ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ரணிலின் இரட்டை வேடம் [17 - April - 2007] -வி.திருநாவுக்கரசு- ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள் போன்ற கொடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவன ஈர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கு முகமாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு (C.M.C) அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோகணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று 2007.04.09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதல்லவா? அக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையினை நிகழ்த்தினார். காணாமற் போன அல்லது கடத்தப்பட்ட தமது அன்பிற்குரியவர்களை காணத்துடிக்கும் அப்பாவி உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தனர்.காணாமல் போனவர்களை கண்டுபிடி…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்ளுரிலேயே தீர்வு காணப்பட வேண்டும்: சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்கவும் இதுவே வழியெனவும் இந்தியா புத்திமதி கூறுகிறது [Friday, 2011-05-20 15:43:36] உள்ளுரில் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்னெடுப்பதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை தவிர்க்கமுடியும் என்று இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. த ஹிந்து செய்திதாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு அண்மித்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நிலையில், இந்த ஆலோசனையை இந்தியா வழங்கியுள்ளது இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், அங்கு உயர்தரப்பினருடன் மேற்கொண்ட சந்திப்புகளின் போது இந்த விடயம் முன்கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையின் ஜன…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தம…
-
- 11 replies
- 2.1k views
-
-
நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். உற்பத்தி பாவனைக்கான அன்பளிப்புக்களான றைஸ்குக்கர் , பாத்திரங்கள் …
-
- 26 replies
- 2.1k views
-
-
இராமேஸ்வரம் வரை வந்தும் பாவத்தைத் தீர்க்க முடியாமல் திரும்பிப் போயிருக்கிறார், இலங்கை அதிபர் இராஜபக்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன்! ஆறாத ரணமாக ஈழப் பிரச்சினை இன்னும் இருப்பதன் அடையாளம்தான் இந்த சம்பவம் என்று தமிழகத்தின் பிரபல சஞ்சிகையான ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியான நிருபமா ராஜபக்சவின் கணவர் இவர். இலங்கைத் தமிழரான இவர், அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவர். கடந்த ஆண்டு நடேசன் தனது மனைவி நிருபமாவுடன் இராமேஸ்வரம் வந்தார். அப்போது, இங்குள்ள தமிழ் இன ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஆனால், பொலிஸார் பாதுகாப்பு கொடுத்து …
-
- 8 replies
- 2.1k views
-
-
உயிரை வேலியாக வைத்து போராளிகள் போரிடுகின்றனர் நிலங்களை விழுங்கிக்கொண்டு படைகள் நகரலாம். ஆனால் உயிரை வேலியாக வைத்து உங்கள் பிள்ளைகளான போராளிகள் போராடியிருக்கிறார்கள். போராடிக்கொண்டு வருகின்றார்கள்.இவ்வாறு, புதுக்குடியிருப்புக் கோட்டத்தில் இரணைப்பாலை வட்டத்தில் கடந்த 15ம் திகதி மாவீரர், போராளி குடும்பங்களுடனான சிறப்புக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போது புதுக்குடியிருப்புக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ச.இளம்பருதி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, எத்தகைய இடர்கள் வந்தாலும் நம்பிக்கை இழக்காத மக்களாக நீங்கள் இருக்கவேண்டும். எதிரியின் படைக்கட்டமைப்புக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எதிரிப்படைகள் எமது இலக்குகள் சிக்குண்டு அழியப்போகின்றா…
-
- 5 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட வகையினர் உண்டு. அவர்கள் தங்களை நம்புவதை விட மற்றவர்களையே அதிகம் நம்புவார்கள். துன்பம் நேரும் போது வேறு யாராவது வந்து தங்களை கைதூக்கி விடுவார்கள் என்று காத்திருப்பார்கள். அந்த "வேறு யாராவது" என்பது "கடவுளாகக்" கூட இருக்கலாம். மொத்தத்தில் தங்களின் துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு முயற்சி செய்யாது மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இவ்வாறான குணவியல்பு கொண்டவர்கள் தொகையளவில் மிக அதிகமானவர்களாக இருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இவர்களின் "காத்திருப்புக்களை" காணக்கூடியதாக இருக்கிறது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் "இந்தியா வந்து பிரச்சனையை தீர்த்து வைக்கும், இந்தியா தமிழீழம் பெற்றுத் தரும்" என்று நம…
-
- 5 replies
- 2.1k views
-
-
