கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அந்த இறுதி நிமிடங்கள்..... கவிதை - இளங்கவி.... ஆயிரம் சூரியன்கள் எங்கள் இதயத்தை எரித்துவிட..... அந்தாட்டிக்கா பனிமலைகள் எங்கள் கண்களில் உருகிவர..... அண்டசராசரமும் எங்கள் உயிரினை பிடுங்கிட.... ஆழிப்பேரலையில் எங்கள் வாழ்வெல்லாம் மூழ்கிவிட...... அமைதியானது எங்கள் இறுதி நிமிடங்கள்...... அழிக்கப் பட்டது எங்கள் எங்கள் உயிர்களின் சுவடுகள்.... நமை காத்திருந்த வேங்கையெல்லாம் வேட்டுப்பட்டு செத்து விழ.... கடல்தாண்டி அக்கரையில் நாற்காலிக்கு போட்டி எழ.... புலம்பெயர் தேசத்திலே நாங்கள் பிணம்போல நின்றிருக்க..... பொய்யான செய்திகளால் எங்கள் காதுகள் நிரம்பிவிட...... புலிகள் முடிந்தார்களாம்.... தமிழர் இனி அடிமைக…
-
- 8 replies
- 2.4k views
-
-
எது எதுக்கு யார் யார் யார் யாருக்கு நடத்தலாம் சாதனையாளர்க்கோ சமூகத் தொண்டர்க்கோ வீரர்க்கோ என்றில்லை யார் யார்க்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் அதிகம் கொலை செய்தவர்க்கு கொலைக்குத் துணை நின்றவர்க்கு கொலை செய்யப்பட்டவருக்கு பயன் பெற்றதற்கு பயன் பெறுவதற்கு பிரபலமாவதற்கு விழா நடத்துவதற்கு மனத்தில் இடம் பிடிப்பதற்கு சும்மா பாராட்டுவதற்கு பாராட்டு விழா நடத்தியதற்கு சிலரைப் புறக்கணிப்பதற்கு பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை பிறர் பெயரில் நாமேகூட நடத்திக்கொள்ளலாம் அல்லது பிறரைத் தூண்டி நடத்திக்கொள்ளலாம் பாராட்டு விழாக்கள் பாராட்டுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை ! நன்றி : ஆனந்த விகடன…
-
- 8 replies
- 926 views
-
-
பகுத்தறிவு ------------------- கடவுள் மனிதனுக்கு தந்து சென்ற துரோகம் ! அது மட்டும் இல்லை என்றால் ஆறோடு ஆறாய் ஓடி இருப்போம்.! மண்ணோடு மண்ணாய் சேர்ந்து இருப்போம் ! பறவையோடு பறவையாய் சேர்ந்து ஏதும் யோசிக்காமல் இருந்தே இருப்போம் ! பசி பசியென்றழுதிருக்கமாட்டோம் ! பணம் பணம் என்று தூக்கம் தொலைத்திருக்க மாட்டோம் ! விதியை நினைத்து வெம்பியுள்ளம் வாடி இருக்க மாட்டோம்! வான் மதி ஒளியில் சோறு உண்டு மகிழ்ச்சி இது என்று பாடி இருக்கமாட்டோம்! கடல் கண்ணில் தெரிந்த நாளில் அதன் உடலில் வீழ்ந்தே வாழ்வு முடித்திருப்போம் ! காட்டிடை ஒரு விலங்காய் வாழ்ந்து கனவுகள் ஏதுமின்றி கண்கள் மூடி இருப்போம் ! பிரித்தறிய தெரியும் பகுத்தறிவினால் தானே.......... நிமிடத்துக்க…
-
- 8 replies
- 4.2k views
-
-
