Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழம் என்னும் இன்பபுரி சாம்பலுக்குள் பூத்து வந்த சந்தனத்து மேனி - இவள் சங்கம் பல நாட்டி வைக்கும் சரித்திரத்து இராணி! வேங்கையரின் ஆகுதியில் விளங்கும் இளவேணி - தமிழ் வேதனைகள் தீர்த்து வைக்க விளைந்த இவள் ஞானி! தேங்கு வளம் சேர்த்து வைத்த தெள்ளமுதத் தேனீ - இவள் கஞ்சமலர் கொஞ்ச வரும் கதிரவனின் காணி! இன்னலுறும் இனங்களுக்கு இன்பந்தரும் கேணி - இவள் திண்மையுறும் விடுதலைக்கு வன்மை தரும் ஏணி! ஓங்கு புகழ் தாங்கி நிற்கும் தமிழினத்து ஆணி - இவள் ஒய்யாரப் பாட்டெழுதும் பாவலர்க்கு வாணி! முத்தெடுக்கும் கடல் நடுவே மிளிர்வது இவள் பாணி முத்தமிழும் செப்பிடவே முழக்கம் தரும் தீனி! மாங்கிளியும், மரகதமும் மண்டியிட்ட பூமி - …

  2. Started by nirubhaa,

    முகம் மற்றுமோர் உயிருள்ள கண்ணாடி.. உண்மையும் பேசும் -அதுபோல் பொய்யும் பேசும் ...! அகத்தின் அழகு முகத்தில் என்றார்... அகம்,முகம் அப்படியென்ன இணைப்பு அதற்குள்.? ஒன்று பேசுவதை மற்றொன்று காட்டிக் கொடுக்கிறதே...! முகம் முதலில் ஓர் அறிமுகச் சாதனம் ...¨! முகமே பலசமயம் நம் முகவரியும் ஆகும்..! நினைவின் விம்பங்கள் - பதியப்படும் நிலம் முகம்..! மனம் மகிழ்ந்தால் முகம் ஒளிரும்...! துக்கமானால் அது அழும்...! முன்னால் நிற்பவருடன் பேசுவதா வேண்டாமா , நல்லவரா கெட்டவரா - முகம் தீர்மானிக்கும்...! உள்ளே இருப்பது அன்பா விஷமா ...! முகம் சொல்லும்...! அன்பை சொல்ல சொல் தேவையில்லை - முகமே போதும் நம் எண்ணங்கள் சொல்ல...! விருப்புக்களுக்கு முதலில் சம்மதம் சொல்வதும் - வெறுப்புக்கள…

    • 0 replies
    • 1.4k views
  3. Started by amudhini,

    தோரண வாயில் எல்லாம் விளம்பர விசாரிப்புகள் வெள்ளை கோபுரம் வண்ணமேற்றி கொண்டுள்ளது கருங்கல் தூண்கள் பளிங்குப் போர்வையில் பதுங்கிவிட்டன தொன்னையில் சிரித்த பொங்கல் நயிலான் பையில் அழுகின்றது அர்ச்சகரெல்லாம் நகைக்கடை ஒப்பனைகளாய் சாமி சயனத்தில் இருப்பதால் சந்திக்க இயலாதாம் ஏமாற்ற் வெளினடப்பில் எதிர்ப்பட்ட சிறுவன் ஏந்திய கையில் இருந்த இறைவன் கேட்டான் “இங்கு விடுத்து எங்கு தேடினாய் என்னை” என்று

  4. பூவே........... பூச் சூட வா ... மலர்களிலே பல நிறம் கண்டேன் மாலையாகும் திறன் கண்டேன் பூஜைக்கு போகும் சில ,கண்டேன் மலர் வளையமாகும் சில கண்டேன் கண்ணீரில் மிதக்கும் சில கண்டேன் மாடியில் வாடும் சில கண்டேன் மாலையில் மலரும் சில கண்டேன் காலையில் மலரும் பல கண்டேன் நிறம் உள்ளவை பல கண்டேன் , முட்களின் நடுவே சில கண்டேன் நறு மணம் உள்ளவை பல கண்டேன் பால்போன்ற வெண்மையும் கண்டேன் வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை . மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும் மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும். மலர்களிலே இத்தனை வகை என்றால் மனிதமலர் கள் எத்தனை வகை ?...........

