கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பொய் சத்தியம் மனைவியிடம் சத்தியம் வாங்கி பல காலம் விட்டிருந்த சிகிரெட்டைய் யாரும் பார்க்காத நேரம் பற்றவைக்க நினைத்தது குரங்கு ஆனால் ஒளிந்திருந்த மற்றுமோர் குரங்கொன்று கண்டுவிட்டது கடவுளிடம் சொல்லுவதாக சொன்னது பறவாயில்லை அவரை நான் சமாளிப்பேன் என்றது குரங்கு கோவம் வந்த மற்றக் குரங்கு மனைவியிடம் சொல்வதாக வெருட்டி விட்டது. பா.உதயன்
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
-
நீராவியென அனுபவத்திரட்சி ஒடுங்கும் தருணத்தில் முதுமை பெற்றேன் கட்டுடைத்த பெரும் குளமெனச் சிதரும் வார்த்தைப் பிரளயம் புழுதி மழையில் நனையும் பூவரசம் சருகெனச் சரசரக்க நீர்க்குடம் உடைத்த நெடி மாறாக் கன்றுகள் பறக்கும் மேகத்தை புகை என்ற பருவம் தொலைத்த அனுபவங்களின் சீவன் கட்டும் சொற்களை கன்றுகள் கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
-
- 7 replies
- 2.2k views
-
-
-
ஆயுள் கைதி அந்த வெள்ளைப் புடவைக்காரி என் வேதனைக்குச் சொந்தக்காரி சின்ன உதட்டுக்காரி சிலர் சிந்தனைக்கு உந்துசக்தி சொந்த மனங்களுக்குள் சந்தமிடும் சலங்கைக்காரி புள்ளித் தீ விழித்து புன்னகைக்கும் புகைபோக்கி கள்ளத்தை உள்ளே வைத்து களிப்பூட்டும் வித்தைக்காரி மெல்ல மேகமதில் மனம் மிதக்க வைக்கும் மாயக்காரி கொள்ளை சுகம் கொடுத்து கொள்ளையிடும் கொடுமைக்காரி பள்ளம் அருகே வைத்து பார்வை வீசும் பகட்டுக்காரி உள்ளம் இணைந்த பின்னும் உரிமை கொள்ளும் சக்களத்தி துள்ளும் இளமையையும் துரத்திவிடும் சாலக்காரி வெள்ளைப் பல்லின் வண்ணம் வித்தை மாற்றும் வேசக்காரி உள்ளும் புறமும் புற்று நோய் விதைக்கும் மோசக்காரி சுருள்சுருளாய் வளையமிட்டு சுகம் கொடுக்…
-
- 7 replies
- 2.3k views
-
-
என் நினைவுகள் நம் காதலையும் மீட்டுப் பார்க்கின்றன தினம் தினம் என் உணர்வுகளை உனக்குக் கூற நினைக்கின்றன என் வேதனைகளை உன்னிடம் இறக்கி வைக்க ஆசைப்படுகின்றன வேதனைகள் வாட்டும் நேரத்தில் உன் தொலைபேசியின் இலக்கத்தை அழைக்கின்றன குரலின் மயக்கத்தில் துன்பங்கள் பறந்து சொல்கின்றன என் துயரங்களை கேட்டு நீ அவதைப்படுவதை என் மனம் ஒத்துக் கொள்ளவில்லை உன் மேல் உள்ள பாசங்கள் அதைக் கூற மறுக்கின்றன என் சோகங்கள் என் பாதையில் தொடரட்டும் உன் பாதைகள் பூவாய் பூக்கட்டும் இனியவனே எங்கிருந்தாலும் நீ வாழ்க!!!!
