கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கவிதையின் கவிதைகள் http://eluthu.com/ka...image/51704.gif எண்ணங்களும் நினைவுகளும் அதிகமாகப் பயணிக்கும் இரவுவெளிகளின் இறுதியில் கண்களின் ஈரங்களோடு... உறங்கிப்போகின்றது "நேற்று" ! நாளைய அதிகாலையின் இறுதிகள் மீண்டும் மீண்டும்... இரவுகளையே கொடுத்துவிட்டுச் செல்கின்றன! விடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என... ஏங்குகின்றது மனம் இப்போது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105253
-
- 16 replies
- 1.3k views
-
-
கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? தூயவர்ளே நீங்கள் துயின்ற துயிலும் இல்லங்கள் இல்லையே...!!! எங்கே போனீர்கள்? எங்கள் மனங்களில் நிம்மதி இல்லையே...!!! அட யார் அழுவது அங்கே?..... எங்கள் பிள்ளைகள் கண்மூடி துயின்றது தாய்மண்ணின் மடியில் அவர்கள் எப்போதும் வாழ்வது எங்களின் இதயங்களின் அடியில்.....!!! கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும். அவர்களின் கனவும் இருக்கும். கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? விதையாய் விதைத்தோம் …
-
- 9 replies
- 1.3k views
-
-
சுதந்திரத்தைத் தேடி….ஓடி….டயானா!........ மனிதநேயங்கள் உன்னுள் நிறைய இருந்தன -உன் மலர்ச்சிரிப்பினால் அவை உலகை மயக்கின!..... பிரபலங்களோ என்றும் உன்னை பின்தொடர்ந்தன உன்பிரிவினிற்கும் ஏனோ அவை துணையாய்ப் போயின!...... தாய்மை கொண்ட பெண்மையாலே பலர் பெருமை கொண்டனர் தாரமாகி உலகை நீயும் உன்பால் கொண்டனை! கோடி கொடுக்கும் அரண்மனையில் கூடி வாழந்;தனை-இரு குழந்தைகளைப் பெற்றுநீயும் அந்த தாய்மை கண்டனை! ஆண்இனத்தின் உரிமைகளோ ஆதிகமானவை-அதிலும் அரண்மனையில் வாழ்ந்துவிட்டால் அவை புனிதமானவை! பெண்மையிலும் உணர்வுகள் தான் பள்ளிகொள்வதால்-அதைப் புரிந்துகொண:டு பின்நாள் நீயும் வுpலகி வாழ்ந்தனை! பெற்றுவிட்ட…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழ் செல்வன் வான் செல் தமிழ் சமர்களில் சிலிர்த்தான் சமாதானத்தில் சிரித்தான் நீ சிலிர்த்த போதெல்லாம் சிங்களம் மரித்தது. சிரித்த போதெல்லாம் - புறா சிறகு விரித்தது. தமிழீழத்தின் பிரமாதம் அவர் - நீ பிரதமர். சிரித்தே சிகரம் தொட்ட உத்தமர். பல களம் வென்ற போரியல் வித்தகர். தமிழீழ அரசியல் துறை - தரணி அரசியலில் துரை - உலகில் தமிழ் உள்ள வரை - தமிழா இவர் புகழ் பறை. சமாதான செயலகத்தில் சமாதான செயல் அகத்தில் - அதனால் ஆயுதம் இல்லை கரத்தில் - இன்றேல் எதிரி வீழ்ந்திருப்பான் கணத்தில் எங்கே? எங்கள் சமாதானத்தின் சமாதி. புலியும் புறாவும் சரி பாதி - புவி வல்லரசுகளின் போதி - புத்தா உன் மக்களுக்கு சமாதானத்தை போதி. …
-
- 3 replies
- 1.3k views
-
-
என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக்கோ நிலைத்தல் இறப்பு. மண்ணுடன…
-
- 7 replies
- 1.3k views
-
-
சிங்களர் அறியாப் பூ சகிப்பு சோனியா பறித்த பூ வெறுப்பு மகிந்த கொண்ட பூ கொழுப்பு பொன்சேகா வளர்த்த பூ கடுப்பு இராணுவம் செய்த பூ இனஅழிப்பு அரசாங்கம் காத்த பூ மூடிமறைப்பு ஈழத்தில் மலர்ந்த பூ தவிப்பு வீணாய் போன பூ எம் உழைப்பு மருத்துவர் பெற்ற பூ தடுப்பு பத்திரிகை கண்ட பூ மறுப்பு ஐநா மறந்த பூ பொறுப்பு அமெரிக்கா வாங்கிய பூ செருப்பு வெளிநாடு பார்த்த பூ விடுப்பு கலைஞர் தந்த பூ சலிப்பு எம்வாழ்வில் பூத்த பூ கசப்பு எம்வயிற்றில் எரியும் பூ நெருப்பு http://gkanthan.wordpress.com/index/pookkal/
-
- 10 replies
- 1.3k views
-
-
விடுதலை வேண்டும் என்கின்ற மானிடா இறக்கை அடிக்கும் பச்சைகிளிதான் நானடா என்னை சிறைப்படுத்தி அழகு பார்ப்பது ஏனடா அழகா இருப்பது என் தப்பா நீயும் சொல்லடா உனக்கு இருக்கும் உரிமை எனக்கு ஏன் இல்லையா? இது என்ன நியாயம் நீயும் சொல்லடா?
