கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வன்னியில் கற்பழிப்பாம் யாழில் கொலையாம் தீவில் மண் பறிப்பாம் அகதி முகாமில் கருவறுப்பு தொடர்கதையாம் எழுதுகிறார் பேசுகிறார் சாவீடு போல் பறை அடித்து அழுகின்றார் எல்லாம் சரிதான் இதை மாற்ற என் செய்தார் நாலு பேர் சேர்வோம் என்றால் நாலே நாலு பேர் தானா... சுமை யாவும்அவர் மேலா..... வேலை வீடு வீடு வேலை நேரமிருந்தால் கொஞ்சம் சினிமா பெரும் பகுதி தொடர் நாடகம்என தூங்கிக்கிடக்கின்றார் துளியளவும் அதற்கான உழைப்பில்லை ஆனாலும் மண் வேண்டும் தான் பிறந்த தனை ஏற்ற மண் வேண்டும் அதற்காக உழைப்பதெப்போ...? அதற்கான உனது நேரம் என்ன..? பாதை தெரிந்ததுதான் பாதையில் நடந்தாயா ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல் பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்? வா வாரத்தில்…
-
- 14 replies
- 1.5k views
-
-
இருக்கும் இருத்தலை நேசிக்காத இருத்தல் முரண் _இருந்தும் இருந்துகொண்டிருக்கும் இருப்பை இழந்துவிடும் துணிவுமில்லை , இருப்பதால் நுகரப்படுவது இருப்பின் மீதான வெறுப்பாக இருந்துகொண்டேயிருக்க , இருக்கிறேன் என்றே இயல்பாக இயம்புதல் வழக்காயிற்று . இப்படி இருத்தல் இருத்தலுகாகாது என்று அன்பில் இருக்கும் எல்லோரும் சொல்லியும் இருத்தல் அப்படியே .................! இருக்கிறது இன்னும் இருந்துவிடலாம் என்ற அவா . என்ன, இவர்களைப்போல் எப்படியும் இருந்திட துணிந்திடில் இருந்திடலாம் _உள் இருந்தொரு குரல் யாருக்கும்கேளாமல் , யார்சொல்லியும் கேளாமல், இருந்து மிரட்டுகிறது _இந்த இருப்பெல்லாம் இருப்பா என்று ?
-
- 6 replies
- 1.5k views
-
-
பெண்ணினத்தின் விடி வெள்ளி ( மாலதி) கன்னியவள் துப்பாக்கி கைய்யில் ஏந்தினாள்.... கரிகாலன் படையனில் வேங்கை ஆகினாள்... பெண்ணடிமை விலங்குடைத்து பெருமையாகினாள்.... அந்த பெண்களிற்க்கு விடி வெள்ளி இவளே ஆகினாள்... தாய் மாணம் காக்கயிவள் களமே எறினாள்... அந்த கரிய பகை அழித்தேயிவள் நிலத்தை மீட்டினாள்.... பெண்ணினத்தின் சுதந்திரத்தை இவளே மீட்டினாள்... புரட்சி பெண்ணாய் ஈழமதில் வழியை காட்டினாள்....!!! -வன்னி மைந்தன்-
-
- 3 replies
- 1.5k views
-
-
(யாழ். முஸ்லிம்கள் பலவந்தமாக - துப்பாக்கிச் சனியன் மூலம் தமது பூர்வீக மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு - இன்றுடன் ஆண்டுகள் இருபத்தியேழு! அதனை நினைவுகூர்ந்து - சமர்ப்பணமாக இக்கவிதை)-மீலாத் கீரன்-இரு மணிநேர அவகாசத்தில் - துரத்தியே விட்டார்கள்பெட்டி படுக்கையின்றி... பால்மா பால்போத்தலின்றிபாலகர் பசியார ஒருதுண்டுப் பாணுமின்றி.. .கால்களில் செருப்பு மாட்டக்கூடகால அவகாசந் தராமல்அக்கால நகரப் பொறுப்பாளன்ஆஞ்சநேயர் மேற்பார்வையில்துப்பாக்கிகளின் குழாய்முனையில்குப்பைகளாய் கூளங்களாய் யாழ். ஜின்னா மைதானத்தில்கூட்டிச் சேர்க்கப்பட்ட சருகுகளானோம். .பலவகைப் பொதுக்கூட்டங்களுக்கு களம் பல தந்து -தடகளப் போட்டிகளாலும் தடையறா கால்பந்து போட்டிகளாலும் வெற்றிகள் பல கண்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
இனியவளே உன் இதயத்தின் முகவரிக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்ததா? உன் உதயத்திற்காக நான் வருந்திப் பாடிய வாழ்த்துப் புரிந்ததா? உன் சிரிப்புகளில் தான் என் வசந்தம் சிக்கியுள்ளது உன் இதழ் விரியும் போது தான் என் மனம் குளிர்கிறது என் இளமைக் காடுகளில் அப்போது தான் மழை பொழிகிறது.
