கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
லண்டன் வீதியிலே மின் விளக்குகளில் அவள் அழகு வதனம் பள பளக்கிறது.. காதுத் தூக்கங்கள் மின்னி மிளிர்கின்றன.. நட்ட நடு நிசியில் தவிப்புடன் அவள்.. முகமெங்கும் ஏக்க ரேகைகள்.. நகப்பூச்சுக்களால் அழகு பெற்ற கைவிரல்கள் தொடுகை அலைபேசியை நோண்டியபடி.. எதற்கோ அவசரப்படுகிறாள் பாவம் என்று இரங்குகிறது இந்தப் பாவி மனம்..! அடுத்த சில வினாடிகளில்.. பறந்து வருகிறது ஒரு பி எம் டபிள்யு.. சாலை ஓரம் அவள் பாதத்தின் அருகே அமைதியாகி நிற்கிறது.. நாலு வார்த்தையில் பேரம் முடிகிறது.. எட்டிப் பாய்த்தே காரில் ஏறிப் பறக்கிறாள்.. பாவம் என்று ஏங்கிய மனம் இப்போ கொஞ்சம் பதறுகிறது... அடுத்த சில வினாடிகளில்.. சைரன் ஒலிக்க ஓடுகின்றன பொலிஸ்கார்கள்.. விரட்டிச் சென்று விராண்டிப் ப…
-
- 7 replies
- 927 views
-
-
காலை பூந்தென்றல் ௭ன் மீது வீச... ..... செல்லமே விடிய விடிய கண்விழித்து உன் காதலை சிரித்தபடியே நினைத்து பார்க்கிறேன் நானும் நல்லா யோசித்து விட்டேன் - சாரி எனச்சொல்லிச் சென்ற நாளை உனக்கு பிடித்த என் - புன்னகையுடன் நினைத்துபார்க்கிறேன் எப்போதேனும், காலை பூந்தென்றல் எ ௭ன் மீது வீச..... காதல் தரும் இன்பதையும் ஆசை நினையுகளையும் ...... விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 6 replies
- 1.7k views
-
-
அண்ணனின் அருகமரும் அதிகாரம் உடையவரே சிங்களத்தை சிதறடித்த சூறாவளியே சுற்றும் பூமிக்கும் சுழலும் காற்றுக்கும் பேசக்கற்றுக்கெடுத்த ஆசானே பார் முழுதும் புலிக்கொடி பறக்க தேசமெங்கும் தமிழர் குரல் ஒலிக்க தண்ணீரில் வந்து தாயகம் தொட்ட தனையனே என் களதில் சிங்களம் எம் குரல்வளை நசுக்கி சூதுரைத்து நிண்றபோது உன்மைய்காய் ஒலித்தகுரலே பாலா அண்ணா திரைகடலோடியும் தமிழீழம் காண்போம் எண்றுரைத்த தமிழே கொடிய நோய் வந்து தேகத்தை வாட்டினாலும் வேகத்தைக்குறைக்காமல் கொடிது கொடிது மண்டியிடும் தமிழன் வாழ்வெண்ற வரிப்புலியே வெள்ளைத்தலைகளுக்குள் சரியாசனம் பெற்ற தளபதியே பாலா அண்ணா வஞ்சகரெல்லாம் வாழ்வாங்கு வாழ ஆழப்பிறந்த அண்ணன் தளபதியே கொடிய புற்றுநோயுங்களை காவு கொள்வதா …
-
- 0 replies
- 744 views
-
-
நிறைவேறா ஆசைகள் ஆயிரம் கோடி ஆசைகள் என் நெஞ்சினில்...இருக்கிறது அன்னை கனவு நிறைவேறனும் அண்ணன் பொறுபானவன் ஆகனும் அக்கா என்றும் ஆனந்தமாய் இருக்கனும் தம்பி அவன் சுமைகள் குறையனும் தங்கை அவள் எதிர்காலம் சிறக்கனும் என்னவன் என்னக்கானவனாய் ஆகனும் என்னை நம்பி நட்பு வைக்கும் உறவுகள் வாழ் நாளில் என்றும் பிரியாது இருக்கனும் அலைகடல் கடந்து சென்றாலும் உறவுகளுடன் என்றும் குறையாமல் அன்பாய் இருக்கனும் கையில் இருக்கும் அன்பான நட்புகள் என்றுமே சுயநலமில்லாது இருக்கனும் எந்த எதிர்பார்புகளும் இல்லாது என் துன்பங்களில் என்னவர்கள் பங்கு கொள்ளனும் இப்படி எத்தினை எத்தினையோ ஆசைகள் எல்லாமே என்றும் நிறைவேறா ஆசைகள்
