Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம்’ சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்படும் சம்பளத்தொகையை முதலாளிமார் சம்மேளனம் வழங்கத் தயார் என்று தெரிவித்த சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை, இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் செயற்பட முடியாது என்றும் எனவே, கூட்டுஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாகவும் தெரிவித்தார். 'கூட்டொப்பந்ததில் 300 நாட்களுக்கு வேலை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இப்போது நாளொன்றுக்காக அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் மட்டுமே வழங்க முடியும் எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிற்றுறை வீழ்சியடைந்தால் தொழிற்சங்கங்களும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும்' என்றும் சுட்டிக்காட்டினார். டிக்கோயா…

    • 0 replies
    • 483 views
  2.  அரசாங்கத்துக்கு காலக்கெடு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், நாளை (08) காலை 8 மணிவரை, அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி, விமானப்படை முகாமுக்கு முன்னால் மேற்கொண்டு வருகின்ற போராட்டம், 8ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, இன்றைய தினம், அம்மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது அம்மக்கள், “8ஆவது நாளாக தொடரும் போராட்டத்துக்கு, அரசாங்கம் எவ்விதப்…

  3. பிறந்த குழந்தையை பார்க்க ஆண்கள் வாட்டுக்கு சென்றவர் யார்’ “உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு முன்னர் சஹ்ரான் குழுவுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தேர்தலுக்கு அக்குழு உதவியுள்ளது” என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமே தெரிவித்தார். “சம்பவமொன்றில் காயமடைந்த சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவரை பார்ப்பதற்கு வைத்தியசாலைக்கு ஹக்கீம் சென்றிருந்தார். அந்த விவகாரம் தொடர்பில் தகவல்கள் கிடைத்தவுடன், அவரிடம் விசாரித்துள்ளனர்” என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்க…

  4. சிவப்புநிறமாக மாற்றமடையும் ஆரியகுளத்துநீர் யாழ்ப்பாண நகரில் உள்ள ஆரியகுளத்தின் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த நிலை எற்பட்டுள்ளதா? என பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் குளத்தில் பெருமளவு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன. இது தொடர்பில் யாழ் மாநகர சபையினர் எதுவிதமான நடவடி க்கைகளையும் மேற்கொள்ளவில்லை. யாழ்ப்பாண நகரில் சில நீர்நிலைகளே உள்ளன. அவற்றினை பேணிப்பாதுகாப்பது மற்றும் சுத்திகரிப்பது தொடர்பாக யாழ் மாநகர சபையினர் அக்கறை செலுத்துவதில்லை. ஆரிய குளத்தின் நீர் கடந்த சில நாட்…

  5. இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? CNN வாக்கெடுப்பு உறவுகளே இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? என்று CNN ஊடகம் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துகின்றது அதில் இல்லை ‘NO’ என்பதை அழுத்தவும். http://internationaldesk.blogs.cnn.com/ மீனகம்.கொம்

    • 27 replies
    • 4.5k views
  6. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. கனடா அந்தவகையில் இதுகுறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர…

  7. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் வேலாயுதம் தயாநிதி என்ற தயாமாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=19175

  8. சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பற்றீசியா ஏ புரெனிஸ் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பற்றீசியா ஏ புரெனிஸ் அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராகவும் இவர் செயற்படுவார். 2007 ஆம் ஆண்டில் இருந்து ஈராக்கில் உள்ள தூதரகத்தின் பிரதி பிரதம அதிகாரியாக பற்றீசியா கடமையாற்றியிருந்தார். இதற்கு முன்னர் அவர் பங்களாதேசத்திற்கான அமெரிக்கத் தூதுவராகவும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதி பிரதம அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார். புதினம்

    • 0 replies
    • 444 views
  9. இந்தியாவை சந்தோஷப்படுத்துவதா? அல்லது இலங்கையின் சிங்கள பெளத்த மக்களை சந்தோஷப்படுத்துவதா? என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானம் எடுக்க வேண்டும். இத் தீர்மானத்திலேயே இந்த ஆட்சியின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஷித் அமெரிக்காவின் அடிவருடி. எனவே இலங்கையை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலே அவரால் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பாக டாக்டர் குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் வருகையானது தீர்க்கமானதாகும். 13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதை தடுக்கவும் மாகாண சபை முற…

