வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிகை லட்சுமிராய் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஸ்ரீசாந்தை சூதாட்ட புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர். சூதாட்டத்தில் சேர்த்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீசாந்துடன் தொடர்பு வைத்து இருந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர்களும் கைதாகி வருகிறார்கள். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று மும்பை போலீசார் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஸ்ரீசாந்துடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் யார் யார் என்ற விவரங்களை போலீசார் சேகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசாந்தும் இந்தி நடிகை சுர்வின் சாவ்லாவும் ரிய…
-
- 4 replies
- 930 views
-
-
சிம்பு தனது காதலை ஒப்புக்கொண்டதில் இருந்தே அடுதடுத்து அதிரடி டுவிட்களைக் கொடுத்து கலங்கடித்து வருகிறார் சிம்பு! நேற்றய சிம்புவின் டிவிட்டரில் “ எனது பெற்றோர்களின் சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். சிம்பு- ஹன்ஷிகா இருவரும் வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்களில் ஒப்பந்தமான போதே இருவருக்கும் காதல் என்று செய்தி பலரும் பரவியது. அப்போதும் இருவரும் மறுக்கவில்லை. See more at: http://vuin.com/news/tamil/what-is-the-connection-between-ajith-shalini-and-simbu-hansika
-
- 1 reply
- 3.2k views
-
-
சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதமும், அப்போது எடுக்கும் முடிவுகளுமே நம்முடைய வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சில சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றவை. அத்தகைய அசாதாரணச் சூழ்நிலையைச் சந்திக்கும் காவலர்கள் மூவரின் இன்னல்களும், அவற்றிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளின் ஊடே நீளும் அவர்களுடைய வாழ்க்கையுமே 'நாயாட்டு' மலையாளத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படம், அதன் அரசியல் நிலைப்பாட்டுக்காகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் பலியாடுகள் மார்டின் பிரபாகட் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெள…
-
- 1 reply
- 637 views
-
-
ஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்! முதல்முறையாக மனம் திறக்கிறார் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ‘‘படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே ஆன்லைன் பைரஸி மூலம் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது. திரையில் பார்க்கும் அனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் போகிறார்கள். ஒரு புதுப்படத்தை குறைந்தது நான்கு வாரங்களுக்கு தியேட்டரில் ஓட விடவேண்டும் என்ற விதியை கேரளா, கர்நாடகா, ஆந்திரா சினிமா சங்கங்களும், அரசாங்கமும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. அரசாங்கமும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து மற்ற மொழி சங்கங்கள் போல ஆன்லைன் பைரஸியைக் கட்டுப்பாட…
-
- 3 replies
- 441 views
-
-
பிரபல நடிகை ஒருவரால் சிம்பு, ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். சிம்புவும், ஹன்சிகாவும் தாங்கள் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு பெரிய கேக்கை பரிசாக அளித்தார். அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த போட்டோவெல்லாம் வெளியானது. அடடா இருவரும் நல்ல காதலில் உள்ளனர் என்று நினைத்தால் அவர்களுக்குள் லடாய் ஏற்பட்டுள்ளதாம். பிரபல நடிகை ஒருவர் அண்மையில் சென்னை வந்தபோது ஹன்சிகாவுக்கு போன் போட்டு பேசியுள்ளார். காதலில் விழுந்த ஹன்சிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு சிம்புவை பற்றி உனக்கு தெரியாதா என்று ஒரு குண்டை போட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிம்பு