Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by அறிவிலி,

    படங்கள்தான் டெய்லி பாக்குறோமே.... அத எப்டி எடுத்தாங்கன்னு பார்த்தா.. வெறுப்பு வராதா?? படம்: கோ காவலன்: அயன்: எந்திரன்: http://www.youtube.com/watch?v=vjQmOTiRP3w&feature=related மங்காத்தா: http://www.youtube.com/watch?v=YE1Ejxr4Z8Q பாஸ் எங்கிற பாஸ்கரன்! http://www.youtube.com/watch?v=8NnEex9o4FE தொடரணுமே..... !!

  2. "இவ்வளவு பிற்போக்கு போலித்தனமா?!"- கெளதம் வாசுதேவ் மேனன்களுக்கு ஒரு தாயின் கடிதம்! எம்.எஸ்.அனுசுயா பாவக் கதைகள் நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன். மனைவி, மகன், இரு மகள்கள் என மதுரையில் வாழும் மத்திய வர்க்க குடும்பத் தலைவர் சத்யா. அவரின் செல்ல மகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை குடும்பத்தை எவ்விதம் பாதிக்கிறது, அந்த அசம்பாவிதத்தை அந்தக் குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி அதைக் கடந்து வந்தார்கள் என்ற கருவை மையப்படுத்தியப் படம். நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன். …

  3. இஷா கோபிகரை நினைவூட்டும் ‘என் சுவாசக் காற்றே’! 26 Feb 2025, 8:10 PM சில திரைப்படங்கள் சில நினைவுகளின் எச்சங்களாகத் திகழும். அப்படத்தோடு சம்பந்தப்பட்டவர்களே அதனை மறந்திருந்தாலும், அதனைப் பார்த்து ரசித்தவர் மனதில் கோடானுகோடி எண்ணங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எந்தவொரு கலைப்படைப்புக்கும் அது பொருந்தும். அந்த வகையில், ‘என் சுவாசக் காற்றே’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் மீதமிருக்கிறது. அந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தந்த பாடல்களைக் கேட்டுவிட்டு, ‘மிஷன் இம்பாஸிபிள்’ டாம் க்ரூஸ் போன்று அரவிந்த் சாமி சாகசம் செய்யும் ஸ்டில்களை பார்த்துவிட்டு ஆவலோடு அப்படத்தைக் காண தியேட்டருக்குச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. வீணான ‘காஸ்ட்டிங்’! ஒரு அழகான…

  4. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான ஜெய்யும் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். கடந்த மார்ச் கடைசி வாரத்திலேயே அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முஸ்லீம் மதத்துக்கு மாறினார். பின்னர் இதை யுவனும் வெளிப்படையாகவே அறிவித்தார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் ஜெய்யும் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரும் நஸ்ரியாவும் இணைந்து நடிக்கும் ‘திருமணம் எனும் நிக்கா' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இவர் மூஸ்லீம் மதத்தை சேர்ந்த பெண்ணை க…

  5. பிரபல நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தெரிவித்துள்ளார். 'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரஹிமா என மாற்றிக் கொண்டார். இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம். http://virakesari.lk/articles/2014/05/30/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE

  6. இளையராஜாவின் புதல்வர் யுவன் சங்கர்ராஜா இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார்... (இன்னுமொரு றஹ்மானாக மாறும் எண்ணமோ?????)