-
- 7 replies
- 2.2k views
-
-
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நீ நில்லடா..... தமிழா தமிழா நில்லடா.... உன் தலை விதி கோலம் என்னடா....?? அன்னியர் அரனில் ஏனடா அடிமையாய் வாழ்வது நீயடா...??? அவன் காலனி உன்னில் பதிவதா...?? அவன் காறியே உன்னில் உமிழ்வதா....??? இத்தனை சகிப்பு எதற்கடா...?? இன்னும் மௌனமாய் நீ ஏனடா...?? தீயாய் உணர்வதை மூட்டடா... பகையை தீயினில் போட்டு பொசுக்கடா... பொறுத்தது போதும் பொங்கடா... அடிமை விலங்கதை உடையடா... அகிலத்தில் தமிழனை நிமிர்தடா... ஆண்டுகள் ஆண்டுகள் அடிமையா...?? அட தமிழா நீ என்ன கோழையா...??? அவன் வன்முறை நீ இன்று அடக்கடா.…
-
- 7 replies
- 3.3k views
-
-
-
கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்! அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார் கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார் சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்
-
- 7 replies
- 1.5k views
-
-
அது ஒரு - நிலக் கீழ் இரயில் பயணம்.. கண்கள் அழகிய விளம்பரங்களோடு - தான் பேச.. மனம் - பல கணக்குப் போட்டு களைத்துப் போக.. கழுத்துத் தசைநார்கள் - ஓய்வுக்காக இழகித் தொங்க.. எதிரே.... வெள்ளை வான்வெளியில் நீல நிலவாய் உருண்டோடும்.. அவள் கண்கள்..! நின்று நிலைத்து - நிலை நிறுத்த வைத்து... பார்வைகள் சந்தித்து கணங்கள் கூட ஆகவில்லை.. விழியோ நட்பின்.. மொழி பேசுகிறது..! என் விழி... நியுற்றினோவின் வேகம் தாண்டி.. நிறப் பேதம் வென்று... செய்த சாதனையது..! "நியூட்டனின்" நிறப்பிரிக்கை கூட - அங்கு இல்லை..! அவள் தான் - அப்பொழுது என் தனிமை போக்கும் நண்பி..! விழிகளின் - மொழிப் புரிதலில் அவளும் இணங்க.. தொட்டிழுத்து …
-
- 7 replies
- 763 views
-
-
ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இலங்கையின்அமைதி ஆயுதத்தினாலே பாலஸ்தீனத்தின்அவதி ஆயுதக்குறைவினாலே! ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! இந்தியபாகிஸ்தானின் அமைதி அணுகுண்டினாலே திபெத் சீன அவதி அணுகுண்டின்மையினாலே ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்! நன்றி: குழலி பக்கங்கள்!
-
- 7 replies
- 1.6k views
-
-
மீதமின்றி கொல்லம்மா கடலம்மா `````````````````````` பெற்றால் தானே பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள்,, உண்மைதான் நாங்கலெல்லாம் உனக்கு தெருவில் கிடந்தது கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அழித்திருக்கலாமே - ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... எழுத்து -27/12/2012
-
- 7 replies
- 1.1k views
-
-
நீ பயனற்றுப் போகையில் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுகிறாய் உன்மீதான மனக்குறைகள் நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன உன்னைப் பற்றிய புகார்கள் என்றென்றைக்குமாக ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன நீ பயனற்றுப்போகும்போது வேலியில் பூத்துக்கிடக்கும் ஒரு கொடிபோல ஆகிவிடுகிறாய் உனக்கு யாரும் நீரூற்றுவதில்லை உனது மலர்களுக்காக யாரும் காத்திருப்பதில்லை ஆனாலும் நீ ஒரு செடியாகவோ மலராகவோ இருக்கத்தான் செய்கிறாய் உன் மேல் திணிக்கப்பட்ட குற்ற உணர்வுகளை இறக்கி வைப்பதற்கு உனக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை நீ செய்யத் தவறிய ஒவ்வொன்றிற்கும் பதிலளிக்கும் கடமையிலிருந்து நீ விடுவிக்கப்பட இதைவிட்டால் உனக்கும் வேறொரு தருணம் வர…
