வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
வாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம். சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. படமும் அந்தரத்தில் நிற்கிறது. இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். தான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள் என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு 70 இலட்சம் சம்பளம் பேசி அதில் 55 இலட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15…
-
- 0 replies
- 537 views
-
-
கோவா கடற்கரையில் ஹன்சிகா கையைப் பிடித்து இழுத்து அத்துமீறிய ரசிகர்கள்- படப்பிடிப்பு ரத்து. கோவாவில் நடந்த தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் காட்சியைப் படமாக்கினர். அதில் ஹன்சிகா, சித்தார்த் இணைந்து டூயட் பாடுவது போல மாலை 4 மணிக்கு கடற்கரையில் படமாக்கினர். இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. ஆட்டோகிராப். ரசிகர்கள் ஹன்சிகாவின் பெயரை சத்தமாகக் கூவி அழைத்தபடியும், விசிலடித்தபடியும் இருந்தனர். திடீரென்று ரசிகர்கள் கூட்டமாக அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தனர…
-
- 2 replies
- 1.7k views
-
-
சமீபத்தில் விருது பெற்ற 'தலைமுறைகள்' திரைப்படம் பற்றி இணையத்தில் தேடியபோது சென்னையில் கடந்த சனவரி மாதத்தில் திறக்கப்பட்ட புதிய திரையரங்குகளின் தொகுப்பு பற்றிய இந்த படங்களும், அதனைப் பற்றிய செய்திகளும் கிட்டின. யாழ்கள உறவுகளின் பார்வைக்கு இனி... 'லக்ஸ்'(LUXE) திரையரங்குகளின் தொகுப்பு, சென்னை. சென்னை வேளச்சேரி 'பீனிக்ஸ் சிட்டி மாலில்' (Phoenix City Mall) புதிதாக உருப்பெற்றுள்ள மாறுபட்ட , நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற வகையில் லக்ஸ் திரையரங்க தொகுப்பு உருவாகியுள்ளது. 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடியவகையில் இந்த 'லக்ஸ் தொகுப்பு' திறக்கப்பட்டுள்ளது…
-
- 5 replies
- 2.3k views
-
-
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம், விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இளம் இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடித்து மீண்டும் வெளிவந்திருக்கும் படம், இவை எல்லாவற்றுக்கு மேல் லட்சுமி மேனனுடன், விஷால் தரையில் உதட்டோடு உதடு வைத்து உறியும் முத்தக்காட்சி, தண்ணீருக்குள் முழுதும் நனையும்(!) காட்சி... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'நான் சிகப்பு I மனிதன்'. அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள், ''அந்த'' மாதிரி விஷயங்கள் என்றால் நின்றபடியோ, நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ, எந்த நிலையில் இருக்கிறாரோ அந்த நிலையிலேயே தூங்கி விழும் நார்கோலப்ஸி எனும் த…
-
- 5 replies
- 1.2k views
-
-
`தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' நகுல் நடித்த `வல்லினம்' படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ராமின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் (சாதனா), சிறந்த பாடலாசிரியர் (ஆனந்த யாழை... நா.முத்துகுமார்) ஆகியோரே இவ்விருதுக்காக தெரிவு செய்…
-
- 0 replies
- 655 views
-
-
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறினார். பின்னர் இதை யுவனும் வெளிப்படையாகவே அறிவித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரும் நஸ்ரியாவும் இணைந்து நடிக்கும் ‘திருமணம் எனும் நிக்கா' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை க…
-
- 2 replies
- 1.2k views
-
-
பாலியல் தொழிலாளி, பாலியலை தூண்டும் படங்களில் நடிக்கும் நடிகை என யாராக இருப்பினும் அவர்களின் சமூக அந்தஸ்து அவர்கள் புழங்கும் இடங்கள், பண பலம், வர்க்க பலம் ஆகியற்றை முன்னிட்டே கட்டமைக்கப்படுகிறது. ஷகிலா பாலியலை தூண்டும் படங்களில் நடித்தவர். விரும்பி அல்ல, ஆரம்பகால நிர்ப்பந்தங்களால். ஆனால் நீலப்படம் அளவுக்கு அவள் கீழிறங்கவில்லை. ஷகிலாவின் இன்றைய சமூக அந்தஸ்து எப்படிப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். படங்களிலும் அவரை பாலியல் நகைச்சுவைக்கு பயன்படும் போகப் பொருளாகவே பயன்படுத்துகிறார்கள். தூள், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அவரை சினிமா விழாக்களுக்கு அழைப்பதற்குக்கூட இங்கு ஆளில்லை. எனில் சினிமா தாண்டிய நிகழ்வுகளில் பார்வையாளராகக்கூட அவரை கற்பனை …
