Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஏ சர்வதேச சமூகமே! கவிப்பேரரசு வைரமுத்து சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புக…

    • 1 reply
    • 1.3k views
  2. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு ஈழத்தமிழனின் வாழ்த்து ரோஜாவில் பூத்த ராஜாவே உங்கள் இசையோடு புலம்பெயாந்த ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள். நூறு கோடி இசைத் தொகுப்புகளால் உங்கள் முகம் உலகமெங்கும் விரிகிறது. இசைக்கு மொழியில்லை என்று உங்கள் இசையே உலகுக்கு புரிய வைத்தது இசைக்கு ஏது எல்லையென்று உலக விருதுகளே உங்களைத் தேடி வருகிறது. ராஜாவின் இசைத் தாலாட்டில் நாங்கள் நனைந்தாலும் உங்கள் இசைகேட்டபோது தான் துள்ளிக் குதித்து எழுந்தோம். தாயகத்தைப் பிரிந்து நாங்கள் குளிர்க்கூடுகளில் வாழ்ந்தாலும் உங்கள் இசையே எங்கள் வீடுகளில் ஊர்வலம் போகிறது. நீங்கள் மீட்டுகிற கறுப்பு வெள்ளைக் கட்டைகள் அது ஏழு கட்டையோ அல்லது எட்டுக்கட்டையோ …

  3. இது எங்கள் தாயகத்தைவிட்டு வெளிநாடு செல்ல ஏஐன்சிக்காரரிடம் காத்திருந்து, பின் ஏமாந்து போனவர்களுக்காகவும், இன்னும் வெளிநாடு வரமுடியாது. இலங்கை முழுவதும் அலைந்து, மனம் உடைந்து திரியும் உறவுகளுக்காக... என்ன? யாழ்கள உறவுகளே உங்களில்கூட எத்தனை பேர் இப்படிக் கஸ்டப்பட்டு வெளிநாடு வந்திருப்பீர்கள். அந்தக் காலத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் கண்களில் கண்ணீர் வழியலாம்.. உங்கள் மனதை தலாட்ட இப்பாடல் காதல் மொழி இறுவட்டில் இருந்து வரும் ஐந்தாவது பாடல்...கேட்டு மகிழுங்கள். http://vaseeharan.blogspot.com/ -please click here to listen... கருத்தைச் சொல்லுங்கள். பல்லவி ஏஐன்சிக்காரன் ஏமாத்திட்டான்- என் கதிர்காம முருகன் காப்பாத்திட்டான் அப்பாவின் காசு காற்றோடு போச்சு …

    • 24 replies
    • 3.5k views
  4. நீ தடம் பதித்துப் போகும் பாதவெளியில் பட்ட பனித்தூறல் அதன் சூட்டில் உருகிப் பின் என்னைப்போல் உறைகிறது காண் ஒயாமல் மோதி விழும் பனிச் சாரலது உரைந்த பனியதன்மேல் உள்ளக்கற்பனைபோல் கோபுரம் கட்டி எழ ஒரு கோடி மேளங்கள் ஒன்றாய் இசைப்பதுபோல் ஓடி வரும் வான்துளியின் ஒட்டலுடன் ஒளி கீற்றும் சேரந்து வந்து கற்பனையின் ஒப்பனையை கலைக்குது பார் இயற்கைக்கு இயல் இதுவோ? உண்டாக்கி உருப்பெருக்கி உருக்குலைத்து பின் உண்டாக்கும் பெரு இயலோ இவ்வுலகில் யார் அறிந்தும் யார் உணர்ந்தும் முடியாத கற்பனைபோல் கோலமிடும் உள்மனது வான் பரப்பின் மேகமதாய் வாழ்கை எனும் வாழ்வுக்கு

  5. Started by சொப்னா,

    கம்பஞ் சோற்றுக்கும் தென்றல் காற்றுக்கும் ஓற்றையடி பாதைக்கும் சைக்கிள் சவாரிக்கும் குளிர்ந்த மோருக்கும் பனைமர நுங்குக்கும் அம்மா அன்பில் பங்குக்கும் மனம் ஏங்குதடி... அவசர சாண்ட்விச்சும் பனி மழையும் குளிர் காற்றும் நெரிசல் ஹைவேயில் டொயோட்டோவிலும் கப்புச்சீனோவும் கோக் பாட்டிலுமாக வாழ்க்கைத் தொடருதடி! தாரா http://siragugal.blo...05/01/i_28.html

