Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காலம் இன்னும் கொஞ்சக்காலம் ........ . கதை முடியும் ...ஒரு நாள் மதி கெட்ட கயவர் கூட்டம் ஒன்று புத்தி பேதலித்து கதை பல கூறும் விதி என்று ஓர் இனம் ,கேட்டு, கலங்கி கை கொட்டி சிரிக்கும் போது..... இடி ஒன்று முழங்கும் ,கதி கலங்கி விழி பிதுங்கி , சில பெரிய தலை நோக்கி ஓடும் தலை சொல்லும் வழி ,இனி பலிக்காது புலிபசித்தாலும் ,புல்லை நாடாது ,ஒரு வேளை..........

    • 3 replies
    • 1.5k views
  2. திருதக்க தேவர் சீவகசிந்தாமணியில் வடிவமைத்த அழகிய கதை. ஒரு செல்வன் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பொருள் ஈட்டி தங்க உருண்டையாக மாற்றி இல்லத்தில் வைத்திருக்கிறான். அவனுடைய துணைவிக்கும் அது தெரியும். கணவன் செய்யப் போகும் அறத்திற்க்கு அவளும் சம்மதித்தாள். அடுத்த ஆண்டு செய்வோம், அடுத்த ஆண்டு செய்வோம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தான். ஒரு நாள் அவனுக்கு வாத நோய் வந்தது. கையும் காளும், நாவும் செயலற்று போயின. ஊர் பெரியவர்களை அழைத்து வருமாறு மனைவிக்கு சாடை காட்டினான். மரணத்தின் விளிம்பிற்க்குச் சென்று விட்டதை உணர்ந்து விட்டான். இனியும் ஒத்திப்போட முடியாது. ஊர் பெரியவர்கள் சூழ்ந்திருக்க மனைவியிடம் தங் உருண்டையை கொண்டு வா என்று சாடை காட்டினான். மனைவியை தவிர ம…

  3. மூவேந்தர் அரியணையில் முந்து தமிழ் கலையரங்கே நாவேந்தர் மடி தவிழ்ந்த நானிலத்து திருமகளே பாவேந்தர் குலமகளே பாரதியின் பைந்தமிழே தாய் தவழ்ந்த மண்ணே என் சரித்திரத்தின் பொன்நாடே தூயதமிழ் அனங்கின் துயர்துடைக்க காவியமாய் போய்விட்ட மாவீரர் குருதிச் சுவட்டில் நாளை விடியலுக்காய் நம் இளைஞர் வேள்விக்கணைத் தொடுப்பார் இன்று ஈழத்தின் வரலாற்றில் மாதலைவன் வழியினிலே திரண்டெழுந்து ஆக்கி வைப்போம் தமிழீழமே தாய் கொதித்தாள் தமிழ் அழுதது தமிழர் நெஞ்சிலே உரம் பிறந்தது பேய் சிரித்தது பிணம் விழுந்தது பிஞ்சு நெஞ்சிலே தீ எழுந்தது வேர் அறுத்தொரு பகை முடித்திட வேள்விக்கணை தொடந்தது பலகோடித் தமிழர்கள் உயிர் வாழினும் பாராள அவர்க்கு நாடில்லையே இன் நிலை போக்க ஈழத்தில் புலியானார் நம் …

  4. பிரிவில் வறளும் காதலர்போல் விழுந்து கரைந்த சருகுகளைக் காணாது தனித்துக்கிடக்கும் மரத்தடி அவள் உதட்டின் முறுவல் போல் அரும்பும் குருத்துகள் காலத்தைக் காதலித்து பொழுதோடு காமுற தாவணி மறைவில் ஓரக்கண்ணால் உசுப்பிவிடும் அவள் பார்வை போல் வசந்த கால வாசல் கதவுகள் மெல்லத் திறக்கின்றது இத்தனைகாலம் சூட்டின் இதத்துக்காய் போர்த்திய அங்கிகள் புணர்வின் தேவைபோல் ஒவ்வொன்றாய் கழன்று விழ அமைதியான அவள் முதல் முத்தச் சம்மதம்போல் பொழுதின் வெண்ணொளி மேனியை சிலிர்ப்பூட்ட முதல் அணைப்பின் பட படப்பில் இரவும் பகலாக்கும் ஏக்கம்போல் மெல்ல மெல்ல பொழுது ஓளியில் கரைய காமத்தில் கரையும் ஊடலைப்போல் சிலகாலம் ப…

