கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…
-
- 6 replies
- 1.6k views
-
-
முப்பால் வேந்தனுக்கு முற்சந்தியில் சிலை முடிந்தது எம்கடமை, முதலிரண்டு பாலும் முயற்சிக்கவில்லை எனவே முடியவில்லை மூன்றாம் பால் முயற்சிக்காமல் முடிந்தது,இப்பால்- மூவிரண்டில் புரியாமல் தவிப்பு மூவைந்தில் புரிந்து தவிர்ப்பு முவெட்டில் புரிந்தது தணிந்து,தொடர்ந்து மூவிருபதில் உடல் தளர முதலிரண்டுபாலும் முக்கியமென்று முடிவுகட்டும்போது மூச்சு நின்று நம் கதையும் முடிந்திடுமே
-
- 12 replies
- 1.6k views
-
-
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் பயணம் செய்யாவிட்டால், நீங்கள் வாசிக்காவிட்டால், நீங்கள் வாழ்வின் ஓசைகளைக் கேட்காவிட்டால். உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளாவிட்டால். நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் உங்கள் தன்மதிப்பைக் கொல்லும்போது, பிறர் உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்காதபோது. நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், அதே பாதைகளில் தினமும் நடந்து… நீங்கள் உங்கள் பழக்கங்களுக்கு அடிமையாகும்போது, உங்களது வழக்கமான செயல்களை மாற்றாமல் இருக்கும்போது வெவ்வேறு வண்ணங்களை நீங்கள் உடுத்தாதிருக்கும்போது உங்களுக்குத் தெரியாதவர்களோடு நீங்கள் பேசாத…
-
- 13 replies
- 1.6k views
-
-
காலமெல்லாம் கடும் பனியிலும் ஓடி ஓடி உழைத்தவன் - இன்று உறங்கு நிலையில் ஓய்வெடுக்கின்றான் நெஞ்சுறுதியுடன் போராட போனவன்- இன்று வீதி விபத்தில் சிக்கி சிதைந்து போனான் மனைவி மக்களை அன்பாய் நேசித்தவன் - இன்று அசையா மனிதனாக மருத்துவ மனையில் எல்லா கேள்விகளுக்கும் காலம்தான் பதில். ஒரு சோக நிகழ்வு ரெண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது. அவர் பிழைத்து வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
-
- 12 replies
- 1.6k views
-
-
"நியாயம்" என்பது இன்னும்... கேள்விக்குறியாகவே... தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட, தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில்... சுடர்விட்டெரிந்து கரியாகி...சாம்பலாவது, "நியாயம்" என்பதும்தான்!!!!! மனச்சாட்சி உள்ளவர்கள் மட்டும்.... புரிந்து கொள்ளட்டும்!
-
- 7 replies
- 1.6k views
-
-
தலைப்பின்றி ஒரு கவிதை அவள் பெயர் * வார்த்தைகள் வற்றிவிட்டது கலந்து பேச வரச் சொல்லுங்கள் என்னை ஏமாற்றியவளை ஆணையிட்டான் கவிஞன் * காதலியின் பெயரை வைக்க சம்மதித்தாள் என்னால் தாயான மனசை புரிந்த மனைவி * தாரம் தாயானதில் புரிந்து கொண்டேன் ஏன் தாரத்துக்கு முன் தாய் என்பதை * இருந்த இடத்தில் இருந்து உலகம் சுற்றுகிறாள் என் கவிதையில் அவள் * கவிஞனின் கல்யாணவீட்டில் கவலைப்பட்டாள் கவிஞனாக்கியவள் * கவனமாக இருக்கிறான் காதலிக்கு கவிதை எழுதுபவன் ஆயுத எழுத்தை பாவிக்கக் கூடாது என்பதில் * காதலிக்கே மிஞ்சவில்லை எப்படித் தானம் செய்வேன் என் கவிதைகளை அன்னைக்கு சொன்னான் கவிமகன் …
