கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உனக்காக காத்திருப்பேன்.... முதற் சந்திப்பில் என் மனதைக் கவர்ந்தாயடி ஒவ்வரு நாளும் உன் பேச்சால் -என்னை சாகடித்தாயடி ஒரு நாள் என் கூட பேசாமல் - என் மரண வலியை எனக்கு உணர்த்தினாய் பெண்ணே...... தெண்றல் காற்றாய் என் மனதுக்குள் நுழைந்து விட்டாய்... நீ என் மேல் காட்டும் அன்பும் ஆதரவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஆனால் நானோ உன்னை விட பலமடங்கு உன்னை நேசிக்கின்றேன். அது உனக்கும் தெரியும் ஆனால் நீயோ என்னை விட பல மடங்கு இன்னொருவணை நேசிக்கின்றாய் அதுவும் எனக்கு தெரியும்..... அன்பே... அன்பே உன் சந்தோசம் தான் என் சந்தோசம் உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்... உன் சந்தோசத்துக்காக அவனிடம் உன்னை விட்டுக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனாலும் உன்…
-
- 6 replies
- 7k views
-
-
-
நீ என் நிலவரசி முகில்களைக் கிழித்து வெண்புரவி பறக்கிறது. கைக்கெட்டாத் தூரத்தில் என்று காற்று காதில் கிசுகிசுத்தது. ஆழிக்குமிழிகள் போல் வெளியே தெரியாமல் உள்ளத்ததில் பெரிய பெரிய.. முகில்களைக் கிழித்தாயிற்று அடுத்தென்ன? இன்னுமின்னும் அண்டத்தை நோக்கி பயணம் தொடர்கிறது. தொட்டே தீருவேன் வேட்கை வியாபித்து விரிகிறது. கட்டித் தழுவி நீயிடும் முத்தத்திற்கான அவா ஆவியை உசுப்புகிறது. தீபோல் உன்மேல் நான்கொண்ட காதல். என்னை எரித்தெரித்து என் சுயத்தை சாம்பலாக்கி சரசமிடுகிறது. உருவழிகிறாய் என்று ஓரத்தில் ஒருமனம் விசிக்கிறது. உணர்ந்தும், உயிர்ப்பு உன்னை மட்டுமே யாசிக்கிறது. அடி!, என் நெஞ்சக் கூட்டறையில் குடிகொண்ட நிலவரசி என் மஞ்சச் சாய்கைக்கு நீ மடிதருவதெப்ப…
-
- 6 replies
- 1.7k views
-
-
உயிரை நெருப்பாகி உடலை வெடியாக்கி உதாரணமானோரே..! உயிரென மதித்த மண்ணின் உடனடித் தடைகள் நீங்க உருகி வீழ்ந்த கண்மணிகளே... பதவியும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் தாரமும் வேண்டாம் தராதரமும் வேண்டாம் விடுதலை ஒன்றே வேண்டும்.. கட்டளை கேட்டு துள்ளிக் குதித்து தேச எல்லையில் ஆக்கிரமிப்பாளனை ஆக்கிரமித்த வீரரே... தலைவனைக் காத்திடுங்கள் தாய் தேசத்தை மீட்டிடுங்கள் நாங்கள்.. சாவிலும் வானிருந்து நோக்குவோம் நட்சத்திர ஒளிகளாய் சுதந்திர தமிழீழத்தை ஒளிர்விப்போம் ஆசை வளர்த்துச் சென்ற ஆருயிர்களே.. இன்று நாம் கண்பது உங்கள் கனவினின்றும் உருமாறிய உண்மைகளையே..! உங்கள் உயிர் மூச்சிழுத்த தோழர்கள் சிலர் உருமாறித் தடம்மாறி உலாவர... உங்கள் காற்தடம் பற்…
-
- 6 replies
- 1k views
-
-
மாவிலாற்றுக்காக மரணித்த மாவீரர்களே மகிந்தா சிந்தனையை மழுங்கடித்தவர்களே மகிந்தபுர மந்திகளை மதிகெட்டு ஒடவைதீர்களெ மங்களசமரவீரவை ஒடவைத்தீர் மனமோகன் சிங்கிடம் மனிதாபிமானம் மதித்தான்_தமிழ் மக்கள் தலைவன் மதவு திறக்க அனுமதித்தான் மக்கள் நலன் கருதி மகாவம்சவாரிசுகளோ மதிக்கவில்லை மனிதபிமானத்தை,தம்மக்களையும் மக்கள் விடுதலை முன்னனியாம் மடையர்களுக்கு வேனுமாம் போர் மகிந்த சிந்தனை கவ்வியது மண் ஆனாலும் மண் படவில்லையாம் மீசையில் சமாதானத்துக்கான போர் அன்று சந்திரிகா மதவுக்கான போர் இன்று மகிந்தா பணத்துக்கான போர் நாளை யாருக்கோ -ஆனாலும் உரிமைக்கான போர் எமது வெற்றி நிச்சயம்...