-
- 16 replies
- 1.3k views
-
-
-
உனக்கென்ன சீதனமா...? /தங்க தாலியெடுத்து தமிழா நீ கட்டிக்கடா-உன் சம்பிர..தாயம் இது வென்றால் தமிழா நீ முடிச்சுக்கடா.... ஆயிரம் பவுணில தாலி அட மனைவிக்கு ஏனடா வேலி...? ஆடம்பரம் எல்லாம் போலி அதை உணரலென்னா ..நீயோ..காலி..காலி.. ஏழ்மை வாழ்விலை நிலையில்லடா- இதை புரிஞ்சிட்டா நீயோ..புனிதனடா.... திருமண வாழ்விற்கு சீதனமா நீயென்ன விலை போகும் கேவலமா...? முதுகெலும்பு இல்லாத ஆணினமா- நீ ஊா்வன பட்டியல் சோ்வனவா..? பிச்சை எடுக்கின்ற வாழ்வுனக்கா வாழ்க்கையில் உனக்கென்ன மதிப்பிருக்கா...? வியா்வையால் உழைத்து முன்னேறடா விலை போகும் நிலையை மாற்றிட..டா.. அடிமையாய் வாழ்வது முறையில்லடா..- மொத்த ஆணிற்கும் இதனால் வெட்கமடா...…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஏன்... சிந்திக்கிறாய் ..? பூ தருவதா ....? பூ வளையம் தருவதா ...? என்றா .....? @@ கொத்து கொத்தாக ..... இருந்த காதல் ஏன் ..... தனி இதழாக..... வந்துவிட்டது ...??? @@ காதல் பூ போன்றது .... தூரம் நின்று பார்த்தல் ... அழகு .... தொட்டு பார்த்தால் .... ஆபத்து ....!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................
-
- 2 replies
- 1.3k views
-
-
ஏ சர்வதேச சமூகமே! கவிப்பேரரசு வைரமுத்து சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புக…
-
- 1 reply
- 1.3k views
-
-
வீதியில் இறங்கி நடக்கமாட்டேன்.... என்று அடம்பிடித்தால் .... தெரு - என்ன தேம்பி அழுமா? கண்முழித்து பார்க்கவே மாட்டேன் என்றே நீ - கருத்து ஒன்று கொண்டால் விடியாது இனி வானம் என்று... விதி ஒன்றாகுமா? திட்டுறான் திட்டுறான் எல்லாரும்.... என்றே - நீ அழுதாய்........ ''தெய்வமே'' முதலில் சொல்லு ... நீ - அடிக்கிறார் அவர் என்று சொல்ல ... ஆக்கினைகள் அவர்க்கு என்ன செய்தாய்? தாய் நிலத்தை கூறு போட குழு சேர்ந்தாய்.... கூடியவர் தோழில் தலை சாய்த்தாய் ........ கொக்கோ கொக்கோ என்று - இரவல் குரல் வாங்கி என்னனமோ கூவினாய்...... தடியை கொடுத்து அடி வாங்கியபின்.... மரத்தின் மேலென்ன குற்றம் ........? 8)
-
- 7 replies
- 1.3k views
-
-
ரோஜாவே.. உன் இதழோரம்.. வழிவது.. தேனா..?! இல்லை... எனைக் கடைக்கண் கொண்டு கண்டதால்.. அரும்பி நிற்கும் வியர்வையா..?! தேனோ.. வியர்வையோ வழித்தெடுக்க.. குருவி இவனுக்கு அனுமதி வேண்டும்.!! முள்ளிட்ட ரோஜாவே பதில் சொல்லு..!!! ஒருதலையாய் வீணே ஆசை வைத்து இதயம் கிழிந்து நிற்க இது முட்டாள் குருவியல்ல...!! (நன்றி முகநூல்) (படப்பிடிப்பு: நாங்கள்.)
