ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
ஹம்பாந்தோட்டையில்... சீனாவின் பெயரைக் காட்டும், கட்டடம் ‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவல – சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வகிக்கப்படும் கட்டடமொன்றே இவ்வாறு ‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வரைபடங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இலங்கையில் பல இடங்களில் உள்ள வீதியைக் குறிக்கும் பெயர்ப்பலகையில் சீனா மொழியில் எழுதப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், தற்போது இந்த விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது…
-
- 12 replies
- 1.7k views
-
-
இலங்கையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கோவிட்-19 தடுப்புக்கான செயலணியின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்வோரிடம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியமைக்கான அட்டை குறித்த சோதனை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின்னர், பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை வைத்திருந்திருத்தல் கட்டாயமானது எனவும் அவர் கூறியுள்ளார்.இதனை உறுதிப்படுத…
-
- 12 replies
- 722 views
- 1 follower
-
-
அதிமேதகு என்ற சொல்லை இன்று முதல் தனது பெய ருக்கு முன்னால் இணைத்து உபயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வேண்டு கோள் விடுத்துள்ளார். முதற் பிரஜையுடன் முதலாவது உரையாடல் என்னும் தலைப்பில் அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது இலங்கை ஜனநாயகச் சோலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி என இதுவரை காலமும் ஊடகங்கள் உட்பட அரச சேவைகளில் உபயோகிக்கப்பட்டு வந்தது. என்றாலும் இன்று முதல் எனது பெயருக்கு முன்னால் அதிமேதகு என்ற சொல்லை உபயோகிக்கவேண்டாம் இலங்கை ஜனநாயக சோலிசக் குடியரசின் ஜனாதிபதி என உபயோகித்தால் போதுமானது. அதேபோன்று எனது மனைவிக்கும் ஜனாதிபதியின்…
-
- 12 replies
- 1.1k views
-
-
இசைப்பிரியாவுக்கு நிகழ்த கொடூரம் சர்வதேச சமூகத்தையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்முக்கு கிடைக்கம் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவின் பல நாடுகளில் இன்று விடுமுறை. ஆயினும், நேற்றைய தினம் பின்னிரவு இசைப்பிரியா உயிரோடு இருப்பதுவும் அவருக்கு இறுதிக் கணங்களில் இடம்பெற்ற கொடூமும் வெளிவந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை தொடக்கம் சர்வதேச சமூகத்தினர் இந்த விடயம் தொடர்பாக கடும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது. இந்த காணொளி வெளிவந்ததால் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பிரித்தானியாவிலுள்ள முக்கியமான தமிழ் அமைப்புகளை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாடுகளும் எதிர்வரும் 25ஆவது கூட்டத்…
-
- 12 replies
- 1.7k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை வழிப்படுத்தியிருந்தால் இன்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்கும்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதை இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்மியும் விரும்பவில்லை. மாறாக, தமிழரசுக் கட்சியை முதன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் அந்தக் கட்சியின் தலைவர்கள் முற்பட்டதால் கூட்டமைப்பு உடைந்து போனது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமே இயங்குகிறது. மற்றும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பு. கூட்டமைப்பே இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதாக ஆகிவிட்டது. இதை நாம் கூறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராசா அவர்கள் கூட்டமைப்பை …
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
எனது தாயை நிங்கள் தீவிரவாதி எண்று அழைக்கும் எனது தம்பி அம்மா எண்று அழைத்தால் எனது தாயும் தீவிர வாதியா..? லண்டனில் நடந்து வரும் போராட்டத்தில் எமது தேசிய கொடியை பறிக்கும் நடவடிக்கையை இங்கிலாந்து காவல்த்துறை செய்து வருகிறது.. புலிச்சின்னம் பொறித்து இருப்பதால் அது தீவிர வாதிகளின் சின்னம் எண்றும் காவல்த்துறையினர் சொல்கின்றனர்.. பல தமிழர்கள் அவர்களுடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.. எனது கேள்விகள் இவைதான்... இங்கிலாந்தில் மற்றும் அனேக நாடுகளில் இருக்கும் கால்ப்பந்து கழகங்கள் முதல் பிரதேச சபை எல்லாம் கொடிகள் தாங்கி இருக்கும் போது நாங்கள் எங்களுக்காக ஒரு கொடியை வைத்து இருக்க கூடாதா...? இந்த கொடியை தடை செய்தமைக்கான... ( தேசிய கொடியை) எந்தவிதமான சட்ட பூ…
-
- 12 replies
- 2k views
-
-