-
- 6 replies
- 1.8k views
-
-
கடலலையின் வழிநெடுகே கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்.. கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள் படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள் பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள் என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில் எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில் சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!.. செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?... வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ! வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ! ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?... ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?... இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா? இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்…
-
- 6 replies
- 1.3k views
-
-
Jan 21 2005, 05:53 AM ஓஓ என் பழையவளே வருடங்கள் எத்தனை போனபின்பும் உன்நினைவுகளில் நான் என்நினைவுகளை நீ எத்தனையாவது பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய் உன்பெயரை மறக்க நான்உண்ட தூக்கமாத்திரை கூட தோத்து போனதே நீ மாறியிருக்கிறாய் கண்ணருகே கருவளையம் கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால் உதடுகள்மட்டும் அதேசிரிப்பு இப்போதும் நாம் பேச போவதில்லையா?? பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள் பேச முடியாத போது சந்திக்கிறோம் உன்நினைவுகள் உன்குழந்தையைபோல உறங்கியிருக்கலாம் ஆனாலும் ஒரேயொரு கேள்விதான் நீயும் என்னை காதலித்தாயா?? பழைய பதிவினை தேடிஎடுத்துத் தந்த மேகனிற்கு நன்றிகள்;
-
- 6 replies
- 1.7k views
-
-
-
இருளினிலே மருளுகின்ற விண்மீன்கள் கொண்டாட்டம் இருவிழிகள் கருவிழியால் விடுகிறதே காதல் தேரோட்டம் மின்சார விழிகள் இரண்டும் மின்னி இழுக்கிறது மின்மினியாய் கயல்விழியே என் இதயம் காந்தமாகக் கவர்கிறதே தேவதையே உன் நினைவுகள் தேய்ந்துவிடாத வளர்பிறையே தேம்பி அவனும் அழுகின்றான் தேங்காமல் நீயும் வந்துவிடு தேனைப்பருக என்று தேடிவந்த தேனிகூட தேவி உன் முகம் கண்டு தேகம் சிலிர்த்ததுவோ தீண்டவில்லை உன் இதழை தித்திக்கும் சுவைகண்டும் தீங்கிழைக்க விரும்பாமல் தீர்க்கமாய் காத்திருக்கு தேவலோக கன்னியே நீயும் வந்துவிடு தேவனுக்கு அன்பே நீயும் உன்னைத்தந்துவிடு