    • 100 replies
    • 10.5k views
  7. இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா சூர்யா? நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத் தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி இணையத் தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்திற்கு சென்று அங்கு வழிபாடு நடத்துவது போலவும், அங்குள்ளவர்கள் சூர்யாவுக்கு மதச் சடங்குகள் செய்வது போலவும் அந்த காட்சியில் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டதாக ஒரு தகவலை பரப்பினர். ஆனால், சூர்யா தரப்பில் இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறும்போது, சூர்யா மதம் மாறியுள்ளதாக வெளியாகியுள்ள அந்த வீடியோ, சிங்கம்-2 படப்பிடிப்பின் …

    • 0 replies
    • 532 views
  8. பயோ-கெமிக்கல் ஆயுதங்கள் மற்றும் அதுசார்பான உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளை படத்தின் டைட்டிலில் காட்டுகிறார்கள். டாகுமெண்டரி மாதிரி படம் இருக்குமோ என எண்ணும் நேரத்தில் படம் நெடுக நகைச்சுவைத் தோரணங்களை கட்டி, நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். இதுவரை நாம் எண்ணிக்கூட பார்த்திராத கதைக்களம். சிறந்த வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை. கம்பீரமாக வெற்றி பெறுகிறான் "ஈ" மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். அமெரிக்கா சதாம் உசேன் மீது சாட்டிய குற்றங்கள் ஞாபகம் இருக்கிறதா? குர்திஷ் மக்களை கெமிக்கல் ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக சதாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த கெமிக்கல் ஆயுதங…

  9. சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் எப்படி சின்ன குழந்தையும் ரஜினி என்று சொல்லுமோ அதேபோல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் சிம்பு என்று வளர்ந்தவர்களும் சொல்லிய ஒருகாலம் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அவரது ஸ்டைலும் முடியை கோதுகிற விதமும் டயலாக் டெலிவரியும் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பொருத்தமாக இருந்தது. சிம்பு வளர்ந்த போது பட்டமும் லிட்டில் என்பதிலிருந்து யங் ஆக வளர்ந்தது. படங்களில் யங் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டார். அவரது ரசிகர்களே அந்தப் படத்தைச் சொல்லி அவரை அழைப்பதில்லை. பட டைட்டிலில் மட்டும் சிம்புவின் பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டிருந்த பட்டத்தை துறப்பதாக ஓர் அறிக்கை வந்துள்ளது சிம்புவிடமிருந்து. எனக்குநானே சில வரையறைகளை…

    • 1 reply
    • 508 views
  10. ஐந்து படங்கள் வெளியானால், அதில் மூன்று படங்களில் இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். குணச்சித்திர வேடம், மிரட்டாத வில்லத்தனம் என்று ஒரு பக்கம் ஜெயப்பிரகாஷ் ரவுண்டு கட்ட, மறுபுறம் ஜெ யப்பிரகாஷின் மகன்கள் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் 'வந்தோமம்மா வந்தனம்!’ என்று ஆஜராகிறார்கள் 'ஈசன்’ திரைப்படத்தில். ''அப்புறம்... கலைக் குடும்பம் ஆகிட்டீங்க!'' என்றால், ''ஐயையோ... அப்படி எல்லாம் இல்லைங்க!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் ஜெயப்பிரகாஷ். ''ஒரு தயாரிப்பாளரா படங்கள் தயாரிச்சு, அப்புறம் சினிமாவில் இருந்து விலகி... கொஞ்சம் ஊசலாட்டமான ஒரு வாழ்க்கை. சேரன்தான் முதலில் 'மாயக் கண்ணாடி’ படத்தில் நடிக்க அழைத்தார். 'பொற்காலம்’ படம் தயாரித்த காலத்தில் இருந்து சேரனைத் தெரியும். 'சார், வேணாம்... இத…

  11. ஈரான் இயக்குனர் கேள்வி… ஏ.ஆர். ரகுமான் பதில்… வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒருவர் விடாமல் நன்றி கூறி நீ…….ண்டதொரு பேச்சை வழங்கினார். பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வது அபூர்வம் என்பதால் அனைத்து பத்திரிகையாளர்களும் ரகுமான் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கடைசியாகவே ரகுமான் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசியது சில வரிகள்தான் என்றாலும் அதில் இருக்கும் அர்த்த…