  10. சிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சி தகவல் (படங்கள்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு வைத்தியக் குழு துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, துமிந்த சில்வா தொடர்ந்தும் வைத்திய சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளார். அவரின் மண்டையோட்டிலிர…

  11. 10 ஆயிரம் கிலோ தேயிலை தூள் ஏற்றிச்சென்ற லொறி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி மதுபோதையில், லொறியை செலுத்திய நடத்துனர் (படங்கள்) பொகவந்நதலாவ ஹட்டன் பிரதான வீதியில் நோர்வூட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசிரிகம பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை ஏற்றிச்சென்ற லொறியை நோர்வூட் பொலிஸார் நோர்வுட் நகரில் சோதனைக்குற்படுத்திய போது அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். சாரதியை பொலிஸார் கைது ச…

    • 0 replies
    • 309 views
  12. ஒரு நாடு, ஒரு சட்டம் என்றவர்கள் இப்போது இரு சட்டங்களுக்கு இணங்கியுள்ளனர்’ – ரணில் விக்கிரமசிங்க 20 Views கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், வட பகுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது கொண்டிருந்த அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரத்தை கொழும்பு துறைமுக நகரம் கொண்டிருக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாடு ஒரு சட்டம் எனப் பேசிய அதே ஆட்கள் இப்போது ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதற்கு இணங்கிவந்திருப்பதையிட்டு தான் ஆச்சரியமடைவதாகவும் …

  13. -பா.நிரோஸ் யுத்தம் செய்து, நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்தார்கள் என்பதற்காக, எவரையும் கொலை செய்வதற்கு, இராணுவத்தினருக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கொலைக்காரர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் கொள்கைத் தவறெனவும் விமர்சித்தார். கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கைது செய்யப்படுவார் என்ற அச்சத்திலேயே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி இருப்பதாகவும் 'ஹோர்ன்' அடித்த குற்றத்துக்காக நபரொருவர் கைது செய்யப்படும் நிலைமைக்கு, இந்நாடு சென்றுள்ளதென்றும் இவை அனைத்தும், ஜனநாயக விரோதச…

    • 4 replies
    • 1.1k views
  14. வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நியமனப் பத்திரத் தாக்கல் நடவடிக்கைகள் தொடர்பாக …

    • 0 replies
    • 412 views
  15. 23/06/2009, 15:39 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] பாக்கு நிரிணையில் கடற் கண்காணிப்பு அதிகரிப்பு – படைத் தரப்பு பாக்கு நீரிணையில் தமது கண்காணிப்பு நடவடிக்கை பன்மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக, சிறீலங்கா கடற் படையினர் அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறீலங்கா படையினர், கடற் கண்காணிப்பு அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளமை, பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் யாருக்கு, என்ன பொருள்களைக் கடத்துகின்றனர் என்ற விபரத்தை சிறீலங்கா கடற்படையினர் வெளியிடவில்லை. பதிவு

    • 3 replies
    • 837 views
  16. வடமாகாணத்தில் நாளை போராட்டங்கள் எஸ்.நிதர்ஸன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக, வேலையற்ற பட்டதாரிகளால் நாளை (30) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. கடந்த 27ஆம் திகதி முதல், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, காலவரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி, வடமாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்களுக்கும் முன்பாக நாளை போராட்டங்களை நடத்தவுள்ளதாக…

  17. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு 12 Views மட்டக்களப்பு கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ம் திகதி சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 ம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை பயங்கரவாத …

  18. மீளக்குடியமர்வின் பின்னரும் படையினர் தங்கியிருப்பர்:உதய நாணயக்கார on 30-06-2009 17:15 Published in : செய்திகள், இலங்கை வன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்கவும் திட்ட மிட்டுள்ளோம் என்றும் அவர் பி.பி.ஸியிடம் தெரிவித்தார். இதுகுறித்து பி.பி.ஸி. வெளியிட்ட செய்தி வருமாறு : மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும் அபிவிருத்தித் திட்டங்…

    • 1 reply
    • 583 views
  19. சிறுவர் வைத்தியசாலை இணுவிலில் அமைக்கப்படும் வட மாகாணத்துக்கான சிறுவர் வைத்தியசாலையை இணுவிலில் அமைப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அனுமதியளித்துள்ளார்.இரு நாட்கள் விஜயமாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்றைய தினம் இணுவில் மட்லியோட் வைத்தியசாலை அமைந்துள்ள நிலத்தை பார்வையிட்டு சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கினார். ஆயிரம் மில்லியன் ரூபாயில் அமைக்கப்படவுள்ள இச்சிறுவர் வைத்தியசாலைக்காக தென்னிந்திய திருச்சபை தனது கட்டுப்பாட்டில் உள்ள மட்லியோட் வைத்தியசாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் ஐந்தரை ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. சிறுவர் வைத்தி…