சொந்த மக்களுக்காய் அசோகச்சக்கரத்தின் அடியில் பசி கிடந்த தாயே.. தமிழன் உணர்வதை கோரிக்கையாய் நிமிர்த்தி மட்டு மாமாங்கத் திடலில் உண்ணா நோன்பிருந்தாய் அம்மா..! அன்று காட்சியில் இருந்தோரும் முதலை அமைச்சராய் அமர்ந்தோரும் இன்றும் கைலாகுகள் தருகின்றார் தமிழர் பிணக்குவியல் மேல் அரசியல் வியாபாரம் செய்கின்றார் தாயே.. அவர்களிடம் மாறாமை ஒன்றே மாறாததாய் உள்ளதம்மா..! ராஜீவின் படைகளிடம் நீ மண்டியிட மறுத்தாய்.. விடுதலை கேட்டு நின்ற சொந்த இனத்தை ஹிந்தியா முன் மண்டியிட சொன்ன கூட்டம் இன்று தமிழர் தம் அரசியல் வாரிசுகளாம் விலாசம் காட்ட களமிறங்குகின்றன தாயே...! விண்ணிருந்து நீயும் காண்பாய் அந்தக் கொடுமைகள் இங்கு அம்மா..! ஹிந்திய அதிகாரம் உன்னைக் கொன்றிருக்கலாம்…
-
- 8 replies
- 753 views
-
-
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள் ------------------------------------------------------------------------விஞ்ஞான தந்தை மெய்ஞான தந்தை கலாம் --------இளமையிலும் மாணவன் இறப்புவரை மாணவன் கலாம் --------கிராமத்தில் பிறந்து கிரகத்தை ஆராய்ந்தவர் கலாம் ---------இளைஞனின் கனவு விஞ்ஞானத்தின் அறிவு கலாம் --------அறிவியலின் அற்புதம் அரசியலின் தியாகம் கலாம்
-
- 8 replies
- 12.5k views
-
-
அதிகாலை அழகாக தெரிகிறது… அவள் முகத்தில் விழிப்பதனால்! ஒவ்வொரு நாளும் அவளோடுதான்... ஆனந்தமாய் விடிகிறது! ஒவ்வொரு நொடியும் அழகாக... விதம்விதமாய்த் தெரிவாள்! கழுவாத முகத்தோடும் களையாக இருப்பாள்! களைத்தாலும் சளைக்காமல் அவள் வேலை முடிப்பாள்! உழைத்தாடி வரும் தலைவன் களைப்பெல்லாம் போக, கனிவான வரவேற்று அன்பாகப் பார்ப்பாள்! குழந்தையாய் சிரிப்பாள்… அவனோடு.... குழந்தையும் சுமப்பாள்! உயிரோடு உயிராக… உலகமே அதுவாக, அவனுக்கும் அவளுக்குமாய்… அவளின் சின்ன உலகத்துக்காய்... அவள் தன் உயிரையும் கொடுப்பாள்! ஒவ்வொரு மனைவியும் அவள் கணவனுக்கு இரண்டாவது தாய்தான்!!! So...Guys! Love your wife!
-
- 8 replies
- 3.6k views
-
-
தடங்களில் இருந்து எழுகின்ற கரியநாகம் பின்னந்தலையில் சுருண்டு கொள்ள, வெளியேறும் எலிகள் தலையணை விளிம்புகளை முகரத்தொடங்குகின்றன... எலிகளும் நாகங்களும் இல்லாத நாளொன்றில் நான் என்னவாக இருப்பேன். அத்துமீறி இந்த இரவுகளில் உலவுகின்ற வண்ணத்துப்பூச்சியை கொன்றொழிக்க வேண்டும், இல்லையேல் நான் மலர்ந்துவிடவேண்டும். சாத்தியமில்லாத போதிலும் உயரித்தென்னையின் பொந்தில் இறுதியாக பார்த்த கிளி அறையின் சட்டகத்தில் வந்துவிடுகிறது. காலமுள்ளில் சிக்கிய மீனின் கண்களில் இருந்த கடல் வறண்டுபோக, ஆதியில் பெயர்தெரியாத ஒருவனின் வளர்ப்பு மிருகங்களின் எச்சங்கள் தோன்றத்தொடங்கின. "ஆழிசூழ் உலகில்" இருந்து இறங்கிய சூசையும் சுந்தரிரீச்சரும் வசந்தாவும் கோத்தராப்பிள்ளையும் ஊர…
-
- 8 replies
- 820 views
-
-