  5. உன்னை கேட்காமல் உன்னைபற்றி நிறையவே கனவுகள் கண்டுவிட்டேன் நீ எனக்காக படைக்க பட்டவன் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்.. சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய் மறக்க முடியவில்லை அந்த நாட்களை மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா? காலம் பதில் சொல்லும்... கனவுகள் வெறும் கனவுகளாகவே.. போதுமடா நம் உறவு.. வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு உன்னுடன் பேசும்போதெல்லாம் உன்னை தொலைத்த வேதனையில் நான் வாட தயாராய் இல்லை.. சோகத்தை தணிக்க , எனக்கு ஏதும் வழி தெரியவில்லை கண்ணீரை தவிர... பாவியடா நான்... எப்படி தனிமையில் அவற்றை தணிப்பேன் உன்னை மறந்து விட்டதாக நண்பர்களிடம் கூறினாலும் உன்னை பிரி…

    • 15 replies
    • 8.3k views
  6. Started by colomban,

    சுஐப் எம். காசிம்- ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும் தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும் "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவெழுந்து கண்கள் குளமாகிவிடும் ஓர் புலத்தில் தான் வாழ்ந்…

    • 0 replies
    • 682 views
  7. காலாறத்துடிக்கும் மீட்பர்களும்...கண்டுகொள்ளாத மந்தைகளும்.... காலையும் மாலையுமாய்க் கனவுபோல முடிந்துபோன நாட்களில் முடிவின்றிப் பயணித்தன விடுதலைக்காய் அவர்கள் கால்கள் சுதந்திரத்திற்கான கனவுகளைச் சுமந்துகொண்டு எப்போதும் நிழலைப்போலக் கூடவே தூப்பாக்கிகளைச் சுமந்தன அவர்கள் தோள்கள் மாதங்களையும் ஆண்டுகளையும் மறந்துவிட்டு வயதுகளைத் தியாகம் செய்தவாறு போர்க்களத்தில் கரைந்துபோயின அவர்கள் வாழ்க்கை எல்லாச் சிலுவைகளையும் எங்களுக்காய்ச் சுமந்துவர்கள் இன்று ஆயிரம் ஆயிரம் இயேசுநாதர்களாய் அறையப்படுகின்றனர் தடுப்புமுகாம்களில் கனவுகளையும் இளமையையும் தொலைத்தவர்கள் காலநதியின் நீள ஓட்டத்தில் …

  8. காலில் போட்டு உழக்கு.... வடக்கு கிழக்கு பிணைப்பு இனி என்ன பிரிப்பு....??? தமிழர்களின் பரப்பு அதை பகையேன் இன்று பறிப்பு....??? நீதி மன்ற தீர்ப்பு நீதியற்ற உரைப்பு.... வாய்மையற்ற வழக்கு காலில் போட்டு உழக்கு.... உதயம் வரும் கிழக்கு ஒளி எறிவதந்த வடக்கு.... இன்று போயு எதற்கு பிரிக்க அதற்கு வழக்கு....??? இது யாரு பார்த்த கணக்கு...??? இருக்குது தப்பு கணக்கு.... மாத்திப் போடு கணக்கு வடக்கு கிழக்கு நமக்கு..... நீதி மன்ற தீர்ப்பு நீதியற்ற கணக்கு.... அதை காலில் போட்டு உழக்கு....!!! வன்னி மைந்தன் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :…

