ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
மாவிலாற்று பகுதியில் இருந்து சிறீலங்கா படையினர் பின்வாங்கினர். திருமலை மாவிலாற்று பகுதியின் ஒரு பகுதியை பெரும் முயற்சியை மேற்கொண்டு கைப்பற்றிய படையினர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். யாழ்.குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலிற்கு பயன் படுத்துவதற்காகவே மாவிலாற்று பகுதியில் இருந்து படையினர் பின் வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 7 replies
- 2.2k views
-
-
தவறான முறையில், தவறான சக்திகளால் பொட்டு அம்மானின் பெயரில் வெளியிடப்பட்டதாக உங்களுக்கு வரும் எந்தவொரு அறிக்கையையும் நம்ப வேண்டாம். ஏற்கனவே lttepress என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கி பொட்டு அம்மானின் பெயரில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை சற்றும் பொருட்படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இது தான் எமது அதிகாரபூர்வ ஏடுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள வலைத்தளம். இதையொத்த பெயர்களில் வரும் ஏனைய தளங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். http://viduthalaipulikal.net நன்றி சங்கதி
-
- 9 replies
- 2.2k views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு, வேலை செய்ததாக கூறப்பட்டு, இந்திய உளவு ஸ்தாபனமாகிய றோவின் கொழும்பு தலைமை அதிகாரியை இலங்கை அகற்றியது என ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, புதுடெல்லியிலுள்ள பல தகவல் மூலங்கள், உற்சாகம் அளித்துடன் தேர்தல் சமயத்திலும் அவருக்கு உதவி வழங்கியதால், றோவின் முகவரை மீளப்பெறுமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன. இந்தியாவின் பகைமையுடனான சீனாவின் பக்கம் முன்னாள் ஜனாதிபதி சாய்ந்தமையினால், இலங்கை மீது இந்தியாவின் செல்வாக்கு குறைவாகப்பேசப்பட்ட சமயத்தில், ராஜபக்ஷ எதிர்பார்க்காத விதத்தில் தோற்றப்பட்டார். மைத…
-
- 27 replies
- 2.2k views
-
-
இந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடலாம் எனத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அதனை இலக்காகக் கொண்டே இராணுவத் திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "இராணுவத்தளபதி களநிலைமைகளைச் சரியாக ஆராய்ந்து, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் கிளிநொச்சியை அடைந்துவிடலாம் என ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கிறார். இந்தக் கால வரையறையை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது திட்டங்களை வகுத்துள்ளோம்" என்றும் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போர் மிகச் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் அவர், மோதல…
-
- 7 replies
- 2.2k views
-
-
சமாதானப் பேச்சா? இராணுவ நடவடிக்கையா? விடுதலைப் புலிகளே தீர்மானிக்க வேண்டும் வீரகேசரி நாளேடு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதா ? அல்லது மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதா? என்பதனை விடுதலை புலிகளே தீர்மானிக்கவேண்டும். அவர்களின் கைகளிலேயே அனைத்தும் தங்கியுள்ளன. பேச்சுவார் த்தைகளை ஆரம்பிக்கும் செயற்பாடு புலிகளின் அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அரசாங்கமும் விடுதலை புலிகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இரகசிய உடன்படிக்கையொன்றை செய்துகொண்டனர் என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. இது வெறுமனே அரசியல் இலாபம் நோக்கி செய்யப்படும் பிரசாரமாகும். எனவே இ…
-
- 5 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிதாக இரண்டு புத்தர்சிலைகள்! - அஸ்கிரிய பீடாதிபதி திறந்து வைத்தார். [Thursday, 2014-02-27 07:53:19] யாழ்ப்பாணம், ஆரியகுளம் சந்தியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை நேற்று கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம புத்தரகித்த மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அஸ்கிரிய பீடாதிபதி, நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்துமத குரு முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார். அதனையடுத்து நாகவிகாரைக்குச் சென்று புத்தர் சிலை ஒன்றைத் திறந்து வைத்து பிரித்ஓதி வழிபாட்டில் ஈடுபட்டார். மேலும் குருநகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலும் புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. …
-
- 36 replies
- 2.2k views
-
-
பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா? திகதி: 11.08.2010 ஃஃ தமிழீழம் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற சொற்பதம் கே.பி.யால் உச்சரிக்கப்பட்டது என்பதைத் தவிர, அதனை அதீத நம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் நோக்கினார்கள். அதனை வடிவமைக்கும் பொறுப்பை திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதன் மூலம் தமிழீழ மக்களுக்கு விடிவு கிடைத்துவிடாதா? என்ற அங்கலாய்ப்புடன் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஆதரிக்கவும் தலைப்பட்டனர். 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற புதிய கருத்துருவாக்கம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அவாவும் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. ஆனாலும், தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்து …