யாழில் 'கவிதை சீசன்' என்பதால், 'பணம்' திரைப்படத்தில் என்.எஸ்.கிருஸ்ணன் பாடிய பாடலை வருத்தம் கலந்த கற்பனையோடு என்னால் முடிந்த வரையில் 'உல்டா' செய்துள்ளேன்! எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன்...? எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? சீனம் செழிக்க உதவிய மக்களை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? அலாஸ்கா முதல் ஒஸாகா வரை ஆசைப்படும் ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? ஃப்ளைட்டை எங்கே தேடுவேன்? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? கருப்பு காட்டில் கலங்குகின்றாயோ? வஞ்சகன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? காற்று வீச சுத்திக் கிற…
-
- 8 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் என்ற பெரு நெருப்பின் உருவமடி...! முல்லைத்தீவு வீதிகளில் நீயும் நானும் மோட்டார் சயிக்கிளில் காற்றள்ளும் வேகத்தில் ஓடிய நாட்கள்.....! முள்ளியவளை வீதியறிந்த எங்கள் முன்னைய கால நினைவுகள் இரவுகளில் நிலவு கரையும் வரை விழித்திருந்து கதைகள் பேசி கனவுகள் வளர்த்த இரவுகள்...! நந்திக்கடற்கரை நிலவொளியில் நின்றலைந்த நினைவுகள் அதிகாலை வரையும் அலுவலெனப் பொய்சொல்லி அந்தக்கடற்கரைகளில் நடந்த நாட்கள்....! சேரன் பாண்டியன் ஐஸ்கிறீம் இனிப்பும் இன்னும் நாவில் உலராத இனிமைகள் எத்தனையோ நினைவுகள் நிகழ்வுகள் இதயத்தில் கனமாக....! யுத்தப் பொழுதுகளில் உன்னை உனது குடும்பத்தை உனது குழந்தைகளை தேடியலைந்த காலமொன்று அது முள்ளிவாய்க்கால் முடிந்த பின்னும் முற்றாத தேட…
-
- 8 replies
- 1.2k views
-
-
குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே அருமைக் குஞ்சு மூன்றையும் அதில் வளர்த்து வந்தது நித்தம் நித்தம் குருவியும் நீண்ட தூரம் சென்றிடும் கொத்தி வந்த இரைதனை குஞ்சு தின்னக் கொடுத்திடும் குருவி தந்த இரையினால் குஞ்சு மெல்ல வளர்ந்தன சின்ன இறகு இரண்டுமே சிறப்பாய் வளரத் தொடங்கின தனது குஞ்சு பறப்பதை தானும் பார்க்க ஆவலாய் தந்தை குருவி சொன்னது தனயன் பறக்க வேண்டுமாம் இப்ப என்ன அவசரம் இறக்கை நன்கு வளரட்டும் இயல்பாய் குஞ்சு பறப்பதை இரசிக்கும் காலம் வந்திடும் சின்ன இறகு வளர்ந்தபின் சிறப்பாய் பறக்க முடியுமே இன்றே பறக்க விரும்பினால் இறப்பில் முடியக் கூடுமே தாய்க் குருவி சொன்னதை தடுத்தே தந்தை சொன்னது எனக்குப் புத்த…
-
- 8 replies
- 4.3k views
-
-
முதல் இரவின் சங்கமத்தில்....... நம் காலைப்பொழுது இவர்களுக்கு முதலிரவு எங்கே தெரியுமா ! கோடி கண்கள் பார்த்திருக்கும் ஓர் வெட்ட வெளியில் ! அவளின் வருகைக்காய் நீண்ட நேரம் காத்திருந்தான் ? நேரமும் நெருங்கியது காத்திருந்து காத்திருந்து கலங்கிவிட்டான் - காரணம் இவர்கள் பொருத்தமில்லா யோடிகள் நிறத்திலும் ஏன் குணத்திலும் தான் ! இவளோ பால் வெள்ளை அவனோ கறுப்பின் மறு உருவம் அவளும் வந்துவிட பறவைகளின் இன்னிசை பூச்சிகளின் ரீங்காரம் மரத்தின் இலைகளின் சல சலப்பு கடல் நீரின் அலையோசை இத்தனையும் சேர்ந்தொலிக்க இணைகிறது முதலிரவில் இவர்களின் உடல் இரண்டும் ! இவளின் ஆதீக்கம் அவனை அடியோடு மறைத்துவிட பார்த்தோர்கள் பர…
