ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீ…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு முதலமைச்சர் அபேட்சகர் ஒருவரை பெயரிடாமலிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவரகிறது. இதன்படி, மாகாணசபைத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அபேட்சகரை முதலமைச்சராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுச் சபையின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை தெரிவு செய்துள்ளனர். இம்முறை கிழக்கு மாகாணசபைத்…
-
- 15 replies
- 5.4k views
-
-
நேசக்கரம் இணையம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நேசக்கரம் இணையம் கடந்த 2வாரங்கள் வரையில் செயலிழந்து போயிருந்தது. 03.02.2013 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது என்பதனை வாசகர்களுக்கும் நேசக்கரத்தோடு இணைந்துள்ள அனைவருக்கும் அறியத் தருகின்றோம். www.nesakkaram.org தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் : Nesakkaram e.V. Hauptstrasse 210 55743 Idar-Oberstein Germany Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gmail.com Skype – Shanthyramesh www.nesakkaram.org
-
- 15 replies
- 728 views
-
-
கிளிநொச்சியில் மற்றொரு பாடசாலையின் அவலநிலை! [sunday 2014-09-21 17:00] கிளிநொச்சி வலயத்திலுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் வகுப்பறையின் அவலநிலை பார்ப்போர் மனங்களைப் பதைபதைக்க வைக்கிறது. ஏ9 வீதியிலிருந்து 150மீற்றர் தொலைவிலே இக்கல்விக்கூடம் அமைந்துள்ளது. பாடசாலை பெயர்ப்பலகையை குண்டுகள் துளைத்த தடயங்கள் இன்றுமுள்ளன. இங்கு க.பொ.த.உயர்தரம் கலை வர்த்தகப் பிரிவு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் போதுமான வகுப்பறைக் கட்டடங்கள் இல்லை. ஆதலால் மாணவர்கள் ஆபத்தான வசதி குறைந்த கொட்டிலில் இருந்து படிக்க வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 08 வகுப்பறைகள் இவ்விதம் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல தென்னையோலையால் வேயப்பட்ட அக்கொ…
-
- 15 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 15 MAR, 2024 | 06:48 PM இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி யாழ். இந்தியத் துணைத் தூதரகம் முன்பு கடற்றொழிலாளர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்திய மீனவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் …
-
-
- 15 replies
- 902 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றிற்கு பரிந்துரை தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட காலமாக ஐரோப்பிய நீதிமன்றங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகியன தம்மை பயங்கரவாத பட…
-
- 15 replies
- 1.1k views
-
-
மன்னார் மாவட்டத்திலிருந்து முதல் பெண் விமானி மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார் இமானுவேல் எவாஞ்சலின். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார் சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறை…
-
- 15 replies
- 832 views
-
-
ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட…
-
- 15 replies
- 1.3k views
-
-
உலக காணாமற்போனோர் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கொஸ்டா ரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பன்னாட்டு காணாமற…
-
- 15 replies
- 1.6k views
-
-
மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன. அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். பதிவு
-
- 15 replies
- 3.4k views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளால் 2 அதிவேக தாக்குதல் படகுகள் அழிப்பு முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கடுமையான கடற்சண்டையில் சிறிலங்கா கடற்படையின் "அரோ" வேகத்தாக்குதல் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் 15 "அரோ" கொமாண்டோப் படகுகள், "டோரா" வேகத் தாக்குதல் பீரங்கிப் படகுகள் என்பன சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை - அவர்கள் மீது கடற்புலிகளின் தாக்குதல் படகு அணி தாக்குதலை தொடுத்தது. கடற்புலிகளின் இந்த கடல் வழி மறிப்புத் தாக்குதலில் - கடற்படையினரின் இரு "அரோ" படகுகள் தாக்கி …
-
- 15 replies
- 1.9k views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாட்டு திட்டங்கள் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களும் அதன் பயன்களை பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இச்செயற்பாட்டினை சீனா மேற்கொள்ள முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ல…
-
- 15 replies
- 1.8k views
-
-
சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ். சென்றார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் நேரில் சென்று காண்காணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01…
-
- 15 replies
- 1.9k views
-
-
ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள…
-
- 15 replies
- 2k views
-
-
