வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
நொறுங்க இன்னொரு இதயம் வேண்டுமா? பிப்ரவரி 14: காதலர் தினம் செல்போன் சார்ஜரைத் தவிர வேறு எதனாலும் பிரித்துவிட முடியாதது நவீன காலத்தின் காதல். அதையும் நூற்றாண்டைத் தாண்டிய இந்திய சினிமாதான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகச் சந்திக்கும் இடங்கள், சூழ்நிலைகள் ஆகியன, இந்தியாவின் பெருநகரங்களைத் தவிர சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் இன்னமும் சந்தேகத்துடன் பார்க்கப்படும் சூழ்நிலையே உள்ளது. சாதி தாண்டிய காதலைக் கண்டிக்கும் இந்திய வீடுகளில் விரகமும் தாபமும் தொனிக்கும் பாடல்கள் வழியாகக் காதலை 24 மணி நேரமும் கனவு காண்பது ஒரு முரண்பாடுதான். 90 சதவீதம் …
-
- 0 replies
- 435 views
-
-
நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் நடந்தது என்ன? - நோர்வே தமிழ் திரைப்படக்குழு அண்மையில் நோர்வேயில் நடந்த திரைப்படவிழா தொடர்பான விமர்சனங்கள் பல வந்துள்ளது. இவ்வகையான விமர்சனங்களுக்கு அடிப்படையாக இருப்பது இரு வேறு வகையான சமுதாயக் கட்டமைப்பு என்பதனைப் புரியக்கூடியதாகவுள்ளது. நோர்வே தமிழ் திரைபட விழாவின் நோக்கம் உலகத் தமிழர்களின் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஒளிப்படங்கள் போன்றவற்றில் தரமானவைகளைத் தெரிந்து விருதுவழங்கி கௌரவிப்பது. வளர்ந்துவரும் உலகத் தமிழர்களின் படைப்புகளை இனங்கண்டு, கலைஞர்களை கௌரவிப்பதன் மூலம் இளம் கலைஞர்களை ஊக்குவித்தல் மற்றும் கௌரவித்தல். நோர்வே திரைப்படவிழா எவ்வாறு இயங்குகின்றது திரைப்பட…
-
- 2 replies
- 694 views
-
-
Wednesday, February 23rd, 2011 | Posted by thaynilam நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் ‘ எல்லாளன் ‘ இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது. இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. …
-
- 0 replies
- 710 views
-
-
தமிழ்வானத்தின் ஆதரவில் இன்று வெற்றிகரமாக நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம் திரையிடப்பட்டது.;
-
- 18 replies
- 4.4k views
-
-
பகாசூரன் - சினிமா விமர்சனம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BAGASURAN TEASER நடிகர்கள்: செல்வராகவன், நட்டி, ராதாரவி, தரக்ஷி, தேவதர்ஷினி; இசை: சாம் சி.எஸ்.; இயக்கம்: மோகன் ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் பகாசூரன். மோகன் ஜியின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட ஜாதி சார்ந்த பார்வைக்காக பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தப் படம் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது. இளம் பெண் ஒருவர் தனது காதலனின் வற்புற…
-
- 1 reply
- 474 views
- 1 follower
-
-
பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக, வன்கொடுமை சட்டத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கைது செய்தனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், செக்ஸ் தொல்லை கொடுப்பதாக” கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் நேற்று ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்தனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். இது பற்றி ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது… என் மீது என்ன வழக்கு …
-
- 4 replies
- 1.6k views
-
-
பக்தி சொற்பொழிவாளரான சிவக்குமார் நடிகர் சிவக்குமார் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தன்னுடைய 75 ஆவது பிறந்த நாளான இன்று அவர் பழனி தண்டாயுதபாணி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் போது அவருடன் நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, அவரது மனைவி மற்றும் பேரன் பேத்திகள் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நடிகர் சிவக்குமார் ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாபாரதம் குறித்த தன்னுடைய சொற்பொழிவை 2 மணிதியாலம் மற்றும் 15 நிமிடங்கள் வரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பேசி பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார். இதற்கு முன்னர் சிவக்குமார் மற்றொரு மாபெரும் இதிகாசமான இராமாயணத்தை இரண்டேகால் மணிதியாலத்தில் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவக்கும…
-
- 1 reply
- 439 views
-
-