-
- 8 replies
- 2.5k views
-
-
பிறக்கிறது நம் தேசம்..... கவிதை - இளங்கவி இரத்தத்தில் தோய்ந்த தமிழீழத்தின் முழு நிலவும்....... பிணக்குவியலால் மறைந்த தமிழீழத்தின் சூரியனும்....... அங்கே ஒளியையும் மறைத்து நம் தேசத்தின் குளிர்மையும் நீக்கி கூக்குரல்கள் மட்டுமே என்னாளும் ஒலித்திடும் தேசத்தை பாரீர் அங்கே ஒருதரம் வாரீர்....... குயில்களும் பாடாமல் கூட்டிலே ஒளிந்து கொள்ள....... மயில்களும் ஆடாமல் மறைவிலே மறைந்துகொள்ள.... மரணித்த உடல்கள் மட்டும் மலிவாகக் கிடைக்கிறது...... தடுப்பார்கள் யாருமின்றி தினமும் கொலைகள் நடக்கிறது.... ஒருபக்க முலையிலே குழந்தையின் பசி தீர்த்து மறுபக்க முலையை எதிரியின் கொடுமைக்கு பறிகொடுத்து இறக்கின்ற நிமிடமும் மழலையின் பசிதீர…
-
- 8 replies
- 1.6k views
-
-
இலக்கிய நண்பர்களே, கவித்துவ ரசிகர்களே, தமிழ்கவிதையுலகம் ஓரு அடர் வனம். அதனூடே பயணிக்கும்கோது ஏற்படும் பரவசம் அற்புதமானது. 1970 ம் ஆண்டில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறு கவிதை என் கவனத்தையீர்த்தது. இக்கவிதையை நான் எழுதியிருந்தால்... என ஒரு நப்பாசையும் உள்ளெழுந்தது. "அற்பங்கள்" எனும் தலைப்பையுடைய இக்கவிதையை மொழிபெயர்த்து என் பிரஞ்சு நண்பனிடம் கொடுத்தேன். வாசித்துவிட்டு அற்புதம் என்றான். ஆனந்தமாகவிருந்தது. வாசியுங்கள். வளமடைவோம். அன்புடன் வாசு. ----------------------------------------------------- அற்பங்கள். அற்ப நிகழ்வும் அர்த்தம் அற்றதும் என்னுடன் வருக. உதிரும் மணலும் உருவழியும் நீர்வரையும் எனது உவப்பு…
-
- 8 replies
- 2.1k views
-
-
போகிறார் பொறிஸ் ஜோன்சன் 🇬🇧 பிழை செய்த பொறிசார் கதிரையை விட்டு போகிறார் ஏதோ சில ஜனநாயகம் இங்க இருக்கு ஆனால் இலங்கையில் அத்தனை சனமும் கத்தியும் என்ன கோத்தா கோ கோம் என்று சொல்லியும் என்ன இயமன் தான் வந்தாலும் இவர் போகாராம் இன்னும் இருக்கிறார் கோத்தா இலங்கையை தின்ற படி இறுக்கிக் கதிரையை பிடித்தபடி அங்க ஏது ஜனநாயகம். பா.உதயன் ✍️
-
- 7 replies
- 591 views
-
-
பால்ராஜ் அமரனுக்கு அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. மணலாற்று அகதிகளின் புதையல் ஆழப் புதைக்காதீர். -வ.ஐ.ச.ஜ…
-
- 7 replies
- 1.3k views
-
-
எழுதா மறையாக இருந்தவனை எழுதவைத்த நண்பிக்கு நன்றி குடத்துள் விளக்காக இருந்தவனை குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி நண்பனாக வந்த எனக்கு உன் இதயதில் அண்ணாவாக இடம்தந்தாய் நன்றி நம் நட்புக்கு பாலமாக இருந்த அந்த மலர்களுக்கும் நன்றி கூண்டுக்கிளிபோல இருந்த என் சிந்தனையை சிறகுகள் விரித்து பறக்க வைத்தாய் நன்றி வீணாக இருந்த என் பேனாவுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி உன்னுடய அன்புக்கு நன்றி சொல்ல என் கவி நயத்தில் வார்த்தைகள் இல்லை நன்றி
