கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கிழிந்தது முகத்திரை குனிந்தது பாரதம் ! முதுகினிலே குத்துகின்றாள் பாரதத்தாய் வெட்கித்துக் குனிகிறது எம் தலையும் வேடமிட்டு ஆடுவது போதும் போதும் வெட்கமற்ற பாரதமாய் போனதும் ஏனோ ! பக்கத்தில் இருந்தபடி எமை அழிக்க படைக் கருவி முதலோடு ஆளணியும் கொடுத்தல்லோ கொல்கின்றாய் எம்மை நீயும் தடுப்பதற்கு விண்ணப்பம் உன்னிடமா ! கொலைக் கருவி பணமென்று கொடுத்தவாறு எமைக் கொல்வதற்காய் உன் படைகளையும் அனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் பாரதத்தின் வஞ்கமே உருவான நரியின் அழகே அழகு ! வார்த்தையிலே நஞ்சமர்ந்த வடிவம் கொண்டே பேச்சிலேதான் தீர்வென்று ஏனோ நீயும் பசப்புவதேன் பாரதத்தின் ஆட்சியரே கிழிந்ததுன் முகத்திரையும் குனிந்தாய் நீயே ! பெருமைகொள் பாரதத்தின் பெருமை …
-
- 4 replies
- 1.4k views
-
-
கடல் நீரிலே துள்ளும் மீனினம் போல், என் மனதிலே துள்ளும் உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்து உலவிட வந்துள்ளேன்.
-
- 30 replies
- 4.3k views
-
-
முட்டையும் விந்தும் முட்டிக்கொள்ள கருக்கொள்ளும் நுகமது கருப்பையில் வளர்ந்திட்டால் வெளிவருவது நாய்க்குட்டி..! கலப்பில் அதை பலவாறு கலந்து பிறப்பித்தால்.. கட்டியதை கூட்டில் வளர்த்திட்டால் Pedigree போட்டு மெத்தையில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் உயர் சாதி..! கலப்பில் அதை இயற்கையோடு கலக்கவிட்டால் பிறப்பால் அதை தெருவில் அலையவிட்டால் தாய்மடி பாலுண்டு குப்பைமேட்டில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் பற நாய்..! குடிசையைப் பார்த்து மாடி சொல்லும் நீ.. கீழ் சாதி..! உழவைப் பார்த்து உத்தியோகம் சொல்லும் நீ.. கீழ் சாதி..! இதை வேறு பகுத்தறிந்து சொல்லும் நீ..தலித்தியவாதி..! அதை ஒழிக்க கூட்டம் போடும் நீ.. அரசியல்வாதி..! உண்மையில் ஆங்கே இயற்கையின் …
-
- 8 replies
- 1.4k views
-
-
கு.முத்துக்குமாரனுக்கு ஈழத்தமிழரின் வீரவணக்கம்... (முத்துக்குமரனின் வீரவணக்க மேடையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம்) ஈழத்தமிழர்களின் விடிவிற்காய் ஈழமைந்தர்கள் குருதி சிந்தி இலங்கையில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி இன்னுயிர்கள் பல வேள்வியாகி விட்டன உன் உயிர் தியாகம் இன்று உலகையே எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது. உனக்காக ஒரு கவிதை எழுத - நம் பேனாக்களுக்கு பலமில்லை - ஏனெனில் எம் உணர்வுகள் என்றோ மரணித்து விட்டன. ஈழத்தமிழர்களெல்லாம் இன்று நடைப்பிணங்கள் கண்ணீரில் எழுந்த பல புரட்சிகள் காற்றோடு காற்றாய் பறந்து விட்டன மறத்தமிழனாய் இன்று - நீ ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில்.... ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களிலிருந்து - முத்துக்குமாரனே …
-
- 0 replies
- 984 views
-
-
-
- 0 replies
- 263 views
-
-
குடிசை என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான் என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான் என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான் இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.
