ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
அமெரிக்க நாட்டு இந்து மதத் துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபைத் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அவருடைய 58 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார். கடந்த சில தினங்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியுள்ளார். Lawrence Anthony Schafaka என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பென்சில்வேனியாவில் பிறந்தார். 20 வயதில் இந்து மதத்தில் நாட்டம் கொண்டு இந்தியா சென்று இந்து சமயத்தைத் தழுவி தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்று தந்திரதேவா என்னும் துறவிப் பெயர் பூண்டு இந்து மத துறவியானார். பின்னர் இலங்கை வந்த இவர் 1983 ஆம் ஆண்டில் பாடல்…
-
- 17 replies
- 3.1k views
-
-
ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில்,பிறந்தநாள் ரத்து: கமல்ஹாசன் ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில், தன்னுடைய பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். . இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நவம்பர் 7-ஆம் தேதியை என் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரைப் பலரும் பிறந்த நாட்டையே பலரும் இழந்து வரும் இவ்வேளை யில், தனி ஒரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது. 10 ஆயிரம் ஆண்டுகளே நிரம்பப் பெற்ற நமது மனித கலாச்சாரம்…
-
- 17 replies
- 2.4k views
-
-
யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். செய்திகள் - பிரதீபன் யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
- 17 replies
- 833 views
- 1 follower
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு – ஏறாவூர் வாவியில் சமீப சில நாட்களாக பெரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோத வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்துவருவதால் தற்போது பெரிய மீன்கள் பிடிபடுவது சாத்தியமாகியுள்ளதாக மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார். சிலவேளைகளில் மீனவர்களின் வருமானம் நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வரை கிடைப்பதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு வாவி சூழ்ந்துள்ள ஏறாவூர், பன்குடாவெளி, நரிப்புல்தோட்டம், விளாவெட்டுவான் வலையிறவு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்கள் தற்போது வாவியில் பெரிய மீன்பிடியில் ஈடுபடுவதாக ஏறாவூர் 3ஆம் குறிச்சி மீனவர் சங்கத் தலைவர் தாவூத் றம்ழான் தெரிவித்தார். தற்போது வாவியில் 3 கிலோகிராம் நிறையுடைய திலாப்…
-
- 17 replies
- 1.3k views
-
-
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது. ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/66620 ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போதும் இடமளிக்காது, என் தந்தையை போலவே நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்ப…
-
- 17 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் முறியடிப்பு தாக்குதலின்போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏ.கே.எல்.எம்.ஜி-01,ஆர்.பி.ஜி-04,தாங்கி எதிர்ப்பு துப்பாக்கி-01,ரி-56ரக துப்பாக்கி-05,7.62மில்லிமீற்றர் தோட்டாக்கள்-29,300,லிங்கட் தோட்டாக்கள்-2175,ஆர்.பி.ஜி செல்கள்-27,கிரணைட்செலுத்திகள் -22மற்றும் கிரணைட்-36உட்பட பெருமளவு ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேநேரம் புளிக்குளம் மற்றும் குஞ்சுப்பரந்தன் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான மோதல்கள் இன்று செவ்வ…
-
- 17 replies
- 5.8k views
- 1 follower
-
-
தமிழன் கால் பதிக்காத இடம் இப்புவியில் இல்லை என்ற இன்றைய நிலையில் பரந்துப்பட்ட இந்த நிலப்பரப்பில் எங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களாகிய நாம் இன்று சில வரலாற்று கடமைகளை முன்னெடுக்கும் காலகட்டத்தில் இருக்கின்றோம். சமீப காலமாக யாழ் களத்தில் கருத்தாடலும், செயற்பாடுகளும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. சிலர் சில ஆய்வுகளை வெளியிடுவதும் அதனை ஆதரித்து அல்லது ஆமோதித்து பலர் கருத்துகளை பகற்வதும் என்று சிறப்பாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி ஏதோ இந்திய - பாக்கித்தான் அணிகளுக்கிடையேயான மட்டையாட்டத்தொடர் நடைபெறுவது போல் விடுதலை புலிகள் சிங்கள படையினை தாக்கி பாரிய இழப்பை ஏற்படுத்தினால் ஆரவாரிப்பதும், சிங்கள படை விடுதலை புலிகளைதாக்கி பாரிய இழப்பை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள…
-
- 17 replies
- 4.3k views
-
-
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ். பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது. அத்துடன், மத்தள விமான நிலையம் தொடர…
