ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
பெட்ரோல் தொடர்பாக ஊடகங்கள் சில வெளியிட்ட செய்திகளுக்கு புலிகள் மறுப்பு அனுராதபுராவில் இருந்து பெட்ரோலை ஏற்றிக் கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக யாழ் நோக்கிச் சென்ற எண்ணை லாரிகள் சிலவற்றை புலிகள் கடத்திச் சென்று இருக்கக் கூடும் என்று சில தென் இலங்கை ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. இதை விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் வன்மையாக மறுத்துள்ளார். இது விடுதலைப் புலிகளின் மீது சேறு பூசும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். பெட்ரோலைப் பெற தங்களுக்குத் தனி வழிகள் உள்ளன என்றும் லாரிகளைக் கடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இளந்திரையன் குறிப்பிட்டார். http://www.nitharsanam.com/2006/08/25/50451.php
-
- 10 replies
- 2.6k views
-
-
இரணைமடுக்குள அணைக்கட்டுப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த சனிக்கிழமையன்று (17) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் என சிறிலங்கா பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தற்போது அது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானம்தான் என்பதை சிறிலங்கா கண்டுபிடித்துள்ளது. சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றுக்குரியன என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 2 replies
- 2.6k views
-
-
இந்திய மீனவ சங்கத் தலைவர் திரு ஆண்டினி கோமஸ் அவர்களை "அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்" அண்மையில் செவ்வி கண்டது. அதன்போது ஆண்டனி கோமஸ் அவர்கள் தமிழக மீனவர்கள் படுகொலை மற்றும் கடத்தல், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசின் பாராமுகம், தமிழீழப் போராட்டம் போன்ற விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அந்தச் செவ்வியின் முழு விபரம்: செய்தியாளர்: இராமேஸ்வரம் அருகே ஜூன் 17ம் திகதி சிங்கள மீனவர்களால் தமிழக மீனவர்கள் குண்டு வீசி தாக்கப்பட்டதாக அறிகின்றோம். அதை பற்றி விபரங்களை கூற முடியுமா? கோமஸ்: கடந்த ஜூன் மாதம் அல்ல, ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்சி. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்களை பொறுத்தவரையில் இலங்கை கடற்படை தாக்குதலாகவே நாங்கள் நினை…
-
- 3 replies
- 2.6k views
-
-
இலங்கையில் சுமார் அறுபது ஆண்டுகால ஆறு தசாப்த கால ஜனநாயக ஆட்சியின் பெறுபேறாக உள்நாட்டு யுத்தம் உக்கிரம் பெற்று, இன்று இலங்கைத் தீவு எங்கும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. வன்முறைப் புயல் என்றுமில்லாதவாறு மோசமாக வீசுகின்றது. எங்கும் அழிவு. எங்கும் சாவு. எங்கும் நாசம். எங்கும் ரணகளம். இதுவே இலங்கையின் வாழ்வியல் நியதி என்றாகி விட்டது. இது ஏன்? எதனால் வந்தது? எதற்காக வந்தது? உலகில் உன்னத ஆட்சிமுறை வடிவமாகப் போற்றப்படும் ஜனநாயகம் இலங்கையில் தோற்றுப்போய் வறிதாகி நிற்பதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் என்ன? முடியாட்சி முறை முடிந்து உலகில் குடியாட்சி பரவிய காலத்திலேயே ஜனநாயகக் கட்டமைப்பு முறை நன்கு காலூன்றத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்சிமுறை உருவாக்கிக் கொட…
-
- 0 replies
- 2.6k views
-
-
ஆருயிர்த் தோழன் சீனாவும் கைவிட்டது! அதிர்ச்சியில் இலங்கை அரசு! Posted by admin On May 30th, 2011 at 8:49 am / No Comments வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சீனப் பயணம் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் சீனப் பயணத்தின்போது கூட்டறிக்கை ஒன்றை வெளியிடுவதையும் ஐ.நாவின் அறிக்கை தொடர்பாக சீனாவிடம் இருந்து தெளிவான வாக்குறுதியைப் பெறுவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. எனினும் அவை இரண்டுமே சாத்தியமற்றுப் போயுள்ளன. ஏற்கனவே புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் பீரிஸின் பயணம் பின்னடைவை சந்தித்திருந்தது. அதேவேளை அவர்…
-
