Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சமாதிகோவிலடியும் சாகாத நினைவுகளும். பெஞ்சன் வடலி பெரிய இலுப்பை பிள்ளையார் வாசல் பிரியமான நாவல்... பேச்சியம்மன் கோவில் பேய் வருமென்றாலும் போய்வர விரும்பிய இலந்தைக் கூடல்.... பசுமையாய் பச்சையம் உலராப் பத்துமணியிரவு. பாலூறும் இரவுப் பெளர்ணமி ஒளி. விசாகப்படையலுக்கு வீடுவீடாய் பொருள் சேர்த்து விரித்த பாயில் பரப்பிய தானிய வகைகள் பரந்த சமாதிகோவில் மடம். பாடலபாடம் படித்த வீட்டு முற்றம் பலா மா பழவகை தந்த தோட்டம் துரவுகள் பகலிலும் கொள்ளையடித்த பலட்டன் பனைவெளிப் பனங்காயின் இனிப்பு...... பால் தந்தே எமை வளர்த்த பசுவும் அதன் சிசுவும் பால்யகாலப் பலகதை நினைவும் பாதிவாழ்வில் பயணம் முடிந்தும் பசுமையின் இனிப்ப…

  2. கொடுப்பதற்கு ஏதுமின்றி கெடுப்பதற்காய் நம் உறவுமின்றி வாழ்வதற்காய் கட்டிவைத்த கல்வீடுமின்றி நடுத்தெருவில்நின்று நீ கத்தும்போதும் திறக்காது கண்கள் சர்வதேசத்தின் கண்கள் தூங்குபவனை எழுப்பலாம் தூங்குபவன் போல் நடிப்பவனை உசுப்பமுடியாது நடிக்கிறது ஐநா. நாவடக்கி, எம் குரலடக்கி வெடிக்கிறது எம்மவர் கத்திய தொண்டைகள்தான் இன்னும் ஏன் விலைக்கொடுப்பு இதுக்கும் மேல் ஏன் சர்வதேசம் எழும் கேள்விகள் நியாயமானதே அதிகாரவர்க்கத்தின் ஆட்சிபீடமல்லவா ஐநா. ஐக்கியநாட்டின் குறுங்கல் வடிவம் தமிழாங்கிலத்தில் நான் நா…….. நான் தான் இவ்வுலகின் சொல் என்றுரைக்கும் ஐ.நா… காசாவில் கொன்றபோது கொதித்ததே! ஈ…

  3. http://youtu.be/nSSv9Kk3tkI முன்னால் நின்றது மாரீசனின் மானல்ல மயங்கி நீர் அண்ணலை விட்டு ஆரணங்காகி அணிவகுக்க.. தாயக விடுதலைக் கனவே உம்மை அங்கு அணிவகுத்தது..! தந்தை செல்வா சொல்லி தந்தை பெரியார் வாழ்த்தி கலைஞர் தலையாட்டி எம் ஜி ஆர் கரம் நீட்டி அமிர்தலிங்கம் வெற்றித் திலகமிட யோகேஸ்வரன் கேட்ட இடத்தில் அணிவகுத்த இளைஞர் கூட்டத்தின் வழி நீவிர் நின்றீர் அண்ணன் பாதையில் கொள்கை காத்து..! களங்கள் பல கண்டீர் இந்திய வானரப்படைகளென்ன கொடும் சிங்கள பேரினப்படைகளும் கண்டீர். போதாதேன்று இலக்கிய காலமே கண்டிராத அமெரிக்கக் கழுகுகளும் இஸ்ரேல் வல்லூறுகளும் கூடவே... சீன ரகன்களும் பாகிஸ்தானியப் பிறைகளும் ரஷ்சிய அரிவாள்களும் உம் முன் மல்லுக்கட்டக் கண்ட…