-
- 8 replies
- 2.1k views
-
-
வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம் வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்! தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே! தெய்வம் உண்டு நம்புங்கள்! பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்! போர்க்களம் எமக்கென்ன புதிதோ? குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்! கூத்தாடுவோம்! இது பொன்னாள்! எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள் இருட்சிறை ஆடுதல் இன்பம்! வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து வெல்லுதல் விடுதலை கண்டீர்! சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்! செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ? வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்! வைர நெஞ்சங்களோ வாழி! ஆழமா கடலின் அலைகளே இருங்கள்! அறம் காத்தல் நம்கடன் அன்றோ? கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம் குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்! ஈழ…
-
- 0 replies
- 584 views
-
-
குடு முஸ்தபாவின் குடு அடி...(சிறையிருந்து [i] சிறகடித்து பறந்த என்னை சிறகொடித்து சிறயடைத்தீர்..... இந்தோ சீறியே வருகின்றேன் சிறு காலம் பொறுத்திடுவீர்... உறுமியே உலவிடுவேன் ஊடகத்தில் ஏறிடுவேன்.... வன்னி புலி புலியென்று வசையதை பொழிந்திடுவேன்.... எண்ணில்ல இடர்களை எண்ணி உமக்கு தந்திடுவேன்.... அறிவாழி என்னையா நீர் அடைத்து வைத்தீர்....??? என்ன யான் செய்தேன் என்று என்னை நீர் இழித்தீர்.... வங்கியில் ஒரு கொள்ளை சின்னதாய் ஒரு சின்ன கொலை.... கள்ள மட்டையில் காசு கறந்தேன் தாலி கொடிகள் தனை அறுத்தேன்.... கன்னியவளை கற்பழித்தேன் இதை விட வேறென் செய்தேன் இது தப்பா..…
-
- 0 replies
- 992 views
-
-
குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கனடாவிலிருந்து பவித்திரா- குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கும்மாள மிட்டுக் கூக்குரலி டுதல்தான் வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற வஞ்சனைச் செயல்களே வருத்தம் வேண்டாம் படுகுழியிற் தாம்வீழ்ந்த பரிதாப நிலைதனை பாரறியும் இழிவினை மறைத்திட வேண்டியே சடுதியாய் வகுத்த சூழ்ச்சியில் நின்றுமே தலைமைச் சிங்களம் தடுமாறி நிற்கிறது! மலைகள் பாறைகள் மருவிய நீர்நிலைகள் மலர்கள் மணம்வீசும் அடர்ந்த காடுகள் கலைகள் கழனிகள் கலப்பை பிடித்துழும் கண்ணியம் நிறைமாந்தர் கனிவுறை உழவர் தலைவன் கொள்கையே தமக்கெனக் கொண்ட தண்மைமிகு உளம்கொள் திராவிட மக்கள் நிலைபெற்ற…
-
- 10 replies
- 1.2k views
-
-
குளிர் காற்று… சுற்றிலும் மழை… என்னவள் நினைவோடு ஆற்றங்கரையில் நடை.. கையிலே ஓர் குடை… கதவற்ற ஓர் குடிசை… என்னவள் நினைவு என்மனது வாட்ட… கால்களோ மணலிலே புதைந்து போக… குளிர்காற்றும் வெப்பம் தேட… என்னவள் கைப் பற்றினேன் .. இறுக்கியே பிடித்துக் கொண்டேன்… குளிர் வாட்டி எடுத்தது… கட்டியே அணைத்துவிட்டேன்… பின்னர்தான் தெரிந்தது… வயதான பாட்டி என்று… குளிருக்கு சூடு கொடுத்ததற்காய் நன்றி சொல்லிச் சென்றாள் அந்த வயதான பிச்சைக்காரி …. www.nilavan.tk
-
- 0 replies
- 500 views
-
-
கனவு .! காண்பவை எல்லாம் காட்சிகள் அன்றி நிஜம் இல்லை அப்படி ஒன்று இருத்தால் உழைப்பு ஒன்று இருக்காது ..!! நான் .! நான் எனக்கு சொல்லிக்கொள்ளும் மந்திர சொல் எனக்கு நான்தான் என்பதே .. உலகம் என்னால் மட்டும் தான் முடியும் என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு.. என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......?????? பூ .! அழகின் ஆரம்பம் முடிவும் அதுதான் மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!! கோவம் .! ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம் ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்... சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்... என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்க…
-
- 0 replies
- 609 views
-
-
ஒவ்வொரு இலைகளாய் உதிர்த்த பின்னும் ஒரு துளி இசையில் தன்னுள் தளும்பியபடி நிறைந்திருக்கும் மனதிற்கு வாழ்வின் அடர் வனத்துள் தனித்து நின்று கதறியழும் தருணமென்று ஒன்று கிடையாது.. எங்கோ தூரத்தில் வானவில்களோடு பேசுகிறோம் சொந்தமாயிருந்த வண்ணங்களை தொலைத்துவிட்டு...