- 5 replies
- 2.6k views
- 1 follower
-
-
காங்கிரஸை ஒரு வழி பண்ணாமல் விடமாட் டேன்’ என்று திரைப்பட இயக்குநர் சீமான் ஒரு பக்கம் ஆவேசப்பட்டுக் கொண்டிருக்க... காங்கிரஸுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அமைதியாக துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ‘மனித நேய வாக்காளர்’ என்ற அமைப்பு. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் விநியோகிக்கப் படும் இந்தப் பிரசுரம் எட்டுப் பக்கங்களைக் கொண்டது. தரமான தாள், நேர்த்தியான அச்சு, வசீகரமான வடிவமைப்புடன் கூடிய இந்தப் பிரசுரத்தில் பளிச்செனத் தெரியும் படங்களைப் பார்த்தால் மனம் பதைபதைக்கிறது. கண்ணீர் எட்டிப் பார்க்கிறது... ஆத்திரம் அலைமோது கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பிரசுரத்தில்? ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய கொடூரத் தாக்குதல்களை இந்தப் படங்க…
-
- 19 replies
- 2.6k views
- 1 follower
-
-
“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்” “கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்” விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன…
-
- 10 replies
- 2.6k views
-
-
4ம் கட்ட ஈழ யுத்தத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் மற்றொரு களமுனையாக மணலாற்றுக் களமுனையும் மாற்றம் பெற்று வருகின்றது. சிறிலங்கா இராணுவத் தலைமை அதிக சிரத்தை எடுத்து போர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டுவருகின்ற ஒரு களமுனையாகவும் மணலாற்றுக் களமுனை தற்பொழுது தோற்றமெடுக்க ஆரம்பித்து வருகின்றது. ேமலதிக விபரம் அறிய. http://swissmurasam.info/content/view/3991/1/
-
- 1 reply
- 2.6k views
-
-
22 மே 2008 அண்று நடந்த ஊடகவியலாள்ர் மானாட்டிலே "ஏதிர்வரும் காலங்களில் சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் புதிய வியூகங்களை வகுக்க இருக்கின்றோம். இந்தப் புதிய வியூகங்களின் அடிப்படையில் செயற்பட்டு (ஐ நா மனித உரிமைகுழுவில் ) எமக்கான இடத்தைப் பிடிப்போம். விமர்சனங்களைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை." என அனுரா பிரயதர்சன யாப்பா சவால்விட்டுளார். அதாவது இலங்கைக்கு துரோகம் செய்த முசுலீம் நாடுகளை ஓரம் கட்டிவிட்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமரிக்காவிற்கு வால் பிடிக்கபோவதாக கங்கணம் கட்டியுள்ளார். இந்த முயர்ச்சியில் வெற்றி பெற வேண்டுமான வால்பிடிப்பு கலையில் பலவருட தேர்ச்சி இலங்கைக்கு உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது. யாப்பா சொன்னது போல் மேற்குல…
-
- 13 replies
- 2.6k views
-
-
மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.வெகு விரைவில் ஹிருனிகாவின் திருமணம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.பிரபல ஆடையலங்கார கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஒருவரே ஹிருனிகாவின் கரம் பற்ற உள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.காதல் தொடர்பு காரணமாக நடைபெறவுள்ள இந்த திருமணத்தில், ஓர் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார்.திருமண வைபவத்திற்கு இரண்டு குடும்பங்களினதும் மிக நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஹிருனிகா பிரேமசந்திர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் விண்ணப…
-
- 8 replies
- 2.6k views
-
-
புலிகளது பிரதேசத்தில் இருக்கும் தமிழர்களை மீட்க இந்தியாவின் கோரிக்கைக்கு இன்று அனுமதியளிக்கபட்டுள்ளது.............. .... http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=41180
-
- 12 replies
- 2.6k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு பீ.ஆர்.சி விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இந்த இரவு நேரடி களியாட்ட விடுதியில் இவர்கள் இருந்ததை பலர் கண்டுள்ளனர். ஹரின் பெர்ணான்டோவும் ஹிருணிக்காவும் நள்ளிரவு ஒரு மணி வரை அங்கு இருந்ததுடன்> இருவரும் மிக நெருக்கமாக காணப்படடதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி களியாட்ட விடுதியில் இருந்தவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டதாக தெரியவருகிறது. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு அதி…
