ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்கும் - கடற்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது அண்மையில் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த மோதல்களில் குறிப்பிடத்தக்கதும் சில விசேடித்த முக்கியத்துவம் கொண்டதுமாகும். இம் மோதலில் சிறிலங்காக் கடற்படையின் சில புதிய விசேட படையணி கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாகச் சிறிலங்காக் கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த விசேட படகு அணி, விரைவுத் தாக்குதல் அணி என்பன பயன்படுத்தப்பட்டிருந்தன. இக்கடற்படையணிகள் கரையோரப் பாதுகாப்பிற்கெனவும் ஆழம் குறைந்த கடற்பரப்புக்களில் அதாவது கரையோரத்திற்கு அண்மித்த பகுதிகளில் மோதல்களில் ஈடுபடுவதற்கெனவும் உரு வாக்கப்பட்டவையாகும். இப்படையணியில் சிறிலங்காக் கடற்படைத்தரப்பு பெரும்…
-
- 0 replies
- 2.8k views
-
-
அமெரிக்க அரசின் புலனாய்வு இரகசியங்கள், வெளிநாட்டு உறவு ஆகியவற்றை பாதிக்கும் காரணங்களால். EO 13526 - 1.4(c) and 1.4(d), கோத்தாவின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு இரகசிய விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டது. இதுபற்றிய வேறுவிதமான அனைத்து ஆவணங்களும் தகவல்களும் போலியானவை என அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக கசிய விட்டுள்ளது.
-
- 22 replies
- 2.8k views
- 1 follower
-
-
தளபதி லெப். கேணல் விக்கீசுவரன் - செ.யோ.யோகி - இவர் 1991 இன் இறுதிப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தார். 1992, 1993 ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1994 இல் இருந்து 1996 வரை எதிரி பற்றிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் பெரும்பாலும் களநிர்வாகப் பொறுப்பாளராகவும் பின்னணி ஒழுங்கிணைப்பாளருமாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு மீள இணைந்தோரின் (4.1) படையணிக்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற 21 காப்பரண்கள் மீதான தாக்குதலின் போது 4.1 படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப் படையணி ஆகியவற்றிற்குப் பொறுப்பாக இருந்தார். இதேயாண்டு பளையைக் கைப்பற்றிய அணிக்குப் பொறுப்பாக இருந்த…
-
- 8 replies
- 2.8k views
-
-
யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது. கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு மா…
-
- 28 replies
- 2.8k views
-
-
இலங்கையின் தனியார் வங்கியான சேலான் வங்கியை இலங்கை மத்திய வங்கி தமது பொறுப்பில் எடுத்துள்ளது. நாட்டின் முழுப்பொருளாதாரமும் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சேலான் வங்கியின் முகாமையை கவனிப்பதற்கு இலங்கை வங்கி, மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு சேலான் வங்கியின் முகாமையை கவனித்து வரும் அதேநேரம் அதற்கு பின்னர் தொழில் அதிபர் லலித் கொத்தலாவல தலைமையிலான நிர்வாகம் மீண்டும் தீர்மானித்தால் நிர்வாகத்தை தொடரமுடியும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. சேலான் வங்கி குழுமத்தின் "கோல்டன் கடன் அட்டை" நிறுவனம…
-
- 5 replies
- 2.8k views
-
-
வியாழன் 15-11-2007 18:22 மணி தமிழீழம் [தாயகன்] மகேஸ்வரனும் கட்சி தாவுவார் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனும் மகிந்த அரசுடன் இணைந்துகொள்ள இரு;பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுடன், மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான குருநாகல் உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மஹ்றூப் ஆகியோரும் அரசுடன் இணைந்துகொள்வார்கள் என தகவல்கள் கசிந்துள்ளன. சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் மூவரும் இன்று சந்தித்து இரகசிய பேச்சு நடத்தியுள்ளனர். pathivu.com
-
- 11 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சியில் அகழாய்வு: சுடுமண் சிற்பங்கள் கண்டெடுப்பு [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 14:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி அக்கராயனை அடுத்த ஆற்றுப்படுக்கையின் ஓரமாக உள்ள சின்னப்பல்லவராயன்கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது தொன்மையான செய்நேர்த்தியுடன் கூடிய பல சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழீழ கல்விக் கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரனின் வழிகாட்டலில் ந.குணரட்ணம் குழுவினரால் இந்த சுடுமண் சிற்பங்கள், உடைந்து சிதைந்த நிலையில், 4 அடி ஆழம் வரையான குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடைந்த நிலையிலான சுடுமண் சிற்பங்களின் துண்டுகளை இக்குழுவினர் தற்போது பொருத்தி முழுமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். …