  12. நடிகர் கருணாஸ் இலங்கைக்கு போக முயன்றாரா? அல்லது போய் வந்தாரா? அது தவறா? தவறில்லையா? என்று ஆயிரத்தெட்டு விமர்சனங்களும் கேள்விகளும் இன்னும் நெருக்கி கொண்டிருக்கின்றன அவரை. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் 135 ஈழ அகதிகள் முகாமிலிருக்கும் இளைஞர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நன்றாக படிக்கக் கூடிய மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களின் உயர் கல்விக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் கருணாஸ். சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை என்று பல்வேறு கல்லு£ரிகளில் எம்பிஏ, எசிஏ என்று படித்துவரும் இவர்கள் அனைவருமே தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்னை வந்திருந்தார்கள். கருணாஸ் அண்ணன்தான் எங்களை படிக்க வச்சிட்டு இருக்காரு. நாங்கள் வேலைக்கு போய் இவரை போல இன்னும் ஏராளமான ஈழ மாணவர்களுக்கு கல்வி கொடுப்போம் என…

    • 0 replies
    • 916 views
  13. ’தேன்கூடு’ இது ஒரு ஈழத்தமிழருக்கான திரைப்படம் என்கிற அந்தஸ்துடன் வெளிவர இருக்கும் இந்தப் படத்தை இகோர் டைரக்‌ஷன் செய்திருக்கிறார். ’கலாபக் காதலன்’ என்ற படத்தை இயக்கிய இவர் அதைத் தொடர்ந்து கமர்ஷியலாக ஒரு படம் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் ஈழத்தின் போர் பற்றிய எண்ணங்கள் மனதில் அழுத்தவே அது சம்பந்தமாகவே ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் தேன்கூடு படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷனில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கலந்து கொண்டு வாழ்த்தினார். இப்போது இந்த ’தேன்கூடு’ படத்தின் டிரைலருக்குத்தான் ஏழு இடத்தில் கட் கொடுத்திருக்கிறார்கள் சென்சார் போர்டு மெம்பர்ஸ். குறிப்பாக படத்தில் ஈழத்தி…

    • 5 replies
    • 1.6k views
  14. இந்தியாவே கொண்டாடும் ஒளிப்பதிவு இயக்குனர் சந்தோஷ் சிவன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகி ஹிட் படங்களை கொடுத்தவர். ரோஜா, இருவர், ராவணன், துப்பாக்கி போன்ற புகழ் பெற்ற தமிழ் படங்களிற்கும், அசோகா, டில்சே போன்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படங்களிற்கும் ஒளிப்பதிவு இயக்குனராக தனது முத்திரையைப் பதித்தவர். இவர் தனியே ஒளிப்பதிவு இயக்குனர் மாத்திரம் அல்ல மல்லி, உறுமி, அசோகா போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனரும் ஆவார். இவர் ஈழப் பிரச்சனையை, ஈழ மக்களின் அவலத்தை “இனம்” என்ற தலைப்பில் படமாக்கியுள்ளார். அரவிந்தசாமி, சரிகா, கருணாஸ் நடித்த இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஈழப் போரால் அநாதையான சிறுவர்களைப் பற்றிய இந்த திரைப்படத்தில் யாழ்ப்பாணம…

  15. "இலங்கையில் நடைபெறும் கொடிய போரினால் ஈழத் தமிழர்கள் படும் அவலங்களையும், காஷ்மீர் மாநில மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் முன்வந்தால் அதை அதை நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இலவசமாக இயக்கத் தயாராகவுள்ளேன்." - இவ்வாறு ஈழத் தமிழர் ஆதரவாளரும் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநருமான அமீர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:- இலங்கையில் நடைபெறும் இன அழிப்புப் போரினால் ஈழத் தமிழர்கள் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகத்தை வெளியுலகிற்கு கொண்டுவர இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அதேபோல் காஷ்மீர் மாநிலத்திலும் மக்கள் பெரும் துன்ப துய…

  16. டிசம்பரில் பூஜாவுக்கு திருமணம்... ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்! சென்னை: வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார். உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. விடியும் முன்... இந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார். திருமணம்... இனி தொடர்ந்து தமிழ்ப் ப…