  4. கிட்டு உன் பெயர் சொன்னபோதே சட்டென வாயெடுத்து மாமா என்று சொல்லும்-உன் இறப்பின் பின் பிறப்பெடுத்த மழலைகளும். நீ மரணித்துப்போன மனித பிறப்பல்ல, மண்டியிடாத மனிதராய் விடுதலை வாழ்வை வாழ கற்றுக்கொடுத்த வரலாற்று பிறவி, வரலாறுகளை வாரி வாரி கற்றுக்கொண்டாய்-உன் வாழ்வை எமக்கு வரலாறாய் வழி காட்டிவிட்டாய். எங்கள் விடுதலை போருக்கு நீ ஒற்றை பனைமரம். காற்றை கிழித்த சன்னங்கள் சொல்லும்-உன் களங்களின் வீரத்தை, கழுத்தில் தொங்கிய புகைப்பட கருவி சொல்லும்-உன் கலைகளின் காவியத்தை, போரியல் மரபுகளுள் போராடிய போர்மகனே எதிரி சொல்வான்-உன் அன்பான அரவணைப்பை, கிட்டண்ணா கிட்டண்ணா என்று சொல்லி கட்டப்பொம்மனையே மறந்து போனோம், மண்ட…

  5. நான் உன்னை நேசிக்கிறேன் அது உனக்குப் புரியவில்லை நீ என்னை நேசிப்பாயா? நான் கல்லறைக்கு போன பின்பாவது காதலியே!!!

  6. எம் தேசத்தின் விடியலுக்காக வித்தான வீர மறவர்களே..! கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்.. கரிகாலனின் வழியில் சென்று போர்க் களங்களில் எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும் எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்.. புதிய சரித்திரம் படைப்போம் உயிர்த்து விடுங்கள்… அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து எரிமலையாக எழுந்த சூரிய புதல்வர்களே தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள் .. கண்கள் மூடி உறங்கும் எங்கள் தோழனே கல்லறையை விட்டு வெளியே வாருங்களேன்… கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம் கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்…. ஈழத்தின் வித்துக்களாய் தமிழீழத்தின் காவற் தெய்வங்களாய் தேசிய தலைவனின் பிள்ளைகளாய் .. தமிழீழம்தா…

  7. Started by Thulasi_ca,

    • 13 replies
    • 2.9k views
  8. """"இந்தியாவே எம்மை காத்திடாயா....???"""" தேசம் எரியுது தீயினிலே தமிழ் உடல்கள் வீழ்குது வீதியிலே.... அழுகுரல் வருகுது காற்றினிலே அட உலகே விழலாயா உன் செவியினிலே....??? குருதியில் நனையுது புலவுகளே வலி - கோரத்தில் துடிக்குது உறவுகளே.... போக்கிடமின்றி தவிக்கின்றதே போகவும் வழியின்றி துடிக்கின்றதே.... உணவுகள் இன்றி வதங்கின்றதே உதவுவார் இன்றி கலங்கின்றதே.... தாவிட கூடுகள் வேறில்லையே தாவிய கூடுகள் காணலயே... அந்நியன் வன்முறை அடங்கலயே அகதி வாழ்வின்னும் குறையலயே.... ஓடியே ஒதுங்கவும் முடியலயே ஒளிந்திட மறைவிடம் இன்றில்லையே... குண்டுகள் தோண்டிய குழியதுவே - புதை குழியாய் நமக்கின்று …

  9. அண்ணன் செயக்குமாருக்கு .. தமிழகக் கவிஞர் அறிவுமதி - சூரியன்

    • 2 replies
    • 1.1k views
  10. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடி…

    • 1 reply
    • 1k views
  11. சனங்கள் புத்தகங்களைப் போட்டு விட்டு ஓடித் தப்புகிறார்கள். எங்கும் தீவிரமாய் பரவுகிறது இலக்கிய வித்துவக் காய்ச்சல்கள். மாறி மாறி முட்டுப்படுகின்றன எழுத்தாளர்களின் கொம்பு முளைத்த பேனாக்கள். மேடைக்கு அலையும் வசனங்களோடு இடம் தேடித் திரிகின்றன வசைபாட ஆசைப்படும் வாய்கள். அதிகார ஆசனங்களின் கால்களைத் தடவத் தொடங்குகின்றன விருதுக்காய் உழைக்கத் தொடங்கியிருக்கும் விரல்கள். பார்த்துக் கொண்டிருக்க கண்முன்னே வாடிக் கொண்டிருக்கிறது எழுதப்படாத வரலாற்றுப் பூ. தீபிகா தீப .பேஸ்புக் .