-
- 10 replies
- 1.6k views
-
-
ஜூன் மாத "கணையாழி" இதழில் வெளியாகியுள்ள எனது "அஸ்மிதா எனும் குட்டி தேவதை" கவிதையை, யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! அஸ்மிதா எனும் குட்டி தேவதை ----------------------------------------------------- எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு அஸ்மிதா எனும் குட்டி தேவதை கோடை விடுமுறைக்கு வந்திருக்கிறாள். கையோடு கொண்டுவந்த குட்டி மழைக்காலத்தை எங்கள் வீட்டில் விரித்து வைத்து, நிறமற்ற கோடையை நிறப்பிரிகை செய்து வானவில் காட்டுகிறாள். அஸ்மிதா பாட்டி, அஸ்மிதா தாத்தா, அஸ்மிதா நாய்க்குட்டி வரிசையில் அஸ்மிதா மாமா, அஸ்மிதா அத்தை என்று நாங்களும் பெயராகு பெயர்களாகிறோம். க…
-
- 4 replies
- 1.6k views
-
-
வரமா? சாபமா? நாளை மணக்கோலம் காண மனமெல்லாம் பூரிப்பாய் மலர்ந்து விட்ட மல்லிகையே உன் சந்தோசக் கனவுகளுக்கு இன்றுடன் சாவுமணி அடிக்கப்படுவது உன் காதுகளுக்கு கேட்காது நாளை உன் கழுத்தில் இடப்படும் விலங்கு உன்னை ஆயுள் கைதியாக்குவதை நீ அறியாய் உன் கைத்தலம் பற்றக் காத்திருப்பவனின் கைகளில் நீ ஒரு விளையாட்டுப் பொம்மை நாளை உன் சிறகுகள் ஒட்ட நறுக்கப்படும் இன்று நீயோ பருவச் சிட்டு நாளை முதல் சிறகொடிந்த பறவை நாளையிலிருந்து உன் நெஞ்சில் மனச்சுமை அதனால் தான் இன்று உன் தலையில் மலர்ச்சுமை உன் உடலெங்கும் கொள்ளை நகைகள் காரணம் உன் புன்னகையை அபகரிக்கத்தான் குங்குமப் பொட்டு மங்கைக்கு மங்கலமாம் இதுவே உன் வளர்ச்சிக்கு முற்றுப் புள்ளி …
-
- 5 replies
- 1.6k views
-
-
ஆண்டவன் என்றனர் சிலர் அரோகர போட்டனர் பலர் அவதாரம் என்றனர் சிலர் அடிமையானார் பலர் மகான் என்றனர் சிலர் மயங்கினோர் பலர் மகாத்மா என்றனர் சிலர் மன்டியிட்டனர் பலர் பாபா என்றனர் சிலர் பஜனை வைத்தனர் பலர் மனிதன் என்றனர் கேள்விகள் எழுந்தன என்ன மதம் என்ன மொழி என்ன சாதி அசியனா ஆப்ரிக்கனா ஜரோப்பியனா.............. ஆயிரம் கேள்விகள்
-
- 9 replies
- 1.6k views
-
-
ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் பதிலுக்கு கணணி பாடல்களையும் பல்சுவைத்தகவல்களையும் பரந்துபட்ட செய்திகளையும் பரிசளிக்கின்றது. என்னவென்று சொல்ல ஜங்கரனின் அருளை! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் அளித்த ஒளவையாருக்கு ஆனை வடிவில்! எனக்கு எலி உருவில்.!!