-
- 1 reply
- 2.8k views
-
-
யாழ். குடாநாட்டில் பாதீனியச்செடி மிகவும் வேகமாக பரவி வருகின்ற போதிலும் அதனை அழிக்கும் நடவடிக்கைகள் உரிய தரப்பினரால் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. கடந்த பல வருடங்களாக யாழ். குடாநாட்டில் பாதீனியம் பரவி வருகின்றது. குறிப்பாக வலிகாமம் மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. இந்தப் பயிர் ஏனைய பயிர்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கும் வகையில் நிலத்தின் பசளையை உறிஞ்சுவதாகவும் காணப்படுகின்றது . இன்று பாதீனியம் பொது இடங்கள், பாடசாலை வளாகங்கள், மைதானங்கள், திணைக்கள வளாகங்கள், பொது மக்களுடைய தோட்டங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் பரவிவருகின்றது. பாதீனியச் செடி அழிக்கப்பட வேண்டும் எனக் கூறி அரசினால் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும…
-
- 9 replies
- 2.8k views
-
-
செவ்வாய் 11-12-2007 11:06 மணி தமிழீழம் [சிறீதரன்] மனோ கணேசனுக்கு உலக சமாதான காவலர் விருது பாரளுமன்ற உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்களுக்கு உலக சமாதான காவலர் விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் இவ் விருது இவ்வருடம் மனோகணேசனுக்கு வழங்கப்படவுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 13 replies
- 2.8k views
-
-
யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலியன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் புஷ்பரட்ணம் இவ்வாறு தெரிவித்தார். பாரம்பரியம் மற்றும் தொல்லியல்மீது அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறை உடையவர் என்று தெரிவித்த பேராசிரியர் புஷ்பரட்ணம் அந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சருடன் கடந்த பல வருடங்களாக தாம் உரையாடி வருவதாகவும்; தெரிவித்தார். அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா யாழ் இராசதானியை ஆண்ட…
-
- 27 replies
- 2.8k views
-
-
சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம். சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றின் பொறுப்பாளரான கருணா, சிறிலங்காவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கருணாவின் குழுவுக்குள் உள்மோதல்களானவை படுகொலைகளாக வெடித்துள்ளன. இதனையடுத்து கருணாவை சிறிலங்காவை விட்டு தப்பி ஓடுமாறு சிறிலங்கா புலனாய்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்: கிழக்கில் வலுத்துள்ள கருணா மற்றும் பிள்ளையான தரப்புக்களுக்கு இடையிலான மோதல் வெளிப்படையான மோதல்களாக வெடித்துள்ளதுடன் கடந்த இரு வாரங்களில் பலர் பலியாகியும் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் கருணாவை அவரது சகாக்களுடன் நாட்டை…
-
- 6 replies
- 2.8k views
-
-
இந்திய இராணுவத்தின் மீது போரைப் பிரகடனம் செய்யாமல் இருந்திருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தை அடைந்திருக்க முடியும். -முன்னாள் யாழ். இராணுவ தளபதி [saturday, 2011-04-02 04:59:43] பிரிகேடியர் எச்.எவ்.ரூபசிங்க சிறிலங்கா இராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். ஆளணி நிர்வாகப் பணிப்பாளர், இராணுவ செயலர், சட்டப்பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத் தலைமையகப் பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். யாழ்ப்பாணம் மற்றும மன்னார் மாவட்டங்களுக்கான இணைப்பதிகாரியாகவும், கூட்டுப்படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியின் ஆலோசகராகவும், இந்திய அமைதிகாக்கும் படைக்கான இணைப்பதிகாரியாகவும் இருந்தவர். சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த அவர் கொழும்பு ஆங்கில ந…
-
- 17 replies
- 2.8k views
-
-
