வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
விஜய் நடித்துள்ள சர்கார்: ரஹ்மான் இசையமைப்பில் முதல் பாடல் வெளியீடு! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிம்டாங்காரன் எ…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
பிரசன்ன குருக்களின் குரலில் வெளியான பாடல் பாராட்டுக்களை பெற்றுள்ளது. adminNovember 28, 2023 யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. வெகு விரைவில் திரை…
-
- 5 replies
- 743 views
- 1 follower
-
-
பிரகாஷ்ராஜின் பெரிய மனசு நடிப்பில் மட்டுமின்றி நடத்தையிலும் புல்லரிக்க வைக்கிறார் பிரகாஷ்ராஜ். வில்லனாக நான்கு மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இவரொரு நிஜ ஹீரோ. இப்படி சொன்னதும், ஹீரோயினை எந்த வில்லனிடமிருந்து காப்பாற்றினார் என கேட்காதீர்கள். இவர் காப்பாற்றுவது நல்ல சினிமாவை. 'தயா' தொடங்கி 'மொழி' வரை பிரகாஷ்ராஜ் தயாரித்த அனைத்துப் படங்களும் ஓரளவு நேர்மையானவை. பணத்துக்காக அவர் மேற்கொண்ட சூதாட்டமல்ல இப்படங்கள். தயாரித்துக்கொண்டிருக்கும் 'வெள்ளித்திரை'யும் தயாரிக்கப் போகும் 'அபியும் நானும்' படங்களும் இதே ரகம்தான்! சம்பாதிக்கிற பணத்தை நல்ல சினிமாவுக்கு செலவிடும் இவர், பணம் வாங்காமலே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இயக்குனர் ப்ரியதர்ஷன…
-
- 5 replies
- 3k views
-
-
திரையுலகம் இதுவரை காணாத பெரும் வசூல் சாதனையைச் செய்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம். இந்த சாதனைகளை முறியடிக்க இனியொரு படத்தை ரஜினியைத் தவிர வேறு யாராலும் தரமுடியுமா என்ற கேள்விதான் இன்று கோடம்பாக்கத்தில் பிரதானமாக எழுந்து நிற்கிறது. டிக்கெட் விற்பனையில்தான் இந்தப் புதிய சாதனை. சென்னை அபிராமி மெகா மாலில் 20 நிமிடங்களில் 8 நாட்களுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. நான்கு மணி நேரத்தில் ரூ 50 லட்சத்தை எந்திரன் வசூல் செய்திருப்பதாகவும், இது இந்தியத் திரையுலகில் முன்னெப்போதும் நிகழாத பெரும் சாதனை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மற்ற திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் ஒரு வாரத்துக்கான டிக்கெட்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
அபியும் நானும் குண்டு குழிகள் நிறைந்த கோலிவுட் நெடுஞ்சாலையில், நின்று நிதானமாக நடை போடுபவர் ராதாமோகன். காட்டுக் கூச்சல்களுக்கு நடுவிலும், ராதாமோகன் பேசும் 'மொழி'யில் எப்போதும் இருக்கும் ஒரு தாலாட்டின் அழகு! அப்படி ஒரு தாலாட்டுதான் அபியும் நானும்... 'குழந்தை பிறக்கும் போதே கூடவே ஒரு அப்பாவும் பிறக்கிறான். ஆனால் குழந்தைகள் வளர்ந்துவிடுகின்றன. அப்பா மட்டும் அப்படியே வளராமலே இருக்கிறான்'. க்ளைமாக்சில் வரும் இந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். தனது பெண் குழந்தை மீது இவர் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம்தான் கதை. முன்று வயது குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பிச்சைக்காரனையே வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளும் பிரகாஷ்ராஜ், அவள் வளர்ந்து பெர…
-
- 5 replies
- 2k views
-
-
’தேன்கூடு’ இது ஒரு ஈழத்தமிழருக்கான திரைப்படம் என்கிற அந்தஸ்துடன் வெளிவர இருக்கும் இந்தப் படத்தை இகோர் டைரக்ஷன் செய்திருக்கிறார். ’கலாபக் காதலன்’ என்ற படத்தை இயக்கிய இவர் அதைத் தொடர்ந்து கமர்ஷியலாக ஒரு படம் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஈழத்தின் போர் பற்றிய எண்ணங்கள் மனதில் அழுத்தவே அது சம்பந்தமாகவே ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் தேன்கூடு படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷனில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கலந்து கொண்டு வாழ்த்தினார். இப்போது இந்த ’தேன்கூடு’ படத்தின் டிரைலருக்குத்தான் ஏழு இடத்தில் கட் கொடுத்திருக்கிறார்கள் சென்சார் போர்டு மெம்பர்ஸ். குறிப்பாக படத்தில் ஈழத்தி…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. 96 நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது…
