கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
http://vaseeharan.blogspot.com/2007/08/blog-post.html பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்டி அழுகின்றோம் அழுகின்றோம் பிணவாடைக் கடலே கேட்கிறதா...? ஓலம் கேட்கிறதா...? சரணம் 2 அன்னையர் ஆடவர் பால் மணப் பிஞ்சுகளே சீறிவந்த பேரலையே கொண்டு சென்றா…
-
- 7 replies
- 1.4k views
-
-
கவிதையின் கவிதைகள் [size=5][/size] http://www.desicomme...9692/696921.gif இத்தனை சித்திரவதைகளின் பின்னரும்... நான் உயிருடன் இருக்கின்றேன்... ஆச்சரியந்தான்! நீ என்னிடம் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் என்னிடமில்லை... அவை உன்னிடந்தான்! நீ மறந்துபோனதாய்க் காட்டிக்கொள்ளும் எம் பழைய நினைவுகளை மீட்டிப்பார்... அனைத்துக்கும் விடை கிடைக்கும்! உன்னிடமும் நான் கேட்கவேண்டியவை, நிறையவே இருக்கின்றது... அதுவரையும், என்னுயிர் பிரியாது! உண்மையான நேர்மையான பதில்கள் உன்னிடமிருந்து வரும்வரைக்கும்... என்னுயிர் போனாலும் உனைத் தொடர்வேன்...! ஒரு கெட்டவனை நல்லவனாக்கவும் ஒரு பெண்ணால் முடிகிறது! ஒரு நல்லவனை கெட்டவனாக்கவும் அதே பெண்ணால் முடிகிறதே!! இ…
-
- 7 replies
- 1.8k views
-
-
எதிர்கொள்ளல் ஒன்றின் எதிர்பார்ப்புகள் சிதைந்துபோகாமலிருக்க நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை எரியூட்டியபின் , நினைக்கப்படுதல் நிகழாதிருக்க காலவோலையில் தடங்களை அழித்துக்கொண்டிருக்கிறேன், இயல்புகள் கடந்த இருத்தலுக்கான எழுச்சிதேடி இயங்குதல் தொடர்கையில் _சிந்தும் உணர்வுநீரில் உப்புக்கரிக்கிறது . எல்லாம் கடந்து புன்னகையோடு ஒரு பிரிதலை யாசிக்கிறேன் ............................... உள்ளுணர்வுகளின் முரண்களால் கிழிக்கப்படும் காலவாழ்வில் , எல்லாம் சாத்தியமாகாத சம்பவங்களாய் கடந்துபோகிறது . சடங்குகளாய் தொடர்ந்து நீழ்கிறது .
-
- 7 replies
- 1k views
-
-
சிறுவயதுகளில் வாழ்க்கையின் வழிகளில் காலம் ஒரு கவிதையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது கனவில் தோன்றும் கவிதைவரிகளைப்போல வாழ்தலின் இனிமைகளைமட்டுமே கண்களைத்திறந்தபடி ரசித்துத் திரிந்தேன் உடலின் ஒவ்வொரு நுண்ணிய அணுக்களிலும் புகுந்து இயற்க்கை நான் என்னும் ஆன்மாவை வனைந்து கொண்டிருக்க காலமடியில் இளமை வழிந்தோடிக்கொண்டிருந்தது.. அணல் எறிக்கும் புழுதி வீதிகளில் உலாவித்திரியும் என் பாதங்களை பூமித்தாய் வாஞ்சையுடன் நீவிக் கொடுப்பாள் அப்பொழுதெல்லாம் பூமிக்கு நான் பாரமாக இருப்பதாக உணர்ந்ததில்லை... அம்மாதரும் முத்தங்களை வாங்கியவாறே எதற்க்கிந்த வாழ்தலென்ற புரிதல் இல்லாவிட்டாலும் நிறைவாக அறிதல் குறித்த தீராப்…
-
- 7 replies
- 1.2k views
-
-
நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர் மீண்டும் உருப்பெறாத கனவுகள் இரவின் நடு நிசியையும் தாண்டி வருகின்றன கைகள் முளைத்த பல கனவுகள் கழுத்தையும், குரல்வளையும் நெரித்து கொல்கின்றன என் கனவுகளுக்கு மொழிகள் இருப்பதில்லை நிறங்கள் இருப்பதில்லை சத்தம் இருப்பதில்லை மெளனம் நிறைந்த கனவில் நேற்றைய மனிதர்கள் வந்துபோயினர் அவர்களின் கேள்விகள் அவர்களின் ஏமாற்றங்கள் அவர்களின் துயரங்கள் அவர்கள் சொல்லும் உண்மைகள் எதற்கும் ஒலியிருப்பதில்லை ஆயினும் உயிர் துளைத்து ஓராயிரம் யுகங்களைக் கடக்கும் வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர் வலிய கனவொன்று இரவு கடக்கும் ஒவ்வொரு நாளிலும் நான் அச்சமுறுகின்றேன் கண்கள் மேல் படர்ந்த கனவின் சுமையில் பகலின் பொ…
-
- 7 replies
- 1.1k views
-
-
மாறிவிடு தமிழினமே அநியாயச் சிங்களத்தின் ஆக்கினைகள் பொறுக்காமல் அந்நியத்தை வந்தடைந்த அன்பான சோதரரே அதிகாரச் சிங்களத்தின் அடக்குமுறை தாங்காமல் அகதிகளாய் புலம்பெயர்ந்த அன்பான உறவுகளே அந்நியத்தில் நீர்செய்யும் அழுக்கான செயல்கள்தந்த கவலைகளை இறக்கிவைக்க கண்ணீரால் எழுதுகிறேன் புலம்பெயர்ந்த மண்ணில்நீh புரிகின்ற அராஜகத்தால் புண்ணான மனத்துடன்நான் புலம்பியிதை எழுதுகிறேன் சீருடனே வாழுமுந்தன் சிறப்பினைநான் காணவந்தேன் சில்லறைச் செயல்கண்டு சினந்துநான் எழுதுகிறேன் குடும்பம் போல்நீங்கள் கூடி வாழாமல் குழுக்கள் பலசெய்து குழம்புவதும் முறைதானோ அண்ணன் தம்பியாக அனுசரித்து வாழாமல் அடிதடியில் இறங்கிநீரும் அழிவதுவும் …
-
- 7 replies
- 1.7k views
-
-
(இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது) [size=6]நீங்கள் பிறந்த இந்நாள் [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010 மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வ…
-
- 7 replies
- 1.5k views
-
-
வசந்தத்தைத் தருவாயா காலக் களத்தினிலே கடுங்காயம் பட்டவனாய் உடலெல்லாம் புண்ணாகி உயிர்போகக் கிடந்தவனை பத்திரமாய் அணைத்தெடுத்துப் பாச மருந்திட்டுக் காதற் துணிகொண்டு காயத்தைக் களைந்தவளே அழகிழந்த சித்திரமாய் அடிவளவில் கிடந்தவனை கனிவுடனே கரமெடுத்துக் கறையானைத் தட்டி அன்பு நீர்கொண்டு அழுக்கெல்லாம் களைந்தகற்றி அழகாய் முன்னறையில் அமர்ந்திருக்கச் செய்தவளே வாழ்க்கைப் படகிழுக்க வழியெதுவும் தெரியாமல் துன்பப் பெருங்கடலில் துடுப்பிழந்து நின்றவனை மூர்ச்சித்து மெல்லமெல்ல மூச்சிழந்து போனவனை கைப்பற்றி மெல்லமெல்ல கரையிழுத்து வந்தவளே வெறுமைக் கோடையெனும் வெந்தணலில் சிக்கியதால் வெந்து தினங்கருகி வெளிறிப் போகையிலே நட்பென்னும் ந…
-
- 7 replies
- 1.7k views
-
-
என்னைக் கவர்ந்த மலர்களே நான் சண்டை போடுவதும் பொறாமை கொள்வதும் உங்கள் மீது மட்டுமே அதெப்படி ஒர் நாளைக்கூட அழகாய் வாழ்கின்றீர்கள் என்னால் ஒர் மணித்தியாலத்தைகூட வாழ முடியவில்லையே இதனால் நித்தமும் தோற்றுப் போகின்றேன் உங்களிடத்தில் என்றாலும் உங்களின் மென்மையை எனக்குள் சேகரித்து வெற்றி கொண்டேன் இதற்காக என்னை தண்டித்து விட்டதே உங்கள் விதி உங்களைப் போல் நானும் சருகாய் காய்கிறேன் எனை கவர்ந்த மலர்களே உங்களின் மெளனச் சிரிப்பபை எனதாக்கி உங்கள் மென்மைக்குள் இன்னும் வாசம் செய்கிறேன் என்றோ ஒர் நாள் …