-
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழ் நாட்டில் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து பல் வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. பல கட்சிகள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் செய்கின்றனர். வைகோ அவர்களின் தலைமையில் ராஜபக்சேவிற்கு கறுப்புக் கோடி காட்ட பல ஆயிரம் பேர்கள் மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் தனித் தனியே மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேளையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தங்கள் போராட்டத்தை மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தால் தமிழக தொடர் வண்டிகள் போக்குவரத்து தமிழகமெங்கும் முடங்கியது. சுமார் 50,000 பேர்கள் பங்குபெற்ற இப்போராட்டத்தை கட்டுப் படுத்த காவல் துறை தி…
-
- 17 replies
- 1.8k views
-
-
தீவகப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு: சர்வதேச மன்னிப்புச் சபை யாழ். தீவகப் படுகொலை சம்பவ இடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் ஈ.பி.டி.யினர் இருறதுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையான Amnesty International குற்றம்சாட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகளால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதும் ஒரு உக்கிரமற்ற தணிவான போர் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மாத காலத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்ல…
-
- 17 replies
- 3.1k views
-
-
கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம் Share இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சற்று முன்னர் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/20325.html
-
- 17 replies
- 2k views
-
-
முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்பாவி பொதுமக்கள் – சி.வி. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த நேர்காணலில், விடுதலைப் புலிகள…
-
- 17 replies
- 2.1k views
-
-
தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது 13, 14 வயதுடைய இரு பிள்ளையையும் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரு சிறுமிகளும் நீதிமன்றக் கட்டளைக்கமைய வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/?q=node/36074…
-
- 17 replies
- 1k views
-
-
யாழில். வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் கைது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் ஒரு தொகை பணமும் யாழ்ப்பாண காவல்துறையினரினால் மீட்கப்பட்டு உள்ளது. கந்தர்மட பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீட்டை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதன் போது , குறித்த வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சா போதை பொருளும் , ஒரு தொகை பணத்தினையும் ; கைப்பற்றிய காவல்துறையினர் வீட்டில் இருந்து குடும்ப பெண்ணையும் கைது செய்துள்ளனர். …
-
- 17 replies
- 1.7k views
-
-
பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள் அரசினால் வழங்கப்படும் வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட செயலக வாயிலில் நடாத்தினர். யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இன்று(26) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிவரை இவ்வடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தே இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர். அதாவது மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடு…
-
- 17 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 3.4k views
-
-
முல்லைக்கே அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் அறிவிப்பு முல்லை. மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு எதுவும் கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையிலேயே முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாக இதனை அறிவித்துள்ளார். யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மௌலவி எம்.ஐ. மஹ்மூத்தால் நடத்தப்பட்ட துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட அன்ரன் ஜெகநாதனுக்கு புனர்நிர்மாணம், மக்கள் இணக்கப்பாடு, மீள் குடியேற்றம…
-
- 17 replies
- 773 views
-
-
புலம் பெயர்ந்த சமூகம் பாரியளவிலான போராட்டத்துக்கு தயாராக வேண்டும் அன்று சொன்னான் திலீபன் இன்றும் நாம் என்ன செய்கிறோம் ? நாங்கள் போராடுவோம் என்று நம்பிதானே தன்னுயிரையே தந்தான் ஐ நா எடுக்கும் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் வகையிலும் அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இது. நாடுகடந்த அரசும், தமிழர் பேரவை , தமிழர் ஒருங்கிணைப்பு குழு இப்படி பெயருகளை அடுக்கி கொண்டு தங்களை முன்னிலைப்படுத்த துடிப்பதிலுள்ள அக்கறையை எங்களுக்காகவே போராடி வீரகாவியமான போராளிகள் மற்றும் இறுதிப்போரில் பலியான மக்களின் ஆத்மா சாந்திக்காகவும் தங்கள் உழைப்பை அர்ப்பணிக்க தயாராக வேண்டும். எல்லோரும் ஒன்று சேர்ந்து உலகமே வியக்கத்தக்க வகையில் பாரிய போராட்டத்துக்கு அ…