தன்னை காதலிப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் வயது வித்தியா…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு குட்டி ரெட்ரோ – கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பலர் பேசும் போது நான் நிறைய உலக சினிமாவும் உலக இலக்கியத்தையும் வாசித்ததாக நினைத்து நிறைய கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் சினிமாக்களும் இலக்கியங்களும் நான் அறிந்தது கூட இல்லை. தெரியாது என்று சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம். சில நேரங்களில் இந்த உண்மையை சொல்லக் கூட பயமாக இருக்கிறது. என்னால் அவர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியும். முடியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. அவர்கள் அந்த குறிப்பிட்ட சினிமாவையோ இலக்கியத்தையோ வைத்து இது கூட தெரியாமல் எப்படி நீ சினிமா இலக்கியத்தைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்கிறார்கள். இக்கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் ? மௌனம் மட்டுமே என் வசம் மீதம் இருக்கும். அவர்களுக்கு சொல்லமுடியாத ஒரு பதில்…
-
- 11 replies
- 1.3k views
-
-
உடுமலைப்பேட்டையில் சினிமா படப்பிடிப்பின் போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் மோகன்லால் உயிர்தப்பினர். விஜய், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்பு இன்று உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழாவில் ஒரு பாடல் காட்சிக்காக நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்–நடிகைகள் பங்கேற்று நடித்து வந்தனர். அப்போது வாண வேடிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதில் துணை நடிகர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். படப்பிடிப்பும் உனடடியாக நிறுத்தப்பட்டது. மேலும் விஜய் மோகன்லால் ஆகியோர் காயமின்றி தப்பினர…
-
- 2 replies
- 766 views
-
-
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டிசம்பர் 18 ,1946 அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல். பள்ளிக்காலத்தில் எட்டுகுட்டி குட்டி படங்களை எடுத்த அனுபவம் உண்டு.இந்த படங்களை வீட்டில் நண்பர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருபத்தைந்து சென்ட் வாங்கிக்கொண்டு,தங்கையின் தயாரிப்பில் பாப் கார்னை படத்தின்போது விற்றும் ஜாலியாக இளமைக்காலங்களை கழித்தவர்.ஆனால் எடுத்த படங்கள் எல்லாம் துப்பாக்கி சூடு,போர் என த்ரில் ஆனவை . தெற்கு கலிபோர்னியா நாடக கல்லூரியில் விண்ணப்பம் போட்டு …
-
- 0 replies
- 390 views
-
-
“எந்தப் பிரச்சனை என்றாலும் சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி மிரட்டுறாங்க. சென்சிடிவ்வான பிரச்சனையில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னால் அவங்களே அறிக்கை விடுறாங்க, கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்து சொல்லாட்டியும், அரசியல் பேசாட்டியும் விட மாட்டேங்குறாங்க. அரசியலுக்கு வந்தாலும் மிரட்டுறாங்க.” கடந்த 6ஆம் தேதி திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வரின் முன்னால் அஜீத் பேசிய வார்த்தைகள் இவை. அஜீத்தின் பேச்சைக் கேட்ட ரஜினி எழுந்து நின்று கைத்தட்டி அவரது பேச்சை அந்த இடத்திலேயே ஆமோதித்தார். அவருடன் சேர்ந்த…
-
- 0 replies
- 662 views
-
-
தெய்வ வழிபாட்டின் வழியே உருவான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் ஆக்டோபஸ் கரங்கள் பெண்ணை அடக்கியாள ஆணுக்கு கொடுத்திருக்கும் துணிச்சலை ‘அயலி’ எதிர்க்கும் விதம்தான் ஒன்லைன். 90-களில் விரியும் கதை புதுக்கோட்டையின் பின்தங்கிய வீரபண்ணை கிராமத்தில் தொடங்குகிறது. பருவமெய்தும் பெண்களுக்கு உடனே திருமணம் என்கின்ற விநோத நடைமுறையால் அங்கிருப்பவர்கள் பலிகாடாவாகின்றனர். அத்துடன் இலவச இணைப்பாக பருவ வயதை எட்டிய பெண்கள், கோயிலுக்குள் நுழையவோ, பள்ளிக்கூடத்திற்கு செல்லவோ, ஊரைத்தாண்டி கூட அடியெடுத்து வைக்கவோ கூடாது போன்ற பழமைவாதத்தில் ஊறிக்கிடக்கிறது கிராமம். அந்த மண்ணின் மாணவி தமிழ்ச்செல்வி தான் வயதுக்கு வந்ததை மறைத்து மருத்துவராக வேண்டும் என்ற கனாவுடன் களமாடுகிறார். …