-
- 13 replies
- 1.3k views
-
-
தமிழக பெண்ணியல் கவிதையாளினி குட்டி ரேவதி, மரபுகளை உடைப்பவர், ஆணுக்கான கட்டமைத்த தமிழ் வாழ்வை தன் கவிதைகளால் கேள்வி கேட்பவர். அவரின் சில கவிதைகளை இங்கு இணைக்கின்றேன். சூல் பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உ…
-
- 7 replies
- 15k views
-
-
குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது வெள்ளம் இனியென்ன செய்வது? முன்னேறி வரத்துடிக்கும் எதிரிகளின் காலடிச் சத்தம் முன்னரங்க முறியடிப்பில் பிள்ளைகளின் யுத்தத்தால் தொலைகிறது ஆயிரம் அர்பணிப்புகள் அடைமழை போல் புரட்சிகள் ஆடு நனையுது என்று ஓநாய்களும் அழுகிறது தூக்கிப் போக முடியாத சொத்தாக நிமிர்ந்து நின்ற தென்னையும் பனையும்கூட சரிந்துபோய்க் கிடக்கிறது எத்தனை முறை இடம்பெயர்ந்தாலும் …
-
- 1 reply
- 966 views
-
-
இது கம்பன் பாடாத கவிதை.. தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே தீயோடும்.. புதை குழியோடும் தீர்ந்துவிட்ட சீதைகளின் துயர் மறந்தோர் கவிதை இது. வேதனையின்.. கூக்குரல்..! இதுவும் ஒரு வதை தனக்குத் தானே செதுக்கிய.. சிம்மாசனத்தில் இவர்..! சிங்கள அமைச்சரவையில் அவர்...!! குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது குடும்பிக்கார மறைவில் இருந்து. வாலி அங்கும் வீழ்கிறான்.. இராமன் இங்கும் வெல்கிறான்..!! அதர்மம் அழித்து தர்மம் வென்றதாய் காட்ட ஒரு காசோலை மட்டும் பரிமாறப்படுகிறது.. மீண்டும் வரலாறு திரித்து எழுதப்படுகிறது...! கம்பனுக்கு அன்று.. வாலி புகழ் திரித்து இராம புகழ் பாட கவி... பாட கள்ளிருந்தது தான் பெருங் கவி எனும் புகழ் விருப்பிருந்தது கூட அகத்தே …
-
- 1 reply
- 905 views
-
-
[size=4]பிட்சை வரங்கேட்டேன் தாயிடம்[/size] [size=3][size=4]இச்சையுடன் என்கனவில் வந்தாளே![/size][/size] [size=3][size=4]லச்சையுடன் அவள்முன் பணிந்து [/size][/size] [size=3][size=4]அச்சமுடன் வரமொன்றுக் கேட்டேனே![/size][/size] [size=3][size=4]நுட்பமுடன் என்மனக் கருத்தறிந்த [/size][/size] [size=3][size=4]தட்சன்மகள் தாட்சியாயினி முறுவலிக்க [/size][/size] [size=3][size=4]"குப்பைத் தொட்டி"யாய் நான்மாற[/size][/size] [size=3][size=4]சப்பை வரத்தில் சலிப்புற்றாளே! [/size][/size] [size=3][size=4]ஏனிந்த ஏமாறும் எள்ளினகைக்[/size][/size] [size=3][size=4]கனியும் வரமெனக் கேட்டாளே? [/size][/size] [size=3][size=4]நானிந்த உலகில் நாணிக் [/size][/size] [size=3][size…
-
- 0 replies
- 704 views
-
-
மலரே என்பான் அவன் வண்டே என்பாள் அவள் மலர் மீது வண்டு உறவாட மலரும் உறவுக்குள் விளையும் குண்டுமணிகள் விடப்படுவது குப்பையில்...! கடைசியில்.. தகாத உறவென்று பெயர் வைக்கும் சமூகம்... மனிதம் குப்பையில் சேர்வது அறிவதில்லை.!!!
