வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் படம் தலைவா. விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், கதாநாயகி அமலாபால், சத்யராஜ், சரண்யா, மனோபாலா, ஆர்.பி. சவுத்ரி, எஸ்.ஏ. சந்திரசேகர், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தலைவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். முன்னதாகத் தலைவர்களைப் பற்றிய லேசர் வரைகலையில் பிரபாகரன் காட்டப் படாததில் ஏற்கனவே பலர் அதிருப்தியில் இருக்க, புரட்சித் தமிழன் மற்றும் ஈழ ஆதரவுப் பிரச்சாரங்களில…
-
- 0 replies
- 2.6k views
-
-
நீயா - நானா விவாத நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்துக்கு உலகம் முழுவதும் பரவலான ரசிகர்கள் உண்டு. நியூடெல்கி டெலிவிஷன் நிறுவனத்தில் செய்தியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய கோபிநாத், தற்போது ஒரு எபிசோட் நிகச்சியை தொகுத்து வழங்க ரூபாய் 50 ஆயிரம் ஊதியம் வாங்கும் காஸ்ட்லி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். இதற்கிடையில் இவரை ஹீரோவாக நடிக்க வைக்க பலரும் முயன்றனர். ஆனால் தனது உடல் பருமனை மனதில் வைத்து ஹீரோ வாய்ப்புகள் எதையும் அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கிடையில் இயக்குனர் சமுத்திரனியின் அழைப்பை தட்டமுடியாமல் நிமிர்ந்து நில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ‘நிருபர் கோபிநாத்தாகவே’ நடித்து முடித்திருக்கிறார் கோபிநாத். See more at: http://vuin.com/news/tamil/anchor-gopinath-be…
-
- 16 replies
- 2.6k views
-
-
'96 திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் தான் கிட்டியது. அக்டோபர் 04ல் இத்திரைப்படம் வெளியானதில் இருந்து முகநூல் மற்றும் நண்பர்கள் வாயிலாக இத்திரைப்படத்தின் கதை ஏற்கெனவே ஓரளவு தெரிந்திருந்தாலும், படம் பார்க்கும் போது கிடைத்த அனுபவம் புதுவிதம். கடந்த ஓரிரு வருடங்களாக காதல் / நட்பு சார்ந்த, ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான திரைப்படங்கள் தற்போது வெளிவருவதில்லையே என்றெல்லாம் சலித்துக்கொண்டு, விறுவிறுப்பான, மர்மக் கதையம்சம் (Thriller / Crime / Mystery) அல்லது அவ்வப்போது வெளியாகும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட தமிழ் சினிமாவைத் தேடித் தேடிப் பார்த்த எனக்கு '96 திரைப்படம் ஓர் புத்துணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்தது. 2000ஆம் ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்…
-
- 19 replies
- 2.6k views
- 1 follower
-
-
வடிவேலு ஏன் தேவைப்படுகிறார்? மின்னம்பலம் விவேக் கணநாதன் 'வடிவேலு இயங்காத தமிழகம்’ என்பதை ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடவுளைக் கல் என சொல்வது எப்படி மதநம்பிக்கைக்கு ஒரு பாவச்செயலோ, அப்படி வடிவேலுவை புறக்கணித்துவிட்டு வாழ்க்கையை நடத்துவதும் பொதுவாழ்வின் ஒரு பெரும்பகுதியை புறக்கணிக்கும் பாவச்செயல் என்றே பார்க்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் உளவியலிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்ட ஒரு கலைஞனாக வடிவேலு இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது. இந்த ஏக்கத்தின் பின்னணியில், கடந்த 100 ஆண்டுகளில் பரிணாமம் அ…
-
- 6 replies
- 2.6k views
-
-