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழர் நிலத்தினிலே ஒல்லாந்தன் கட்டிய கோட்டையிலே சிங்கக்கொடி.. அது அகற்றி தமிழர் வீரப் புலிக் கொடியேற்ற சமராடியது ஒரு பொடி அவனே.. கிட்டு என்ற அந்த புலிப் பொடி. வேட்டுகள் அவன் விருப்பு அல்ல மக்கள் விடுதலையே அவன் கனவு..! சின்னப் பொடியள் முதல் வயதான தாத்தா வரை "மாமா" என்றழைக்கும் அன்பு மகன்.. யாழ் நகரின் செல்லப் பொடி.. அவனே.. கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி..! விடுதலைப் பாதையிலே தொல்லைகள் தந்தோர் குண்டு எறிய ஒற்றைக் காலிழந்த பொடி நம்பிக்கை தளராத துணிவோடு களமாடினான் அவனே.. கிட்டு என்ற அந்தப் புலிப் பொடி. தமிழீழ விடுதலை என்ற தேசக் கடமைக்காய் உறவுகளைப் பலப்படுத்த தலைவன் காட்டி பாதையில் ராஜதந்திரியாய் ஏழ்கடல் தாண்டி தொலை தேசமும் நகர்ந்தான் …
-
- 7 replies
- 1.2k views
-
-
பருவம் குழந்தை தொட்டு பருவமும் அடைந்தாள் பலவாறாய் வருடங்கள் கடந்ததே நினைவில் இல்லை அண்ணனின் நண்பனாய் அவளுக்கும் அண்ணனாய் அப்படி ஓர் உறவை தொடராமல் தொலைத்து பதறாமல் அவள் மீது பருவங்கள் காதல் கொள்ள உணர்சிகள் மட்டும் அதை சிதறாமல் காத்துக்கொள்ள சில காலம் இளைக்காமல் பின் நிலைக்காமல் போகவும் விரைந்தோடி போனேன் அவள் விழி தேடி போனேன் கண்டதும் கையில் காதலை விதைத்த காகிதத்தை கொடுத்து மாலை வருவேன் என்று மறு நாள் காலை சென்றும் மனதில் ஆசை அற்றோ வெளியில் வேஷம் கொண்டோ பதில் தர மறுத்தாள் ஓர் சில நாட்களில் என் ஒல்லிக்குச்சிகாரி தொலைவாகியே தொலைந்தாள் தேடியும் கண்ணில் இல்லை ஓரிரு ஆண்டு தள்ளி தூரமாய் என்னில் பட்டாள் மீண்டும் என் காதல் சொல்ல மொத்தமாய் …
-
- 7 replies
- 1.2k views
-
-
நாங்கள் புலம்பெயராத தமிழர்கள்....... பிணங்களின் ஓலங்களையும் இழப்புக்களின் வலிகளையும் சகித்தபடி சிந்தனைகளைப் புதைத்து விட்டு தூங்கப் பழகியிருக்குறோம் வீட்டின் கோடியில் இற்றுப்போன உடல்களின் எஞ்சிய எலும்புகளின் நடுவே அமைதியாக இருந்து உணவருந்திக்கொள்கிறோம் கோப்பையில் இருந்து எழும் சொந்தங்களின் இரத்த வாடையை நினைவுபடுத்தாது தேநீரை சுவைத்துக்கொள்கிறோம் விடுதலைக்காய் வீழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்த நாட்களில் கொடிகளைப் பிடித்தவாறு ஆக்கிரமிப்பாளர்களின் தேசிய கீதங்களைப் பாடிக்கொள்கிறோம் ஏசிய வாய்களால் யூதாஸ்களைப்பாடி எங்களின் மீட்பராய் துதித்துக்கொள்கிறோம் இடித்துக் கொட்டப்பட்ட கல்லற…
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