இலங்கை எம்.பி.-க்களிடம் எகிறிய முதல்வர்! எதற்காக வருகிறார்கள்... என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்... ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்... பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்கள் எனப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தவறுவது இல்லை. பலன்? டெல்லியில் இருந்து கொழும்புவில் இறங்கும்போது தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில் சின்னக் கொப்பளம். பேண்டேஜ் போட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க, 'இந்தியாவில் இருந்து மூக்குடைபட்டு வருகிறோம்' என்றாராம் அந்த எம்.பி. நிலைமை அப்படித்தான் இருக்கிறது! இந்நிலையில், சம்பந்தன் தலைமையில் …
-
- 8 replies
- 2.1k views
-
-
அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில்…
-
- 4 replies
- 2.1k views
-
-
காரணம் எதுவுமின்றி தலைநகர் கொழும்பில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையிலானோரினால் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எவ்வித காரணமுமின்றி கொழும்பு காவற்துறைப் பிரிவில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்கியிருந்ததாகத் பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 6950 பேர் எவ்வித காரணமும் இன்றி கொழும்பில் உள்ள தற்காலிக விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை வழமைக்கு மாறானது, உண்மையில் இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்…
-
- 11 replies
- 2.1k views
-
-
புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம்: மகிந்த ராஜபக்ச. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரதேசங்களையும் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. "தமது பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தனியரசு இலக்கை அடைய உள்ளதாக பரப்புரை மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றொரு காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு இது. தங்களது பயங்கரவாதத்தாலும் வன்முறைகளாலும் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் ஒடுக்கி வருகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்கியதோடு ம…
-
- 5 replies
- 2.1k views
-
-
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். . தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஆதிச்ச…
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் சனத்தொகை கூடிய மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கி வாழ்வோரின் வீதம் ( 65 வயதுக்கு மேற்பட்ட ,தொழில் புரியாதோர்) 12.6 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மொத்த சனத்தொகை குறித்து வெளியான தகவல் ! | Virakesari.lk
-
-
- 17 replies
- 2.1k views
- 1 follower
-
-
கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ண ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகளின் சடலங்களை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் கூறியுள்ளனர். 4 நாட்களுக்கு முன்னர், மகனுடன் இவர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர். மகன் தற்போது காணாமல் போயுள்ளார். இந்த மர்மமான மரணங்கள் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81710/language/ta-IN/article.aspx
-
- 8 replies
- 2.1k views
-
-
தமிழகத்தில் இருந்தான ஒரு பார்வை.................. ஈழப் பிரச்சனையை கையிலெடுக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக? சென்னை: காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார். தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்! ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக …
-
- 5 replies
- 2.1k views
-
-
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 202.04 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 197.62 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம் – Athavan News
-
- 32 replies
- 2.1k views
- 1 follower
-
-
முகநூலில் இந்த கட்டுரையை வாசித்தேன். யாழ்கள வாசகர்களும் படிக்க இங்க இணைக்கிறேன். இக்கட்டுரையை எப்பிடி இங்கே இணைக்கலாம் என்றெல்லாம் ஒருவரும் அடிக்க வரப்படாது. வாசித்ததை பகிர்ந்துள்ளேன். பழ றிச்சர்ட் என்பவர் எழுதிய இக்கட்டுரையை உங்கள் வாசிப்புக்கு இங்கே பகிர்கிறேன். இராணுவத்தில் இணைந்த பெண்களை மானபங்கபடுத்தும் தமிழ் சமூகமும் ஊடகங்களும் ================================== பேருந்தில் தனியாக ஒரு பெண் சென்றாலே உரசி பார்க்கும் சமூகம் இது. இந்த சமூகத்தில், அதீதமான முறையில் ஆணாதிக்கமும் ஒடுக்கியாளும் மனனோபாவமும் நிலவும் இராணுவத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையை சமானியர்களால் அத்தனை இலகுவாக கற்பனை செய்திட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இராணுவத்தில் பெண்க…
-
- 7 replies
- 2.1k views