  6. Started by Thulasi_ca,

    ஏக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம் தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம் தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம் தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம் வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம் வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம் வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம் வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம் உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம் ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம் துளசி

    • 11 replies
    • 2.5k views
  7. Started by Thulasi_ca,

    • 13 replies
    • 2.9k views
  8. மனதெங்கும் எத்தனையோ மாயங்கள் அலைகளாய் எண்ணத்தில் தோன்றுவது எழுத்தில் வடித்திட முடியாததாய் காணும் காட்சிகள் கண்விட்டுப் போவதுபோல் நினைவுகளின் நீட்சிகள் தொடராதிருந்தால் எத்தனை இன்பம் மனம் எப்போதும் கொண்டிடும் காலத்தின் பதிவுகள் கனவின் கோலங்களாய் மனதில் மகிழ்வு தொலைத்து கண்கட்டிவித்தையில் கபடியாடுகின்றன கண் மூடும் வேளைகளில் கூட பகுக்க முடியாத எண்களாய் பகிரப்படும் நாட்கள் பம்பரமாய் சுழன்று மீண்டும் பரிதவித்து நிற்பதுவாய் நிமிடங்கள் நகர்த்தும் நாட்களாய் நெடுந்தூரம் செல்கின்றன தவிர்க்கவும் மறுக்கவும் மறக்கவும் முடியாததான பிணைப்பின் வலிமையில் மறுதலிக்கும் மனதின் செயல் எத்தனை கடிவாளமிடினும் எதுவுமற்றதாய் ஆகிவிடுகையில் எப்போதும் போல் என்னிலை ஏக்கங்…

  9. Started by கோமகன்,

    பசியின் வலி பார்வையில் தெறிப்பு முல்லையின் மைந்தர்கள் மற்றவர்களுக்கு பசி போக்கிய காலம் போய் ஒரு பிடி சோறுக்காய் நாலுகால் பிராணிபோல் ஆணவத்தின் பின்னால் ஆரோகணிக்கும் அவலம்தான் என்ன ? புலத்திலே புறணி படிக்காமல் பேச்சைக் குறைத்து செயலை கூட்டினால் நாலுகால் இருகாலாக வருமே!! ஒருநாளிற்கு ஒரு யூறோ போக்கிடுமே என் இனத்தின் இழிநிலையை ஒருவேளை சிங்கவம்சங்களுக்கும் நாளை இதே நிலை வரலாமோ ?? இப்பொழுது சிங்கங்கள் சிங்காரமாய் எம் நிலைகண்டு சிரிக்கலாம் அவர்களுக்கும் பசி ஆழிப்பேரலையாய் வந்தபொழுது கைகொடுத்தோமே ஏனெனில் நாங்கள் தமிழர் !!!!!

    • 6 replies
    • 995 views
  10. Started by கோமகன்,

    ஒரே ஒரு வெய்யில் காலம் எனக்கு கொடு! விதவைகளாய் இருந்த மரங்கள் பச்சை போர்க்க , ஊரெல்லாம் பண்பாடியே பறவைகள் பறக்க , சூரியனும் பனிக்கு பாய் ( bye ) சொல்லி ; சூட்டுக்கு ஹாய் (hi )சொல்ல , அது கண்டு என் மனம் உவகை பொங்கும் . மெலிதாகவே என் மனம் வருடும் மெல்லிய காட்சிகள் நிறைந்த ஒரே ஒரு வசந்தம் எனக்குக் கொடு ! அந்த காட்சிகளை நிரவிக் கொண்டபின் , சந்தோசத்துடன் என் இதயம் சத்தத்தை அடக்கத் தயார் .