-
- 4 replies
- 1.6k views
-
-
சாப்பாட்டுப் பயணங்களில்...! பசியின் ஆற்றாமையில் கவளம் கவளமாய் தொடங்கிய சாப்பாட்டுப் பயணம் இடவலமாய் கை சுழற்றி வீசுகிறது இடையிடையே கிழிந்த இலையில்! இறுதிவரை நிகழவேயில்லை பசி மாற்றம்! பசியின் துவக்கத்தில் பருக்கைகளின் மேல் துளிர்க்கும் வேட்கையும் விருப்பும் ஆசையும் ஆர்வமும் உள்ளிறங்கும் போது முற்றிலும் நீர்த்துப்போகிறது ருசியின் சுவைகளின்றி! எல்லாப் பந்தியின் நிறைவிலும் உள்நுழைவதில் பரபரப்பு வியாதியாய்! ஒரு முறையாவது பந்தியில் முதலில் உட்கார வேண்டும் சங்கல்பம் தோன்றி மறைகிறது வழக்கம் போல முட்டி மோதி இறுதியாய் இடம் பிடிக்கையில்! http://nejamanallavan.blogspot.com/
-
- 3 replies
- 1.6k views
-
-
பிறக்கிறது நம் தேசம்..... கவிதை - இளங்கவி இரத்தத்தில் தோய்ந்த தமிழீழத்தின் முழு நிலவும்....... பிணக்குவியலால் மறைந்த தமிழீழத்தின் சூரியனும்....... அங்கே ஒளியையும் மறைத்து நம் தேசத்தின் குளிர்மையும் நீக்கி கூக்குரல்கள் மட்டுமே என்னாளும் ஒலித்திடும் தேசத்தை பாரீர் அங்கே ஒருதரம் வாரீர்....... குயில்களும் பாடாமல் கூட்டிலே ஒளிந்து கொள்ள....... மயில்களும் ஆடாமல் மறைவிலே மறைந்துகொள்ள.... மரணித்த உடல்கள் மட்டும் மலிவாகக் கிடைக்கிறது...... தடுப்பார்கள் யாருமின்றி தினமும் கொலைகள் நடக்கிறது.... ஒருபக்க முலையிலே குழந்தையின் பசி தீர்த்து மறுபக்க முலையை எதிரியின் கொடுமைக்கு பறிகொடுத்து இறக்கின்ற நிமிடமும் மழலையின் பசிதீர…
-
- 8 replies
- 1.6k views
-
-
காணவல்லாயோ எனும் எனது கவிதையின் மீது கண்ணெறிந்தோர் அனைவருக்கும் குறிப்பாக அனஸ் அவர்களுக்குமாக இன்னொமொரு கவிதை. "ஊருக்குப் போனேன் " எனும் தலைப்பில் எனது பயண அனுபவத்தையும் வீடு செல்லும் அனுபவத்தையும் சில காலத்திற்கு முன் இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். பலர் வாசித்துப் பாராட்டினார்கள். இங்கு நான் வெளியிடும் இக்கவிதையும் "வீடு செல்லலுடன்" தொடர்புடைய ஒரு கருத்தியலை முன்வைக்கிறது. புகலிட வாழ்க்கையும் அதன் அனுபவப்படிவுகளும் உள்நோக்கிய பார்வையினூகக் கவனிப்படவேண்டியவை என நான் கருதுகிறேன். சந்தமும் சொல்லடுக்கும் மாத்திரமே கவிதை என எண்ணிய காலம் அவதியாகிவிட்டதென நான் கருதுகிறேன். அதற்காக சந்தமும் சொல்லடுக்கும் தேவையற்றவை என நான் சொல்லுவதாகக் கருத வேண்டாம். …
-
- 10 replies
- 1.6k views
-
-
மனிக் ஃபாம்... இளங்கவி - கவிதை.... மரணத்தின் பிடியிலிருந்து மீண்ட நம் உயிர்களுக்கு மனிக் ஃபாம் என்ற மரண வலயத்தில் இலவச உணவாம்...!.இல்லை..! இலவச உடையாம்.....! அதுவுமிலை...! நிம்மதி தூக்கமாம்...! சுத்தப் பொய்....! தமிழன் வாழ்க்கையில் இளமையிலும் மரணம் தரும் ஓர் இருண்ட நிலமது....! ஆம்...! பூமியில் எமன் அமைத்த மகிந்தரின் புனித பூமி அது....! எமனின் முகவர்கள் எகத்தாளமிடும் பூமி.... சிறுமி முதல் குமரிவரை சுவைத்திடுவான் ஆமி.... வன்னியிலே.. மழை வந்தால் ஆடிய மயக்கிட்ட மயில்களும்..... மனம் விட்டுப் பாடிய தேனிசைக் குயிகளும்...... கால்களும் ஒடிக்கபட்டு..... குரல்வளையும் நசுக்கப்பட்டு..... கட்டிய கூடாரத்தினுள் ஒட்டுண்…