-
-
புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள் – ‘புட்டுப்புட்டு‘ வைக்கும் சிறிலங்கா அதிகாரி [ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 01:14 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்கப் பாதுகாப்பு பிரிவுகள் எவ்வாறு உதவின என்பது பற்றிய இரகசியத் தகவல்களை, இறுதிகட்டப் போரின் போது சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் உருவாக்கப்பட்ட ‘முக்கியமான படை‘ ஒன்றின் உறுப்பினர் வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளின் எந்த உதவியும் இன்றியே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தை நிராகரிக்கும் வகையிலேயே, சிறிலங்காவில் போரை மு…
-
- 14 replies
- 2.1k views
-
-
இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப் [வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பிரிவினைவாதத்தை பாகிஸ்தான் எதிர்ப்பதாக அந்நாட்டு அரச தலைவர் பர்வேஸ் முசாரப் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச ஊடகமான "டெய்லி நியூஸ்" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: இலங்கையில் பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். சிறிலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒற்றுமையும் மதிக்கப்பட வேண்டும். சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம். சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால்…
-
- 12 replies
- 2.1k views
-
-
புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார். பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை…
-
- 15 replies
- 2.1k views
- 1 follower
-
-
நன்றி: தமிழ்நெட்(வலையம்) மற்றும் புதினம்
-
- 3 replies
- 2.1k views
-
-
மனிதாபிமானத்தின் பேரில் வன்னி மீதும் படையெடுப்போம்: கேகலிய ரம்புக்வெல [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 20:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] மனிதாபிமான நடவடிக்கை என்ற பேரில் வன்னி மீதும் படையெடுத்து நாட்டின் அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் படையெடுப்பர் என்று சிறிலங்காவின் அமைச்சரும், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கேகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் அவர் கூறியதாவது: மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு முப்படைத்தளபதி என்ற வகையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றவகையில் வன்னிப்பகுதி இல்லை என்றால் அங்க…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலை புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கை படையினர் குழப்பம் அடைந்துள்ளனர். விசுவமடு, யாழ்ப்பாணம், கிளாலி உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குறிப்பாக, விசுவமடு பகுதியில் இராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலை புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர். புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத் தர…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஐரோப்பிய வலயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் பலமடைந்து வருவதாக அங்கு வாழும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் த பேர்னிச்சர் என்ற ஐரோப்பியப் பத்திரிகைக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளனர். இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒழிக்கப்பட்ட தீவிரவாதச் சக்திகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வருவதாக குறித்த இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளதாக அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணாமாக தங்களுக்கு அச்சுறுத்தல் வரும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், ஐரோப்பிய வலயத்திற்குள் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல், கொள்ளை, உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு இவர்களே காரணம் எனவும் தெரிவிக்க…
-
- 15 replies
- 2.1k views
-
-
அம்பலமாகிக்கொண்டிருக்கும் சிங்களத் தேசப்பற்றாளர்கள் -வேலவன்- 'இப்பொழுது அரசியல் விளையாட்டின் ஒரு ஆட்டம் தான் நிறைவுக்கு வந்துள்ளது. அதற்குள் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது" எனக் கூறுகிறார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க. வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி வாக்களித்த போதிலும் அது நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டுவிட்டார். இந்த வெற்றிக்கு அவர் எடுத்த முயற்சிகள் காய்நகர்த்தல்கள் என்பன சிறிலங்காவின் படுமோசமான அரசியல் நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது. கையூட்டு…
-
- 0 replies
- 2.1k views
-