தமிழ் மக்கள் புலிகள் இயக்கத்துக்கு மாத்திரம் சொந்தமில்லை என்கிறார் சங்கரி வடக்கு, கிழக்கு இனப் பிரச்சினைக்காக உறுதியான தீர்வு காணப்படுவதை விடுதலைப் புலிகள் இயக்கம் விரும்பவில்லை என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் ஆனந்த சங்கரி இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு உறுதியான தீர்வு காணப்பட்டால் அது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தினதும் அது சார்ந்த ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்களினதும் எதிர்காலச் செயற்பாடுகளில் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஷ்ரீலங்கா அரச தரப்பிற்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே கடந்த 28 ஆம், 29 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த…
-
- 6 replies
- 2.8k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடு தமிழீழத்தை நிறுவிட தமிழர்கள் ஒத்துழைத்தார்களோ இல்லையோ.. ஈழத்தில் இருந்து தமிழகம் வரை தமிழர்கள் ஒரு விடயத்தில் மாற்றுக் கருத்து.. மண்ணாங்கட்டிக் கருத்துகளின்றி ஒத்துழைத்துள்ளார்கள்.. அந்த விடயத்தில் இன்றும் தமிழர்கள் தமக்கிடையே போட்டி இருந்தாலும்.. ஒத்துழைக்கிறார்கள். அது வேறெதுவும் இல்லை.. ஈழ விடுதலைப் போராட்டத்தில் அடுத்தவரின் துயர நிலையை தமதாகக் காட்டி மேற்கு நாடுகளில் (கனடா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா,நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா) அகதி அந்தஸ்து வாங்கி தங்களது பொருளாதார அகதி நிலையை.. அரசியல் அகதிகள் நிலையாகக் காட்டி ஆகக் குறைந்தது மேற்கு நாட்டு அரசாங்கங்களின் பணத்தில் சீவிக்க வழிதேடிக் கொண்டதே அல்லது கொள்வதே அது. …
-
- 32 replies
- 2.8k views
-
-
அகில இலங்கை மட்டத்தில் .மட்டக்களப்பு மாணவி முதலிடம் அடுத்து யாழ். இந்து, வேம்படியுடன் கரவெட்டி விக்னேஸ்வரா அதி சிறப்புச் சித்தி கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சி.ஈ. (சாதாரண) தர பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவி ஷாலினி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 10 "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதி கூடுதல் புள்ளிகளையும் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த நான்கு இடங்களையும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்(குகநந்தன் நிரூஜன், நரேந்திரன் திருத்தணிகன்), வேம்படி மகளிர் கல்லூரி மாணவி (ருக்ஷகா சந்திரபோஸ்), கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவன் (அனந்தலிங்கம் நிதர்ஷன்) ஆகியோர் பெற்றுள்ளனர். பரீட்சை முடிவுகள் திணைக்களத்தின் இணையத…
-
- 11 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சி நகரிலிருந்து ஒரு சில நூற் மீற்றர்களுக்கு அப்பால் கிடுகளால் அமைக்கப்பட்டதும், வன்னியிலேயே மிகப் பெரியதுமான சமயலறை அமைந்திருக்கிறது.புலிகளால் நடத்தப்படும் இந்தச் சமயலறையில் புலிகளுக்கு மட்டுமல்லாமல், அண்மையில் அரசாங்கத்தால் வெளி நாட்டு அரச பிரதிநிதிகளோ அல்லது தனி நபர்களோ வன்னிக்குச் செல்வது தடை செய்யப்படும்வரை அவர்களுக்கும் கூட இங்கிருந்துதான் உணவு வழங்கப்பட்டு வந்தது.நீட்டுக் கைய்யுடைய சேட்டு அணிந்த பணியாட்கள் கடமை புரியும் இந்தச் சமயலறையில் தயாரிக்கப்படும் உண்வு கொழுமிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளின் உணவின் விலைக்கு ஒத்தது. இந்த வாரம் கிளிநொச்சியின் நகரப்பகுதிக்குள் செல்கள் வந்து விழத் தொடங்கியதால் புலிகள் இந்தச் சமயலறையை கழற்றி அதன் தளபாடங்களையும், உணவ…
-
- 4 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்ற இடமளிக்கப்படமாட்டாது – புலிகள் [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 06:59.06 AM GMT +05:30 ] கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் சிலவற்றை இழந்த போதிலும் ஆயுத பலம் மற்றும் படைபலம் நலிவடைந்து விடவில்லை என பொட்டம் லைன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிரி இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான தக்க தருணம் இன்னமும் கைகூடவில்லை என புலிகள் அறிவித்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்படும் புள்ளி விபரங்…
-
- 2 replies
- 2.8k views
-
-
