ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்
-
- 10 replies
- 1.7k views
-
-
இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டும் பணிகளில் பௌத்த பிக்குகளுக்கு பாரிய பங்கு இருப்பதாக அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார். பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகம் ஆகியன அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் நிலவிவரும் இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மதத் தலைவர்களினால் இலகுவில் மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மாறுபட்ட கொள்கையுடைய அனைவரும் மதத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மதத் தலைவர்கள் குறிப்பாக பௌத்த பிக்குகள் இனவாதப் பிரச்சினையை களைவதற்கு முக…
-
- 10 replies
- 1.5k views
-
-
சாணக்கியனுக்கு அறிவு இருந்திருந்தால் நாடாளுமன்றில் இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார்- கடுமையாக சாடிய கருணா! கல்முனை பிரதேச செயலகம் என்பது தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு விடயம். அதை அவ்வாறுதான் அனைத்து அரசியல்வாதிகளும் பார்க்க வேண்டுமே ஒழிய தேவையற்ற விதத்தில் ஒரு பிரச்சார நோக்கத்திற்காக இதை பயன்படுத்துவது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமரின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொ…
-
- 10 replies
- 1.1k views
-
-
சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்! பொலிஸாரை பிடிப்பதற்காக பொலிஸாரே வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. கோவில் ஒன்றில் நீண்டநேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் வாள்வெட்டு குழுவினர் நிற்பதாக எண்ணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று(21) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... உரும்பிராய் பகுதியில் உள்ள இந்துக்கோவில் ஒன்றின் முன்றலில்…
-
- 10 replies
- 604 views
-
-
சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி தமிழரசு ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடவில்லை என்பதால் வேட்பாளர் தெரிவில் நீக்கினார்கள் - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்! தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினாலும் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல் தடுத்தார்கள் எனவும் தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக…
-
-
- 10 replies
- 743 views
-
-
தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உச்சகட்டத்தைத் தொட்டு நிற்கிறது. மூன்று லட்சம் மக்கள் ராணுவப் படுகொலையை எதிர்பார்த்துத் தவித்து நிற்கிறார்கள். 1995 ஜூலையில் நடந்த உலகையே உலுக்கிய `செர்பேனியா இனப் படுகொலை'யைப் போன்று இலங்கையில் நடந்துவிடுமோ? அதை உலக நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமோ என அச்சத்தோடு எழுதுகிறது அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளேடான `நியூயார்க் டைம்ஸ், களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகள் தரப்பிலோ தீபன், துர்கா, விதுஷா உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த தளபதிகள் ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு பலியாகிப் போனார்கள். `புலிகளின் பலம் அவ்வளவுதான்! ஒன்று சரணடைய வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும்' என்கிறார் ராஜபக்ஷே. இந்தியா உள்பட சர்வதேச நாடுகளும் போர்…
-
- 10 replies
- 3.8k views
- 1 follower
-
-
சிங்கள மாணவர்கள் கழிவறைக்கு செல்லக் கூட விக்னேஸ்வரன் நீர் வழங்கவில்லை - கம்மன்பில வடக்கு முதல்வர் கடும்போக்குவாதி எனவும், இரட்டைகுளம் சிங்களப் பாடசாலை மாணவர்கள் கழிப்பறைக்கு செல்லக் கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும், வீட்டில் இருந்தே அவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்வதாக தன்னிடம் கூறியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், பிரபாகரனை விட சம்பந்தனைப் பார்த்தே பயப்பட வேண்டும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்படுத்தப்பட்டால் நோர்வே அரசாங்கம், பகிரங்கமாக ஆயுதங்களை வ…
-
- 10 replies
- 1k views
-
-
ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் ஆதரவினை இலங்கை முற்றாக இழக்கும் நிலை (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வியாழக்கிழமை கூட்டப்பட்ட 10 ஆவது அவசர விசேட கூட்டத் தொடரில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது. இலங்கை தான் வகித்து வரும் நீண்ட கால பாரம்பரிய மற்றும் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி வாக்களிப்பில் வாக்களித்ததாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இந்நிலையில் இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில்…
-
- 10 replies
- 703 views
-
-
முல்லைத்தீவு நகரிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு புதிய இரு மாடிக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாக சபைத் தலைவர் அப்துல் சலாம் மஹ்ரூபின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் கலந்துகொண்டதுடன், மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆப்பள்ளிவாயலின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 1896ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்ட மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை தொடர்பில் தெளிவுப்படுத்தியதுடன், புதிய கட்டடம் அமைப்பதன் அவசியம் பற்றியும் த…