  11. Started by Vishnu,

    காதல் நினைவினிலே காதலி உன்னை பிரிகையிலே கவிதை ஒன்று எழுதிவிட்டு கன்னி உன் கண்படவே காகிதத்தில் மறைத்துவிட்டு காத்திருந்தேன் உன் பதில்க்காய் :? கண்டு விட்ட கவிதையினை கடைசிவரை படிக்கு முன்னே கன்னியவள் என்னிடத்தில் கேள்வி ஒன்றை கேட்டு விட்டாள் "கவி படைத்தாய் நம் காதலுக்கா?? - ஏன் காட்டவில்லை என்னிடத்தில்??" :oops: உயிர் கலந்த காதலியே உண்மையினை உரைத்திடுவேன் உனக்காய் இக்கவி படைத்தேன் - நம் உறவில் உறுதி ஊட்டுதற்காய் படித்து அவள் முடிக்கும்வரை பார்த்திருந்தேன் பாவி இவன் :? பாவை என்ன பறைவாளென்று ! ! ! பார்வை ஒன்று பார்த்துவிட்டு பிடித்திருக்கு என்று சொன்னாள் பாதியிலே முடித்துவிட்டாள் பகல் பொழு…

    • 18 replies
    • 3.2k views
  12. Started by வாலி,

    நிலை யொற்றி இசையாடி உளமேங்கி தலை சாய மடியொன்று தேடும் தாள் கண்டு இடையாடி - சங்கு தோள் சேர மென்முலையாளை நாடும்!

  13. ஏங்கிய காலங்கள் போதும் கன்னம் சிவந்ததோர் காலம் - எழில் கவிகள் படித்ததோர் காலம். சின்ன வரையரைக்குள்ளே - உன் சிந்தை இழந்ததோர் காலம். வண்ணமயில் என்றும் கூறி.. வஞ்சிக் கொடியென்றும் கூறி... எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன் வன்மை அடக்குவர் தோழி! அங்கங்கள் அழகுதானடி -அதை அங்கங்கே போற்றுவர் தேடி.. உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி உன்னதப்பெண்ணே! நீ கூறடி!! நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப் பண்ணிடை கற்பனை பாடும். மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன் பெண்ணுடல் நீத்தாலும் வாழும். கங்கை உனக்கென்ன தங்கையா? மங்கை உdக்கின்னும் மருட்சியா? உன்கையை வான் வரை உயர்த்தி -அதில் உலகை ஈர்க்கலாம் முயற்சி! மையல் காட்டும் கண்ணில் மயங்காத் தையலர் மேன்மையை உணர் நீ! உய்யல் வ…

    • 13 replies
    • 2k views
  14. நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் (கெஞ்சல்) நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். (கஞ்சல்) ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!(காதல்)

  15. ஏணி ..........ஏன் இனி?? அழகாய் அரவணைத்தும் ஆக்ரோசத்தோடும் விருப்போடும் வெறுப்போடும் செருப்போடும் செருக்கோடும் எப்போதும் எனை நீ மிதிக்கலாம் என்னால் ஏற்றி விடவும் இறக்கவும் மட்டுமே முடியும் என்னால் என்னிடத்தை விட்டு ஏறவும் முடியாது ஏறி மிதிக்கவும் முடியாது ஏறி விட்ட ..நீ இறங்கும்வரை காத்திருக்கவே முடியும் ஏனெனில் நான் ஏணி.... அய்...எனக்கும் கவிதை எழுத வந்திட்டுது.

  16. Started by Cheliyan,

    ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகின்றான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா. அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள்…. கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத்தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீர்யமிழந்தவன் என்றும் குத்திக் காட்டும். ஆத்திரப்படு கோபப்படு கையில் கிடைத்த புல்லை எடுத்து குண்டர்கள் வயிற்றைக் கிழி உன் சகவாசிகளின் க…

    • 0 replies
    • 848 views
  17. என்னருமைத் தமிழகமே ஏனிந்த தடுமாற்றம் ? என்னருமை உடன்பிறப்புக்கள் ஏதிலியாய் உங்கள் மண்ணில் ஓடோடி வருவதுவும் ஒன்றும் புதிதல்லவே .. உங்களுக்கு ! எத்தனை காலத்துக்கு எங்களின மக்களுக்கு அகதி என்ற முத்திரையும் அரிசி .. இத்தியாதிகளை கொடுப்பதாகத் திட்டம் .. என்று கொதித்துப் போனேன் .. நேற்றுவரை ஆனால் .. இன்று உங்கள் நடவடிக்கை ! இடியேறு கேட்ட நாகமானேன் ! என்காதை வந்தடைந்தால் .. எப்படி .. எழுதாமல் இருப்பேன் ? ஈழமண்ணின் விடுதலைக்கு இந்தியாவால் முடியாதென்றால் .. உதவத்தான் முடியலைன்றாலும் உபத்திரவம் தான் கொடுப்பதுமேன் ?