திரை விமர்சனம் ‘பக்ரீத்’...நடிகர் விக்ராந்துக்கு வாராது வந்த மாமணி.! 5 பாட்டு, 6 பைட்டு, ஏழெட்டு காதல், காமெடிக் காட்சிகள் என்று ரெகுலர் பார்முலாவுக்குள் தமிழ் சினிமா மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் எப்போதாவது ஆறுதலாக சில படங்கள் வருமே நிச்சயமாக அந்த வகையறாக்களில் ஒன்றுதான் இந்த ‘பக்ரீத்’. தன் பங்காகக் கிடைத்த பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து பயிர் வளர்க்க நினைக்கும் ஹீரோ என்கிற அளவில் விக்ராந்தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. “பேசாமல் நிலத்தை விற்று லாபம் பாருங்கள்…” என்று பரிந்துரைக்கும் வங்கி மேலாளரிடம், “நல்ல பூமிங்க அது. விவசாயம் செய்யப்போற கடைசி தலைமுறை நாமதான்…” என்று பதில் சொல்லும் விக்ராந்தின் குரலில் தெரியும் கழிவிரக்கம் வீழ்ந்துவிட்ட …
-
- 0 replies
- 506 views
-
-
நேற்று என்ன படம் பார்க்கலாம் என்று யாழ் சோழியன் மாமாவிட்ட கேட்டன். பசங்க, நாடோடி இரண்டும் நல்ல படங்கள் என்று சொன்னார். சரி என்று கேட்டுப்புட்டு எனது மூன்று பெறாமக்கள் பசங்களோட சேர்ந்து பசங்க பார்த்தன். படம்.. அந்தமாதிரி சூப்பராய் இருந்திச்சிது. நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு அருமையான படம் பார்த்து இருந்தன். ஒருசில வழமையான தமிழ் சினிமாத்தனம் தவிர, இந்தப்படம் உண்மையில மூலாதாரத்தை முட்டிவிட்டிது. படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்க நமது பள்ளிக்கூட வாழ்விலும் இப்படி நடந்த பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள், மனஸ்தாபங்கள், அத்தோட சந்தோசமான சம்பவங்கள் எல்லாம் நினைவுகளில பசுமையாக வந்துபோச்சிது. படத்திண்ட கருப்பொருள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறதோட.. படம…
-
- 13 replies
- 2.4k views
-
-
-
[size=3][size=4]சென்னை: பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார் நடிகை நயன்தாரா.[/size][/size] [size=3][size=4]பிரபுதேவா விவகாரம் முடிந்த ஒன்றாகிவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.[/size][/size] [size=3][size=4]விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார். புது இயக்குனர் மோகன் தனது படத்தில் மம்முட்டி-நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சித்தார். நயன்தாராவுக்கு கதை பிடித்ததாகவும் மம்முட்டியுடன் நடிக்க சம்மதம் என்று கூறிவிட்டாராம். ஆனால் மம்முட்டி இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]ஒரு கோடி சம்பளம், கேரள வெளியீட்டு உரிமை... இதுதான் மம்முட…
-
- 0 replies
- 580 views
-
-
பள்ளிக்கூடத்தில் நடிக்கும் நரேன்..! மேற்கத்தைய நாகரிக்கத்தை விதைக்கவும் ஆபாசத்துக்கும் பெண்களின் உடலைக் காட்டுவதற்கும் காதல் என்று அலையவிடுவதற்கும் திரைப்படங்களை வர்த்தக நோக்கில் தயாரிக்கும் தென்னிந்திய சினிமாக்காரர்கள் மத்தியில் தங்கபச்சான் பள்ளிக்கூடம் என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை மையமாக வைச்சு உணர்வுபூர்வமான படத்தை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் சினேகா நாயகியகா நடிக்கிறாராம்..! படம் மிகவும் மாறுபட்ட பரிமானத்தைக் கொண்டிருக்கும் என்று தங்கப்பச்சன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்..! தமிழுணர்வுள்ள தயாரிப்பாளர்கள் சேரன் தங்கப்பச்சான் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..! இதேவேளை சேரன் நாயகனாக நடித்த படம் ஒன்றும் வெளிவந்துள்ளது. மாயக்கண்ணாடி என்ற ப…
-
- 0 replies
- 813 views
-
-
பஞ்சுஅருணாசலம் மரத்தின் கீழ் வளரும் தாவரத்திற்கு வளர்ச்சி இருக்காது என்பார்கள். ஆனால் கண்ணதாச விருட்சத்தின் கீழிருந்த இந்த (பஞ்சு அருணாசலம்) தாவரம்; பாடலாசிரியர், கதாசிரியர், கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் – என்றபடி சினிமாவுலகில் படிப் படியாக வளர்ச்சியடைந்து நல்ல பலனை நமக்கு தந்தது. இந்த சாதனைகளையெல்லாம் தாண்டி, இளையராஜா என்ற இசைப் புதையலை கண்டு பிடித்ததுடன், கன்னட இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் என்பவரையும் தமிழுக்கு அறிமுகப் படுத்தினார் பஞ்சு. 1. பஞ்சு அருணாசலம் – வாழ்க்கைகுறிப்பு காரைக்குடியை அடுத்த சிறுகூடல்பட்டி என்ற ஊரில் வசித்துவந்த கண்ணப்பனின் புதல்வராக 1941 இல் பிறந்தார் பஞ்சநாதன் என்ற பஞ்சுஅருணாசலம். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனும…
