Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கோமகன்,

    [size=5]கதவு[/size] கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான் அவன் மேலும் சொன்னான் கதவுகள் சில நேரம் இமைகளாகத் தெரிகின்றன சில நேரம் பூ விதழ்களாக மலர்கின்றன சில நேரம் உதடுகளாகின்றன பயணம் முடிந்து வீடு திரும்புகிறவனுக்கும் சிறையில் கிடப்பவனுக்கும் கதவு திறப்பது என்பது ஒரே அர்த்தம் உடையதல்ல கதவுகளுக்கும் சிறகுகளுக்கும் ஏதோ இனம் புரியாத சம்பந்தம் இருக்கிறது கதவின் திறப்பிலும் மூடலிலும் கேள்வியும் பதிலும் இருக்கிறது கதவுகளில் சந்திப்பும் இருக்கிறது பிரிவும் இருக்கிறது …

  2. கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! கத்தலோனியர்களே! ——————————— கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! சனனாயகத்தினை நம்பும் அயலவர்கள் உங்கள் அயலிலே! அரசுகள் எப்போதும் விடுதலையை ஏற்பதில்லை அது அவர்களின் மரபுமல்ல ஆனாலும் உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கிறது! உலகின் சில சக்திகள் இன்று உறுமாலாம் – ஆனால் நாளை கைகோர்ப்பர் ஒன்றிணைவர் வளங்களின் வழியே தமது நலன்களைக் காண்பர் ஆனாலும் என்ன உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கும்! தானாகக் கிடைப்பதல்லவே விடுதலை தொடர் முயற்சியே சுதந்திரக் காற்றினை உங்கள் தேசவெளியில் வீசச…

    • 2 replies
    • 632 views
  3. கத்தலோனியா மூதாட்டி தங்க நகரமெங்கும் இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில் புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி, முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள். 'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன் துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி 'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள் சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!'…

    • 0 replies
    • 1.2k views
  4. கத்திக் கதறுது மனது-நீ இன்னும் இருக்கிறாய் என்று புழுதி புரண்டழுது. தெருவெல்லாம் இழுத்து வந்தேன் - என் இதயத்தை தேம்பியழும் அதை எங்கு மறைக்க ? அண்ணா அவசரப்பட்டயோ - நாம் அங்கீகாரம் உலகில்லல்லவா கேட்டோம் - நீ விண்ணிற்கு சென்றதேன் ? இனி அந்தச்சிரிப்பை எங்கு நாம் தேட ? உன் விழியில்லாத் தேசம் இருண்டல்லவா கிடக்கு ! தலைவருக்கு தோள் கொடுக்க யாரைத் தேடுவோம் ? நீயில்லாத செய்தி - வந்திருக்கவே வேண்டாம் !

  5. அன்று கையில் புத்தகமும் கையுமாய் கல்வியும் கண்ணுமாய் அன்னை தந்தை ஆசிரியன் சொற்படிமாய் தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் இன்று வாயில் புகையும் தண்ணியுமாய் கையில் கத்தியுமாய் வாளுமாய் கொன்று திரிகிறார்கள் அன்று ஒரு காலம் மேய்ப்பவன் ஒருவன் இருந்தான் ஏன் என்று கேட்க அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது அமைதி பேண தமிழருக்காய் ஒரு படை இருந்தது இன்று என்ன இருக்கின்றது இன்று எவரும் இல்லாமல் ஏன் என்று கேட்க தானாய் தம்மையே அழிக்கிறார்கள் தமிழர் தெரிந்து கொள்ளுங்கள் எம்மை ஆக்கிரமித்து இருப்பவனுக்கும் நாம் அழிவது தானே விருப்பம் இனி என்ன தான் மிஞ்சி இருக்கப் போகிறது கஞ்சிக்கு கடைசியில் என்ன செய்வீர் …