  18. ஏனிந்தக் கேள்வி ? ----------------------------------------------------------------------------- எப்படியெனப் புரிகிறது. ஏனெனப் புரியவேயில்லை. எந்தப் பதிலாலும் திருப்திகொள்ளாது ஏந்தச் சாக்குப் போக்குகளாலும் ஏமாற்றுப்படாது நிரந்தர விழிப்பிலிருக்குமொரு ஒற்றனைப்போல் கேள்வி மட்டும் தொடர்நது கொண்டேயிருக்கிறது சொந்தப் பதில்கள் இரவற்பதில்கள் சொத்திப் பதில்கள் சுரணையற்ற பதில்கள் குள்ளப் பதில்கள் கூனற்பதில்கள் குதர்க்கப் பதில்கள் குருட்டுப் பதில்கள் குழந்தைப் பதில்கள் வயோதிபப் பதில்கள் அழகிய பதில்கள் அற்பப் பதில்கள் ஆரவாரப் பதில்கள் ஊமைப்பதில்கள் நூதனப் பதில்கள் நொண்டிப்பதில்கள் ஆயிரமாயிரம் பதில்களெனப் பதில் வெள்ளம் பாயும் போதும்…

    • 5 replies
    • 1.8k views
  19. ஏனிந்தப் புன்னகை? கண்ணே என் கண்ணின் மணியே பொன்னே என் சின்னத் தமிழ்ப் பெண்ணே உன் புன்னகையின் எண்ணங்களை என்னால் புரிய முடியவில்லை... ஏனிந்தப் புன்னகை? யாரைப் பார்த்து தாய்நாட்டில் குண்டுகளின் மத்தியில் அன்னை பிச்சையெடுக்க ஐரோப்பாவில் மகன் இந்திய நடிகைக்கு பொன் நகை அணிவிக்கிறான். அதைக் கண்டா இப்புன்னகை? எண்ணமும் நினைவும் எம் மூச்சும் உதிரமும் உடலும் என்றும் எம் தமிழிற்கே என்று அரசியல் மேடையில் முழங்கியவர்கள் இங்கு - பெற்றபிள்ளையது தமிழை அறிந்திடுமோ அது தவறு என்று தடுப்பவர்களைப் பார்த்தா இப்புன்னகை? இன்னொரு எத்தியோப்பியா ஈழத்தில் உருவாகிக் கொண்டிருக்க இங்கே பக்தி வெள்ளம் பல கோடி பணம் செலவு செய்து …

  20. எங்கோ மின்சார முள்வேலிக்குள் யாரோ முகமற்றவர்கள் வதைபடட்டும். அதி புத்திசாலிகளின் முன்னெடுப்பில் ஆடல், பாடல், கொண்டாட்டங்களை, மண்ணுக்காய் மடிந்தவர்களின் வணக்க அரங்கின் பெயரால் வகைப்படுத்திக் கொள்வோம். தெருவெளிகளில் நின்று சிறுகச் சிறுகச் சொல்லிக் கதறிய இனத்தின் வேதனையை ஆழக்குழி தோண்டிப் புதைப்போம். மீள மீள வசதிக்கேற்ப வரலாற்றுப் பிழைகளை நியாயப்படுத்திக் கொள்வோம். வாதையில் உறவுகள் வருந்திக் கிடந்தாலும் வரும் வசந்த விழாக்களுக்கு நாமே வழிகாட்டிகள் ஆவோம். நாங்கள் புலம்பெயரிகள். புண்ணாக்குத் தின்றாலும் விண்ணாணம் பார்ப்போம். விளக்கங்கள் கொடுப்போம்.