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழன் புகழ் வானில் உயர்ந்தது வரி உடை அணிபவன் ஆணையில் பறந்தது! திரி சடை சிவனும் திடுக்கிட்டு மூன்றாம் விளி திறந்தான் ... முகமலர்ந்து வாழ்த்தினைப் பகர்ந்தான்... சிங்கங்கள் முகத்தை அஷ்டகோணலாக்கி அ'சிங்கங்கள்' ஆயின! பறந்தது உண்மை குண்டு விழுந்ததும் உண்மை இருந்தது இருந்தபடியே இருப்பதாக அறிக்கை வாந்தி எடுத்தார் அரசாங்க அமைச்சர் அவர் மனசுக்குள் நிறைய எரிச்சல்! உலகம் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே 'அது எப்படி புலி வானில் பறக்கலாம்?' என்று வேதாந்தம் பேசின... வெறும் அறிக்கைகள் வீசின! இறக்கைகள் விரித்து இன்னும் இன்னும் பற என்று தமிழர் வாய்கள் பேசின...! …
-
- 6 replies
- 1.8k views
-
-
" பசி " ... என் பசி யாரென்று தெரியுமா...? உங்களுக்கு...? பசி என், " அழையா விருந்தாளி "... சாதி,மதம்,இனம்,சமயம் பார்க்காத சமத்துவ விருந்தாளிதான், ஆனால், இவன் என் வீட்டில் மட்டுமே இலைப்பார ஆசைப்படுகிறான், இவனுக்கு நான் என்ன விருந்து படைக்க..? ஒட்டு துணியில் மானம் காக்கும் என்னைபோன்றோர்.. ஒட்டு மொத்தமாய் வயிறு நிறைந்ததே இல்லை...! எங்கள் வீட்டு கதவை மட்டும் தட்டும் இந்த விருந்தாளி, கல்லாய் கிடக்கும் கடவுள்களை சீண்டி கூட பார்க்காதோ..? சாமிக்கு படைத்துவிட்டு நீங்கள் வாங்கும் ஒரு உருண்டை பிரசாதத்தில் சிறு உருண்டை கொடுத்து இருந்தாலும் பசி போக்கி இருப்பேனோ..? அப்போது " பசியாற்றுதல் " என்ற…
-
- 6 replies
- 1.1k views
-
-
என் இருப்பும், உன் இருப்பும் அவசியம் பருத்த கலசங்களும், பெருத்த தம்புராவுமே நட்பை நிலைப்படுத்தும் நிர்வாண நிலையென்றால் கரிக்கிறது கண்மணிகள். உறுத்தலின்றி தரித்த விசம்போல் ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில் மாள்வது நட்பாகில்.... மானுடம் சிகிலமாகி, நாகரீக வெளிகளெல்லாம் நரகல் புவியாகி சீழ் பிடித்து மணக்கும். என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம். நட்பென்ற உன்னதத்தின் மேன்மையைப் புரிய வைக்க நண்பா! என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
உன்னை நினைக்க மறந்த இரவொன்றில் நிலவின் துணை கொண்டு எழுதிய கவிதை இது தயவு செய்து வாசித்துவிடாதே உன் கண்ணீரை ஏந்தினால் என் கவிதை இறந்துவிடும் காலங்கள் கரைந்தாலும் கரை சேராத நதியாய் தேங்கியபடியே கிடக்கிறது என் காதல் உன்னால் காதல் எனும் வானத்தில் நாமிருவரும் பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான் என் காதல் உன்னை மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும் காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின் அழுகுரல்தான் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ என்னோடு இருந்தபோது ஒவ்வொர…
-
- 6 replies
- 3.7k views
-
-