ஈராக்கில் ஸத்தாம் ஹஸைன் தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட ‘பயாலஜிகல் வெப்பன்ஸ் - உயிர்கொல்லி ஆயுதங்களைக்’ கண்டுபிடிக்க ஈராக்கினுள் நுழைந்து அலைந்த ஐக்கிய நாடுகள் சபை சோதனையதிகாரியின் பெயர் பெலிக்ஸ் (Felix). ‘எப்’அவரது பெயரின் முதலெழுத்து. கமல்ஹாஸனின் தசாhவதாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸின் நோக்கத்திற்கு மாறாக உயிர்கொல்லி ஆயுதங்களை தீவிரவாதிகளிடம் விற்க அலையும் முன்னாள் சிஐஏ அதிகாரியின் பெயர் பிளெச்சர் (Fletcher). பிளெச்சரின் முதல் எழுத்து ‘எப்’ எனவே துவங்குகிறது. பிளெச்சர்-பெலிக்ஸ். பிளெச்சர்-பெலிக்ஸ். பிலெ-பெலி-. பிலெ-பெலி. தொடர்ந்து மாற்றி மாற்றி உச்சரித்துப் பாதருங்கள். ஒன்று போலவே இருக்கிறது இல்லையா? பெலிக்ஸ் அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித…
-
- 1 reply
- 2.6k views
-
-
மேலும் புதிய படங்கள்ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திரவிழா படத்திலிருந்து மாளவிகா விலகி விட்டாராம். அவர் கர்ப்பமாகியுள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா. திரைப்படங்கள் தவிர சன் டிவியில் சூப்பர் டான்ஸர் நிகழ்ச்சியில் நடுவராகவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீகாந்த்துடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த இந்திர விழா படத்திலிருந்து மாளவிகா திடீரென விலகியுள்ளார். ராஜேஷ்வர் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்திர விழாவில் நமீதா நாயகியாக நடிக்கிறார். முழு நீள கவர்ச்சியில் நமீதா நடித்தபோதிலும், மாளவிகாவுக்கும் படத்தில் ஒரு ரோல் கொடுத்து அவரையும் புக் செய்திருந்தனர். மாளவி…
-
- 8 replies
- 2.6k views
-
-
முத்த காட்சி தேவையெனில் அதற்கும் தயார் என்கிறார் பிரியாமணி
-
- 2 replies
- 2.6k views
-
-
இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால், அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர், 'வாழ்த்துகள்' என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிட, விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி. பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. 'நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போக, மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட…
-
- 10 replies
- 2.6k views
-
-
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் நிதின்சத்யா, சிந்து துலானி நடித்து வரும் படம் பந்தயம்.. இந்த படத்தில் இலங்கையின் நாட்டுப்புற படலான (பாய்லா) சுராங்கனி சுராங்கனிக்கா மாலுகண்ணா வா.. மாலுமாலு மாலு சுராங்கனிக்கா மாலு.. என்ற பாடல் இடம்பெறப்போகிறது. இப்பாடல் காட்சியில் நிதின் சத்யாவும், சிந்து துலானியும் ஆடுகிறார்கள். மேலும் இப்பாடலை கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள், தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள், கூலித் தொழிலாளிகள், குழந்தைகள் என பல தரப்பினரும் பாடுமாறு படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தவிர மேக்னா நாயுடு ஆடும் ஒரு பாடலும், ஓ போடு ராணி ஆடும் இன்னொரு பாடலும் படத்தில் இடம்பெறுகிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;…
-
- 9 replies
- 2.6k views
-
-
மறைந்த நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி எம்.பி.சாந்தி, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல கோர்ட்டில் எம்.பி.சாந்தி (வயது 50) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: நான் ஈக்காட்டுத்தாங்கல் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறேன். எனது கணவர் ஜெரால்ட் ஆனந்தபாபு, நடிகர் பீட்டர் நாகேஷின் மகன். எங்களுக்கு 8.12.85 அன்று கிறிஸ்துவ முறைப்படி விஜயசேஷ மகாலில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். திருமணமாகி 3 மாதங்கள்தான் நான் சந்தோஷமாக இருந்தேன். கணவரின் உண்மையான செயல்பாடுகளை அறிந்த பிறகு எனது சந்தோஷம் பறிபோனது. என்னுடன் அவர் இதயப்பூர்வமாக வாழ்ந்ததில்லை. ஆனந்த்பாபுவி…
-
- 0 replies
- 2.6k views
-
-