  5. அங்கோ உண்ண உணவில்லை உடுக்க துணியில்லை குடிக்க நீரில்லை உறங்க வழியில்லை சுகாதார வசதியில்லை மருந்தோ மருந்துக்குமில்லை உயிருக்கோ உத்தரவாதமில்லை உதவிடவோ யாரும் முன்வரவில்லை இங்கோ அமைதியில்லை மனம் நலமாயில்லை உறக்கமில்லை உடல்நலமில்லை உலகநாடுகளிடமோ இரக்கமில்லை ஏரெடுத்துப் எம்மை பார்ப்பாரில்லை தமிழர்கள் இப்போது சுவற்றில் பந்தாக அடிக்கப்படுகிறோம் நாம் திருப்பித் தாக்கும்போது கேள்வி கேட்க இங்கே யாருக்கும் அதிகாரமில்லை எந்த அருகதையுமில்லை

    • 4 replies
    • 1.4k views
  6. 26.12.2004 அன்று ஆழிப்பேரலையில் நாம் இழந்த எம் உறவுகளுக்காகவும், உலகெங்கிலும் இந்தப் பூமி இழந்த அற்புத மனிதர்களுக்காகவும் இப் பாடல் காணிக்கை: பாடல்: http://www.imeem.com/vaseeharan/music/kyEb..._kanneeril_kul/ பல்லவி கண்ணீரில் குளிக்கின்ற தேசம்-கடல் தண்ணீரில் மிதந்தது சோகம் அலை கொண்டு வந்த கடல்-மனித தலை கொண்டு போனதே இனம் மதம் மொழி கடந்து-எங்கள் தேசம் சுமந்திடும் சோகமடா! குழு: தேசம் தேசம் எங்கும் சோகம் சோகம் சரணம் 1 போரின் நாக்குகள் தீண்டிய தேசத்தை சுனாமி அலைகள் கிழித்ததே வாழ்வின் ஆசைகள் துளிர்த்திட்ட மக்களை வாழ்வளித்த கடலே அழித்ததே ஆர்ப்பரித்த கடலே ஆள் பறித்தாயே கரையில் நின்று எம்மையே கலங்க வைத்தாயே(2) விழியில் தீமூட்…

  7. மாவீரர் குரல் வழி காட்டி மறைந்தோம். ஒளி ஏற்றி வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் கிடக்கிறோம். குளுகுளுவென மண்மகள் மடி இதமாக இருக்கிறது. தமிழினத்திற்காக உயிர் விளக்கேற்றிய எங்களைத் தாங்கிய பூமகள் எங்களைத் தன்னோடு ஐக்கியமாக்கி தனக்குள் மகிழ்கிறாள். மண்தாயின் அணைப்பு இதமாகத்தான் இருக்கிறது, இருப்பினும் எடுத்த காரியத்தை முடிக்காத காரணத்தால் எங்களுக்குள் கனலும் விடுதலை நெருப்பு அன்னையின் அரவணைப்பை மறுக்கிறது. எங்கள் விழிகள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த வாரம் எங்களைத் தேடி எங்கள் துயிலும் இல்லங்களுக்கு நீங்கள் எல்லோரும் வருகின்றீர்கள். ஒளிக்கோலம் போட்டு எங்கள் கல்லறைகளில் கண்ணீர் உகுக்கின்றீர்கள். உங்கள் கண்ணீர் மண்ணில் கசிந்து எங்…

  8. Started by Thulasi_ca,

    எச்சரிக்கை துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம் துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம் அன்னையை அழிப்பினும் வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம் பள்ளிக்கு குண்டு போட்டினும் பதுங்கு குழியில்ப் படித்திடுவோம் பட்டினி நீர் போட்டினும் பசியுடனே படித்திடுவோம் குண்டு நீர் போட்டினும் குப்பி விளக்கில் படித்திடுவோம் புத்தகம் நீர் அனுப்பாவிடினும் நம் தமிழ்ப் பண்டிதரிடம் படித்திடுவோம் வெட்டுப் புள்ளி அதிகரிப்பினும் வீறுடனே படித்திடுவோம் வேலை வாய்ப்பு அளிக்கா விட்டால் வேளாண்மையுடன் பிழைத்திடுவோம் மலையே நீர் போட்டாலும் மாய்ந்து நாம் மடிய மாட்டோம் துளசி

    • 3 replies
    • 1.4k views
  9. சோற்றுக்கு வேண்டும் உலை சாப்பாட்டுக்கு வேண்டும் இலை உணவுண்பது ஒரு கலை காத்திருக்கிறது உனக்காக இலை இலையில் இருக்கின்றன இன்சுவைப்பதார்த்தங்கள் உலகினில் உயிர் வாழ உணவு முக்கயம் உணவு வேண்டுமெனும் உணர்வு முக்கியம் உணர்வென்பது உருவமற்றது உணவென்பது உருவமுள்ளது உருவமற்ற உணர்வின் தூண்டலால் உருவமுள்ள உணவையுண்டு உலகத்தில் உயிர் வாழ்வோழ்ம் இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன.