எரியுது எங்கள் தேசம் நாங்கள் உழைத்தது அனைத்தும் நாசம் அரசியல் வாதிகள் கோசம் அரைநொடியிலே கலைந்திடும் வேசம் மீனுக்கு தலையினை காட்டி-தினம் பாம்புக்கு வாலினை ஆட்டி கொடுக்கிறார் அரசுக்குக்கூட்டி அதை சொல்லுது ‘அஸ்வரின்’ பேட்டி ‘அதாவுல்லா’ காக்கா மறைந்தார்-நாம் அழிந்தபின் அலுத்கம விரைந்தார் பாராளுமன்றத்தில் கொதித்தார்-பின் பகைவனின் சேலைக்குள் ஒளித்தார். ‘ரிஸாத்தின்று’ நடிக்கின்ற நடிப்பு-அட சிவாஜியும் தோற்கிற நடிப்பு ‘அரசுக்கு தூக்குறார் செருப்பு’-அதை நினைக்கையில் வருகுது சிரிப்பு…! மாமி செருப்பால அடிச்சும் மாமா ‘ரவுசர’ உரிஞ்சும் மருமகன் தலைவர் ‘ஹக்கீம்’-அவ மகள்ட மடியிலே படுக்கார். கழுதைகள் எம்மை நெருக்க எம் கடைகளை அடித்து நொறுக்க உலகமே அதனை வெறுக்…
-
- 6 replies
- 1.2k views
-
-
அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி மண் மீட்க புறப்பட்ட மாவீரருக்கு அஞ்சலி மாவீரராகிவிட்ட வன்னி மக்களுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தி கடன் முடிக்க அருகதை சிறிதும் எனக்கோ இல்லை தளபதிகளுக்கு என் தாள் பணிந்து அஞ்சலி இனம் தெரியாத உறவுக்கும் இளையோருக்கும் அஞ்சலி கருவறையில் உலகம்கானாத கண்மணிக்கு அஞ்சலி கருவாகி உருவாகி மண் மீது தவளாத பாலகருக்கு அஞ்சலி வீரப்பெண் போராளிகளுக்கு அஞ்சலி உணவின்றி குடிக்க நீரின்றி உடுத்திய உடைகளுடன் துஞ்சிய உயிர்களுக்கு அஞ்சலி வெறி கொண்ட படையின் தடையற்ற வல் வளைப்பில் அழுகுரலோடு கற்பழிந்த பெண்களுக்கு அஞ்சலி சித்திரவதையில் சிதைந்த இளையோருக்கு அஞ்சலி "பேரர்களுடன் சாகிறேன் "என்ற பாட்டி மார்களுக்கு அஞ்சலி இரவென்றும் …
-
- 6 replies
- 6k views
-
-
தமிழா! உனக்கேன் தூக்கம்? என்னடா தமிழா இன்னும் தூக்கமா? எதிரி உன் வாசலில் நிற்கிறான் தெரியுமா? உன் அன்னையின் காணியிலும்; அன்னியன் நிற்கிறான்; அதை அடுத்த காணியிலும் இன்னொருவன் நிற்கிறான் உறவுகள் எல்லாமே தெருவிலே நிற்குது உரிமைக் குரல் கொடுக்கத் தயாராகி வருகுது - இந்த நிலையிலும் தொடர்ந்து நீ தூங்கினால்; உன்னையும் தூக்குவான் உணர்ந்து நீ எழும்படா என்னடா தமிழா இன்னும் தூக்கமா? எதிரி உன் வாசலில் நிற்கிறான் தெரியுதா? சுதந்திர வாழ்வும் நீ பெற வேண்டும். சுயநிர்ணய உரிமையும் நீ பெறவேண்டும்;; இழந்த நிலங்களைப் மீட்டிட வேண்டும். இன்னல்கள் அனைத்தும் களைந்திட வேண்டும் சுதந்திரத் தமிழீழம் மலர்ந்திட வேண்டும் துணிந்து எங்கும் நீ தலை நிமிந்திட வேண்ட…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஆக்கிரமிப்புப் பூதம் எல்லையின்றி ஊதித் தள்ளிய கந்தகப் புயலில் சிக்கி குருதியில் குளித்து கறுத்துப் போன பூமியே.. ஆடவன் என்றும் மகளிர் என்றும் குழந்தை என்றும் வேற்றுமை உணரா உருக்குத் துகள்களுக்கு உடலைப் படையல் செய்த பூமியே.. விடுதலைக்காய் எழுந்த ஓயாத அலைகளின் தொடக்கப் புள்ளியே முடிவுப் புள்ளியுமானது கண்டு இரத்தம் வடித்த தாயே... ஆடை மறைப்புக்குக் கூட அருகதையற்ற நிலையில் எதிரிமுன் அம்மணமாய் நின்ற தமிழர் தேகம் சுமந்து வேதனையில் வெந்த தேசப் பூமியே.. சிங்களச் சாத்தானின் இனவெறி வெற்றி இச்சைக்கு உன்னையே தந்திட்டு வெறித்துக் கிடக்கும் தேசமே.. தமிழ் தாயிவள் சேயை இரும்புக் கவசம் அல்ல தேகக் கவசம் தந்து காக்க உறுதுணையாய் நின்ற தீரமே... …