-
- 1 reply
- 1.7k views
-
-
இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் 1985 மே மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்தப் பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கன…
-
- 4 replies
- 1.1k views
-
-
மே15 சென்னையில் இருந்தேன். என் உறவினர்கள் பலர் களபலியான குமுதினிப் படகுப் படுகொலை சமபவச்சேதி கேட்டு மனசும் ஆன்மாவும் கந்தலாய்க் கிழிந்துபோனது. இரவு தூங்க முடியவில்லை. அண்ணா நகரில் வாழெத என் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். அந்த இரவே "இரத்தம் எழுதிய கவிதை" என அஞ்சலி எழுத ஆரம்பித்தேன். அப்போது விடுதலை அமைப்புகளுக்கிடையில் ஐக்கிய முன்னணியை உருவாக்கும் கனவுகள் மெய்படாத துயரில் வாடியிருந்த காலம். அஞ்சலி எழுதி முடித்தபோது மே 16 விடிய ஆரம்பித்திருந்தது. விடியும். இரத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றெ…
-
- 2 replies
- 881 views
-
-
இதய அறைக்குள் புதைந்து கிடந்த என் சந்தோசங்களை மீட்டுக்கொண்டது உன் முத்தங்கள். என்இதழ் தந்த முத்தங்களும் என் மொழி தந்த கவிதைகளும் நீ..பருகிடும்போதா.. என்னை குயில் என அழைத்து இந்த குயிலில் முத்தங்களை வருடிச்சென்றாய். உன் முத்தப்புயலின் வேகத்தில் அவஸ்தைப்படும் நான். தித்திக்கும் முத்தங்கள் நித்தம் நித்தம் உன்னிடம் இருந்து கிடைக்குமானால் என் வாழ்வையே.. உன்னிடம் அர்ப்பணித்து கொள்வேன்.
-
- 5 replies
- 1.6k views
-
-
குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் . மாடு தழுவி மாளாது தினவு என யானை தழுவ மழைக்காடு சென்றவரே மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில் கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய் குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள் காலமெல்லாம் வாழ்வர் மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய் புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய் வனதேவதைகளாய் பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.