-
- 1 reply
- 1k views
-
-
மூத்த தளபதியே எங்கள் முதல்வனே உன்னை தேடி எங்கள் தேசம் அலைந்தது.... எங்கே நீ என்று ஏங்கி தவித்தது... காலம் கடந்தொரு சேதி வந்தது வீரனாகியே நீ வீழந்தாய் என்றது.... அடியென நெஞ்சில் இடியொன்று வீழ்ந்தது உன்னையிழந்தெம் தேசம் தவித்தது... கண்கள் சிவந்து குளமாய் நிறைந்தது அழுதோம் துடித்தோம் ஆற்றுவாரின்றி தவித்தோம்... வீரனே எங்கள் விடுதலையின் ஊற்றே கண்ணி வெடி நாயகனே உன்னையா நாமிழந்தோம்....??? நம்ப முடியலயே.... மரண படுக்கையிலே மரனமாய் கிடைக்கையிலே மா பாவிகள் உன்னை கடத்தி போயினரோ....??? எங்களின் வேங்கையர் எத்தனை நீ காத்தாய் எம்மால் இயலலயே உனை காக்க முடியலயே... உளவு எடுக்க உன் உயிர் வதைத்த…
-
- 1 reply
- 895 views
-
-
நீண்ட பெரு மரங்களிலும் தரவைப் பனைகளிலும் மோதி அவிழ்கிறது கார்த்திகைக் காற்று, பெருநிலமெங்கும் நனைந்துபோக குளிர்ந்து கருக்கூடிக் கவிழ்கிறது கார்த்திகை வானம், எண்திசைகளாலும் சூழ்ந்து பெருகும் இருளை ஊடுருவுகிறது கார்த்திகை நட்சத்திரங்கள், வைகறைப் பொழுதின் வாசலில் சூரியதேவனின் தீண்டலோடு முகிழ்க்கின்றன கார்த்திகை மலர்கள், வாழ்த்துக்கூறி ஒவ்வொருவரையும் கடக்கிறது கூட்டமாக, கார்த்திகைப் பறவைகள். தீவிழுந்த நிலத்தின் பெருந்துயர் சுமந்து மெல்ல எழுகிறது பாடல், கல்லறைகள் மீதேறி மண்மேடுகள் தீண்டி கரைந்தநீர் வெளிகள் தழுவி எங்கும் பரவுகிறது பாடல், கேளுங்கள், இது கார்த்திகைப் பாடல். உங்களின் உறவுகளின் பாடல். வேரோடி மண்ணில் நிறைந்துபோன வேழங்களின் பாடல். …
-
- 6 replies
- 639 views
-
-
மகாவலி – தீபச்செல்வன்… உடலெங்கும் சிங்கக் கோடுகளில் இராட்சத பாம்புபோல காவி நிறத்துடன் நுழையுமொரு நதி மென்று விழுங்கியது என் காடுகளை நதியின் பெயரால் துடைக்கப்படும் தேசத்தில் முளைத்துச் சடைக்கின்றன களை வீடுகள் தெற்கிலிருந்து பண்டாவையும் புத்தனையும் யுத்த டாங்கிகளையும் அள்ளி வரும் நதி எம் தலைநகரிலிருந்து ஒரு வார்த்தையேனும் எடுத்துச் சென்றதில்லை எம்மீது நதியின் ஒரு துளியும் பட்டதில்லை பீரங்கியிலிருந்து பாயும் குண்டுகளைப் போன்ற பேரலையின் எதிரே சிவந்த கண்களுடனிருக்கும் மாவிலாறு போலொரு சிறுவனும் முகம் மறைக்கப்பட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
என் காதலுக்கு உயிரோட்டம் தந்தவளே ஒற்றை வார்த்தைச் சொல்லில் கட்டிப் போட்ட வித்தகியே... இந்த நாளில் உன் வாய் திறந்து நீ உரைத்த தித்திக்கும் செந்தமிழே இன்னும் என் செவியில் உன் நினைவுகளை மீட்டும் தாரகை மந்திரமாய்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியிலும் என் சிறந்த தோழியாய் நீ.... நீ என் இனிப்புப் பெட்டகம் அன்பான வார்த்தைகளின் சொந்தக்காரி கண்களில் வைரக்கல் பதித்த காதல் ஓவியம் நீ உன் செவ்விதழ் என்ற காதல் ரோஜாவால் என் இதயத்தில் பூச்செண்டு முடித்து வைத்தாய். உன் மென் விரல்கள் என்னைத் தொடும் போதெல்லாம் என் இதயம் மெ…
