கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்பு நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. நிலவு வரும் வரை நாமிருக்க நம் கலாச்சார கண்களும் நம்மை விட்டுவைக்கவில்லை. இன்னொரு நாள்… கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. அவள் தடுமாறி அலைக்குள் விழுந்த போதும் என்னால் அவளை அணைக்க முடியவில்லை. கடலோ அவளை நனைத்துப் போனது. மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. அலை கூட அ…
-
- 6 replies
- 2.3k views
-
-
உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை
-
- 6 replies
- 1.7k views
-
-
விதைகளை தின்னும் தேசத்தில் முகிழ்த்தவளே, கனவுகளை கருவறுக்கும் கொலைவாள்களிடையே எழுந்தவளே.. இழப்பின் வலிகளை மொழிகளால் இறக்க முனைந்தவளே இழிகாலதில் இறங்கிய ஊழியின் மகளே.. குருதி குடிக்கும் பேரினத்தின் குரல்வளையில் விலங்கு பூட்டவா நீ எழுந்தாய் ... இல்லையே.. அண்ணன்களோடு ஆனந்தவாழ்வு கேட்டுதானே நீ அமர்ந்தாய் வீதியில்... விபூசிகா... வலி முடிவொன்றின் வழக்குரைத்தவளே உன் குரலணுக்களின் தீண்டலால் தீப்பற்றியெரிந்த வெளிகளிலும் கருகி நைந்துபோன திடல்களிலும் ஆயிரமாயிரம் விழிகள் திறந்து கண்ணீர் வடிகின்றன.. வேரீரமிழந்து இலையுருத்திக் கிளைசிதைந்து போன பெருமரத்தில் கூடுகள் அழுகின்றன. உடல்சுமந்த குற்றவுணர்வோடு குனித்து நிற்கின்றோம்.. எட்டப்பர்கள் நாங்க…
-
- 6 replies
- 695 views
-
-
இவர்களுக்கானதே! ----------------------------- நேற்று எம் முன்னோர் இன்று நாம் நாளை இவர்களும் ...... மாற்றத்தைத் தேடும் மாந்த நேயனே தியாக தீபத்தின் பொன் மொழியறிந்தாய் மக்கள் போராட்டமொன்றே மண்ணை மீட்குமென்ற மகத்துவம் புரிந்து நோன்பினில் இருந்தே தேசியம் காக்கும் கடைமையில் இருந்தாய் மெல்லென எழுகின்ற கதிரொளியாக எங்களின் இளையோர் உலகை ஒருநாள் வென்றெழும் போது இவர்களுக்கான தாயகம் விடியும் புலியினைத் தாங்கிய எம்கொடி பறக்கும்!
-
- 6 replies
- 625 views
-
-
தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை
-
- 6 replies
- 17.2k views
-
-
காதலின்,,,, வாழ்நாள் மூலதனம்....நினைவுகள் தான் ....!சுகமான நினைவுகள் ...இதயத்தில் தென்றல் ...!சோகமான நினைவுகள் ...இதயத்தின் முற்கள் ...!காதலில் நினைவுகளின் வலியே அதிகம் ....!!! +காதல் நினைவுகளின் வலி என் கற்பனை வலிகள் ( 01)
-
- 6 replies
- 1.7k views
-
-
காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் குளித்தென்னை மகிழென்று கூவி அழைக்கின்றன இதமான சூடற்ற காலை வெயில் எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள் பசுமையும் அழகு கூட்ட பார்க்கும் இடமெங்கும் பரவசம் தருகின்றன குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை கூம்பான இதழ் கழற்றிக் கொள்ளைச் சிரிப்புடனே நிலம் பார்க்க நிற்கிறது வாசனைப் பூக்களெல்லாம் வாடியவை காற்றில் கழித்து வசதியாய்ப் பார்த்தபடி வகைக்கொன்றாய் இருக்கின்றன வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில் கண்மலர்ந்து மடல்கள் விரித்தே கதிரவன் கண்பார்க்க காதலுடன் நிற்கின்றாள் கடமை என் காட்சிகள் கலைக்க கவிந்த மனம் கட்டறுத்து வீழ கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி காலத்தின் கணக்கில் கரைந்த…
-
- 6 replies
- 6.9k views
-
-
என் கனவில் வந்த பூதம் ஒன்று விடிந்த பின் நான் பேருந்துக்காக காத்திருக்கையில் அருகில் வந்து bus stand இல் நின்றது நானும் பூதமும் பேசிக்கொள்ளவில்லை பூதம் தன்னைக் கண்டவுடன் நான் அதிர்வேன் என்று நினைத்து ஏமாந்து கொண்டது என்னை நேரில் கண்டவுடன் பூதம் தலை தெறிக்க ஓடும் என்று நானும் ஏமாந்து கொண்டேன் பேருந்தில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாலும் தன் கண்களை மூடியே பயணித்தது அது அலுவலகத்திலும் என் பக்கமே நின்று கொண்டிருந்தாலும் ஒன்றும் பேசவில்லை அது நானும் ஒன்றும் கேட்கவில்லை இடையிடையே நக்கல் சிரிப்பும் நளினமும் செய்து கொண்டுதான் இருந்தது பூதம் அதன் குளப்படி பழக்கங்களை மாற்ற முடியுமா என்னால்? **…
-
- 6 replies
- 1.3k views
-
-
காதலிக்க நேரமில்லை...... மண்ணை நேசித்தவள்(ன்) மரணப்படுக்கையில் கிடக்கும் போது உன்னைக் காதலிக்க எனக்கு நேரமில்லை.... சொல்லிக் கேட்டதற்கே என் கணங்கள் வேதனையில் துடிக்க..... பள்ளிவாசல் நின்று நீ புன்னகைப் பூக்கொடுக்க...... பதிலுக்கு என்னால் கண்ணீர் தான் தரமுடியும் கண்ணே...... ஒருகாலையில் தொடரும் வேதனைக் கணங்கள் மறுகாலைவரை தொடர்வதும் அதுவே மறுபடியும் மறுபடியும் தொடர்வதுமான சோகப் பொழுதுகளே அவருக்கு சொந்தமாக நான் மட்டும் உன் நினைவில் மிதப்பதா.... உன் நினைப்பைவிட அவர் உயிர் வதைப்புத்தான் எனை வாட்டுதடி.... இடம்தெரியா முகாமில் எங்கோ ஒர் மூலையில் மண் மீட்கச் சென்றவரின் மரண ஒலிகேட்க நாம் மட்டும் என்ன …
-
- 6 replies
- 1.9k views
-
-
என் இளவயதில் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் கனவுகள் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் ஆசைகள் எல்லேரையும் போலவே என் தேசத்தின் மீதான காதல் எல்லேரையும் போலவே எனக்குள்ளான மாற்றங்கள் எல்லேரையும் போலவே என்கைகளிலும் துப்பாக்கி எல்லேரையும் போலவே எனக்கும் நம்பிக்கை எல்லாமே சிதறிப்போன கணங்களில் எதுவுமே நடவாதது போல எல்லோரையும் போலவே நானும் வாழப் பழகிக் கொள்கிறேன்..