-
- 1 reply
- 2.6k views
-
-
அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர் பொறுப்புணர்வுடன் எனது கடமைகளைச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா கோரிக்கை விடுத்துள்ளார். தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “எதிர்காலத்தை வளமாக்குவதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவொரு பொதுவான நிறுவனம். மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய பதவியை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். தற்போதைய நிலைமையில் உலகத்திலே என்றுமில்லாத வகையில் விமான நி…
-
- 31 replies
- 2.6k views
-
-
Published By: Digital Desk 3 26 Oct, 2025 | 05:16 PM புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். தனது வருகை தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில், இன்று யாழ்ப்பாணம் செல்கிறேன் என் நண்பர் பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கி வைக்கிறேன் நல்லிலக்கியங்களும் நவகலைகளும் ஒரு போர்ச்சமூகத்திலிருந்துதான் பூத்துவர முடியும் மனதின் வலியும் மார்பின் தழும்பும் கலையின் கச்சாப் பொருள்களாகும் ஈழத்தில் நல்ல கலைவடிவங்கள் மலர்வதற்கான காலச்சூடு உண்டு ஈழத் தமிழர் வெல்லட்டும்; தொட்டது துலங்கட்டும் என் நண்பரின் வளர்ச்சிக்கு வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்; நாள…
-
-
- 21 replies
- 2.6k views
- 3 followers
-
-
தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸினால் மட்டுமே முடியும் - கம்பவாரிதி இ. ஜெயராஜ் 08 ஜூன் 2014 கம்பன் கழக அம்மன் ஆலயத்திற்கு டக்ளஸ் ரூ. 5 இலட்சம் நன்கொடை மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும் சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ-ஜெயராஜ் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர்களுக்…
-
- 8 replies
- 2.6k views
-
-
யாழ்ப்பாணத்தில்- எழுச்சிப் பேரணி!! பதிவேற்றிய காலம்: Mar 16, 2019 போர்க்குற்றம் தொடர்பில் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகம் மேற்கொள்ளும் பேரணி இன்று இடம்பெறவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இந்தப் பெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை அவசியம், இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் கால அவகாசத்தையோ அல்லது கால நீட்டிப்புக்களையோ ஐ.நா. வழங்கக்கூடாது என்று வலியுறுத…
-
- 21 replies
- 2.6k views
- 1 follower
-
-
யாழ்பாண முஸ்லிம்கள் வடமாகாண சபை தேர்தலில் யாரை ஆதரிப்பது , யாரை ஆதரித்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்ப்போமானால் இறுதியில் வருவது தமிழர் கூட்டமைப்பே. இதனை ஆராய்வதற்க்கு முன்னர் எமது கடந்த காலங்ககளை கொஞ்சம் திரும்பிப்பார்த்து அதற்கேற்றாற்போல் நமது சகல நடவடிக்கைகளையும் அமைத்து நமது மண்ணில் நாம் ஐக்கியமாக வாழ நல்ல நிலைமையை உருவாக்குவது நமது கடமை. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சிவில் நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கும் போது எமது பிரதேசத்தில் பல தேர்தல்கள் நடைபெற்றது அந்த தேர்தல் காலங்களில் ஸ்ரீல.சு க, ஐ.தே.க, த.அ.க, த.கா.க, த.வி.கூ, மற்றும் வேறு சில கட்சிகளும் போட்டி போட்டன மக்கள் தத்தமது விருப்பத்திற்கேற்றாற்போல் வாக்களித்தார்கள். அந்த காலம் மாறி நாட்டி…
-
- 1 reply
- 2.6k views
-
-
மன்னாரில் பெண் புலிகளின் வீரம் மலைமகள் ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம். சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணி…
-
- 2 replies
- 2.6k views
-
-
போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை [Sunday 2015-11-22 09:00] போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்…
-
- 65 replies
- 2.6k views