-
- 6 replies
- 1.5k views
-
-
நிலவுக்கு விடைகொடுத்த பின்னும், தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்... கனவுகளும் வெறுங் கனவாகிப்போக, உன் நினைவுகளை மீட்டியபடி... வளர்ந்து தேயும் நிலவுகளோடு, அமாவாசையானது என் ஆசைகளும்!
-
- 14 replies
- 1.5k views
-
-
காலநதியின் வேகமென்ன? பனிக்காலக் காலைப்பொழுது பகலவன் இல்லாமலேயே விடிந்தது வழக்கம்போல, இறக்கைகளற்ற கடிகாரப்பறவை சிறகடித்துப் பறக்க காலக் கண்ணாடியில் என் முகம் பார்க்க முயன்றேன் கண்ணுக்குள் கலைந்திட்ட பல நூறு கனவுகள் நினைவுத் திரையில் நிழற்படமாய் காட்சிகள் மணித்துளிக்குள் கூவின எத்தனையோ மனக்குயில்கள் அருகே'அம்மா"என்ற அழைப்பொலி பக்கத்தே பள்ளிச் சீருடையில் என் பருவ மகள் என் நினைவப் புத்தகத்தின் பக்கங்கள் படபடக்க பள்ளிச் சீருடையில் துள்ளும் இளமையுடன் நான் அந்த மின்சாரக் கனவை மெல்ல உதறிவிட்டு பக்கத்தில் நிற்கும் பதினாறு வயதுப் பருவப் பெண்ணை நோக்கினேன் ஓ....நாளை இவளும் என்னைப் போல..... வீதிக் கடவையில் விசிலடிக்கும் மின்ச…
-
- 3 replies
- 1.5k views
-
-
''அந்த செய்திக்காக காத்திருக்கின்றேன்'' ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அந்த செய்திக்காக, நாளை எமக்கு ஏதாவது நல்ல செய்தி வரும் என்று அந்த செய்தி என்னுடைய காதுக்கு கிட்டுமோ ? என மனம் தினமும் ஏக்கத்தில் காத்திருக்கின்றது ....... ஆனால் வரவேண்டிய அந்த செய்தி வரவில்லை ! அந்த செய்திக்காக மீண்டும் காத்திருக்கின்றேன் ...... வந்தன பல செய்திகள் வந்தன அவை எவையும் நான் எதிர்பார்த்திருக்கும் செய்தியாக வரவில்ல்லை ! மாறாக செய்திகள் பல வருகின்றன ....... நான் விரும்பாத செய்திகளே தொடர்ந்து வருகின்றது ! நான் எதிர்பார்க்கும் செய்திக்காக தினமும் காலையில் ஆவலாக எதிர்பார்த்து ....... அந்த செய்தி வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருக்கின்…
-
- 7 replies
- 1.5k views
-
-
மனதுக்குள் பெய்த மழை கண்ணோடு கலந்ததுவும் கருத்தோடு இணைந்ததுவும் என்னோடு கரம்பற்றி இணைந்தேதான் வாழ்ந்ததுவும் உள்ளான அன்போடு உயிராக இருந்ததுவும் தண்ணான நிலவாக தரணியிலே குளிர்ந்ததுவும் விண்ணோடு மேகமதாய் உறவாடி மகிழ்ந்ததுவும் தூரத்துக் காற்றினிலே தூதுசொல்லி அழைத்ததுவும் மெல்இறகாய் எனைஅணைத்து மேனியினை வருடியதும் காயமுற்ற வேளைகளில் கண்ணீரைத் துடைத்ததுவும் நேயமுற்ற நெஞ்சுடனே நிறையவே பேசியதும் வாடிநின்ற நேரமெல்லாம் தேடிஎன்னைத் தேற்றியதும் கண்மணியின் மென்இமையாய் கருத்தோடு காத்ததுவும் மழலையாய் எனைஎண்ணி மருவியே அணைத்ததுவும் நோயுற்ற வேளைகளில் தாயைப்போல் தேற்றியதும் இனிமையாய் பேசி என்னில் இறுதிவரை நிலைத்ததுவும் சீராட்டிப…
-
- 7 replies
- 1.5k views
-
-
விட்டில் பூச்சியே.... உனக்குத்தெரியமா? நீ நேசிப்பது நெருப்பின் ஒளியை எரிந்து போவாய் என அறியாமல் என் காதலும் அப்படித்தான் கடசியில் எரிந்து போவது ஆண்கள்தான் உன்னைப்போல ;)