-
- 7 replies
- 1.7k views
-
-
அவலம் உனக்கு காண்...! காட்டு மிருகமுடன் கலவியாடி பெற்ற பிள்ளை நாட்டை ஆளுதென்றால்- நாடு நாறாமல் என் செய்யும்...?? கூற்றுவனே அவனாகி- தமிழர் குரல் வளை அறுக்க வந்தால் ஏ.கே.யை தூக்காமல்- என்ன ஏப்பையா அவர் எடுப்பார்...? விழுந்து படுத்ததென்றா- புலி வீராப்பு நீர் போட்டீர்...? எழுந்து பாயும் இனி - உன்னை எவன் வந்து தான் காப்பார்...?? அரக்கர் குலம் நீவீர்- தமிழரை அழிக்க வருகையிலே- புலி பார்த்தா நிற்க்கும் என்ன பைத்திய காறர்களே...?? சிந்தனை உமக்கென்றா சிறகடித்து நீர் பறந்தீர்..? ஒடிந்து விழுந்தீர் பார்- இனி ஓலம் உமக்கு காண்...! -வன்னி மைந்தன் - http://www.kalakam.com/forum/viewtopic.php?p=125#125 …
-
- 7 replies
- 1.8k views
-
-
கேளும் மக்களே தெரியுமா கெலும் மக்ரேவை இல்லை இவர் பால் தாக்ரே இல்லை இவர் பெயரை நாளும் எதிரி உச்சரிக்க இவர் யார் ? வருடங்கள் நாலாக எமது படுகொலைகளை நாம் மறக்க இவர் விடவில்லை அவர் தான் கெலும் மக்ரே சரியான நேரத்தில் தவறாமல் வந்திடுவார் தந்திடுவார் ஆதாரம் மாட்டிவிடுவார் மகிந்தாவை அவர் தான் கெலும் மக்ரே விலைபோன ஊடகத்துறையில் நிலையான உத்தமன் பணம் கோடி கொடுத்தாலும் பொய் சொல்லான் இவன் அவர் தான் கெலும் மக்ரே
-
- 7 replies
- 702 views
-
-
கோயில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன் உன் வீட்டு வாசலில் உன் புன்னகைக்காய் * தயவு செய்து இனி நீ குளிக்கும்போது பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும் போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி விடுகிறது * நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான் அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன் * நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும் சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத நாட்களில் மட்டும்தான் பெண்கள் கல்லூரியாய் மாறுகிறது * களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே களைத்து …
-
- 7 replies
- 1.3k views
-
-
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல்: இரண்டு பேருக்குள் ஒழுகும் தேன்..! மும்மூர்த்திகள் செய்யும் திருவிளையாடல்..! நாலு சுவருக்குள் அந்தரங்கம் ..! ஐம்புலனும் தறிகெட்டுப்போகும் அவசரம்...! அறுசுவைகள் அனைத்திலும் தெரியும்! ஏழு மலை ஏறி வந்த களைப்பிருக்கும்! எட்டில் சனி தொடங்கும்..! ஒன்பது கிரகங்களும் எதிரியாகும்! சுழியமாகிநின்ற... ஒரு ஆண்பூச்சியை, ஒரு பெண் சிலந்தி இரையாக்கும்! மீண்டும்... விரிகின்ற சிலந்தி வலைகளில், பூச்சிகள் விழ விழ... வளர்ந்துகொண்டே இருக்கின்றன... விழுதல்களும்!