குக்கூ -விமர்சனம் அல்ல படிதல் மொழி இன ஒடுக்குதலை அறிந்ததாக சொல்லி போராடுபவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் அமைதி காக்கும் பொழுது உண்மையில் அவர்கள் போராளிகளை போன்று நடிப்பவர்கள் எனப் புரிந்து கொள்வோம்.. அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டிக்க துணிந்து வருபவனை நோக்கி நீ அந்த சாதி ..அதனால் வராதே என்பவனையும் போராளிகளாக சொல்லப்படுவதை மறுப்போம்.. மேலே சொல்லப்பட்ட கோபத்திற்கான பதிலை குக்கூவில் தேட வேண்டாம்..குக்கூ வேறு ஒன்று... குக்கூ போன்ற படங்களை விமர்சிப்பது பிரச்சனை இல்லை...ஆனால் எந்த சூழலில் என்பதைக் கூட புரியாத பதர்களின் மேட்டிமைத்தனமான அறிவு சீவி நிலையை மேலே சொன்ன கோபங்களோடு பொருத்தி பார்க்கவும்... ” படம் நல்லாருக்கு..ஆனா செகண்ட் ஆஃ…
-
- 7 replies
- 2.6k views
-
-
ஈழத் தமிழர்களின் இன்னல்களை படம்பிடித்த 'ஆணிவேர்' நெடுங்குருதியின் ஈரம் வற்றாத, பிணவாடைகளின் நாற்றம் நிற்காத, பிஞ்சுகளென்றும் பாராமல் அவைகளின் மேனியை துளைத்தெடுக்கும் கண்களும் கருணையுமற்ற ராணுவ துப்பாக்கிகள், ஓய்வில்லா யுத்தம், ஒங்கி ஒலிக்கும் குண்டுகளின் சத்தம். ஈழத்து மணணில் இன்னும் மாறாத காட்சிகளும் காயங்களும்தான் இவையெல்லாம். இதனை உள்ளது உள்ளபடி சித்தரிக்கும் படம்தான் 'ஆணிவேர்'. தமிழுக்கு 'உதிரிழக்களை' கொடுத்த இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான்தான் ஆணிவேரின் அஸ்திவாரம். இவருக்காக தோள் கொடுத்த நட்சத்திரங்கள் நந்தா, மதுமிதா.சமீபத்தில் லண்டனில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ள 'ஆணிவேர்' தமிழ் பத்திரிக்கைகளுக்காக சமீபத்தில் திரையிடப்பட்டது. கிளிநொச்சி…
-
- 14 replies
- 2.6k views
-
-
திராவிட திரைப்பட இயக்கம் - யமுனா ராஜேந்திரன் மந்திரிகுமாரி தொடங்கி பெண்சிங்கம் வரை தமிழ்த்திரையுலகில் கலைப்பயணம் மேற்கொண்டுவரும் தலைவர் கலைஞரின் திரையுலக அனுபவம் இளம் படைப்பாளிகள் பார்த்துப் பின்பற்ற வேண்டிய புனித ஏற்பாடு. இரா. பாவேந்தன் திராவிட சினிமா : அக்டோபர் 2009 அக்டோபர் புரட்சியின் பிதாமன் விளாதிமிர் இலியிச் லெனின், பிற்பாடாக இரும்புக் கரம் கொண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்த ஜோஸப் ஸ்டாலின், ஈரானியப் புரட்சியின் தந்தை அயதுல்லா கொமேனி, கியூபப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ஃபிடல் காஸ்ட்ரோ என சமூக மாற்றத்தை முன்னுந்தித் தள்ளிய புரட்சியாளர்கள் அனைவருமே, வெகுஜன உளவியலை உருவாக்குவதில் சினிமாவின் பாத்திரத்தை உணர்ந்து கொண்டிருந்தார்கள். தாம் விரும்பிய ச…
-
- 0 replies
- 2.6k views
-
-
காதுல ஏன் ரத்தம் .. ? ம்ம்.. அதே ரத்தம்.! இந்த படத்திற்கு ஏண்டா வந்தம்.? என்டு நொந்த போன தருணங்கள் .. இடை வேளை நேரத்தில் ஆளை விட்டா போதும் என்ர சாமி .! என்டு ஓடி வந்த நேரம்கள் .. இந்த றப்பா படத்திற்கு ஓன் லைனில் அவசரப்பட்டு பணம் கட்டி போட்டமே .. வட போச்சே..! என்டு நொந்து நூடூல்ஸ் ஆன தருணம்கள். 😢 சுருக்கமாக தாங்கள் பார்த்த அந்த தரமான பழைய / புதிய திரை காவியத்தின் (மொக்கை.!) விமர்சனத்தை / அனுபவத்தை .. கள உறவுகள் எழுத்துங்களேன் .. அல்லது வேறு யாராவது கழுவி ஊற்றி இருந்தால் இணையுங்களேன் . அதே ரத்தத்தை நாமும் பார்ப்பம்..ரசிப்பம்..👍 நன்றி.! அக்கரை சீமையிலே (1993) அப்போது (1990's) விஜயகாந்திற்கு மாற்று என்று அறியபட்ட செவ்வாழை சரவணன் நடித்த இந்த ப…
-
- 9 replies
- 2.6k views
-
-
இன்று மாசு இல்லாத மணியை பார்த்தேன். பொழுதுபோகாவிட்டால் நீங்களும் பார்க்கலாம். படத்துக்கு புள்ளிகள்; கதை: 30% பகிடி: 50% பாடல்: 65% நடிப்பு: 70% வேற யாரும் ஏற்கனவே பார்த்து இருந்தால் எப்பிடி இருந்திச்சிது எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.