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை: தமிழ் இனத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் இனம் படத்தை எடுத்த லிங்குசாமி படத்தில் பாட்டெழுத முடியாது என முகத்திலடித்தது போல கூறி அதிர வைத்துள்ளார் ஒரு தன்மானக் கவிஞர். அவர்தான் அறிவுமதி! தமிழருக்கு எதிரான எந்த மேடையாக இருந்தாலும் அதில் தன் எதிர்ப்புக் குரலை கம்பீரமாகப் பதிவு செய்பவர் கவிஞர் அறிவுமதி. 'லிங்குசாமி படத்துக்கு எழுதுவது என் இனத்துக்கு செய்யும் துரோகம்!' - இவரல்லவா தன்மான தமிழ் கவிஞன்!! தமிழுக்கு இழுக்கு என நினைக்கும் எந்த செயலையும் அறவே ஒதுக்கக் கூடியவர். தனக்கு வரும் எத்தனையோ வாய்ப்புகளை, 'இந்தத் தம்பிக்கு கொடுப்பா' என்று கூறிச் செல்பவர். வெகு அரிதாகத்தான் பாடல் எழுதவே அவர் ஒப்புக் கொள்கிறார். லிங்குசாமியின் நண்பர்களில் ஒருவராகத்தான் இருந்தார் இனம் என்ற…
-
- 1 reply
- 1k views
-
-
தெனாலிராமன்... வடிவேலுவை மிரட்டினால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும் - சீமான் எச்சரிக்கை. இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கை: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்…
-
- 11 replies
- 1.2k views
-
-
2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகியோருக்கான நார்வே தமிழ்த் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படம் - பரதேசி சிறந்த நடிகர் - அதர்வா (பரதேசி) சிறந்த இயக்குநர் - பாலா (பரதேசி) சிறந்த ஒளிப்பதிவாளர் - செழியன் (பரதேசி) சிறந்த நடிகை - பூஜா (விடியும் முன்) சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (கடல், மரியான்) சிறந்த பாடகி - சக்தி ஸ்ரீ கோபாலன் ( எங்க போன ராசா - மரியான்) சிறந்த பாடகர் - ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு விருது (ஆனந்த யாழை மீட்டுகிறாய் - தங்க மீன்கள்) சிறந்த பாடலாசியர் - நா. முத்துக்குமார் (தங்கமீன்கள்) சிறந்த நகைச்சுவை நடிகர் - சூரி (வருத்தப்படாத வாலிபர் சங்கம்) வாழ்நாள் சாதனையாளர் - மனோரமா இயக்க…
-
- 0 replies
- 640 views
-
-
ராஜபக்சே நண்பர் படத்தில் விஜய் நடிப்பதா? ஈழத்தமிழரைச் சித்தரிக்கும் சந்தோஷ் சிவனின் ’இனம்’ திரைப்படத்துக்கு தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க... மார்ச் 31-ம் தேதியுடன் அப்படத்தை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார், படத்தின் தமிழக வெளியீட்டாளரான லிங்குசாமி. இந்த நிலையில், விஜய் நடிக்கும் "கத்தி' படத்தின் மூலம் இன்னொரு சர்ச்சை பெரிதாகியுள்ளது. ஈழ இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர்தான், "கத்தி' படத்தின் தயாரிப்பாளர் என்பது சர்ச்சைக்கான காரணம். பணத்துக்காக இனக் கொலையாளியின் கூட்டாளி படத்தில் விஜய் நடிக்கலாமா என பல நாடுகளிலும் தமிழின உணர் வாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். "துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் முருகதாசும்…
-
- 3 replies
- 1.3k views
-
-
இனம் படத்தை புறக்கணித்த அமெரிக்க தமிழர்கள் - 14 தியேட்டர்களில் 2385 டாலர்கள் மட்டுமே வசூல்! [Monday, 2014-04-07 07:44:42] சந்தோஷ்சிவன் இயக்கத்தில் வெளியான படம் இனம். இலங்கைத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு உலகத்தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதோடு, தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்ததால் திரையிட்ட நான்காவது நாளிலேயே அனைத்து தியேட்டர்களில் இருந்தும் படத்தை திரும்பப் பெற்றார் லிங்குசாமி. இருப்பினும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இனம் படம வெளியானது. இதில் அமெரிக்காவில் 14 தியேட்டர்களில் வெளியிடபட்ட அப்படத்தை அங்கு வாழும் தமிழர்கள் புறக்கணித்து விட்டார்களாம். அதனால் அன…