-
- 7 replies
- 884 views
-
-
அழகான கவிதை வாழ்க்கை ----------------------- மூங்கில் நுனிப் பனியை புகழ்கின்றோம் மூக்கின் நுனிப்பனியைத் துடைக்கின்றோம் இரண்டிலும் பனி பார்வையில் பிணி பச்சை மரக்காட்டிடையும் மரங் கொத்தி தேடுவதென்னவோ பட்ட மரம் நீர் மேல் நிலவு நிமிடத்தில் உடையும் நிமிடத்தில் சேரும் நிலவுக்குக் கவலையில்லை வடி கட்டிப் போகும் அமுதத்தைப் பாரார் வடியில் மிஞ்சும் மிச்சத்தைப் பார்ப்பார் காலையும் மாலையும் அழித்து அழித்துப் போடுகின்றது அழகழகான சித்திரம் வானமும் பகலிலும் இரவிலும் பொட்டு வைத்துப் பார்க்கின்றது பச்சைச் சேலையில் பள பளக்கும் நீர்க்கரை கட்டி பூமியும் அழகுதான் இயற்கை சிரிக்கின்றது மனிதன் அழுகின்றான…
-
- 7 replies
- 2.3k views
-
-
வாழ்க் ஈழத் தமிழகம், வாழ்க இனிது வாழ்கவே மலை நிகர்த்திவ்வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே முடிப்புகள் அமிழ்தை வென்ற மொழியினள் அருள் கனிந்த விழியினள் அரிய பண்பு நிதியினள் அவனி மெச்சும் மதியினள் மமதை கொண்ட பகைவரும் வணங்கும் அன்பு விதியினள் மக்கள் கொண்ட பதியினள் ... வாழ்க வானம் பாடி போல்மீன் கானம் பாடும் வாவிகள் மலர்க் கனி க்ய்லுங்கிடும் எழில் மிகுந்த சோலைகள் தேனும் பாலும் பாய்ந்திடச் செந்நெல் பொலியும் கழனிகள் உய்வ ளிக்கும் மாநிலம் ... வாழ்க பட்டிப் பளை, மகாவலி, பயில் அருவிமுத் தாறுகள் பல வனங்கள் பொலியவே எழில் நடஞ்செய் துலவிடும் மட்ட களப்பு, யாழ்நகர், மாந்தை, வன்னி, திருமலை, …
-
- 7 replies
- 2.3k views
-
-
தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்... சகோதரி, யாரிவன் என்ற விசாரணைக் கோதாவில் இறங்காமல் தந்துவிடு உந்தன் சோகத்தின் ஒரு சிறு துளி தன்னை! அருமை அப்பா - உன்னை அழவைத்துப் பார்த்தறியாதவர்! இன்று கொடும் சோகப் பிணியில் விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம் யாரறிவார் உன்னையன்றி! ஆனாலும் சகோதரி உந்தன் சோகம் நானறிவேன்... சோகத்தின் சுவடுகள் உன்னிடம் மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள் உள்ளார் சொந்தம் சொல்ல! ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா குழந்தை போல? பாசப் பசையில் மறந்துவிடுவதா உந்தன் வாழ்வை மெல்ல? வேண்டாம் சகோதரி செய்வோமே புது விதி! பரிதாப வோட்டுக்கள் உந்தன் மனவங…
-
- 7 replies
- 1.2k views
-
-
எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா? (இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.) பன்னிரண்டு மணி பட்டாடை கட்டி வானம் விழித்துக் கொள்கிறது. கருவானக் கதவுடைத்து கனவு கலைந்து வான வெளி கண்விழித்துக் கொள்கிறது. வண்ண வண்ண ஒளிக்கலவை... அழகின் இருப்பிடமெல்லாம் அகன்ற வானில் அள்ளிக் கொட்டியிருக்க வீதிகளில் புகைமூடி வர்ண ஒளிக்கீற்று வடிவுதான்.... பனித்துளி சொட்டப் பகலைத் தெளித்தது போல் பொழுது பட்டாசுகளால் பல்வர்ணம்.... புத்தாண்டுப் பிறப்பு பகற் சேமிப்பெல்லாவற்றையும் பட்டாசாய் வெ…
-
- 7 replies
- 1.4k views
-
-
புகலிடம் *********** அவள் ஒன்றும் இந்த மர மனங்களிடம் கனிகளுக்காக - காத்திருக்கவில்லை..... அது - தரும் நிழலுக்காகத்தான்...... காத்து நின்றாள் அவள்- கனத்த இதயத்தில்... நினைத்த எண்ணங்கள் சருகாகிப் போனதால்... அந்த சருகையே உரமாக்கி (மர)மனங்கள் ஓங்கி வழர்கின்றன அதனால்தான் -அவள் வெயிலினில் கூட... வெறுப்பின்றி நடக்கின்றாள் இனி- அவள் ஒதுங்கப் போவது எந்த(மர) நிழலிலோ....? இல்லை இந்த வெயில் தான் இவளின்...புகலிடமோ....???
-
- 7 replies
- 1.5k views
-