  9. காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் நொந்து போன நாட்களைத் தனது சின்னஞ்சிறு தோள்களில் சுமந்தலைந்த சிறுமி காலுடைந்த ஆட்டுக்குட்டியைக் கீழிறக்கி வைத்துவிட்டு மண்தெருவில் சிந்திக் கிடக்கும் நெல் மணிகளைக் குடிசைக்குள் காவிச் சென்றிட நினைக்கிறாள் முன்பெனில் வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து அவளது பிஞ்சுக் குரலெட்டாத் தொலைவு வரை திரிந்து உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும் அம்மாவுக்காகக் காத்திருப்பாள். அம்மா திரும்பி வரும் வேளை ஒரு முயல் குட்டியை ஒரு செம்மறியாட்டு மந்தையை ஒரு அபூர்வப் பறவையை விழிகளால் துரத்தியவாறு மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே அலைந்து கொண்டிருப்பாள் அல்லது நாரைக் கூட்டங்களுக்குக் கையசைத்து விடைகொடுத்தவாறு அவை சென்று …

  10. காலைக் கதிரவனின் கனலற்ற கதிர்கள் குளித்தென்னை மகிழென்று கூவி அழைக்கின்றன இதமான சூடற்ற காலை வெயில் எந்திர மனதுக்குப் புத்துணர்ச்சி தருகிறது இரவின் குளிர்மையில் குளித்த மரங்கள் பசுமையும் அழகு கூட்ட பார்க்கும் இடமெங்கும் பரவசம் தருகின்றன குலை தள்ளிக் குனிந்து நிற்கும் வாழை கூம்பான இதழ் கழற்றிக் கொள்ளைச் சிரிப்புடனே நிலம் பார்க்க நிற்கிறது வாசனைப் பூக்களெல்லாம் வாடியவை காற்றில் கழித்து வசதியாய்ப் பார்த்தபடி வகைக்கொன்றாய் இருக்கின்றன வேர்விட்ட நீரல்லி கதிரவனின் வரவில் கண்மலர்ந்து மடல்கள் விரித்தே கதிரவன் கண்பார்க்க காதலுடன் நிற்கின்றாள் கடமை என் காட்சிகள் கலைக்க கவிந்த மனம் கட்டறுத்து வீழ கண்மூடிக் காட்சிகளைக் கைது செய்தபடி காலத்தின் கணக்கில் கரைந்த…

  11. காலை புலர்ந்தது காலை புலர்ந்தது- பா.உதயன் காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கதிரவன் எழுந்தான் கனவுகள் உயிர்த்தது பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த தாயினை எண்ணுக மனமே எண்ணுக எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா இன்னும் துயிலுவியோ இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக பொங்குக ஆலய மணிகள் அன்பினை ஒலிக்க ஆயிரம் பறவைகள் கூடியே பாடின அழகிய குயில்கள் கூவி இசைத்தன கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் …

  12. காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... ..... செல்லமே விடிய விடிய கண்விழித்து உன் காதலை சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன் நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி எனச்சொல்லிச் சென்ற நாளை உனக்கு பிடித்த என் - புன்னகையுடன் நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும், காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச..... காதல் தரும் இன்பதையும் ஆசை நினையுகளையும் ...... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

    • 6 replies
    • 1.7k views
  13. ஊரடங்கு தளர்த்தப்படும் அப்பா படலையை எட்டிப் பார்பார் தெருநாய்கள் குரைக்கும் படலையை திறக்கப் போன அப்பா திரும்பி வருவார் வீதி சுத்தம் செய்யும் படைச் சிப்பாய்கள் வருவார்கள் நாய்கள் அலரி அடித்து ஓடி வரும்....