-
- 6 replies
- 1.4k views
-
-
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... ..... செல்லமே விடிய விடிய கண்விழித்து உன் காதலை சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன் நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி எனச்சொல்லிச் சென்ற நாளை உனக்கு பிடித்த என் - புன்னகையுடன் நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும், காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச..... காதல் தரும் இன்பதையும் ஆசை நினையுகளையும் ...... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 6 replies
- 1.7k views
-
-
நீண்ட பெரு மரங்களிலும் தரவைப் பனைகளிலும் மோதி அவிழ்கிறது கார்த்திகைக் காற்று, பெருநிலமெங்கும் நனைந்துபோக குளிர்ந்து கருக்கூடிக் கவிழ்கிறது கார்த்திகை வானம், எண்திசைகளாலும் சூழ்ந்து பெருகும் இருளை ஊடுருவுகிறது கார்த்திகை நட்சத்திரங்கள், வைகறைப் பொழுதின் வாசலில் சூரியதேவனின் தீண்டலோடு முகிழ்க்கின்றன கார்த்திகை மலர்கள், வாழ்த்துக்கூறி ஒவ்வொருவரையும் கடக்கிறது கூட்டமாக, கார்த்திகைப் பறவைகள். தீவிழுந்த நிலத்தின் பெருந்துயர் சுமந்து மெல்ல எழுகிறது பாடல், கல்லறைகள் மீதேறி மண்மேடுகள் தீண்டி கரைந்தநீர் வெளிகள் தழுவி எங்கும் பரவுகிறது பாடல், கேளுங்கள், இது கார்த்திகைப் பாடல். உங்களின் உறவுகளின் பாடல். வேரோடி மண்ணில் நிறைந்துபோன வேழங்களின் பாடல். …
-
- 6 replies
- 631 views
-
-
வீர மறவனின் விழுதொன்று வேரறுந்து வீழ்ந்தது. தூர நிலத்தில் ஆழ்ந்து துயிலுகின்றது பாரெல்லாம் நாம் தமிழராய் அவன் பேர் சொல்லி விம்முகின்றது பாரதியின் சீடனாய் பல களங்கள் அன்று பாதையிலே பிரிந்து புதிய பாதையிலே சென்று பலமான இனமானக் கலைஞனாய் வென்று பலம் சேர்த்தாய் ஈழவிடுதலையே வழி என்று தமிழனாய் நாம் என்று தரணியெங்கும் தோழனாய் மார்க்சியவாதியாய் மானிலத்தில் வாழ்ந்து ஈழத்தவன் நான் இல்லையென்று ஏக்கமடைந்து வாழப்பிறந்தவன் தமிழன் என சீற்றம் கொண்டு ஈழத்தமிழன் கரங்கோர்த்து வீரப்போரில் தலைவன் வழியில் நேர்கண்டு அவன் தம்பியாகத் தனை வரிந்து கொண்டு நம்பியவன் நாளை எமக்கு நாடு என்று உயிரொன்று மட்டுமே என் சொத்து அதையும் பயிராக்குங்கள் ஈழத்தம…
-
- 6 replies
- 999 views
-
-
நானிங்கு காத்திருப்பது காதலனுக்காக அல்ல கவிஞரே... கடலலை மெல்ல கால் நனைக்கும் சுகத்திற்காக... மரணித்து விளையாடுதல் பற்றி எங்கேனும் அறிந்ததுண்டா கவிஞரே? பாரும் கடலலையை மரணம் அதற்கு விளையாட்டு! அருகில் நெருங்கி வாரும் கவிஞரே இப்படி அமர்ந்து பேசலாம்... உப்புக் கலந்த காற்று... அலையடிக்கும் கடல்... காலுக்கு இதம் தரும் கடற்கரை மணல்... சும்மா இராமல் கடலுக்குள் விழுந்தெழும்பும் சூரியன்... என கண்முன் விரியும் இயற்கையை கொண்டாடாமல் ஏதோ வாழ்கின்றோம்! இந்த உலகம் பரபரப்புக்குள் சிக்கி இதயங்களை இளைப்பாற விடுவதில்லை... மெல்லிய உணர்வுகளின் மகத்துவமும் புரிவதில்லை... என்ன கவிஞரே அப்படி…