-
-
- 5 replies
- 319 views
- 1 follower
-
-
சூப்பர் ஸ்டாருக்கு கலைஞருக்கான நூற்றாண்டு விருது சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு இந்திய மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேர்வு செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ரசிகர்கள் ஏராளம். அவரது ரசிகர்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ளனர் என்று அரசியல் தலைவர்களே தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் ரசிகர் பட்டாளம் உள்ள ரஜினியை அரசியலுக்கு அழைத்து வர பா.ஜ.க கடும் முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ரஜினிக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. நிகழ் ஆண்டுக்கான சிறந்த இந்திய திரைப்படக் கலைஞருக்கான நூற்றாண்டு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுற…
-
- 5 replies
- 1.5k views
-
-
THE GOOD GERMAN இயக்கம்: Steven Soderbergh எழுத்து: Joseph Kanon(நாவல்), Paul Attanasio (திரைக்கதை) நடிப்பு: George Clooney, Cate Blanchett, Tobey Maguire இசை: Thomas Newman ஒளிப்பதிவு: Steven Soderbergh as Peter Andrews விநியோகம்: Warner Bros. வெளியீடு: December 8, 2006 நாடு: USA மொழி: English செலவு: $ 32,000,000 (கிட்டத்தட்ட) இந்தக் கிழமை திரைவெளியில் நாங்கள் பார்க்கப் போவது THE GOOD GERMAN என்ற திரைப்படம். நாற்பதுகளில் நடைபெறுகிற கதை தான் இது. JOSEP KANON என்ற எழுத்தாளரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. அமெரிக்காவின் போர் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான செய்தித்தொடர்பாளர் JAKE என்பவர் POTSDAM மாநாட்டை பற்றி எழ…
-
- 5 replies
- 1.7k views
-
-
அகிரா குரொசவோவின் Seven Samurai விமர்சனம் என்னுடைய பதிவில் http://kanapraba.blogspot.com/
-
- 5 replies
- 2.2k views
-
-
ஆபாச திரைப்படங்களை தேடி சென்று பார்ப்பவர்கள், ஒரு விழுக்காட்ட ற்கும் குறைவானவர்களே . மேற்கண்ட படத்தில் திணிக்கப்பட்டதை போல,மற்றவர்கள் மீது ஆபாசம் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது . தமிழர்களை இன்று சீரழித்து கொண்டிருப்பது திரைப்படமும் சாராயம் மட்டுமே. திரைப்பட ஆபாச காட்சிகளை கண்டு இளைஞர் சமுதாயம் சீரழிகிறது.சாராயத்தால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமே சீரழிகிறது . குறைவான உழைப்பில் எண்ணிப் பார்க்க முடியாத பொருளாதாரத்தை திரைப்பட உலகில் மட்டுமே ஈட்ட முடியும். அதை இன்று முழுவதுமாக மாற்று இனத்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் . இங்குள்ள தமிழ் பெண்கள் ,ஆபாசமாக நடிக்க, முழுமையாக ஒத்துழைக்க மறுப்பதால் தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள், நடிகர்கள் என்று அனைவரும் மாற்று இன பெண்களை தேடிச…
-
- 5 replies
- 2.2k views
-
-
கல்யாணம் இல்லை.. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.. அவர்தான் என் ரோல் மாடல்! அதிரடி கிளப்பிய ஸ்ரீரெட்டி.! சென்னை: நிச்சயம் அரசியலுக்கு வருவேன், தமிழ்நாட்டிற்குதான் என்னுடைய சேவை என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டதாக கூறினார். தமிழில் நடிகர் ஸ்ரீகாந்த் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் புகார் கூறினார். தொடர்ந்து சென்னையில் தங்கியுள்ள ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் தெலுங்கு நடிகர் நடிகைகள் குறித்து ஆபாசமான கருத்துக்களை கூறி வருகின்றார். இதனால் தொடர்நது டைம்லைனில் வருகிறார். செய்தியாளர் சந்திப்பு இந்நிலை…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழில் 'யாழ் தேவி' திரைப்படத்தின் இசைவெளியீடு