கூட்டமைப்பினால் தமிழர் விடுதலை கூட்டணியுடனும் PLOTE உடனும் கூட்டமைபில் இணைந்து போட்டியிட கோரி பேச்சுகள் நடை பெறுவதாக கூட்டமைப்பின் சுரோஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தாராம்.. ஆனால் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஆனந்தசங்கரி மறுத்து இருக்கிறார்... ஆதாரம் http://www.dailymirror.lk/print/index.php/news/news/3819-tulf-wont-join-tna-for-polls.html TULF won’t join TNA for polls Tuesday, 16 February 2010 01:02 By Kelum Bandara The Tamil United Liberation Front (TULF) led by V. Anandasangari has declined overtures by the Tamil National Alliance (TNA) to contest the upcoming general election as a single group in the Northern and Eastern Provinces. …
-
- 12 replies
- 1.4k views
-
-
பாயும் புலிச் சின்னத்துடன் "நாம் தமிழர்" அரசியல் கட்சி தமிழின உணர்வாளர் சீமான் அவர்களால் தொடங்கிவைப்பு தனியீழமே தமது ஒரே குறிக்கோள் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இக்கட்சி தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழக தலைவர்கள் ஈழத்தமிழர் தொடர்பாக அசமந்தப் போக்கையே கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். சோழர்களின் தலைநகரான தஞ்சாவூரில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சினை ஒத்த பாயும் புலியுடனும், ஈழத்தமிழரின் தேசியக்கொடியினை ஒத்த வர்ணங்களுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31531 நன்றி தமிழ்நெட்.
-
- 12 replies
- 2.5k views
-
-
எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான தீர்மானம் - ஜனாதிபதி ரணில் Published By: DIGITAL DESK 5 14 MAR, 2023 | 11:43 AM (எம்.மனோசித்ரா) எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேவைக்காக எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு தமத…
-
- 12 replies
- 990 views
- 1 follower
-
-
உயிர்ப்பு ஞாயிறு படுகொலைகள் நியுசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கான பழிவாங்கல்தான் என்று இலங்கையின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால், தமது நாட்டில் நடந்த சம்பவம் ஒன்றிற்கான பழிவாங்கலாக இலங்கைக் குண்டுவெடிப்புகளை காட்டியது தொடர்பாக நியுசிலாந்து அரசு இலங்கையைக் கண்டித்திருக்கிறது. இதுபற்றி நியுசிலாந்து பிரதி பிரதமர் கருத்துக் கூறுகையில், “ இப்படி கூறுவதற்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. நிபுணர்களின் கருத்துப்படி இத்தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நியுசிலாந்துத் தாக்குதல் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னமே நடைபெற்றிருக்கின்றன”. “இது மிகவும் கீழ்த்தரமான செயற்பாடு. உங்களின் பாதுகாப்புத்துறையில் உள்ள ஓட்டைகளை மறைப்பதற்காக,…
-
- 12 replies
- 887 views
- 1 follower
-
-
2019-11-01 11:39:34 சுமார் 800 ஆண்டுகள் பழைமையான சீனத்தயாரிப்பு மட்பாண்டமொன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி உறவுக்கு இந்த மட்பாண்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். சீன அகழ்வாராய்ச்சிக்குழுவினரால் அல்லைப்பிட்டி பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://valampurii.lk/valampurii/content.php?id=19702&ctype=news
-
- 12 replies
- 1.6k views
-
-
யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுத…
-
- 12 replies
- 1.2k views
-
-
2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற மோதல்களில் 4,335 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுபாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 399 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(ஜூன்19) வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு படையினரும், 26க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சு புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. நன்றி : www.lankadissent.com
-
- 12 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரால் அண்மையில் திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுத் தாக்குதல்கள் நிராயுதபாணிகளாகச் சென்ற படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளாகச் செல்லும் இராணுவப் படையினரை ஏற்றிச் செல்லும் ஜெட்லைனர் என்ற கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது. விடுமுறைக் காலத்தை முடித்து மீண்டும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடச் செல்லவிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலகுரக விமானங்கள் பற்றிய ராடர் தகவல்கள் வழங்கப்பட்ட இரண்டு மூன்று நிமிடங்களில் புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப…
-
- 12 replies
- 2.2k views
-
-
தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன். நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம். நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழ…
-
- 12 replies
- 2.4k views
-
-
-
- 12 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை ஜெனீவா பயணமாகினர். ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கலந்து கொள்ளும் சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக எடுத்து கூறும் நோக்கிலேயே இவர்கள் ஜெனீவாவிற்கு சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. http://malarum.com/article/tam/2014/09/21/5611/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E…