-
- 6 replies
- 1.5k views
-
-
பாலைவன ரோஜா...... கவிதை - இளங்கவி நம் வாழ்விழந்த சோகத்தில் வாயடைத்து நின்றேன்...... அழியும் நம் இனத்துக்காய் நடு வீதிக்கு சென்றேன்..... அந்த தருணங்கள் என் வாழ்வின் ரணங்களாய்..... எப்போதும் சுட்டெரிக்கும் பாலை வனங்களாய்........ அந்தப் பாலைவனத்தினிலே சோககீதம் பாடும் ஓர் சோலைக் குயிலாக..... திசையேதும் தெரியாமல் திசைமாறிப் பறக்கின்றேன்.... அந்த நெருப்பு மண்தரையில் பட்டுவண்ண ரோஜாவொன்று..... நட்பெனும் நிழல் தேடி நான் பறக்கும் திசை நோக்கி நட்புடன் சிரிக்கிறது.... சுட்டெரிக்கும் சூரியன் விட்டெறியும் கதிர்களினால்.... தொட்டாலே தீப்பற்றும் சுட்டெரிக்கும் மண் தரையில்...... வேரூன்றித் தவிக்கும் அந்த அழகான பூச்செடிக்கு..…
-
- 6 replies
- 3.8k views
-
-
பாடியவர்: 'தேனிசை" செல்லப்பா இசைத்தட்டு: காலம் எதிர்பார்த்த காலம் பாடலை கேட்க :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை.. சிங்களவன் குண்டு வீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்ல.. எங்கள் காட்டில் ஒரு குருவி - அதன் கூட்டில் கண்ணீர் அருவி (2) (சிங்களவன் குண்டு வீச்சிலே) குச்சிகளும் சிறகுகளும் கொண்டு செய்த கூடு குருவிக்கல்லோ தெரியும் அதை கட்டப்பட்ட பாடு.. நாலுபக்கம் எரியுதம்மா நெருப்பு நெருப்பின் நடுவில் அல்லோ குருவிகளின் இருப்பு! (சிங்களவன் குண்டு வீச்சிலே) இன்னும் குஞ்சு பொரிக்கவில்லை இரண்டு மூன்று முட்டை.. இறக்கை கொட்டி ஏங்கி ஏங்கி துடிக்குது பார் பெட்டை..!…
-
- 6 replies
- 2.7k views
-
-
கருவாச்சியுடன் சில மணிநேரங்கள்........ பெண்மைக்கு பெயர் சேர்த்த பேரரசி பேடை என்று இகழ்ந்தவரை பேசு என்புகழ் என பெரு மார்பு தட்டி நின்றவள் துணையின்றி வாடாமல் துணிந்து நின்ற தமிழிச்சி கடந்த சில வாரங்களாக கவிப்பேரரசின் கருவாச்சியை வாசித்து இல்லை இல்லை அவளுடன் வாழ்ந்துவிட்டு வந்திருக்கின்றேன். கருவாச்சி ஒற்றைவரியில் ஓராயிரம் அர்த்தங்கள் புரிய வைத்தவள். பெண்மைக்கு பெயர் சேர்த்தவள். தமிழ்ப்பெண் என்பதை தவறேதுமின்றி தளராத துணிவோடு நிறைவேற்றிக்காட்டியவள். கட்டியவன் கையறுக்க கட்டியதால் ஓட்டிய உறவோ எட்டி உதைக்க ஒற்றையிலே நின்று பற்றையாய் படர்ந்தவள். வாழும்போது அவளடைந்த வேதனைகள் நெஞ்சை நெருடிச்சென்றன. வாழ்த்துக்கள் கவிப்பேரரசே.....