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கை சிறு தீவில் சூழ்ந்தது போர் மேகங்கள் அணி வகுத்தது இரு தரப்புக்கள் ஆதிக்கவெறி இன வெறி கொண்ட ஒரு தரப்பும் சுதந்திரத்துக்காய் விடுதலைக்காய் மறுதரப்பும் உள்நாட்டு பிரச்சினை என உலகம் கண்ணை மூடிக்கொண்டிருக்க கொலை கொள்ளை பலாத்காரம் என இன அழிப்பில் கொக்காளம் இட்டது சிங்கள தரப்பு வீரம் கொண்ட தமிழ் இனம் தனது சொந்தக்காலிலே நின்று பதிலடி கொடுக்கத்தொடங்கியபோது விழித்துக் கொண்டது உலகம் மூன்றாம் தரப்பு இணைத்தலைமை அமைதிப்படை சமாதானத்தூதுவர் இன்னும் என்னவோ பெயர்களிலெல்லாம் போதும் போதும் இவர்களெல்லாம் மத்தியஸ்தம் செய்வதுக்கு நாங்கள் நடத்துவது விடுதலைப் போரா இல்லை குறுக்கெழுத்துப் போட்டியா?
-
- 5 replies
- 1.5k views
-
-
என் காதலியும் என் கல்லறையும் ________________________________________ என் சவப்பெட்டியை செய்து எத்தனித்தேன் உள்ளே செல்ல வந்தாளே காதலி இடுகாட்டில் இருந்த பெட்டிக்கு மெல்ல அன்பே இன்னும் இற்க்கவில்லை காத்திருந்தேன், நான் சொல்ல பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல இறந்தேன் - இறப்பைப் போன்று உறுதியான உண்மை. தந்தை வந்தார் அழுதுச் சென்றார் தாயும் நின்றாள் சோர்ந்து தம்பி வந்து தேம்பி அழ அக்காவோ புலம்பி அழுது சுற்றமும் முற்றமும் தோழர்களும் ஏங்கி சேர்ந்து அவளை தேடி அலுத்தது கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து இறந்தாலும் - இருந்தேன் அங்கே ஆன்மாவாக. அவளும் வந்தாள் கல்லறைக்கு பூக்கள் நிறைந்த கரங்கள் ஆகா என் கண்மணி அறிவாள் எனக்கு…
-
- 4 replies
- 1.5k views
-
-
வயிற்றுப் பசியை வாலிபப் பசி வென்றது கையில் குழந்தையுடன் இன்னொரு ஏழ்மை சமுதாயம்
-
- 3 replies
- 1.5k views
-
-
தத்துவங்கள் பல தந்தனர் தமிழ் தத்துவ ஞானிகள் தமிழர் நாம் மறந்தோம் தத்துவம் தனை மனதில் பதிக்க சித்திரமாக சுவர்களில் பதித்தோம் சிலையாக வடித்தோம் தெருக்களில் வைத்தோம் குருபூசை-மறந்தோம் வையத்துள் வாழ குரு கூறியவைகளை உலா வந்தோம் உலக மொழி தத்துவங்களில் உணர்தோம் தத்துவம் யாவும் ஒன்றன்று உபதேசங்களை கடை பிடிப்பது கடினமென்று உணர்ந்து மறைத்தோம்,தொலைத்தோம் எம்மை உபதேசித்தவர்களின் பெயர்களிலும் மன்றங்களிலும்
-
- 6 replies
- 1.5k views
-
-
காந்தி தாத்தா எம் தாத்தா இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த "அச்சா" தாத்தா என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் பாரதியார் எம் மாமா பார்தத்தின் மகா கவி,ஜெ கிந் என மேடையில் முழங்கிடுவார்கள் எம் சிறார்கள் -புலத்தில் இடுப்பையும் மார்பையும் குலுக்கி ஆடிடுவார்கள் மேடையில் போலிவூட் நாட்டியமாம் எம் குமரிகளும் கிழவிகளும்-புலத்தில் சின்னத்திரையில் சில நிமிடம் சிரித்தவளை அழைத்து சில்லறைகள் சேர்த்திடுவார் சபாகுழு எனும் எம்மவர்கள்- புலத்தில் இந்திய சாமிமார்களையும் சாத்திரிகளையும் அடைக்கலம் கொடுத்து அரவணைத்து மகிழ்ந்திடுவார் எம் மனிசிமாரும் மாமிமாரும் புலத்தில் ஜ.பி.எல்.இரவு முழித்திருந்து பார்த்து இந்தி…
-
- 9 replies
- 1.5k views
-
-