-
- 8 replies
- 2.6k views
-
-
நண்பர்களே, பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, 'விறலி விடு தூது' என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் ...கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும். இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப்பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்…
-
- 6 replies
- 2.6k views
-
-
அடுத்தடுத்து வெற்றி பெற்று வரும் நயன்தாரா, தென்னிந்தியா வின் கனவுக் கன்னியாகத் திகழ்கிறார். வல்லவன் படப்பிடிப்புத் தளத்தில் அவரைச் சந்தித்த போது: கோலிவுட்டின் கவர்ச்சிக் கன்னியாக இருக்கிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (சிரித்தபடி) கவர்ச்சிக்கான வரையறை, இலக்கணம் எதுவும் எனக்குத் தெரியாது. செக்ஸ் அடையாளத்தை விட, நல்ல நடிகை என்று பெயர் எடுப்பதையே விரும்புகிறேன். ஆனால், மலையாளப் படங்களில் நீங்கள் நடித்ததற்கும் தமிழ்ப் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உ ள்ளதே? ஆமாம். என் மேக்-அப் தான் அதற்குக் காரணம் என்று நினைக் கிறேன். என் மேக்-அப், சிகையலங்காரம், அலங்காரப் பொ ருட்கள் ஆகியவற்றுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கி றேன். எ…
-
- 1 reply
- 2.6k views
-
-
ரஜினியின் ‘பேட்ட’யில் தெறிக்கும் சாதியம்! - ஜெ.வி.பிரவீன்குமார் இந்திய மனங்களில் இன்று புரையோடிப் போயிருக்கும் சாதிய, மதவாத, பெண்ணடிமைத்தனப் போக்குகளை ஊக்குவித்ததிலும் அந்தக் கொடிய கட்டமைப்பு உடைபடாது காத்ததிலும் வழிவழி வந்த பல புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அவற்றின் நீட்சியாகப் பல புராண நாடகங்களும் அதையே வலியுறுத்தின. அவற்றை அடியொற்றி உருவான சினிமா மட்டும் சும்மா இருந்துவிடுமா? சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் படங்கள் அரிதினும் அரிதாக மட்டுமே வெளியாகும் சூழலில், சுய சாதியைப் போற்றும், பிற சாதிகளைக் கீழ்மைப்படுத்தும் படங்களைக் கணக்கில்லாமல் வெளியிட்டுத்தள்ளும் வேலையை ஒருபுறம் செவ்வனே செய்துதான் வருகிறது தமிழ் சினிமா. ரஜினிகாந்த் நடிப்பில் அண்…
-
- 10 replies
- 2.6k views
-
-
பழம்பெரும் நடிகை காந்திமதி மரணம் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 9, 2011, 10:36 சென்னை: பழம்பெரும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகை காந்திமதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காந்திமதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி. இவரது வசன உச்சரிப்பு வெகு பிரபலமானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் அம்மா வேடத்தில் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் பாரதிராஜா…
-
- 15 replies
- 2.6k views
-
-
"கேளடி கண்மணியில்" எஸ்.பி. பீ மூச்சு விடாமல் பாடிய இந்தப்பாடல் ஒலிப்பதிவின் கைங்கரியம் என்று சொல்லப்படுவதை நேரில் பாடி நிரூபிக்கிறார். எஸ்பிபி ஒரு மேடை நிகழ்ச்சியில். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாடகர் ரகுநாதன் மேடையில் இந்தப்பாடலை அப்படியே பாடுவதை கேட்டிருக்கிறேன் திரைப்படத்தில் - ஆரம்பத்தில் வரும் இளையராஜவின் படங்களுக்கு பிறகு பாட்டு ஆரம்பிக்கிறது.