-
- 3 replies
- 1.3k views
-
-
அறம் -வ.ஐ.ச.ஜெயபாலன் கண்ணகி உயர்த்திய ஒற்றைச் சிலம்புக்கே மதுரையோடு மன்னனும் அழிந்தான். முள்ளிவாய்க்கால் ஊழியின்போது குருதி சிந்தச் சிந்த உயர்ந்த ஆயிரம் ஆயிரம் ஒற்றைச் சிலம்பால் கொடுங்கோல் மன்னனின் தோழ தோழியர்கள் முடியிழந்தின்று தெருவினில் அலைகிறார்.. சிலம்பே சிலம்பே ஒற்றைச் சிலம்பே இசைப்பிரியாவும் தோழ தோழியரும் உயர்த்திப் பிடித்தத தர்மச் சக்கரமே கடலில் வீழ்ந்த தமிழக மீனவன் கைகளில் உயரும் ஒற்றைச் சிலம்பே தமிழன் குருதியைச் செங்கம்பளமாய் இன்னும் எத்தனை நாட்கள் விரிப்பரோ தர்மம் நசியக் கொடுங்கோல் விருந்து இன்னும் எத்தனை நாட்க்கள் வருவரோ
-
- 6 replies
- 1.3k views
-
-
பல வருடங்களுக்கு முன்னர் எழுதிக் கைவிடப்பட்ட கவிதையொன்று இன்று தட்டுப்பட்டது. உங்கள் பார்வைக்கு. உயிர்த்தேன் வ.ஐ.ச.ஜெயபாலன் காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் * கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. * கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழா! உனக்கேன் தூக்கம்? என்னடா தமிழா இன்னும் தூக்கமா? எதிரி உன் வாசலில் நிற்கிறான் தெரியுமா? உன் அன்னையின் காணியிலும்; அன்னியன் நிற்கிறான்; அதை அடுத்த காணியிலும் இன்னொருவன் நிற்கிறான் உறவுகள் எல்லாமே தெருவிலே நிற்குது உரிமைக் குரல் கொடுக்கத் தயாராகி வருகுது - இந்த நிலையிலும் தொடர்ந்து நீ தூங்கினால்; உன்னையும் தூக்குவான் உணர்ந்து நீ எழும்படா என்னடா தமிழா இன்னும் தூக்கமா? எதிரி உன் வாசலில் நிற்கிறான் தெரியுதா? சுதந்திர வாழ்வும் நீ பெற வேண்டும். சுயநிர்ணய உரிமையும் நீ பெறவேண்டும்;; இழந்த நிலங்களைப் மீட்டிட வேண்டும். இன்னல்கள் அனைத்தும் களைந்திட வேண்டும் சுதந்திரத் தமிழீழம் மலர்ந்திட வேண்டும் துணிந்து எங்கும் நீ தலை நிமிந்திட வேண்ட…
-
- 6 replies
- 1.3k views
-
-
கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள் ------------------------------------------------------------------ அவர்கள் நித்திரை கொண்டு கொண்டிருந்த சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும் ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர் இறக்கும் போது அக் குழந்தைகள் எதை கனவு கொண்டு இருந்திருக்கும்.. வெடிகுண்டு சத்தம் கேட்காத ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு தாயின் மடியில் தலை வைத்தும் அப்பாவின் மடியில் கால் நீட்டியும் படுப்பதாய் கனவு கொண்டிருக்கும் ஒரு சின்ன பொம்மையுடன் கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும் தங்கள் வளர்ப்பு நாயின் குட்டிகள் மழையில் நனைந்துடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்ந்திருக்கும் தெருவில் தொலை தூரத்தில் வரும் ஐஸ் கிறீம் காரனின் பாம் பாம் …
-
- 12 replies
- 1.3k views
-
-
தேசத்தின் குரலோனே செங்கதிர் சொல்லோனே தேசியத்தின் சுவடோடு சென்றுவிட்ட வல்லோனே தமிழ் வாழும் நாள் எல்லாம் வாழ்ந்திடுவீர் எம்மோடே காலனின் வருகை கண்டும் கலங்கினீர் தமிழனுக்காய் காலம் கனியும் நேரம் கவர்ந்து விட்டான் காலதேவன் பேனா முனைகளிலே பேசியது உம் உணர்வு துப்பாக்கித் தோட்டாவாக துளைத்தது சிங்களத்தை பேச்சுவார்த்தை மேசைகளில் பேரமிட்ட சிங்கள துவேசிகளை மதியுரைஞர் உம் மதியினாலே மதியிழந்து கலங்கவைத்தீர் போரும் சமாதனமும் தந்தீர் போற்றுகின்ற பொக்கிசமாய் நோய் வந்து உழன்றபோதும் நேசித்தீர் சமதானத்தை தேசியத்தலைவரின் நேசத்துக்குரிய நண்பா தேசம் போற்றும் உம் நேசக்கரம் என்றும்
-
- 5 replies
- 1.3k views
-
-