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!அகம் முழுதும் நிறைந்தவளே .....அகமதியால் காதலை இழந்தவளே....அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!அச்சப்படாதேயடா என்னவனே .....அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....அகந்தையும் அகமதியுமில்லை ....அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!அடைமழை போல் இன்பம் தந்தவளே ....அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!…
-
- 2 replies
- 1.5k views
-
-
சங்கே முழங்கு ஈழத்தின் மானத் தமிழனம் உன்னத போராட்டத்தால், பல வீர மறவர்களின் தியாகத்தால் தமக்கென ஒரு நாட்டை ஆக்கி கொண்டதென சங்கே முழங்கு அன்றேல் ஈழத்திலிருந்த தமிழினம் மானத்தோடு உன்னதமாக போராடி அடிபணியாது முற்று முழுதாக அழிந்து போனது என்ற நெருப்பு வரிகளை சொல்லி முழங்கிடு இந்த யுகம் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்ட தலைவனை இந்த இனத்துக்கு தந்தது என்று உன் வரலாற்று பதிவில் எழுதி முழங்கிடு.
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
நீ இல்லாத நிகழ்காலம் இப்போதும் இனிக்கிறது உன் கவிதைகள் உன் காதலைச் சொல்லிய அந்தக் கணத்தின் இனிமையைப்போல! உன் அறையெங்கும் சுழல்கிறது சுவாசம் தீராத எழுத்தின் தாகத்தோடு! உன் கணினியில் வழிகிறது நலம் விசாரிக்கும் உன் நண்பர்களின் மின்னஞ்சல்கள்! உன் முடிவுறாத இரவின் உரையாடல்கள் கைபேசியில் உறைந்துகிடக்கிறது மௌனங்களாக! உன் கலந்துரையாடல்களால் களைகட்டும் நம் வீடு நிசப்தம் தாங்கிய மௌனத்தின் சாட்சியாய்... உன் வளர்ப்பு நாயின் உண்ணாநோன்பும்! உன் சாம்பல் கிண்ணம் கங்குகள் காணாது காத்துக்கிடக்கிறது நீயே சாம்பலானது அறியாமல்! பழுத்த இலையின் வெம்மைபோல் சுட்டெரிக்கிறது உன் நினைவுகள் நம் கிராமத்தின் பாதையெங்கும் ய…
-
- 5 replies
- 1.5k views
-
-
அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம், தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்! அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட, உண்மையான புரிதலென்று புரிந்தது! என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு... இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!! என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா? வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!! எத்தனை நாளைக்கு நானிருப்பேன்... எனக்கே தெரியாது! ஆனால் உன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள், எல்லாமே இங்குதான் சீவிப்பார்கள்... சிந்தியுங்கள்! "தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து... என் இறுதி வார்த்தைகள்!!! உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட…
-
- 14 replies
- 1.5k views
-
-