  14. காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று-பா.உதயன் 🌺 காலைப் பொழுதொன்றில் கூவும் குயிலொன்று யாரை அழைக்கிறது ஒரு கீதம் கேட்கிறது வானம் திறந்திங்கு மழைகள் பொழிந்திங்கு பூக்கள் மலர்கின்றதே பூமி வாசல் திறக்கின்றதே காலைக் கனவொன்று என் வாசல் வரை வந்து காதில் ஏதோ சொல்கிறது ஒரு கவிதை பிறக்கிறது யாழில் சுரம் ஒன்று தானாய் வந்திங்கு காதில் விழுகின்றது கல்யாணி ராகம் இசைக்கின்றது கடலும் நதியும் ஏதோ காதல் கதை பேசி வந்து கரையில் தவழ்கின்றது காலம் மெல்ல விடிகின்றது பாடும் பறவை எல்லாம் வானில் பறந்து அங்கு வாழ்வை வரைகின்றது வசந்தம் தெரிகின்றது வானம் திறக்கையிலே காலைப் பறவை வந்து பாடி ஏதோ சொல்லி நான் தொலைத்த கவிதை ஒன்றை கையில் தந்து போகின்றது…

    • 0 replies
    • 378 views
  15. நன்றாகவே தலையாட்ட பழகிக்கொண்டு விட்டனர் அல்லது, பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர். எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன எங்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாதவையல்ல தீர்க்கப்பட விரும்பாதவை. இன்றைய கால முதற்பிரச்சனை தலையாட்டல், எந்தப்பக்கம் எந்தக்கணத்தில் எதற்காக தலையாட்டுகிறார்கள் என்பதை எந்தப்பக்கம் இந்தக்கணத்தில் அந்த தலையாட்டாலால் பிழைத்துப்போகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முயன்று தோற்றுப்போவதில் ஆரம்பிக்கிறது இன்றைய பிரச்சனை. எங்களது பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை தலையாட்டுபவர்களுக்கு. எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன.... நீர் நிலம் வளம் என ஒவ்வொன்றிலும், இனம் மொழி பரம்பல் என ஒவ்வொன்றிலும், கொடூரமாக கொல்லப்பட…

  16. ஆதவன் தேரிலே அரியணை ஏறியே அகிலம் ஒளிரவே அக்கினி சுரந்தனன் பகலவன் செங்கதிர் பங்கயம் தீண்டவே பனிபட்ட இதழது பகலாய் முகிழ்ந்தது களிறின் பிளிறல் சங்காக முழங்கிட செவிகள் இரண்டும் சாமரரை வீசவே துதிக்கையால் துதித்தது தூயவன் ஞாயிறை இளம் குளிர் காற்று இதயத்தை நனைக்க இன்பம் பொங்கிட இனிமையாய் புலர்ந்தது காக்கையின் கரைதலும் குயிலின் பாடலும் மஞ்ஞையின் அகவலும் காதில் ஒலித்திட கரைந்தது இருள் மலர்ந்தது பகல்

  17. கட்டிளம் காளை இது... தலைக்கனம் இருந்தது நேற்று வரை..!! கண்கள் செய்த சதியால் சித்தம் குழம்பிய காளை.. காலை ஒன்றில் சுபமுகூர்த்த வேளையொன்றில் கறவை ஒன்றின் கழுத்தில் ஏற்றியது நாண்.!! அடுத்த நொடியே காளையது... நான் எனும்.. திமிரிழந்தது. அடுத்த மணியில் காளை எனும் உணர்விழந்தது. அடுத்த நாளில் அடிமாடாய் போனது அதன் நிலை..! காலக் கழிவினில் அடிமாடு நிலையும் கழிய பூம்பூம் மாடாக.. கூடிப் பெருத்த கறவைக் கூட்டம் கூட்டமாகிப் பெருகி நின்று துரத்துது..!! தனித்துவிட்ட நேற்றைய காளை.. கிழடாகி தோலுக்கும் தசைக்கும் பெறுமதியற்று சுடலை ஏகுது..! இதுவே கலியுகத்தில் காளைகளாய் திமிரெடுத்த உயிர்களின் வாழ்க்கை எனும் வட்டமாகும்..!!! வேண்டுமா எனியும் இந்த நிலை.. புதிதாய் ஓர் விதி செய்…