-
- 6 replies
- 1.2k views
-
-
உன் காதலுக்குதான் கண் இல்லை நீ இல்லாமல் என் கவிதைகள் அழுகின்றனவே அதாவது கேக்கிறதா? என்னை மறந்து வாழத்தான் இடம்பெயர்ந்தாய் என் நினைவுகளை மறந்து வாழ என்ன செய்தாய்... என் கண்ணைத்தான் அதிகம் பிடிக்குமென்றாய் உண்மைதான் அதை மட்டும்தான் என்னால அடக்க முடியவில்லை என்னை உண்மையாக காதலித்தாய் என்றால் என்னை மறந்துவிடு என்றாய் அப்போதுதான் பொய்யானது என் காதல் வாழ்க்கை ஒரு போர்க்களம் புரிந்து கொண்டேன் காதலி என்ற ஆயுதத்தை தொலைத்தபின் என்னை எனக்கே பிடிக்காத போதுதான் உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி பிடிக்காமல் போனது உனக்கு மட்டும் என்னை என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும் எழுதியதில்லை எழ…
-
- 6 replies
- 1.8k views
-
-
தலையிடிக்கிறது இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக , தூக்கமாத்திரை இல்லாத இரவுகள் இனி இல்லாமல் போகுமோ ? பயமாய் இருக்கிறது ........ வாசிப்புக்காய் தலையணை அருகிருக்கும் புத்தகத்தை தொட்டால் , அறையெங்கும் ஓலமிடுகிறது _என்னால் கோர்க்க இயலாமல் போன சொற்கள் ௬ட்டம் ௬ட்டமாக , காதடைக்கும் ஒலி கடந்து ஒளியனைத்து விழி மூடினால் , ஏதேதோ படர்வுகள் இருளுள்ளே உதறவும் முடியாமல் உணரவும் முடியாமல் ........ அறுந்தறுந்து வரும்_அந்த நினைவுநிழல்கள் அனுங்கிக்கொண்டு தற்கொலை செய்கின்றன ..... எங்கும் சகிக்க முடியாத மயான எரிதலின் வாசம் பரவ கைகளால் இறுக்கிக்கொள்கிறேன் தலையை , நிலவும் நீள் நிசப்தத்தில் அந்தரங்கமாய் அழுதுமுடிகையில் அநாதரவாய் அந்தரத்…
-
- 6 replies
- 1.4k views
-
-
http://youtu.be/nSSv9Kk3tkI முன்னால் நின்றது மாரீசனின் மானல்ல மயங்கி நீர் அண்ணலை விட்டு ஆரணங்காகி அணிவகுக்க.. தாயக விடுதலைக் கனவே உம்மை அங்கு அணிவகுத்தது..! தந்தை செல்வா சொல்லி தந்தை பெரியார் வாழ்த்தி கலைஞர் தலையாட்டி எம் ஜி ஆர் கரம் நீட்டி அமிர்தலிங்கம் வெற்றித் திலகமிட யோகேஸ்வரன் கேட்ட இடத்தில் அணிவகுத்த இளைஞர் கூட்டத்தின் வழி நீவிர் நின்றீர் அண்ணன் பாதையில் கொள்கை காத்து..! களங்கள் பல கண்டீர் இந்திய வானரப்படைகளென்ன கொடும் சிங்கள பேரினப்படைகளும் கண்டீர். போதாதேன்று இலக்கிய காலமே கண்டிராத அமெரிக்கக் கழுகுகளும் இஸ்ரேல் வல்லூறுகளும் கூடவே... சீன ரகன்களும் பாகிஸ்தானியப் பிறைகளும் ரஷ்சிய அரிவாள்களும் உம் முன் மல்லுக்கட்டக் கண்ட…
-
- 6 replies
- 876 views
-
-