-
- 6 replies
- 1.8k views
-
-
"தமிழ் முரசு"(ஞாயிறு பதிப்பு){சிங்கப்பூர் தமிழ் தினசரி} இல் இன்று படித்ததில் சட்டென்று மனதைப் பற்றிப் பிசைந்த கவிதை... மிக இலகுவான மொழி நடை... இலாகவமான,ஆனால் காத்திரமான சொல்லாட்சிகள் என்றதுடன்,ஈழத்தமிழர் அல்லாதவரின் கவிதை என்பதும் கவரத் தூண்டின... நன்றிகளுடன் யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்கிறேன் வேர் வாசிகள் - பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள். மண் சுதந்திரம் மானம் என்றவர்கள் வெடித்துச் சிதறினார்கள். களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள். கல்லறைகளில் எழும் கட்டடடத்தில் குடிபுக மல்லுக் கட்டுகிறார்கள் சனநாயகத் துணையுடன்
-
- 6 replies
- 1.7k views
-
-
எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும். மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்… நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்…. உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி, ஏமாந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள்…
-
- 6 replies
- 1.8k views
-
-
நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... ஏடும் எடுத்ததில்லை ஏரெடுத்த அழுக்கும் கலைஞ்சதில்லை ஏர்போட் ஏறி இறங்க எடி நான் உனக்கு ஏற்ற ஆளாய் வரமாட்டேன்.. பாடமும் படிச்சதில்லை பட்டமும் பெற்றதில்லை பகட்டும் எனக்கு இல்லை.. எடி நான் உனக்கு ஒத்துவரமாடேன்.. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... **** வாசலில் வாடி நிற்கும் செவ்வரத்தை நான் மடி மீது ஊஞ்சல் கட்ட மாதுளை உனக்கு மன்னன் மகனும் அல்ல எடி நான் உனக்கு என்றும் தோதாய் வரமாடேன் காவல் காக்க நான் நாயும் இல்லை உன் காலடி சுற்றிவர பூனையும் இல்லை கட்டிலில் …
-
- 6 replies
- 1.1k views
-
-
அகரமெனும் சிகரம் அள்ளி எடுத்தேன் அழகுமயில் அணங்கவளை துள்ளி விழுந்தாள் துவண்டாள் என் அணைப்பில் கள்ளி நீதான் என்று கன்னம் வருடி நின்றேன் உன் பள்ளி அறையினிலே பாசமுடன் விளையாட எனக்கோ கொள்ளை ஆசையென்று கொஞ்சு மொழி உரைத்தாள் நெஞ்சம் முழுவதுமே மஞ்சு மேகமதாய் பஞ்சாய்த் தான் மிதந்து அஞ்சுகமாய் சிறகடித்தேன் நீல வானத்தில் நித்தம் பவனி வரும் கோல வெண்ணிலவும் கொஞ்சம் நாணி நின்றாள் என் பாவை எழிற்கோலம் பார்த்த காரணத்தால் வானத் தாரகையும் வெட்கித் தலை குனிந்தாள் “என் அன்பே உன் பெயரை அறிய ஆவல்”என்று அநேக தரம் கேட்டும் அவளோ மௌனித்தாள். “உன் பெயரைக் கூறாவிடினும் என்னுயிரே உன் பிறந்த இடம் ஏதென்று” பிரியமுடன் கேட்டேன் “என் பிறந்த இடம் பொதிகை வளர்ந்த இடம் மது…
-
- 6 replies
- 1.4k views
-
-