-
- 1 reply
- 712 views
-
-
மாட்டுப்பொங்கல் வாய்க்கு ஒழுங்கா தீனி போடலை என்றாலும் வாய் நிறையா அம்மா என்று அழைக்கிறேனே உழைச்சு உழைச்சு ஓடா தேய்ஞ்சேனே எலும்பும் தோலுமா நிக்கிறேனே வருஷம் பூராவும் உழைக்கிற எனக்கு பொங்கலுக்கு மட்டும் என்னை கவனிச்சா போதுமா கதறி கதறி கண்ணிர் விடுற இந்த ஐந்தறிவுள்ள வாயில்லா ஜீவனை ஆறறிவுள்ள மனிதன் வருடம் பூரா கவனிக்க மாட்டானோ (இலங்கைப்பெண் கவிதைகளில் இருந்து)
-
- 1 reply
- 1.9k views
-
-
[size=3] [/size] [size=3] பெண் ஒன்று கண்டேன்… மழையில் நனைந்தவொரு மான் மரத்தடியில் ஒதுங்கியதுபோல் மான்விழி மங்கையவள் மருண்டோடி மாமரத்தடியில் மறைந்து நின்றாள். கார்மேகம் அசைவது போல்- அவள் கருங்கூந்தல் ஆடியது. கண்வைத்தேன். காய் வேல்கள் பாய்ந்தவைபோல்- அவள் கரு விழிகள் என்மீது வேல்பட்டு வீழ்ந்த வேங்கைபோல் நான் ஆனேன் மீண்டும் வெருண்டசைந்து அப்; பக்கம் மெதுவாகப் பாதி விழிவைத்தேன். கோபங்கொண்டென்மீது கொதித்தெழுந்தாள். ஆடையெல்லாம் பாவை உடலழகில் ஒட்டியது அழகு மயில் நனைந்ததுபோல் அதில் நீர் கொட்டியது தோகைமயில் சிறகுவிரித்துபோல் உடல் அசைக்க துளித்துளியாய் நீர்மணிகள் என்மீது சிதறினவே. பனித்துளி பட்டுச் சிலிர்த்த மலர்போலே- நான்…
-
- 11 replies
- 1.1k views
-
-
பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா காரிருள் அகன்றது பேரொளி பிறந்தது- அவ் ஓரொளி மகிமையில் உவகையே நிறைந்தது வானமும் வையமும் வாழ்த்தியே மகிழ்ந்தது விண்ணக வேந்தனை மண்ணதில் வாழ்த்திடும் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா தீபங்கள் கரமேந்தி தெய்வீக மனமேந்தி ஆனந்த உணர்வேந்தி அகமெங்கும் மகிழ்வேந்தி மனங்களில் அன்பேந்தி மனிதத்தை அகத்தேந்தி மழலையாய் மலர்ந்தநம் மகிமையின் தேவனின் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா எதிர்காலம் சிறந்தோங்க எம் மண்ணும் தளைத்தோங்க வருங்காலம் வளமோங்க எம்வாழ்க்கையும் நலமோங்க வழியதன் வெளிச்சமாய் வாழ்வுக்கே அர்த்தமாய் ஒளியதன் மைந்தனின் உண்மையின் வேந்தனின் பிறந்தநாள் …
-
- 5 replies
- 4k views
-
-
இவனும் எழுதுவான்... ஈழ.. வரைபடம் வற்றியதில் வயிற்றைக் கலக்குகின்றதாம்... வான்புலி யாவும் முடங்கிப்போயிற்றாம் கடல்புலி எங்கோ காணாமல் போனதுவாம்.. இராணுவத்துக்கே வெற்றி வெற்றியாம்... சொல்வார் சொல்லட்டும் தமிழா... நடப்பு...இதய நமைச்சலா உனக்கு தோல்வி என்ற சொல் துவள வைக்கிறதா உன்னை நீ என்ன ஆற்றாமை கொண்டு அழப்பிறந்தவனா? உன் எதிரி பலம் மிக்கவன்தான்.. உலகத்தை திரட்டி நிற்கிறான் அதற்காக மண்டிபோட்டு மடிந்து போவாயா? அறு பதிலிறுக்காமல் மக்கிப் போவாயா? அப்படியானால் நீ தமிழனல்ல.. தமிழன் இருக்கிறான் வீரத்தமிழன்.. அவன் பதிலிறுப்பான் வரலாறுகள் பார் ரசியாவில் சிதைந்த கிட்லர் படைகள் சிதைந்த விதம் கேட்டுப்பார்... …