பதக்கடச் சாக்கு... பட்டுச் சேல பள பளக்க.. பொட்டிக்குள்ள கம கமக்க - புள்ள புரிசனுக்கு - நீயும் சோறு கறியா கொண்டு போறாய்...? வெயில்ல ஒம்புரிசன் புழுங்கிப் புழுங்கி நிப்பாருண்டு குலுங்கிக் குலுங்கி நீயும் ஓடோடிப் போறாய் போல... சும்மாடு பிரியிற அளவுக்கு - நீயென்ன கோழிக் கறியா கொண்டு போவாய்...? ஆசக்கி அறுத்தாப்புக் கெழங்கும் பொட்டியான் பொரியலுந்தானே..! பொச்சாப்பொல - நீயும் பொரிச்சிக் கொண்டு போவாய்... மாட்டின் சேட்டையிம் மருதமுனச் சாறனையிம் மடிச்சி மச்சான் பொரயில போட்டுப்பொட்டு வீடியும் வாயுமா மம்பட்டியும் கையுமா வெம்பி வெம்பி நிப்பாருண்டு தேம்பித் தேம்பிப் போறாய் போல... புது மாப்புள புறு புறுப்பாருண்டு புசு புசுன சமச்செடுத்து ச…
-
- 6 replies
- 2k views
-
-
சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும் சிந்தை கலங்கவில்லை ஐரோப்பா இட்டது ஐந்தாறு ஆணி - அப்போதும் ஐயோவென்று அழவில்லை அமேரிக்கா இட்டது ஆறேழு ஆணி - அப்போதும் அச்சம் எழவில்லை சீனா இட்டது சில ஆணி - அப்போதும் சிறிதும் வாடவில்லை இந்தியா இட்டது இரும்பாணி - அப்போதும் இதயம் நோகவில்லை பாகிஸ்தான் இட்டது பல ஆணி - அப்போதும் பயந்து போகவில்லை தமிழகம் இட்டது தனி ஆணி - அப்போது தொலைந்தது எம்மூச்சு http://gkanthan.wordpress.com/index/eelam/nails/
-
- 6 replies
- 1.3k views
-
-
சுதந்திரக்காற்று... வீசத்தொடங்கிற்று 58 வருடங்களுக்கு முன்னால்.... ஆனாலும் நாம் சுவாசித்ததில்லை ஒரு நாள் ......!! நன்றி.. கார்ட்டூன் உரிமையாளருக்கும், தேடி உதவியவருக்கும்
-
- 6 replies
- 1.9k views
-
-
ஒரு கிறுக்கல் ஒன்று: எது நடக்கின்றதோ அதுவும் அநீதியாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அது அறம் மீறியே நடக்க இருக்கின்றது உன்னுடையதை எல்லாவற்றையும் எல்லாவுமாய் இழந்தாய், ஆயினும் ஏன் ஆனந்தப்படுகின்றாய் எதை நீ பிறப்பிலிருந்து கொண்டு வந்தாயோ அவை அனைத்தும் பறிக்கப்படுகின்றன எதை உனக்காக படைத்தாயோ அதை அவர்கள் அவர்களுக்காக எடுத்துக் கொண்டனர் எதை அவர்கள் எடுத்தார்களோ அவை அனைத்தும் உன்னிடம் இருந்து பறித்துக் கொண்டவை எதை நீ அவர்களிடம் இழந்தாயோ அவை அனைத்தும் மீண்டும் உன்னாள் பெறப்பட வேண்டியவை பறித்த எதை அவர்கள் தமதென்று கொண்டாடுகின்றனரோ அவை அனைத்தும் உனக்கும் உன் சந்ததிக்குமானவை பிறிதொரு நாளில் உன் தெருவில் தோரோட்டி போகும் போது உனக்கான கீதையாக உன் சுதந்திரத்…
-
- 6 replies
- 1k views
-
-
கும்மியடி பெண்னே கும்மியடி தமிழ் ஈழம் மலர்ந்தது எனக்கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வீரத்தலைவன் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி மாவீரர் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி புலிக்கொடியைப் போற்றிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழனின் அடிமை விலங்கு உடைந்தது எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழுக்கு என ஒருநாடு உண்டு எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி இந்தக்கவிஞன் கனவு நினைவாகும் எனக் கும்மியடி
-
- 6 replies
- 1.2k views
-