கடந்து செல்லும் 2009....... -------------------------------------------- கடந்து செல்லும் 2009 மறந்திட முடியாத துயர ஆண்டு தமிழினம் குருதியும் சதையுமாய் கொடுமையைச் சுமந்த துயர ஆண்டு துயரங்கள் வாழ்வின் பகுதியானது துவண்டு நாம் வாழ்ந்திடல் பயன் தராது ! இழப்பின் வலிகளை இதயத்தில் பதிவோம் இனியென்ன உள்ளது என்றே நிமிர்வோம் பணியெங்கள் பணியது தேசம் மீட்பதே என்பதை எங்கள் இதயத்தில் பதிவோம் கனியெங்கள் கைகளில் வருமோர்நாளென்று காரியம் ஆற்றிடும் வலிமையை பெறுவோம்! கையைக் குலுக்கியே முதுகிலே குத்தினார் அவரைக் கட்டித் தழுவியே முகத்திலே அறையும் நல் தந்திரங்களை நாமும் தேடுவோம் நாளைய ஆண்டினை எமதாய் மாற்றுவோம்! நம்பிக்கையோடு எம் மனங்களை இணைப்போம் நாளையென்பதை…
-
- 7 replies
- 1.2k views
-
-
நண்பா ஒரு நிமிடம்.... சட்டென திரும்பாதே வெட்டி விட வார்த்தைகளை தேடாதே இன்று மட்டும் தோல்வி உனக்கே........ குழப்பத்தில் ஆரம்பித்த நட்பினை.. நேசமாய் நீ மாற்றினாய்.. இல்லை மறைத்தாய்.... இந்த உறவிற்கு என்ன பெயர் வைத்தாயோ அறிந்ததில்லை நான், என்ன நினைத்திருந்தாயோ அதுவும் உணர்ந்ததில்லை... இப்போது உன் வார்த்தைகள் தெளிவுமில்லை..புரியவுமில்லை ஆனால் எங்கோ உனக்கு வலிப்பது புரிகின்றது! எனக்கும் தான்! நாடியில் கை வைத்து அமைதியாய் வாசித்த நீ நிமிர்ந்து உட்காருவாயே இப்போது... ஞாபகங்கள் மீட்கும் பழக்கம் உனக்கு இருக்கின்றதா? இல்லாவிடினும் எனக்காக ஒரு முறை... முயன்று பார் நண்பா! அர்த்தமறியாதது போல் உன…
-
- 7 replies
- 1.6k views
-
-
தோரண வாயில் எல்லாம் விளம்பர விசாரிப்புகள் வெள்ளை கோபுரம் வண்ணமேற்றி கொண்டுள்ளது கருங்கல் தூண்கள் பளிங்குப் போர்வையில் பதுங்கிவிட்டன தொன்னையில் சிரித்த பொங்கல் நயிலான் பையில் அழுகின்றது அர்ச்சகரெல்லாம் நகைக்கடை ஒப்பனைகளாய் சாமி சயனத்தில் இருப்பதால் சந்திக்க இயலாதாம் ஏமாற்ற் வெளினடப்பில் எதிர்ப்பட்ட சிறுவன் ஏந்திய கையில் இருந்த இறைவன் கேட்டான் “இங்கு விடுத்து எங்கு தேடினாய் என்னை” என்று
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழ் அழகு மொழி - அறிவு சிறந்தோர் உதித்த மொழி தமிழுக்கு அழகு ழகரம் - அந்த தமிழ் இன்று இழந்தது பல நாடு இழந்தோம் நகரிழந்தோம் தன்னிகரிலா உறவுகளை இழந்தோம் தங்கி வந்த நாட்டில் தமிழில் எங்கள் பேரிழந்தோம் இத்தனையிலும் பெருமையும் கொண்டோம் இது எங்கள் சிறுமைதானே தமிழன் நாம் பலர் பேசுவது தங்கிலிஸ் பேசுவது தங்கிலிஸனாலும் அதிலும் பெருமை கொள்ளும் சிற்றரிவினர் எம்மில் பலர் லகரமும் ழகரமும் றகரமும் ரகரமும் எம்மில் பலருக்கு சரியாக வருதில்லையாம் தமிழை காதலி தமிழுக்காக வாழ்ந்து பார் அழகு தமிழ் உன்னோடு கொஞ்சும் தமிழன் என்று சொல்வது பெருமை தலை நிமிர்ந்து நிற்பது பெருமை தமிழ் காத்து வாழ்வோம் தலை வகுத்த வழி நிற்போம். வல்வையூரான…
-
- 7 replies
- 1k views
-
-
-
- 7 replies
- 1.2k views
-
-
உன்னுடைய முத்தங்கள் என் முகத்தில் கறுப்பாக உன் ஒளியில் நானும் என் நிழலில் நீயும் என் மூச்சுக்காற்று-உனை அணைக்கத்தூண்டியது கண்களின் காமத்துக்கு நீயும் ஒளியானாய்-அன்று என் ஆற்றல்களுக்கு தீணி போட்டாய் குப்பிவிளக்கே நன்றியடி.....