-
- 2 replies
- 2.6k views
-
-
வணக்கம், வான்மீகி என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தன். விகடன் வெளியீடு என்று காட்டப்பட்டு இருந்திச்சிது. படம் சுமாராய் பார்க்கக்கூடியமாதிரி நல்லாய் இருந்திச்சிது. கதையோட்டம் நல்லாய் இருக்கிது. படத்தில இடைக்கிடை கொஞ்சம் போரிங்காய் போகிது. வழமையான சண்டைக்காட்சிகள் காட்டி எரிச்சலை ஏற்படுத்தாமல் இருந்தார்கள். படம் மூலம் சொல்லவருகின்ற செய்தி ஆக்கபூர்வமானதாய் இருக்கிது. பாடல்களும் நன்றாக இருக்கிது. படத்தில நடிச்ச அனைவரும் மிகநன்றாக நடிச்சு இருக்கிறார்கள். திருடர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய ஒரு படம். நீங்கள் வான்மீகி பார்த்து இருந்தால் உங்கள் கருத்துக்களையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி!
-
- 15 replies
- 2.6k views
-
-
கோலிவுட்டையும், டோலிவுட்டையும் (அதாங்க தெலுங்கு சினிமா... அவங்க மட்டும் சளைச்சவங்களா என்ன?) ஒரு சேரக் கலக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கிசுகிசு... பாவனாவின் ரகசியக் கல்யாணம்தான். அடடா... இப்படி அதிர்ச்சியாவீங்கன்னு எதிர்பார்க்கல... இருந்தாலும் கிசுகிசுதானே. தைரியமா படிங்க! கோடம்பாக்கத்துக்கு தற்காலிகமாக 'பை' சொல்லிவிட்டு, ஹைதராபாத் பக்கம் போன பாவனா, ஒண்டரி என்றொரு படம் நடித்தார். ஓஹோவென்று போகாவிட்டாலும், அம்மணிக்கு தெலுங்கில் நல்ல பெயரையும் அவருக்கென்று ஒரு இடத்தையும் பெற்றுத் தந்தது அந்தப் படம். இப்போது ஹீரோ எனும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஹீரோவாக நடிப்பவர் இளம் நாயகன் நிதின். படப்பிடிப்பில் சினிமாவுக்காக இருவரும் காட்டிய நெரு…
-
- 18 replies
- 2.6k views
-
-
தமிழ் திரை உலகின் புதிய காதல் ஜோடி சிம்பு- ஹன்சிகா. இருவரும் தங்களது காதலை பகிரங்கப்படுத்தியும் இருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் பிறந்த நாள் வந்தது. அதற்கு முன்பாக ஹன்சிகாவுக்கு என்ன மாதிரி பரிசுப் பொருள் வழங்குவது என்பதில் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சிம்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பின்னர் ஹன்சிகாவின் பிறந்த நாளன்றும் ‘இளவரசி’ என்றெல்லாம் வர்ணித்திருந்தார் சிம்பு. இந்நிலையில் இருவரும் பார்ட்டி ஒன்றில் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் உலாவ வந்திருக்கின்றன. http://goldtamil.com/?p=6340 இந்த படங்கள்தான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்! ஃபேஸ்
-
- 29 replies
- 2.6k views
-
-
60 வயதில்.. என்னை டூயட் பாட வைத்தது, கடவுள் கொடுத்த தண்டனை. ரஜினி பேச்சு. ஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்று ரஜினிகாந்த் கூறினார். ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து... சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால்…
-
- 14 replies
- 2.6k views
-
-
Print this கமலின் 2வது வாரிசு அக்ஷராவும் நடிகையாகிறார்! கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நடிக்க வருகிறார். அக்ஷரா ஹிந்திப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். விளம்பர படத்திலும் நடித்துள்ளார். ஏற்கனவே கதாநாயகியாக நடிக்க பல படங்களுக்கு அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அவற்றை ஏற்கவில்லை. நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும் கேமராவுக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்றும் கூறி வந்தார். ‘கடல்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மணிரத்னம் முதலில் அக்ஷராவைத்தான் அணுகினார். அவர் மறுத்ததால் ராதா மகள் துளசியை தேர்வு செய்தார். முன்னனி இயக்க…
-
- 20 replies
- 2.6k views
-