கொழும்பு புறக்கோட்டையில் மெலிபன் வீதியில், அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட புதிய 6 மாடிக் கட்டடம் ஒன்று திடீர் என சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது எவருக்கும் காயமோ உயிராபத்துக்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த கட்டடத்தின் முதல் 2 தட்டுக்களும் முற்றாக அழிந்துள்ளதுடன் மீதிக் கட்டம் பின்பக்கமாக குடை சாய்ந்து பின்னாலிருந்த கட்டிடத்தின் மீது சாய்ந்துள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=3873
-
- 15 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம் லண்டன் மாணவர் பேரவையால் விடப்பட்ட முக்கிய அறிவித்தல் அனைவரையும் www.tamil.co.uk இந்த இணையத்திற்கு சென்று அதில் ஒரே ஒரு கேள்வி கேட்டுயிருப்பார்கள் அதாவது உங்களுக்கு ஈழம் வேண்டுமா இல்லையா என அதற்கு ஆம் என பதிலளியுங்கள்.அனைவரையும் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
-
- 15 replies
- 2.8k views
-
-
வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு அபராதம்! மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு, நீதவான் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ள சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு மூவாயிரம்(3000) ரூபாய் தண்டம் விதித்து, ஊர்காவற்துறை நீதவான் தீர்ப்பளித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்றைய தினம்(21.02.2018) பொது சுகாதரப் பரிசோதகர் குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணையின…
-
- 15 replies
- 1.1k views
-
-
நன்றி நக்கீரன்.. மேலும் படங்கள் இங்கு: http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=706&GSS=8
-
- 15 replies
- 2.9k views
- 1 follower
-
-
தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள அந் நாட்டு வெளிநாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் அந் நாட்டு வெளிநாட்டு அமைச்சின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் ஆர்ய மௌலப் டெரி (Aryeh Machluf Deri) கைச்சாத்திட்டார். இலங்கையின் சார்பில் செயல்திறன் அபிவிருத்தி தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன சார்பில் திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சின் …
-
- 15 replies
- 1.3k views
-
-
-எம்.றொசாந்த் இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக நபர் ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்தார். அவரின் தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்கும், முன்னர் தாபரிப்புப் பெற்ற அதே பெண்ணே வந்தார். …
-
- 15 replies
- 1.4k views
- 1 follower
-
-
08 SEP, 2023 | 08:15 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அ…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
நாயாறு – நந்திக்கடல் – காக்கைதீவு என நாடெங்கும் அபிவிருத்தி : டக்ளஸ் தீவிரம் நந்திக்கடல், நாயாறு களப்பு புனரமைப்பு பணிகளை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, யாழ். காக்கைதீவு கடல் நீரேரியை தூர்வாருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டார். நடளாவிய ரீதியில் காணப்படுகின்ற களப்புக்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் மேற்குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்ற சுமார் ஒன்பது பிரதான களப்புக்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நக்டா,…
-
- 15 replies
- 829 views
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர் 12 FEB, 2024 | 05:55 PM (எம்.நியூட்டன்) கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்மாதம் 23 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா? இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் என யாரேனும் நம்பினால் அது மிகப்பெரும் தவறாகும்.அரசைப் பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அறவேயில்லை எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக காலத்தைக் கடத்துவதே அரசின் தற்போதைய பணியாக உள்ளது. அதேநேரம் இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியாமல் இருக்கமுடியாது. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக தனது இருப்பை காப்பாற்றிக் கொள்ள முற்படுகின்றது. ஆக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை என்ற நோக்கமுடைய அரசும், இது நடக்கின்ற காரியம் இல்லை என்ற உண்மை தெரிந்த தமிழ்த் தேசிய கூட்ட…
-
- 15 replies
- 2k views
-
-
யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் சிலர் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கோட்டையில் பணி புரியும் பணியாளர்கள் தெரிவித்தனர். அது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில் , யாழ்ப்பணத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக யாழ்ப்பாண கோட்டை உள்ளது. தற்போது கோட்டை தொல்லியல் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வருவதுடன் நெதர்லாந்து அரசாங்க உதவியுடன் புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றன. அந்நிலையில் தினமும் பெருமளவான உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் கோட்டை பகுதிக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். அதில் சிறுவர்கள் முதியோர்கள் என பாகுபாடின்றி வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் கோட்டை பகுதியில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு என வருகின்றார்கள். அவ்வாறு அநாகரிக …
-
- 15 replies
- 1.2k views
-