-
- 7 replies
- 1.1k views
-
-
கௌசல்யனின் சாவறிந்த தினம் எழுதப்பட்ட கவிதை. இன்று கௌசல்யனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு மீளவும் பதிவாகிறது. சதி கொன்ற சாவு. 'கௌசல்யன்" சத்தமின்றி இருந்த வீரன் சத்தமின்றி எங்கள் மனங்களை வென்று போன சத்தியன். மோப்பர்களை மீட்பர்களாய் நம்பிய பாவம் எங்கள் மீட்பர்களே உங்களை நாம் இழந்து போக அரச மோப்பரே சாட்சியாக..... கண்காணிப்போர் கண்களில் உங்கள் சாவு குழு மோதல் என்பதாக..... சார்ந்து நின்று நீதி சொல்லும் பணிசெய்ய வந்த பிணியரே இவர்களெல்லாம். கருணாவின் சதியென்று கதைபூசி கௌசல்யன், புகழன், செந்தோழன், நிதிமாறன் சாவிதனை விதியென்றா எழுதிவிட....? இல்லையில்லை, சதிகொன்று போனதெங்கள் சந்ததியின் விதிம…
-
- 7 replies
- 2.1k views
-
-
- சோதியா
-
- 7 replies
- 1.7k views
-
-
சிலையாக வடித்த சிற்பம் தான் அவளோ இப்பொழுது மலர்ந்த மல்லிகைதான் இவளோ கண்கள் இரண்டும் கதைகள் பேசின காதலின் விரசம் இதழ்களில் தவழ்ந்தன வகுப்பறையில்.... பாடங்கள் மறக்க பாடம் கற்பித்தாய் நீ ஆசான் நான் மாணாக்கன் ம்ம்ம்..... பாடம் நடத்து
-
- 7 replies
- 1.5k views
-
-
உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள் மாடுகளுக்கு சிறகுகள் முளைக்கும் என்பதை மறந்துவிட்டன பறந்து வருகிற எருமைகள். உடையாத மனதோடு உயிர் காக்கும்படி அடைக்கலம் தேடும் கோவில் வாசலில் மாதாவின் தலை தலைகிழாய் கிடக்கிறது. எண்பத்தைந்து மாக்கள் செத்தால் என்ன? எண்பதினாயிரம் மக்கள் செத்தால் என்ன? எந்த நாடும் கேட்காது. மதம் பிடித்த யானைகள் மதம் பிடிக்காத பூனைகளோடு கைகுலுக்கி மகிழ்ந்து மௌனமாகிப் போனது. …
-
- 7 replies
- 1.8k views
-
-
நன்றாகவே தலையாட்ட பழகிக்கொண்டு விட்டனர் அல்லது, பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர். எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன எங்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாதவையல்ல தீர்க்கப்பட விரும்பாதவை. இன்றைய கால முதற்பிரச்சனை தலையாட்டல், எந்தப்பக்கம் எந்தக்கணத்தில் எதற்காக தலையாட்டுகிறார்கள் என்பதை எந்தப்பக்கம் இந்தக்கணத்தில் அந்த தலையாட்டாலால் பிழைத்துப்போகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முயன்று தோற்றுப்போவதில் ஆரம்பிக்கிறது இன்றைய பிரச்சனை. எங்களது பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை தலையாட்டுபவர்களுக்கு. எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன.... நீர் நிலம் வளம் என ஒவ்வொன்றிலும், இனம் மொழி பரம்பல் என ஒவ்வொன்றிலும், கொடூரமாக கொல்லப்பட…
-
- 7 replies
- 710 views
-
-
மான்புலிக்கிளிகள் "வட்டம்பூ" விபரித்த ஆண்டாங்குளம் "குமாரபுரம்" வர்ணித்த அரியாத்தை இவ்விரண்டும் குழைந்த கலவையாக மாலதி படையணி... மலைத்துப் போனேன் நாட்காட்டியில்...புத்தகத்தில
-
- 7 replies
- 2k views
-
-