-
- 15 replies
- 1.6k views
-
-
உன்னை போல் ஒரு ஆணின் அருகிலே மௌனம் கொள்வது கடினம் தான்... பேசிக் கொள்ளாத எல்லா நிமிடமும் நஷ்டம் தான்... எனை விட இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்... உன்னை பார்த்தவுடன் எனை தொட்டுவிட்ட வெட்கத்தில் தலை குனிந்தேன்... அன்பே...உன்னை ஒரு நிமிடம் மறந்திருக்க என்னால் முடியவில்லை... இன்று இந்த நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க ஒரு போதும் அலுக்க வில்லை... உன் வெள்ளை உள்ளம் கண்டு விழுந்து விட்டேன்... விழுந்த இடம் உந்தன் நெஞ்சம் என்று புன்னகைத்தேன்...!!!! அன்பே... உன்னை நான் மறக்க்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தொல்வியிலேயே முடிகின்றன... ஏனெனில்... நான் மறப்பதற்கு உன்னை தானே நினைக்கிறேன்...!!!! நான் சிந்தும் புன்னகை கூட உன்னை …
-
- 9 replies
- 1.6k views
-
-
மாமரி அன்னையின் குழந்தையே ஏசுவே மாநிலம் யாவும் மாதவன் பிறப்பில் மகிழ்வும் ஆரவாரமும் மறுவாழ்வும் ஈழத்தமிழனுக்கு அவலம் மட்டுமா ? கண்ணீரும் செநீரும் , கொட்டும் மழையும் போதாதென்று ,எதிரியின் செல் மழையும் என்ன பாவம் செய்தாள் தமிழீழ தாயவள் வீதி எங்கும் மின் விளக்கு , விழா கோலம் நாதியற்ற தமிழன் மட்டும் நாய் படா பாடு , உண்ண உணவில்லை , உடையில்லை படுக்க பாயில்லை ,மண் தரையும்,மழைவெள்ளம் ஏனையா ஏசுவே எமக்கு இந்த கோலம். நேசக்கரம் நீட்ட , புது யுகம் பிறக்கவேண்டும் தமிழர் வாழ்வு மலர மாண்ட மண் வேண்டும் ஏசு பிறக்கவேண்டும் ,மக்கள் மகிழவேண்டும் புது வருடத்தோடு புது வாழ்வு பூக்க வேண்டும்.
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
சாய்த்துச் செல்லப்பட்ட ஆடுகளில் பலியிடப்பட்டது போக மீதியானைவைகள் பட்டிக்கு திரும்புகின்றது இந்தச் சந்தையில் ஆடுகள் எப்போதும் பலியிடப்படுவதற்கே வளர்க்கப்படுகின்றது நரிகள் பரிகளானது போல் ;ஆடுகள் நாய்களாகி பலியில் இருந்து தப்பித்தும் கொள்கின்றது வெள்ளை நிற மேனி விரும்பி பன்றியான ஆடுகள் தெருவெங்கும் அசிங்கங்களை துப்பரவு செய்து மகிழ்கின்றது மான்களான ஆடுகள் வனவிலங்குச் சாலைகளில் துள்ளிக் குதிக்கின்றது பசுவான ஆடுகள் கோயில்களை சுற்றி பவ்வியமாக சாணிபோடுகின்றது நரிகளான ஆடுகள் ஊர்க்கோடிகளில் என்னும் ஊழையிடுகின்றது புலியான ஆடுகள் எல்லாம் மாண்டுபோனது எந்த வடிவமெடுத்தென்ன சிங்கத்துக்கு பசிவரும்போது இரையாவது வித…
-
- 13 replies