-
- 17 replies
- 2.7k views
- 1 follower
-
-
வடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் எங்கும் வாழ்வதற்கு சிங்களவர்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார். இராணுவ முகாம் என்ற பெயரில் வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; வடக்கு தமிழ் மக்களின் பகுதி, தெற்கு சிங்கள மக்களின் பகுதியென எல்லைகள் பிரி…
-
- 17 replies
- 965 views
-
-
Tamil shops in Colombo attacked [TamilNet, August 11, 2006 10:34 GMT] About nine Tamil shops located in Armour Street in Colombo city were attacked by a group of Muslims during a demonstration held Friday at around 1.35 p.m, after Jumma prayers condemning the attack on Muslims in Muthur. Krishna Vilas and Vaani Vilas, two prominent eating houses were heavily damaged in the attack, police sources in Colombo said. One policeman was injured in this incident, police sources said http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19180
-
- 17 replies
- 3k views
-
-
குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்தி இலங்கைப் போரில் அப்பாவி ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவேண்டும்' என்று தமிழகத்திலிருந்து முதலில் குரல் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்நிலையில், 'என்னை பாலியல் மோசடி செய்து எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்' என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் மீது பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார் ஈழத்துத் தமிழ்ப்பெண் ஒருவர். அவர் விரல் நீட்டிக் குற்றம் சாட்டியிருப்பது சி.மகேந்திரனை நோக்கி. தகவல் கிடைத்ததும் விசாரணையில் இறங்கினோம். தர்மகுமாரி... இலங்கையில் பிறந்த ஈழத்துத் தமிழ்ப்பெண். திருமணத்திற்குப் பிறகு புலம்பெயர்ந்து தென் ஆப்பிரிக்காவில் செட்டில் ஆனவர். இவர்தான் இந்திய கம்யூன…
-
- 17 replies
- 2.9k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக வாய்திறந்தார் சோனியா [ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 15:21 GMT ] சிறிலங்காவில் தமிழர்களுக்கு சொற்களால் விபரிக்க முடியாத கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இன்று காலை, ஆளும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதற்கு முன்னர், புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு எதிரான கடும்போக்கை முதல்முறையாக சோனியா காந்தி வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது வழக்கத்துக்கு மாறானது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. “எமது இதயங்கள் சிறிலங்கா தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது. 2009இல் போரின் இறுதி நாட்க…
-
- 17 replies
- 1.9k views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளை விடுவிக்க, தன்பாலின உறவை அனுமதிக்க 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரை ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து 29 ஜூன் 2022, 13:19 GMT புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ''ஒரே நாடு - ஒரே சட்டம்" ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. கொழும்பு - கோட்டை பகுதியி…
-
- 17 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும் ஈ.பி.டி.பி குறித்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாங்களாகவே அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கையினை குழப்புபவர்கள் ஈ.பி.டி.பியினரே. இந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள், காணாமல் போன சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே இந்தப் பகுதியில் இருக்கும் ஈ.பி.…
-
- 17 replies
- 1k views
-
-
21 Mar, 2025 | 09:37 AM இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (20) ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அக் கட்சியினர் நீதிமன்றில் வழக்கு தொடர தங்களை அணுகினால் அது தொடர்பில் வழக்கு தொடர தாங்கள் தயாரா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நான் ஒரு கட்சியின் செயலாளராக உள்ளமையால் , வேறு கட்சிகளுக்காக இந்த வழக்குகளில் முன்னிலையாக மாட்டேன் என கூறினார். வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன் | Virakesari.lk
-
-
- 17 replies
- 590 views
-