-
- 10 replies
- 2.2k views
-
-
யாழ். இந்து கல்லூரியை அண்மித்த கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி படுகாயப்படுத்தினர். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எஸ்.சிவலிங்கம் என்பவரும் அவருடைய மனைவி சி.நிலந்தினியும் யாழ். நகரில் உள்ள தமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இருவரையும் தாக்கி வாளால் வெட்டினர். இதன்போது கணவன் சிவலிங்கம் கையிலும், நெஞ்சிலும் படுகாயமடைந்தார். அவரின் மனைவியான நிலாந்தினி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் நிலாந்தினிக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் நிலாந்தினியிடம் இருந்த கைப்பையை பறித்துச் செ…
-
- 10 replies
- 912 views
-
-
[size=4]வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூறும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதம அதிதியாக கலந்த கொண்டு முக்கிய உரையினையாற்றினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா ஆகியோரும் உரைகளை ஆற்றினர். இடம்பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன்வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், …
-
- 10 replies
- 685 views
-
-
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப…
-
- 10 replies
- 954 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார். …
-
- 10 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகள் மகா சமாதி எய்தியுள்ளார். இவர் இன்று நண்பகல் காலமாகியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் மற்றும் சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்தவரும் ஆவார். இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும், தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது. மேலும், இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்…
-
- 10 replies
- 1.5k views
-
-
தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகாவித்தியாலய மாணவன் தினுக கிரிஷான் குமார இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாண…
-
- 10 replies
- 5.6k views
-
-
புலிகளை கருணா அழித்தது போல தமிழரசு கட்சியை அழிக்கிறார் சுமந்திரன் – மகளிர் அணி குற்றச்சாட்டு.! சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் ,தமிழ் மக்களையும் அழிக்கும் வகையிலேயே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் மேலும் தெரிவித்ததாவது… சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட…
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.! "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்பைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமராக நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று முற்பகல் சுபநேரத்தில் அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றின் எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாகவுமே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன. எனினும் தற்போது ஏற்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சியினர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யார் எதிர்க்கட்சி என்பதற்கு தேசிய அரசில் விடை கிடைப்பது கடினமானதே. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. தேசிய அரசு கலைக்கப்பட்டவுடன் மீண்டும் இரு கட்சிகளில் ஒன்று ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்து விடும். ஆனா…
-
- 10 replies
- 932 views
-
-
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 10 replies
- 722 views
- 1 follower
-
-
நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே. நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி). நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து. நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல் நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள். அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம்…
-
- 10 replies
- 2.8k views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் உள்ள வடகுடி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசிடமும், விடுதலைப்புலிகளிடமும் மத்திய அரசு தேவையான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும். இலங்கையில் இருதரப்பினரும் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்களுக்ககு இலங்கையில் 2 அல்லது 3 மாநிலங்கள் அமைய வேண்டும் என்றார். நன்றி நக்கீரன் .
-
- 10 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர் Published By: VISHNU 15 MAR, 2023 | 08:44 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொட…
-
- 10 replies
- 776 views
- 1 follower
-
-
-
இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்... தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் . ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்... இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!! கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in
-
- 10 replies
- 2.9k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கருணா குழுவினரின் உதவிய…
-
- 10 replies
- 4.7k views
-