    • 7 replies
    • 1.4k views
  10. பாட நூலுக்காக செலவிட்ட... நேரத்தைவிட உனக்காக... முகநூலுக்காக செலவிட்ட .. நேரம் அதிகம் -இப்போ ..... கிழிந்த ஆடையின் நூல் .... விட்ட தவறை காட்டுகிறது ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் (மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )

    • 3 replies
    • 1.4k views
  11. கடல் சீறி எழுவது போல் நீயும் சீறிய் எழுந்துடு தமிழா.... தமிழ் இனத்தவரின் சீற்றத்தை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்கட்டும் நம்மை கண்டு சிங்கள வெறியர்கள்.. நாடு விட்டு நாடு செல்லட்டும் எழுந்து வா தமிழா..... களத்தில் போராடும் நம்ம சாகோதரர் சாகோதரிக்கு தோள் கொடுப்போம் எழுந்து வா தமிழா.... நம் இனத்தவரை அழிக்கும்... சிங்கள வெறியர்களை நாம் கூண்டோடு அழித்து நம் தழிழ் ஈழத்தை நாமே கட்டி எழுப்புவோம்.. நம் வீரத்தை கண்டு மகிந்த அரசு பயந்து நடுங்கி காடு காடாய் இரவோடு இராவாய் முட்டை முடிச்சுகளுடன் நாடு விட்டு நாடு செல்லட்டும் தமிழனின் வீரத்தை உலகம் எங்கும் பறை சாற்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று பெயர் கே…

  12. முதுமை என்பதோர் புதுமை முதுமை என்பதோர் புதுமை - அதை முழுதும் உணர்ந்தோர் யாரிங்கு? முதுமை தருவது அறிவாகும் - அதில் முழுமை பெறுவோர் சிலராவர் முதுமை என்பது எதுவரை - அதன் முடிவைச் சொல்பவர் யாருளர்? முதுமை தருவது நோயென்று - தினம் முடங்கிக் கிடத்தல் தகுமோ? இனிதே, தமிழரசி

  13. ஏனிந்தப் புன்னகை? கண்ணே என் கண்ணின் மணியே பொன்னே என் சின்னத் தமிழ்ப் பெண்ணே உன் புன்னகையின் எண்ணங்களை என்னால் புரிய முடியவில்லை... ஏனிந்தப் புன்னகை? யாரைப் பார்த்து தாய்நாட்டில் குண்டுகளின் மத்தியில் அன்னை பிச்சையெடுக்க ஐரோப்பாவில் மகன் இந்திய நடிகைக்கு பொன் நகை அணிவிக்கிறான். அதைக் கண்டா இப்புன்னகை? எண்ணமும் நினைவும் எம் மூச்சும் உதிரமும் உடலும் என்றும் எம் தமிழிற்கே என்று அரசியல் மேடையில் முழங்கியவர்கள் இங்கு - பெற்றபிள்ளையது தமிழை அறிந்திடுமோ அது தவறு என்று தடுப்பவர்களைப் பார்த்தா இப்புன்னகை? இன்னொரு எத்தியோப்பியா ஈழத்தில் உருவாகிக் கொண்டிருக்க இங்கே பக்தி வெள்ளம் பல கோடி பணம் செலவு செய்து …

  14. தலைவியை இழந்த வானம் போருக்குப் புதல்வர்களை தந்த தாயாக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட…

  15. அன்னியத்து சிங்களங்கள் அரியாசனம் ஏறி விட்டு எம் தமிழை அழிக்கின்ற இன்னலதை காணலயோ...??? வந்தேறு குடிகளென்று- பகை வாய் விட்டு சொல்லையிலே எங்களது தமிழ் நாடு ஏனென்று கேட்கலயே.... உண்மையதை கண்ட பின்னும் ஊமையாகி நிற்கையிலே தன் மானம் உள்ளயவன் தலை நிமிர்தி கேட்கையிலே... குற்ற வாளி யென்றவனை கூண்டிலேற்ற முனையலாமோ...?? சட்டங்கள் என்று வந்து சங்கடங்கள் கொட்டலாமோ....?? கதிரையது ஏறிவிட கட்சி மாறும் கூட்டங்களே மனு நீதி விற்று விட்டு மன்றிலேறி என்ன செயவீர்....?? கொல்லர்கள் ஆழ்கின்ற கோட்டையது போலும்...??- அங்கு தமிழர்கள் அழிகையிலே தம்பட்டம் அடிக்கின்றீர்.... ''பாரதத்தின் மந்திரிக்கு பாதையிலே அடித்தவனை தூக்கி வைத்து தாளாட…