  20. (ஆர்.யசி) எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வெடிப்புக்கு உள்ளானதன் தாக்கமானது இன்னும் ஐம்பது அல்லது நூறு ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் வளமும் பாதிக்கப்படும் என்கின்றனர். அவ்வாறு இருக்கையில் மக்கள் கடல் உணவுகளை உண்ணலாம் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பொறுப்பற்ற வகையில் கருத்தொன்றை கூறியுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முதலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதித்தது யார் என்பதே கேள்வியாகும். இந்த கப்பல் வெடிப்புக்குள்ளானதில் தற்போது கடல் சூழல் நாசமாக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். …

  21. அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் மற்றும் திகம்பத்தான பிரதேசத்தில் கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு பிரதான சந்தேக நபர்களை தமது விசேட குழுவொன்று கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சந்தேக நபர் திகம்பத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற கடற்படையினர் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்திய, சுமை ஊர்தியை குண்டுகளை பொருத்தும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் மற்றைய சந்தேக நபர் அனுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கான உளவுப் பணிகளை மேற்கொண்டதுடன், தாக்குதல் தினத்தில் அதனை ஒளிப்பதிவு செய்தவர் எனவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். …

    • 0 replies
    • 925 views
  22. “இலங்கையில் தமிழின அழிப்புப் போர் இன்னும் முடியவில்லை” – பெ.மணியரசன் “இலங்கையில் தமிழின அழிப்புப் போர் இன்னும் முடியவில்லை , இதற்காகத்தான் இப்போதும் இந்திய ராணுவத்தின் உதவியைக் கோருகின்றனர்” என்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார். திருச்சியில் அக்கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “தமிழ்த் தேசியம்” சிறப்பு மாநாட்டில் அவரது நிறைவுரை: “தமிழகத்தில் தமிழர்கள் அரசியல் விடுதலை பெற வேண்டும். ஈழத் தமிழர் விடுதலைக்கு நாம் துணை நிற்க வேண்டும். இந்த இரண்டும்தான் முக்கியக் கடமைகள். ஈழ விடுதலை என்ற முற்றிய கதிரை இந்திய, சீன அரசுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம் அழித்து நாசம் செய்துவிட்டது. ஆனாலும், …

  23. தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே பிரதேச செயலக விடயத்தில் சிலர் தடையாக உள்ளனர் – தவராசா கலையரசன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் வேளையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை-2 கிராமத்தில் அரச காணிக்குள் மண் இட்டு நிரப்பி சலவை தொழிலாளிகள் தொழிலை மேற்கொள்ளும் தோணா பகுதியினையும் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் சில முஸ்லிம் நபர்கள் ஈட்டுப்பட்டு வந்தனர். இது தொடர்பில் அப்பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த…

  24. திருகோணமலை தம்பலகாமம் ஆலய குருக்கள் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளார் திருகோணமலை தம்பலகாமம் ஸ்ரீ கோணேஸ்வரா ஆலயத்தின் பிரதம குருக்கள் ஜெயந்தன் நேற்று இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நிறைவடைந்த நிலையிலேயே அவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.கடத்திச் செல்லப்பட்டவர் குறித்து, அவரது உறவினர்கள் தம்பலகாமம் பொலிசாரிடம் முறைபாடு தெரிவித்துள்ளனர். எனினும், அவர் வெளிமாவட்ட பொலிசாரினால் விசாரணைகளுக்காகவே அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.meenagam.org/?p=6025

  25. அரசாங்க தகவல் நிலையத்தின் தமிழ் மொழிக் கொலை கண்டிக்கத் தக்கது – விக்னேஸ்வரன் 15 Views அண்மையில், கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம் வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ் மொழி கொலை இடம் பெற்றுள்ளதாகவும் இதனை திருத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களின் மாவட்டங்கள், பிரதேசங்கள், கிராமங்கள் மற்றும் தென்னிலங்கையின் தமிழ்பெயர்கள் முழுக்க முழுக்க எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டுள்ளமை பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.