-
- 7 replies
- 1.5k views
-
-
மாடப்புறாவும் தெருப்புறாவும் காதல் கொண்டதாம் அதைக் கண்ட கொப்பர் கொட்டன் எடுத்தாரும் தெருப்புறாவும் கொடுக்கை கட்டிச்சுதாம் மாடப்புறாவும் மதிகெட்டிச்சுதாம் இருபுறாவும் இன்பமாய்ப் பறந்திதாம் காதல் வாழ்வுதொடங்க வில்லனும் வந்தானாம் வில்லங்கமாய் ஆமி வடிவிலே மாடப்பறாவும் சிதைந்தே போனதாம் தெருப்புறாவும் தன்ரை புத்தியைக் காட்டிச்சுதாம் வீ...........ர்...........ரென்று பறந்ததாம் வேறொரு புறா தேடி..............
-
- 7 replies
- 2.1k views
-
-
பத்தாடை போட்டும் பனி மறைக்கும் காரியத்தில் இத்தாலும் அடியேன் ஒருபொழுதும் வென்றதில்லை. செத்தாலும் தாயே உனதுமடி மண்ணில்தான் இக்கவியும் புதையவேண்டும் இதுவேயென் யாசகம். கண்ணுக்குள் நூறு வண்ணங்கள் கண்டபின்பும் எண்ணத்தில் இதுவரையில் உனதுமுகம் மறையவில்லை. - என் கண்ணொப்ப உன் முகத்தை காட்டிவிடு; இல்லையென்றால் சுண்ணப்பண் பாடியுந்தன் சுடுகாட்டு மடியிலிடு. பூபாளம் பாடியிங்கே புதுப்பொலிவு கொண்டாலும் நாமாள நமக்கென்றோர் நாடொன்று வேண்டும் காண். பேயாளவா எங்கள் தேசத்தை விட்டு வந்தோம். - நாளையெந்தன் சேய் வாழ வேண்டுமம்மா வேங்கையினம் ஆளும் மண்ணில். தாயே! உன்மானத்தை காக்கின்ற வீரர்கள் கால்படும் மண் மீது காலூன்றும் நிலை வ…
-
- 7 replies
- 1.3k views
-
-
இயற்கையை நீயும் கவி ஆக்கினாய் வாழ்க்கையை நீயும் இன்பமாக மாற்றீனாய் வழியில் வந்த காதலன் அவன் ஏன் இடையில் நின்று விட்டான் உன்கண்களைப் பார்தும் அவன் இரங்கவில்லையா உன் இதயத் துடிப்பு அவனுக்கு ஏன் கேட்கவில்லையா அவன் இதயத்தை இரும்பாக்க எப்படி முடிந்தது உன்னுடய மெளனம்தான் அவனை வாட்டவில்லையா நீ பேசும் மொழி அவன்காதில் கேட்கவில்லையா காதிருந்தும் செவிடனாக ஏன் இருக்கிறான் அவனும் இங்கே
-
- 7 replies
- 1.8k views
-
-
இரத்தம் எழுதிய கவிதை வ.ஐ.ச.ஜெயபாலன் (1985ல் குமுதினிப் படுகொலைச் சேதி கேட்டு எழுதிய கவிதை) மே பதினைந்தில் இந்துட்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்…
-
- 7 replies
- 1.2k views
-
-