  6. கந்தகக் காற்றிலே... கந்தகக் காற்றிலே... வெந்து மடிந்தோமே....! சொந்த மண்ணிலே... சொந்த மண்ணிலே...! செத்து விழுந்தோமே...!! முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி, கொள்ளி வைத்தான்... எதிரி! கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு, சாக வைத்தான்... சிதறி!! பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா.... நஞ்சுக் குண்டிலே எரிஞ்சு போனதடா..........! நெஞ்சம் வெடிக்கிற சேதி தினமே.... பஞ்சமின்றித்தான் வந்து சேர்ந்ததடா........!!! காப்பாற்ற முடியலையே... கதறி அழுதோம் நாங்கள்...! கேட்பாரற்று நீங்கள் சிதற... பதறித் துடித்தோம் நாங்கள்...! ஊமையான சர்வதேசம்... செய்ததெல்லாம் சர்வநாசம்..! போலியான மனிதநேயம்... சொன்னதெல்லாம் வெற்று வேஷம்..!! உரிமைகேட்டு.... உயிரைக் கொடுத்து, எழுந்து நின…

    • 3 replies
    • 2.1k views
  7. கந்தகப் புகையிலும் கருவொன்று.... கவிதை - இளங்கவி அவலத்தின் ஓட்டத்திலும் அவர் எனக்கு தந்த சொந்தம்.... நாட்டுக்காய் உயிர் போக்குமுன்னர் அவரால் என் அடிவயிற்றில் வந்த சொந்தம்..... முற்றுப் புள்ளிபோல நீ தோன்றினாய் என் கருவினிலே...... வளர்ந்துவிட்டாய் வண்ணத்திபோல் சிறகடிப்பாய் என் வயிற்றினிலே..... கருவிலே உன் நிறம் வெளுக்க பாலில் நான் குங்குமப்பூ சேர்க்கவில்லை...... நீ சுவாசித்த காற்றினிலே கந்தகப் புகையல்லா சேர்த்திருந்தேன்.... காலை முதல் மாலை வரை உணவின்றி என் வாழ்க்கை செல்ல.... இரவு முதல் காலை வரை பதுங்கு குழியினிலே என் இரவு செல்ல.... என் உயிரோ தேய்ந்து செல்ல உன் உயிரோ வளர்ந்ததடா.... ஏன் என்று யோசித்தேன் எனக்கு அது இப்போ ப…

  8. ஆக்கிரமிப்புப் பூதம் எல்லையின்றி ஊதித் தள்ளிய கந்தகப் புயலில் சிக்கி குருதியில் குளித்து கறுத்துப் போன பூமியே.. ஆடவன் என்றும் மகளிர் என்றும் குழந்தை என்றும் வேற்றுமை உணரா உருக்குத் துகள்களுக்கு உடலைப் படையல் செய்த பூமியே.. விடுதலைக்காய் எழுந்த ஓயாத அலைகளின் தொடக்கப் புள்ளியே முடிவுப் புள்ளியுமானது கண்டு இரத்தம் வடித்த தாயே... ஆடை மறைப்புக்குக் கூட அருகதையற்ற நிலையில் எதிரிமுன் அம்மணமாய் நின்ற தமிழர் தேகம் சுமந்து வேதனையில் வெந்த தேசப் பூமியே.. சிங்களச் சாத்தானின் இனவெறி வெற்றி இச்சைக்கு உன்னையே தந்திட்டு வெறித்துக் கிடக்கும் தேசமே.. தமிழ் தாயிவள் சேயை இரும்புக் கவசம் அல்ல தேகக் கவசம் தந்து காக்க உறுதுணையாய் நின்ற தீரமே... …