-
- 2 replies
- 1k views
-
-
[size=5]குரலிழந்த குயில்கள்.[/size] கூடித் திரிந்த குயில்கள் குதுகலமாய் பறந்த குயில்கள் பார்த்துச் சிரித்த குயில்கள் பாசமாய்ப் பழகிய குயில்கள் வீறுநடைபோட நாங்கள் வியப்பாகப் பார்த்த குயில்கள் காடுமேடெல்லாம் கம்பீரமாய் திரிந்து வீட்டுக்கும் நாட்டு;க்கும் வியத்தகு சேவை செய்து சுதந்திரதாகம் பற்றி சுருதிமாறாமல் பாடியகுயில்கள்;. வல்லாதிக்க வஞ்சகர்கள் வலைவிரித்து வீழ்த்தியதால் வாழ்விழந்து வலுவிழந்து வனப்புமிகு சிறகிழந்து காலிழந்து கருத்துமிழந்து கனத்த மனத்துடனே கூவும் குரலும் இழந்து கூட்டுக்குள் அடைபட்டு வாடித் தவிக்கின்றனவே வதைமுகாம் நடுவினிலே… பார்ப்பாரும் இ;லை கேட்பாரும் இல்லை தேசியச் சொத்துக்கொண்டோர் கூட திரும்பியும் பார…
-
- 4 replies
- 914 views
-
-
வாரா வாரம்... திரை கூர்ந்து விழிப்புலன் கூர்மையாக்கி செவிப்புலன் நேர்மையாக்கி தெளிவாய் பார்க்கிறேன் கேட்கிறேன்.... ராசி பலனில் பகவான்கள் பலர். என்னோட அதிபதி.. குருபகவான் கூட கன்னிப் பெண்கள் மேல தான் கண்ணோட... கருசணையாய் இருக்கிறார். காளை எனக்கு மாதம்.. வருடம் பல... காத்திருந்தும் பலனில்லை. பகவான்... கிருபையும் எனக்கில்லை..! சாத்திரியின் கடைக்கண் பார்வையிலும் நானில்லை..! காளை என்னை விளித்து.. பலன் சொல்லவும் யாருமில்லை..! இருந்தும்.. பூமிப்பந்தில் நாம் நிமிர்ந்து நிற்கிறேன்.. சுய தேடலும் சுய உழைப்புமே என் வாழ்க்கை என்பதால்..! எல்லாம் நான்.. நெஞ்சில் இரண்டு சிரட்டை இன்றி பிறந்ததன் பலன்..!
-
- 6 replies
- 945 views
-
-
(Mohamed Nizous) தெருக்கள் எங்கும் செய்தி தீயாகிப் பரவியது குருக்கள் மடத்தில் கடத்திக் கொன்று போட்டான்களாம் விடுதலை என்ற பெயரில் தறுதலைக் கூட்டம் செய்த கொடூர பேயாட்டத்தில் குருக்கள் மடமும் ஒன்று வாப்பா வருவாரென்று வாசல்நின்ற குழந்தையிடம் பேச முடியாமல் தவித்து பிள்ளையின் தாய் அழுத நாள் அப்பாவி இவர்கள் என்று அறிந்தும் கொடியவர்கள் துப்பாக்கி முனையில் செய்த துரோகத்தின் நினைவு நாள் பொருட்களை கொள்ளையிட்டு பொதுமக்களை தள்ளிச் சென்று பொறுக்கிகள் போல சுட்டார் பொறுக்காது எவரின் மனமும் எத்தனை அழுகைகள் எத்தனை சாபங்கள் அத்தனையும் பலித்தன அப்புறம் நந்திக் களப்பில் அம்பலாந்துறையில் தேடி அகழ்ந்து பார்த்தால் தெரியும் …
-
- 3 replies
- 1k views
-
-
அழகாகச் செதுக்கிய சிற்பங்களை உடைத்தெறிந்து ஆனந்தங்கொள்ளும் அணங்குகளிற்கு... தெறித்துக் கிடக்கும் சிற்பப் பிணங்களின் ஊமை அழுகுரல்கள் கேட்பதில்லை! சிற்பத்தை சீரெடுத்த உளிகளின் வலிகளும்... கலைஞனின் கதறல்களும்... எப்பொழுதும் புரிவதில்லை! உடைந்துபோன சிற்பச் சிதறல்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து, ஒட்டவைத்து மீண்டும் உயிர்கொடுக்கும் ஆசையுடன், காணாமற்போன ஒருதுண்டை... இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றான் குருட்டுச் சிற்பி! கூர்மையான விழிகளுடன் காத்துக்கிடக்கின்றன உளிகள்... புதிதாய் ஒரு சிற்பம் வடிக்க...!
-
- 3 replies
- 533 views
-