என்னைபத்து மாதங்கள்கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னையே என்னை பாராட்டி சீராட்டி வழர்த்தாயே என்னை இரவில்பலகதைகள் சொல்லிஉறங்கவைப்பாயே நான் தூக்கம் விட்டு எழும்பும் வேளையில் என் அருகில் இருந்து அன்புடன் என் தலையை வாரி முத்தம் கொடுப்பாயே ---- நான் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்தர் நீஅனைத்தையும் வேண்டித் தருவாயே பல ருசியான சமயல்களை செய்து ஊட்டிவிடுவாயே எனக்கு பாடங்கள் சொல்லித்தருவாயே உன் இடுபப்பில் சுமந்து கொண்டு பாட்டுப்பாடி என்னை மகிழ வைப்பாயே நீ எனக்குசின்ன வயதில் செய்த நினைவுகள் இப்போழுது நினைத்துப்பாக்கும் போதெல்லாம் சந்தோசமாக இருக்கின்ற இருந்தாலும் நீ என் பக்கத்தில் இல்லை என்றதும் கொஞ்சம் வருத்தம் த…
-
- 5 replies
- 1.5k views
-
-
படித்ததில் மனதை நெருடியது... ஆழியாள் அவுஸ்ரேலியா என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி வடிவு அன்ரிஇ வனிதா அன்ரி சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் மீன் விக்கப்போன செல்லம்மா பாட்டியை மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள். பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்கு போனா. சேகர் சித்தப்பா காணாமல் போனார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
கலைவாணி நீ தந்தாய் எழுத்தாணி..! தலைவணங்கி வேண்டுகின்றேன் துணைவாநீ...!! ஞாலத்தின் ஒளியாகி... ஞானத்தின் வழியாகி... முத்தேவிகளில் முத்தானவளே...! முத்தமிழின் வித்தானவளே...!! தாய்த்தமிழுக்காய் எழுதுகின்றேன் -உனைத் தாயாகத் தொழுகின்றேன்! -என் தயவாக நீயிருந்து - என்றும் நான் தவறாமல் பார்த்துக்கொள்!
-
- 4 replies
- 1.5k views
-
-
பிள்ளைகள் பெண்ணாய் பிறந்து விட்டதே தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் நிலம் வாங்கி சேர்க்க வேண்டும் செலவை குறைத்து சேமித்த பணத்தை வங்கியில் சேர்கனும் என்று ஏங்கித் தவிக்காதீர்கள் தூக்கம் மறந்து துவழாதீர்கள் துக்கம் கொள்ளாதீர்கள் நீங்கள் ஆற்ற வேண்டியது ஒன்றே ஒன்று தான் பெண் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுங்கள் எதையும் எதிர்த்து ஏறி மிதித்து வாவென்று தன்…
-
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவிருந்த காலத்தில் எழுதிய கவிதை. குமுதத்தில் வெளிவந்தபோது ஜெயமோகன் கருத்து எழுதியிருந்தார். இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் …
-
- 2 replies
- 1.5k views
-
-
தேடித்தான் உன்னை கண்டு பிடித்தேன் இருந்தும் இன்னும் தேடுகிறேன் உனக்குள் என் காதலை நான் பேசிக்கொண்டே இருக்க உன் கண்களிடம் கற்றுகொள்ள வேண்டும் நான் பேசாமல் இருக்க உன்னிடம் கற்றுகொள்ள வேண்டும் நீ காட்டும் யார் என்றாலும் சண்டை பிடிக்க தயார் உன் கண்களை காட்டத வரை உன்னை சிரிக்கவைத்து பாக்க ஆசைதான் இன்னும் முழுசாய் பாக்க விட்டதில்லை உன் கன்னக்குழி ஐந்து என்று எழுத தெரியாது அஞ்சு என்று எழுதத்தான் தெரியும் எழுத்து பிழைவிடும் கவிஞன் நான் நீ கிடைக்கத்தான் கவிதை எழுதுகிறேன் இருந்தும் காட்டமல் மறைக்கிறேன் கிடைக்காமல் போய்விடுவாயோ என்று உன்னை ஒருதலையாக காதலிப்பது முட்டாள்தனமாக இருந்தாலும் உன்னைக் காதலிக்கிறேன் என்பதே …
-
- 4 replies
- 1.5k views
-