யாழ்தேவி அனுப்பட்டுமா கார்பட் வீதி போடட்டுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே யாழ்தேவியும் வேண்டாம் கார்பட் வீதியும் வேண்டாம் சாதாரண போக்குவரத்து போதும் மகிந்தரே போதும் மகிந்தரே சிங்கப்பூராக ஆக்கட்டுமா ஜப்பான் ஆக்கட்டுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே சிங்கப்பூரும் வேண்டாம் ஜப்பானும் வேண்டாம் யாழ்ப்பாணமே போதும் மகிந்தரே போதும் மகிந்தரே டக்கிளஸ் வேணுமா கேபி வேணுமா சொல்லுங்கோ தமிழ்மக்களே டக்கியும் வேண்டாம் கேபியும் வேண்டாம் விக்கி தான் வேணும் மகிந்தரே மகிந்தரே சிறிலங்காவில் சிங்களதேசியத்துடன் இணக்க அரசியல் செய்ய வாறீங்களா இராணுவ ஆட்சியில் இருக்க போறீங்களா தெமிளு மினுசு கியன்ட இணக்க அரசியலும் வேண்டாம் இராணுவமும் வேண்டாம் தமிழ்தே…
-
- 7 replies
- 1.2k views
-
-
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ... இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு .. நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!! நீ நடந்து வரும் போது தான் ... காற்று பெருமை அடைகிறது ... உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
-
- 7 replies
- 2.4k views
-
-
கடவுளுக்கு ....கேட்குமா ?.... என் குஞ்சுகளும் நானும் பசியால் துஞ்சுகின்றோம் பாவி படுபாதகன் ,குண்டு மழையாக பொழிகின்றான் இரவினில் ,காடுகளில் ,பாம்பு பூச்சிகள் நடு , நடுவே உறக்கமோ , கோழியுரக்கம் ,குடிநீருக்கும் தொலை தூரம் என்னவனை கொன்றது உன் கொடிய செல்வீச்சு ஊர்விட்டு ,ஊர் மாறி , நடந்த காலும் சோர்ந்து போச்சு அக்கினி பிழம்பாக ,கொட்டும் வான வேடிக்கை கண்டு குஞ்சுகள் கலங்கி அழ ,என் நெஞ்சம் படும் பாடு உண்ணவும் முடியவில்லை ,உறங்கவும் முடியவில்லை இன்னும் தான் விடிவுமில்லை ,கொஞ்சமும் இரக்கமில்லை ஏனிந்த வேதனையோ ? எவ்வளவு காலத்துக்கோ இந்த நெஞ்சு கூடு வேகமுன் ,கொஞ்சமேனும் இரக்கம் உண்டா தாய் இழந்தேன் தந்தை இழந்தேன் ஊர் இழந்தேன் உற்றார் …
-
- 7 replies
- 1.4k views
-
-
பல ஆண்டுகளுக்கு முன்பு வாசிக்கவும் எழுதவும் நேரமும் மன வெளியும் இருந்த காலங்களில், சில கிறுக்கல்களை நான் தாள்களில் பதிய, அவை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எழுதிய எதற்கும் மூலப்பிரதி என்னிடம் இல்லை. பிரசுரமான இதழ்களின் பிரதிகளும் பல்வேறு இடம்பெயர்வுகளின் போது ஒவ்வொன்றாகத் தொலைந்து போய் விட்டன. இவையெல்லாம் சிறு வயது மணல் வீடு ஞாபகங்கள் மாதிரி மனதில் மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கையில் அண்மையில் எனது பழைய கவிதை ஒன்றை யாரோ ஒரு நண்பர் முகநூல் வழியாக நினைவு படுத்தியிருந்தார். அக்கவிதையின் தடங்களைப் பின்பற்றித் தேடல் செய்த போது தான் நூலகம் என்ற அரிய தமிழ் நூல்/இதழ் ஆவணக்காப்பக இணையத் தளமொன்று இருப்பது தெரிய வந்தது (www.noolaham.org). இந்த இணைய…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன் மேதினிதழைக்க வேர்வை சிந்தி- ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட - வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள- பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு! சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி- சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்! ஊர்மனையாவிலும் பால் …
-
- 7 replies
- 2.5k views
-
-