  9. பூமிப் பந்தில் எழுந்த இந்தப் புயல்கள் எழுதிய சரித்திரம் கண்டு அணு குண்டும் ஏவுகணையும் ஆட்டம் கண்டதுண்டு..! சிங்களம் முதல் ஏகாதபத்தியம் வரை குலப்பன் அடிக்க... பயங்கரவாத முத்திரைக்குள் முத்தாய் சிரிக்கும் இந்த ஈகைகள் எம் இருப்பின் உயிர்ச் சின்னங்கள்..! வாழ்க்கைக்காக பறந்தடிக்கும் மானிடப் பேடிகளுள் மரணத்துக்குள் வாழ்வைத் தேடி வீசிய இந்தப் புயல்கள் எங்கள் கந்தகப் புயல்கள். மாவீரராய் இல்லை இல்லை... அதிலும் மேலாய் என்றும் எம் மூச்சுக் காற்றோடு அவர் வாழ்வு...! வீழ்ந்தார் என்று மறக்க அவர் மறையவில்லை - எங்கும் நிறைந்தே உள்ளார்..! ஆக்கம்: (முதற் கரும்புலி அண்ணன் மில்லரின் கந்தகப் புயல் தந்த வெடியோசை …

    • 6 replies
    • 658 views
  10. https://www.youtube.com/watch?v=LaINo30pO8o&feature=youtu.be

  11. எங்கே என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம் எங்கே என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு எங்கே என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி இதையெல்லாம் பார்த்தும் ..... உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ஒரு தந்தை கந்தக சூட்டினில் சந்தண மேனிகள் கருகின குண்டுமழை நடுவினில் குருதியாற்றின் கரையினில் விதைக்கப்பட்டன காந்தள் விதைகள் கண்ணீரும் செந்நீரும் ஊற்றி தியாகங்கங்களையும் வெற்றிகளையும் உரமாக்கி நிமிர்ந்து வளர்ந்தன கார்த்திகைக்கொடிகள் வெட்டிப்போட்டாலும் புடுங்கி எறிந்தாலும் கார்த்திகை மாதமானால் மண்ணை விலக்கி மீண்டும் மீண்டும் வளர்ந்து பூப்பூக்கும் மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் சயணைட் குப்பிகள் துருஏறிப்போனாலும் கார்த்திகை கிழங்குகளாய் மீண்டும் மீண்டும் மண்கிழித…

  12. தோரணங்கள் இல்லை மஞ்சள் சிகப்பு நீலக்கொடிகள் இல்லை எழுச்சி கீதங்களும் இல்லை இது கார்த்திகைதனா நாங்களும் தமிழர்கள் தானா.. ஒடுங்கிப்போகிறது சர்வமும், சவங்களா நாம். இத்தனை திங்களாய் என்ன செய்தோம். களையிழந்து கொண்ட நிலைதொலைத்து வாடிக்கிடக்கிறாள் ஈழநங்கை. மரகதமாமணிகள் உறங்குமிடமெங்கும் பேரிருள் மேவி கிடக்கிறது. காந்தள் சூடி ஒளிகொண்டு நிற்கும் காலமல்லவா இது. நினைவேந்தலில் உருகியழும் நேரமல்லவா இது. தீக்கடைக்கோல்களை மறந்துவிட்டு எவரெவர் கால்களில் விழுந்தோம். ஒப்பாரி வைத்தோம் எவராவது பார்த்தார்களா ? வாருங்கள் சாம்பல் அகற்றித் தீமூட்டுவோம். வேர்களில் இருந்து மீண்டும் தழைப்போம். விண்நிகர்த்த மேனியர் விதைத்த நிலத்தில் புல் முளைத்தாலும் புலியாகுமென்று நடுகல் உடை…

    • 4 replies
    • 780 views
  13. ஊரெல்லாம் வீடுகள் இருந்தது வீடெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள் தேர்முட்டியில் ஆட்கள் இருந்தார்கள் திருவிழாக்களில் கூட்டம் இருந்தது. நாடுமாற நாங்கள் திசைமாறி வந்தோம். ஊரெல்லாம் வீடுகள் இருக்கிறது வீடுகள்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது சிலவீடுகள் கூரையில்லாது தவிக்கிறது சிலவீடுகள் சுவருடைந்து தவிக்கிறது சிலவீட்டில் காட்டாக்காலி வாழ்கிறது வேலிகள் இல்லாது வளவுகள் தவிக்கிறது துகில் போனபின் அது அம்மணமாய் துடிக்கிறது வாடகை கொடுத்துக் குடியிருந்தார் அப்பொழுது வருமானம் வேண்டிக் குடியிருக்கிறார் இப்பொழுது காலம் மாறி இருக்கிறது. கனடாவுக்கு கதைத்து முடிவெடுக்கிறார். ஆண்டவனைத் துாக்குவதற்கே ஆள்பிடிக்கப் அலைகிறார்கள். அகப்பட்டால் அவர் சகடையில் ஊர்வலம் …