-
- 18 replies
- 2k views
-
-
நீ தானே நாள் தோறும் நான் கவி எழுதக் காரணம் உன் நினைவெல்லோ என் கவிதை சுர ராகம் உன் பாடல் கேட்டு எல்லோ என் இதயம் எழுதும் கவிதை எங்கெல்லாம் காற்றோடு எதிலும் உந்தன் ராகம் வாழ்வு எல்லாம் வர்ணங்கள் வரைந்த உந்தன் சுரங்கள் பொன்வானம் தன்னாலே பாடும் உந்தன் இசைகள். போய் வாருங்கள் எம் புல்லாங்குழலே இசையும் தமிழும் உள்ளவரை இந்த உலகு உம்மை நினைவு கொள்ளும் 🙏
-
- 0 replies
- 500 views
-
-
வீர மறவனின் விழுதொன்று வேரறுந்து வீழ்ந்தது. தூர நிலத்தில் ஆழ்ந்து துயிலுகின்றது பாரெல்லாம் நாம் தமிழராய் அவன் பேர் சொல்லி விம்முகின்றது பாரதியின் சீடனாய் பல களங்கள் அன்று பாதையிலே பிரிந்து புதிய பாதையிலே சென்று பலமான இனமானக் கலைஞனாய் வென்று பலம் சேர்த்தாய் ஈழவிடுதலையே வழி என்று தமிழனாய் நாம் என்று தரணியெங்கும் தோழனாய் மார்க்சியவாதியாய் மானிலத்தில் வாழ்ந்து ஈழத்தவன் நான் இல்லையென்று ஏக்கமடைந்து வாழப்பிறந்தவன் தமிழன் என சீற்றம் கொண்டு ஈழத்தமிழன் கரங்கோர்த்து வீரப்போரில் தலைவன் வழியில் நேர்கண்டு அவன் தம்பியாகத் தனை வரிந்து கொண்டு நம்பியவன் நாளை எமக்கு நாடு என்று உயிரொன்று மட்டுமே என் சொத்து அதையும் பயிராக்குங்கள் ஈழத்தம…
-
- 6 replies
- 1k views
-
-
எப்படி அழைக்கப்படும் நானில்லாத எனது வீடு யாருமில்லாத இன்றில்......... என் பெயரால் அழைக்கப்படமுன் அண்ணாவின் பெயரால், அப்பாவின் பெயரால், அம்மாவின் பெயரால், அம்மம்மாவின் பெயரால், அழைக்கப்பட என் வீடு......... எப்பவோ துளைத்து கறல் ஏறிய சன்னங்களையும், எறிகணை சிதைத்து சிராம்பு கிளம்பிய வளைமரங்களையும், அண்ணாவை தொடர்ந்து எனது கீறல்களையும் சுமந்த வைரமரக்கதவுகளையும், மஞ்சள் பூக்கொடிமரம் சுற்றிபடர்ந்து மங்கலமாய் நின்ற தூண்களையும், சுமந்த என் வீடு......... எப்படி அழைக்கப்படும் யாருமில்லாத இன்று. எல்லையோர ஒற்றைபனையும், வேலிக்கிளுவையில் படர்ந்த கொவ்வையும், செம்பருத்தியும் நித்தியகல்யாணியும் நாலுமணிப்பூச்செடியும் முற்றத்து மண் அள்ளி கொ…
-
- 10 replies
- 735 views
-
-
வேண்டாம்... - கவிதை கவிதை: லிவிங் ஸ்மைல் வித்யா, ஓவியம்: ரமணன் சிற்றாறு எதிரிலிருக்க, காம்பௌண்ட் சுவருக்குள், தோட்டமும், தோட்டத்திற்கு நடுவேயான பாரம்பர்யமான உங்கள் வீட்டில், தலைவாழை விருந்துக்கு என்னை அழைக்க வேண்டாம்... நகரின் மையமான பகுதியில், ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் ``கம் ஓவர், லெட்ஸ் ஹேவ் எ பியர்’’ என்றும் அழைக்க வேண்டாம்... கருங்கற்களால் வேய்த, செவ்வண்ணம் பூசிய, சிறிதும், பெரிதுமாய் டெரகோட்டாக்கள் நிரம்பிய, கலைவண்ணமான