-
- 0 replies
- 399 views
-
-
http://www.youtube.com/watch?v=_T_26EVpWqY
-
- 1 reply
- 582 views
-
-
"எனக்கு கதை ரொம்ப முக்கியம்... படத்தில லாஜிக் ரொம்ப முக்கியம். .. படம் பார்த்து முடித்தவுடன் ஒரு தாக்கம் இருக்கணும்" இப்படிப்பட்ட விருப்பம் கொண்டவரா இருந்தா "மான் கராத்தே" படம் ஓடுற திரையரங்கம் பக்கம் போக வேணாம். ஏனா அவங்களுக்கான படம் இது இல்ல. ஒரு இரண்டரை மணி நேரம் குடும்பத்துடன் இருந்து கொஞ்சம் சிரிச்சுட்டு வரலாம் அப்படின்னு விருப்பம் இருந்துச்சின்னா தாரளமா இந்தப் படத்துக்கு போகலாம்..உங்களை ஏமாத்ததுன்னு நான் நம்புறேன்!! இவர் சொல்லுற ரீவியு சரியாக எனது கருத்துடன் உடன்படுகிறது....யாழ் கள மக்களே நீங்கள் உங்களது விமர்சனத்த சொல்லுங்க. நம்ம பையன் பார்த்துச் சொல்லுங்க..
-
- 0 replies
- 639 views
-
-
-
- 1 reply
- 686 views
-
-
அனைத்து தியேட்டர்களிலிருந்தும் இனம் படம் வாபஸ்- லிங்குசாமி அறிவிப்பு. சென்னை: தமிழ் இனத்தை இழிவாகச் சித்தரிப்பதாக உணர்வாளர்களால் குற்றம்சாட்டப்பட்ட 'இனம்' படத்தை அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் வாபஸ் பெறபுவதாக இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை: "இதுவரைக்குமான எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் தமிழ் மண்ணையும் மக்களையும் ஆத்மார்த்தமாக நேசித்து வந்திருக்கிறேன். இனியும் அப்படியே இருப்பேன். உலகத் தமிழர்களின் வெற்றிகளில் பெருமிதம் கொள்வதும், துயரங்களில் தோள் கொடுப்பதும், உண்மையான போராட்டங்களில் இணைத்துக் கொள்வதையும் எப்போதும் குடும்பத்தின் கடமையாக வைத்திருக்கிறேன். தற்போது தமி…
-
- 2 replies
- 675 views
-
-
என் விமர்சனம்--இனம் ---------------------------------- இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள் திரையிடப் படுகின்றன . . அதற்காக கண்ணீர் விடுவதில்தான் மனித இனத்தின் ஆண்மையும் நேர்மையும் நிரம்பி இருக்கிறது . அதை விடுத்து ''யூதர்களுக்கு எதிரான போரில் முன்னூத்தி சொச்ச ஜெர்மனி ராணுவ வீரர்கள் கூடத்தான் அநியாயமாக இறந்தார்கள். யூதர்களை சுட்டுக் கொன்று சுட்டுக் கொன்று ஹிட்லர் படையினருக்கு.. பாவம், கையெல்லாம் வலித்தது தெரியுமா?" என்று யாராவது படம் எடுத்தால் அவர்களை நீங்கள் எந்த லிஸ்டில…
-
- 1 reply
- 971 views
-
-
ஒரு மலையாளியால் தமிழனாக சிந்திக்க முடியாது என்பதனை மீண்டும் நிருபித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். முன்னதாக படத்தில் ஏதேனும் குறை யிருந்தால் பார்த்து விட்டு கூறுங்கள், அதனை நீக்கிக்கொள்ளலாம் என லிங்குசாமி உறுதியளித்திருந்தார். அதன் பேரில் தோழர்கள் சிலர் பார்த்தோம். ஒளீப்பதிவு, இசை, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என சகல விஷயத்திலும் தான் ஒரு சிறந்த கலைஞன் என நிருபித்துள்ளார். ஆனால் எந்த வித புரிதலுமின்றி அம்மக்களை அனுகியிருக்கிறார். (எனக்கென்னவோ ராஜபக்ஷ தான் பணம் கொடுத்திருப்பான் என தோன்றுகிறது). அவர் எதற்காக இந்த படம் எடுத்தார், எதனை சொல்ல வந்தார் என என்னால் புரிந்துக்கொள்ள இயலவில்லை. அகதியாக ஒரு சிறுமி வருகிறாள். இந்திய அதிகாரி அவளை விசாரிக்கிறார். அவள் நடந்ததை கூறுக…
-
- 16 replies
- 4.4k views
-
-
'இனம்' படத்திலிருந்து 5 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது - திரையிடத்தயாராகிறார் இயக்குநர் லிங்குசாமி! [saturday, 2014-03-29 14:18:09] ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் பற்றி படம் எடுத்திருக்கிறேன், என்று கூறிக்கொண்டு ஒட்டு மொத்த தமிழர்களின் காதுகளில் 'இனம்' படத்தின் மூலம் பூவைச்சுற்றிவிட்டார் இயக்குநர் சந்தோஷ் சிவன். தமிழர்களுக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட பல காட்சிகளைக் கொண்ட இப்படத்திற்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்று சிலர் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த நிலையில், இனம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாக, படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்க…