    • 33 replies
    • 2.8k views
  18. [யாழ் உறவுகளின் உள்ள உணர்வுகளுக்கு அதி கூடிய மதிப்பளிக்கும் வகையிலும் மனச் சங்கடங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் படம் நீக்கப்பட்டுள்ளது.] பாலன் பிறக்கிறான் சேதி கேட்டு.. வேட்டை ஆரம்பம் கொலைகளின் நடுவே இரத்த ஆற்றில்.. அவன் வாழ்வு..! அற்புதங்கள் செய்கிறான் ஏழை மக்களை கவர்கிறான் சண்டாளர்களின் சாவில் இருந்து.. மக்களை காக்க சொற் கருவி ஏந்துகிறான்..! ஆட்சியாளர்களின் கர்வமும் கோபமும் பொங்க.. முட்கிரீடம் தரித்து சிலுவையில் உலோகங்களால் குத்தப்பட்டு மரிக்கிறான். அங்கும் மனித உரிமை மீறல்கள் நீதி விசாரணை இன்றி.. 2012 ஆண்டுகள்..! இவன் 1950 களில் பிறக்கிறான் காலத்தின் கோலமாய் சாதாரணமாய் வளர்கிறான். சிங்களப் பேரின அரக்கர்…

  19. காவல் தெய்வங்களே சாவை தழுவி சந்தண மாலை சூடியோரே இமைக்கும் பொழுதினில் எரிமலையாய் வெடித்தீரோ ஈழத்தின் விடியலிற்காய் எமக்காய் எரிந்தீரோ எங்கே சென்று மறைந்தீரோ கடலில் கரைந்தீரோ களத்தில் எரிந்தீரோ விண்ணேறி விடியல் தேடி சென்றீரோ கண் முன்னே வாரும் கனவு தேசம் நாளை கைகொட்டி மகிழ்வோம் கனவு சுமந்து களம் வென்றவரே கடலெல்லை காத்து மீண்டவரே எங்கே சென்றீரோ எப்போது வருவீரோ விழியில் ஓளி ஏற்றி உம் விரல் தொடுகைக்காய் விரதம் இருக்கின்றோம் எம் ஈழத்தின் அரசிற்காய் உம் இதயத்தில் இடம் தந்தீரோ தாயை காப்பதற்காய் தவிப்பெல்லாம் எமக்களித்தீரோ புலியாகி சென்றீரே எம் புகழதை வென்றீரோ வெற்றிக் கிண்ணம் நம்கையில் கொட்டி மகிழ்வோம் ஒடி வாரு…

    • 1 reply
    • 781 views
  20. காவல் தேவதை மாலதி. வீரம் தந்தவள் விடுதலைப் பயணத்தின் வீரியம் சொன்னவள் எங்களில் ஓர்மத்தை விதைத்த எழுச்சியின் குறியீடு எழுதிய வரலாறு மாலதி. சுதந்திரப் பொருளுரைத்துப் பெண்ணின் பெருமையை பேறாக்கிய பெருமை பெரும் பேறாய் எம்மினத்தில் பிறந்த பெருந்தீ. கோப்பாய் வெளிக்காற்று ஈரம் சுமக்கும் இன்றுமுன் வீரம் கண்ணகை தெய்வமாய் அங்கெல்லாம் மாலதி காவல் தேவதையாய்....! காலநதி உன் கலையா நினைவோடு கரைகிறது தோழி மாலதியென்றெம் மனங்களில் மூட்டிய தீயின் அடையாளம் மாலதி படையணியாய்....! 10.10.2002 (11வருடங்கள் முதல் எழுதிய கவிதை அல்லது அந்த நேரத்து உணர்வு. மீளும் நினைவாய் ) http://mullaimann.blogspot.de/2013/10/blog-post_10.html

    • 13 replies
    • 3.8k views
  21. காவியக் கவிஞ்ஞன் நான் என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது.. என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப் போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது.. என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம் அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது எஞ்சியவர்களை அகதியாக்கியது.. மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்.. இன்று???????? அவன் அவதாரம் எடுப்பான் என் வயிற்றுப் பிழைப்பு நடக்க அவன் வருவான்.. வரவேண்டும் .!! சூரியத்தேவனாய் சுடர் விட்டழிக்க அவன் வரவேண்டும்...!!!