உங்கள் இல்லத்திற்கு கவிதை விவாதிக்க அழைப்பு விடுக்க வேண்டாம்... ``வாங்க, எங்கூருக்கு, நம்ம தோப்பு எளநிக்கும், அம்மா வக்கிற நாட்டுக்கோழி வறுவலுக்கும் ஈடே கிடையாது’’ எனத் தூண்டில் ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்த கவிதையை வாசித்து விட்டு அவசரப்பட்டு பெண்ணியவாதிகள் என்னைத்திட்டவேண்டாம். நகைச்சுவையாக (dark comedy) நான் எடுக்க இருந்த ஒரு குறும்படத்திற்காக எழுதிய கவிதை. ஆனால் அப்படத்தை எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டேன். சுயநலம் சுயநலம் சுயநலம் பெண்ணியத்தின் மறுபெயரே சுயநலம் கணவனுக்கு பணிவிடை செய்தால் கசக்கும் பிள்ளைகளை பராமரித்தால் புளிக்கும் மாமா மாமியைக் கண்டால் வயித்தைப்பிரட்டும் சுயநலம் மட்டுமே இனிக்கும் இனிக்கும் இனிக்கும்.
-
- 5 replies
- 1.2k views
-
-
இதே... சிவந்த மண்ணில், புலியின்... ஒரு வெடிக்கு பயந்தோடிய... நாதாரிகள், இன்று... "இடுப்பில் கை வைத்து அதிகாரம்," பண்ணுகின்றார்கள். பொறடா... பொறு, உனக்கு... வட்டி, குட்டியுடன்... தர, ஒருவன் வருவானடா... அந்தச் செய்தியைக் கேட்ட பின் தான்... என் மூச்சடுங்கும்.
-
- 22 replies
- 2.2k views
-
-
பதில் கூறு....(கருணாநிதி) மூக்கின் மேலொரு கண்ணாடி போட்டே வருகிறாய் முன்னாடி... அடுக்கு மொழியில சொல்லாடி அவையை கலக்கிறாய் கில்லாடி.... வயசில போனாய் தள்ளாடி இருக்கிறாய் முதல்வராய் இன்னாடி..... தமிழுக்கு நீயே உயிர் நாடி வரல ஏன் எம் தமிழ் நாடி....??? யுத்த செலவோ பலகோடி செய்யுது சிங்களம் இன்றோடி.... உன் தமிழ் போகுது உயிர் ஆடி அதை காணா இருக்கிறாய் ஏன் பாவி....??? தோளில போடுறாய் நீ காவி அட தோளை கொடுடா நீ பாவி.... இதயம் வேறா வைச்சிருக்கா இன்னும் இரங்கா ஏனடா நீ இருக்காய்...??? உன் தமிழ் காக்க ஏன் ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
யார் இவர்கள் மூன்று வயதில் - எனக்கு நல்ல சொக்கை - என்று பெற்றோர் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள்..... நான் பெரியவளானதும் - என் மாமன் மகன் மாம்பழக் கன்னம் - என்று வர்ணித்துக் கவிபாடினான்..... பதினேழு வயதில் காதல் வசனம் பேசி சகமாணவன் ஒருவன் என்னை முத்தமிட்டான்..... பத்தொன்பது வயதில் - அந்நிய கூலி நாய்கள் - என் உடம்பை பதம் பார்த்து... பின்பு ராணுவ உடையில் - காவல் பேய்கள் தங்கள் தேவைகளை தேகைக்கதிகமாகவெ பூர்த்தி செய்தன.... கெடுக்கப்பட்டவள்....முத்திரைய
-
- 4 replies
- 1.2k views
-
-
காதலர் தினம் கொண்டாடும் அதேவேளை காதலால் வீழ்ந்த மக்களையும் நினைவு கூற வேண்டாமோ. அதுதான். காதல் செய்யுங்க வேணாம் என்றல்ல.. ஆனால் மற்றவர்களை ஏமாற்றனும் என்ற குறிக்கோளை நினைப்பில வைச்சுக் கொண்டு காதலை செய்யாதீங்க. நன்றி பேஸ்புக்.