  21. மாமரி அன்னையின் குழந்தையே ஏசுவே மாநிலம் யாவும் மாதவன் பிறப்பில் மகிழ்வும் ஆரவாரமும் மறுவாழ்வும் ஈழத்தமிழனுக்கு அவலம் மட்டுமா ? கண்ணீரும் செநீரும் , கொட்டும் மழையும் போதாதென்று ,எதிரியின் செல் மழையும் என்ன பாவம் செய்தாள் தமிழீழ தாயவள் வீதி எங்கும் மின் விளக்கு , விழா கோலம் நாதியற்ற தமிழன் மட்டும் நாய் படா பாடு , உண்ண உணவில்லை , உடையில்லை படுக்க பாயில்லை ,மண் தரையும்,மழைவெள்ளம் ஏனையா ஏசுவே எமக்கு இந்த கோலம். நேசக்கரம் நீட்ட , புது யுகம் பிறக்கவேண்டும் தமிழர் வாழ்வு மலர மாண்ட மண் வேண்டும் ஏசு பிறக்கவேண்டும் ,மக்கள் மகிழவேண்டும் புது வருடத்தோடு புது வாழ்வு பூக்க வேண்டும்.

  22. Started by வர்ணன்,

    சுமையிழுக்கும் காளைகளுக்கு......... புல்லு கூட கொடுத்ததில்லை... வக்கணையாய் ............. காத தூரம் நடந்தே நொய்ந்துபோன அதன் - கால்களில் பிழை பிடிப்பார்..............! களிம்பு தடவ - நினைத்ததுண்டா? முகில்களுக்கு இறுதி அஞ்சலியாம்.............. மழைவந்தால்மட்டும் -பிறந்த நாள் வாழ்த்தாம்! என்னயிதுவோ -கருத்து கப்பலோ? வயிறுகிழிந்து கொட்டிய வான ....... குருதி உடலில் ஏனோ கறையான் கள் பெயரில் கப்பல்? தாய் தேசமது விடியலையே தந்தை தேசமெதுவென்று தெரிந்தாலும்....... அவர்களெமை நம்பலையே...........! போகயெண்ணிய வாகனம்............ விரைவு பாதை நடுவே உருளைகள் ........ செயலற்றதால் உடைந்ததாய் ஆச்சு வாழ்வு..! நீ வெட்டி வீரம் காட்டு ....... வெள…

  23. ஏன் கொன்றாய்....??? வீதியலே நின்றவரை வீனாக ஏன் சுட்டாய்....??? என்ன தவறிழைத்தார் என்றவரை நீ கொன்றாய்....??? அட உன் குற்றம் நீ மறைக்க ஊமையதை ஏன் கொன்றாய்...??? அவன் பார்த்து நின்றான் என்றா மா பாவி நீ கொன்றாய்....??? சாட்சியாகி நின்றிடுவான் என்றென்னியா நீ கொன்றாய்....??? பிறப்பினிலே வாய் கட்டி இறைவனவனை தான் படைத்தான்.... மொழிகளதை அறிந்தும் அவன் பேச முடியா அவன் துடித்தான்.... திங்கின்றி கிடந்தவனை தீண்டி வந்து ஏன் கொன்றாய்....??? உன் பீத்தல் நீ மறைக்க அந்த உத்தமனை ஏன் கொன்றாய்....??? என்ன கெடுதல் இழைத்தான் என்று இன்றவனை நீ கொன்…

  24. அவன் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனுக்கு அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எதையுமே புதிதாக பார்க்கும்போது அப்படித்தான்.. அவன் தன்னுடைய சொந்தபந்தங்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோரையும் பிரிந்தே அந்த வேலைக்காக வந்திருந்தான். அந்தப் பிரிவு அவனுடைய மனதில் ஒரு நிரந்தரமான வெறுமையை உருவாக்கி இருந்தது. இருந்தபோதும் அவன் தானும் தன்னுடைய வேலையுமாக ஒரு குறுகிய வட்டத்தினுள் புதைந்து போனான். அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டிருந்த இழப்புகள், சோகங்கள், வலிகள் மட்டுமே அவனுக்கு இப்போது துணையாக இருந்தன. சிலவேளைகளில் தான் தன்னுடைய சொந்த ஊரை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வெகுதூரம் விலகி சென்று விட்டதாக அவன் கற்பனை செய்துகொண்டான்.…

  25. Started by Thulasi_ca,

    ஏன் இந்த அவலம் ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல் பாடசாலை சென்ற பாவையர் கடத்தல் கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம் நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம் எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை? கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ? ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம் www.thamilsky.com

    • 15 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.