ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒட்டுக்குழு ஈபிடிபியினர் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர். சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பி…
-
- 15 replies
- 1.8k views
-
-
யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!! #முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. #பிறப்பு – 1968.11.24. #பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். #ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். #உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். #அரசியல் வாழ்க்கை! #1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். #1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1…
-
-
- 15 replies
- 2.3k views
- 1 follower
-
-
இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றன. இந்தநிலையில், இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள…
-
- 15 replies
- 856 views
-
-
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஒட்டகம் சின்னம் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஸ்லிம்கள் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இம்முறை தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.madawalaenews.com/2019/10/blog-post_76.html
-
- 15 replies
- 1.8k views
-
-
கிபீர் விமானம் விழுந்து நொறுங்கியது [திங்கட்கிழமை, 16 ஒக்ரொபர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானம் கொழும்பு புறநகர் பகுதியில் இன்று விழுந்து நொறுங்கியது. "நீர்கொழும்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. இது தாக்குதலினால் வீழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம்" என்று விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது. http://www.eelampage.com/?cn=29335
-
- 15 replies
- 3.9k views
-
-
[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 16:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "நான்காம் கட்ட ஈழப் போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு தெரிவித்துள்ளார். எதிர்பாராது இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வினோதரனின் வீரவணக்கக் கூட்டம் மாங்குளத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வு மாங்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரை தளபதி கேணல் பானு ஏற்றி வைத்தார். வித்துடலுக்கான ஈகச்சுடரை மேஜர் வினோதரனின் துணைவியார் ஏற்றி, மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து வித்துடலுக்கு மலர்மாலைகளை மேஜர் வினோதரனின் தந்தை மற்றும் தாயாரும் தளபதி…
-
- 15 replies
- 3.4k views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம். இலங்கையில் தமிழர்கள் நீதியான அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது. தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஜ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்பு பங்கேற்கும் மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கான செயற்பாடுகளையும் இந்நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும். இலங்கையின் நிலைமைகளை குறிப்பாக இனப்பிரச்சனையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்ப…
-
- 15 replies
- 2.7k views
-
-
வன்னியில் மக்களின் நிலையோ அந்தோ பரிதாபம் ஆனால் அந்த மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் அவர்களுக்கான போராட்டங்களில் பங்கெடுக்கவில்லை ஆனால் இந்த கேளிக்கைகில் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு முன்னிலையில் அவர்கள் செயற்ப்பாடுகள் அமைகின்றனவா ? இந்திய சபாநயகர் மீரா குமார் கொழும்பில் நடத்திய இரவு விருந்தில் சில காட்சிகள். http://thaaitamil.com/?p=32992
-
- 15 replies
- 1.2k views
-
-
-
- 15 replies
- 1.4k views
-
-
கராப்பிட்டிய வைத்தியசாலையில் எட்டு மாதக் கைக்குழந்தையின் துயர மரணத்தைத் தொடர்ந்து, மூளைக்காய்ச்சல் நோய் சமூகத்தில் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் காலி சிறைச்சாலையில் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டது. மூளைக்காய்ச்சல் நோய் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சிசு, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளது. காலி சிறைச்சாலைக்குள் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நோயினால் மரணம் நேரிட்டதா என சுகாதார அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். எவ்வாறாயினும், இந்த மரணம் மூளைக்காய்ச்சல் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் அதே வேளையில், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார ச…
-
- 15 replies
- 913 views
- 1 follower
-
-
வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனைவி காணாமல் போனதையறிந்து கனடாவிலிருந்து வருகை தந்த கணவனே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். நான்கு வயதுப் பிள்ளையின் தாயாரான க.வசந்தகுமாரி (வயது29) என்பவரே கடந்த வாரம் காணாமற்போயுள்ளார். இவரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பணம் கேட்டு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையிலேயே இவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; அல்வாய் மேற்கு திக்கத்தைச் சேர்ந்த…
-
- 15 replies
- 1k views
-
-
பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்! போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நேற்று(20) நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு, https://newuthayan.com/பிரசாத்-பெர்னாண்டோவை-பிட/
-
- 15 replies
- 1.7k views
-
-
வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீ…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு முதலமைச்சர் அபேட்சகர் ஒருவரை பெயரிடாமலிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவரகிறது. இதன்படி, மாகாணசபைத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அபேட்சகரை முதலமைச்சராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுச் சபையின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை தெரிவு செய்துள்ளனர். இம்முறை கிழக்கு மாகாணசபைத்…
-
- 15 replies
- 5.4k views
-
-
நேசக்கரம் இணையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நேசக்கரம் இணையம் கடந்த 2வாரங்கள் வரையில் செயலிழந்து போயிருந்தது. 03.02.2013 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது என்பதனை வாசகர்களுக்கும் நேசக்கரத்தோடு இணைந்துள்ள அனைவருக்கும் அறியத் தருகின்றோம். www.nesakkaram.org தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் : Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org
-
- 15 replies
- 722 views
-
-
கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை! [sunday 2014-09-21 17:00] கிளிநொச்சி வலயத்திலுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் வகுப்பறையின் அவலநிலை பார்ப்போர் மனங்களைப் பதைபதைக்க வைக்கிறது. ஏ9 வீதியிலிருந்து 150மீற்றர் தொலைவிலே இக்கல்விக்கூடம் அமைந்துள்ளது. பாடசாலை பெயர்ப்பலகையை குண்டுகள் துளைத்த தடயங்கள் இன்றுமுள்ளன. இங்கு க.பொ.த.உயர்தரம் கலை வர்த்தகப் பிரிவு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள் இல்லை. ஆதலால் மாணவர்கள் ஆபத்தான வசதி குறைந்த கொட்டிலில் இருந்து படிக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 08 வகுப்பறைகள் இவ்விதம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல தென்னையோலையால் வேயப்பட்ட அக்கொ…
-
- 15 replies
- 1.1k views
-
-
Published By: VISHNU 15 MAR, 2024 | 06:48 PM இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் …
-
-
- 15 replies
- 833 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட காலமாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட…
-
- 15 replies
- 1.1k views
-
-
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார் சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறை…
-
- 15 replies
- 818 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…
-
- 15 replies
- 1.3k views
-
-
உலக காணாமற்போனோர் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பன்னாட்டு காணாமற…
-
- 15 replies
- 1.6k views
-
-
மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன. அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். பதிவு
-
- 15 replies
- 3.4k views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது. கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி …
-
- 15 replies
- 1.9k views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாட்டு திட்டங்கள் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களும் அதன் பயன்களை பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இச்செயற்பாட்டினை சீனா மேற்கொள்ள முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ல…
-
- 15 replies
- 1.8k views
-
-
சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ். சென்றார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் நேரில் சென்று காண்காணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01…
-
- 15 replies
- 1.9k views
-