-
- 9 replies
- 1.8k views
-
-
மஞ்சளும் மண்ணும் கலந்த நிறத்தில் பொன்வண்ண அச்சுடன் என்றோஎடுத்த இன்சுரன்சிற்கு இன்றும் அனுப்புகின்றான் டயரி எழுதாத சில பக்கங்களுடன் கிறுக்கிய பல குறிப்புகளுடன் பழையதை தூக்கி அட பதினொன்றாவதா என அடுக்குகின்றேன். சிரிக்கும் புதுப்பக்கதில் படுக்கும் நேரத்தில் சிவப்பு பேனாவால் வைய படபோகும் மாந்தர் அல்லது மானிடம் எதுவுமாகலாம். அன்றைய நாள் தலைப்பில் எனக்கு எதிரியாக எவன் பட்டாலும் அன்று அவனுக்கு தான் அத்தனை பூசைகளும் அபிசேகமும் போனவருட டயரியின் பக்கங்கள் சில இப்பவும் மணக்குது செம்புதூக்கி சோபா, விட்டுவாங்கி யோ.கா, நாய்வைத்தியன் நடேசன் இலக்கிய கள்ளன் பூபதி என்று மூத்திரம் தொட்டு எழுதியதால், நேரில்காண்கையில் நடுமூஞ்சையில் பிசகாமல் அடிப்பேன் து…
-
- 8 replies
- 1.3k views
-
-
-------------------------------------- மீன்பாடும் தேன்நாடு வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள் தோறும் வட்டக்களரி எழும். வட்டக்களரியிலே வடமோடிக் கூத்தாடும் இளவட்டக்கண்கள் தென்றல்…
-
- 8 replies
- 2.2k views
-
-
மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி யாரும் அறிந்திரா விதமாய் உறிஞ்சினர் வாழ்பவர்களின் குருதியையும் மாபெரும் சவக்கிடங்கைமூடும் மாபெரும் இரத்தப் பெருவெளியை துடைக்கும் உதவிக்கு மாபெரும் சனங்களை வீழ்த்திய அதே கரங்கள் வெடிலடிக்கும் கொடிகளோடு எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ.நாவில் பேரம் பேசும் கொலையாளிகள் இடைவேளையில் அருந்தினர் ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குருதியை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர் கொன்று தின்றவனே தன் வாயினை துடைக்கட்டுமென பூமியெங்கும் நீங்க மறுக்கும் குருதிக்கறைகள் அது அவ்வளவு எளிதல்ல மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி எளிதாக மறைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உட…
-
- 0 replies
- 481 views
-
-
வழக்கமாக எழும் நேரத்திலேயே இன்றும் எழுந்து விட்டேன்...! விழிக்கும் போதே கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன் நேற்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க... இன்னும் கொஞ்சம்நேரம் தூங்கி இருக்கலாம் என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்... நேற்றைய தினங்களின் பிடிக்காமல் போன முன் அனுபவங்களால் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் இன்றாவது ஒழுங்காக இரு என்று... இருந்தும்., தேவதை ஒருத்தியின் உதாசீனப் பார்வையிலும், கசக்கி, பிழிந்து வெளியேத் தள்ளி பின்பு வழக்கம் போல புறப்பட்ட பேருந்து பயணத்திலும் .. டேய்.. வீட்ல, சொல்லிட்டு வந்துட்டியா என சபித்துவிட்டுப் போன ஆட்டோக்காரனிடமும்... அலுவலகம் சென்று மறதியால் செய்த பிழை…
-
- 2 replies
- 1.3k views
-