    • 54 replies
    • 6.5k views
  22. <span style='font-size:30pt;line-height:100%'>காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது விட்டால்.. திசை மாறிப் போகுமென்றாய்! திரு மடலினைத் தூது விட்டால்.. அந்தரெக்ஸைக் காவுமென்றாய்! தொலைபேசித் தூ…

  23. வீரக்காய் ஆயயிலே வீழாத வீரம் பேசி என்னையும் ஆய்ந்தவனே நாவல் காய் ஆயயிலே நல்ல நண்பி நீ எனக்கு என நா பிறழாது உரைத்தவனே! காரை முள் குத்தி கடுப்பில் நான் அழுது துடிக்கையிலே உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல் உருகி அழுதவனே! கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே காதோரம் வந்து சொன்னேன், பேதை என் மனதில் காதல் பூத்ததென்று. பூ போன்ற மென்மையான உன் மனதோ பூகம்பம் நிகழ்ததை போல ஈச்சம் பழம் ஆயயிலே இரும்பைப்போல் உரத்துச் சொன்னது. ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில் ஒருத்திக்கும் இடமில்லை என்று. இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப களமாடி நின்றாய். ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டு…

  24. குண்டுமல்லி தோட்டத்திலே குவிந்திருக்கும் மல்லிகையே - உன் கூட்டாளி நானிருக்கேன் குவளைமலரே கண்ணுறங்கு!! கைகொட்டி சிரித்திருக்கும் பட்டுமேனி பெட்டகமே யார் கண்ணும் படுவதற்குள் காந்தள்மலரே கண்ணுறங்கு!! ஈசானி மூலையிலே உலையங்கே கொதிக்குதம்மா போயி நானும் பார்த்துவரேன் பூந்தளிரே கண்ணுறங்கு!! பசும்பால் வாங்கிடவே பணமிங்கே போதலியே உலைத்தண்ணி ஊத்திவாறேன் மாந்தளிரே கண்ணுறங்கு!! கட்டுமரக் கப்பலோட்டி கடலுக்கு போன அப்பா பொழுதடைய வந்திடுவார் பூச்சரமே கண்ணுறங்கு!! அயரை மீனும் ஆரமீனும் அள்ளிக்கொண்டு வருவாரடி அதுவரைக்கும் பொறுத்திருக்க ஆரவல்லி கண்ணுறங்கு!! வாளைமீனும் வழலை மீனும் வலைபோட்டு பிடித்தமீனும் வட்டியிலே போட்டுத்தாற…

  25. காஸா நகர் குழந்தைகள் குழந்தைகள் அஞ்சிப் பதுங்கியிருக்கும் நகரில் பிறக்கப்போகும் இன்னொரு குழந்தைக்காய் எப்படிக் காத்திருப்பது? ஒவ்வொரு இஸ்ரேலியப் படையினனும் துரத்திக் கொண்டிருக்கிறான் ஒரு பாலஸ்தீனக் குழந்தையை அவர்கள் ஏன் குழந்தைகள்மீது குண்டுகளை வீசுகிறார்கள்? தமது துப்பாக்கிகளை ஏன் குழந்தைகளுக்கு எதிராய் திருப்புகிறார்கள்? ஒவ்வொரு பாலஸ்தீனரின் கைகளிலும் ஒரு குழந்தையின் பிணம் குழந்தைகளற்ற குழந்தைகள் பதுங்கியிருக்கும் ஓர் நகரை எப்படி அழைப்பது? ஓர் ஈழக் குழந்தையை கருவில் கரைத்துக் கொல்லும்போது பாலஸ்தீனக் குழந்தை ஒன்றை குண்டுகள் தின்று போட்டிருக்கின்றன குழந்தைகளைக் கொல்பவர்களின் நோக்கம் என்னவாய் இருக்கும்? http://globaltamilnews.net/GTMNEditorial/tab…

    • 5 replies
    • 835 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.