    • 14 replies
    • 2.4k views
  17. ஈழத் தமிழர்களின் இன்னல்களை படம்பிடித்த 'ஆணிவேர்' நெடுங்குருதியின் ஈரம் வற்றாத, பிணவாடைகளின் நாற்றம் நிற்காத, பிஞ்சுகளென்றும் பாராமல் அவைகளின் மேனியை துளைத்தெடுக்கும் கண்களும் கருணையுமற்ற ராணுவ துப்பாக்கிகள், ஓய்வில்லா யுத்தம், ஒங்கி ஒலிக்கும் குண்டுகளின் சத்தம். ஈழத்து மணணில் இன்னும் மாறாத காட்சிகளும் காயங்களும்தான் இவையெல்லாம். இதனை உள்ளது உள்ளபடி சித்தரிக்கும் படம்தான் 'ஆணிவேர்'. தமிழுக்கு 'உதிரிழக்களை' கொடுத்த இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான்தான் ஆணிவேரின் அஸ்திவாரம். இவருக்காக தோள் கொடுத்த நட்சத்திரங்கள் நந்தா, மதுமிதா.சமீபத்தில் லண்டனில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ள 'ஆணிவேர்' தமிழ் பத்திரிக்கைகளுக்காக சமீபத்தில் திரையிடப்பட்டது. கிளிநொச்சி…

  18. ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்! டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999' திரைப்படத்தின் டிவிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது. நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த 1999. படத்தின் கதை இது: தாயில்லாத அன்பு என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்து வருகிறான். தனிமையில் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், லோக்கல் சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான். இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு. இ…

  19. இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால், அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர், 'வாழ்த்துகள்' என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிட, விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி. பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. 'நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போக, மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட…

    • 10 replies
    • 2.6k views
  20. ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து அனுப்பினர். சல்மான் கான் முதல் பலரும் அங்கு போய் விருந்தாடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆசின். சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர்…

  21. ஹீரோவாக நடிப்பதும், சினிமா தயாரிப்பதும் ரொம்பக் கஷ்டமான வேலை என்று பிரமிக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அன்புத்தோழி படத்தின் புரட்சி நாயகனுமான தொல்.திருமாவளவன். தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரி ஒரு காலத்தில் தீவிரமாகப் போராடியவர் திருமா. திரையுலகினருக்கு திருமாவும், ராமதாஸும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். அதே சினிமாவில் திருமா நடிகராக களம் புகுந்தபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டார்கள். அன்புத்தோழி படத்தில் புரட்சி வீரனாக நடித்துள்ளார் திருமா. நண்பர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று நடிக்க வந்திருப்பதாகவும், இதுவே முதலும், கடைசியும் என்று அப்போது விளக்கினார் திருமா. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அன்பு…

  22. நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் இஷ்டம், தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடி என்ற அளவிற்கு உயர்ந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆகாமல் ஏமாற்றவே சரியான வாய்ப்புகள் இல்லை. ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சந்திரா, பவித்ரா படங்கள் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில…

  23. [size=2] [/size] [size=4]ஈழத்தில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டித்து இயக்குனர் சீமான் அரசியல் பொதுக்கூட்டங்களில் பலரையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். மத்திய அரசை விமர்சித்ததற்காக இயக்குனர்கள் அமீரும், சீமானும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதன் பிறகு இயக்குனர் சீமான் அரசியல் கட்சி துவங்கினார். அந்த நேரத்தில் சீமானின் பேச்சு அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதென்னவோ உண்மைதான். அந்த நேரம், நடிகர் விஜய்யும் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுக-வை ஆதரிக்கும் முடிவை எடுத்தது. விஜய்யின் இந்த முடிவும் அரசிய…

    • 9 replies
    • 1.9k views
  24. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை இரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை இரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.