  12. மயூரனுக்கும் இணைந்து நடக்கும் தோழர்களுக்காகவும், செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! செங்கொடி ஏந்திய சந்ததி வேரே! சிங்களம் வெகுண்ட சினத்திற்குரியோனே! எண்திசை நிமிரும் தமிழனின் மானம் ஏந்தியே நடக்கும் இளைய தேவரீர்! தமிழ்ச்சங்கடம் தீர்க்கும் சஞ்சீவி சுமக்க சாலையில் இறங்கிய சரித்திர பொறிகளே! எங்கே மைந்தரே! தாயகத்திற்காகத் தூரங்கள் கடக்கும் உங்கள் கால்கள்….. வலித்தால் சொல்லுங்கள். உங்கள் திருவடி நீவித் தைலமிடவும், வெந்நீர் ஒத்தடம் விரைந்து தரவும் அன்னையர் உள்ளோம். அகிலத்தின் திசைகளில் அனைவரும் உள்ளோம். சட்டத்தை மதித்துச் சாதனை செய்யலாம் எனும் புதுக்கட்டக் கதவின் திறவுகோல்களே! வழிகோலி வைக்கின்றீர்கள், வாழ்த்தெடுத்து விழிகசிந்து நி…

    • 7 replies
    • 1.5k views
  13. என் தொண்டைக்குழியில் இறங்க மறுக்கும் சோறு - எனக்கு தூக்குக் கயிற்றை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றது! நீதி தேவதையின் கண்களை... இப்பொழுதாவது, திறந்து விடுங்களேன்!!!! இல்லையெனில், மூவரோடு நால்வராய்... அவளையும் சேர்த்துத் தூக்கில் போடுங்கள்! அன்று, கண்ணகியின் கோபம் மதுரையை எரித்ததாம்!? இன்னும் நம்புகின்றோம்...!!! அது உண்மையோ... இல்லையோ....!!!??? நிச்சயமாக மீண்டும் எரிக்கும்!!! நீதியின் கூக்குரலும்... அழுகுரலும்!!!

    • 4 replies
    • 1.2k views
  14. முன் சிரித்து உள்ளத்தில் ஒன்றை வைத்து உண்மையில்லா வார்த்தைகளை பேசுகின்ற மனிதர்களோ நாமெல்லாம் ஓரே இனம் ஆனால் என் குலம் தான் உயர்ந்தது நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள் ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர் அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு வேஷம் போடும் சுயநலவாதிகளோ எது உண்மை ? எது பொய்? இதைவிட எது நன்மை என்று பார்க்கும் மனிதர்களோ துன்பங்களையும் , துரோகங்களையும் அவமானங்களையும் கண்டு வாடிப்போகாதே மனமே

  15. காலத்தால் மறைந்திடுமோ அம்மா பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு பாட்டில் கதைகளில் நீ பாங்குடன் ஊட்டிய சோற்றினிலே நாற்றில் பயிரெனவே நல்லறிவோடு நான் செழித்து விட்டேன். எத்தனை கற்பனைகள் அங்கே எத்தனை சுடர்கின்ற நம்பிக்கைகள் முத்தேன நெஞ்சில் வைத்தாய் என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய். ஒலிவடிவம் http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321 கண்ணம்மா இந்த பனி கொட்டும் இரவினீலே இலையற்ற தனி மரமாய் உன்னையே நினைத்திருந்தேன். என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று ஏங்கிடும் வீணையைப்போல் துயருறுதே நெஞ்சம். பூத்திடும் கனவினில் கானகங்கள் எங்கும் புலர்ந்திடும் வச்சந்ததின் கற்பனைககள் தேற்றுமுன் காதலில் பாரதியி…