  14. காற்று வெளியிடையே கணங்கள் கனதியாய் நகர்கின்றன காணும் காட்சிகளும் விரைவாய் கடந்து தான் போகின்றன கிழக்கில் காணும் கதிரவன்போல் கீழிருந்து மேலேறும் நினைவுகளில் கிரந்தங்களாய் இடையிடை தோன்றும் கிரகிக்க முடியாத கிடப்பில் போட்ட கீறல் கொண்ட நினைவுகள் குறுக்கும் நெடுக்குமான காலங்களின் கனவுக் கோடுகளில் என்றும் கணக்கிடவே முடியாததான கனமான நினைவுகளின் வரிகள் கண்ணிறைத்துக் கனதியாய்க் காலக் கோடுகளை வரைகின்றன கோலமிழந்த நினைவுகளும் குதூகலிக்கும் கனவுக்களுமாய் காலமிழந்த கணக்கற்ற நாட்களின் கண்டுபிடிக்கவே முடியாத காட்சிக் குவியல்களின் நடுவே கண்மூடிக் கர்வமற்றுக் கிடக்கிறேன்

  15. கனத்த இதயம் இன்று கனத்த இதயத்துடன் கண்விழித்த எனக்கு, என் இதயம் அடிபட்டு நொந்து கிடப்பதையும், அதன் வலியையும் உணரக்கூடியதாக இருந்தது. எதுவரை இது தொடரப்போகிறது. ஈழத்தமிழனின் வலிமையை அழித்துத் துடைக்கவும், உலகத் தமிழனின் ஆற்றலை முடமாக்கவும் எங்கள் பிராந்திய வல்லரசு சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வித்தை காட்டிவிட்டது. இதையும் ஒரு சுனாமியாக உலகத் தமிழினம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விசேடமாக இந்திய இலங்கையின் கூற்றுப்படி நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இந்த வல்லரசுகள் செய்த, செய்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை மறைக்க இப்போதும் பிரபாகரனின் கதை என்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு நல்ல படம் காட்டிய அநேகர…

  16. கனன்றே எரிவாய் தீக்கனலாக...... காலத்தின் உப்பரிகையில் கை கொட்டிச் சிரிக்கிறான் காலன் இது யாரோ ஒருவரின் கனவுக் கலைப்பல்ல விடுதலை விரும்பும் விதியின் விரல் பிடித்து விளையாடும் மொழியாக தினமும் இழப்புக்கள் அறுவடைக்கு ஆட்களை அசைபோடும் இரைமீட்பில் ஆண்டவனை அர்ச்சிக்கும் வரம் பெற்ற வள்ளலுக்கும் வழங்கிய பரிசு மரணம் குழந்தை இயேசு குடிகொண்ட மண்ணில் நிரந்தரமாய் நீ விடைபெற்ற செய்தி அறிந்ததால் அதிர்ந்தோம் அந்நிய மண்ணில் தடம் பதித்தாலும் மண்ணின் நினைப்பில் மனம் புதைந்தே கிடக்கும் மண்ணின் விழுதுகள் நாம் இறை உணர்வினில் கனல் மணக்கும் ஏழிலான வெண்மலரே மானிட வதையினால் மனம் கனக்க உம்மை கல்லறைக்குள் வைத்தோம் இது காலத்தின் கட்டளை ஈழ விடுதலையில் இதய…