-
- 6 replies
- 5.3k views
-
-
படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன்: கார் சர்ச்சைக் குறித்து அமலாபால் படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன் என்று கார் சர்ச்சைக் குறித்து அமலாபால் தெரிவித்துள்ளார். வாகனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த வரியைப் பெற புதுச்சேரியில் தங்கி இருப்பது போன்று ஆவணங்களைத் தயாரித்து திரை நட்சத்திரங்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பலரும் உயர் ரக கார்களைப் பதிவு செய்து வருவது உறுதியாகியுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் என புதுச்சேரியில் கார் பதிவு செய்தோர் விவரங்களை போலீஸார் திரட்டி வருவதால் பலர் கலக்கமடைந்துள்ளனர். இந்த சர்ச்சைத் தொடர்பாக அமலாபால் தனது…
-
- 0 replies
- 228 views
-
-
படங்களில் நடிக்க ஓராண்டு தடை - பிரகாஷ்ராஜ் ஆவேசம் சனி, 26 ஏப்ரல் 2014 (16:39 IST) தெலுங்குப் படங்களில் நடிக்க பிரகாஷ்ராஜுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குனர்கள் சங்கம். இது குறித்த விசாரணை வரும் 28ஆம் தேதி நடக்கிறது. ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஆகடு படத்தில் பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல்நாள் ஷுட்டிங்கின் போது பிரகாஷ்ராஜுக்கும் படத்தின் இணை இயக்குனர் சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் கடுமையான வார்த்தைகளில் பரஸ்பரம் திட்டிக் கொண்டனர். இதனையடுத்து பிரகாஷ்ராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இணை இயக்குனர் சூர்யா இய…
-
- 1 reply
- 1k views
-
-
வடிவேலு 25 வித்யாசமான ரோல்களில் நடிக்கும் புதியபடம் "உலகம்". இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இப்படத்தின் தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை பா.ம.கா.வை கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோசேஷன் நடைபெற்றது. போட்டோக்களை பார்த்து வடிவேலு பிரமித்து போனாராம். மேலும் இயக்குநர் ஆதம் பாவாவின் கற்பனையை வெகுவாக பாராட்டினாராம். இதற்கிடையில் செல்வராகவன் "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கேள்விபட்ட "உலகம்" படத்தின் தயாரிப்பாளரும், பா.ம.க., முக்கிய பிரமுகரும், செல்வராகவனை நேரில் சந்தித்து என்னுடைய படத்திற்கு ஏற்கனவே "உலகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது நீ…
-
- 0 replies
- 482 views
-
-
கதையை சொல்வியா?: தியேட்டர் வாசலில் வாலிபரை அடித்து நொறுக்கிய அவெஞ்சர்ஸ் ரசிகர்கள். சீனாவில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து கதை சொன்ன நபரை தியேட்டரில் வரிசையில் நின்ற மக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் ஓடும் தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் ஹாங்காங்கின் காஸ்வே பேயில் உள்ள தியேட்டரில் அவெஞ்சர்ஸ் படம் பார்த்துள்ளார்.படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர் கிளைமாக்ஸ் காட்சி என்ன என்பதை சத்தமாக கூறியுள்ளார். படம் பார்க்கும் ஆவலில் தியேட்டரில் வரிசையில் நின்றவர்கள் அந்த நபர் சத்தமாக கதையை சொன்னதை கேட்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேர்ந்து அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். அவருக்க…
-
- 0 replies
- 540 views
-
-
யானை குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப் பாத்து குசலம் விசாரிக்குமாம்... இந்தப் பழமொழி சினிமாவில் அடிக்கடி அரங்கேறுவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம். அரசியல், சினிமா துறையினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள நேரமாகப் பார்த்து, அவரது வாழ்க்கைக் கதையைப் படமாக்கப் போவதாக ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. படத்துக்குத் தலைப்பு அம்மா! இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறதாம். ஒரு இளம்பெண் எப்படி சினிமாவுக்குள் நுழைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு எப்படி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறார் என்பதுதான்…
-
- 0 replies
- 524 views
-
-
ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில், விக்ரம்பிரபு நடித்துவரும் படம் வாகா. காஷ்மீர் பகுதியில் 69 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. காஷ்மீர் எல்லைப் பகுதியான வாகா என்னும் இடத்தில்தான் படத்தின் முக்கால் பகுதிக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளன. திடீரென்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியென்பதால், அந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய திக் திக் அனுபவங்களை படத்தின் ஹீரோ விக்ரம்பிரபு நிருபர்களிடம் பகிர்ந்துகொண்டார். “படப்பிடிப்பு நடந்த 69 நாட்களுமே, ராணுவ அதிகாரிகள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். தங்குமிடத்திலிருந்து படப்பிடிப்புக்குச் சென்று, திரும்பிவரும் வரையிலும் அவர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தனர். இதற்கான ஏற்…
-
- 0 replies
- 378 views
-
-
படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி எர்ணாகுளம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநாதி போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதனிடையே அவர் தற்போது வரவிருக்கும் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேரள் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் டொவினோவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=2] ‘அன்னக்கொடியும், கொடிவீரனும்’ படத்திற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய கண்டுபிடிப்பு சுபிக்ஷா சாதனா. [/size][size=2] கர்நாடகத்தின் பெல்லாரியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐந்தரை அடி உயர அழகி. அனுஷ்காவின் தங்கை போல் இருக்கிறார். மாலை பொழுது ஒன்றில் அவரை நேரில் சந்தித்தோம். [/size] [size=2] "உங்களை பற்றி....?”[/size][size=2] "என்னுடைய சொந்த ஊர் கர்நாடகத்திலுள்ள பெல்லாரி மாவட்டம். ஆனால், என்னுடைய தாய்மொழி தெலுங்கு. 3 வயதிலே பரநாட்டியம் ஆட கற்றுக்கொண்டேன். சிறுவயதில் இருந்தே சினிமா ஆசை இருந்தது. அந்த தேடலின் வெற்றியே இப்போது இயக்குநர் இமயத்தின் நாயகி ஆகியிருக்கிறேன்!”[/size] [size=2] வாத்தியரான ரஜினி[/size] [size=2] "எப்படி இவ்வளவு அழகாக தமி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. தற்போது ‘படம் பேசும்‘ என்ற படத்தில் சக்தி ஜோடியாக நடிக்கிறார். ராகவா இயக்குகிறார். இதனை நாராயணபாபு, பூர்ணிமா, வாசன் எஸ்.எஸ். தயாரிக்கின்றனர். இதில் நடிப்பது பற்றி பிரஸ் மீட்டில் பூர்ணா கூறியதாவது: இதுவரைக்கும் ஆறு படங்களில் நடிச்சுட்டேன். எதுவுமே ஓடல. ஆனால் இந்த படம் எனக்கு தமிழ்சினிமாவில் பெரிய இடத்தை கொடுக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் ராகவா எனக்கு மெயிலில் அனுப்பி 2வது ஹீரோயினாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தேன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனது…
-
- 0 replies
- 543 views
-
-
காவல்காரன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அசின் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. அசினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவே இந்த மயக்கத்திற்கு காரணம் எனத் தெரிவக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அசின் சிகிச்சைகளைத் தொடர்ந்து தற்போது ஓய்வெடுத்து வருவதாக தெரிய வருகிறது. காரைக்குடி பகுதியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலதிக செய்திகள்: http://www.eelamweb.com
-
- 12 replies
- 1.2k views
-
-
படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை? By NANTHINI 25 DEC, 2022 | 11:06 AM படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. பொலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் துனிஷா சர்மா (20). அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார். மும்பை அருகில் உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) டிவி நிகழ்ச்சியொன்றின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா கலந்துகொண்டார்.…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் ‘பேராக்’ கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை மழையும் வெயிலும் மாறி மாறி ஆசீர்வதிக்கும் மலேசியாவின் 4-வது பெரிய மாநிலம் ‘பேராக்’. குளிர் மலை, வயல்வெளி, விவசாய பூமி, அழகுக் கட்டிடங்கள், வனப்புமிகு நதிக்கரை, வசீகரத் தீவு, மிளிரும் அரண்மனைகள் என இயற்கை வரம்பெற்ற நிலப்பிரதேசம். இயற்கை தனது எல்லா வண்ணங்களையும…
-
- 0 replies
- 285 views
-