-
- 5 replies
- 665 views
- 1 follower
-
-
2006 புலம் பெயர் தமிழ் சினிமா ஒரு பார்வை. உருண்டோடிய 2006 ம் ஆண்டு புலம் பெயர்ந்த மக்களிடையே உருவான சினிமா முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான படிக்கட்டை அமைத்துக் கொடுத்த ஆண்டாகும். இலங்கை மண்ணில் நிலவிய பொருளாதார, தொழில்நுட்ப, வர்த்தக வழிமுறைகளின் பற்றாக்குறை காரணமாக தள்ளாடிய ஈழத் தமிழ் சினிமா சிறிது பெருமூச்சு விட்டு தலை நிமிர்ந்த காலம் 2006 ம் ஆண்டாகும். அலைகள் மூவீஸ் புயல் திரைப்படத்தின் பாடல்கள் தமிழகத்தில் பதிவாகியிருப்பது, அதற்கு புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களே இசையமைத்து கவிபடைத்திருப்பது, மண் படம் தற்போது தமிழகத்தில் காண்பிக்கப்படுவது, சித்துவின் துரோகி தமிழகத்தில் படமாக்கப்பட்டிருப்பவை போன்றன தமிழகத்திலும் காலடி பதிக்கும் காலத்திற்கு எடுத்துக்காட்டாகும். எதிர் …
-
- 3 replies
- 6.4k views
-
-
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது ஏன் கமல்ஹாசன் வீடியோ மூலம் விளக்கம் சென்னை தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர். காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,அற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாலை 3 மணிக்கு, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் சென்னை மைலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டது. இறுதி ஊ…
-
- 0 replies
- 832 views
-
-
நடிகை ரம்பாவுக்கும், தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், ரம்பா சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார். ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. இதையொட்டி அவர் டொரன்டோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். குழந்தை பிறந்ததையொட்டி ரம்பாவின் கணவர் இந்திரன் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கினார். - See more at: http://www.canada…
-
- 1 reply
- 1.7k views
-
-
நெடுநாளா பார்கவேண்டும், ஆனால் நல்ல கொப்பி கிடைத்தால் மட்டுமே பார்ப்பது என்றிருந்து, இன்று தான் மூடுபனி படம் பார்க்க முடிந்தது—லீவில் நிற்பதால் பகலில் பார்க்க முடிந்தது. நாங்க பாராட்டித்தான் பாலுமகேகந்திராவின் திறமை வெளிப்படவேண்டிய நிலை இல்லை, இருந்தும் மனதில் பட்ட சிலதைப் பகிர இந்தச் சிறிய பதிவு. மற்றவர்களிற்கு என்னமாதிரியோ தெரியாது, ஆனால் எனக்கு பிரியா படப்பாடல்கள் குறிப்பா அக்கரச்சீமை அழகினிலே மற்றும் டார்லிஙடார்லிங் பாடல்களைக் கேட்கும் போது ஏதோ ஒரு நேரக்குடவைக்குள் நுழைந்ததைப் போல, அதுவும் கருமேகம் நிறைந்து பகலில் நன்றாக இருட்டி, சாதுவாகத் தூறல் தொடங்கி ஆனால் இன்னும் மழை பொழியத் தொடங்கு முன்னான ஒரு மழைநாளில் ஊரில் பூத்துக்குலுங்கும் சீமைக்கிளுவை மரத்தின் கீழ் நின…
-
- 10 replies
- 6.9k views
-
-
’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யத…
-
- 1 reply
- 484 views
-
-
'ராட்சசி' தமிழ்த் திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மலேசியக் கல்வி அமைப்பில் அமல்படுத்தப்பட்டு வரும் புது மாற்றங்கள், கொள்கைகள் இப்படத்தில் அழகாக சித்தரித்திருக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை@DRMASZLEEMALIK/FACEBOOK 'ராட்சசி' படத்தில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்களையும் காட்சிகளையும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். மலேசிய பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் மலேசியாவில் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது அமைச்சர் மஸ்லீ மாலிக்கின் பெரும் விருப்பமாகும். இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமலுக்கு வருகிறது. …