மயூரனுக்கும் இணைந்து நடக்கும் தோழர்களுக்காகவும், செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! சிங்களம் வெகுண்ட சினத்திற்குரியோனே! எண்திசை நிமிரும் தமிழனின் மானம் ஏந்தியே நடக்கும் இளைய தேவரீர்! தமிழ்ச்சங்கடம் தீர்க்கும் சஞ்சீவி சுமக்க சாலையில் இறங்கிய சரித்திர பொறிகளே! எங்கே மைந்தரே! தாயகத்திற்காகத் தூரங்கள் கடக்கும் உங்கள் கால்கள்….. வலித்தால் சொல்லுங்கள். உங்கள் திருவடி நீவித் தைலமிடவும், வெந்நீர் ஒத்தடம் விரைந்து தரவும் அன்னையர் உள்ளோம். அகிலத்தின் திசைகளில் அனைவரும் உள்ளோம். சட்டத்தை மதித்துச் சாதனை செய்யலாம் எனும் புதுக்கட்டக் கதவின் திறவுகோல்களே! வழிகோலி வைக்கின்றீர்கள், வாழ்த்தெடுத்து விழிகசிந்து நி…
-
- 7 replies
- 1.5k views
-
-
(கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட வாணிவிழா - 2008 கவியரங்கில் இடம்பெற்ற எனது நண்பன் கி.குருபரனுடைய கவிதை இது) தூயதாய் நூல்கள் கற்று துலங்கிவரும் இச்சபையில் பாலகன் நான் வந்து பாடுவதோ? – யாரிவரோ? தொக்கிநிற்கும் கேள்வி துவங்கின் எனைக்காக்க விக்கினேஸ்வரா சொல்லு விடை! வள்ளியை மணமுடிக்க வயோதிபனாய் வந்த வெள்ளி மயில் வாகனனே வேலவனே – நல்லூரின் உள்ளிருந்து கொண்டே உயிர்காப்பாய் என் கவிக்கு கல்லெறி சேராமல் கார்! பெற்றுப் புரந்தந்து பேணிப்பல செய்து உற்ற தேவைகளை உடன்முடித்து- கற்கவைத்து நாலுபேர்முன்னே நடமாட வைத்த வைத்த அம்மா நீ போனாலும் மறவேன் புகழ்! எதுகை மோனை இலட்சணங்கள் கற்பித்து புதுமை செய்கின்ற புரட்சியனே – ச வே ப பா வாடை பிடிக்க வைத்…
-
- 7 replies
- 2.6k views
-
-
வாழும் பூமி, வைகறை கவ்வும் சாகும் போதினில் தன்னிலை எண்ணும் வாசம் செய்ததும், வனத்தில் சாகசம் புரிந்ததும் ஏன் இன்னம் அடக்கம்? காசு இல்லையே! கைகளில் காசு இல்லையே!! காத்திட வாடா தமிழா!!! மறத்தமிழன் நீயோ மரத்தமிழனாகின்றாய் குறைத்தமிழ் ஏனோ கதைத்து தமிழ்க் குடும்பத்தை அழிக்கின்றாய் வெட்டுவேனாம், பின்பு காட்டுவேனாம் அதிலும் ஆயிரம் முறைகள் நொட்டுவேனாம் கத்துவேனாம், கூடவிருந்துவிட்டு குத்துவேனாம் என்று சொன்னவனெல்லாம் கூடு கூட இன்றி குறுகிக் காய்கின்றனர். வாழவிடம் இன்றி வசைபட்டு சாகின்றனர். ஆயிரம் பாயிரம் எழுதினாலும் ஆசைகள் குறைவதில்லை ஆசைகள் எட்டித்தான் வானத்திற் பறந்தாலும் மழைகளும் பொழிவதில்லை காலத்தின்…
-
- 7 replies
- 1.9k views
-