    • 17 replies
    • 2.9k views
  16. Started by akootha,

    • 3 replies
    • 1.1k views
  17. மனசு போல வாழலாம் கலகலன்னு சிரிக்கலாம் காலமெல்லாம் சிறக்கலாம் நிலவிலேறிக் குதிக்கலாம் நிம்மதியாய் இருக்கலாம் வழ வழன்னு கதைக்கலாம் வண்டு போலப் பறக்கலாம் மலையிலேறி இறங்கலாம் மழையிலேயும் நனையலாம் மழலையாகப் பேசலாம் மரங்கள் மீது ஏறலாம் பனித்துளிகள் சேர்க்கலாம் பறவையோடு பாடலாம் கலைகளிலே திளைக்கலாம் தென்றலோடு நடக்கலாம் மலர்களிலே உறங்கலாம் மனசு போல வாழலாம் http://www.lankasripoems.com/?conp=poem&pidp=214612

  18. Started by nedukkalapoovan,

    (விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு மாமா நினைவாக...) வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்மம் வெல்லும் என்பது காலத்தின் கோலம் என்றத…

  19. இச்சைகளின் அரசி சர்ப்பங்களை வசியம்செய்து ஏவல் வாங்கினாள்: சமிக்ஞைகளைச் சிரமேற்கொள்ளவாய்க் கட்டுண்ட சர்ப்பங்களுக்கு ஏக்கங்களை ஏற்றி உரு மறைந்து திரிய அவள் கற்பித்தாள், போகங்களின் நெருப்பைத் தீனியிட்டாள் அஞ்சனமிட்ட நீள் விழிகளுக்கு -அவை மத்தியில் கூறாய்ப் பிரியா இணைந்த கட்புருவமுடையன- சைகைகளினால் போர்களை ஆணையிடும் வலுவிருந்தது. களங்களின் சூட்சுமங்கள் தேறிக் கொய்த குறிகளை மாலை அணிந்தவளின் ஆழ் புலங்களில் அவளை மாசு அற விசுவாசித்தவர்கள் சேவகம் பணிக்கப்பட்டிருந்தார்கள். ஆசைகளால் உருவேற்றி மந்திரித்த பாம்பின் முட்டைகளை காற்றில் தூவி ஆண்களில் தீரா வியாதிகளை ஏற்றடுத்தியவள் நேரங்களைக் குறுக்கீடுசெய்து அவர்களைப் பித்து நிலையி…

    • 2 replies
    • 698 views
  20. Started by nedukkalapoovan,

    தமிழினி.. எனி... முகநூலில் தெரிந்தவள்.. படைப்பில் என்னை கவர்ந்தவள்.. வந்த இடத்தில் அறிமுகமானவள்.. போர்க்களத்தில் துணிந்து நின்றவள்.. சேனைகள் அழிந்த போதும் சோரமே போகாதவள்.. பொய்யில் புலம்பெயர விரும்பாதவள்.. நோயில் கூட உதவி தேடாதவள்.. போர் முடிந்தும் மங்கை மறைமுகமாகப் போராடினள்.. வாழ்ந்து பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொண்டவள்.. இன்னும் என்னென்னவோ பிறர் தரும்.. அடைமொழிகளை தாங்கி நிற்பவள்.... இத்தனை இதயங்களிலும் யார் உளர் அவள் கனவை இனங்காண.. நனவாக்க....??! தமிழினி எனி......................................................!!

  21. *என் கனவு....* என் இரவுகளை நீ சிறை பிடித்ததால் என் கனவுகள் களவாடப்பட்டு விட்டன !!!... விடுதலைக்கு இன்றும் என்விழிகள் சாட்சி கூண்டில் ... *என் ஆசைகள் ...* அழகாய் இருக்கிறதடி உன் வாசல் கோலங்கள்... புள்ளிகளாய் நீயும் என் ஆசைகளை வைப்பதாலோ !!!... நசுங்கித்தான் போனதடி அதுவும் உன் வீட்டு நாய்குட்டி முதல் பால்காரன் வரை பாதங்கள் பட்டு !!!.. *என் நினைவுகள் ....* மறந்துவிடு எனச்சொல்லி நீ எறிந்த கல்லில் உடைந்து விட்டது ... கண்ணாடியாய் !!!... ஓராயிரம் உன் பிம்பங்கள் உடைந்த துண்டுகளில் உட்கார்ந்து கொண்டு இன்றும் கீறுகின்றன... என் இதயத்தை !!!... *என் சிரிப்பு ...* அதை எட…

