண்டிராத அமெரிக்கக் கழுகுகளும் இஸ்ரேல் வல்லூறுகளும் கூடவே... சீன ரகன்களும் பாகிஸ்தானியப் பிறைகளும் ரஷ்சிய அரிவாள்களும் உம் முன் மல்லுக்கட்டக் கண்ட…

  23. புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் முனைவர் இரா.செங்கொடி மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்க…

  24. ஆயிரம் கனவுகளுடனும் விழிமூடா தூக்கத்துடனும் உன்னோடு தினமும் வாழவிடும் இரவுகளும், அற்புத சுகமடி அர்த்த ஜாமத்தில் உன்னருகில் வந்து முத்தமிடும் சத்தங்களும், கட்டி அணைத்தபடியே யுத்தம் கொள்ளும் ஈருடலும் ஒவ்வோர் நாழிகையாய் வேரூன்றி கொள்வதுவாய், காலை எழுந்தவுடன் கண்ணை கசக்கிகொண்டும் உன்னை நினைத்துக்கொண்டும் மீண்டும் அந்த இரவுகளை தேடி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.