- 1.6k views
-
-
கை வந்த கழுகுகள் இறக்கை வைத்த விரியன்கள் கண் கொத்தும் கழுகள் பிணந்தின்னிப் பேய்கள் உயிர் காவும் வேதாளங்கள் இன்னும் பல பேர் தெரியா பிரகிருதிகள் - எல்லோருக்கும் வேணுமாம் விளையாட எம் குழந்தைகள் வீசிய குண்டுகளில் அவை காவிய உயிர்கள் எத்தனை - சென் பீட்டர்ஸ், செஞ்சோலை என தொடர்கதை அவர் தம் வெறியாட்டங்கள் காயங்கள் கண்டதும் காற்று மறு திசை வீசியதும் பழங் கதை ஆயின இன்று திறமையையும் பலத்தையும் பரீட்சிக்கும் புதுக் கதை, ஆம் எங்களிடமும் கழுகுகள். இப்போதெல்லாம் இருட்டினாலே சிவராத்திரியாமே உங்களுக்கு? எத்தனை இரவுகள் தொலைத்திருப்போம் எம் தூக்கங்களை. கொஞ்சம் அனுபவித்து தான் பாருங்களேன் நாம் பட்ட வலிகளையும். வாங்…
-
- 10 replies
- 1.6k views
-
-
என் ராஜியத்தின் இளவரசியானவளே.....! என் ஆளுகைக்குட்பட்ட அனைத்தையும் புன்சிரிப்பால் வளைத்தவளே....! மார்கழியில் மலர்ந்த செங்காந்தள் பூவே....! தேவதைகளை வெண்சாமரம் வீசப் பணித்த தேவதைகளின் தேவதையே....! எல்லாமுமாய் என் வாழ்வின் வசந்தமாய் திகழ்பவளே....! என் வானவில்லை வண்ணமிழக்கச் செய்துவிட்டுப் பறந்த வண்ணத்துப் பூச்சியே....! இழையோடிய சோகம் நிறைந்த வாழ்வுதனில் இமைப்பொழுதில் இன்பமூட்டிக் கொன்றவளே....! பிறப்பிற்க்கும் இறப்பிற்க்கும் நடுவே வாழ்தலை மட்டும் விட்டுச் சென்றவளே....! இன்றுபோல் என்றும் என் மனதில் பூப்பாயாக.... # பாப்பா rip 06/01/11 - 21/01/11
-
- 2 replies
- 1.6k views
-
-
[color=darkred] தப்பி ஓடிய படைகள்..... பறையடித்து படையெடுத்த பகை அழிந்தது.... பனிச்சங்கேணி பறிக்க வந்த படை சிதைந்தது.... அடியெடுத்து வைக்கையிலே அடி விழுந்தது.... எண் கணக்கில் ஜம்பதுகள் அங்கு முடிந்தது..... பொறுத்திருந்த புலியணிகள் பொங்;கி எழுந்தது.... போர் முரசு கொட்டி பகையை பிணமாய் எடுத்தது.... உயிரோடு ஒருவனையும் உடனெடுத்தது.... போர் கருவிகள் போட்டெறிந்து படை ஓட்டம் எடுத்தது.....!!! - வன்னி மைந்தன் - பனிச்சங்கேணி போர் ... 06- 10-06 :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழீழம் செல்லும் வழியில் ஒரு பாறாங்கல்........ அந்த வழியால் வந்தனர் தமிழ் அரசியல்வாதிகள்... சம்பந்தம் இல்லாமல் ஒரு அரசியல்வாதி சொன்னார்.... "இதற்கு வழி, தெரியவில்லை. ஒரே வழி திரும்பி செல்வதே!" தவளை வாயை திறந்து ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு பாதுகாப்பை திருப்பி தருவதே!" தொண்டைய கனைத்து ஒரு அரசியல்வாதி சொன்னார்..... "இதற்கு வழி, போட்ட நாராயணனை வைத்து கல்லை தூக்குவதே!" வெள்ளை வானில் வந்த ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எதிரியின் தலைவனின் காலில் உருண்டு புரள்வதே!" கருணை இல்லாத ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு எதிரியிடம் உபதலைவர் பதவி பெறுவதே!" வாகன விளக்கை பார்த்த (தொங்கு) மான்கள் போல்... கல்லை பார்த்து பேச…