-
- 10 replies
- 2.2k views
-
-
சிறீலங்காவின் தரைப்படைத்தளபதி இந்திய காஷ்மீரில் உள்ள இந்திய- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் இராணுவ பிரசன்னம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அவதானிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா வன்னியிலும் யாழ்குடாவிலும் சிறீலங்காப் படையினர் தமிழீழ எல்லைக்கோட்டை கடக்க சிரமப்படுவதை களையும் பொருட்டு, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளோடு ஒப்பிட்டு இந்திய, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று வன்னிப் போரரங்கில் அவற்றைப் பிரயோகித்து தமிழீழ எல்லைக்கோடு நெடுகிலும் போருக்கு தம்மை தயார் செய்யப் போயிருக்கிறார்..! அண்மையில் இக்களத்தில் சுட்டிக்காட்டியது போன்று 1999 இல் நிகழ்ந்த…
-
- 8 replies
- 2.2k views
-
-
பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவை இலங்கை அரசின் கொடுமைகளை வெளிக் கொண்டுவந்துள்ளது. Channel - 4 தெலைக்காட்சிச் சேவையின் ஒளிப்பதிவு கீழுள்ளது. <embed src="http://c.brightcove.com/services/viewer/federated_f8/1184614595" bgcolor="#FFFFFF" flashVars="videoId=19918256001&playerId=1184614595&viewerSecureGatewayURL=https://console.brightcove.com/services/amfgateway&servicesURL=http://services.brightcove.com/services&cdnURL=http://admin.brightcove.com&domain=embed&autoStart=false&" base="http://admin.brightcove.com" name="flashObj" width="486" height="412" seamlesstabbing="false" type="application/x-shockwave-flash" swLiveConne…
-
- 4 replies
- 2.2k views
-
-
யாழில் பதற்றம்; வெடித்தது வன்முறை: பொலிஸாரின் கட்டுப்பாட்டில் 75 பேர்! யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட சுமார் 75 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனினும் மோதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. https://www.ibctamil.com/srilanka/80/105893?ref=imp-news
-
- 17 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.2k views
-
-
சிறீலங்கா பயங்கரவாத அரசின் இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் படி நேற்று பதவியாப் பகுதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 10 போராளிகளின் உடலங்களையும் ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மோதலில் சிறீலங்கா பயங்கரவாத அரசின் படையினர் 3 வரும் கொல்லப்பட்டுள்ளனராம். இச்சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் இதுவரை செய்திக்குறிப்புகள் எதனையும் வெளியிடவில்லை. Ten LTTE bodies found in Padaviya The military says it recovered the bodies of ten LTTE cadres together with arms and ammunustions following a clash in Padaviya, Anuradhapura. The bodies are to be handed over to the ICRC tomorrow. சிறீலங்கா பயங்கரவாத அரச சார்ப்பு ஊடகமான டெயிலிமிரர் வெளி…
-
- 3 replies
- 2.2k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6acf9c726942a1e
-
- 1 reply
- 2.2k views
-
-
ஜெனிவா செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்காளர்களதும் கடுமையான அழுத்தங்களே காரணம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு ஜெனீவா பயணமாவது என்ற முடிவே எடுக்கப்பட்டு இருந்ததாக எமக்கு தகவல் கிடைத்தது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே கலந்துகொண்டிருந்தார். இதில் ஜெனிவா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வலியுறுத்தி உள்ளனர். எனினும் இன்று இலங்கை நேரம் …
-
- 5 replies
- 2.2k views
-
-
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம் 103 Views தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையி…
-
- 21 replies
- 2.2k views
-
-
மாவீரகள் நினைவுடன் ஆரம்பமானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டம்! அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசில் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)யின் முதலாவது மாபெரும் பொதுக்கூட்டம் வரலாறு புகழ்மிக்க வல்வை மண்ணில் நடை பெற்று கொண்டு உள்ளது. கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுவிடம் மற்றும் மூத்த தளபதிகள் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவுவிடம் அமைந்துள்ள தீருவிலில் நினைவிடத்தில் 1989 ஆம் ஆண்டு இந்திய இராணுவதால் படுகொலை செய்யப்பட பொதுமக்களின் நினைவுநாள் இன்று அதனால் அவர்களுக்கு மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவீரகள் நினைவு பாடலுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது . மேலதிக செய்திகள் விரைவில்.. …
-
- 25 replies
- 2.2k views
-
-
குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார். மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப…
-
- 6 replies
- 2.2k views
-
-
கனடிய தமிழ்ச்சோலை வானொலியில் பிரதி சனிதோறும் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் வழங்கும் செய்தி ஆய்வு :arrow: 05.08.06 நன்றி. தமிழ்நாதம்.