-
- 0 replies
- 627 views
-
-
நடிகை புளோராவைப் போல விசா மோசடியில் ஈடுபட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டுத் தூதரகம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இப்படிப்பட்ட 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு அதிரடித் தடை வித…
-
- 1 reply
- 955 views
-
-
'பீப்' பாடல் சர்ச்சை: சிம்பு ரசிகர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி எங்கள் தலைவர் சிம்புவை சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறி, அவரது வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் 4 பேர் முன் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியிருப்பதாக கூறப்படும் 'பீப்' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் சிம்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வரிகள் இருப்பதாக கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு…
-
- 22 replies
- 2k views
-
-
“உலகத்தை தமிழன் ஆளுவான்” -டென்மார்க் தமிழர் எடுக்கும் படம் “உலக நாடுகள் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கென்று சொல்லிக் கொள்ளதான் ஒரு நாடு இல்லை” கண்களில் கனவுகளும் ஏக்கங்களும் மின்ன பேச ஆரம்பிக்கிறார் கி.செ.துரை. ஆனால்இ உலகத்தையே ஒரு குடையின் கீழ் ஆளப்போகிறான் தமிழன். இது என் கனவு மட்டுமல்ல. திருமூலரும்இ திருவள்ளுவரும் கூட இதைதான் சொன்னார்கள் என்கிறார் துரை. டென்மார்க்கில் வசிக்கும் இந்த இலங்கை தமிழர்இ தனது கனவை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் இளம் புயல். உலகத்தை தமிழால் வாழ வைப்போம் என்பதுதான் படத்தின் மையக்கரு. இன்டர்நெட் மூலம் உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர பாடுபடும் ஒரு இளைஞன் ஒரு தனி தீவில் தனது திட்டத்தை செய…
-
- 10 replies
- 2.5k views
-
-
-
- 2 replies
- 554 views
-
-
Malaimalar Arasiyal Post
-
- 0 replies
- 1.1k views
-
-
திரை விமர்சனம்: குற்றமே தண்டனை விதார்த்துக்கு கண்ணில் பிரச்சினை. அவரது பார்வை வீச்சின் சுற்றளவு மிகவும் குறைவு. குழாய் வழியாகப் பார்ப்பதைப்போலதான் (Tunnel Vision) அவரால் பார்க்க முடியும். பக்கவாட்டுக் காட்சிகள் தெரியாது. படிப்படியாக அந்தப் பார்வைத் திறனும் மறைந்துவிடும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே தீர்வாக இருக்கும் என்கிறார் மருத்துவர். இதற்கு அவரது வருமானத்துக்கு மீறிய பெரும் தொகை தேவைப்படுகிறது. விதார்த் வசிக்கும் வீட்டின் கீழ்தளத்தில் வசிக்கிறார் ஐஸ்வர்யா. அவரது வீட்டுக்கு ரஹ்மானும் மற்றொரு இளைஞரும் அவ்வப் போது வந்து போகின்றனர். திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா கொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு என்ன…
-
- 0 replies
- 365 views
-
-
-
கொரோனா: மருத்துவமனையில் தமன்னா மின்னம்பலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டத…
-
- 8 replies
- 894 views
-
-
குற்றமே தண்டனையா? வெற்றி ‘குற்றமே தண்டனை’யின் மையமாக பூஜா தேவர்யாவின் பாத்திரத்தைச் சொல்லலாம். அப்பாத்திரத்தின் குற்றம் ரவிச்சந்திரன் பாத்திரத்தை ‘விதார்த்’ காதலிப்பதாகவும் தண்டனையாக அவனையே திருமணம் செய்துகொள்வதுமாக இருக்கிறது. இளம்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை என ஃபேஸ்புக்கில் அவ்வப்போது பகிரப்படும் மீம்களில் கொஞ்சம் குற்றவுணர்ச்சியைச் சேர்த்து எடுக்கப்பட்டதுபோல் இருக்கிறது ‘குற்றமே தண்டனை’ திரைப்படம். ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப் படுமளவு, பெண்கள் திராவகத் தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் ஆளாகும்போது இத்தகைய மனோபாவங்களை வளர்ப்பதில் தமிழ் சினிமாவின் பங்கு குறித்தும் லேசாகவோ பெரிதாகவோ விவாதிக்கப்படுகின்றது. பெரும்பாலும் செல்வராகவன் உள்ளிட்டோர…
-
- 0 replies
- 402 views
-