இன்று; நடிகை பூஜா வெளியிடுகிறார் 2016-02-15 10:41:37 இலங்கைக் கலைஞர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் 'யாழ்தேவி' முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் கிறீன் கிராஸ் ஹொட்டேலில் இன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரபல தென்னிந்திய நடிகை பூஜா உமாசங்கர், இவ் விழாவில் யாழ் தேவி இசைத்தட்டை வெளியிடவுள்ளார். ராஜ்ஸ்டோன் புரொடக்ஷன் தயாரிப்பில் லோககாந்தன் இப் படத்தை இயக்குகிறார். சங்கர், கிரிஸ், நிரோஷா, மிதுனா உட்பட 50 இற்கும் அதிகமான கலைஞர்கள் இப் படத்தில் நடிக்கின்றனர். சுதர்ஷன் இசை அமைக்கிறார். பாட…
-
- 5 replies
- 1.9k views
-
-
[size=2]‘அயன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் & சூர்யா& சுபா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘மாற்றான்’. உடலால் ஒட்டியிருக்கும் சகோதரர்கள் பற்றி கதை இது. இனி கே.வி. ஆனந்த் என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.[/size] [size=2]"மாற்றானில் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?”[/size] [size=2]"படம் ஆரம்பிக்கும் போது அவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போல் தோன்றும். போக போக அது மறந்துவிடும். மேலும் இதில் அப்பா&மகன் பற்றி உறவுமுறை அழகாக சொல்லி இருக்கிறேன். அன்றாட வாழ்வில் நாம் தினம் சந்திக்கும் சம்பவம் தான். தன்னம்பிக்கையான கதை. உடல் ரீதியாக ஒட்டியிருப்பவர்களின் மன ரீதியான போராட்டங்கள் இருக்கும்.”[/size] [size=2]"படத்தின் வெற்றிக்கு யார் காரணம்?[/size] […
-
- 5 replies
- 1.3k views
-
-
அட எல்லாருக்கும் வணக்கம் நாமளே தான் என்ன இந்த பகுதியில என்று பார்கிறது விளங்குது சரி விசயதிற்கு வாரேன் .........ஜம்மு பேபி மொண்டசூரிக்கு டிரேயினில தான் போறது வீட்டில இருந்து போக 1 மணித்தியாலம் எடுக்கும் அப்ப ஒவ்வொரு நாளும் ஏதாச்சு புத்தகமும் காதுகுள்ள ஜபோர்டையும் போட்டா பிரயோசனமா இருக்கும் என்று இருந்திட்டு செய்வேன் கூட பிரண்ட்ஸ் வந்திட்டா வழமை போல டிரேயினில சைட் அடிக்க தொடங்கிடுவோம் அது வேற கதை சரி விசயதிற்கு வாரேன்!!இன்றைக்கு டிரெயினில வாசித்த புத்தகம் "உலக திரைபட மேதை அகிரா குரோசாவா " என்ற புத்தகம் பல சுவாரசிய சம்பவங்கள் அதில் இருந்தது மிகவும் இன்ரசா இருந்தது வாசிக்க .........சோ அதில் இருந்து முக்கிய விடயங்களை இன்று தருகிறேன் நாளை பயணத்தின் பின் மிச்சத்தை எழுதுகி…
-
- 5 replies
- 2.8k views
-
-
-
- 5 replies
- 610 views
- 1 follower
-
-
திரையுலகில் 1999-ல் அறிமுகமானவர் திரிஷா . சாமி, கில்லி போன்ற பல ஹிட்படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கியது. தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் ஜோடியாக நடித்துள்ளார். காட்டா மீட்டா படம் மூலம் இந்திக்கும் போனார். தற்போது கமல் ஜோடியாக நடித்து வரும் மன்மதன் அம்பு நவம்பரில் வெளியாகிறது. அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வரும் த்ரிஷா, இந்தப் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம் அவருக்கு இப்போது வயது 27ஐத் தாண்டிவிட்டது. ஆனால் த்ரஷாவோ இதனைக் கடுமையாக மறுக்கிறார். என் வயசெல்லாம் ஒரு வயசா… நான் சினிமாவுக்கு வந்து எட்டு வருடங்கள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் சுமாரான கதையம்சம் உள்ள படங்களில் நடித்தேன். ஆனால் சமீபகாலமாக நல்ல கதையம்சம் உள்ள படங்கள…
-
- 5 replies
- 885 views
-
-
ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படம் ஈட்டிய லாபம் எவ்வளவு என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. எந்திரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியானது. மூன்று மொழிகளிலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. வெளிநாடுகளிலும் வசூலை குவித்தது எந்திரன். மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை சன் பிக்சர்ஸுக்கு எந்திரன் ஈட்டித் தந்த லாபம் 179 கோடிகள். இதில் சேட்டிலைட் ரைட்ஸான 15 கோடியை சன் பிக்சர்ஸ் சேர்க்கவில்லை. அவர்களே சன் தொலைக்காட்சியில் படத்தை திரையிட இருக்கிறார்கள். இந்தத் தொகை சன் பிக்சர்ஸுக்கு மட்டும் கிடைத்த லாபம். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் லாபம் தனி. எந்திரன் படத்துக்கு சன் பிக்சர்ஸ செலவழித்தது…
-
- 5 replies
- 698 views
-
-
வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை! வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக மட்டும் ஓடாமல், படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருப்பதால் படத்தை வாங்கிய அத்தனை பேரும் படு சந்தோஷமாகியிருக்கிறார்களாம
-
- 5 replies
- 4.1k views
-
-
ரஜினி-கமலை இயக்கிய இயக்குநர் ஐ.வி. சசி காலமானார் Pic Courtesy : Twitter தமிழ் மலையாளம், இந்தி உள்பட 150 படங்களுக்கு மேல் இயக்கிய மலையாள இயக்குநர் மற்றும் நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி(69) உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ‘கலியல்ல கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படம் 1968-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தமிழ் மலையாளம், இந்தி என பல படங்களை இயக்கியுள்ளார். மலையாள நடிகர் மம்முட்டியை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மேலும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசனை வைத்து படங்களை இயக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒரு நடிகரை, 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? பாரதிராஜா சாட்டையடி. சென்னை: நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்... அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.. ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டியளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
மாவட்ட தலைவரா? மாவாட்டுற தலைவரா? "ஆறு' படத்தில் அரசியல் வசனம்: நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண் உள்பட 3 பேருக்கு சம்மன் "ஆறு' படத்தில் அரசியல்வாதியைக் கிண்டலடிப்பது போன்ற வசனம் தொடர்பான வழக்கில் நடிகை ஐஸ்வர்யா, தயாரிப்பாளர் சரண், இயக்குனர் ஹரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று பேரும் மார்ச் 15-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ராஜசேகரன் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளவர் ராஜரத்தினம். இவர், எழும்பூர் 2-வது நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "ஆறு' படத்தில் நடிகை ஐஸ்வர்யா சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அ…
-
- 5 replies
- 1.9k views
-
-
அவன்-இவன் அழுத்தமில்லாதவன் பெரிய ஹீரோக்கள் ஆர்யா, விஷால் கூட்டணியில் பாலா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன்..அதை படத்தின் பின்பாதி மட்டும் ஓரளவுக்கு பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.... பொதுவாக கடைநிலை மனிதர்களின் உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாகவும்,அழகாகவும் படம் பிடிக்கும் பாலா அவன்-இவன் படத்தில் ஏனோ அங்கும் இங்கும் தடுமாறி இருக்கிறார்.. முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை தெளிவாக உணர்த்துவது சிறந்த திரைக்கதைக்கு அழகு என்று சொல்வார்கள்.. இந்த படத்திலோ முதல் பாதி முடியும் வரை பாலா என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை ..... திர…
-
- 5 replies
- 2.1k views
-
-
யாராவது... இலங்கை பொண்ணு தான் மாட்டி இருக்கும். Prashanthan Navaratnam
-
- 5 replies
- 1k views
-
-
இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான். இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தே…
-
- 5 replies
- 891 views
-