-
- 8 replies
- 2.2k views
-
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்குப் பொறுப்பு கூறவேண்டியவர் எனக் கூறப்படும் நபரொருவர் தொடர்பான தகவல்களைக் குறித்த மாணவியின் பெற்றோர் வெளிப்படுத்தியுள்ளனர். கொட்டாஞ்சேனை – கல்பொத்த வீதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பிலிருந்து விழுந்து, கடந்த 29 ஆம் திகதி 16 வயதுடைய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தநிலையில், நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருந்த அவரது பெற்றோர் தங்களது மகளின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இவ்வாறான பின்னணியில் இன்றைய தினம், உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு, …
-
-
- 50 replies
- 2.2k views
- 1 follower
-
-
"கட்டற்ற பெரும் போருக்கான வாசலை சிறீலங்கா திறந்துவிட்டிருக்கிறது" மனோகரன் அமைதி, சமாதானம் என்பதெல்லாம் தொலைதுாரத்துக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. போர் தீவிரமாகக் கூடிய நிலைமைகள் அதியுச்சத்துக்குப் போய்விட்டன. அதாவது இனிப் போர்தான் என்ற நிலைமை, கட்டாயமாகிய நிலைமை உருவாகிவிட்டது. ஆனால் யதார்த்தத்தில் போரைத் தாங்கக்கூடிய நிலையில் நாடும் இல்லை, சனங்களும் இல்லை. :மேலும்
-
- 0 replies
- 2.2k views
-
-
தொடர்ந்தும் முற்றுகைக்குள் கப்பல்- மேலும் ஒரு டோராப்படகு தாக்கியழிப்பு: இளந்திரையன் [புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 05:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] தொடர்ந்தும் முற்றுகைக்குள்ளேயே சிறிலங்கா கடற்படையினரின் கப்பல் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது: திருகோணமலை துறைமுகத்திற்கு 854 சிறிலங்காப் படையினரை ஏற்றிவந்த கப்பலை புல்மோட்டை கடற்பரப்பில் தரையிறக்க முற்பட்ட போது கடற்புலிகள் கடுமையாக தாக்கியதனால் கப்பல் மீண்டும் சர்வதேச கடற்பரப்பினை நோக்கிச் சென்று விட்டது. குறித்த கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் திருமலை துறைமுகத்தில…
-
- 3 replies
- 2.2k views
-
-
Friday, March 25th, 2011 | Posted by thaynilam தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது- ரூபவாஹினி உத்தரவு சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளதாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த உத்தரவை மீறிச் செயற்பட முயற்சிக்கும் பெண்களைச் செய்தி வாசிப்பிலிருந்து உடனடியாக நிறுத்துமாறும் கண்டிப்பான உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது சில நாட்களுக்கு முன்னர் ஒரு தமிழ்ப் பெண் நெற்றியில் பொட்டு வைத்து குங்குமமும்; பூசிக் காணப்பட்டதனையடுத்து எரிச்சல் கொண்ட ரூபவாஹினி உயர் மட்டம்…
-
- 4 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் உக்கிர மோதல்களில் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.2k views
-
-
புலம்பெயர் தமிழர்களை சிலர் இலங்கைக்கு எதிரானவர்கள் என குற்றம் சுமத்தினாலும் அவர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவும் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்கி, புலம்பெயர் தமிழர்களை வெற்றிக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பல அரசியல் கட்சிகளை இரண்டாக உடைத்துள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உடைக்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகள் பௌத்த ஆலயங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெட்கமடைவதாகவும் சம்பந்தன் கூறியுள்ளார். http://www.saritham.com/?p=53667
-
- 25 replies
- 2.2k views
-
-
சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சரும், சிறீலங்காவின் ஜானதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே" ஊடகங்கள் மீது பாய்ந்து வருகின்றார்" அண்மையில் சிறீலங்கா அரசாங்கத்தினால் கடத்தி கைது செய்யப்பட்ட தமிழ் ஊடகவியாளரான வித்யாதரன் ஒரு பயங்கரவாதி என கூறியுள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று கோத்தபாய ராஜபக்சே மீது ஒரு கேள்வி கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய தாக்குதலுக்கும் வித்யாதரனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் காயமடைந்து திருகோணமலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுடன் அவுஸ்ரேலிய தொலைக்காட்சியின் ஊடகவியாளர் சந்திக்க வேண்டும் என பலித பேனாண்டோவிடம் கேட்டார். அவர்களுடன் கதைக்க முடியாது எனக் கூறினார் ப…
-
- 12 replies
- 2.2k views
-