குருதி பெருக்கெடுக்கும் இறுதிவேண்டுகை தாயே! உலகத் திசையெங்கும் உழலும் தமிழ் விழுதுகளின் வேர்மடிக்கும் தாய்மடியே! உறுதி குலையாத உரம் அன்றுதந்து, விடுதலையின் பொறி வளர்த்த பெருந்தாய் தமிழகமே! ஊற்றுவாய் பிளந்தாற்போல் உணர்வோட்டம் பொங்கக் காற்று வழி கேட்கும் வள்ளுவக் கோட்டமே! எம்திசை பார்த்தொருகால் உன் பூந்தாழ் திறவாயோ? வார்த்தெடுத்துப் புனைந்து கவி சொல்ல வரவில்லை வற்றாத வரலாற்று வரைவுகளால் இவ்வழி வந்தோம். ஆர்த்து, அணைத்து, ஆர்ப்பரித்துப் பேசிடவும், பார்த்துப் பசியாறி, பல்லாங்குழி ஆடிடவும், கோர்த்துக் கைகுலுக்கிக், கொவ்வையிதழ் விரித்திடவும், ஈர்ப்பு இருக்கிறது,.... எனினும் இப்போது முடியவில்லை. கண்ணீர் பெருக்கெடுக்க, உப்புக் க…
-
- 2 replies
- 1.3k views
-
-
உன் நெஞ்சக் கூட்டறையில் நிலவரசி முற்றத்தில் வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol:
-
- 17 replies
- 1.3k views
-
-
புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு பழையன மறந்து மன்னித்து மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு இனிய இப்புத்தாண்டில் புதிய நற்கனவுகளுடன் புதிய நற்கொள்கையுடன் பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது இனிய தமிழ் உள்ளங்களுக்கும் எமது தேச உறவுகளுக்கும் நற் செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ........ இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்.
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்று நினை நன்றே நினை ............. பிறந்து விட்டது புது வருடம் , தை பிறந்தால் வழி பிறக்கும் . வலிகளை மறந்து ஒரு புறம் தள்ளி விட்டு இறை யுணர்வுடன் வழி பிறக்க வேண்டுவோம் கோபம் கொள்வதாலோ விரக்தியடைவதாலோ கணணி வேகத்துக்கு ஈடு கொடுத்து , வெற்றி சேதிகளை பெறவேண்டும் என்று , அவா படுவதை விட்டு ,வலிகள் மூலம் தான் வழி பிறக்கும் என்று சிந்தித்து நமது கடமைகளை உணர்ந்து மற்றவர்களும் உணர வைத்து,எமது பணியை முன்னெடுப்போம் .தாயக வலிகள் மூலம் நாமும் பங்கெடுப்போம் எமக்கு முன் நீண்ட பணி காத்து இருக்கிறது சிந்திப்ப்போம் சிந்திக்க் வைப்போம். இதுவே என் கள உறவுகளுக்கு என் பொங்கல் புதுவருட வாழ்த்து .(சங்கல்பம் ). நட்புடன் நிலாமதி அக்கா.
-
- 2 replies
- 1.3k views
-
-
மாவீரர் தோழனுக்காய்.. கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும் _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோ…
-
- 3 replies
- 1.3k views
-
-
''ஒழிந்து விடு...'' தேர்தல் வந்ததுமே தெருவிறங்கி குரைத்தவரே ''மாலை போட்டு வந்தன்று மேடையேறி குலைத்தவனே... மானம் உள்ளாய் நீ என்றால் உன் நாக்குகளை வெட்டியெறி...'' ஓட்டெடுத்து சீற்ரெடுத்து ஒய்யார அமர்ந்து விட்டு மரணம் வருகுதென்றா மண்ணை விட்டு நீ போனாய்..? ( கனடா) திருந்தினாய் நீயென்று திருத்தி நாம் படித்தோம்- பாவி கையுட்டு மாறியதாலோ- நீ கை மாறி போனாய்....? கோழையே நீயா கொள்கை கொண்டாய்...? மக்களை காத்திடவா மன்றேறி நீ வந்தாய்...?? நினைத்தாலே சிரிப்பு ஆனாலும் வெட்கம் - நீ இருந்தாலே கேடு இன்று நீ ஒழிந்து விடு... - வன்னி மைந்தன் -
-
- 5 replies
- 1.3k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் * வெடிகுண்டு சப்தம் தாலாட்டுகிறது ஈழக் குழந்தைகளை...! * குடித்த பின் குடும்பச் செலவானது குவளைகள்...! * மைல்கள் சாமியானது சந்தோஷம் பூசாரி! * காந்தி ஜெயந்தி கனவு கலைந்தது `குடி' மகனுக்கு! * மரண அறிவித்தல் தவளையின் சப்தம் * சாலையோர மரம் சாமியானதும் சரியாமல் நின்றது!
-
- 5 replies
- 1.3k views
-