  17. உச்சியில் வட்டம் ஒன்று வரைந்து நடிவில்.. வடிவாய் ஓர் கோடிழுந்தேன். பின்.. ஆங்கே கோளங்கள் இரண்டு சரியாய் பொருத்தினேன். கோடும் வளைய வளையிகள் கொண்டு சரி செய்தேன். ஈர்ப்பு மையம் மாறிப் போக பிறை ஒன்று உச்சத்தில் வைத்தேன் சமநிலை குழம்ப முக்கோணம் ஒன்று கூடச் சேர்த்தேன்..! கோடுகள் சேர்ந்து ஓவியமாக.. உயிரற்று நின்றது. கணிதத்தில் வகையீடு தொகையீடு சமன்பாடுகள் பல போட்டு திரிகோண கணிதமும் கேத்திர கணிதமும் எல்லாம் கலந்து அட்சர கணிதத்தில் ஒருபடி.. இருபடி எல்லாம் தாண்டியும்.. பயனில்லை..! அலுப்புத்தட்ட கட்டிலில் சாய்ந்தேன் நித்திரை வெளியில் கோடுகளின் எண்ணத்தில் உயிர் பெற்றது ஓவியம். வார்த்தைகள் தேடினேன் முந்திக் கொண்டு.. ஓவியம் பேசியது "உன்னவள…

  18. கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதி இங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழ…

    • 2 replies
    • 1.3k views
  19. கனவான உறக்கங்கள் கலைவதெப்போ? எழுதுங்கள் எம் இதயதாபம் எங்கும் எரிகிறது விடுதலையின் தீபம் எம் இனத்திற்கு யாரிட்டார் சாபம் நாம் ஏதிலிகளாய் அலையும் காலம் நீல வானத்தில் நிர்மலமாய் அமைதி அங்கு கானங்கள் பாடுது பார் குருவி இச் சிலுவைகளோ அடையாளச் சுருதிஅங்கு சிந்துதுபார் செந்தமிழன் குருதி எம் காதாரம் ரீங்காரம் பாடும் சில் வண்டுகளின் ஓங்கார ஓசை அங்கு தூரத்தில் கேட்கும் வெடியோசை எம் துடிக்கின்ற வீரத்தின் பாசை தணலாகக் கொதிக்கிறது நிலவும் தீக் கனலாகச் சுடுகிறது தென்றல் அதி காலையிலே சிந்தும் பனித் தூறல் எம் கல்லறைக்கு அதிகாலை பூசை எம் கனவான உறக்கங்கள் கூட விரைவில் கலைந்து விடும் செய்திவரும் காலை இது கணநேரம் ஓய்வெடுக்கும் வேளை ஈழக் …

  20. எல்லோர் பருவத்திலும் ... வந்த காதல் இவனுக்கும் .... வந்து தொலைந்தது .... யார் இவன் .....? காதலுக்காய் காதல் ... செய்தான் காதோடு .... வாழ்ந்தான் இப்போ .... காதலி இல்லாமல் .... காதலோடு வாழ்கிறான் ....!!! காதல் இளவரசன் .... என்பதா ..? காதல் தோல்வி .... தேவதாஸ் என்பதா ...? இரண்டுக்கும் .... இடைபட்டவன் தான் ... இந்த கவிதை தொடரின் ... நாயகன் - கதாநாயகன் ... " பூவழகன் " தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் ....!!! ^ கனவாய் கலைந்து போன காதல் கவிப்புயல் இனியவன் வசனக்கவிதை

  21. கனவின் பொருளுரையீர். களிகொண்ட மனமொன்றுகூடும் அதிகாலையொன்றில் காட்டினிடையேகித் தனியனாய் நடைபயின்றேன். மனிதருடன் உரையாடல் சலித்து மரங்களுடன் உரையாடும் அவாவெழுந்து ஊர்தாண்டி உவகையுடன் தொலைந்தேன். பசுமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட பருவமது பார்வைக்கு இதமழித்ததெனினும் காட்டினிலும் பதுங்கிக் கிடந்ததோர் ஊமைச்சோகம். எதிர்காலமெண்ணித் துயருற்றாற் போலான ஏக்கமெங்கும் மரங்களிலும் கிளைகளிலும் பற்றிப் படர்ந்தது போல் ஒரு தோற்றம். "ஆரூடக்காரனே, எம்மொழியைப் புரிந்தாய் நன்று. எம்முடனே நட்பிழைந்தாய் நன்று. வானமொழியிழக்கும் பருவமிது நம் வாழ்வும் என்னாகுமென்றெண்ணித் துயிலிழக்கும் காலமிது. தன்னந்தனியர்களாய் நின்றிருந்தோம் நாமிங்கு வந…