    • 3 replies
    • 1.4k views
  16. பாதைக்கு பழக்கப்படாத பாதங்களாகவே பயணங்கள் தொடர்கிறது எதிர்படும் எல்லா முகங்களிலிருந்தும் எல்லோருக்குமான முகமொன்றை தேடியலைகிறேன் நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின் மூன்றுவேளை உணவிற்கான கனவுடன் மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது வசப்பட்டாக வேண்டிய வாழ்க்கையை வரவேற்க வாயிற் படியிலேயே வாழ பழகிக் கொள்கிறேன் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்குமான தோழமையின் வருகைமீதான நம்பிக்கையில் தனிமையை எதிர்கொள்ள தயாராகிறேன் நாளைய யன்னல்களில் உட்புகும் ஒளியில் எனது இருண்ட அறையெங்கும் வைகறையை நிரப்பி கொள்வேன் புத்தக பைகளை வீசி எறிந்துவிட்டு சுமைதூக்கிகளுக்கு அழகின் வானவில் வர்ணங்களை வரைய கற்றுத் தருவேன் விலைமாதொருவளின் ஒர்நாளின் ஒரிரவின்…

  17. 1991. 06.12 அன்று மகிழடித்தீவு கிராமம் இரண்டாவது படுகொலையை எதிர் கொண்டது. எரிகிறது வீரம் நிறைந்த மண் உருகிறது உயிர்கள் கருகிறது உறவுகள் ஓடுகிறார்கள் எம் மக்கள் கதறுகிறார்கள் வாலிபர்கள் பாதகர்கள் கையில் யுவதிகள் சிக்குண்டு தவிக்கிறார்கள். தஞ்சமடைந்தனர் ஞானமுத்து குமாரநாயகத்தின் அரிசி ஆலையிலே துப்பாக்கிக்கு இரையாகி வெந்த அனலில் கருகிப் போகியது எம் உறவுகள். தாயவள் முலைப்பால் ஊட்டிய நிலையிலே தான் பெற்றெடுத்த கைக்குழந்தையுடன் கறைபடிந்திருந்தாள் இறந்த உயிர்கள் ஓவியங்களாகவே இருந்தன. அன்றைய நாள் இருட்டானது எம்மூர் மக்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட உறவுகளை இழந்து நின்றோம் கைக்குழந்தையும் வயோதிபத்தையும் பார…

    • 1 reply
    • 1.4k views
  18. Started by இலக்கியன்,

    கண்கள் இருந்தும் குருடனாக.............. காது இருந்தும் செவிடனாக.......... கால்கள் இருந்தும் முடவனாக............. தலை இருந்தும் முண்டமாக........... உயிர் இருந்தும் ஜடமாக................ ஏனெனில்? ..... ஒரு அகதி http://elakkiyan.blogspot.com/2007_01_22_archive.html

  19. ''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' ''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' இரும்பு கரமதிலே இறுகி கிடந்தவனை அகிம்சை வாளெடுத்து எப்படி அறுத்து வந்தாய்...?? கம்பிச் சிறையினிலே கட்டுண்டு கிடந்தவனை தங்கு தடையின்றி எப்படி தப்பிக்க வைத்தாய்...?? தேதி குறித்தங்கு சாவு காத்திருக்க காலன் வர முன் எப்படி காத்து வந்தாய்..?? நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வியக்குதய்யா இத்தனை துணிவுணக்கு எப்படி வந்ததய்யா...?? ''நீதியின் முன்னாலே நிற்கின்ற நிதர்சனமே- உந்தன் பாதம் பணிந்தே யான் வணங்கி எழுகின்றேன்...'' ஈழ மைந்தனவன் இன்னுயிரை காத்தவரே காலம் புராவும் - உம்மை கையெடுத்து வணங்குகிறோம்... இதய மில்லாமல் இருக்கின்ற மனிதர் முன் மனிதத்த…

    • 3 replies
    • 1.4k views
  20. விட்டகுறை தொட்ட குறை..... நாடும் சொந்தமாயில்லை.. நாமும் நாமாயில்லை....... எங்கோ பிறந்தோம் எங்கோ வாழ்கிறோம்...... உடையாதா மனசு? ஈசல் இறப்பிற்கும் எல்லை .... இருக்குமாம் சொல்வார்........ ஈழத்தமிழன் எமக்கு??? நாடிழந்த பறவைக்கெலாம்.... ஒரு கூடு தந்தீர். சுய நலத்தில் ... பொது நலம் காணுமாம் உலகம்... மாறாய் உம் பொது நலத்தில்... நாம் சுய நலம் கொண்டோம்! எம் முகத்தை நாமறிய... எம் அறிவை நாம் அறிய...! விழுதுவிட்ட ஆலமரமே... குடை தந்தாய் ....! பழங்களை தின்றுவிட்டு ... எச்சம் போட்டாலும்... தாயென தாங்கி நிற்பாய்.... ஆதலால்.......... உம் உடலில்... ஓடி மகிழும் ஒரு அணிலாய்... என்றும் வாழ...... விரும்புகிறே…