புலிகளின் வானூர்திகளை இலங்கை விமானப் படை விமானங்களால் வழி மறித்து தாக்கமுடியாது: முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க. சிறிலங்கா வான்படையிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது என்று சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார். "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து விவரம்: மரங்களை அழிக்க அவற்றின் கீழ்ப்புறத்தை வெட்டுவது போல புலிகளின் வானூர்திகளை தரையில் வைத்து அழிக்க வேண்டும். கிபீர்களாலும் மிக்குகளாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது. அந்த வசதிகள் அவற்றுக்கு கிடையாது. ஆனால் அவற்றால் குண்டுகளைப் போடமுடியும். விடுதலைப்…
-
- 15 replies
- 2.8k views
-
-
நிதி சேகரித்த குற்றச்சாட்டில் நெதர்லாந்தில் 5 ஈழத்தமிழர்களுக்கு சிறைத்தண்டனை! [Friday 2015-05-01 08:00] விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்…
-
- 46 replies
- 2.8k views
-
-
கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா திடீரென கைது செய்யப்பட்டார். அவரை ராணுவ காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ சட்டத்தின் கீழ் ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்க திட்டமிட்டு உள்ளனர். பொன்சேகா கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஐக்கிய நாட்டு சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிபர் ராஜபக்சேயுடன் டெலிபோனில் தொட…
-
- 19 replies
- 2.8k views
-
-
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் செம்மண்குண்டிலும், ஆனந்தபுரத்திலும் பொதுமக்கள் இலக்குகள் மீது carpet bombing இல் ஈடுபட்டு வந்தது - தமிழ்நெட் Downed SLAF aircraft was engaged in carpet-bombing [TamilNet, Friday, 27 February 2009, 16:41 GMT] The Sri Lanka Air Force (SLAF) fighter jet exploded Friday was engaged in carpet-bombing civilian pockets at Aananthapuram and Chemma'nku'ndu, according to civilians fleeing towards 'safe zone' Friday evening. As the declared 'safe zone' along the Mullaiththeevu coast is a barren stretch and is congested beyond further accommodation, many civilians preferred to stay back in pockets, considered suitable for survival at least with…
-
- 0 replies
- 2.8k views
-
-
கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களையும் அண்மையில் கைப்பற்றிவிட்ட ஸ்ரீலங்கா அரச படையினர் தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தொப்பிகல பகுதியில் புலிகள் வசமிருந்த பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தொப்பிகலயிலுள்ள புலிகளின் பிரதான பலம் வாய்ந்த முகமாகிய பெய்ரூட் பேஸ் முகாமையும் அதன் இணை முகாம்களாகிய ஷோவன் பேஸ், புலிபாய்ந்தகல் பேஸ் ஆகிய முகாம் தொடர்களை பெருமளவு அரச படையினர் சுற்றிவளைத்து வைத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. பீரங்கி அணிகளுடன் குறித்த புலிகளின் பலம் வாய்ந்த மேற்படி பெய்ரூட் பேஸ் , ஷோவன் பேஸ் முகாம்களை நோக்கி அரச படையினர் முன்னேறிவிட்ட நிலையில் அந்த முகாம்களிலிருக்கும்…
-
- 5 replies
- 2.8k views
-
-
ஈழச் செய்திகளை பிரசுரிக்கத் தயங்கும் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள். தமிழக அரசின் அச்சுறுத்தலுக்குப் பணிந்தது தமிழக பத்திரிகைகள் ! தமிழ் ஈழம் தொடர்பான செய்திகளை தவிர்த்து வருகிறது. இலங்கையில் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி தடை விதித்துள்ளது. அதை தமிழன் ஆட்சி செய்யும் தமிழகம் ஏற்று செயல்படுத்தி வருகிறது. சிங்கள அரசின் கொடுங்கோள் ஆட்சியில் தமிழர்கள் தங்கள் உரிமைகளை இழந்து, உடமைகளை இழந்து அகதிகளாய் தவித்து வருகின்றனர். அவர்களின் உரிமை மீட்கப்பட வேண்டும் என தமிழகத்தில் இருந்து, வை.கோ, பழ.நெடுமாறன், தா.பாண்டியன், ராமதாஸ் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு தடை செ…
-
- 4 replies
- 2.8k views
-
-
காலியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலால் பதற்றம்! காலி ஜின்தோட்டை பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போது வீடொன்றுக்கும் தீ வைக்கப்படுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கால்பந்தாட்டப் போட்டி மற்றும் விபத்தொன்றை தொடர்ந்து இந்த மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் பதற்றமான நிலைம…
-
- 23 replies
- 2.8k views
-
-
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மன்னாரில் காற்றாலை மின்நிலையம்: நாளை திறப்பு விழா!!! | NewUthayan
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-