- 1 follower
-
-
கடந்த வாரங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய அவுஸ்திரேலியர்கள் இப்போது இலங்கை மாணவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்தியர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியர்கள் இலங்கை மாணவர் குழு மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். மூன்று பேர் அடங்கிய அவுஸ்திரேலிய குழுவொன்று மேற்படி மாணவர்கள் மீது இனவாத அவதூறு சொற்களால் தாக்கியதாகவும், வடக்கு கன்பெராவில் மக்குவாரி என்ற இடத்திலுள்ள மேற்படி மாணவர்களின் வீட்டு யன்னல்களை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் பற்றி காவல் துறையினர் விசாரணை நடாத்தி வருவதாக ஏ.பி,சி நியூஸ் சேவை தெரிவிக்கிறது.கார் யன்னல் கண்ணாடிகளையும் அவுஸ்திரேலியர்கள் உடைத்து விட்டதாக ஒரு மாணவர் கூறினார். மூன்று அவுஸ்திரேலியர்கள் எங்…
-
- 23 replies
- 2.6k views
-
-
The Toronto Coalition to Stop the War is Toronto's city-wide anti-war coalition, comprised of more than 70 labour, faith and community organizations, and a member of the Canadian Peace Alliance. www.nowar.ca Please forward widely. Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES" Act now! Stop the genocide of Tamils! EMERGENCY RALLY Thursday, January 29 6:00pm United States Consulate 360 University Avenue Toronto TTC: Osgoode or St. Patrick - and - CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West Toronto TTC: St. Clair Pre…
-
- 11 replies
- 2.6k views
-
-
இந்த வருடத்துடன் யாழ்ப்பாணம் அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்ட 500 வருட நினைவு. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தது 1505ம் ஆண்டு. யாழ்ப்பாண அரசு, போர்த்துகேயரிடம் மண்டியிட்டஆண்டு 1520 அப்போது இலங்கையில் கோட்டை, சீதாவாக்கை, கண்டி, யாழ்ப்பாணம் ( நல்லூர்) ஆகிய நான்கு ராஜிஜங்கள் இருந்தன. யாழ்ப்பாணம், கண்டி தவிர்ந்த ஏனைய இரண்டையும் ஆண்ட வியாஜபாகு மன்னரை கொன்று மூன்றாக (கோட்டை, சீதாவாக்கை, ராய்கம) பிரித்து பதவிக்கு அமர்ந்த அவனது மூன்று மகன்மாருக்கு இடையே நடந்த போராடங்களினால் பெரும் கொதி நிலை நிலவியது. அதனை லாவமாக பயன்படுத்திக் கொண்டனர் போர்த்துக்கேயர்கள். தென்னிந்திய அரசர்களின் பாதுகாப்பில் தைரியமாக இருந்தது பக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் ராஜ்யம். அங்கிருந…
-
- 33 replies
- 2.6k views
-
-
*யாழ்ப்பாணத்தில் மட்டும் நாளாந்தம் 5 -10 தமிழர்கள் சர்வசாதாரணமாக கொல்லப்படுகிறார்கள். *கொத்துக் கொத்தாய் தமிழரைக் கொன்றொழிக்கும் வேலையை சிங்களம் யாருக்கும் பயப்படாமல், குறிப்பாக இந்தியாவிற்கு கொஞ்சம் கூட பயப்படாமல் செய்துகொண்டிருக்கிறது. *யாழ்ப்பாணத்தில் ஓர் சோமாலியா விரைவில் வரப்போகிறது. *ஒரு நெருப்பு குச்சியின் விலை(1பெட்டியல்ல 1குச்சி) ரூ15.00 ஒரு கிலோ பூண்டு ரூ2000.00 இப்படிப் பல! *கிழக்கு மாகாணத்தில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்கள் பற்றி இந்தியா கேட்காவிட்டாலும் ஏனைய நாடுகள் கேட்டதற்கு, இலங்கை வரைபடத்தில் ஒரு பாடசாலை இருப்பதை தாம் அறிந்திருக்கவில்லை என்று சர்வ சாதாரணமாக பதிலளித்து விட்டு கொலை நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இ…
-
- 7 replies
- 2.6k views
-
-
வித்தியாவுக்காக விசேட நீதிமன்றமா? ஏற்க முடியாதாம் ஞானசாரதேரர் வடக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிக்க விசேட நீதிமன்றம் எதுவும் தேவையில்லை. இதனை ஏற்கவும் முடியாது" என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தக் கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இரத்தினபுரியின் கொட்டகதவில் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அப்போது விசே…
-
- 9 replies
- 2.6k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள். ''கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 …
-
- 2 replies
- 2.6k views
-