  21. அவளும் அலரி மாளிகை விருந்தும்...! -எஸ்.ஹமீத்- பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை சுதந்திரப் பசியெழுந்தது பெரிதாய்...! ***** அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் ஆயுதங்களுடன் உறவாடி- ஆவேசத்துடன் போராடி- இரத்தத்தில் நீராடி- எதிரிகளைப் பந்தாடி ஈற்றில்... இலட்சியக் கோட்டை இடிந்துவிழ- தோற்றுத் துவண்டு சரணடைந்து- இன்றோர் மொட்டைத் திரியாய்- பட்ட கொடியாய் கெட்ட குடியாய்- ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு...! ***** சீராட்டி வளர்த்த சின்னக்கா, சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த சினேகிதிகள், அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார் அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள் இன்னும்... உற்றார் உறவினர் ஊராரென அத்தனை பேரும் விட…

  22. என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... புலர்ந்த பின் உன்னை கண்டு பசுமையை சுவாசித்து உயிர் வந்தது... வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க, விடியல் காற்று அறைந்தது... மேலும் வாழ ஓர் ஆசை, -பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண-- நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ---- .. நீ எனக்கு மட்டும் சொந்தம் .... .உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து செல்லமே! ... "உயிரே, அன்பே பொங்கிப் பாயும் நதியே, நீ கரைந்து-மோதி நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க வண்ண ஓவியமாய்,வந்து......... என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா..... இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

    • 1 reply
    • 1.4k views
  23. இதை அனுப்பி வைத்தவர் ஹரி. http://aycu19.webshots.com/image/18378/2002280218213

    • 3 replies
    • 1.4k views
  24. என்ன மாயம் நீ செய்தாய் யாழ்களமே என்ன மாயம் நீ செய்தாய் நீ கட்டிளம் காளையா கன்னிப் பெண்ணா தமிழைத் தாயென்று போற்றுதனால் உனையும் நான் பெண் என்பேன் அழகிய பெண்ணே நீ இத்தனைநாள் என்முன்னே உன் முகம் காட்டாது எங்கே மறைந்திருந்தாய். இரவு பகலென்று ஊனுறக்கம் இல்லாது கன்னியரும் காளையரும் உனைச்சுற்றி நிற்கின்றார் உற்சாகம் தரு மருந்தாய் உன்னை உணர்வதனால் உலகெங்கும் உள்ளோரை ஒன்று கூட்டி ஊர்ப்புதினம் அத்தனையும் உணர்வோடு சொல்லி ஆக்கம் தருவோரை அரவணைத்தும் நிற்கின்றாய் திண்ணையிற் கூடி திகட்டும்வரை நாம் பேச தடையொன்றும் சொல்லாத தாராள மனதோடு தொண்டுதான் செய்கின்றாய் தொடர்ந்தெமக்கு உன்னை அறிந்ததனால் உன்னோடு இருப்பதனால் உலகில் பிறந்திட என…

  25. விரல்கள் .. வேண்டும் எண்ணங்களின் வலி என்னை எழுத வைக்கிறது நண்பர்களே .. எழுதுகோல் என் கையில்; ! எழுது .. எழுது என்ற ஏக்கமேயன்றி எதுகை மோனை. பாடுபொருள்….. பக்குவம் எல்லாம் தொலைந்து விட்டது .. நான் பிறந்த நாடு எனக்கில்லை .. என்றார் ! நான் பிறந்த மண்ணை தமதென்றும் சொன்னார் ! தட்டிக் கேட்ட தமிழரை யெல்லாம் சுட்டுக் கொன்றார் .. விடுபட்டுப் போன சிலரை பூசா முகாமில் பூட்டியே வைத்தார் .. தப்பியோடிய தமிழர்க்கு தந்ததே உலகம்.. அகதி எனும் நாமம் பல ஆயிரம் கண்கள் சிந்திய கண்ணீர் சில ஆயிரம் இதயத்தைக் கூட கரைக்கலையே ! பல ஆயிரம் உடல்கள் சிந்திய இரத்தம் சில ஆயிரம் உள்ள…

    • 8 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.