மேஜர் விதுரா *** சகோதரி, முன்பின் அறியாத உனக்காகவும், உனைப்போல் தம்உயிர்களை ஆகுதியாக்கிய உத்தமர்களுக்காகவும் அழுகின்றோம்..! ஒவ்வொரு உறவுகளின் உயிர்களும் கொடியவனால் காவுகொள்ளப்படும்போது எங்களுக்கு அழுகை வருவது வழமைதான்! ஆனால்.. இப்போது எங்கள் இதயமே வெடித்துவிடப் பார்க்கின்றது! இது உங்கள் இழப்புக்கண்டு வந்த அதிர்ச்சியின் விளைவு அல்ல.. உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்..! *** மண்ணில் செய்த உங்கள் சேவைகள் விண்ணில் இருந்தும் தொடரட்டும்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர்…
-
- 6 replies
- 1.4k views
-
-
அகதியானவர்கள்... சுதந்திரமடையா இந்தியாவின் தண்டகாரன்யக்காடுகளிலும் பாலஸ்த்தீனத்தின் இடிந்தகட்டிடங்களிலும் குர்தீஸின் குக்கிராமங்களிலும் ஈராக்கின் வீதிகளிலும் விடுதலைக்காக வீழ்ந்தவர்களின் ஆன்மாக்கள் வீடுகளை விட்டு புழுதித்தெருக்களை விட்டு சுதந்திரமாக ஊளையிடும் தெருநாய்களை விட்டு ஞாபகங்களை மட்டும் எடுத்துச்செல்லும்படி விரட்டப்பட்டவர்களின் முகாம்களில் தங்கியிருக்கின்றன ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள் இல்லாதுபோகும்படியும் வன்னியின் வனங்கள் வாடிப்போகும்படியும் ஆப்கானின் மலைகள் பொடியாகும்படியும் காக்ஷ்மீரின் வீதிகள் பிளந்துபோகும்படியும் ஆகியிருக்கிறது அகதியாக்கப்பட்டவர்களின் துயர்ச்சுமையால் விரட்டப்பட்டவர்களின் …
-
- 6 replies
- 2.1k views
-
-
தேம்பியழுகிறது தேசம்...! ஐயகோ....! எம் ஜீவனழுகிறதே மீள ஓர் முறை.... என்ன கொடுமையிது... நோயுன்டதே - எம் பேறறிவை....! ஏன் இந்த துயர் மீண்டும் _ எம் நெஞ்சேற விம்மிப் புடைக்கிறோம்..? தூண் சரிந்ததோ..? மீண்டும் எம் நூலகம் எரிந்ததோ...? தலைவனை தம்பியென்றழைத்து தத்துவம் சொன்னவரே எரிமலையில் குடிகொன்ட எம்மினிய அறிவூற்றே......! கரைந்து போனதே - மதிக் கடலொன்றிங்கே....! பகையோடு பேச இனியேதுமில்லை என்றெண்ணிப்போனீரோ...? உம் பணி முடிந்ததென்று உரைத்தவர் யார்....? இடை நடுவில் வழி தேடியன்றோ நிற்கின்றோம்....! தேசத்தின் குரலே......! தேம்பி அழும் எமை தேற்றி அறிவுரைக்க வருவீரோ...?…
-
- 6 replies
- 2.6k views
-
-
மறக்குமோ நெஞ்சம்? ஈழத் தமிழர் ஏட்டில் இன்னுமோர் வரலாற்றுப் பதிவு! நேருக்கு நேர் நின்று போர் செய்ய முடியா கோழைகளின்! வெறியாட்ட அரங்கேற்றம்! செஞ்சோலை!! செங்குருதியில் குளித்த ஓராண்டு நிறைவு! பிஞ்சுகளை எல்லாம் நஞ்சுகள் நசுக்கிய நாள் இது! ஈழத்தமிழர் நெஞ்சங்களில் பதிந்திட்ட ஆறாதவடு! எங்களின் மலர் முகங்களை மறக்க இயலவில்லை!மனங்களில் கண்ணீரோடு கதறிய கதறல் உலுக்குகிறது ஈழத் தமிழனை! பொறுப்பதில்லை எதற்கும் இனி!. "ஏன்" என்று எந்த அரசும் கேட்கவில்லை! போனது "தமிழ்" உயிர் தானே! "அலட்சியத்தில்" உயர்ந்து நிற்கின்றது எங்கள் வேங்கைகளின் இலட்சியம்! இனி!!....வெல்லும் காலம்! "ஓயும் அகதி எனும் ஓலம்! சிங்களத்தினை செங்களமாடும்…
-
- 6 replies
- 1.5k views
-