    • 5 replies
    • 1.7k views
  22. குயிலே பாட மறுக்கின்றதே அன்பே அன்பே.... உன் இனிய குரல் கேட்டதினாலே பெண்ணே பெண்ணே... மயில் கூட நடை பயில நானம் கொள்ளுதே உன் நடை அழகைக் கண்டதினாலே கண்ணே கண்ணே... என் பார்வை நான் இழந்தேன் என்னவளே உன் பார்வை என் மீது பட்டதினாலே என் மூச்சை நானும் இங்கே இழந்தேன் இழந்தேன்... உன் மூச்சு என் மீது படர்ந்த்தினாலே உன் கூந்தல் மலர் வாசம் என்றேன் என்றேன்... உன் கூந்தல் வாசம்தனில் எனை இழந்தேன் இழந்தேன்... கறுப்பும் அழகு என்றேன் பெண்ணே பெண்ணே... உன்னை நான் கண்டதினாலே அன்பே அன்பே... என்னை நான் இழந்து உன்னைத் தேடுகின்றேன் காணவில்லை என்னவளே நீயும் எங்கே எங்கே.... நீயும் என் கனவில் வந…

  23. ரொம்பக் குளிருதடி... கொஞ்சம் பாரேன்டி! தேகம் நடுங்குதடி... பக்கம் வாயேன்டி! வெள்ளை நிறத் தேவதையே... வண்ண முலாம் பூசுறியே! கிட்ட வந்து முட்டுறியே... தட்டி விட்டுப் போகிறியே! தொட்டுப் பார்க்க முன்னால... கட்டிப் போடுறாய் கண்ணால! ஓரங்கட்டுறாய் தன்னால... ஒண்ணும் முடியல என்னால! கண்ணைச் சிமிட்டாதே... கடித்துக் குதறுதடி! என்னை மிரட்டாதே... எண்ணம் சேர்ந்து மிரளுதடி! என்னைத் தூண்டி இழுக்கிறாய்... எல்லை தாண்ட அழைக்கிறாய்! இன்பத் தொல்லை தருகிறாய்... தீண்டும் முன்பே மறைகிறாய்! வண்ணம் தந்த வானவில்லே... எங்கேயுன்னைக் காணவில்லை! கனவில் வந்து போறவளே! -உன் நினைவில் நொந்து போகிறேன்டி!

  24. கனவில் வரும் தேவதை ... எனக்கு அந்த தேவதை தேவைப்படாதவள் அவளுக்கும் அப்படித் தான் இருக்கும் வரம் கொடுப்பதற்காய் அவள் வரமாட்டாள் என்பதும் தெரிந்ததே அப்படி இருந்தும் எப்படி அனுமதித்தேன்.. இளங்குவளை இதழ்களில் சொரிந்திருக்கும் பனிரசமருந்தியே - கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல உறைதலும் உய்குவதுமாய் கார அமிலக் கலப்பின் களைப்பு முடிந்து கண்ணயர்ந்தாலும் கனவில் வந்து விடுகிறாள்.. அனுமதியின்றி வந்து தட்சணை தராமலே சென்றுவிடுகிறாள் தேவதை கனவு முறிந்து எழுந்ததும் கல்லெறிகள் கலாச்சாரக் காவலர்களால் ... ........................ ஜீவா 25.08.2013 22.35pm (எத்தனை நாளுக்குத் தான் சீரியஸாவே எழுதிறது? ஒரு சேஞ்சுக்கு தான்) :lol: திருத்தம…

    • 10 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.