  22. [An assault rifle and fragments of skull coming out at a scratch of the earth in a mass burial area. Mu'l'livaaykkaal bunker area.] ஐரோப்பாவில்.. ஒற்றைச் சிறுமியின் கடத்தல்... ஒரு தேசமே கண்ணீர் வடிக்கிறது..! இந்து சமுத்திரத்தில் ஒரு தேசமே கூட்டழிப்பு யார் கண்ணிலும் தண்ணீர் படாத துயரமங்கு..! மண்ணோடு மண்ணான மண்டை ஓடுகளும் விடுதலைக்காய் முழங்கித் தள்ளிய துப்பாக்கிகளும் பயங்கரவாதக் கூக்குரலில் அடிபட்டு.. கூடவே உக்கி உரமாகின்றன..! தூரத்தே இருந்து கூச்சலடித்த கூட்டமும் மனிதப் பிணங்களின் "ஸ்கோர்" எண்ணி செய்தி போட்ட ரொய்டர்களும் ஏ எவ் பிகளும் ஏ பிகளும் இன்னும் இன்னும் பிழைப்பை ஓட்டிய தீரர்களும் இன்று எதிரிக…

  23. நிம்மதி தேடி வந்த அந்நிய தேசத்தில் என் பிழைப்பு; என் மதி நிறைந்ததோ சொந்த மண்ணின் நினைப்பு. மன அமைதி இழந்து நாளும் வாழ்கிறேன் வாழ்க்கை; தாய்மண்ணின் வாசத்தை நுகரத்துடிக்கும் நெஞ்சு. சோர்வுற்ற வேளை தந்தையின் ஆதரவும் நோயுற்றவேளை சாய்ந்திட அன்னை மடி பிரிந்து வாழ்வோம் என மறந்து சண்டையிட்ட சகோதரங்களின் இனிய பாசம் இவை இழந்தேன். ஓலைப்பாய் நித்திரை தந்த சுகம் நினைந்து - இங்கே பஞ்சு மெத்தையில் கூட நிம்மதியில்லா உறக்கம். ஓய்வுக்காய் மேலைநாட்டு மக்கள் செல்லும் தேசம் அது எம் தாயகம் போல் மன அமைதி தரும் இடமே. அந்நிய மண்ணில், அந்நியனாய் வாழும் நானும் -ஏங்குகிறேன் அவ் அந்நியன் போல்; என் தாய்மண்ணில் வாழ்ந்திடவே!

  24. 2009 மஏ 17,18ம் திகதிகள் மனசுடைந்து தொடர்ந்து சிந்தியும் சினந்தும் சிவந்த கண்களோடு 2009 மே மாத இறுதி ஜூன்மாத ஆரம்பங்களில் எழுதி முடித்த கவிதை. 1000 வருடங்களுக்குப் பிறகும் வாசிக்கப் படப்போகிற எனது கவிதைகளுள் இக்கவிதை முக்கியமானதாக இருக்கும். தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் * எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உ…

    • 0 replies
    • 1.3k views
  25. (கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட வாணிவிழா - 2008 கவியரங்கில் இடம்பெற்ற எனது நண்பன் கி.குருபரனுடைய கவிதை இது) தூயதாய் நூல்கள் கற்று துலங்கிவரும் இச்சபையில் பாலகன் நான் வந்து பாடுவதோ? – யாரிவரோ? தொக்கிநிற்கும் கேள்வி துவங்கின் எனைக்காக்க விக்கினேஸ்வரா சொல்லு விடை! வள்ளியை மணமுடிக்க வயோதிபனாய் வந்த வெள்ளி மயில் வாகனனே வேலவனே – நல்லூரின் உள்ளிருந்து கொண்டே உயிர்காப்பாய் என் கவிக்கு கல்லெறி சேராமல் கார்! பெற்றுப் புரந்தந்து பேணிப்பல செய்து உற்ற தேவைகளை உடன்முடித்து- கற்கவைத்து நாலுபேர்முன்னே நடமாட வைத்த வைத்த அம்மா நீ போனாலும் மறவேன் புகழ்! எதுகை மோனை இலட்சணங்கள் கற்பித்து புதுமை செய்கின்ற புரட்சியனே – ச வே ப பா வாடை பிடிக்க வைத்…

    • 7 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.