-
- 1 reply
- 812 views
-
-
-
- 0 replies
- 678 views
-
-
சென்னை, கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்ற லட்சுமி மேனன் திரை உலகில் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் லட்சுமிமேனன் உதடுட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல இணையதளங்களில் வெளிவந்துள்ளது இதை பார்த்த லட்சுமி மேனன் ரசிகர்கள் குடும்பபாங்கான நடித்த மேனன் இப்படி நடித்துள்ளேரே என்று ஆதங்கபட்டனர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமிமேனன்;- நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்று காட்சி படமாக்கபட்டது படத்தின் இயக்குநர் திரு சார் இந்த காட்சி படத்தின் கதைக்கு மிகவு…
-
- 10 replies
- 1.3k views
-
-
தொண்டரை, அறைந்த.... நடிகை நக்மா நடிகை நக்மா, பிரச்சாரத்தின்போது தொண்டர் ஒருவரை அடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மா, பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு காரில் ஏற சென்றார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் நக்மாவை காண முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் இருந்த ஒருவர் நக்மாவிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தனது அருகில் இருந்த காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் அறைந்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார். இதனிடையே நக்மாவிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று மீரட் காங்கிரஸ் தலைவர் தெர…
-
- 2 replies
- 673 views
-
-
இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு! விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடக பிரிவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. இலங்கையில் நடந்த இறுதி போரில் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வருகிறார்கள். கன்னட மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். படத்தின் பூஜையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புலவர் புலமைப்பித்தன் இளையராஜா கலந்து கொண்டனர். அனு என்ற புதுமுகம் இசைப்பிரியவாக நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் வேகமாக …
-
- 1 reply
- 1.1k views
-
-
நக்மாவை கட்டிப் பிடித்து... கன்னத்தோடு கன்னம் வைத்த காங். எம்.எல்.ஏ. காங்கிரஸ் சார்ப்பில் போட்டியிடும்... நக்மா , தேர்தல் பிரச்சாரத்துக்காக உத்தரப் பிரதேசம் சென்ற போது... ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில், ஒரு வயதான காங்கிரஸ் எம்.எல்.ஏ. நக்மாவின் கன்னத்துடன் தனது கன்னத்தை வைத்ததைப் பார்த்து நக்மா அதிர்ச்சியடைந்து... அவரின் கைகளை தட்டி விட்டார். நன்றி தற்ஸ்தமிழ். இதனைப் பற்றிய, மேலதிக செய்திகளுக்காக... எம்முடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
-
- 14 replies
- 1.9k views
-
-
பாலு மகேந்திரா சொக்கலிங்க பாகவதர் ஆனபோது வீ.எம்.எஸ். சுபகுணராஜன் எழுபதுகளின் நடுவில், தமிழ் சினிமாவிற்கான புதிய பரிமாணத்தை உருவாக்கிய படைப்பாளிகளின் பட்டியலில் பிரதானமான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. தமிழ் சினிமாவின் இயங்கு தளத்தை விரிவாக்குவதில் அவர்கள் செய்த பங்களிப்பு மகத்தானது. ஆனாலும், அக்காலகட்ட படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமக்கேயான பிரத்யேக முறைமைகளில் அந்தத் தளத்தில் வினையாற்றினர். அந்த வினையாற்றலுக்கான பயிற்சிகளும் அறிதல்களும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலும் நேர்ந்தது. பாரதிராஜாவும் மகேந்திரனும் தமிழ் சினிமா உருவாக்க வெளியிலிருந்தே தமக்கான முறைமைகளைக் கற்றனர். ஆனால், முற்றிலும் கல்விப்புலம் சார்ந்த திரைக்கலைக் கல்வியை அதன் பிரதான கேந்திரமா…
-
- 4 replies
- 4.6k views
-