-
- 5 replies
- 1.6k views
-
-
என் குருவே உந்தனுக்கு ஒரு கோடி நமஸ்காரம் .... உன்கவியால் மனம் நெகிழ்ந்து கவி படிக்க பயின்றவர்களில் நானும்ஒருவன்தான் , அது நிற்க.... இடி இடிக்கும் உன் குரலில் முல்லைத்தீவு பற்றி ஒரு முத்தான கவி சொல்ல பித்தாகி போனேன் நான் சகயமாய் நீ செய்யும் வார்த்தை ஜாலமெனெ புரியாமல் போவேனோ ....... கதறி அழைத்தோம் வரவில்லை - கரம் கூப்பித் தொழுதோம் வரவில்லை கூக்குரல் கேட்டதுவே.-.உரைத்தாயோ எம் குரலை உன் தலைவன் காதினிலே... எது செய்தாய் எமக்காக ..... ஆனந்தமாய் இருந்துவிட்டு - பின்னர் ஆனந்த புரத்தில் ஆவிதுடித்ததாம் நீலிக் கண்ணீர் நீ விட்டழ - நாமென்ன மூடரோ, நாடகத்தை நம்பி நிற்க கையிருந்த போது கரம் நீட்டி அழ…
-
- 1 reply
- 1.6k views
-
-
நம் தமிழீழ மண் வீரம் விழைந்த மண் வீரம் விழைந்த மண்ணிது வீரமறவரும் வாழ்ந்த மண்ணிது அம் வீர மன்னர்களின் வீர சாம்ராச்சியம் அன்னியன் சதியினால் வீழ்ந்த போது எம் வீரச்சரித்திரம் சாய்ந்த மண்ணிது. ஆங்கிலேயர் நம் மண்ணைவிட்டு அகன்ற போது ஆட்சி உள்ளூர் எதிரிக்கு மாறிய மண்ணிது. ஐம்பது வருட அடக்கு முறைக்கு அப்பாவி உயிர்கள் பலியான மண்ணிது. எம் அடிமைச் சரித்திரம் மாற்றி எழுதிட சூரியத்தேவன் தோன்றிய மண்ணிது. சூரியத்தேவன் தோன்றியததனால் சாய்ந்த வீரமும் நிமிர்ந்த மண்ணிது. எதிரியின் பிடியிலுள்ள் எம் சரித்திரம் மீட்டிட வேங்கைகள் பாய நம் எதிரியும் வீழ நம் வீரமும் உலகின் கண்களில் தெரிய உலகமே பார்த்து வியந்த மண்ணிது. …
-
- 7 replies
- 1.6k views
-
-
வைகாசி 18.......? எங்கள் முகவரியை முற்றாக தொலைத்த நாள். அகத்தினிலே தீராத வலியை புதைத்த நாள். யேகத்தினிலே எல்லோரும் விழிசொரிய சொந்த நிலத்தை இழந்த நாள். வைகாசி காற்று கூட தனது வழமையான செயலைக் கூட செய்ய முடியாமல் கண்ணீர் விட்டநாள்.......
-
- 9 replies
- 1.6k views
-
-
இரதை வாழையில் இடிவிழும் போது குறுக்க வெட்டி தங்கம் எடுக்க இலவுகாத்த கிளிகளாக காத்து இருந்தோம் இடி தலையில் விழுந்து முகம் உருக்குலைந்துபோனது வேலியில் சற்று சரிந்து நிற்கும் கருகிய கம்பிக் கட்டையாய் பற்றைகள் வளர்ந்த வயல்க் கரைகளில் எஞ்சியவர்கள் நிற்கின்றார்கள் புரட்டாதிச் சனி விரதம் பிடிப்பவர்கள் காகத்துக்கு சோறுவைக்க இன்னும் கம்பிக்கட்டைகளில் குந்தியிருக்கும் காகங்களை கூப்பிடுகின்றார்கள் நலமடித்த நாம்பன்கள் போல் வேரறுந்த மரங்கள் போல் கப்பாத்து பண்ணப்பட்ட நாய்கள் போல் பரிதவிக்கும் இந்த வாழ்க்கையின் வேதனைக்கு விரதமிருந்து காகத்துக்கு சோறுவைத்து விடிவுகள் தேடும் அவல வாழ்வு எமக்கு மட்டும் எல்லாப் பிரச்சனைகளும் எமக்கு வெ…
-
- 8 replies
- 1.6k views
-