-
- 12 replies
- 1.1k views
-
-
தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்தார். (படஙகள் : தீப அதிகாரி) http://tamil.dailymirror.lk/--main/79315-2013-08-19-04-34-26.html
-
- 12 replies
- 1.6k views
-
-
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கும் முயற்சியில் முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் அவருக்கு துணையாக உதயன் பத்திரிகை நிர்வாகம் களத்தில் இறங்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், முன்னாள் ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் தர்சானந் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேட்பாளர் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது. இந்த முயற்சியின் தொடராக, உதயன் ஆசிரியர் பீ…
-
- 12 replies
- 814 views
-
-
பொன்சேகா காற்றோட்டமில்லாத அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் First Published : 16 Feb 2010 12:39:03 PM IST Last Updated : 16 Feb 2010 12:40:03 PM IST கொழும்பு, பிப்.16: இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஜன்னல் இல்லாத காற்றோட்டமற்ற அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என முன்னாள் நீதிபதி பி.டி குலதுங்க தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சரத் பொன்சேகா சிறந்த முறையில் நடத்தப்படுவதாக இலங்கை அரசு தெரிவிப்பது உண்மையென்றால் அவரைச் சென்று பார்வையிட அனுமதி வழங்க வேண்டுமென குலதுங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரத் பொன்சேகாவை அவரது மனைவியும், குடும்பத்தினரும் பிரச்னையின்றி பார்…
-
- 12 replies
- 932 views
-
-
வரலாற்று நாயகன் லெப். செல்லக்கிளி அம்மானின் வீரவணக்க நாள் Saturday, July 23, 2011, 0:38கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். சதாசிவம் செல்வநாயகம் கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்…
-
- 12 replies
- 899 views
-
-
மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான MH 179 என்ற விமானம் அவசரமாக தரையிறங்கியது மர்மமாகவே இருக்கின்றது என்று செய்தி வெளியாகியுள்ளன. விமானம் புறப்பட்டு சில மணி நேரங்களில் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு விமானம் திரும்பியுள்ளது. மலேசியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த விமானம் மலாக்கா நீரிணைக்கு மேலாக இரண்டு மணிநேரம் வட்டமிட்டதன் பின்னரே கோலாலம்பூரில் தரையிறங்கியுள்ளது. விமானத்தில் கூடுதலாக எரிபொருட்கள் இருந்த நிலையில், அது தரையிறக்கப்பட்டமை ஆபத்தானது என்றும் மலாக்கா நீரிணைக்கு மேலாக விமானத்தை வட்டமடிக்கவேண்டிய நிலைமை விமானிக்கு ஏற்பட்டது என்றும் மலேசியா ஊடகங்கள் தெரிவித்தன. அதன் பிரகாரம் நேற்றிரவு 11.30க்கு புறப்பட்ட…
-
- 12 replies
- 1k views
-
-
மிரட்டும் ராஜபக்சே தூதுவருக்கு நக்கீரன் சவால் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு, கொத்துக் கொத்தாகப் பறிக்கப்படுகின்றன ஈழத்தமிழர்களின் உயிர்கள். இலங்கை அரசால் பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நம்பி வந்த ஒருசில தமிழர்களும் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். அங்குள்ள மருத்துவமனைகளிலும் தாக்குதல் நடைபெறுவதை சர்வதேச செஞ்சிலுவை சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பகுதியில் மருத்துவமனைகள்-தொண்டு நிறுவனங்களின் முகாம்கள் இருந்தாலும் அதனையும் தாக்குவோம் எனக் கொக்கரிக்கிறார் இலங்கை ராணுவத்தின் செயலாளரும் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபய ராஜபக்சே. அமெரிக்கா- இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா, நார்வே, ஜப்பான், ஐரோப்…
-
- 12 replies
- 2.6k views
-
-
6 ஆயிரம் புலிகள்தான் எங்களுக்குப் பிரச்சினை: அமைச்சர் சரத் அமுனுகம [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:26 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை- 6 ஆயிரம் புலிகள்தான் பிரச்சினை என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மற்றும் முதலீடு மேம்பாட்டு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். மறவன்கொடவில் உள்ள ஹலகதெர, ஹதெனியவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்களை பயங்கரவாதச் செயலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் 6 ஆயிரம் அல்லது புலிப் பயங்கரவாதிகள்தான் பிரச்சினை. சாதாரண தமிழர்கள் எங்களுடன் இணக்கமாகவே வாழ்கின்றனர். கண்டியில் …
-
- 12 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கி இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணமாக இருந்ததே இந்தியாதான் என்று சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஹமில்டன் வனசிங்க கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.1k views
-